قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ (9
நமது நாட்டின் பெருமைக்குரிய அம்சங்களில் ஒன்று வின்வெளித்துறையின் (இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் செண்டர் ISRO) வின் சாதனைகள்.
அதில் ஒரு மைல்
கல்லாக நேற்று சந்திராயன் 3 விண்கலத்தில் அனுப்பபட்ட
விக்ரம் என்ற என்ற சிறிய கலம், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை
படைத்துள்ளது.
இதற்கு முன்னும்
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் இறங்கியுள்ளன என்றாலும் துருவப் பகுதியில்
யாரும் இறங்க துணிந்ததில்லை. காரணம் அங்கு சீதோஷ்ண நிலை மைன்ஸ் 226 டிகிரி குளிர் நிலவுவதும்
அந்த இடத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக இருப்பதுமாகும். அதுமட்டுமல்லாது சில நாட்களுக்கு
விண்வெளித்துறையின் ஜாம்பவான் ஆன ரஷ்யா அனுப்பிய லூனா வின்கலம் சரியாக தரையிறங்க முடியாமல்
நிலவில் மோதி விழுந்ததில் திட்டம் தோல்வியடைந்திருந்தது. இந்தியாவின் நேற்றைய வெற்றியை
பிரம்மாண்ட மாக்கியதில் அதற்கும் ஒரு பங்கு இருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்,.
இந்த பணியில் ஈடுபட்ட
அனைவரும் நாட்டு மக்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை பெற்றுள்ளார்கள். நமது பாராட்டுக்களையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐம்பது ஆண்டுகளாக
இந்த துறையில் நமது நாடு வெற்றி நடை போட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு நமது நாட்டின்
ஆரம்ப கால ஆட்சி தலைவர்களை நாம் பாராட்டியாக வேண்டும்.
இந்தியா ஒரு ஏழை
நாடாக இருந்த போதும், பிரச்சனைகள் பல வடிவங்களில் இருந்த போதும் பெரிய நாட்டின் வளர்ச்சிக்கு
தேவை என்ற அளவில் இந்த துறையில் அவர்கள் தனி கவனம் செலுத்தினார்கள். குறிப்பாக பண்டித
ஜவஹர்லால் நேரு.
இன்று இந்தியா
வெளிநாட்டு செயற்கோள்களை அனுப்பி கைநிறைய சம்பாதிக்கும் அளவில் உயர்ந்துள்ளாது. ஆனால்
அன்று இது பெரிய செலவு மட்டுமே பிடிக்கிற பணியாக இருந்தது. அதுமட்டுமல்ல பெரிய பொருள்
செலவில் நடக்கிற சோதனைகள் சிறிய காரணத்தால் தோல்வி யடைந்து விடும் வாய்ப்பும் இருந்தது.
இந்தியாவின் முதல் ராக்கெட் பரிசோதனையே தோல்வியில் முடிந்தது. ஏ எஸ் எல் வி என்ற ராக்கெட்
4 முறை ஏவப்பட்டது. 3 முறை தோல்வியில் முடிந்தது. ஆனாலும் நேரு உள்ளிட்ட நமது நாட்டின்
தலைவர்கள் இஸ்ரே என்கிற நமது வின் வெளி ஆராய்ச்சி அமைப்பிற்கு மிகவும் ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும்
இருந்தார்கள்.
இந்த துறைக்க்கான
நிதி ஒதுக்கீடு என்பது ஓரளவாகவே இருந்தாலும் கூட அனுசரையான போக்கு தாராளமாக இருந்தது.
இந்தியாவின் ராக்கெட்
பாய்ஸ் என்று அழைக்கப்படும் ஹோமி ஜே. பாபா, விக்ரம் சாராபாய் மற்றும் ஏபிஜே அப்துல்
கலாம். ஆகியோரில் அப்துல் கலாம் இந்த துறையை இந்திய பொதுமக்கள்
மத்தியில் பிரபலமாகியவர் . அவர் தனது நூலில் ஒரு செய்தி எழுதுகிறார். ஆய்வு பணிக்காக நீண்ட காலம் வெளி மாநிலத்திலேயே
தங்க வேண்டியிருந்தது. சொந்த ஊரில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான சாத்தியம்
மிக குறைவு. ஒரு தடவை ஊரில் முக்கியமான ஒரு நிகழ்வில் பங்கேற்க கலாம் ஒப்புக் கொண்டிருந்தார்.
