வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 18, 2026

9 வருடங்களுக்கு பிறகு ஹிஜ்ரத்தை நினைவு கூர்ந்த திருக்குர்ஆன்

 புதன் கிழமை ஹிஜ்ரீ 1448 ம் ஆண்டு பிறந்திருக்கிறது.

ஹிஜ்ரீ என்ற சொல்லை போல மனித வரலாற்றுக்கு அருமையான பாடங்களை சொல்லித் தருகிற வார்த்தை வேறெதுவும் இல்லை

ஹிஜ்ரத்தை பற்றி பேசுகிற ஒரு முக்கிய திருக்குர் ஆன் வசனம் தவ்பா அத்தியாயத்தின் 40 வசனமாகும்.

إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

இந்த வசனம் சொல்லப் பட்ட காலத்தில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது.

இந்த வசனம்  ஹிஜ்ரத் நடந்த போது சொல்லப் பட்ட்தல்ல

ஹிஜ்ரத் முடிந்து சுமார் 9 ஆண்டுகள் கழித்து நினைவு கூர்ந்து சொல்லப் பட்டதாகும்.

9 வருடம் கழித்து ஹிஜ்ரத்தின் நிகழ்வை திருக்குர் ஆன் பேசியதன் பின்னே ஒரு வரலாறும் இருக்கிறது, முஸ்லிம்கள் மறந்து விடக் கூடாத மிக முக்கியமான ஒரு வழிகாட்டுதலும் இருக்கிறது.

ஹிஜ்ரீ 9 ம் வருடம் தபூக் யுத்த்த்திற்கு தயாராகி கொண்டிருந்த போது இந்த வசனத்தில் அல்லாஹ் ஹிஜ்ரத்தின் நிகழ்வை முஸ்லிம்களுக்கு நினைவூட்டினான்.

தபூக் யுத்தம் ஹிஜ்ரீ ரஜ்ப் மாத்தில் நடைபெற்ற பெருமானார் (ஸல்) அவர்கள் பங்கேற்ற கடைசி யுத்தமாகும்.

இந்த யுத்த்த்திற்கு பல முக்கியத்துவங்கள் உண்டு.

·         முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு அரச படையை எதிர்த்து நடத்திய முதல் யுத்தம் அது.

·         அன்றைய உலகின் பெரும் வல்லரசான ரோம படைகளை எதிர்த்து நடந்த யுத்தமாகும்.

·         மிக நீண்ட தூரம் பெருமானார் பயணம் செய்தார்கள். மதீனாவிலிருந்து 778 மைல் தொலைவில் சிரியாவின் திசையில் தபூக் இருந்த்து.

·         பொதுவாக யுத்த நடைமுறைகளின் போது தன்னுடைய இலக்குகளை முழுமையாக வெளிப்படுத்தாத பெருமானார் (ஸல்) அவர்கள் இப்போரின் போது தன்னுடைய இலக்கு ரோமர்களோடு சண்டையிடுவது என்பதை தெளிவாக கூறினார்கள்.

·         அந்த நேரம் கடும் கோடை காலமாக இருந்த்து. அது வே பேரீத்தம் பழ அறுவடைக் காலமாகவும் இருந்தது. 

ஒரு அரசாங்கத்தை எதிர்த்து – அதுவும் ஒரு வல்லரசை எதிர்த்து - முஸ்லிம்கள் பயணப்படுகிற பயணப்படுகிற முதல்  போர் என்ற வகையில் இது பெருமானாரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த யுத்தமாகும்.

அதனால் அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினான் .

இதுவும் முன்னெப்போதும் இல்லாதது ஆகும்.

انْفِرُوا خِفَافًا وَثِقَالًا وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ ٤١ [التوبة:41]

கிழவர்களோ இளைஞர்களோ அனைரும் நடங்கள் என்று அல்லாஹ் உத்தரவிட்டான்.

