வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 21, 2022

பெண்களின் பாதுகாப்பே பிரதானமானது.

 தமிழகத்தில் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது தொடர்ந்து பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் சம்பந்தப் பட்ட கல்லூரி குறித்தும் அதன் நிர்வாகிகள் பற்றியும் பல்வேறு செய்திகள் பேசப்படுகின்றன.

இப்போது மட்டுமல்ல இதற்கு முன் பாத்திமா என்ற கேரள மாணவி சென்னை ஐ ஐ டி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட போதும் இதே போன்ற பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல கோவையில் சில மாதங்களுக்கு முன் ஒரு பள்ளிக் கூட மாணவி தற்கொலை செய்து கொண்டதும் பரபரப்பாகியது.

இதில் கவனிக்க வேண்டிய சில செய்திகள் உண்டு.

கல்விக் கூடங்களில் குறிப்பாக உயர் கல்விக் கூடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குள்ளாகி வருகிறது.

முதல் பாதிப்பு பண்பாடு , கலாச்சார ரீதியிலானது. ஒரு குடும்பத்தில் பண்படுத்தப்பட்டு நல்ல முறையில் வளர்க்கப் படும் பெண்கள் கல்வி நிறுவன்ங்களில் ஏற்படும் நட்புகள் மூலம் தவறான பழக்க வழக்கங்களுக்கும் பண்புகளில் மாற்றத்திற்கும் ஆளாகின்றன.

சவூதி அரேபியாவில் படித்த கேரளாவைச் சார்ந்த இரண்டு பெண்கள் படிக்கிற இடத்தில் ஓரினச் சேர்க்கை பழக்கத்திற்கு ஆளாகி திருமணம் செய்ய முடிவு செய்ததை கேரள நீதிமன்றம் அங்கீகரித்த்தை நாம் மறந்திருக்க முடியாது.

பண்பாட்டு ரீதியான மாற்றத்தின் விளைவாகத் தான் பெண்களின் பாதுகாப்பு அடுத்த பிரச்சனையாகிறது.

பொள்ளாச்சியில் நடை பெற்ற பாலியல் வன்கொடுமைகளின் கொடூரத்தை நாம் மறக்க முடியாது.

இது நமக்கு உணர்த்துவது ஒன்று தான். பெண்களின் பாதுகாப்பு விசயத்தில் நாம் ரிஸ்க் எடுக்க கூடாது என்பதே அது.

திருக்குர் ஆன் பர்தாவை அமுல்படுத்தும் போது இந்த தத்துவத்தை அழுத்தமாக நினைவூட்டுகிறது.

பர்தா வசனத்தில் இடம் பெறும் فَلَا يُؤْذَيْنَ எனும் வார்த்தை இதை உணர்த்துகிறது.

 يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا (59)

பர்தா எந்த நேரத்திலும் தேவையில்லை தான் ஆனால் எந்த நேரத்தில் பிரச்சனை ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே எல்லா நேரத்திலும் எச்சரிக்கை அவசியம்.

 ஒரு பெண்ணிற்கு எதேனும் ஒரு சிறு சந்தர்ப்பத்தில் ஏற்படும் சோதனை பெரிய பாதிப்பக ஆகிவிடலாம்.

 அது சிலவேளைகளில் தனி நபர்களை மட்டுமல்ல சமூகத்தையும் பாதிக்கும்.

 மதீனாவில் பனூ கைன்கா எனும் யூதப் பிரிவினர் குடியிருந்தனர். அந்தப் பகுதிக்கு ஒரு முஸ்லிம் பெண்மணி வியாபாரத்திற்காக தலையில் கூடை சுமந்து சென்றார். அந்தப் பகுதியை சார்ந்த யூதன் ஒருவன் அப்பெண்ணின் கீழ் ஆடையை இழுத்து விட்டான். அப்பெண் நடுவீதியில் மான பங்கத்துக்கு உள்ளானாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அன்சாரி சஹாபி ஓடிச் சென்று அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தியவரை வெட்டிக் கொன்றார். உடனே அக்கூட்டத்தினர் ஒன்று கூடி அவரை கொன்றனர். இதனால் கோபமுற்ற பெருமானார் (ஸல்) அவர்கள் பனூகைன்காவினரை மதீனாவை விட்டு வெளியேற்றினார்கள்.

 பெண்கள் பாதுகாப்பட வேண்டியவர்கள் என்பது இஸ்லாமின் தீர்மானமான கருத்து. அந்த பாதுகாப்பை பேணுவதில் எந்த சமர்சத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை.

 தங்களின் பாதுகாப்பை பெண்களே சிதைத்துக் கொள்ளக் கூடாது.

فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ 

குலைந்து பேசுவது என்று மட்டுமல்ல ஆண்களோடு தனியாக இருத்தல் போன்ற சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பை பெண்கள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

 ألا لا يخلُوَنَّ رجلٌ بامرأة إلا كان ثالثهما الشيطان))؛ رواه أحمد

இது பெண்களுக்கும் பெருந்தும். அந்நிய ஆண்களுடன் தனிமையில் இருக்கும் போது சைத்தான் எப்போதும் தீமைக்கு வழி வகுத்துவிடலாம்.

கொளுந்தனிடம் கூட எச்சரிக்கை அவசியம்

فعن عقبة بن عامر رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: ((إياكم والدخولَ على النساء))، فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحَمْوَ؟ قال: ((الحَمْوُ الموتُ))؛ متفق عليه

قال الليث بن سعد - رحمه الله -: الحمو: أخو الزوج،

ண்களின் பாதுகாப்பை எந்த நிலையிலும் ஆண்களும் கவனம் செலுத்த வேண்டும்.

யுத்த்த்திற்கு தயாராகிக் கொண்டிருந்தவரை ஹஜ்ஜுக்கு செல்லும் மனைவிக்கு துனையாக செல்லுமாறு பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவிறுத்தினார்கள்.

عن عبدالله بن عباس رضي الله عنهما قال: سمعت النبي صلى الله عليه وسلم يخطب يقول: ((لا يخلُوَنَّ رجلٌ بامرأة إلا ومعها ذو محرم، ولا تسافر المرأة إلا مع ذي محرم))، فقام رجل فقال: يا رسول الله، إن امرأتي خرجت حاجَّةً، وإني اكتُتِبْتُ في غزوة كذا وكذا، قال: ((انطلق فحُجَّ مع امرأتك))؛ متفق عليه

இன்றைய நமது சூழ்நிலையில் கல்விக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. பெண்களின் முன்னேற்றம் கல்வியை மையப்படுத்தியே பேசப்படுகிறது. அதில் தவறில்லை.

கல்வி வாழ்க்கைக்கு மிக முக்கியமானதே

அதே நேரத்தில் வாழ்வதற்கே பாதுகாப்பு அத்தியாவசியமானது என்பதை மறந்து விடக் கூடாது.

இன்றைய கல்வி முறையில் குறிப்பாக உயர் கல்வி தேடலில் பல ஆண்களை திருப்தி படுத்தினால் மட்டுமே உயர முடியும் என்ற நிலை நமது நாட்டில் இருக்கிறது.

 நமது நாட்டின் மிக கேவலமான இந்த அனுகுமுறையை பெற்றோர்கள் புரிந்து கொள்வது அவசியம்.

 எனவே நமது பிள்ளைகளுக்கு கல்வியை விட பாதுகாப்பே முக்கியமானது என்பதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்.

 அதனால் பாதுகாப்பான கல்வி நிலையங்களையும் கல்விச் சூழ்நிலைகளையுமே தேர்வு செய்ய வேண்டும்.

 பெண்களை ஹாஸ்டல்களுக்கு அனுப்பும் போது அதிக பட்ச பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை கவனிக்க வேண்டும்.

 பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் எந்த சிறு பிரச்ச்னையானாலும் தங்களிடம் உடனடியாக தெரிவித்து விட க் கூடிய சூழ்நிலையை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக

 

(மதீனா முனவ்வராவிலிருந்து)

 

 

3 comments:

  1. எங்கள் ஸலாமினை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தி வைக்கவும்

    ReplyDelete
  2. Anonymous12:00 AM

    எங்கள் ஸலாத்தையும் சலாமையும் எத்தி வைத்து விடுங்கள் ஹழ்ரத்

    ReplyDelete