وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم
تنظرون(50) البقرة
இன்று ஆஷூராவுடைய நாள்
நாம் நோன்பு வைத்திருக்கிறோம். இந்த நோன்பின் முழு நன்மையையும்
அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
عن أَبِي قَتَادَةَ - رضي الله عنه:
((وَصِيَامُ
يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي
قَبْلَهُ)) صحيح مسلم
(1982).
இந்த நோன்பு உலகின் மிக தொன்மையான வணக்கங்களில் ஒன்று
عَنْ عُرْوَةَ عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ يَوْمَ عَاشُورَاءَ كَانَ يُصَامُ فِي
الْجَاهِلِيَّةِ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ
تَرَكَهُ – مسلم
عن أبي هريرة -رضي الله عنه- عن النبي صلى الله عليه وسلم قال:
"يوم عاشوراء كانت تصومه الأنبياء؛ فصوموه أنتم" خرجه بقي بن مخلد في
مسنده.
இந்த நோன்பிற்கான காரணம் அற்புதமானது.
عَنْ ابْنِ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ
مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي
إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى
مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ
திருக்குர் ஆனின் விரிவுரையாளர்கள் மூஸா அலை அவர்கள் மட்டுமல்ல மற்றுமுள்ள
பல நபிமார்களும் இதே நாளில் அல்லாஹ்வின்
பேர்ருளை பெற்ற நாள் இந்நாள் என்று கூறுகிறார்கள்.
ஆதம் நபிக்கு மன்னிப்பு கிடைத்த நாள்
عن الأسود بن يزيد قال: سألت عبيد بن عمير عن صيام يوم عاشوراء:
فقال المحرم شهر الله الأصم: "فيه يوم تيب فيه على آدم؛ فإن استطعت أن لا يمر
بك إلا صمته"
நூஹ்
நபியின் மக்கள் கப்பலிலிருந்து வெளியேறிய நாள். . அவர்களும் நோன்பு வைத்தனர்.
قال الحافظ ابن كثير في البداية والنهاية: وقال قتادة
وغيره: ركبوا في السفينة في اليوم العاشر من شهر رجب، فساروا مائة وخمسين يوما واستقرت
بهم على الجودي شهرا. وكان خروجهم من السفينة في يوم عاشوراء من المحرم، وقد روى
ابن جرير خبرا مرفوعا يوافق هذا، وأنهم صاموا يومهم ذلك.
யூனுஸ் அலை அவர்களது சமுதாயம் பாதுகாக்கப்பட்ட நாள்
روى أبو موسى المديني بإسناده عن علي قال: "يوم عاشوراء هو
اليوم الذي تيب فيه على قوم يونس
நல்லோர்களுக்கு கிடைத்த அற்புதமான பாதுகாப்பும் மன்னிப்பும் நமக்கும்
வேண்டும்.
நாம்
நன்மையான வழிகளில் செல்கிற போது நமக்கு ஏற்படுகிற எதிர்ப்புகளும் அக்கிரமங்களும் விலகிச்
சென்று விட வேண்டும். அல்லது அழிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நோன்பை நாம்
கடைபிடிப்போம்.
அல்லாஹ்
தவ்பீக் செய்வானாக!
அல்லாஹ்வின்
பாதுகாப்பு மகத்தானது.
மூஸா
அலை அவர்களுடன் இலட்சக்கணக்கான யூதர்கள் இருந்தார்கள் என்று கூறுகிறது வரலாறு.
அவர்கள்
அத்தனை பேரும் ஒரு சிறு கீறல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டார்கள்.
கடலில்
இறங்கி நடந்த அவர்களுடைய கால் பாதங்களிலோ குதிரைகளின் காலடியிலோ சேற்று மண் கூட ஒட்ட
வில்லை.
அவர்களில்
ஒருடைய தண்ணீர் கூஜா கடலில் விழுந்து விட்டது. அந்த கூஜா கூட கரைக்கு வந்து சேர்ந்து
விட்டது.
அதே
போல நபியால் எச்சரிக்கப்பட்ட யூனுஸ் அலை அவர்களுடைய மக்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர்
இருந்தனர் என்று குர் ஆன் கூறுகிறது. அவர்கள் அத்தனை பேரும் மன்னிக்கப் பட்டார்கள்.
அல்லாஹ்
வழங்குகிற மகத்தான பாதுகாப்பு இத்தகையதாக் இருக்கும்.
எந்த
வழியில் நமக்கான ஆபத்து வரும் என்பதை நாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்க் முடியாது.
பாலக்காட்டிற்கு
அருகிலுள்ல ஒரு ஊரில் வசித்த ஒரு இளம் தம்பதியும் குழந்தைகளும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு
சென்றார்கள். அங்கு அந்த குடும்பத்தலைவி ஒரு கூல் டிரிங்க்ஸ் குடித்தார். கொஞ்சம் நேரத்தில்
தொண்டை கரகரத்தது. கூலாக குடித்த்தால் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்கள். அது
நீடித்தது. கை வைத்தியம் செய்து பார்த்தார்கள். சரியாக வில்லை. தொடர்ந்து மருத்துவரிடம்
சென்று பார்த்து போது அந்த பெண்ணுக்கு தொண்டையில் கேன்சர் என்பது தெரிய வந்த்து.. அல்லாஹ்
பாதுகாப்பானக!