 யுத்த்திற்காக நிதி தருவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று பெருமானார் உத்தவாதம் கூறியிருந்தார்கள்

 قد روى الترمذي في «سُننهِ» عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَبَّابٍ، قَالَ: «شَهِدْتُ النَّبِيَّ  وَهُوَ يَحُثُّ عَلَى جَيْشِ العُسْرَةِ فَقَامَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ عَلَيَّ مِائَةُ بَعِيرٍ بِأَحْلاَسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللهِ، ثُمَّ حَضَّ عَلَى الجَيْشِ فَقَامَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ عَلَيَّ مِائَتَا بَعِيرٍ بِأَحْلاَسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللهِ، ثُمَّ حَضَّ عَلَى الجَيْشِ فَقَامَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ عَلَيَّ ثَلاَثُ مِائَةِ بَعِيرٍ بِأَحْلاَسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللهِ، فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللهِ  يَنْزِلُ عَنِ الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ: مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ، مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ»

மேலும் ஆயிரம் பொன்

عن عبد الرحمن بن سمرة قال: «جَاءَ عُثْمَانُ بْنُ عَفَّانَ إِلَى النَّبِيِّ  بِأَلْفِ دِينَارٍ فِي ثَوْبِهِ، حِينَ جَهَّزَ النَّبِيُّ  جَيْشَ الْعُسْرَةِ، قَالَ: فَصَبَّهَا فِي حِجْرِ النَّبِيِّ ، فَجَعَلَ النَّبِيُّ ، يُقَلِّبُهَا بِيَدِهِ، وَيَقُولُ: "مَا ضَرَّ ابْنُ عَفَّانَ مَا عَمِلَ بَعْدَ الْيَوْمِ" يُرَدِّدُهَا مِرَارًا

இவ்வளவு முஸ்தீபுகள் செய்யப்பட்டன.

காரணம்

ஹிஜ்ரீ 8ம் ஆண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அரபு நிலத்தில் பல எல்லையோர பகுதிகளும்  ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அரபு குலங்கள் கூட்டம் கூட்டமாக பெருமானாரோடு இணைந்து வருவந்ததால் பெருமானாரின் அரசியல் செல்வாக்கு வெகு வேகமாக வலர்ந்து வந்த்து. இது தங்களுடைய அதிகாரத்திற்கு இடையூறாக ஆகலாம் என்று ரோமர்கள் நினைத்தார்கள். அதனால் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கிற அரபுக் குலங்களை தூண்டி விட்டார்கள். பெருமானாரின் தலைமையில் உருவாகியிருக்கிற அரபுகளின் முதல் புதிய  அரசாங்கத்தை முற்றிலும் அழித்து விடுவதற்காக 40 ஆயிரம் வீர்ர்களை கொண்ட ஒரு படையை தயார் செய்தார்கள்.   

தமக்கெதிரான ஒரு திட்டம் அந்நிய நிலத்தில் மிகுந்த சக்தியோடு தயாராவதை அறிந்த போது அவர்களை அவர்களது முனையிலேயே சந்தித்து விட பெருமானார் (ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள்.

அதற்காகத்தான் முன்னெப்போதும் இல்லாத ஏற்பாடுகளை செய்து கொண்டார்கள். 30 ஆயிரம் பேர் திரண்டார்கள்.  கலந்து கொள்ள முடியாதவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள் என்று கூறுகிறது திருக்குர் ஆன்.  

இத்தகைய சூழல்லில்

12 பேர் பெருமானாரிடத்தில் போருக்கு தயாராகும் கால சூழ் நிலையை குறைத்து குறை கூறினார்கள். இது கடும் கோடையாக இருக்கிறது அறுவடை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  கொஞ்சம் காலம் தாழ்த்தி போகலாமே என்று முறையிட்டனர்.

 அப்போது அல்லாஹ் அதை கண்டித்து கேள்வி எழுப்பினான்.

