குருகிராஹம் என்பது தில்லியிலிருந்து 30 கீமீ தொலைவில் ஹரியானாவின் எல்லையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நகரமாகும். குர்காவ்ன் என்று இப்போது அழைக்கப்படுகிற அங்குதான் இப்போது தேசிய சர்வதேசிய நிறுவணங்கள் அனைத்தின் தலைமை அலுவலகங்களும் இருக்கின்றன. பல ஆயிரம் தொழில் நிருவன்ங்கள் அங்கு செயல்படுகின்றன.
குர் காவ்ன் இருப்பது
ஹரியானா மாநிலத்தில் என்றாலும் அது தில்லியின் மிகப்பெரிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியே
ஆகும்.
மாருதி நிறுவனத்தை
அங்கு தொடங்கி வைத்து அதை பெரிய நகராக்கியது காங்கிரஸ் அரசு. பாஜ்க அரசு இப்பொது அதை
கருப்பு நகராக்கி வருகிறது.
அங்கு தொழிலாளர்களின்
எண்ணிக்கை பெருகிய போது அதில் கனிசமாக இருந்த முஸ்லிம்கள் ஜும் ஆ தொழுகையை வாய்ப்புக்
கிடைத்த பல இடங்களிலும் தொழுது வந்தனர்.
அடுத்த ஆண்டு நடை
பெறும் தேர்தலை கருத்தில் கொண்டு பிரச்சனைகளை உருவாக்க திட்டமிட்ட இந்துத்துவ அமைப்புகள்
முஸ்லிம்களின் ஜும் ஆ தொழுகை தடுக்க பல போராட்டங்களை நட்த்தினர். பொது இடங்களில் நடை
பெற்று வந்த பல ஜும் ஆ தொழுகைகள் நிறுத்தப்பட்டன. இப்போது சில பள்ளிவாசல்களிலும் ஜும்
ஆ தொழுகையை நடத்தக் கூடாது என்று விஷுவ ஹிந்து பரிஷத அமைப்பு கூறிவருகிறது. அந்த வகையில்
தான் ஹரியானா மாநிலத்தில் நூ என்ற பகுதியில் நடை பெற்ற விஷுவ ஹிந்து பரிஷத்தின் பேரணியில்
கல்வீசப்பட்ட்தாக போலியான குற்றச் சாட்டை எழுப்பி பெரும் கலவரத்தை நூ மாவட்ட்த்தில்
நடத்தில் சுமாஅர் 6 பேரை படுகொலை செய்தனர். அதன் தொடர்ச்சியாக
குருகிராம் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள்
நேற்று அதிகாலை நுழைந்த 80 பேர்
கொண்ட கும்பல், அந்த பள்ளிவாசலுக்கு
தீ வைத்து எரித்தது. அத்துடன் அதன் உள்ளே இருந்த மசூதி
இமாமை கொடூரமாக சுட்டுக் கொலை செய்தது.
19 வயதான அந்த இமாமின் பெயர் ஹாபிழ்
சாத். பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டம் மனியாதிக் பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த 6 மாதங்களாக
இந்த மசூதியில் இமாமாக வேலை செய்து வந்துள்ளார்
இந்த வன்முறை வெறியாட்டத்தில்
அங்கிருந்த மேலும் 3 பேர்
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
காவல் துறை அவர்களில்
சிலர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறுகிறது.
இமாம் சாத் இந்து
முஸ்லிம் ஒற்றுமை குறித்து அதிகம் பேசுபவர் என்றும் எல்லோரும் ஒரு தட்டில் உணவருந்த
வேண்டும் என்று அவர் பாடிய பாடல் மிகவும் பிரபலமானது என்றும் பலரும் நினைவு கூர்ந்து
கொண்டிருக்கிறார்கள். .
மெளாலான் சாதிற்காக
இன்றைய ஜும் ஆவிற்கு பின் காயிப் ஜனாஸா தொழுகை தொழலாம். இன்ஷா அல்லாஹ்
அடுத்த ஆண்டு நடை
பெறும் தேர்தலுக்குள்ளாக் நாட்டு மக்கள் அனைவரின் கவனத்தையும் கலவரங்களின் பக்கம் திருப்ப
இந்துத்துவா சக்திகள் முழு வேகத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றன. முஸ்லிம்கள் மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் தீயவர்களை
தடுத்தருள்வானாக! நாட்டையும் மக்களையும் பாதுகாப்பானக!
எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த இமாமை சொர்க்கவாசியாக ஆக்குவான்
ReplyDelete