அதே தினத்தில் பிரதமர் இந்திரா காந்திக்கு
ஒரு திட்டத்தை விளக்கிச் சொல்ல தில்லி செல்ல வேண்டியிருந்தது. கலாம் சொல்கிறார். நான்
தில்லி செல்ல முடிவெடுத்தேன் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை சந்தித்தேன். சந்தித்து
விட்டு திரும்பும் போது நான் ராமேஷ்வரம் செல்வதற்காக எனக்காக ஸ்பெஷலாக ஒரு ராணுவ விமானத்தை
ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் என்று எழுதுகிறார்.
சத்தீஸ் தவான் வின் வெளி மையம்,
விக்ரம் சாராபாய் வின் வெளி மைய்யம் பாபா அணு ஆராயச்சிக் கூடம் என்ற ஆய்வு மையங்களுக்கு
விஞ்ஞானிகளின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் இந்தியாவின் மூத்த அரசியல் வாதிகள் இத்துறையின்
மீது காட்டிய அக்கறையாகும்.
ராக்கெட் தொழில் நுட்பத்தில் இந்தியாவும் முஸ்லிம்களும்
ராக்கெட் தொழில் நுட்பம் என்பது
இந்திய முஸ்லிம்களின் முன்னோடி கண்டுபிடிப்புக்களில்
ஒன்றாகும்.
இன்றிலிருந்து சுமார் 250 வருடங்களுக்கு
முன்பு 1780 ல் ஆங்கிலோ மைசூர் யுத்தத்தில் மாவீரன் திப்பு சுல்தான் ரக்கெட்டுகளை குண்டுகளை வீச பயன்படுத்தினார். திப்பு
இறந்த பிறகு அந்த தொழில் நுட்பத்தை புளூபிரிண்ட எடுத்துக் கொண்ட பிரிட்டிஷ் காரர்கள்
33 வருடங்கள் கழித்து 1813 ல் அதே மாதிரியான ராக்கெட்டுகளை பிரான்ஸின் நெப்போலியனுக்கு
எதிராக பயன்படுத்தினார்கள்.
After the defeat of
Tipu Sultan, the British took the blue print and technology of these Mysorean
rockets back to Europe and renamed then as Congreve rocket. 33 years later, on
Oct 1813, the British used these Congreve rockets against Napoleon's Army at
the Battle of Leipzig.
ராக்கெட் தொழில் நுட்பத்தில்
திப்பு தான் முன்னோடி என்பதை உலக அறிவியல் அறிஞர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்.
திப்புவின் அந்த ராக்கெட்டின்
மாதிரி சித்திரத்தை அமெரிக்காவின் விண்வெளி
நிறுவனமான நாஸா மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள தனது அலுவலத்தின் வரவேற்பரையில் வைத்திருக்கிறது.
ராக்கெட் தொழில் நுட்பத்தில் முன்னோடியான திப்புவுக்கு செய்த மரியாதை அது என்று கூறப்படுகிறது.
NASA paid tribute to
Tipu Sultan's contribution to Rocket Technology by hanging this painting of
Tipu Sultan's Army fighting the British with Mysorean rockets (1780 Anglo
Mysore War) on their main reception lobby at NASA's Wallops Flight Facility at
Maryland (USA).
அப்துல் கலாம் அதை நேரில் கண்டு
பூரித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
Dr. APJ Abdul Kalam
once exclaimed, “I was proud to see an Indian (Tipu Sultan) being described by
NaSA as a hero of warfare rocketry
எனவே இந்தியாவின் ராக்கெட் தொழில்
நுட்பம் என்பது மிக தொன்மையானது. அதில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்பது
நமக்கு மகிச்சியளிக்கிறது.
இப்போதும் இஸ்ரோவில் பல முஸ்லிம்
அறிஞர்கள் பங்கு வகிக்கிறார்கள் என்பது மகிழ்சிக்குரியது.
நேற்று இஸ்ரோவின் அந்த் விஞ்ஞானிகளை
கண்டு நாடு மகிழ்ந்தது போலவும் பயன் அடைந்த்து போலவும் நாட்டுன் செல்வந்தர்களை கண்டோ
மகிழ்ந்த்த்தும் பயன் அடைந்த்தும் உண்டோ?
முஸ்லிம் சமுதாயத்தின் ஒவ்வொரு
தனிப்பட்ட நபரும் உணர்ந்து கொள்ள வேண்டிய தத்துவம் இது.
நமது சமுதாயம் பணத்திற்கும்
அதிகாரத்திற்கும் அதிக முக்கியத்துவத்தையும் மரியாதையையும் கொடுக்கிறது.
ஒரு நபர் பணக்கரானாக ஆகிவிட்டால்
அல்லது கவுன்சிலராக ஆகிவிட்டால் அவருக்கு கிடைக்கிற மரியாதை ஏராளம்.
அதே மஹல்லாவில் பிஎச்டி படித்தவருக்கோ ஆய்வு அறிஞருக்கோ அந்த மரியாதை
கிடைப்பதில்லை/ ஏன் மார்க்கம் படித்த ஆலிம்களுக்கு கூட சரியான மரியாதை கிடைப்பதில்ல.
முஸ்லிம் சமுதாயத்திலுள்ள தனி
நபர்கள், குறிப்பாக தாய்மார்கள், சமூக அமைப்புக்கள் இதில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு
சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
திருக்குர் ஆன் 1400 ஆண்டுகளாக
நம்மிடம் எச்சரிக்கை கேள்வி எழுப்பி நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ
يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو
الْأَلْبَابِ (9)
விவரமானவர்கள் தான் இந்த வேறுபாட்டை
புரிந்து கொள்ள முடியும் என்று அல்லாஹ் நிறைவாக கூறுகிறான்.
இதனடிப்படையில் வாழ்ந்த ஆரம்ப
கால முஸ்லிம் சமுதாயம் கல்வி ஆய்வு துறைகளில் செலுத்திய கவனம் அலாதியானது.
பிச்சை புகினும் கற்கை நன்றே
பாண்டிய மன்னன் அதிவீர்ராம பாண்டியன்
கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும்
கற்கை நன்றே என்று பாடினான்.
பிச்சை எடுப்பது போல நடித்து
கல்வி ஆய்வில் சிறந்த விளங்கிய ஒருவரை இஸ்லாமிய வரலாறு நமக்கு காட்டுகிறது.
பகீ பின் முஹல்லத் بقي بن مخلد
ஹ்ஜிரீ 200 களில் அந்துலுஸ்
எனப்படும் ஸ்பெயினில் வாழ்ந்தவர். இஸ்லாம் கண்ட பேரறிஞர்களில் ஒருவர். தப்ஸீர் ஹதீஸ்
என்ற இரு துறைகளிலும் முன்னோடியானவர் என்று இஸ்லாமிய உலகு இவரை போற்றுகிறது.
அவரது கல்விக்கால வரலாறு சோதனைகள்
மிகுந்த்து.
குர்துபாவில் இருந்த அவர் பக்தாதில்
இமாம் அஹ்மது பின் ஹன்பர் ரஹி அவர்களிடம் ,கல்வி கற்க ஆசைப்பட்டார்.
அதற்காக
ஸ்பெயினிலிருந்து கப்பலில் பயணம்
செய்தார். கப்பலோட்டியவருக்கு பாதை தவறிப் போய் விட்டது.
எங்கங்கோ கப்பல் சென்றது.
ஒரு கட்டத்தில் புயலில் மாட்டிக்கொண்டது
15 அடி 20 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளுக்கு இடையே கப்பல் அல்லாடியது. இனி ஊருக்கு திரும்ப
சாத்தியமே படாது என்கிற அளவுக்கு அச்சம் ஏற்பட்டது. ஒரு வகையில் கப்பல் உடைந்து ஒரு கரையில் ஒதுங்கியது.
பல நாட்கள் நினைவிழந்து கிடந்த
பிறகு விழித்துப் பார்த்தார். அங்கிருந்தவர்களிடத்திலே பக்தாது எங்கு இருக்கிறது? என விசாரித்தார். இன்னும் 800 மைல்கள் பயணம் செய்ய வேண்டும் என அவர்கள் கூறினார்கள் அவர்
தயங்கவில்லை. பெட்டியை தலையில் சுமந்தபடி நடந்தே பயணம் செய்தார் பகுதாதின் எல்லை நெருங்கியபோது
அவரால் நடக்க முடியாமல் மயங்கி கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்து
எழுந்த போது ஊருக்குள்ளிருந்து ஒரு மனிதர் வெளியே வருவதை பார்த்தார். அவரிடத்தில் இமாம் ஹம்பல் ரஹி
அவர்களைப் பற்றி விசாரித்தார். “அவரிடம் உனக்கு என்ன வேலை என்று அந்த
மனிதர் கேட்டார். அவரிடம்
கல்வி கற்பதற்காக நான் இத்தனை தூரம் பயணம் செய்து வந்திருக்கிறேன் என்று பகீ,
சொன்னார். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு அந்த மனிதர் “அடடா! நீங்கள் வந்த நேரம் சரியில்லையே உங்களது எண்ணம்
ஈடாராதே என்று கூறினார். ஏன் என்ன காரணம் என்று விசாரித்த போது
அப்போதைய அரசர் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களை வீட்டுச் சிறையில் தனி பாதுகாப்பில் வைத்திருப்பதாகவும் கல்வி கற்றுக் கொடுக்க தடை விதித்திருப்பதாகவும்
கூறினார்.
பகீ பின்
முஹல்லதுக்கு துக்கம் தொண்டையை அடைத்த்து என்றாலும் எப்படியாவது இமாம்
அஹ்மத்தை சந்தித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பகுதாது நகருக்குள் ஒரு அறையில் தாங்கிக்கொண்டார். அப்போது பகுதாதின் ஜாமியா பள்ளிவாசலில் யஹ்ய
பின் முஈன் ரஹு அவர்களுடைய ஹதீஸ் வகுப்பு நடப்பதாக அறிந்தார். அந்த வகுப்புக்கு சென்றார்.
இமாம்
யஹ்யா ஒரு ஹதீஸை கூறி விளக்கம் சொல்லி முடித்த பிறகு அறிவிப்பாளர்களைப்
பற்றி விவரிப்பது வழக்க்ம். அதன் பிறகு மாணவர்கள் கேள்வி கேட்பார்கள். கேள்வி நேரம் வந்த போது பக்கி எழுந்து,
ஹிஷாம் பின் இமாரை பற்றி ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு “அவர் எந்த நிலையிலும்
சிறந்தவர் என்று பதில் அளித்தார். அடுத்து இன்னொரு கேள்வியை கேட்க பக்கீ எழுந்த
போது பக்கத்தில் இருந்தவர்கள் அவரது சட்டையை பிடித்து இழுத்து அமர வைத்தார்கள்
ஒரு நபருக்கு ஒரு கேள்வி கேட்க மட்டுமே அனுமதி! நீ நிறுத்திக்
கொள்! என்றார்கள். அவர்களிடத்தில் அவர் கெஞ்சினார் நான் வெகு தூரத்திலிருந்து
வருகிறேன். எனது முக்கியமான கேள்வி இதுவல்ல். எனவே ஒரு முக்கியமான கேள்வியை கேட்க அனுமதியுங்கள்
என்று வேண்டிக் கொண்டார். அவர்கள் அனுமதித்தார்கள். அப்போது “இமாம் அஹ்மத் பின் ஹம்பலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.
சபையே அதிர்ச்சியில் உறைந்து
போய் நின்றது. அரசருக்கு எதிரானவரை பற்றிய கேள்விக்கு என்ன பதில்
சொல்ல முடியும்? என்று பலரும் ஆச்சரியப்பட்டு நின்றனர் ஆனால்
சிறிது நேரம் மௌனமாக இருந்த யஹ்யா பின் முஈன் (ரஹி) هو امام
المسلمينஅவர் முஸ்லிம்களின் தலைவர் என்று பதில் கூறினார் இதனை கேட்ட பக்கி அவர்களுக்கு இத்தனை அச்சத்திற்கு
இடையேயும் இமாம் அஹ்மது வின் பெருமை நிலை நிற்பதை அறிந்த போது அஹ்மது ரஹி அவர்களை சந்திப்பதில்
ஆர்வம் மேலும் அதிகரித்தது
அந்த சபையில் இருந்த ஒருவரிடம் எனக்கு அகமது பின் ஹன்பல் ரஹ் அவர்களின் வீட்டை
காட்ட முடியுமா என்று கேட்டார். அவர் இல்லை உனக்கு காட்டி கொடுத்தால்
எனக்கும் தண்டனை கிடைக்கும் உனக்கும் தண்டனை கிடைக்கும் என்று கூறி மறுத்துவிட்டார்.