 போருக்கு புறப்படச் சொன்னால் நீங்கள் சடைந்து கொள்வீர்களா ?. உலக சுகங்கள் தான் உங்களுக்கு பெரிதா? என்று கேள்வி எழுப்பினான்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ ۚ أَرَضِيتُم بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ (38)

 எந்த ஒரு காலகட்ட்த்திலும் முஸ்லிம் உம்மத் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கேள்வி இது

 நம்முடைய ஆசைகளும் விருப்பங்களும் தேவைகளும் சில நேரங்களில் தீனுக்கு எதிராக இருக்கும்.

 நாம் அநீதிக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என தூண்டப்படலாம்

 போதை பழக்கத்திற்கு அடிமையாக அல்லது  ஆபாசத்தை வாழ்க்கையாக்க தோன்றலாம்.

 இஸ்லாமிற்கு எதிரான

 கருத்தோட்டங்களும் செயல்பாடுகளும் சுதந்திரத்தின் அடையாளமாக காட்டப்படாலாம்.

 அப்போதெல்லாம் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி இது

 உலக சுகங்கள் தான் உங்களுக்கு பெரிதா ? அல்லாஹ்வின் வழிமுறைகளை நீங்கள் சலித்துக் கொள்வீர்களா? அது உங்களுக்கு பிடிக்காமல் போகுமா ?  

 நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செல்ல வில்லை எனில் அல்லாஹ் என்ன செய்வான்.

 அடுத்த வசனம் எச்சரிக்கிறது.

  إِلَّا تَنفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (39)

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் எப்படி வேதனை வரும் என்று சொல்கிறார்கள்.  மழை வராது  அதாவது வாழ்க்கையின் வளம் அழிக்கப்படும்.

 فأمسك الله عنهم القطر فكان عذابهم 

 மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் உத்தரவுகளை - மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை பகிரங்கமாக  மீறுவோர் அவர்களுடைய வாழ்க்கையின் பரக்கத்தை இழப்பார்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

 நம்முடைய  இடத்திற்கு மற்றவர்களை அல்லாஹ் கொண்டு வருவான்.

 எந்த அதிகாரத்திற்காக  அல்லது எந்த பெருமைக்காக நாம் அல்லாஹ்வின் உத்தரவுகளை அலட்சியம் செய்தோமோ அந்த அதிகாரமும் பெருமையும் அடுத்தவர்களுக்கு போய்ச் சேரும்.

 என்ன கடுமையான எச்சரிக்கை பாருங்கள்!

 மனைவியின் ஆசைக்காக அல்லது குடும்பத்தின் ஆசைக்காக  நாம் அல்லாஹ்வின் உத்தரவுகளை மீறினால் அல்லாஹ் நம்முடைஅய இடத்திற்கு அல்லாஹ் வேறு ஒரு வரை கொண்டு வருவான் என்பதை கற்பனை செய்து பாருங்கள் அது எவ்வளவு கடுமையானது ?

 அல்லாஹ் அடுத்து கூறுகிறான்.

 நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவியாக இல்லை என்றால் அவர் மோசம் போய்விட மாட்டார். எந்த சூழலிலும் அல்லாஹ் அவரை அவரை நம்பி இருப்பவர்களை பாதுகாப்பான். அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கும் தீர்மாணத்திற்கு எதிரான உங்களுடைய கருத்துக்களுக்கு ஒரு துளியும் மதிப்பு கிடையாது

 உங்களின் எந்த ராணுவத் துணையும் இல்லாத சூழலில் தான் தவ்று குகையில் கண்ணுக்கு தெரியாத தன்னுடைய ராணுவங்களை கொண்டு அல்லாஹ் அவரை பாதுகாத்தான் . நபி தன்னுடைன் இருப்பவர்களுக்கு நிம்மதியளித்தார்..

 )إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا

இந்த இடத்தில் தான் ஹிஜ்ரத்தை அல்லாஹ் முஸ்லிம் உம்மத்திற்கு நினைவூட்டினான்.

