வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 15, 2019

புறக்கணிப்பு எனும் ஆயுதம்

நாடு சுதந்திரதினத்தை கொண்டாடுகிற போது காஷ்மீரிகள் தங்களது வீடுகளுக்குள் சிறை வைக்கப் பட்டிருக்கின்றனர்.
காஷ்மீர் மாநில மக்கள் பெருநாள் தொழுகை நடத்த அரசு அனுமதிக்கவில்லை.
பிரபல ஹஜ்ரத் பால் பள்ளிவாசல், காஷ்மிரின் ஜாமிஆ மஸ்ஜித் ஆகியவை தொடர்ந்து மூடப் பட்டிருக்கின்றன.
ஒரு சுதந்திர நாடு தனது குடிமக்களை இப்படி அடைத்து வைப்பதற்கு நாடு வெட்கப்பட வேண்டும்மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த போராடுவார்கள் எனில் அதை அனுமதிக்க மறுப்பது அராஜகம் அல்லவா ?
வட மாநிலத்தில் ஜாட் இனத்தவர்கள் போராட்டம் எவ்வளவு சேதங்களையும் சிரமங்களையும் ஏற்படுத்தியது ? அவர்கள் இப்படி அடைக்கப் பட்டார்களா ? அரசு அம்மக்களின் கோரிக்கைகு இணங்கி வந்த்தா இல்லையா ?
முஸ்லிம்களிடம் வெறுப்புக்காட்டுகிற மத்திய பாஜக் அரசு நாட்டை ஒரு ஆபத்தான பாதைக்கு கொண்டு செல்கிறது.
அரசியல் சாசண ரீதியான பொறுப்புக்களில் இருந்து கொண்டு ரொளடிகளை போல மத்திய அரசு செயல் படுகிறது.
ஆதிக்க சக்திகளின் சில மனோவிகாரங்கள் தற்போதைக்கு அரங்கேறலாம்.  ஆனால் நீதி  வென்றே தீரும்.
முஸ்லிம்கள் இந்த் சந்தர்ப்பத்தில் அதிகப் பட்ச பொறுமையை கடைபிடித்து பாஜக அரசாங்கத்தைப் புறக்கணிப்பதே சரியான பதிலாக இருக்கும்.
வீரத்தை வெளிப்படுத்தும் வேகத்தில் தெருவில் இறங்கி நடை பெறும் போராட்டங்கள் ஒரு வேளை முஸ்லிம்களுக்கே அதிக சேத்த்தை ஏற்படுத்தலாம்.
உலகில் வெற்றிகரமான பல போராட்டங்கள் நடை பெற்றுள்ளன,  புறக்கணிப்பு என்ற ஆயுத்த்தால் அவை வெற்றி பெற்றுள்ளன.
அதற்கு நிறைய மனத்துனிவும் தெளிவும் வேண்டும்.

அமெரிக்காவில் ரோஸ் ஆப் பர்க் என்ற கறுப்பின பெண்மணி ஒரு பஸ்ஸில் ஏறினார். வெள்ளைக் காரர்கள் உட்காரக்கூடிய சீட்டில் அவர் உட்கார்ந்து விட்டார் என்பதற்காக அவரை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டார்கள். அதை எதிர்த்து தொழிலாளர்களான கறுப்பின மக்கள் பஸ்ஸில் ஏற மாட்டோம் என்று சொல்லி போராடினர். சுமார் நூறு நாட்கள் அந்த போராட்டம் நடை பெற்றது.  இறுதியில்  கறுப்பின மக்களுக்கு நீதி கிடைத்த்து.
காந்தியடிகள் சுதந்திர போராட்ட்த்தின் போது இது போல பல புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தினார்.  ஆங்கிலேயர் வழங்கும் பட்டங்களை புறக்கணித்தல். கல்லூரிகளை புறக்கணித்தல் , அன்னிய துணிகளை புறக்கணித்தல் என்று அவர் நட்த்திய போராட்டங்கள் ஆங்க்லேயர்களை திகைப்பில் ஆழ்த்தின.
புறக்கணிப்பு என்பது திருக்குர் ஆன் கற்றுத்தருகிற ஒரு வாழ்க்கை முறையாகும்.  அக்கிரமக்கார்ர்கள், அறிவு கெட்டவர்களோடு எதிர் படும் சந்தர்பங்களில் இந்த அணுகுமுறை உரிய பலனை பெற்றுத் தறும்.
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ} [الأعراف:199]
உமர் ரலியை பார்த்து நீர் நீதமாக நடக்க வில்ல என்றார் ஒருவர். அதுவும் உதவி தேடி வந்தவர்.

قدم المدينة عيينة بن حصن ونزل على ابن أخيه الحر بن قيس، وكان من النفر الذين يدنيهم عمر -رضي الله عنه-، وكان القراء أصحاب مجلس عمر ومشاورته كهولاً كانوا أو شباناً، فقال عيينة: يا ابن أخي، هل لك وجهٌ عند الأمير، فاستأذن لي عليه. قال سأستأذن لك عليه. قال ابن عباس: فاستأذن الحر لعيينة، فأذن له عمر، فلما دخل قال: هي يا ابن الخطاب .. فوالله ما تعطينا الجزل، ولا تحكم بيننا بالعدل. فغضب عمر حتى هم أن يوقع به. فقال الحر: يا أمير المؤمنين، إن الله عز وجل قال لنبيه -صلى الله عليه وسلم-: {خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ} وإن هذا من الجاهلين، فوالله ما جاوزها عمر حين تلاها عليه، وكان وقافاً عند كتاب الله [البخاري:4276]

திருக்குர் ஆன் வேறு பல வசன்ங்களிலும் இந்தப் புறக்கணிப்பு என்ற நடை முறையை வலியுறுத்துகிறது.
.فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ)، «سورة الحجر: الآية 85»،
 وقال: (فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ * إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ)، «سورة الحجر: الآيات 94 - 95».

கல்லெறியும் போராட்டங்களை விட இந்தப் புறக்கணிப்பு போராடம் பெரும் சேதமில்லாத  வெற்றியை தரும்.
தென்னிந்திய விடுதலைப் போர் வரலாற்றில் கோரல் மில் போராட்டம் ஒரு வெற்றிகரமான போராட்டமாகும்.
 ‘கோரல்மில்என்பது ஆங்கிலேயர்களால் தூத்துக்குடியில் துவங்கப்பட்டு அந்த பகுதி மக்களின்  உழைப்பை கடுமையாக சுரண்டி வளர்ந்தது. காலநேரம் இல்லாமலும், வார விடுமுறை இல்லாமலும்,
கடுமையான தண்டனைகளாலும் பல்வேறு இன்னல்களோடு பணியாற்றி வந்தனர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஒரு போராட்டம் தொடங்கப் பட்டது.
.
கோரல்மில் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கும், அவர்களின்
ஆதரவாளர்களுக்கும் தூத்துக்குடி வணிகர்கள்மளிகைப் பொருள்களை விநியோகம் செய்ய மறுத்தனர்!!
  துப்புறவு தொழிலாளர்கள் அவர்கள் வீடுகளில் துப்புரவு பணிகளை செய்ய மறுத்தனர்!!
சவரத் தொழிலாளர்கள்
 வெள்ளையர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்களுக்கும் சவரம் செய்ய மறுத்தனர்!!
சலவைத் தொழிலாளர்கள் அவர்களுக்கு துணிகளை சலவை செய்ய மறுத்தனர்!!

கடுமையான உறுதியான சமூக புறக்கணிப்புக்கு உள்ளான வெள்ளையர்கள் ஊருக்குள் தங்க பயந்து
அலுவலகங்களிலேயே தங்க ஆரம்பித்தனர்.

இந்தப் போராட்டம் ஆங்கிலேயர்களை பணியவைத்தது.
முடிவில் Coral Mill strategy.  ‘கோரல்மில்போராட்டம் வெற்றி பெற்றது!!

வக்கீல்கள் நீதிமன்றங்களை புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர்.  மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்ட்த்தில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்ட்த்தில் ஈடுபடுகின்றனர். இதுவும் ஜனநாயக் வழியிலான போராட்ட முறை மத்திய மதவாத பாஜக அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் புறக்கணிப்பு போராட்டங்களை கையில் எடுப்பது அக்கிரமக்கார அரசுக்கு புத்தி வர உதவலாம்.
அக்கிரம்ம் செய்கிற அரசுகளுக்கு எதிராக மக்கள் திட்டமிட வேண்டிய வழிமுறைகளில் ஒன்று புறக்கணிப்பு போராட்டமாகும். அது அதிக சேதரமில்லாமல் வெற்றியை பெற்றுத் தரும். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!


(மக்கா முக்ர்ரமாவின் புதிய வணிகப் பகுதியான அஜீஜிய்யா விலிருந்து.. anbudan.

No comments:

Post a Comment