பக்கீ கூறினார். நீங்கள் வீடு வரை வரவேண்டியதில்லை. நாம் இருவரும் அந்த தெரு வழியாக
செல்வோம் நீ இடதுபுறம் வலது புறம் என்று செய்கை செய்தால் போதுமானது நான் கண்டுபிடித்துக்
கொள்வேன் என்று அவரிடம் கெஞ்சினார். அதன் அடிப்படையில் அவர் அஹ்மது பின் ஹம்பல் (ரஹீ) அவர்களின்
வீட்டை அடையாளம் கண்டு கொண்டார். தன் அறைக்குத் திரும்பிய பக்கி அன்று இரவு முழுக்க யோசித்தார் எப்படி அங்கே செல்வது எப்படி அவரிடம் பாடம்
கற்பது என்று திட்டங்களை மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டே இருந்தார் இறுதியில் ஒரு
முடிவுக்கு வந்தார் .
மறு நாள்
தனது கோலத்தை மாற்றிக்கொண்டு ஒரு பிச்சை எடுப்பவர் போல அந்த நகரத்தில் தொடர்ந்து
வலம் வந்தார். கடைத் தெருக்களில் யாசகம்
கேட்டார் அன்றைய காலகட்டத்தில் யாசகம் கேட்பவர்கள் காசு கொடுங்கள் ரொட்டி கொடுங்கள்
என்று கேட்க மாட்டார்கள். அஜ்ருக்கும் அல்லஹ் என்று
கேட்பார்கள் பக்கீ அவ்வாறு கடைத்தெருக்களில் சப்தமிட்டுச் செல்வார். அப்போது பக்கீ ரஹ் அவர்களுடைய வயது
20. அதனால் சிலர் அவரை ஏளனமாகப்
பார்த்தார்கள் சிலர் உனக்கெல்லாம் இது கேவலம் இல்லையா என்று கேட்டார்கள் சிலர் கையில்
இருப்பதை கொடுத்தார்கள் எல்லாவற்றையும் அவர் சகித்துக் கொண்டார்,. அதே கோலத்தோடு
அஹம்து (ரஹி) அவர்களுடைய வீட்டுக்கு வந்து அஜ்ருக்கும் அல்லவா என்று உரத்த குரலில் சப்தமிட்டார் அவர் எழுப்பிய சப்தத்தில்
அதிக தேவை உடையவர் என்பது போன்ற ஒரு தொனி இருந்தது வெளியே வந்த
அஹமது (ரஹி) அவர்கள் அவருக்கு சில நாணயங்களை கொடுத்தார்கள்.
அதை வாங்க மறுத்த பக்கீ கூறினார். நான் இவ்வளவு தொலைவில் இவ்வளவு சிரமங்களை
சந்தித்து உங்களிடமிருந்து கல்வியறிவை பெற்றுக் கொள்வதற்காகவே நான் வந்திருக்கிறேன். எனவே எனக்கு நீங்கள் தயவு கூர்ந்து கல்வி கற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார். அவருடைய கேள்வியில் மனமிரங்கிய இமாம் அவர்கள் உனக்கு
நான் கல்வி கற்றுக் கொடுத்தால் உன்னை சிறையில் அடைத்து விடுவார்களே அதனால் நீ திரும்பிப்
போய்விடு என்று கூறினார். அதற்கு பக்கீ பின் முஹல்லத், இல்லை நான் ஒரு பிச்சைக்காரனுடைய தோற்றத்திலேயே இந்த நகரில் வலம் வருகிறேன்
அதேபோல உங்கள் வீட்டுக்கும் வருகிறேன் நான் வரும்போது வேறு ஆட்கள் இருந்தால் எனக்கு
காசு கொடுங்கள் இல்லை என்றால் எனக்கு கல்வியை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார் அதற்கு
இமாம் அஹ்மத் அவர்கள் சம்மதிக்கவே ஒரு வருடம் முழுவதும் பிச்சைக்காரரைப் போலவே வேடமிட்டு
அந்த நகரில் வாழ்ந்து அஹமது ரஹி அவர்களிடம் தினசரி ஒன்றோ இரண்டோ அதிகப்படியாக
மூன்று ஹதீஸ்களை கற்றுக் கொண்டார்.
பிற்காலத்தில் ஸ்பெயின் நகரத்தில் மிகப்பெரிய இஸ்லாமிய பேரறிஞராக வளர்ந்தார் என்று
வரலாறு சொல்கிறது
இவ்வளவு சிரமங்களை சந்தித் அன்றைய உலகின் ஆய்வுக்
கலைகளை கற்றுக் கொண்ட வரலாறு முஸ்லிம்களிடம் இன்னும் ஏராளமாக இருக்கிறது.
இந்த ஆய்வு சிந்தனைதான் அனைத்து அறிவியல் துறைகளிலும்
முஸ்லிம்களை உலகின் ஞான ஆசிரியர்களாக ஆக்கியது.
முஸ்லிம்கள் உலகிற்கு, விவசாயம் ரசாயணம் மருத்துதுவம்
வானியல் என அனைத்து துறைகளையும் சார்ந்த புதிய செய்திகளை கொடுத்தார்கள். உலகம் முஸ்லிம்களுக்கு
கீழே இருந்த்து.
கீபி 8 ம் நூற்றாண்டிலிருந்து 16 ம் நூற்றாண்டுவரைக்குமான
காலம் தான் இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலம் எனப்படுகிறது என்றால் அந்த கால கட்டம் தான்
பண்டைய உலக அறிவியல் துறையின் சிறந்த காலமாகவும் இருந்தது என்று வரலாறு கூறுகிறது.
அறிவியல் துறை சார்ந்த ஆய்வுகளும்
கண்டுபிடிப்புகளும் மிகுந்த மரியாதைக்குரியவை.
மின்சாரத்தை கண்டுபிடித்தவர்கள்,
தொலை பேசிகளை கண்டு பிடித்தவர்கள் அதில் பயன்படுத்தப்படும் வசதிகளை கண்டு பிடித்தவர்கள்எவ்வளவு
பெருமைக்குரியவர்கள் ? மானுட சமூகத்திற்கு எத்தகைய மகத்தன நன்மையை செய்திருக்கிறார்கள்
என்று நாம் சிந்தித்துப் பார்த்தால் ஆய்வு
கண்டுபிடிப்புகளின் பெருமை நமக்கு புலப்படும்.
இத்தகையோரை உலகம் ஒரு போதும்
மறுக்கவோ ஒதுக்கவோ முடியாது என்பது தெளிவாகும்.
இன்று முஸ்லிம்களிடம் பணம் இருக்கிறது.
அதிகாரம் இருக்கிறது. ஆனால் அறிவியல் தொழில் துறைகள் இல்லை. அதனல் உலகத்திடம் கையேந்தி
நிற்கிறோம்.
நமது நாட்டிலும் அப்படித்தான.
நாம் உலகிற்கு கொடுப்பவர்களாக
இருந்தால் உலகம் நம்மை மதிக்கும் . பெறுபவர்களாக இருந்தால் மிதிக்கும்.
ஏபிஜே அப்துல் கலாம் அரசு பள்ளியில்
படித்த மாணவர் ஜனாதிபதியாகும் அளவு உயர்ந்தார்.
காரணம் அவரது ஆய்வுத்திறன். அக்னி எனும் ஏவுகணையை அவர் உருவாக்கிக் கொடுத்தார். அதனால்
இந்தியாவின் மெசைல் மேன் ஏவுகனை மனிதர் என்று அவர் பாராட்டப்பட்டார்.
அப்துல் கலாமை போல இன்னும் ஏராளமான
நடுத்தர இளம் ஆய்வாளர்கள் நமது நாட்டில் மதிப்பு மிக்க பணிகளை ஆற்றிவருகிறார்கள்.
இந்தியாவின் புகழ் பெற்ற முஸ்லிம்
விஞ்ஞானிகள் என்று தேடிப்பாருங்கள், ஏராளமான பெயர்கள் நமக்கு கிடைக்கும்.
அவர்களால் நாடும் சமூகமும் மதிப்படைகிறது.
رَّبِّ زِدْنِي عِلْمًا என்று பிரார்த்திக்க் கூறுகிறது குர் ஆன்.
எனவே ஒரு மகத்தான் ஆய்வுப் பணியில்
நமது நாடு வெற்றி பெற்றிருக்கிற இந்த தருணத்தை நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நாம்
பெருமிதம் அடைவதோடு
இளைஞர்கள் ஆய்வுத்துறைகளில்
கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோர்களும் அந்த துறைகளுக்கு
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
நமது பிள்ளைகள் சிறு குழந்தைகளாக
இருக்கிற போதே இன்னவேசன் என்றும் புதிய கண்டுபிடிப்புகள் புதிய முயற்சிகளை செய்ய ஊக்க
விக்க வேண்டும்.
பள்ளிக்கூட கல்லூரி புராஜெக்டுகளில்
சிறப்பானதை தேர்தெடுக்க உற்சாகப்படுத்த வேண்டும். அதற்கேற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கேற்ற
படிப்புகள் புத்தகங்கள் ஊடகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
சமூகமும் இத்தகைய துறைகளில்
ஈடுபடுபவர்களை உற்சாகப்ப்டுத்த வேண்டும்.
சராசரி கல்வி என்பத்த தாண்டி
ஆய்வுத்துறைகளில் ஈடுபடும் போது அதற்கு அதிக
சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெற்றோர்களும் சமூகமு அதிகமாக உதவ
வேண்டியிருக்கும்.
அத்தகைய சூழலில் நம்மை சுற்றி
இருக்கிற இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க நாம் தவறக்கூடாது.
இப்போது பெரும் பாராட்டுப் பெறுகிற
இஸ்ரோ நிறுவனம் ஆய்வுத்துறையில் நமக்கு சில வழிகாட்டுதல்களை தருகிறது.
அவற்றை நாம் நினைவில் வைப்போம்
ஆய்வு நாட்டம்: இஸ்ரோவில் இணைந்துள்ள
பலரை விசாரித்துப் பாருங்கள். இந்த ஆய்வுப்பணிக்காக ராட்ச்ஷ தனமாக போராடி யிருப்பார்கள்.
நீண்ட கால திட்டம்: திடீரென்றூ நினைத்தார்போல நாம் வளர்ந்து விட முடியாது.
விடா முயற்சி தோல்விகளால் முடங்கி
விடாமல் தொடர்ந்து தீவிரமாக உழைக்க் வேண்டும்.
குறைந்த செலவு . கல்வி ஆய்வு
என அனைத்திலும் அளவான செலவு என்பதும் வெற்றிக்கு முக்கியமாகும்.
கூட்டு முயற்சி : நல்ல திட்ட்த்திற்கு
பலர் இணைந்து ஒரே இலக்கில் பாடு பட வேண்டும். அப்படிப்பட்ட ஜோடிகளை தேடிக் கொள்ள வேண்டும்.
ஆதரவும் அனுசரனையும் : ஏராளமான
முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் ஆதரவு கிடைக்கிற முயற்சி தான் வெற்றி பெறுகிறது.
இஸ்ரோவின் வெற்றிக்கான இந்த
காரணிகளை நமது வாழ்விலும் கடைபிடிப்போம்.
ஒரு பெரும் விஞ்ஞான தேடலில்
வெற்றி கண்டிருக்கிற நமது விஞ்ஞானிகளை நாம் வாழ்த்துவதோடு அவர்களது அரும் முயற்சிகள்
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையானதாக அமைய வேண்டும் என்றும் நாம் பிரார்த்தனை
செய்வோம்.
ஏனென்றால் அறிவியல் தேடல்கள்
சில நேரத்தில் பயனற்றதாகவும் ஆபத்தானதாகவும் ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது.
அதனால் தான் பெருமானார் (ஸல்)
அவர்கள் இப்படி பிரார்திக்க கற்றுக் கொடுத்தார்கள்.
عن أبي هريرة ، رضي الله عنه ، قال : كان رسول الله صلى الله
عليه وسلم يقول :
" اللهم انفعني بما علمتني ، وعلمني ما ينفعني ، وزدني علما ،
والحمد لله على كل حال
"
எல்லாம் வல்ல இறைவா ! எங்களை அறிவில் சிறந்த தேடல்
கொண்டவர்களாக ஆக்கு! அந்த தேடல்களை நன்மையானதாகவும்
ஆக்கு!
---------------------------------------------------------------------
سير اعلام النبلاء விலிருந்து بقي بن مخلد பற்றிய செய்திகள்
ونقل بعض العلماء من كتاب لحفيد بقي عبد الرحمن بن أحمد : سمعت أبي يقول : رحل أبي من مكة إلى بغداد ، وكان رجلا بغيته ملاقاة أحمد بن حنبل . قال : فلما قربت بلغتني المحنة ، وأنه
ممنوع ، فاغتممت غما شديدا ، فاحتللت بغداد ، واكتريت بيتا في فندق ، ثم أتيت الجامع وأنا أريد
أن أجلس إلى الناس ، فدفعت إلى حلقة نبيلة ، فإذا برجل يتكلم في [ ص: 293 ] الرجال ، فقيل لي : هذا يحيى بن معين . ففرجت لى فرجة ، فقمت إليه ، فقلت :
يا أبا زكريا : -رحمك الله- رجل غريب ناء عن وطنه ،
يحب السؤال ، فلا تستجفني ، فقال : قل . فسألت عن بعض من لقيته ، فبعضا زكى ،
وبعضا جرح ، فسألته عن هشام بن عمار ، فقال لي : أبو الوليد ، صاحب صلاة دمشق ، ثقة ، وفوق الثقة ، لو كان تحت ردائه كبر ، أو
متقلدا كبرا ، ما ضره شيئا لخيره وفضله ، فصاح أصحاب الحلقة : يكفيك -رحمك الله-
غيرك له سؤال .
فقلت -وأنا واقف على قدم : اكشف عن رجل واحد : أحمد بن حنبل ، فنظر إلي كالمتعجب ، فقال لي : ومثلنا ، نحن نكشف عن أحمد ؟ ! ذاك إمام المسلمين ، وخيرهم وفاضلهم . فخرجت
أستدل على منزل أحمد بن حنبل ، فدللت عليه ، فقرعت بابه ، فخرج إلي .
فقلت : يا أبا عبد الله : رجل غريب ، نائي الدار ، هذا أول
دخولي هذا البلد ، وأنا طالب حديث ومقيد سنة ، ولم تكن رحلتي إلا إليك ، فقال :
ادخل الأصطوان ولا يقع عليك عين . فدخلت ، فقال لي : وأين موضعك ؟ قلت : المغرب
الأقصى . فقال : إفريقية ؟ قلت : أبعد من إفريقية ، أجوز من بلدي البحر إلى إفريقية ، بلدي الأندلس ، قال : إن موضعك لبعيد ، وما كان شيء أحب إلي من أن
أحسن عون مثلك ، غير أني ممتحن بما لعله قد بلغك .
فقلت : بلى ، قد بلغني ، وهذا أول دخولي ، وأنا
مجهول العين عندكم ، فإن أذنت لي أن آتي كل يوم في زي السؤال ، فأقول عند الباب ما
يقوله السؤال ، فتخرج إلى هذا الموضع ، فلو لم تحدثني كل يوم إلا بحديث واحد ،
لكان لي فيه كفاية . فقال لي : نعم ، على شرط أن لا تظهر في الخلق ، ولا عند
المحدثين .
فقلت : لك شرطك ، فكنت آخذ عصا بيدي ، وألف رأسي
بخرقة مدنسة ، وآتي بابه فأصيح : الأجر -رحمك الله- والسؤال هناك كذلك ، فيخرج إلي
، ويغلق ، [ ص: 294 ] ويحدثني بالحديثين والثلاثة والأكثر ، فالتزمت ذلك
حتى مات الممتحن له ، وولي بعده من كان على مذهب السنة ، فظهر أحمد ، وعلت إمامته ، وكانت تضرب إليه آباط الإبل ، فكان
يعرف لي حق صبري ، فكنت إذا أتيت حلقته فسح لي ، ويقص على أصحاب الحديث قصتي معه ،
فكان يناولني الحديث مناولة ويقرؤه علي وأقرؤه عليه ، واعتللت في خلق معه . ذكر
الحكاية بطولها .
No comments:
Post a Comment