சபா
நாட்டு மக்களுக்கு அற்புதமான வளங்களை வழங்கிக் கொண்டிருந்த பெரிய அணையை உடைக்க அல்லாஹ்
நினைத்தான். அதற்காக அவன் பெரிய ஏற்பாடு எதையும் செய்ய வில்லை. ஒரு எலியை அனுப்பி வைத்தான் என்று வரலாறு சொல்கிறது.
எனவே
ஆபத்துக்கள் எந்த வழியில் வரும் என்று நமக்கு தெரியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நம்மை
பாதுகாக்க முடியும் என்பதை அழுத்தமாக உணர்ந்து நாம் அல்லாஹ்விடம் அவனுடைய மகத்தான பாதுகப்பை
இந்த நாளில் வேண்டி நிற்போம்.
அடுத்த்தாக
நாம் அழுத்தமாக உணர வேண்டியது.
நம்
வாழ்வில் நமக்கேற்படுகிற சிரமங்கள் பலதும்
நாமாக தேடிக் கொண்டவையே ஆகும்.
பிர்
அவ்ன் அவனுடைய அழிவை அவனே தேடிக் கொண்டான்.
மூஸா
அலை அவர்கள் செங்கடலை கடந்த பிறகு கடலை தடியால் அடித்து மூடி விட நினைத்தார்கள். அல்லாஹ்
சற்று பொறுத்திருக்குமாறு கூறினான்.
பிர்
அவ்ன் செங்கடலில் இறங்காமல் இருந்திருந்தால் அவனும் தப்பித்திருக்கலாம் அவனுடைய அரசு,
அவனுடைய ராணுவம் என அனைத்தையும் பாதுகாத்திருக்கலாம்.
அவனுடைய
அரசுக்கு முன் யூதர்கள் தப்பித்துச் செல்வது அவ்வளவு பெரிய விசயமல்ல
கடல்
வழி விட்டு மூஸா அலை அவர்களும் யூதர்களும் தப்பிச் சென்ற அற்புதம் அவனது அகம்பாவத்தை
தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
அவன்
கடலில் இறங்கினான். நடுக்கடலுக்கு வந்து சேர்ந்த போது தடியால் கடலை அடிக்கும் படி அல்லாஹ்
கூறினான். மூஸா அலை அடித்தார்கள்.
ஒரு
அடி யூதர்களை பாதுகாத்தது. மறு அடி பிர் அவ்னிய சாம்ராஜ்யத்தை அழித்தது.
நமக்கான
சிரமங்களை நாமே தேடிக் கொள்கிறோம்.
இதை
உணர்ந்து அல்லாஹ்வின் மன்னிப்பை பெறுவதற்கு நாம் அதிகமதிகம் முய்றசிக்க வேண்டும்.
அல்லாஹ்வின்
மன்னிப்பை பெறுவதற்கு அறிஞர்கள் சில அற்புதமான வழி முறைகளை சொல்லிக் காட்டியிருக்கிறார்கள்
.
இன்று
நோன்பு வைத்த்திருக்கிற நாம் இனியுள்ள் நாட்களில் அவற்றையும் தொடர்ந்து கடைபிடிக்க
முயற்சிப்போம்.
1.
மன்னிப்பை பெறும் முதல் வழி தவ்பா
தினசரி
தொடர்ந்து தவ்பா செய்து கொண்டிருப்போம்.
நாம்
செயத பாவங்களின் எண்ணிக்கை எண்ணிடலங்காது என்பது நமக்கு தெரியும்.
தவ்பா
செய்ய தயக்கம் காட்டலாமா?
தவ்பாவே
வெற்றிக்கான பெரிய வழி
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
தவ்பா, இனி வரும் காலத்தில் பாவம் செய்யாமல் பாதுகாக்கும்.
அறிஞர்கள் தவ்பாவுக்கு விளக்கம் சொல்வார்கள் .
تنزيه القلب عن الذنب
2.
மன்னிப்பை பெறும் அடுத்த வழி நற்செயல்கள்
திருக்குர்
ஆனின் அற்புதமான வாக்குறுதி இறுதி
أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ
اللَّيْلِ ۚ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ
لِلذَّاكِرِينَ
நாம்
நன்மைகள் செய்யும் போது அல்லாஹ் நிச்சயம் நம்மை பாதுகாப்பான்.
ஹஸன்
அல் பஸரி (ரஹ்)யை காவலர்கள் ஒரு முறை துரத்திக் கொண்டு வந்தார்கள்.
