நமக்கு அருகிலுள்ள இலங்கை நாடு இப்போது தலைமை ஏதுமில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் பிரதமர்
ராஜபக்சேயும் அதிகபர் கோத்தபாயவும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று விட்டனர்.
ஆனால் நோயாளி என்ற
வகையில் அவ்வூரில் அவர்களுக்கு தங்க இடமளிக்கப் பட்டிருந்தாலும் அரசியல் ரீதியாக அடைக்கலம்
கிடைக்காது என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இனவெறியர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை
ஆதரிப்பதன் மூலம் மக்களின் கோபத்தை சந்தித்துக் கொள்ள சிங்கப்பூர் விரும்பாது என்றும்
இவர்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அந்நாட்டுக்கு தலைவலி தான்
என்று பிபிசி கூறுகிறது.
இது இனவெறியர்களுக்கு
கிடைக்கும் தண்டனையாகும்.
எவ்வளவு உச்சத்தில்
இருந்த போது அல்லாஹ் நாடுகிற ஒரு நிமிடத்தில் ஒன்றுமற்றவர்களாக மாறிவிடுகிறார்கள்.
திருக்குர் ஆன்
பல வசனங்களிலும் பிர் அவ்னின் அழிவை சுட்டிக்காட்டுகிறது.
كَدَأْبِ آلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا بِآيَاتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَاهُم بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوا ظَالِمِينَ ﴿٥٤ الأنفال﴾
பிர் அவ்னை சர்வாதிகார சக்திகளின் ஒரு குறியீடாக சுட்டிக் காட்டுவதை இந்த வசனத்திலிருந்து நாம் உணரலாம்.
திருக்குர் ஆனின் 27 அத்தியாயங்களில் 74 முறை பிர் அவ்னின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு
இந்த படிப்பினை அத்தியாவசியமானது என்பதற்காகவோ என்னவெ பிர் அவ்னின் உடலையும் அல்லாஹ்
பாதுகாத்து வைத்திருக்கிறான்.
அதிகாரம் கிடைக்கிற
போது மனிதர்கள் தாறுமாறாக நடக்கத் தொடங்குகிறார்கள்.
இதில் பெரிதாக
படிப்பினை பெற வேண்டியது அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்ல, அவர்களை ஆதரித்து அவர்களுக்கு
பின்னால் நின்ற பொதுமக்கள் தான்.
இன்று பிரதமர்
ராஜபக்ஷேவின் அலுவலகத்திற்குள் புகுந்துள்ள இதே மக்கள் தான் அவரை இந்த அலுவலகத்திற்குள்
அனுப்பிவைத்தார்கள்.
அப்போது அந்த தீய
சக்தி எழுப்பிய மதவாத தீ யின் சூடு இம்மக்கள் அனைவருக்கும் தேவைப்பட்டது. மதவாத நெருப்பில்
ஏரளாமன அநீதிகள் இழைக்கப் பட்ட போதும் மக்கள் அதை வேடிக்கை பார்த்தனர்.
பிர்
அவ்ன் அழிக்கப்பட்டதை பேசுகிற பல இடங்களிலும்
திருக்குர்ஆன் ஆலு பிர் அவ்ன்
وَإِذْ
فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ
وَأَنتُمْ تَنظُرُونَ (50)
என்று கூறுகிறது. காரணம். பிர் அவ்னின் குடும்பத்தினர்
அவனது சர்வாதிகார இயல்புக்கு ஆதரவாக இருந்தனர், அதனால் அவனது குடும்பத்தினரின் அழிவைப்
பற்றியே திருக்குர் ஆன் பிரதானப் படுத்துகிறது.
மக்கள் யோசிக்க வேண்டிய செய்தி இது.
பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.
ஒரு கப்பலில் கீழ் தட்டில் இருப்பவர்களை மேலே வர வேண்டாம் என்று ஒரு சாரார் கூறினர். அடித்தட்டில் இருப்பவர்கள் தங்களது த்ண்ணீர் தேவையை நிறைவேற்றிக் கொள்ள கப்பலை ஓட்டையிட்டால் மேலே இருப்பவர்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தால் எப்படி கப்பல் மூழ்கிப் போகுமோ அதே பொல அநீதியை ஆதரிக்கிற மக்கள் அழிவைச் சந்திப்பார்கள் என்றார்கள் பெருமானார் (ஸல்)
தவறான செய்திகளை பேசுகிறவர்கள் உடன் அமர்ந்திருப்பதை திருக்குர் ஆன் எச்சரிக்கிறது.
وَقَدْ نزلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ
إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلا
تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا
مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ
جَمِيعًا ﴾ [النساء: 140].
قال الإمام القرطبي رحمه
الله في تفسيره لهذه الآية: دلت هذه الآية على وجوب اجتناب أصحاب المعاصي إذا ظهر
منهم منكر، لأن من لم يتجنبهم فقد رضي بفعلهم، والرضا بالكفر كفر وبالمنكر منكر؛
لذلك قال الله تعالى: ﴿ إِنَّكُمْ إِذاً مِّثْلُهُمْ ﴾؛ فكل من جلس في مجلس معصية
ولم ينكر عليهم يكون معهم في الوزر سواء.
அநீதியிழைப்பவர்களை
ஆதரிப்பவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி உல்லை என்று குர்ஆன் கண்டிக்கிறது.
وَلاَ تَرْكَنُواْ إِلَى الَّذِينَ ظَلَمُواْ
فَتَمَسَّكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّن دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَآءَ ثُمَّ
لاَ تُنصَرُونَ ﴾ [هود: 113]
والركون يعني:
المجاملة والمداهنة، والميل إليهم بالمحبة والمودة
அநீதியை ஆதரிப்பவர்கள் அல்லாஹ்வின் பொறுப்பிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறினார்கள்.
يقول رسول الله صلى الله عليه وسلم: ((مَنْ أَعَانَ
ظَالِماً لِيُدْحِضَ بِبَاطِلِهِ حَقّاً فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ الله
وَذِمَّةُ رَسُولِهِ))؛ أخرجه الحاكم
இப்போது ஏற்பட்டுள்ள
நெருக்கடிகள் ஏற்படாதிருந்தால் இலங்கையின் பொளத்த இன மக்கள் தீய தலைவர்களைத் தான் தலைமேல்
வைத்துக் கொண்டாடி இருப்பார்கள். இந்த நெருக்கடிகள் காரணமாகவே ராஜபக்ஷேக்களை அவர்கள்
வெறுத்துள்ளனர். உண்மையில் பிரச்சனை ராஜபக்ஷேக்களிடம் இல்லை.
இதை இலங்கையின்
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை மக்கள்
மட்டும் அல்ல. உலகிலுள்ள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
திருக்குர் ஆவ்ன்
தேவையின்றி 74 இடங்களில் பிர் அவ்னின் பெயரை பயன்படுத்தவில்லை.
இப்போதைக்கு இலங்கையின் போராட்டக்
காரார்களு ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதாவது பொதுச் சொத்தை அழிக்க கூடாது.
அது நம்முடையது என்று எழுதி வைக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் முக்கியமாக ஒரு
முடிவுக்கு வரவேண்டும் . மக்களில் யாரையும் துன்புறுத்தக் கூடாது ஏனெனில் நாம் அனைவரும்
மனிதர்கள் என்பதே அது
இன்றைய நாம் வாழும் காலத்தில் அக்கிரமச் சக்திகளை – மனிதர்களை அழிப்பவர்கள் – வெறுப்புணர்வை ஏற்படுத்தி இழப்புக்களை உண்டு பண்ணுகிறவர்களை ஆதரிக்கும் இயல்பு கல்வியறிவு பெற்ற இக்காலத்திலும் பெருகி வருகிறஹ்து. உலகம் முழுவதிலும். துப்பாக்கி ஏந்தி சுடுகிறவர்களை ஆதரிக்கிறார்கள். மக்களை வெட்டிக் கொல்பவர்களை கண்டு ஆரவரிக்கிறார்கள்.
இத்தகையோர்
யாராக இருப்பினும் அவர்களுக்கான முடிவு நிச்சயம் நல்லதாக இருக்காது
அவர்கள் அனைருக்கும் தேவைப்படும் பாடம் இது. அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
.(மதீனா முனவ்வராவிலிருந்து )
No comments:
Post a Comment