வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 07, 2022

ஹஜ்ஜுல் அக்பர்

 இரண்டு ஆண்டு தடைகளுக்குப் பிறகு அல்லாஹ்வின் பெரும் கருணையால் இந்த ஆண்டு பத்து இலட்சம் பேருக்கு ஹஜ்ஜுல் அக்பர் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது

ஹாஜிகள் அரபாவில் தங்குகிற துல் ஹஜ் 9 ம் நாளே ஹாஜிகளுக்கு விசேஷமான நாளாகும். அன்று மதியம் முதல் இஷா வரை அரபா மைதானத்தில் தங்கினால் மட்டுமே ஒரு பயணி ஹாஜியாக ஆகமுடியும். அவ்வாறு தங்கும் போது அதற்கான வணக்கம் எதும் கிடையாது. ஹாஜிகள் அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டு இருப்பார்கள்.

இந்த நாள் வெள்ளிக்கிழமையாக அமையுமானால் அது ஹஜ்ஜுல் அக்பர் என்று அழைக்கப் படுகிறது.

ஹஜ்ஜுல் அக்பர் என்றால் பெரிய ஹஜ்ஜு என்று பொருள். ஹஜ்ஜுல் அக்பர் என்பது 70 ஹஜ்ஜுகளின் நன்மையை பெற்றுத்தரும்.

ஹஜ்ஜுல் அக்பர் என்ற சொல் திருக்குர் ஆனில் இடம் பெற்றுள்ளது.

وَأَذَانٌ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِّنَ الْمُشْرِكِينَ

 பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜு செய்த ஹஜ்ஜத்துல் விதாவின் போது அரபாவினுடைய நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்தது. நபி (ஸல் அவர்கள் அன்றைய தினம் ஜும் ஆ தொழ வில்லை. லுஹர் தொழுகையை இரண்டு ரகாஅத்தாக தொழுதார்கள். அந்த  இரண்டு ரக அத்தின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் சப்தமாக கிராஅத் ஓதவில்லை.

 பெருமானார் (ஸல அவர்கள் அரபாவில் தங்கிய அதே நாளில் ஹாஜிகள் அரபாவில் தங்குகிறார்கள் என்பது கண்ணியத்திற்குரிய ஒரு அம்சமே ஆகும்.

 அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தைய ஒரு வாய்ப்பை ஒருமுறையேனும் தந்தருள்வானாக!

 அரபா நாள் என்பதே சிறப்பானது.

عن عائشة -رضي الله عنها- أن رسول الله صلى الله عليه وسلم قال: "ما من يوم أكثر أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة، وإنه ليدنو، ثم يباهي بهم الملائكة، فيقول: ما أراد هؤلاء؟".

அடிமையின் கோலத்தில் அடிமைகளின் கோஷத்தோடு தன்னிடம் கையேந்தி நிற்கிற ஹாஜிகளைப் பார்த்து அல்லாஹ் பெருமிதமடைகிறான்.

 ஆனால் ஷைத்தான் இழிவடைகிறான்.

موطأ الإمام مالك" أن يوم عرفة هو اليوم الذي "ما رئي الشيطان يوما هو فيه أصغر ولا أدحر ولا أحقر ولا أغيظ منه في يوم عرفة، وما ذاك إلا لما رأى من تنزّل الرحمة وتجاوز الله عن الذنوب العظام".

திருக்குர் ஆனில் குறிப்பிடப் படுகிற யவ்முல் மஷ்ஹூத் எனப்படுவது அரபாவின் நாள் ஆகும்.

"والسماء ذات البروج، واليوم الموعود، وشاهد ومشهود" (البروج 1-3)،

وعن أبي هريرة -رضي الله عنه- أن النبي صلى الله عليه وسلم قال "اليوم الموعود يوم القيامة، واليوم المشهود يوم عرفة، والشاهد يوم الجمعة" (رواه الترمذي

அல்லாஹ் சத்திய மிட்டு பேசுகிற நாள், அரபாவின் நாளாகும்.

وقال بعض المفسرين أيضا إن يوم عرفة هو الوتر الذي أقسم الله به في قوله "والشفع والوتر"،

 فقال ابن عباس -رضي الله عنهما- "الشفع يوم الأضحى، والوتر يوم عرفة".

தீன் முழுமைப்படுத்தப்பட்ட நாள் அரபாவின் நாளாகும். அல்லாஹ்வின் அருள் நிறைவு பெற்ற நாளும் அரபாவின் நாளாகும்.

جاء في الصحيحين عن عمر بن الخطاب -رضي الله عنه- أن رجلا من اليهود قال له: يا أمير المؤمنين، آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا، قال: أي آية؟ قال "اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا" (سورة المائدة: من الآية 3)، قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي -صلى الله عليه وسلم- وهو قائم بعرفة يوم الجمعة.

