இது புட் ஏரியா காலம்.
எங்கு என்ன விதமான
உணவுகள் கிடைக்கிறது என்று தேடித்தேடி சாப்பிடுகிற காலம் இது.
கண்ட கண்ட உணவை
பொருத்த மற்ற நேரத்தில் சாப்பிட்டு உடலை அதிகமாக கொடுத்துக் கொள்வது இப்போது அதிகமாக
நடக்கிறது.
அதுவும் கவலைக்குரியது.
நாம் அக்கறை செலுத்த
வேண்டிய மற்றொரு செய்தி இருக்கிறது.
நாம் உடலுக்கு
உணவளிக்க முக்கியத்துவம் கொடுப்பது போல ஆன்மாவுக்கு உணவளிக்கவும் முக்கியத்துவம் தர
வேண்டும்
ஆன்மாவுக்கு உணவளிப்பது
எனில்
எதில் ஆன்மா
நிம்மதி அடையுமோ
, வெளிச்சம் பெறுமோ, விசாலமாகுமோ அதற்கேற்ற உணவை அதற்கு தரவேண்டும் என்பதாகும்.
ஒரு அறிஞர் காலையில்
சுபுஹ் தொழுகைக்குப் பின் இஷ்ராக் வரை பள்ளிவாசலில் உட்கார்ந்து திக்ரு செய்து கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்ற ஒருவர் “இன்னும் காலை ஆகாரத்திற்கு போகவில்லையா என்று கேட்டார்.
ஆலிம் சொன்னார். நான் ஆன்மாவின் ஆகாரத்தை எடுத்துக்
கொண்டிருக்கின்றேன்.
சிறந்த மனிதர்கள்
ஆன்மாவின் சுத்தம் ஆரோக்கியத்திற்கும் அதிக மதிப்பளிப்பார்கள்.
நம்முடைய மார்க்கம்
உடலுக்கு ஆரோக்கியமளிக்கிற விசயத்தை பழ்ல் என்கிறது. ஆன்மாவிற்கு ஆரோக்கியம் தருகிற
விசயத்தை ரஹ்மத் என்கிறது.
பள்ளிவாசலுக்குள்
நுழைகிற போது இப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக என்று கேட்கிறோம். வெளியேறுகிற போது அஸ் அலுக
மின் பழ்லிக்க என்று கேட்கிறோம்.
ஆன்மாவிற்கு ஆகாரமளிக்கிற
சில வழிமுறைகளை மார்க்க அறிஞர்கள் வகைப்படுத்தருகிறார்கள்.
நம்முடைய அன்றாட
உணவு எப்படி மாமூல் வழக்கமானதாக இருக்கிறதோ அதை போல நம்முடைய மாமூலான வழக்கமாக்கிக்
கொள்வோம்.
ஆன்மாவிற்கு ஆகாரமாக
முதல் காரியம் குர் ஆன் ஓதுவதும் குர் ஆனை கேட்பதும் ஆகும்.
குர் ஆன் இதை ஆன்மாவின்
ஆகாரம் என்கிறது.
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ
فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ (204)
தினசரி காலை யாசீன் ஓதுகிற பழக்கத்தை மாமூல் ஆக்குவோம்.
தினசரி இண்டர்நெண்ட் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் என எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம்.
ஆன்மாவின் உணவுக்காக கொஞ்ச நேரத்தை ஒதுக்க முடியாதா ?
காலையில் முடியாவிட்டால் மாலையில் ஓதிக்கலாம்
பெருமானார் எப்படியாவது உறங்கும் முன் சூரத்துல் முல்க் ஓதுவார்கள் என்று ஹதிஸ்கள் கூறுகின்றன.
நம் முன்னோர்களில் சில ஒரு ஆயத்தையே திரும்ப திரும்ப ஓதுவார்கள். அதில் மனம் இயிக்கிறது என்பார்கள்.