 அல்லாஹ்வின் தீர்மானத்தின் படி நடக்கிற போது அல்லாஹ் எத்தகைய பாதுகாப்பையும் தருவான். யாரும் உதவிக்கு வராவிட்டாலும் கூட.

 ஹிஜ்ரத்தின் போது நபிக்கு எத்தகைய பாதுகாப்பு கிடைத்தது ?

 மதீனாவிற்கு எதிர் திசையில் இருந்த தவ்ரு குகைக்கு எதிரிகள் தேடி வந்தனர்.

 அல்லாஹ் அதன் வாசலில் புறாக்களை அனுப்பி கூடு கட்ட வைத்தான்.

சிலந்திப் பூச்சியை வலை பின்ன செய்தான்.

 இதை பார்த்த எதிரிகள் உள்ளே யாரும் இருக்க முடியாது என்று முடிவு செய்தனர்.

 புறாக்கூட்டை தள்ளிவிடுவதோ சிலந்தி வலையை உதறுவதோ பெரிய வேலையே இல்லை. ஆனால் அல்லாஹ் அதை எதிரிகளுக்கு நினைவூட்ட வில்லை.

 வரலாறு இன்னொரு ஆச்சரியத்தை தருகிறது.

 இந்த பகுதியில் பெருமானாரை தேடும் பொறுப்பை எடுத்துக் கொண்டவன் உமைய்யத்து பின் ஹலப். பெருமானாரின் பெரிய எதிரிகளில் ஒருவன்.

அவன் தனது அடியாட்களில் இரண்டு பேருடன் தவ்ரின் அடிவாரத்திற்கு வந்தான்.

அவன் உடல் பருத்துவன் என்பதால் மலைக்கு மேலே ஏறவில்லை. அடிமைகளை அனுப்பி விட்டு கீழே நின்று கொண்டான்.

இரண்டு அடிமைகளில் ஒருவர் நடுவழியில் நின்று கொண்டு மற்றவனை மட்டும் மேலே அனுப்பினான். அந்த ஒரு ஆள் தான் தவ்ரின் வாசல் வரை வந்து நின்றான். குகைக்கு உள்ளே  குனிந்து பார்க்க கூட அவனுக்கு சோம்பல். வெளியே இருந்த புறாக்கூட்டை பார்த்து விட்டு புத்திசாலித்தனமாக யோசித்து விட்டதாக நினைத்து திரும்பி விட்டான்.

 அவன் திரும்பி வந்த போது கிழே நின்று கொண்டிருந்தவன் எதையும் கேட்கவில்லை. இருவரும் உமய்யாவை சந்தித்த போது அவன் விசாரித்தான். அப்போது குகைக்கு அருகே சென்றவன் புறா கூடுகட்டியிருக்கிற விவரத்தை சொன்னான். அப்போது தான் உடன் இருந்த மற்றொரு அடிமை கேட்டான். நீ கூட்டிற்கு கீழே குனிந்து பார்த்தாயா ?

அந்த கேள்வி தேவையே இல்லை என்று மறுக்கும் வகையில் உமய்யா சொன்னான். விடு! அந்த புறாக்கள் அங்கு முஹம்மது பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கின்றன எனக்கு தெரியும் என்றான்.

 அந்த புறாக்களை பற்றி இமாம் சுயூத்தி கூறுகிறார்.

  فإن الله جعل حمامتين حاميتين على باب الغار، ومعهما عنكبوت حتي لا تشك أن  رسول وأبوبكر الصديق يختبئان بالداخل

 வரலாற்று அறிஞர்கள் இப்படியும் சொல்வதுண்டு. இமாம் முஹம்மது தாஹிர் அல் குர்தீ கூறுகிறார். அந்த புறாக்கள் அப்ரஹாவின் யானை படையை சிதறடித்த சிஜ்ஜீல் பறவையின் வாரிசுகள்

 கஃபாவை பாதுகாத்த பறவைகளை வைத்தே காருணய நபியையு அல்லாஹ் பாதுகாத்தான்.

 எதிரிகள் திரும்பிச் சென்றார்கள். அல்லாஹ் புறாக்கூட்டை மட்டும் வைத்து பெருமானாரை பாதுகாக வில்லை. எதிரியான உமய்யாவின் வார்த்தையை வைத்தும் பாதுகாத்தான்.

கண்ணுக்கு தெரியாத படைகள் என்று அல்லாஹ் கூறுவது எதிரிகள் சிந்தித்தித்தும் பார்க்காத வகைகளில் அல்லாஹ் தன்னுடைய ஆட்களை பாதுகாப்பான் என்ற கருத்தையும் தரும்.

 ஹிஜ்ரத்திப் அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தவர்கள் பாதுகாக்கப் பட்டார்கள் என்பது மட்டுமல்ல. அதற்கு பின்னர் நபி (ஸ்ல) அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

 அந்த வெற்றியின் உச்சத்தை தான் அப்போது முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

 அதனால் தான் பயணத்தை கொஞ்சம் தள்ளிப்போடலாமாஎன்று கேட்டவர்களிடம் கடுமையாக அல்லாஹ் இவற்றை நினைவூட்டினான்.

  

ஹிஜ்ரி நமக்கு நினைவூட்டுகிற அற்புதமான செய்திகளில் அதே நேரம் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசியமான செய்தி இது. 

நம்மீதான கடமைகளை நிறைவேற்றதுவதற்கு சில நேரங்களில் நாம் அலட்சியம் செய்கிறோம். காலம் தாழ்த்து கிறோம். அதற்காக அற்பமான காரணங்களை கூட கூறுகிறோம்.

இது நமக்கு வெற்றிக்கு உதவாது.

கடமைக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுத்து காரியங்களை செய்வோமானார் அல்லாஹ் எந்த நிலையிலும் நமக்கு உதவுவான நம்மை பாதுகாப்பான் என்ற அழுத்தமான செய்தி ஹிஜிரத்தில் இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் உலக வாழ்வின் மோகம் – நமக்கு அல்லாஹ்வின் உத்தரவுகளை மீறி நடக்க தூண்டலாம்.

  அப்போது நாம் அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஆசாபாசங்களை ஒதுக்கி விடுவோமானால் ஹிஜ்ரத்தில் பெருமானாருக்கு கிடைத்த பாதுகாப்பும் வெற்றியும் நம் ஒவ்வொரு வருக்கும் கிடைக்கும்.

 ஹிஜ்ரத்திற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரத்தின் வெற்றி பிரம்மாண்டமாக வெளிப்பட்டிருந்த நேரத்தில் அல்லாஹ் நினைவு படுத்திக் கூறிய மிக அற்புதமான ஹிஜ்ரத்தின் வழிகாட்டுதல் இது.

 1448 ம் புதிய ஆண்டை ஹிஜ்ர்த்தின் தத்துவங்கள் வெற்றியடையும் ஆண்டாக அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!.

 முஹர்ரம் 9 10 நோன்பு

 வரக்கூடிய வியாழக்கிழமை முஹர்ரம் பிறை 9 வெள்ளிக்கிழமை பிறை 10 ம் ஆகும் அந்த இரு தின்ங்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்து. ஆகும்

 قول النبي صلى الله عليه وسلمصِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ. رواه مسلم

  فعَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ." رواه البخاري 

   அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 .

 

 

 

 

 

 

 

 

தங்களுடைய மனோ

இந்த கேள்விக்கு நியாயாமன

முஸ்லிம்கள் அதிகார பலத்தின் உச்சத்தில் இருந்தார்கள். ஏராளமான மக்களும் இருந்தார்கள்.

காசு பணமும் ஏராளமாக திரட்டப்பட்டிருந்த்து.

 

 

 

.

 

 

No comments:

Post a Comment