ஹபீப்
அஜமீ என்பவரின் வீட்டிற்குள் அவர் நுழைந்தார். அவரிடம் விபரத்தை சொன்னார்.
ஒரு
அறையை காட்டி அங்கு ஒளிந்து கொள்ளுமாறு அவர் சொன்னார்.
காவலர்கள்
அங்கும் தேடி வந்தார்கள். ஹஸன் எங்கே என்று அவரிடம் கேட்டார்கள்.
அவர்
அந்த அறையை காட்டினார்.
உள்ளே
சென்ற காவலர்களின் கண்களுக்கு ஹஸன் ரலி தெரியவில்லை. அவர்கள் திரும்பி சென்று விட்டார்கள்.
பதறிப்போன
ஹஸன் அல் பஸரீ ரஹி நீங்கள் நான் இருந்த அறையை காட்டிக் கொடுத்து விட்டீர்களே என்று
சொன்ன போது ஹபீப் அஜமீ சொன்னார்.
அல்லாஹ்
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா ? அவன் பார்த்துக் கொள்வான் என்று
தான் நான் அப்படிச் சொன்னேன் என்றார்.
நாம்
செய்கிர நற்செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டே இருக்கிறான். அதனால் நமது பாவங்களின்
சுமையை அவன் நிச்சயம் குறைத்து விடுவான்.
3.
மன்னிப்பை பெறும் அடுத்த வழி முஃமின்களின் துஆ
நல்ல
மனிதர்களின் துஆவும் நமக்கு அல்லாஹ்வின் மன்னிப்பை பெற்றுத்தரும்.
எனவே
அத்தகையோரிடன் துஆவை நாம் கேட்டுப் பெற வேண்டும்.
துஆ
கிடைக்க ஆசைப்பட வேண்டும்.
ما من رجلٍ مسلمٍ يموتُ ، فيقومُ على جنازتِه أربعون رجلًا ، لا
يشركون باللهِ شيئًا ، إلا شفَّعَهم اللهُ فيه
இந்த கருத்தை வலியுறுத்தும்
இன்னும் ஏராளமான செய்திகள் ஹதீஸ்களில் உண்டு.
4.
மன்னிப்பை பெறும் அடுத்த வழி சோதனைகளில் பொறுமை
وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ
مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
என்று சொல்லும் இறைவன் நிறைவாக சொல்கிறான்.
ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
முஃமின்களில்
காலில் முள் குத்தினால் கூட அதற்காக சில் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதாக ஹதீஸ்களில்
உண்டு.
அதானல்
சிரமங்கள் ஏற்படுகிற போது மனந்தளராமல் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுக்றது என்று
தவிக்காமல் அல்லாஹ் எனது பாவங்களை மன்னிக்கிறான். எனது அந்தஸ்த்தை உயர்த்துகிறான் என்று
பொறுமை காத்தால் அல்லாஹ் பாவங்களை மன்னிப்ப்பன்,
புலம்ப
கூடாது. விரக்தியடையலாகாது.
5.
மன்னிப்பை பெறும் அடுத்த வழி பெருமானாரின் ஷபாஅத்
எந்த பெரிய பாவத்திலிருந்தும் பெருமானார்
(ஸல்) அவர்கள் நமக்கு ஷபாஅத் செய்து மன்னிப்பை பெற்று தந்து விடுவார்கள்.
قال النبي :
خُيِّرتُ بين الشفاعةِ أو يدخلَ نصفُ أمتي الجنةَ فاخترتُ الشفاعةَ
لأنها أعمُّ وأكفَى أما إنها ليست للمؤمنينَ المتقينَ ولكنها للمُذنبينَ الخاطئينَ
المتلوِّثينَ
பெருமானாரின் ஷபாஅத்தை பெரும் வழி அவர்களை நேசித்து அவர்களுட்டய சுன்னத்துக்களை பின்பற்றுவதாகும்.
6.
மன்னிப்பை பெறும் அடுத்த வழி அல்லாஹ்வின் ரஹ்மத்
அல்லாஹ்
இயல்பாக மன்னிப்பவன், நாம் அவனிடம் கசிந்துருகிற
நின்றால் ; அவனை கொஞ்சமேனும் அச்சப்பட்டு நடந்தால் அவனது கருணயால் நிச்சயம் அவனுடய
மன்னிப்பை பெற்று விடலாம்.
وَكَانَ
بِالْمُؤْمِنِينَ رَحِيمًا
நாம் மன்னிப்பு தேடினால் அல்லாஹ் மகிழ்ச்சியடைந்து விடுகிறான்.
كل بني
آدم خطاء وخير الخطائين التوابون. رواه أحمد والترمذي
இந்த
அருமையான நாளில் அல்லாஹ்வின் பாதுகாக்கும் ஆற்றலை உணர்ந்து அவனது அழிக்கும் திறனை அறிந்து
நமது வாழ்க்கையை செம்மை படுத்திக் கொள்ளும் வழிகளை தேடிக் கொள்வோம்.
அல்லாஹ்
தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment