வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 28, 2022

மதீனாவை காட்டிய மணிவிளக்கு, அஸ்அத் பின் ஜராரா (ரலி)

 وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ (9)

ஹிஜ்ரீ 1444 ம் ஆண்டு பிறக்க இருக்கிறது.

இந்தப் புதிய வருடத்தை முழு உலகிற்கும் பாக்கியமானதாக அல்லாஹ் ஆக்கியருள்வானாக! முஸ்லிம் உம்மத்திற்கு கனமும் கண்ணியமும் சேர அல்லாஹ் அருள்புரிவானாக!

முஹம்மது நபி (ஸல்) அவர்களை மக்காவின் மக்கள் கொன்றுவிட தீர்மாணித்த போது மதீனாவின் நோக்கி அவர்கள் பயணப்பட்டார்கள். அது ஹிஜ்ரத் -  நபியின் குடிபெயர்தல்என வரலாற்றில் அழைக்கப் படுகிறது. அதை மைய்யமாக வைத்தே இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரீ என்று கணக்கிடப்படுகிறது.

ஹிஜ்ரத் என்ற சொல்லில் புதைந்திருக்கும் வாழ்வியல் தத்துவங்கள் ஏராளமானது . சிந்திக்க சிந்திக்க புதிய அர்த்தங்களை வெளிப்படுத்தக் கூடியது.

மனித வாழ்க்கை சாதாரணமானது அல்ல. அற்புதமான சாதனைகளுக்குரியது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பல்வேறு நிகரற்ற சாதனைகளுக்கு ஹிஜ்ரத்தே வழித்தடம் அமைத்தது.

நமது வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தோம். இனி என்ன சாதிக்கலாம் என்ற தூண்டுதலை தருவதற்கு ஹிஜ்ரத்தை போல வேறொரு உற்சாக ஊக்கி இல்லை.

ஹிஜ்ரத்தின் வழித்தடத்தில் பெருமானார் (ஸல்) அவரக்ள் மனித வரலாற்றிற்கு மகத்தான சாதனைகளை விட்டுச் சென்றார்கள் என்பது ஒரு புறம் இருக்க, மதீனா நகரின் மணிவிளக்காக திகழும் அஸ் அது பின் ஜராரா எனும் நபித்தோழரே மதீனா ஹிஜ்ரத்திற்கான கதாநாயகராக திகழ்ந்தார்.

பெருமானாரின் வரலாற்றுப் பயணத்திற்கு திசைகாட்டியாகவும் மாலுமியாகவும் இருந்த பெருமை அவருக்குரியரியது.

மிக ஆழ்ந்த ஒரு வரலாற்று வாசிப்பின் வழியாகத்தான் அஸ் அது பின் ஜராரா ரலி அவர்களின் வரலாற்று முக்கியத்துவத்தையும் அவரது வாழ்நாள் சாதனையையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த உரையில் அதில் ஒரு பகுதியை மட்டுமாவது சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

நமது புத்தாண்டு கொண்டாட்ட்த்தில் அந்த சஹாபியை நினைவு கூர்வது நமக்கு பாக்கியங்களை தரட்டும். .

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு தத்துவமும் இருக்கிறது.

உளப்பூர்வமாகவும் உண்மையாகவும் அல்லாஹ்வை நம்பி நிற்பவர்களுக்கு இறைவனின் உதவி எதிர்பாராத திசையிலிருந்து வந்து சேரும். அப்படி வரும் உதவி கற்பனைக்கு அப்பாற்பட்டு வலிமையாகவும் வளமாகவும் அமையும்.

வாருங்கள் ஹிஜ்ரத்தின் வரலாற்றை கட்டம் கட்டமாக பார்த்து வருவோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்வது சிரமமான போது தாயிபில் ஒரு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள். அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஏமாற்றத் தோடு திரும்பினார்கள். “ தனது முயற்சி பலவீனப்பட்டு விட்ட்தாகவும் தனது திட்டமிடுதல் குறைவு பட்டுவிட்ட்தாகவும் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.

فأتى ظل شجرة ، فصلى ركعتين ثم قال :( اللهم إليك أشكو ضعف قوتي ، وقلة حيلتي

ஆனால் அல்லாஹ்வின் திட்டம் வேறாக இருந்தது. அது பலமாகவும் அமைந்த்து.

மனிதர்களுக்கு இது ஒரு பெரும் பாடம். சில வேளைகளில் நமது திட்டங்கள் தோற்றுப் போகலாம். நாம் நம்பிக்கை வைத்திருக்கிற அல்லாஹ்வுக்கு வேறு திட்டம் இருக்கும். அது இன்னும் சிறப்பானதாக அமையும்.

அல்லாஹ்வின் திட்டம் அற்புதமாக சன்னம் சன்னமாக அரங்கேறியது.

அப்போது பெருமானாரின் வயது ஐம்பது.

அதே ஆண்டில் இன்றைய மதீனாவில் அங்குள்ள பூர்வ குடிகளான அவ்ஸ் கஜ்ரஜ் குலத்தாரிடையே வழமை போல சண்டை மூண்டது. இந்த முறை அது பெரிய சண்டையாகி இரு தரப்பிலும் இழப்புகள் அதிகமாகியது. இருவரும் சகோதர குடும்பத்தினர். இந்த சண்டைகளால் நிம்மதியை மட்டும் அல்ல ஏராளமான ஆட்களையும் பொருட்களையும் இழந்தனர். இந்த முறை ஏற்பட்ட இழப்பு அவர்களை சிந்திக்க வைத்தது. இனி நம்க்கிடையே சண்டை கூடாது. சமரமாக வாழ வேண்டும். நமக்கிடையே உள்ள பிணக்குகளை தீர்ப்பதற்கு ஒருவரை நடுவராக வைத்து நாம் ஒன்று படவேண்டும் என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர். யாரை நடுவராக வைக்கலாமென்று அவர்கள் யோசித்த போது மக்காவிலுள்ள அறிவுஜீவியான உத்பாவை அழைக்கலாம் என முடிவு செய்தனர். உத்பாவை அழைப்பதற்காக இரு தரப்பிலுமாக ஆறு பேர் மக்காவிற்கு வந்தனர்.

மக்காவில் உத்பா பிஸியாக இருந்தார். மதீனா வாசிகளிடம் அவர் கூறினார். நாங்கள் மக்காவில் இப்போது நபி என்று வாதிடும் ஒருவரால் பெரும் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறோம். அதனால் இப்போதைக்கு மதீனாவுக்கு வர இயலாது என்று கூறினார்.

மதீனாவிலிருந்து வந்தவர்களில் கஜ்ரஜ் குடும்பத்தை சார்ந்த அஸ்அத் பின் ஜராரா (ரலி) அவர்களுடைய சிந்தனையில்  மின்னல் வெட்டியது போல் ஒரு நினைவு ஓடியது. மதீனாவில் வசிக்கிற யூதர்கள்கடைசி காலத்தில் ஒரு நபி வருவார், அவரது தலைமையில் நாங்கள் உலக்க  ஜெயிப்போம் என்று கூறுவதுண்டு.

அந்த செய்தியை தனது நண்பர்களோடு பகிர்ந்து கொண்ட அஸ் அது ரலி அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்காக மினா மைதானத்தில் சைத்தானை கல்லெறியும் கடைசி இடமான ஜம்ரத்துல் அகபாவிற்கு வந்து சேர்ந்தார். பெருமானார் (ஸல்) அவர்களை ஆறு பேரும் சந்தித்தனர். நபி (ஸல்) அவர்கள் தனது தூதை அவர்களுக்கு வழக்கம் போல எடுத்துச் சொன்னார்கள்.

அப்போது அந்தக் குழுவில் இருந்த பெரியவர்கள்நாங்கள் இப்போது வேறு ஒரு பிரச்சனையாக வந்திருக்கிறோம். எங்களது ஊரின் பிரச்சனைகள் தீர்ந்த பிற்கு உங்களிடம் வந்து உங்களை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்கள். அவர்களில் மிக இளவயதுக் கார்ராக இருந்த அஸ் அது ரலி அவர்களுக்கு அது ஏற்புடையதாக இருக்க வில்லை. அவர் அனைவரையும் முந்திக் கொண்டு எழுந்து : “ இல்லை இது தாமதிப்பதற்குரியதல்ல என்று கூறி பெருமானாரின் கையைப் பற்றி பைஅத் செய்து இஸ்லாமை ஏற்றார். மற்ற ஐவரும் கூட இஸ்லாமை தழுவினர்.

·         قديم الإسلام،

·         وكان نقيباً على قبيلته ولم يكن في النقباء أصغر سناً منه،

·         أنه أول من بايع ليلة العقبة.

·         قال أبو نعيم أنه - أي أسعد بن زرارة - أول من أسلم من الأنصار من الخزرج.

முதலாவது அகபா உடன்படிக்கை  என்று சில வரலாற்றாசிரிகள் அதைக் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த நிகழ்வு வரலாற்றில் எத்தகைய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அப்போது அறியப்படவில்லை ஆதலால் சில இதை அவ்வாறு கூற மாட்டார்கள்.

 அடுத்த ஆண்டு இதே அஸ்அது (ரலி) அவர்கள் அதே இட்த்திற்கு 12 நபர்களை அழைத்து பெருமானாரிடம் இரண்டாவது முறையாகவும் பைஅத் செய்தார்இது இரண்டாவது அகபா உடன்படிக்கையாகும்.

 அப்போதுதான் தங்களுக்கு ஓதிக் கொடுக்க ஒருவரை அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள் முஸ் அப் பின் உமைர் ரலி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

 முஸ் அப் ரலி அவர்களுக்கு தனது வீட்டில் அஸ் அது ரலி இடமளித்தார். அல்ல. இஸ்லாமிற்கு தனது வீட்டை அளித்தார்.

 وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ என திருக்குர் ஆன் புகழும் வார்த்தைகளுக்கு முதல் சொந்தக்காரர் அஸ்அத் ரலி அவர்களே ஆவார்.

 அவரது தோட்டத்திலிருந்து தான் இஸ்லாமிய பிரச்சாரம் நடைபெற்றது. மதீனா முஸ்லிம் நகராக மாறியது.

 அடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு மதீனத்து முஸ்லிம்கள் 400 பேர் மக்காவிற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தன்னை வந்து சந்தித்தால் அது பிரச்சனையாகலாம் என்று கருதிய பெருமானார் (ஸல்) அவர்கள் சிலர் மட்டும் தன்னை வந்து சந்திக்க கூறினார்கள். அதனடிப்படையில் 70 பேர் மட்டும் பெருமானாரை சந்தித்து பை அத் செய்ய வந்தனர், அப்படி வரும் போதுதான் தனது சகாக்களிடம் அஸ் அது கூறினார். நபி (ஸல்) அவர்கள் மக்காவில் அச்சத்தின் பிடியில் வாழ நாம் அனுமதிக்கலாமா ? ஏன் நாம் அவர்களை நமது ஊருக்கு அழைக்க கூடாது என்று கேட்டார். அவர்கள் அனைவரும் அதற்கு சம்மதித்தனர்.

பெருமானார் (ஸல்) அவர்களிடம் பை அத் செய்து கொடுத்த பின் அஸ் அது ரலி பெருமானார் (ஸல்) அவர்களை மதீனாவிற்கு வந்து விடுமாறு அழைத்தார்.

 (ஆலிம் நண்பர்களுக்கு..