தீன் முழுமைப்படுத்தப்பட்ட நாள் என்பதற்கான காரணம் அன்று தான் இஸ்லாமின் முக்கிய கடமையான ஹஜ் அதன் தூய நடைமுறையில் நிறைவேற்றப்பட்ட்து தான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்

وإكمال الدين في ذلك اليوم حصل، لأن المسلمين لم يكونوا قد حجوا حجة الإسلام من قبل، فكمل بذلك دينهم لاستكمالهم عمل أركان الإسلام كلها، ولأن الله أعاد الحج على قواعد إبراهيم عليه السلام، ونفى الشرك وأهله فلم يختلط بالمسلمين في ذلك الموقف منهم أحد.

நிஃமத் நிறைவு செய்யப்பட பட்டது என்பதற்கு பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்பதே காரனமாகும்.

وأما إتمام النعمة، فإنما حصل بالمغفرة فلا تتم النعمة من دونها، كما قال الله تعالى لنبيه "ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك" (سورة الفتح: من الآية 2).

அரபாவில் தங்குவோருக்கு அதற்கு பிந்தைய நன்மைகளுக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான். மாஷா அல்லாஹ்

وروى ابن عبد البر بسنده عن أنس بن مالك رضي الله عنه، قال: "وقف النبي صلى الله عليه وسلم بعرفات، وكادت الشمس أن تؤوب، فقال: يا بلال! أنصت لي الناس. فقام بلال، فقال: أنصتوا لرسول الله صلى الله عليه وسلم، فنصت الناس، فقال: معاشر الناس، أتاني جبريل آنفًا، فاقرأني من ربي السلام، وقال: إن الله غفر لأهل عرفات وأهل المشعر، وضمن عنهم التبعات. فقام عمر بن الخطاب رضي الله عنه، فقال: يا رسول الله، هذا لنا خاص. فقال: هذا لكم، ولمن أتى بعدكم إلى يوم القيامة. فقال عمر رضي الله عنه: كثر خير الله وطاب".

துஆ கேட்கப்படும் சிறந்த நாள்.

فقد قال النبي صلى الله عليه وسلم "خير الدعاء دعاء يوم عرفة، وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير" (رواه الترمذي).

ஹாஜிகள் அல்லாதோர் அந்த நாளின் நன்மையை பெற நோன்பு நோற்க பெருமானார் அறிவுறுத்தினார்கள்

وقال رسول الله صلى الله عليه وسلم "صيام يوم عرفه أحتسب على الله أن يكفّر السنة التي قبله والسنة التي بعده" (رواه مسلم)،

அரபாவின்  நாள்  என்பது மார்க்க அடிப்படையில் துல் ஹஜ் மாத்த்தின் ஒன்பதாம் நாளாகும்.  

 ஏதேனும் ஒரு காரணத்தால் அரபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் ஒரு நாள் தள்ளிவைக்கப் படுமானால் சர்வதேச மக்களும் துல் ஹஜ் 9 ம் நாளில் நோன்பு வைக்க வேண்டுமே அன்றி அரபாவில் ஹாஜிகள் கூடும் நாளில் அல்ல.

 அரபாவுடைய நாள் மார்க்க ரீதியாக அதிக மரியாதைக்குரிய நாள் என்ற போதும் சமூக ரீதியாகவும் அதன் தாக்கம் அலாதியானது ஆகும்.

 முஹம்மது நபி (ஸ்ல்) மனிதர்கள் அனைவரும் சமம் என்கிற சமத்துவ பிரகடணத்தை ஆயிரமாண்டுகளுக்கு பிரகடணப்படுத்திய நாள் அரபா நாளாகும். அந்த சமத்துவம் இன்று வரை நிலைத்துக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு அரபாவும் உணர்த்திக் கொண்டிருக்கிரது.

 தேசம், மொழி , இனம் நிறம் கடந்து மக்கள் அனைவரும் ஒரே மாதிரி ஆடையில் ஒரே கோஷத்தோடு மனிதப் பிறவியின் தத்துவம் என்பதே இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வது என்பதை  லப்பைக் கோஷத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.

 சனிக்கிழமை நாம் நோன்பு நோறு பாவங்கள் மன்னிக்க பிரார்த்திப்பதோடு அல்லாஹ் நம் அனைவருக்கும் இஹ்ராம் அணிந்து லப்பைக் சொல்லும் பாக்கியத்தை வழங்க வேண்டும் எனவும் பிரார்த்திப்போம்! அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை காணவும்\

அரபா - குர்பானி 

அடிமைகளின் நகரம்

அரபா உன்னதம்


 (மினாவின் 5 ம் எண் முஅல்லிமின் 137 எண் கூடாரத்திலிருந்து)

 

 

 

3 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு. ஹஜ்ஜூல் அக்பர் 70 மடங்கு அதிக நன்மை என்பதற்க்கு ஆதாரம் ஹவாலா கிடைத்தால் ஜும்மா பயானில் சொல்ல ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete