காஷ்மீர்
மீண்டும் எரிமலையாகிக் கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களின் வாழ்கை சொந்த
அரசாங்கத்தால் சிதைக்கப் பட்டு வருகிறது. முஸ்லிம்கள் என்ற ஒற்றை காரணத்திற்காக அவர்கள்
தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருகிறார்கள்.
பாஜக அரசு
முஸ்லிம்க சமூகத்திற்கு எதிரான தனது கோர தாண்டவத்தை மற்றொரு கோடூரத்தை அரங்கேற்றியிருக்கிறது,
அதிகாரப் பித்து பிடிக்கிற போது ஆட்சியாளர்கள் ஆடும் வெறியாட்டம் ஏராளமான அப்பாவி மக்களின்
வாழ்க்கையை அநாயசமாக சிதைத்து விடும். கடந்த
பல ஆண்டுகளாக நெருப்பின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருந்த காஷ்மீரத்து மக்கள் இப்போது
பெரு நெருப்பின் பள்ளத்தில் விழுந்து கிடக்கிறார்கள்.
இந்தியா ஒரு
நாடல்ல, நாடாக ஆக்கப் பட்டது என்பதே உண்மை.
இந்திய யூனியன் என்பது தான் அரசியலமைப்பு இந்தியாவுக்கு வழங்கும் தகுதி.
அது மட்டுமல்ல.
அரசியல் சாசணப்படி இந்தியா என்ற வார்த்தையே காஷ்மீர் அல்லாத பிற பகுதிகளை குறிக்கும்
சொல்லாகும்.
இதற்கு காரணம்.
காஷ்மீர்
இந்தியாவோடு இணைக்கப் பட்ட போது அம்மாநிலத்திற்கு சில சிறப்பு தகுதிகள் தரப்படும் என
வாக்குறுதி வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய
நாடாளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து, மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர்
சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக்கொடி உண்டு. ஆயினும் இந்தக் கொடி, இந்திய தேசியக் கொடியுடன் சேர்த்தே ஏற்றப்படவேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம்
இந்திய உச்சநீதிமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்டது என்றாலும். இம்மாநிலத்திற்கு தனி
அரசியல் சாசனம் உண்டு. அம்மாநில ஆளுநரை நியமிக்கும் பொழுது, அம்மாநில முதல்வருடன் ஆலோசித்தப் பின்னரே நியமிக்க
வேண்டும்.
இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இங்கு அசையா
சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அரசு
வேலைகளில், வேறு மாநில மக்கள் சேர முடியாது. இங்குள்ள கல்லூரிகளில்
வேறு மாநில மக்கள் ஸ்காலர்ஷிப் பெற முடியாது. இதை மத்திய அரசு நீக்கவும் முடியாது.
திருமண உறவுகள் மூலமாக காஷ்மீரின் சொந்த்து
பிறர் கைக்கு செல்வதை தடுக்கும் வகையில் தனியான நிலவுரிமைச் சட்டம் காஷ்மீருக்கு
உண்டு.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அத்தோடு
இந்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே காஷ்மீர் இந்தியாவின் ஒரு நிர்வாகப் பகுதியாக தொடர்ந்து வந்த்து.
இந்த கூட்டாட்சி
த்த்துவத்தை குலைக்கும் வக்கயில் மத்திய பாஜக அரசு தற்போது காஷ்மீர் மாநிலத்திற்கான
சிறப்பு அந்தஸ்தான 370 இரத்து செய்திருப்பதோடு காஷ்மீரை தனி அதிகாரங்கள் ஏதுமற்ற யூனியன்
பிரதேசமாக மாற்றியிருக்கிறது.
காஷ்மீர்
மக்களின் அன்பை பெறுவதற்கு பதில் காஷ்மீர் மக்களை அடிமைப் படுத்துவதிலேயே தொடர்ந்து
மத்தியைஅ ஆளும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் நடந்து வந்துள்ளனர்.
ஆப்பிள் பழ
உற்பத்தி குங்குமப்பூ உற்பத்தி, சுற்றுலா தவிர அம்மாநில மக்கள் இன்றை வளர்ச்சியின்
எந்த வெரு முன்னேற்றத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்த்தில்லை. , மின்சாரம் , போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதிகள்
எதுவும் அங்கு முழுமையாக இல்லை. தாங்கள் இன்னும் கற்காலத்தில் வாழ்வதாக சமீபத்தில்
பிபிசிக்கு பேட்டியளித்த காஷ்மீரி ஒருவர் மிகுந்த துக்கத்தோடு கூடியிருக்கிறார்.
வளர்ச்சியின்
எந்த பயனையும் அனுபவித்திராத மக்கள். ஆதிக்கத்தின் அனைத்து வகையான துயரங்களையும் அனுபவித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து
இஸ்லாமிய விரோதச் சக்திகள் ஹஜ்ஜுப் பெருநாள்களுடைய சமயத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தி
வருகிறார்கள். ஒரு அரபா உடைய நாளில் இராக்
அதிபர் சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டார். சென்ற சில் வருடங்களாக இந்துத்துவ சக்திகள்
ஹஜ்ஜுப் பெருநாளின் சமயத்தில் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை தொல்லைக்குள்ளாக்கும்
காரியங்களில் ஈடுபட்டன , இப்போது இந்தியாவை ஆளும் பாஜக அரசு இந்தியாவில் முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக வாழும் மாநிலமான காஷ்மீர் மாநிலத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கும்
காலத்தில் மக்கள் பெரும் பீதிக்கும் துயருக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.
அரசாங்கத்தின்
இந்த நடவடிக்கை ஜனநாயத்திற்கு புறம்பானது. இனி இந்தியாவின் எந்த மாநிலத்தையும் இந்த
முன்னுதாரனத்தை காட்டி ஒரு முன்சிபாலிட்டியை போல மாற்றிவிட மத்திய அரசாங்கத்தால் முடியும்,
இது அபாயகரமானது. ஜனநாயகத்தை குழி தோண்டிப்
புதைக்க கூடியது.
இதை தீபாவளி
என்று பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருக்கிறார்கள். பல இலட்சக்கணக்கான
மக்களை துக்கத்தில் ஆழ்த்தி விட்டு திருவிழாக் கொண்டாடுகிறவர்களை எந்த விலங்குகளின்
பட்டியலில் சேர்ப்பது ?
பஜக அரசின்
இந்த நடவடிக்கை மிகவும் அக்கிரமானது. எல்லை கடந்த மூர்க்கத்தனம் கொண்ட்து.
அக்கிரமக்கார்ர்களின்
யாரும் இறுதியில் வெற்றி பெற்றதில்லை. அவர்களது நடவடிக்கைகள் அவர்களுக்கு எதிராகவே
முடியும். ஆக்கிரமத்திற்குள்ளான மக்களுக்கு விடிவும் வெற்றீயும் கிடைக்கும்.
முஸ்லிம்
சமூகம் அத்தகைய வெற்றிகளை ஏராளமாக பார்த்திருக்கிறது.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه
العقوبة في الدنيا مع ما يدخره له في الآخرة من البغي وقطيعة الرحم) [رواه الترمذي
அக்கிரமத்திற்குள்ளான
மக்களின் மனக்கவலையை அல்லாஹ் உடனடியாக புரிந்து கொள்கிறான்,
இறைவா ! நான்
இல்லை என்றாலும் நீ எங்கே சென்றாய் என்றாள் ஒரு கிழவி. அடுத்த நிமிடம் கோட்டை தகர்ந்த்து.
وعن وهب بن منبه قال:بني جبار من الجبابرة
قصرا وشيده فجاءت عجوز فقيرة فبنت الي جانبه كوخا تاوي اليه فركب الجبار يوما وطاف
حول القصر فراي الكوخ فقال : لمن هذا ؟ فقيل لامراة فقيرة تاوي اليه فامر به فهدم
فجاءت العجوزفراته مهدوما فقالت من هدمه فقيل : الملك راه فهدمه فرفعت العجوز
راسها الي السماء وقالت : يارب اذالم اكن اناحاضرة فاين كنت انت ؟قال : فامر الله
جبريل ان يقلب القصر علي من فيه فقلبه
சிறிது நாட்கள்
ஆனாலும் பாதிப்புக்குள்ளானோரின் பிரார்த்தனை பலனளித்தே தீரும் .
وفي “السنن” بسندٍ حسنٍ أن النبي – صلى الله عليه وسلم – قال: “دعوةُ
المظلومِ تُحمَلُ على الغَمام، وتُفتحُ لها أبوابُ السماوات، ويقول الربُّ – جل
وعلا -: وعزَّتي! لأنصُرنَّكِ ولو بعد حينٍ”
இமாம் அஹ்மது
பின் ஹன்பலை தொல்லைக்குள்ளாக்கினார்கள். மூன்று மன்னர்கள் இறந்து போனார்கள். இமாம்
அஹ்மதே இறுதியில் வெற்றி பெற்றார்கள்.
காஷ்மீரிகள்
பெரும் அநிதிக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.
பிர் அவ்ன்கள்
நம்ரூதுகள் ஹிட்லர்கள் மோசமான முடிவையே சந்திப்பார்கள்
அல்லாஹ் காஷ்மீரி
மக்களின் நியாயாமன கோரிக்களை வெற்றிபெறச் செய்வானாக!
அக்கிரம்ம்
செய்கிற அரசாங்கத்திற்கு அல்லாஹ் ஹிதாயத்தை தந்தருள்வானாக! அது சாத்தியப்பட வில்லை எனில் அவர்களது சதித்திட்டங்களை
அவர்களுக்கே எதிரானதான ஆக்குவானாக!
ஹஜ்
உலகின்
சுமார் 25 இலட்சம் மக்கள் இன்று மினா மைதான தில் அல்லாஹ்வின் அடிமைகளாக கூடுகிறார்கள்
.
நாளை தினம்
அவர்கள் அனைவரும் அரபாவில் கூடுவார்கள்.
( பின்னால்
வரும் கட்டுரை முன்னர் ஒரு முறை ஹஜ் சமயத்தில் வெளியானது. இதிலுள்ள பொருத்தமான தகவல்களை
எடுத்துக் கொள்ளவும். )
அரபா
!
அல்லாஹ் மனித சமூகத்தை ஒட்டு மொத்தமாக திரட்டி நிறுத்தி உறுதிமொழி பெற்ற இடம்.
فعن
ابن عباس _رضي الله عنهما_ قال: قال رسول الله صلى الله عليه وسلم: (إن الله أخذ
الميثاق من ظهر آدم بِنَعْمان- يعني عرفة- وأخرج من صلبه كل ذرية ذرأها، فنثرهم
بين يديه كالذّر، ثم كلمهم قِبَلا، قال: (ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا
يوم القيامة إنا كنا عن هذا غافلين، أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية
من بعدهم أفتهلكنا بما فعل المبطلون) "الأعراف: 172، 173" "رواه
أحمد
இப்போதும் ஆண்டு தோறும் மக்கள் கூடி அல்லாஹ்வின் முன்னிலையில் தமது
அடிமைதனத்தை ஒப்புக்கொண்டு நிற்கிற இடம்.
மிகப்பெரிய மக்கள் கூடடம் – சுமார் 30 இலட்சம் பேர் ஒரே இடத்தில ஒரே நேரத்தில் கூடுகிறார்கள். உலகில் இப்படி ஒரு
கூட்டம் கூடுவது இல்லை.
உலகின் எட்டுத்திசையிலும் உள்ள மக்கள். ஒரே யூணிபார்மில் ஒன்று திரண்டு
மஹ்ஷரையும் நினைவூட்டும் கூட்டம் அது.
சின்னக் குழந்தைகள் மீசை முளைக்கத் தொடங்கிய இளைஞர்கள் முதுகு வளைந்த கிழவிகள்
நடக்க படுக்க முடியாதவர்கள் ஆரோக்கியமானவர்கள் நோயாளிகள் இவர்களில் ஆண்கள் பெண்கள்
என கலவையான ஒரு மனிதக் கூட்டம் அங்கே கூடுகிறது,.
சில சமயம் கூட்டத்தில் சிக்கினால் கால் தரை பதியாது. மக்கள் வெள்ளத்தில்
மிதப்பது போலவே இருக்கும். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சாய்வது அலையடிப்பது
போலவே இருக்கும். அவ்வளவு நெரிசல்! ஆனாலும் ஒரு பிரச்சினை, சர்ச்சை, அசம்பாவிதம் தேவையற்ற சீண்டல் இருக்காது.
லப்பைக்க என்ற தல்பியா மட்டுமே ஒலிக்கும்.
இந்தக் கூட்டத்திற்கு இடையேயும் ஹாஜிகளுக்கு தேவையான தண்ணீர் உணவு பழங்கள்
கிடைக்கும்.
இப்படி ஆம்புலன்ஸை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்?
டூவீலர் ஆம்புலன்ஸ்கள்.
வீடுகளுக்கு காங்க்ரீட் போடுவதற்கு இரண்டு வீல் வைத்த ஒரு வண்டியில் கலவை
எடுத்து வருவார்கள் அல்லவா அது போல் ஆனால் அதை விட மெல்லிய நீளமான மூங்கில்
படுக்கை போல – நாம்
வைத்திருக்கிற சந்தூக்கின் சிறிய சைஸ் பெட்டியில் சிவப்பு விளக்கை பொறுத்தி
தள்ளிக் கொண்டு வருகிற ஆம்புலன்ஸ்கள்.
ஒவ்வொரு ஹாஜியும் தம் வாழ்க்கையில் ஒரு புதிய நாளை சந்தித்த அனுபவத்தை
உணர்வார்கள்.
அந்த நாளில் குறிப்பிட்ட வணக்கம் எதுவும் கிடையாது. லுஹர் அஸரை சுருக்கியும்
சேர்த்தும் தொழுகிறார்கள். அரபா வின் பிரதான நேரம் லுஹருக்கு பின்
தொடங்குகிறது. மஃரிபு வரை நீடிக்கிறது. அந்த நேரம் முழுக்க ஹாஜி துஆ வில்
ஈடுபடுகிறார். கூடாரத்தில் அமர்ந்து துஆ கேட்கலாம் என்றாலும் திறந்த் வெளியில்
நின்று துஆ கேட்பது முஸ்தஹப்பு.
பெருமானார் (ஸ்ல்) அவரகள் நின்று தனது இறுதி உரையை நிகழ்த்திய் ஜபலுர் ரஹ்மததை
சுற்றி எறும்பு போல மக்கள் கூடி நின்று துஆ கேட்கிற காட்சியை நீங்கள் பார்க்கலாம்.
தற்போது ஹாஜிகள் கூட்ட நெரிசலைப் பற்றிய பயத்தின் காரணமாக வெளியே வருவதே
இல்லை. வெளியே வந்து ஒரு பார்வையை செலுத்தினார்கள் பல அல்லாஹ்வின் அதிசயங்களை
பார்க்கலாம்.
அரபாவில் இரண்டு விச்யத்தை மக்களுக்கு உணர்த்து கிறது.
1. நாம் ஒரே சமுதாயம்.
2. நாம் அல்லாஹ்வின் அடிமைகள்.
உலகின் எந்தப் பணக்காரனுக்கும் அவனுக்கேற்ற வசதிகள் அங்கு கிடைக்காது ஒரு
அன்றாடங்காய்ச்சியை போலத்தான் அவர் நடந்து கொள்ள் வேண்டியிருக்கும்.
நாம் எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்பதை அற்புதமாக உணரும் சந்தர்ப்பம் அது
வழக்கமாக வருடத்திற்கு 354 நாட்கள் காலியாக கிடக்கிற அந்தமைதானத்தில் இன்று ஒரு பொழுதில் சுமார் 8 முதல் 10 மணிநேரத்திற்குள்ளாக ஒரு பெரு நகரம் உருவாகிறது.
இந்த பழைய ஆணால் வருடந்தோறும் ஒருவாகிற புதிய நகரத்தில் அடிமைகளின் ஆடைகள் உடுத்திய 30 இலட்சம் பேர்.
இதோ வந்துட்டேன் என்பது அடிமைகள் கீழ் பணியும் வாசகம், அந்த பொருள் கொண்ட லப்பைக் கோஷத்தோடு
தஙகளது வீடு சொத்து சுகம அனைத்தையும் விட்டு ஒதுங்கி அல்லாஹ்விடம் முறையிட
திரண்டிருக்கிறார்கள்.
அரபா இறை அடிமைகளால்
நிறைந்து அடிமைகளின்நகரமாக
காட்சி தருகிறது.
காணக் காண் கோடி போதாத கூட்டம் அது.
அரபாவில் கூடி தன்னிடம் அழும் மக்களை பார்த்து அல்லாஹ்நெகிழ்கிறான். அவர்களை குறித்து மலக்குகளிடம் பெறுமைபொங்க பேசுகிறான், இவர்கள்
எதற்காக இங்கு குழுமியிருக்கிறார்கள், என்னிடமன்றி இவர்கள் யாரை கேட்கிறார்கள்? என்னைத்தானே
இவர்கள் நாடி வந்திருக்கிறார்கள் இவர்கள் கேட்பதை நான் கொடுப்பேன் என அல்லாஹ்
கூறுகிறான்.
قال النبي صلى الله عليه وسلم:
( إن الله يباهي بأهل عرفات أهل السماء- رواه
أحمد
قَالَتْ عَائِشَةُ إِنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ
أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنْ النَّارِ مِنْ يَوْمِ
عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمْ الْمَلَائِكَةَ فَيَقُولُ مَا
أَرَادَ هَؤُلَاءِ - مسلم
2402
இந்தக் கூட்டத்தை பார்த்து சைத்தான் கேவலமடைகிறான். இயலாமையும் குமுறுகிறான்
عَنْ طَلْحَةَ بْنِ
عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا هُوَ فِيهِ أَصْغَرُ وَلَا أَدْحَرُ
وَلَا أَحْقَرُ وَلَا أَغْيَظُ مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ وَمَا ذَاكَ إِلَّا
لِمَا رَأَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ وَتَجَاوُزِ اللَّهِ عَنْ الذُّنُوبِ
الْعِظَامِ إِلَّا مَا أُرِيَ يَوْمَ بَدْرٍ قِيلَ وَمَا رَأَى يَوْمَ بَدْرٍ يَا
رَسُولَ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُ قَدْ رَأَى جِبْرِيلَ يَزَعُ الْمَلَائِكَةَ
– مؤطا -840
பகை , சண்டை, ஆபாசம்., எதற்கும்
அந்தத் திருக்கூட்டத்தில் வாய்ப்பில்லை. அரசியல் சச்ச்ரவுகள் அங்கே
நடைபெற்றதில்லை. குழு மோதல்கள் நடந்ததில்லை. அடிதடி கைகலப்பு எதுவும் இல்லை.
சுப்ஹானல்லாஹ். மாஷா அல்லாஹ். அல்லாஹு அக்பர்.
சைத்தானின் தூண்டுதல்கள் எதற்கும் அங்கு வாய்ப்பில்லை.
இன்று என்ன தேதி என்பதை கூட உணராதவராக எத்தனை மணி என்று கேட்காதவராக அல்லாஹ்
நாடி நிற்பதே தனது வாழ்வுக்கான இலக்கு என்பதை ஹாஜி தனது அனுபவத்தில் உணர்கிறார், இந்தப் பகல்
பொழுதின் இதுமாதிரியான தங்குதல் இந்த உணர்வையே அவருக்கு ஊட்டுகின்றன, அல்லாஹ்வின்
உத்தரவுகளுககு கட்டுப்படுவதில் தன்னுடைய சவுகரியங்களை – விருப்பங்களை – ஒதுக்கி
வைத்து விட்டு ஒடுகிற வாழ்க்கைகு ஹாஜி பயிற்சி பெறுகிறார்,
அது மட்டுமல்லாது
· உடன் வருகிற
மனிதரின் இயல்புகளை சகிக்கிற சகிப்புத் தன்மையை
· சிரமங்களை – ஏற்றுக்
கொள்கிற பொறுமையை
· எல்லோரும் ஒரு
தாய் மக்கள் என்ற சகோதரத்துவ உணர்வை.
· இன வர்க்க
பேதமற்ற சமத்துவ நடைமுறையை
· தனக்குரியது
என்று ஒதுக்கி வைக்காமல் – எடுத்துக்
கொள்ளுங்கள் என்று பிறருக்கு நீட்டுகிற பெருந்தன்மையை
அரபா பெருவெளியில் கூடி நிற்கிற இலட்சக்கணக்கான மக்கள்
வெளிப்படுத்துகிறார்கள். இது தான் உன்னதமான மனித வாழ்வு என்பதை உணர்கிறார்கள்.
அதனால் அரபா தினம் மனித சமூகத்தில் ஒரு கனிசமானோருக்கு மனிதனிடம் இருக்க
வேண்டிய அடிப்படை இயல்புகளுக்கு பழக்கப்படுத்தி அனுப்புகிறது.
இந்த் வகையில் அரபா நாள் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் கவனத்திற்கும் உரிய
நாளாக இருக்கிறது.
உலகம் முழுவதிலும் இருக்கிற தொலைக்காட்சி சானல்கள் மனிதக் கூட்டத்தின்
பிரம்மாண்ட திரட்சியை மட்டுமே - அரபா வின் புற அழகை மட்டுமே படம் பிடித்துக்
காட்டுகிறார்கள்.
முஸ்லிமகள் அரபாவின் அக அழகை உணர்ந்து கொள்ள கடமைப் பட்டிருக்கிறார்கள். இது
தான் சரியான வாழ்க்கை என்பதை தெரிந்து கொள்ளவும் கடமைப் பட்டிருக்கிறார்கள்,
இந்த உணர்வை உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் உணரும் அன்றைய தினம்
நோன்பு சுன்னத்தாக்கப் பட்டிருக்கிறது,.
فقد
ورد عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم
عرفة فقال: (يكفر السنة الماضية والسنة القابلة) "رواه مسلم".
இந்தியாவில் அரபா நாள்
இன்று மக்காவில் அரபா மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடியிருந்தாலும். உலகம்
முழுவதற்கும் இதுவே அரபா நாள் அல்ல.
ஏனெனில் அரபா நாள் என்பதற்கு மார்க்கம் கூறும் விளக்கம் ஹாஜிகள் அரபாவில்
கூடும் நாள் என்பதல்ல. துல் ஹஜ் மாத்தின் ஒன்பதாம் நாள் என்பதாகும்.
உம்மு வில் இமாம் ஷாபி (ரஹ்) அறிவிக்கிறார்.
ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த இஸ்லாமின் மிகப்பெரிய சட்ட அறிஞரான عطاء بن أبي رباح விடம் بن
جريج என்ற عبد الملك بن عبد العزيز بن جريج கேட்டார். ஹாஜிகள் அரபா அல்லாத நாளில்அரபா நாளளென்று தவறுதலாக கூடி தங்கி விட்டால்என்னவாகும் அது கூடுமா ? عطاء بن أبي رباح பதில் சொன்னார்.கூடும் என்று
சொல்லி விட்டு பெருமானாரின் இந்த ஹதீஸை சொன்னார்.
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " فِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ ,
وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ أَرَاهُ قَالَ ، وَعَرَفَةُ يَوْمَ تَعْرِفُونَ " .
.
372
நீங்கள் எதை தீர்மாணிக்கிறீர்களோ அது தான் ஈது. அது தான் அரபா
துல்ஹஜ் 9 ம் தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை தான் என காழி அறிவித்திருக்கிறார்,
பிறை பார்த்து செயல்படுங்கள் என்ற பெருமானாரின் உத்தரவுகளுக்கு கீழ் நின்று
கொள்ள நாம் பழகியிருந்தோம் என்றால் இப்போது இரண்டு நாள் வித்தியாசம்
ஏற்பட்டிருப்பதை நாம் பொருட்படுத்த தேவையில்லை. நமக்கு பிறை தெரிந்தததின்
அடிப்படையில் நாம் செயல் படுகிறோம். பெருமானார் (ஸ்ல்) அவர்களின் உத்தரவுக்கு
பணிகிறோம் அதுதான் முக்கியம்.
அதெப்படி ? என்று கேட்க
தலைப்படுகிற போது சைத்தான் விரிக்கும் குழப்பத்தின் வலைக்குள் சிக்குகிறோம் என்பது
தான் பொருள்.
இந்தியாவில் உள்ள அறிஞர்கள் மட்டுமல்ல இன்றைய தினம் அரபா நாளாக சிறப்பித்துக்
கொண்டிருக்கிற சவூதி அரேபியாவின் அறிஞர்களே இதை தா ன் உலக மக்களுக்கு
அறிவுறுத்துகிறார்கள். பிறைகள் மாறுபடும் . எனவே உங்களது நாட்டின் பிறை பார்த்தலை
அனுசரித்து செயல் படுங்கள் என்று தான் கூறுகிறார்கள்.
நாங்கள் இன்றுதான் அரபாவில் இருக்கிறோம். எனவே நீங்களும் இன்றுதான அரபா நோன்பை
கடை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை.
ஒரு வேளை மக்காவில் பிறை பார்ப்பதற்கு முன்னதாக ஒரு ஊரில் பிறை
பார்த்திருந்தால் அந்த ஊர்க்காரர்களுக்கு ஹாஜிகள் அரபாவில் தங்கும் நாள் 10 ம் நாளாகும்
அன்று அவர்களுக்கு பெருநாள் தினம் அவர்கள் அன்றைய தினம் நோன்பு வைப்பது ஹராம் என
அவ்வறிஞர்களே கூறுகிறார்கள்.
இன்றைய சவூதி அரசாங்கத்தின் மறைந்த முப்தி ஒரு வரின் பதிலை பாருங்கள்.
சூரியோதயம் அஸ்தமனத்தை தங்களின் ஊர் கணக்கின் படி முடிவு செய்வதை போலத்தான்
மாதங்களின் துவக்கத்தையும் முடிவையும் தமது ஊர் கணக்கின் படியே முடிவு செய்ய
வேண்டும் என்கிறார்.
سئل
فضيلة الشيخ ابن عثيمين ـ رحمه الله تعالى ـ: إذا اختلف يوم عرفة نتيجة لاختلاف
المناطق المختلفة في مطالع الهلال فهل نصوم تبع رؤية البلد التي نحن فيها أم نصوم
تبع رؤية الحرمين؟
فأجاب فضيلته بقوله: هذا يبنى على اختلاف أهل العلم: هل الهلال
واحدفي الدنيا كلها أم هو يختلف باختلاف المطالع؟ والصواب أنه يختلف باختلاف
المطالع، فمثلاً إذا كان الهلال قد رؤي بمكة، وكان هذا اليوم هو اليوم التاسع،
ورؤي في بلد آخر قبل مكة بيوم وكان يوم عرفة عندهم اليوم العاشر فإنه لا يجوز لهم
أن يصوموا هذا اليوم لأنه يوم عيد، وكذلك لو قدر أنه تأخرت الرؤية عن مكة وكان
اليوم التاسع في مكة هو الثامن عندهم، فإنهم يصومون يوم التاسع عندهم الموافق ليوم
العاشر في مكة، هذا هو القول الراجح، لأن النبي صلى الله عليه وسلم يقول:
"إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا" وهؤلاء الذين لم يُر في
جهتهم لم يكونوا يرونه، وكما أن الناس بالإجماع يعتبرون طلوع الفجر وغروب الشمس في
كل منطقة بحسبها، فكذلك التوقيت الشهري يكون كالتوقيت اليومي.
சவூதியில் பிறை பார்த்ததை அறிவிப்பு செய்கிற அதேஅறிஞர்கள் உலக மக்களுக்கு சொல்கிற அறிவுரை இப்படிஇருக்கிற போது குழப்ப மற்ற தீனின் கட்டுப்பாடு உணர்வுகொண்ட நியாய சிந்தனை உள்ளவர்கள் என்ன செய்யவேண்டும்? .
சவூதி அறிஞர்களின் இந்த தீர்ப்பு சுன்னத் ஜமாத்தினர்களுக்குதேவையில்லை. சுன்னத் ஜமாத்தினர் தங்களுடைய மார்க்கஅறிஞர்களின் வழி காட்டுதலின் படியே எந்த விசய்த்திலும்நடந்து கொள்கிறவர்கள்.
சுன்னத் ஜமாத் உலமாக்கள் விசயத்தில் திருப்தி கொள்ளாதஅஜீரண ஆசாமிகளுக்காகவே இதை குறிப்பிடுகிறோம்.
உங்களுடை சொந்த ஆசா பாசங்களுக்காக உங்களதுகொள்கை வழிக்காரகளே சொல்கிற அறிவுரையை மீறிசமுதாயத்தை பிளவு படுத்தாதீர்கள். நீங்களும் பிளவுபடாதீர்கள்.
ஒருவேளை இஸ்லாத்தை மீறி பெருநாள கொண்டாடி குர்பானிகொடுப்பீர்கள் எனில் அந்த இறைச்சியை அன்று பெருநாள்கொண்டாடாத மக்களுக்கு கொடுத்தனுப்பாதீர்கள். அதுஉட்சபட்ச அக்கிரம மாகும். அக்ந்தையும் மமதையுமாகும். அதை உங்களவர்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.
அப்படி யாராவது கொடுத்தனுப்பினால் அதை திருப்பிஅனுப்பவது தவறல்ல. சமூகத்தில் கொள்கை குழப்பவாதிகளின் சலாமிற்கு கூட பதில் சொல்லக் கூடாது என்றுமார்க்க அறிஞர்கள் நமக்கு சொல்லியிருக்கிற போதுசமுதாயத்தை பிளந்த சதிகாரர்களின் கறி நமக்கெதற்கு ? அதுஉள்ஹிய்யாவும் அல்ல.
நமது பெருநாள் தொழுகைக்கு முன்னாள் அறுத்த குர்பானிகுர்பானி ஆகாது என்பது பெருமானாரின் உத்தரவாகும்.
அவர்களது நடைமுறைகளை நாம் வெறுக்கிறோம் என்பதற்குஅடையாளமாக அந்த கறியை திருப்பி அனுப்புங்கள்.
முஸ்லிம் உம்மத் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்.
வருகிற ஞாயிற்றுக் கிழமை அரபா நோன்பு வையுங்கள்.
ஞாயிறு பஜ்ரிலிருந்து வியாழக் கிழமை அஸர் வரைஜமாத்தாகவோ தனியாகவோ தொழுதால் தொழுகைக்குப் இன்தக்பீர் சொல்லுங்கள். ஆண்கள் ச்ப்தமாகவும் பெண்கள்மெதுவாகவும்.
பெருநாள் இரவு அமல்களுக்கு உகந்த இரவு, முடிந்தவரை அமல்செய்யுங்கள்.
திங்கட் கிழமை ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுங்கள்.
பெருநாள் தொழுகைக்கு குளித்து நல்ல ஆடை உடுத்திவாசனை சாப்ப்டுவதற்கு முன்னதாக தொழுகைக்கு பள்ளிக்குகிளம்புங்கள்
பள்ளிவாசலுக்கு வருகிற வழியில் தக்பீர் முழுங்கி வாருங்கள்.
பெருநாள் தொழுகைய நிறைவேற்றுங்கள். குத்பாவை காதுதாழ்த்திக் கேளுங்கள்.
தொழுகை முடிந்ததும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியபிராணீயை குர்பான் கொடுங்கள்.
பெருநாள் தொழுகை நடை பெறுகிற ஊரில் தொழுகைக்குமுன்னாள் குர்பானி கொடுக்க கூடாது.
عن جندب قال صلى النبي
صلى اللهم عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح فقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى
مكانها ومن لم يذبح فليذبح باسم الله – بخاري
குர்பானியின் சட்டங்களில் சில
(முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள் ஜவாஹிருல் பிக்ஹில்குர்பானி பற்றி கொடுத்துள்ள பத்வாவின் அடிப்படையில்தொகுக்கப்பட்டது. )
· குர்பானி ஒரு தனி வணக்கம் . அதற்கு மாற்றாக தர்மம்செய்வது ஈடாகாது.
· ஜகாத் கடமையாகும் அளவு பணம் –( அதாவது சுமார் 26 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவர் மீது குர்பானிகடமையாகும்). அத்தொகை ஆண்டு முழுவதும்இருந்திருக்க வேண்டும் என்பதில்லை. அன்றையதினத்தில் இருந்தால் போதுமானது,
· சிறுவர்களது சொத்திலிருந்து குர்பானி கொடுக்கவேண்டியதில்லை.
· பயணிகள் மீதும் குர்பானி கடமையாகாது.
· 10 11
12 மூன்று நாட்களில் குர்பானி கொடுக்கலாம்,
10 ம்நாள் கொடுப்பது சிறந்தது.
· குர்பானி இந்த மூன்று நாட்களுக்கு மட்டுமே உரியவணக்கமாகும். முப்தீ ஷபீ சாஹிப்
· கவனக்குறைவாக இந்த நாட்களை தவறவிட்டவர்கள்அதற்குரிய பணத்தை தர்மம் செய்யலாம். ஆனால 10 11 12ஆகிய நாட்களில் தர்மம் செய்தால் கடமைநிறைவேறாது, மாறாக குற்றவாளி ஆவார்.
· ஜும் ஆ நடை பெறுகிற ஊர்களில் பெருநாள் தொழுகைமுடிந்த பிறகே குர்பானி கொடுக்க வேண்டும், அதற்குமுன்னதாக கொடுத்து விட்டவர்கள் திருமம்ப மற்றுமொருகுர்பானி கொடுக்க வேண்டும்.
· ஒரு ஊரில் ஒரு இடத்தில் தொழுகை முடிந்து விட்டால்மற்ற பகுதிகளில் குர்பானி கொடுத்துக் கொள்ளலாம்.
· பிறவியிலேயே கொம்பு இல்லாதது அல்லது கொம்புஉடைந்து மூளையில் பாதிப்பு ஏற்படாத ஆடுகளைகுர்பானி கொடுக்கலாம்.
· காயடிக்கப்பட்ட பிராணியை குர்பானி கொடுக்கலாம்.
· மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக காது அல்லது வால்அறுந்த பிராணிகள் கூடாது.
· பல் அறவே இல்லாத, அதிகம் இல்லாத பிராணிகள்கூடாது.
· நல்லதாக வாங்கிய பிறகு, குறை ஏற்பட்டு விட்டால்சாமாணியர் அதையே குர்பானி கொடுத்துவிடலாம். பணக்காரர் வேறு ஒன்றை வாங்கி கொடுக்க வேண்டும்.
· தானே அறுப்பது சிறந்தது, அடுத்தவர் மூலமும்அறுக்கலாம். குர்பானி கொடுக்கும் இடத்தில் குர்பானிகொடுப்பவர் இருப்பது சிறந்தது,
· குர்பானியின் நிய்யத் வைத்துக் கொண்டுபிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் சொல்லிஅறுக்கவேண்டும்.
· குர்பானி பிராணியின் முகத்தை கிப்லாவை நோக்கிதிருப்பி வைத்துக் கொண்டு அறுப்பதற்கு முன்னால்வஜ்ஜஹ்து ஓதிக் கொள்வது சுன்னத்து.
· அறுத்த பிறகு
· அல்லாஹும்ம ஹாதா மின்க வ இலைக்க - அல்லாஹும்ம தகப்பல்ஹு மின்னீ கமா தகல்லத மின்ஹபீபிக முஹம்மதின் வ கலீலிக இபுறாகீம் என்று துஆசெய்ய வேண்டும்.
·
· عن جابر بن عبد الله
الأنصاري أن رسول الله صلى اللهم عليه وسلم ذبح يوم العيد كبشين ثم قال حين وجههما
إني وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي
ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين بسم
الله الله أكبر اللهم منك ولك عن محمد وأمته – احمد
· குர்பானி பிராணீயை சில நாட்கள் பராமரிப்பதுசிறப்பானது.
· குர்பானி பிராணியிடமிருந்து பால் கறப்பது முடியைவெட்டிக் கொள்வது அனுமதிக்கப் பட்டதல்ல, அவ்வாறுசெய்தால் அதற்குரிய தொகைய தர்மம் செய்து விடவேண்டும்.
· கத்தியை கூர் படுத்திக் கொள்ள வேண்டும்.
· ஒரு பிராணியை மற்ற பிராணியின் முன்னிலையில்அறுக்க கூடாது.
· பிராணி முழுமையாக குளிர் நிலையை அடைவதற்குஉரிக்க இறைச்சியை வெட்ட கூடாது.
· குர்பானி பிராணி குட்டி போட்டாலோ அல்லதுவயிற்றுக்குள் குட்டி உயிருடன் இருந்தாலோ அதையும்குர்பானி கொடுக்க வேண்டும்.
· கூட்டுக் குர்பானியில் பங்குகள் தோராயமாககணக்கிடக் கூடாது. சரியாக பங்கிடப் டவேண்டும்.
· குர்பானி இறைச்சியை மூன்றாக பங்கு வைத்துதமக்கென்றும் உறவினர்களுக்கென்றும்ஏழைகளுக்கென்றும் பிரித்துக் கொள்வது சிறப்பு. கடமைஅல்ல . தேவை எனில் மொத்த இறைச்சியையும்கொடுப்பவரே வைத்துக் கொள்ளலாம். ஷாபி மதஹபில்தர்மம என்று சொல்லத தக்க அளவில் குர்பானிஇறைச்சியை ஏழைகளுக்கு தர்மம் செய்வது கடமை.
· روي عن ابن عباس في صفة أضحية النبي صلى الله عليه وسلم قال: ويطعمأهل بيته الثلث، ويطعم فقراء جيرانه الثلث، ويتصدق على السؤال بالثلث،رواه الحافظ أبو موسى الأصفهاني في الوظائف، وقال: حديث حسن.
· குர்பானி இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்குகொடுப்பது ஷாபி மத்ஹபில் கூடாது. ஹனபி மத்ஹபில்தடை இல்லை. நிர்பந்த சூழலில் அவர்களுக்கும் தரலாம்.
· குர்பானி தோலை சொந்த உபயோகத்திற்கு வைத்துக்கொள்ளலாம். விலைக்கு விற்றால் அதன் பணத்தைதர்மம் செய்து விட வேண்டும்.
· அந்த பணத்தை யாருக்கும் கூலியாக கொடுக்க கூடாது.
மேலும் சில ஆலோசனைகள்
· குர்பானி ஒரு இபாதத் என்பதை நினைவில்நிறுத்துங்கள். அது பகட்டுக்கான ஒரு கலாச்சாரம் அல்ல.
· நம்முடைய ஆடு மாடு எவ்வளவு பெரிது என்பதை விடநம்முடைய எண்ணம் எவ்வளவு சுத்தமானது என்பதைதான் அல்லாஹ் பார்க்கிறான். அல்லாஹ்விற்காககுர்பானி கொடுக்கிறவர்கள் இதை மறக்க வேண்டாம்.
· لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا
دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ
لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرْ الْمُحْسِنِينَ(37)
· இந்த ஆயத்தையும் அதன் பொருளையும் எத்தனைமுறை கேட்டிருப்போம். உள்ளத்தால் இதை உணரமுய்றச்சிப்போம்.
· அறுப்பை முறையாக செய்யுங்கள். பிராணியைதுன்புறுத்தக் கூடாது.
· அறுக்க சக்தியற்ற சின்னக்குழந்தைகளை அறுக்கவைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கவேண்டாம்.
· நம வீட்டின் பெண்கள் குழந்தைகள் இதை பார்க்கட்டும்.
· சில வெளிநாடுகளில் குர்பானி என்ற வுடன் மக்கள்முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்கிறார்கள்.காரணம் இத்தகைய கலாச்சாரம் அவர்களுக்குஅறிமுகம் இல்லாத்துதான்.
· குர்பானி இறைச்சியை உறவினர்களுக்கு பட்டியல்போட்டுக் கொடுக்கிற பழக்கம் பெரும்பாலோரிடம்இருக்கிறது. அது நல்லது தான். அதே நேரம் ஆடு குர்பானிகொடுப்பவர் ஒரு துண்டு இரண்டு துண்டு என பிரித்துஅதை எடுத்துக் கொண்டு வீடுவீடாக அலைவதுதேவையற்றது. குர்பானி கொடுக்காத உறவினர்களுக்குபோதிய அளவு அல்லது கனிசமாக கொடுக்கலாம்.
· பெரிய அளவில்
குர்பானி கொடுப்பவர்கள் நகரின் ஒதுக்குப்புறங்களில் – சாதாரணமக
உதவிகள் சென்று சேராத பகுதிகளுக்கு போதிய அளவுகளில் கொண்டு சேர்க்க முயற்சி
எடுப்பது நன்மையாக அமையும்.
· குர்பானி கொடுத்து விட்டு அதன் கழிவுகளை பொதுசுகாதாரத்திற்கு கேடாக அமைகிற வகையில் போடுவதுஇரத்த திட்டுக்களை கழுவாமல் விடுவதை தவிருங்கள்.
அல்லாஹ்வின் எந்த உத்தரவிற்கும் கட்டுப்பட வேண்டிய அடிமைகள் நாம் என்பதை
குர்பானி நினைவூட்டுகிறது என்பதை நாம மறந்து விடக்கூடாது.
மினாவை நோக்கிய
புறப்பாட்டில்…
மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு
ReplyDeleteஅல்லாஹ் தங்களின் ஹஜ்ஜை மக்பூலான மப்ரூரான ஹஜ்ஜாக ஆக்குவானாக ஆமீன்
Ameen
Delete