நம்முடைய இளைஞர்கள் ஒரு சுவிங்கத்தை லயித்து சப்புகிறார்கள் அது – போல் ஒரு ஆயத்தை இலயித்து ஓதுவார்கள்
நாம் நமக்கு தெரிந்த ஆயத்தை சூராவை திரும்ப திருமப் ஓதலாம். இது இதயத்திற்கான உணவு என்ற எண்ணத்தில்
திருக்குர் ஆன் ஓதப்படும் போது அல்லாஹ்வின் அருள் பொழுகிறது இதயத்தின் இருள் அகல்கிறது.
திருக்குர்
ஆன் கூறுகிறது.
لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ
تُرْحَمُونَ (46)
ஒரு நாளைக்கு குறைந்த்து 100 தடவையாவது காலையில் அல்லது மாலையில் இஸ்திக்பார்
சொல்லும் வழக்கத்தை நாம் உருவாக்கிக் கொள்வோம் . அது ஆன்மாவுகான உணவு எனும் சிந்தனையில்.
நாவில் தவ்பா
இதயத்தில் பாவத்தின் சுவை.
என் இஸ்திக்பாரை கண்டு
பாவம் சிரிக்கிறது.
குளிர்ந்த நீர நெருப்பை அணைப்பதை விட வேகமாக சலவாத் இதயத்தின் இருட்டை விரட்டுகிறது. என அபூபக்கர் சித்தீக் ரலி கூறினார்கள்
عن الطفيل بن أبي بن كعب عن أبيه قال كان رسول الله
صلى الله عليه وسلم إذا ذهب ثلثا الليل قام فقال يا أيها الناس اذكروا الله اذكروا
الله، جاءت الراجفة تتبعها الرادفة، جاء الموت بما فيه، جاء الموت بما فيه، قال
أبي: قلت، يا رسول الله إني أكثر الصلاة عليك فكم أجعل لك من صلاتي، فقال ما شئت،
قال: قلت الربع، قال: ما شئت، فإن زدت فهو خير لك، قلت: النصف، قال: ما شئت فإن
زدت فهو خير لك، قال: قلت فالثلثين، قال: ما شئت فإن زدت فهو خير لك، قلت أجعل لك
صلاتي كلها، قال إذن تكفى همك ويغفر ذنبك، قال أبو عيسى: هذا حديث
حسن صحيح.
தஸ்பீஹ் தஹ்லீல் தக்பீர் தஹ்மீத் சிறப்பு சொல்ல பட்டிருக்காவிட்டால் சலவாத் மட்டும் சொல்லிக் கொண்டிருப்பேன். என அலி ரலி கூறீனார்கள்
இது ஆன்மாவின் ஆகாரம் என்ற சிந்தனையோடு
لَا يَقْعُدُ قَوْمٌ يَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا حَفَّتْهُمُ المَلَائِكَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَنَزَلَتْ عليهمِ السَّكِينَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَن عِنْدَهُ.
الراوي
: أبو سعيد الخدري وأبو هريرة | المحدث : مسلم
திக்ரு செய்யும் போது மனிதர்கள் இதயத்தில் அல்லாஹ்வின்
மீதான் நேசம் அதிகரிக்கமும்.
நான் ஒன்றை அதிகமாக நினைவு கூறும் போது அதன் அன்பு
அதிகரிப்பது இயற்கை தானே!
குர் ஆன் கூறுகிறது.
وَأَطِيعُوا
اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (132
தலை முடியிலிருந்து கால் நகம் வரை ஒவ்வொரு காரியத்திலும் பெருமானாரின் சுன்னத்கள் உண்டு.
சுன்னத்களை கடைபிடிக்கும் போது அதற்கான கூலி
கிடைக்கும் அல்லாஹ்வின் நெருக்கம் கிடைக்கும் என்ற சிந்தனையோடு இது ரூஹுக்கான உணவு என்பதையும் நினைவிக் கொள்வோம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ (119)
நல்லவர்களுடன் இருங்கள் என்பது திருக்குர் ஆனிய உத்தரவாகும் (அம்ரு)
முஜத்தின் அல்பஸானி ரஹ் கூறுவார்கள்
நல்லோர்களின் பார்வையே ஷிபா
ஆகிவிடும். அத்தகையோர் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே அறிவின் பேரொளி கிடைத்துவிடும்
رؤيته شفاء وموعظته دواء ينتفع برويته قبل روايته
ஆனாமாவிற்கு
ஆகாரமளிப்போம் என்ற சிந்தனையில் நல்லவர்களின் இணைப்பில் இருப்போம்
ஆன்மாவிற்கான 7 ஆகாரம் தக்வா
குர்
ஆன் கூறுகிறது. وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (10)
தக்வா
எனில் பாவங்களை விட்டும் சந்தேகத்திற்கு இடமளிகும் முஸ்தபிஹாத்திலிருந்து – விலகி நிற்பதாகும்.
ஆன்மீக அறிஞர்கள்
கூறுவார்கள்
الدنيا يوم ولنا فيها صوم
அந்த ஒரு நாளிலும் நோன்பிருக்கிறோம் என்பதன் பொருள் பாவத்தை
விட்டு விலகி இருப்போம் என்பதாகும்.
பாவகாரியங்களிலிருந்து விலகி இருக்க
வேண்டும் என்ற உறுதியும் சிந்தனையும் ஆன்மாவிற்கு வலு வேற்றுபவை ஆகும்.
فَجَعَلَ
يقولُ في صَلَاتِهِ -أَوْ في سُجُودِهِ-: اللَّهُمَّ اجْعَلْ في قَلْبِي نُورًا،
وفي سَمْعِي نُورًا، وفي بَصَرِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ شِمَالِي
نُورًا، وَأَمَامِي نُورًا، وَخَلْفِي نُورًا، وَفَوْقِي نُورًا، وَتَحْتي نُورًا،
وَاجْعَلْ لي نُورًا، أَوْ قالَ: وَاجْعَلْنِي نُورًا.
أخبَرَ
ابنُ عبَّاسٍ رَضِي اللهُ عنه أنَّ النَّبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّم جعَلَ
يَدْعو ويقولُ في صَلاتِهِ أو في سُجودِهِ، وفي رِوايةٍ أُخرى لمسلمٍ أنَّه كان
يَدْعو بهذا الدُّعاءِ وهو خارجٌ إلى الصَّلاةِ، فكان يقولُ: «اللَّهُمَّ اجعلْ في
قَلبي نُورً
அல்லாஹ் இந்த உலகில் நம் இதயத்திற்கு வெளிச்சத்தை தந்து விட வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும் சிந்திக்க வேண்டும். நாம் அந்த வெளிச்சத்தோடு
உலகில் நடை போட வேண்டும்.
கியாமத் நாளி ல்அந்த வெளிச்சத்தை பார்த்து வஞ்சகர்கள் பொறாமைபடுவார்கள். அந்த வெளிச்சத்தை தாங்களும் பெற்றுக் கொள்ள ஆசைப்படுவார்கள்
பத்து மிருகங்கள் சொர்க்கம் செல்கின்றன.
ச்சீ என்று சொல்கிற நாய் சொர்க்கம் செல்கிறது.
நீ என்னை முட்டாள் என்றாயல்லவா கழுதை கேட்குமே
நீங்கள்
கறியை தின்று போட்ட எலும்பை தின்றவன் நான் சொர்க்கம் போகிறேன் என்று நாய் சொல்லுமே
எனவே நமது இதயத்தை
வெளிச்சப்படுத்திக் கொள்ள தொடர்ந்து பிரார்த்திப்போம்.
ஆன்மாவுக்கு ஆரோக்கியம்
தரும் உணவுகளையும் தர சில அமல்களை மஃமூலாக்குவோம்
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
மாஷா அல்லாஹ்....
ReplyDeleteகடலை சுருக்கி குவளையில் கொடுத்தது போன்ற ஜும்மா குறிப்பு,
ReplyDeleteஜஸாகல்லாஹ் உஸ்தாத்.
மாஷாஅல்லாஹ்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteMashaallah barakkallah
ReplyDelete