ஜாபிர் ரலி அவர்கள் அறிவிக்க அஹ்மத் ல் இடம் பெறும் ஒரு ஹதீஸில் இந்த வரலாற்றை ஜாபிர் ரலி அவர்களே குறுவது போல வந்துள்ளது. அதில் இந்த தகவல்கள் ஓரளவிற்கு உள்ளன. மதீனா வாசிகளிடம் பை அத்திற்கு முன் அஸ் அது ரலி கூறிய எச்சரிக்கை வாசகங்களும் உண்டு. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு விளக்கத்திற்காக இந்த ஹதீஸை பதிவு செய்கிறேன்.)

 روى الإمام أحمد بسنده عن جابر قال: مكث رسول الله بمكة عشر سنين يتبع الناس في منازلهم بعكاظ ومجنة وفي المواسم بمنى يقول: "من يؤويني من ينصرني حتى أبلغ رسالة ربي وله الجنة", حتى إن الرجل ليخرج من اليمن أو من مضر كذا قال فيأتيه قومه فيقولون: احذر غلام قريش لا يفتنك ويمشي بين رجالهم وهم يشيرون إليه بالأصابع حتى بعثنا الله إليه من يثرب, فآويناه وصدقناه فيخرج الرجل منا فيؤمن به ويقرئه القرآن, فينقلب إلى أهله فيسلمون بإسلامه, حتى لم يبق دار من دور الأنصار إلا وفيها رهط من المسلمين يظهرون الإسلام ثم ائتمروا جميعًا, فقلنا: حتى متى نترك رسول الله يطرد في جبال مكة ويخاف، فرحل إليه منا سبعون رجلاً حتى قدموا عليه في الموسم, فواعدناه شعب العقبة فاجتمعنا عليه من رجل ورجلين حتى توافينا, فقلنا: يا رسول الله نبايعك, قال: "تبايعوني على السمع والطاعة في النشاط والكسل والنفقة في العسر واليسر, وعلى الأمر بالمعروف والنهي عن المنكر, وأن تقولوا في الله لا تخافون في الله لومة لائم, وعلى أن تنصروني فتمنعوني إذا قدمت عليكم مما تمنعون منه أنفسكم وأزواجكم وأبناءكم ولكم الجنة", قال: فقمنا إليه فبايعناه, وأخذ بيده أسعد بن زرارة وهو من أصغرهم, فقال: رويدًا يا أهل يثرب فإنا لم نضرب أكباد الإبل إلا ونحن نعلم أنه رسول الله, وإن إخراجه اليوم مفارقة العرب كافة وقتل خياركم وأن تعضكم السيوف, فإما أنتم قوم تصبرون على ذلك وأجركم على الله, وإما أنتم قوم تخافون من أنفسكم خبيئة فبينوا ذلك فهو عذر لكم عند الله, قالوا: أمط عنا يا أسعد, فوالله لا ندع هذه البيعة أبدًا ولا نسلبها أبدًا, قال: فقمنا إليه فبايعناه, فأخذ علينا وشرط, ويعطينا على ذلك الجنة.   

  மதீனா வாசிகளில் பெருமானாரை முதலாவதாக ஒப்புக் கொண்டவர். பெருமானாரை மதீனாவிற்கு அழைத்தவர் என்ற பெருமைகள் மட்டுமல்ல.

மதீனாவிற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் வந்தால் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்குவதற்காக தனது வீட்டையும் ஒதுக்கி வைத்திருந்தார். பெருமானாருக்காக ஒரு கட்டிலையும் தயார் செய்து வைத்திருந்தார்.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்த போது கஜ்ரஜ் குடும்பத்தவரான அஸ்அது (ரலி) அவர்களின் வீட்டை தானே தேர்ந்தெடுத்தால் அவ்ஸ்கள் அதிருப்தி கொள்ளக்கூடும் என்று கருதிய பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஒட்டகை எங்கே உட்காருகிறதோ அங்கே தான் தங்குவதாக முடிவு செய்தார்கள். அதன் படி அபூ அய்யூபில் அன்சாரி (ரலி) அவர்களின் வீட்டில் தங்கினார்கள்.

 ஏமாற்றம் அடைந்த அஸ்அது ரலி அவர்கள தனது வீட்டிற்கு  பெருமானாரின் ஒட்டகையை அழைத்துச் சென்றார்கள்.

அதன் பிற்கு பெருமானார் (ஸல்) அவர்களுக்காக தான் தயார் செய்து வைத்திருந்த கட்டிலை கொண்டு வந்து அன்பளிப்புச் செய்தார்கள்.

 அந்த கட்டிலில் தான் பெருமானார்(ஸல்) அவர்கள் இறுதி வரை படுத்திருந்தார்கள்.

 மதீனாவிலிருந்த மஸ்ஜிதுன்னபவிக்கான இடத்தை பார்த்த பெருமானார் (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்க தீர்மாணித்த போது அந்த இடம் அஸ் அது ரலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு எதிம்களுக்கு சொந்தமாக இருந்தது. அவர் பெருமானாருக்கு அன்பளிப்பாகவே தர முன் வந்தார். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த நிலத்தை அஸ் அது ரலி அவர்களிடமிருந்து 10 தீனாருக்கு விலைக்கு வாங்கினாரகள்.

 மதீனாவிற்குள் பெருமானார் (ஸல்) அவர்கள் நுழைந்தது அன்று வெள்ளிக்கிழமை. அன்று தான் ஜும்ஆ தொழுகை கடமையானது. ஹிஜ்ரத்தின் நிறையாவ ஜும்ஆ கடமையானது என்று சொன்னால் அது மிகையல்ல.

 அதற்கு முன்னரும் அஸ் அது ரலி அவர்கள் மதீனாவில் முஸ்லிமாகியிருந்தவர்களை ஜும் நாளன்று ஒன்று திரட்டுகிற வழக்கம் வைத்திருந்தார்கள்.

 அதனால் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்களை ஒன்று திரட்டியவர் என்ற பெருமையும் அஸ அது ரலி அவர்களை சாரும்

 கஃபு பின் மாலிக் ரலி அவர்கள் ஜும் ஆவுக்கு பாங்கு சொல்லப்படுவதை செவியேற்றால் அஸ்அது ரலி அவர்களுக்காக துஆ செய்வார்கள்.

قال ابن إسحاق: عن عبد الرحمن بن كعب بن مالك قال: كنت أقود أبي حين ذهب بصره فكنت إذا خرجت به إلى الجمعة فسمع الأذان بها صلى على أبي إمامة أسعد بن زرارة قال: فمكثت حينًا على ذلك لا يسمع لأذان الجمعة إلا صلى عليه واستغفر له. قال: فقلت في نفسي, والله إن هذا بي لعجز، ألا أسأله؟ فقلت: يا أبتِ ما لك إذا سمعت الأذان للجمعة صليت على أبي إمامة؟ فقال: أي بني, إنه كان أول من جمع بنا بالمدينة، في هرم البيت من حرة بني بياض في بقيع يقال له: بقيع الخَضِمات قال: قلت: وكم أنتم يومئذ؟ قال: أربعين رجلاً.

வேல்களையும் விழிகளையும் கூர் திட்டி கொலை செய்யக் காத்திருந்த மக்காவின் எதிரிகளிடமிருந்து தப்பிய பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த போது அவ்வூர் மக்கள் தமது இல்லங்களை ஈமானால் அழகுபடுத்தி, இதயத்தால் தோரணம் கட்டி, அற்புதமான அன்பால் வாசகம் அமைத்து வாழ்த்துப் பாடி வரவேற்றனர். அகதியாக மக்காவை விட்டுக் கிளம்பிய பெருமானார் மதீனாவிற்குள் அதிபராக காலடி வைத்தார்கள். யத்ரிபு என்ற அந்நகரம் தன் பெயரை நபியின் பட்டணம் – மதீனத்துன்னபீ - என மாற்றிக் கொண்டது  இதற்கெல்லாம்  காரனமாக இருந்தவர் அஸ்அது பின் ஜராரா.

ஹிஜ்ரத்தின் தேசமான மதீனாவிலிருந்து பெருமானாரை முதலில் ஈமான் கொண்டு, பலரையும் ஈமான் கொள்ளச் செய்து, பெருமானாரை மதீனாவிற்கு வருமாறு அழைத்து, அவ்வாறு வந்த பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன்னபவியை கட்ட துணை நின்ற அஸ் அது ரலி அவர்கள் சில் மாதங்களிலேயே அல்லாஹ்வின் நாட்டப்படி வபாத்தானார்கள்.

ஜன்னத்துல் பகீஃல் அடக்கம் செய்யப் பட்ட முதல் அன்சாரி நபித்தோழர் அஸ் அது பின் ஜராரா ஆவார்.

 பெருமானோரு நான்கு வருடங்களாகத் தான் அவருக்கு தொடர்பு. ஆனால் இந்த நான்கு வருடங்களில் அவர் இஸ்லாத்திற்கு செய்த சேவை எத்தகையது. ? தனது வாழ்க்கைய அவர் எப்படிப் பட்ட சாதனைகளுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார் பாருங்கள் ?

அவர் இறக்கும் போது தனது பெண்மக்களை பெருமானார் (ஸல்) அவர்களின் கட்டுப்பாட்டில் விட்டுச் சென்றார். அந்தப் பெண் பிள்ளைகள் பெருமானாரின் வீட்டிலேயே வளர்ந்தார்கள். பெருமானாருக்கு பிற்காலத்தில் ஆபரணங்கள் கிடைத்த போது அதை அந்தப் பெண்களுக்கு அணிவித்து அழகுபார்த்தார்கள். 

أوصى أسعد ببناته إلى رسول الله - صلى الله عليه وسلم - وكن ثلاثا . فكن في عيال رسول الله - صلى الله عليه وسلم - يدرن معه في بيوت نسائه ، وهن : فريعة ، وكبشة ، وحبيبة . فقدم عليه حلي فيه ذهب ولؤلؤ ، فحلاهن منه .

அஸ்அது (ரலி) வஃபாத்தான போது அவரது பனுன்னஜ்ஜார் குடும்பத்தினர் பெருமானாரிடம் வந்து தங்களது தலைவரை இழந்து விட்டதாகவும் தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறும் கூறினர், பெருமானார் (ஸல்) கூறினார்கள். “நான் உங்களுக்கு தலைவராக இருக்கிறேன்.

وذكر الواقدي أنه مات على رأس أشهر من الهجرة رواه الحاكم في المستدرك من طريق الواقدي عن أبي الرجال، وفيه جاء بنو النجار فقالوا: يا رسول الله مات نقيبنا فنقب علينا, فقال: "أنا نقيبكم".

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத்தின் பாதை பெருமானாரின் வாழ்வில் பல வகையில் சாதனைகளின் களமாக்கியது என்றால் அஸ்அது பின் ஜராரா (ரலி) அவர்களது வாழ்க்கை அந்த களத்தின் நிலமாகியிருந்தது.

சின்ன நற்காரியங்களில் பெரிதாக அகமகிழ்ந்து போகிற நாம் வாழ்ந்தால் இது போல சாதனைகளில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று சபதம் ஏற்போம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

அனைவருக்கும் இனிய ஜிஜ்ரீ 1444 ம் புத்தாண்டு வாழ்த்துக்கள்

كل عام وانتم بخير

 

 

 

 

 

 

 

2 comments:

  1. Anonymous12:02 AM

    அகதியாக மக்காவை விட்டுக் கிளம்பிய பெருமானார் மதீனாவிற்குள் அதிபராக காலடி வைத்தார்கள்

    ReplyDelete
  2. Anonymous6:26 PM

    Supper

    ReplyDelete