பெற்றோர்களை
கவனிப்பதை அல்லாஹ்வுக்கு அடுத்து செய்யப்பட வேண்டிய கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது,
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا
أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا
قَوْلًا كَرِيمًا . وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا} [الإسراء:23-24].
இந்த
வசனத்தில் கவனிக்க வேண்டிய் முக்கிய
உத்தரவுகளில் சில
1.
அல்லாஹ்வுக்கு அடுத்தது பெற்றோரின் கடமை
2.
إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا வயது
முதிர்ந்த பெற்றோர் உனக்கு கிடைத்தால் என்ற வாசகம் அதை பெரும் பாக்கியமாக கருத வலியுறுத்துகிறது.
3.
ஒரு சந்தர்பத்திலும் “ச்சே” என்று சலித்துக் கொள்ளக் கூடாது
4.
அவர்களை வெறுட்டும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
5.
அவர்களிடம் மரியாதையாகவே பேச வேண்டும்.
6.
பிள்ளைகள் எந்த உயரத்தில் இருந்தாலும் தங்களது பெற்றோர்களிடம்
உள்ள கருணையால் அவர்களுக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டும்
7.
அவர்களுக்காக பிரார்த்திக்க இவ்வசனம் உத்தரவிடுகிறது,
பன்னூறு ஆண்டுகளாக
திருக்குர் ஆன் இவ்வாறு போதித்த்தால் முஸ்லிம் சமூகத்தில் பெற்றோர்களை பராமரிக்கும் இயல்பு
ஓரளவேனும் சிறப்பாக இருக்கிறது.
அநாதைகளுக்கான
ஏராளமான காப்பகங்கள் இருக்கிற முஸ்லிம் சமூகத்தில் ஓல்டு ஏஜ் ஹோம்கள் இல்லை.
கடந்த ஈதுல்
பித்ரு பெருநாளின் போது கோவையில் ஒரு பிரபல உணவகத்திற்கு சென்ற போது அங்கு வேலை செய்து
கொண்டிருந்த மூதாட்டி “ அடுத்த ஜென்மத்தில நான் முஸ்லிமாக பொறக்கனும் என்று கூறினார்.
ஏன் என்று கேட்ட போது 5 குழந்தைகள் இருந்த போதும் என்னை கை விட்டுட்டாங்கள். முஸ்லிம்கள்
அப்பா அம்மாவ செல்லமா பாத்துக்கராங்க என்றார்.
அதே நேரத்தில்
மாறிவரும் இன்றைய உலகில் மேல்நாடுகளில் பெற்றோர்களின் நிலை பற்றிய ஒரு ஆய்வரிக்கை படிக்க
படிக்க அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
மேல்நாடுகளில்
பல குடும்பங்களிலும் பெற்றோர்களை ஓல்டு ஏஜ் ஹோம்களில் சேர்த்து விடுகிறார்கள். அதற்காக
பணம் கட்டி ஆண்டுக்கு ஒரு தடவையோ அல்லது சில தடவைகளிலோ மலர் கொத்துகளோடு அவர்களை பார்த்து
விட்டு வந்தால் போதுமானது என்று நினைக்கிறார்கள்.
என்னே கேவலமான
மனிதாபிமானம் ?
சில வேதனை மிகு காட்சிகள் மேல் நாடுகளில் சகஜமாக நடக்கின்றன.
Send the bill to me for payment
இங்கிலாந்தில் வாழ்கிற ஒரு முஸ்லிம் இன் ஜினியர் கூறுகிறார்.
நான் எனது நண்பரான மற்றொரு இன்ஞினியரை பார்க்க சென்றிருந்தேன். நாங்கள் பேசிக்
கொண்டிருந்த போது அவரது செகரட்ரீ மெதுவாக வந்து, ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்திருப்பதாக கூறினாள்.
ஹாஸ்பிடல் என்றதும் நான் பதட்டமானேன். ஆனால் அந்த நண்பர் அலட்டிக் கொள்ள வில்லை. நானாக
என்ன செய்தி என்று கேட்டேன். “என் அம்மா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப் பட்டிருந்த்தார்.
அவர் இறந்து விட்டாராம். என்றார் அலட்டிக் கொள்ளாமல். நான் உடனே பதட்டப்பட்டு எழுந்தேன்
.அவருக்கு இரங்கல் சொன்னேன். சரி மற்ற காரியங்களை
கவனியுங்கள். இன்னொரு நாள் உங்களை சந்திக்கிறேன் என்று கூறினேன்.
அப்போது அவர் சொன்னார். நீங்கள் அமருங்கள். நான் செல்ல வேண்டியதில்லை. டாக்டருக்கு போன் செய்து விட்டேன் இரங்கல்
சடங்குகளை செய்கிற ஏதேனும் ஒரு சிமிட்டிரி சர்வீஸை அழைத்து காரியங்களை செய்துவிடுமாறும்
send the bill to me for payment என்றும் கூறிவிட்டேன் என்றாராம்.
எவ்வளவு ஆச்சு என்ற பில்லை எனக்கு அனுப்பி விடுங்கள் என்றும் கூறிவிட்டேன்
என்று கூறினார்.
இறந்து போன தாய்க்கு இறுதி மரியாதை செய்ய கூட மனமில்லாததாக இந்த தலைமுறை உருவாகியிருக்கிறது.
மேல் நாட்டில் இப்படி நடை முறை என்றால் இதற்கு நிகரான் சில நிகழ்வுகள் நம்முடைய
நாட்டிலும் நடந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ் பாதுகாப்பானாக!
Dog is his loyalty
1985 நடந்த ஒரு அதிசயமான வழக்கு
இது. அமெரிக்காவின் கொணக்டிக்ட் மாநிலத்தில் ஒரு நீதிமன்றத்தில் ஒரு
அம்மா வழக்கு தொடர்ந்தார். என கணவர் இறந்து விட்டார். என் மகனுடன் வசிக்கிறேன். என் மகன் அவனது வளர்க்கும் நாயுடன் பல மணி நேரம் செல்விடுகிறான். எனக்கு ஒரு ஐந்து நிமிடம்
கூட தருவதில்லை. கனம் கோர்ட்டார் எனது
மகன் எனக்கு ஐந்து நிமிடமாவது தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்த. .
இருவரும் வக்கீல் வைத்து வாதாடினர்.
–
இது நாடு
முழுக ஒளிபரப்ப பட்டது.
ஒருவருடம் நீடித்த வழக்கில் நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா ?
Dog is his loyalty - நாய் அவனது பொறுப்பு. தாயிடம் பேச மகனுக்கு உத்தரவிட முடியாது.. தாய் விரும்பினால்
ஒரு விண்ணப்பம் கொடுடுத்து ஓல்ட் ஏஹ் ஹோமிற்கு அனுப்ப கோரலாம்.
அந்த பையன் தாயிடம் கூறினான்.
You spend your life; let me spend may life
அம்மா நீங்கள் உங்களது வாழ்க்கையை அனுபவியுங்கள். என்னை எனது வாழ்வை அனுபவிக்க
விடுங்கள்.
பெற்றோர்களைப் பற்றி அந்த ஆய்வறிக்கை சொல்கிறது. இத்தகைய சூழ்நிலை காரணமாக
பல நாடுகள் விநோதமான சட்டங்களை இயற்றி இருக்கின்றன.
சீனாவில் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
Children
must care their parents' physical and emotional needs. if they do not meet them will
be fined and Or they can go to jail
பிள்ளைகள் தமது பெற்றோரின் உடல் மற்றும் உணர்ச்சிப் பூர்வமான தேவைகளை நிறைவேற்ற
வேண்டும். பிள்ளைகள் அவர்களை சந்திக்க வில்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அல்லது அவர்கள் ஜெயிலுக்கு செல்ல நேரிடும்
என்று அந்தச் சட்டம் சொல்கிறது.
இதே போல உக்ரைனில் ஒரு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
Parents can sue their children for financial support
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது பொருளாதாரா உதவி கேட்டு வழக்கு தொடர முடியும்
உலகில் முதியவர்கள் வேகமாக நிறைந்து வருகிற நாடு ஜப்பான்.
அந்த நாட்டில் அரசு இப்போது ஒரு திட்ட்த்தை அறிவித்திருக்கிறது.
The government will help the children to take care of their parents
பிள்ளைகள் தமது பெற்றோர்களை கவனித்துக் கொள்ள அரசு உதவி செய்யும்
பெற்றோர்களை கவனித்துக் கொள்ள என்றால், பெற்றோர்களை ஒல்டு ஏஜ் ஹோமில் சேர்ப்பதற்கான
செலவுகளை சமாளிப்பதற்கு அரசு உதவும் என்று பொருள்.
அதனால் இப்போது ஜப்பானில் சிறந்த பிரபல கம்பனியாக முதியவர்களை கவனித்துக்
கொள்ளும் நிறுவனங்கள் பெய பெற்றிருக்கின்றன
ஜெர்மனி நாடு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
The government will take care of the elderly
முதியவர்களை அரசே கவனித்துக்
கொள்ளும்
மேலை நாடுகளில் சூழ்நிலை
எப்படி இருக்கிறது என்பதற்கான சில உதாரணங்கள்
இவை.
இந்த சூழலில் பெரும்பாலான
இளைஞர்கள் கூகுள் யூடியூப் போன்ற சமூக ஊடங்களில் பெற்றோர்களை சமாளிப்பது எப்படி என்று தேடுகிறார்கள். பல இன்ஸாடா
கிராம் ரீல்களில் பராமரிக்கும் பாயிண்டுகளை வரிசையாக அடுக்குகிறார்கள். அந்த
ரீல்கள் பிரபலமாக
இருக்கின்றன என்று பெற்றோர்களை பற்றி ஆய்வு சொல்கிறது,
வேடிக்கையாக
இருக்கிறது.
இது வரை சுய
முன்னேற்றம் - தொழில் முன்னேற்றத்திற்கான உத்திகளைத்தான் பேசி வந்த ஊடகங்கள், இப்போது
உள்ளமும் உணர்வும் கலந்த வாழ்வின் மதிப்பான விசயங்களை கூட இப்படி வேடிக்கையா போதிக்கிற
நிலை உருவாகியிருக்கிறது.
பெற்றோர்களை
எப்படி கவனித்துக் கொள்வது என்று இந்த ஊடகங்கள் சுட்டிக் காட்டும் செய்திகளை கொஞ்சம்
கவனித்துப் பாருங்கள். நிலமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புரியும்,
duty of a son towords the parents
ஒரு மகன் பெற்றோருக்கு செய்ய வேண்டிய பணிகள் என்று ஒரு ரீல் இருக்கிரது.
அது சொல்லிக்
கொடுக்கிறது.
·
உங்கள் பெற்றோருக்காக டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட்
நீங்கள் வாங்குங்கள்
·
அவர்களுக்கு அதிக மறதி ஏற்படலாம் ஒமேகா போன்ற
நினைவு மாத்திரைகளை கொடுங்கள்
·
கூகுள் வாட்ஸப் போன்ற டெக்னாலஜி அப்டேட்
செய்யுங்கள்
·
ஃபார்மஸிகளோடு தொடர்பில் இருங்கள்.
·
(அதாவது மருந்து கடை வைத்திருப்பவருக்கு
உங்கள் பெற்றோருக்கு எது ஒத்துக் கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்று தெரியும் எனவே
அவர்களிடம் பேசிய பிறகு மருந்து கொடுங்கள்)
·
டிரைவர் ஏற்பாடு செய்யுங்கள்
·
அன்பை வெளிப்படுத்துங்கள் .
இன்னொரு இணைய
தளம் இப்படி சொல்லிக் கொடுக்கிறது.
You must serve your parents. Don't forget they are getting old
நீ உனது பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவர்கள் மூப்படைகிறார்கள் என்பதை
மறக்காதே
இன்றைய மேற்குலகில் நிகழ்ந்து கொண்டிருக்கிற இந்த அவலமான சூழ்நிலைகளை முஸ்லிம் சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம்முடைய பெற்றோர்களை
நாம் கண்களாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதில்
புதிய உணர்வுகள் மேலிட வேண்டும்.
நம்முடைய வீட்டில் இருக்கிற
– பாட்டன் பாட்டி போன்ற மூத்தோர்களை வீட்டில் உள்ள இளம் தலை முறை எப்படி நட்த்த வேண்டும்
என்பதில் நாம் அக்கறை செலுத்த வேண்டும். தேவையான போதனைகளை செய்ய வேண்டும்.
அப்போதுதான் நாம் முதுமை
அடையும் போது நமது பிள்ளைகள் நம்மிடம் கருணையோடு நடந்து கொள்ளும் வழி முறைகளை இயல்
பாக பெற்றிருப்பார்கள். எந்த சமூக ஊடகத்திலும் யாரோ ஒருவர் சொல்வதை கேட்க வேண்டியிருக்காது.
இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வார்கள்
உன் பெற்றோர்களிடம் ச்சே என்று கூறாதே فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ என்றால் ஒரு அடிமை எப்படி எஜமான் கூறுகிற எதற்கும் சலித்துக் கொள்ள
மாட்டானோ அது போலவே நீ உன் பெற்றோர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று பொருள்.
பெற்றோருக்கு பணிந்து நடக்க வேண்டியதன் ஒரு காரணத்தை பெருமானார் கூறினார்கள். அம்மாவின் காலடியில் சொர்க்கம். காலடி என்று சொல்லக் காரணம் அதுதான் இருப்பதில் கீழ் என்பதனால் ஆகும். அதற்கு கீழ் ஒரு இடம் இருக்கும் என்றால் அதை பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். அந்த அளவு பணிந்ந்து நடக்க வேண்டும் என்பதே وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ
الرَّحْمَةِ என்ற வார்த்தையின் பொருளாகும்.
عن أم المؤمنين عائشة -رضي الله عنها- أنه صلى الله عليه وسلم قال: النظر في
ثلاثة أشياء عبادة:
لنظر إلى الكعبة عبادة، والنظر إلى وجه الوالدين عبادة، والنظر
في كتاب الله عبادة.
பெற்றோருக்கு பணிவிடை செய்தல் ஹஜ் உம்ராவின் நன்மை
கிடைக்கும்
فقد أتى رجل إلى رسول الله صلى الله عليه وسلم، فقال إني اشتهي
الجِهاد وإني لا أقدر عليه، فقال: «هل بقي أحد من والديك؟»، قال: أمي، قال: «فاتقِ
الله فيها فإذا فعلت ذلك فأنت حاج ومعتمر ومجاهد فإذا دعتك أمك فاتق الله وبرها».
தந்தையின்
துஆ மறுக்கப்படாது.
قال النبي صلى الله عليه وسلم : ( ثَلاثُ
دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لا شَكَّ فِيهِنَّ : دَعْوَةُ الْمَظْلُومِ ،
وَدَعْوَةُ الْمُسَافِرِ ، وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ ) رواه ابن ماجه
உஸ்மான் ரலி அவர்கள் மதிப்புமிகு ஒரு பேரீத்தம் பழ தோட்டத்தை உருவாக்குவதற்காக
சிறப்பான சில பேரீத்தம் பழங்களை விதைக்காக
ஆயிரம் திர்ஹம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்திருந்தார்கள்.
அவர்களுடைய தாயார் இதை விதைக்காக வாங்கப்பட்டுள்ளது என்று தெரியாமல் சாப்பிட்டு
விட்டார்,
தோழர்கள் கவலைப்பட்டார்கள்.இப்படி விலை மதிப்புள்ளாத தாயா சாப்பிட்டு விட்டார்களே
என்று .
உஸ்மான் ரலி சொன்னார்., இந்த விதையை விதைத்து தோட்டம் உருவாகி யிருந்தால்
என்ன மகிழ்ச்சி அடைவேனே அதை விட பன் மடங்கு மகிழ்ச்சி என் அம்மா சாப்பிட்ட்தால் கிடைத்தது
என்றார்கள்.
இதுதான் இஸ்லாம் உருவாக்கிய அம்மாவை
சமாளிப்பது எப்படி என்பது அல்ல; அம்மாவை சந்தோஷப்படுத்துவது எப்படி என்ற பன்பாடு..
அபூஹுரைரா ரலி அவர்கள் ஒவ்வொரு தடவை வெளியே செல்லும் போதும் திரும்பி வந்தவுடனும்
– அம்மாவிடம் சலாம் சொல்லி வெளியே போவதையும் திரும்பி வருவதையும் தெரிவிப்பார்கள்.
அபூஹனீபா ரஹ் அவர்கள் ஹிஜ்ரீ 120 லிருந்து சட்டம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
அன்றைய இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய சட்ட அறிஞராக சிக்கலான பிரச்சனைகளுக்கும் சீக்கிரமாக
தீர்வு சொல்ப்வராக இருந்தார்கள்,
ஆனால் அவருடைய தாயார் இன்னொரு ஆலிமிடம்
சட்டம் கேட்பார். அதற்காக “ என்னை அவரிடம் அழைத்துப் போ என்று கூறுவார். இமாம் அபூஹனீபா
ஒட்டகத்தில் அவரை ஏற்றி தானே அந்த ஒட்டகத்தை இழுத்துச் செல்வார்கள். அவருடை மாணவர்கள்
உதவிக்கு வர அனுமதி கேட்டால் மறுத்துவிடுவார்கள்.
அவருடைய தாயார் நாடிச் செல்லும் ஆலிமுக்கு சில நேரங்களில் பதில் தெரியாத போது
அவர் இமாம் அபூஹனீபாவிடமே திருப்பி கேட்பார். மெல்லிய குரலில் அவருக்கு பதில் சொல்லி
விட்டு அதே பதிலை அந்த ஆலிம் சொன்னது போல சப்தமாக தனது தாயாருக்கு சொல்வார்கள். அதை
ஆச்சரியமாக மற்றவர்கள் பார்த்தால் என்
அம்மாவிற்கு நிம்மதி கிடைத்தால் சரி என்பார்கள்.
முஹம்மது பின் சீரீன் ரஹி அவர்கள் தன் அம்மாவிற்கு ஒரு குறிப்பிட்ட கலர் பிடிக்கும்
என்பதை அறிந்து ஆடைகளுக்கு சாயம் பூசுகிறவர்களிடம் சென்று சாயம் பூசும் கலை யை கற்றுக்
கொண்டார்கள். தானே தன் அம்மாவிற்குரிய ஆடைகளுக்கு சாயம் பூசிக் கொடுப்பார் என முஹம்மது
பின் சீரீன் (ரஹ்)
அவர்களின் சகோதரி ஹப்ஸா பின் து சீரீன் கூறுகிறார். அவர் தன் தாயிடம் மிக
மெதுவாக பேசுவார் என்றும் அந்த அம்மையார் கூறுகிறார். ,
பெற்றோர் காபிராக இருந்தாலும் கேள்விக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்று அஸ்மா
ரலி அவர்களின் கேள்விக்கு பெருமானார் பதில் கூறினார்கள்.
وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا
لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۖ وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا
مَعْرُوفًا
ஒரு நபித்தோழர் பெருமானாரிடம் வந்து நான் ஜிஹாதுக்கு வந்திருக்கிறேன். புறப்படும்
போது என் பெற்றோர்களின் கண்ணில் கண்ணீர் வந்த்து. என்றார். பெருமானார் கூறினார்கள்.
திரும்பிச் செல்: அழும் அவர்கள் மகிழட்டும்.
وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا
என்பதற்கு விளக்கம் சொல்லும் அறிஞர்கள் கூறுகிறார்கள்
பெற்றோர் முதுமை அடையும் போது சலாம் மட்டும் போதாது. கட்டியணைத்து முத்தமிடனும்.
நாம் அவர்களை நேசிக்கிறோம் என்பதை
நமது செய்கைகளால் அவர்கள் உணரனும். Action loded then speech
பெற்றோர்களிடம் அன்பாக பேசனும் , மகன் என்னை நேசிக்கிறான் என்பதை அவர்கள்
உணரனும்.
கண்களைப் பார்த்து பேசனும்.
அத்தா கொஞ்சம் பேசாம இருங்க! சும்மா இருக்க மாட்டீங்களா என்று சீறுதல் கூடாது.
وَلَا تَنْهَرْهُمَا என்ற
வார்த்தை பொருள் அவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள்
என்பதாகும்.
அவர்களை
வெளியே அழைத்துச் செல்ல நேரும் போது
எழுந்திருக்க உட்கார உதவி செய்யும்
போது உணவு கொடுக்க கழிவறை
செல்ல உதவும் போது முரட்டுத்தனமாக
அனுகாதீர்கள் என்றும் இதற்கு பொருள் வரும்.
முதியவர்களைப் பற்றிய ஆய்வறிக்கை ஒரு வேதனையான செய்தியை சொல்கிறது.
ஏராளமான முதியவர்களிடம் இண்டர்வியூ செய்த போது அவர்கள் தெரிவித்த கருத்து,
பிள்ளைகள் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் போதும் என்பதாகும். .
பெற்றோர்களை இப்படி கவனித்துக் கொள்ளும் பிள்ளைகல் ஒரு போதும் மோசம் போக மாட்டார்கள்.
நன்றாக மதிப்போடும் வளமாகவும் வாழ்வார்கள்.
மூஸா அலை அவர்கள் சமூகத்து மக்களுக்கு அல்லாஹ் ஒரு மாட்டை அறுக்கும் சோதனையை
வைத்தான் என்பது பகரா அத்தியாயம் கூறும் செய்தி.
அந்த வசன்ங்களின் விரிவுரையில் சொல்லப்படுவதுண்டு.
அல்லாஹ் சொன்னமாதிரியான அந்த மாட்டை பெற்றோரை பேணி வாழ்ந்த ஒரு இளைஞனிடமிருந்து
அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கினார்கள்.
மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் கூறினான்.
எனக்கு கட்டுப்படாமல் பெற்றோருக்கு கட்டால் அவன் கட்டுப்பட்டவனே
எனக்கு கட்டுப்பட்டு பெற்றோருக்கு கட்டப்படாதவனை கட்டுப்படாதவன் என்று எழுதுமாறு
கூறியிருக்கிறேன்.
பெற்றோருக்கு உபகாரியாக இல்லாமல் போவது மிகப்பெரிய துரதிஷ்டமாகும்.
உம்மத்தின் மீது பெரும் கருனை கொண்ட பெருமானார் மிம்பரில் ஆமீன் கூறி சபித்து
துஆ செய்த கொடூரமான பாவமாகும் அது
عن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وآله
وسلم - صعد
المنبر فقال: «آمِين،
آمِين، آمِين».
قيل: يا رسول
الله، إنك
صَعَدتَ المنبر فقلتَ: آمين،
آمين، آمين؟فقال: «إن جبريل
- عليه السلام - أتاني
فقال: مَنْ
أدركَ شَهْرَ رمضانَ فلم يُغفَر له فدخلَ النارَ فأَبْعَدهُ الله، قُلْ: آمِين، فقلتُ: آمِين.ومَن
أَدْرَكَ أبَويْه أو أحدَهُما فلم يبرّهُما فمات، فدخلَ النارَ فأَبْعَدهُ الله، قُلْ: آمِين، فقلتُ: آمِين.ومن
ذُكِرْتَ عنده فلم يُصَلّ عليكَ فمات، فدخلَ النارَ فأَبْعَدهُ الله، قُلْ: آمِين، فقلتُ: آمِين». (حسن صحيح
رواه ابن حبان)
அல்லாஹ் மறுமையில் திரும்பியும் பார்க்காத மூவர் மாட்டான்
(ثلاثةٌ لا ينظرُ اللَّهُ عزَّ وجلَّ إليهم يومَ
القيامةِ: العاقُّ لوالِدَيهِ، والمرأةُ المترجِّلةُ، والدَّيُّوثُ،
பெற்றோரை துன்புறுத்துவபவன், ஆண்களை போல் நடக்கும்
பெண், ரோஷமில்லாதவன்
பெற்றோர்களை அவமதிப்பவர்களுக்கான தண்டனை இந்த உலகிலேயே கிடைத்துவிடுகிறது
என்பது அனுபவமாகும்
சில குடும்பங்களில் மருமகள்களுக்காக பெற்றோர் துன்புறுத்தப்படுகிறார்கள்.
அதாவது மனைவியை திருப்திப்படுத்த பெற்றோரை துன்புறுத்துகிறார்கள்
பெற்றோர்களை பற்றி அந்த ஆய்வறிக்கையில் ஒரு செய்தி இருக்கிறது.
ஒரு ஆண் மருத்துவனையில் கழுத்தை நெருக்குவது போல இருக்கிறது என்று கதறியபடி
யிருந்தான். மருத்துவர்களால் அவனது நோயை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசியில் அவனை பார்க்க வந்த உறவினர் ஒருவர் சொன்னார். இவனது நோயுக்கு மருந்து
கிடையாது. இவன் தன் மனைவிக்காக பரிந்து பேசும் போது அம்மாவிடம் கோபமாக அடிக்கடி சொல்வான்.
அம்மா என் மனைவியை பேசினால் கழுத்தை நெரிச்சுருவேன்.
அதனால் இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்கீறது.
பெற்றோர்களைப் பற்றிய அந்த ஆய்வறிக்கை கூறுகிற ஒரு செய்தியை நிறைவாக கூறி
முடிக்கிறேன்.
ஒரு இளைஞன் ஹோமில் இருக்கிற தனது தாயிக்கு பூங்கொத்து வாங்கி பார்சல் அனுப்ப
ஒரு நிலையத்திற்கு வந்தான். அங்கே ஒரு நான்கு வயது சிறுமி அழுது கொண்டிருந்தாள். அவளிடம் விசாரித்தான். நான் என் அம்மாவிற்கு பூங்கொத்து
வாங்க வந்தேன் ஒரு டாலர் குறைவாக இருக்கிறது என்று அவள் கூறினான். இளைஞன் ஒரு டாலரை
கொடுத்து பூங்கொத்தை வாங்கிக் கொடுத்து அவளை அவள் செல்லுமிட்த்தில் இறக்கி விடுவதாக
கூறினாள். அவளும் சம்மதித்தாள். அவள் சென்றது ஒரு மயானத்திற்கு. அங்கு தன் அம்மாவின்
கல்லறை மீது பூங்கொத்தை வைத்து அவள் அழுதாள்.
அதை பார்த்த அந்த இளைஞனுக்கு உரைத்தது. ஒரு சிறுமி தன் இறந்து போன தாயின்
கல்லறைக்கு வந்து பூங்கொத்து வைக்கிறாள். நான் என் அம்மாவிற்கான பூங்கொத்தை பார்சலில்
அனுப்ப நினைத்தேனே என்று சொல்லி அழுது அவன் தன் தாயை தேடிச் சென்றான்
ஆய்வறிக்கை செல்கிறது . பெற்றோர்கள் இருக்கும் போதே அந்த அருலை புரிந்து கொள்வது
நல்லது.
இதைத்தான் இஸ்லாம் மிக எதார்த்தமாகவும் எச்சரிக்கையாகவும் வழிகாட்டி இருக்கிறது.
முஸ்லிம் சமுதாய்ம இன்று உருவாகிற சூழ்நிலைகளில் இருந்து பாடம் பெற்றுக் கொள்ள
வேண்டும்.
பெற்றோரை மதிக்கனும் மதிக்க கற்றுக் கொடுக்கனும்.
ஆங்கிலத்தில் ஒரு
பழ மொழி உண்டு.
Apple dus not
fall far from the tree
ஆப்பிள் மரத்திலிருந்து
வெகுதூரம் தள்ளி விழாது.
நமது பிள்ளைகள்
நம்மை போலத்தான் இருப்பார்கள் என்பது அதன் கருத்து
அரபியில் இதே கருத்தில்
ஒரு பழ்மொழி இருக்கிறது
الوَلَد
سِرّ أبيه
நாம் பெற்றோர்களை
பேணினால் நமது பிள்ளைகள் நம்மை பேணுவர்கள்
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment