வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 30, 2022

உதய்பூர் படுகொலை கண்டிக்கத் தக்கது.

இஸ்லாம் நியாயமற்ற முறையில் நடைபெறும் கொலைகள் எதையும் வன்மையாக கண்டிக்கிறது.

 ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ) [ الأنعام : 151 ] 

அதை பாவங்களில் கொடிய பாவம் என்கிறது.

قال رسول الله صلى الله عليه وسلم" لا يزال المؤمن معنقا صالحا ما لم يصب دما حراما ، فإذا أصاب دما حراما بلح

உலக மனித வரலாற்றில் முதல் பெரும் தவறு கொலையே

ஒரு சட்டவரையறை ஒப்புக் கொண்டு வாழ்கிற எவரையும் சட்ட்த்தை மீறி கொலை செய்வது பெரும் குற்றமே!

وَعَنْ عَبْدِاللَّهِ بْنِ عمر رضي الله عنهما، عَنِ النَّبِيِّ ﷺ قَالَمَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا لَيُوجَد مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا. أَخْرَجَهُ الْبُخَارِيُّ.

 

பெருமானார் (ஸல்) அவர்கள் சில காரிகளை ஒரு ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த ஊருக்கு சென்ற போது அவ்வூர்க் காரர்களை அவர்களை அநியாயமாக கொலை செய்து விட்டனர். இந்த சூழலில் அந்த குடும்பத்தை சார்ந்த ஒருவரை அன்சாரி ஒருவர் மதீனாவின் எல்லையில் கண்டார். உடனே அவரை கொன்று விட்டார் . பெருமானார் (ஸல்) இதை ஏற்கவில்லை. மதீனாவில் முஸ்லிம்களுடன் உடன்படிக்கை செய்திருந்த பனூநுழைர் குலத்தாருக்கு (அவர்களை சந்திக்கத் தான் அந்த மனிதர் வந்திருந்தார்.) இதற்குரிய இழப்பீட்டை தரவேண்டும் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆளாளுக்கு கத்தியை கையிலெடுத்துக் கொண்டால் பிறகு நாடு நாடாக இருக்காது.

குறிப்பாக சிறுபான்மையினத்தவர் கையில் கத்தி ஏந்துவதுவதை விட மாற்று வழிகளை யோசிப்பதே சரியானது.

பிராமணர்கள் அவர்களுக்கு எதிரானவர்களை எவ்வளவு நாசூக்காக நகர்த்தி விடுகிறார்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கிருஷ்ணா லால் என்பவர் படுகொலை செய்யப் பட்டிருப்பது ஒரு சர்ச்சையாகியிருக்கிறது. இன்னொரு வார்த்தையில் சொல்லப் போனால் அது திட்டமிட்டு பெரும் சர்ச்சையாக்கப் படுகிறது.

கடந்த 7 அண்டுகளில் நாடு முழுக்க பல இடங்களிலும் இந்துத்துவ சக்திகளால அரசு ஆதரவோடு பல முஸ்லிம்கள் கொல்லப் பட்டார்கள். பிரிட்ஜில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி ஒரு முதியவரை கொலை செய்தார்கள். டிரைனில் பெருநாளுக்கு துணி வாங்கச் சென்று கொண்டிருந்த ஒரு ஹாபிழ் இளைஞனை டிரைனிலிருந்து தள்ளிவிட்டு கொன்றார்கள்.  இது போல ஏராளமான  நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அப்போது மீடியாக்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பு பற்றி பெரிய விவாதம் எதையும் நடத்த வில்லை. இப்போது ஒரு ஹிந்து கொல்லப் பட்டவுடன் இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொய்யாக கதறுகிறார்கள்.

உண்மையில் இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் மிகப்பெரிய நல்லிணக்கத்தோடு தான் வாழ்ந்து வருகிறார்கள்.

அதை சகித்துக் கொள்ள முடியாத இந்துத்தவ சக்திகள் அரசியல் ஓட்டுப் பொறுக்குவதற்காக சண்டைகளை உருவாக்கிறார்கள் என்பதே எதார்த்தமாகும்.

இத் ஊரறிந்த இரக்சியமாக இருக்கிறது. இதை பகிரங்கமாக சொல்ல அவர்களே தயங்குவதும் இல்லை.

உண்மையில் உதய்ப்பூரில் தற்போது நடைபெற்ற கொலைக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

ஏனெனில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு சொன்ன இரண்டு பாஜக காரர்களை  கைது செய்யாமல் மத்திய அரசு பாதுகாத்துவருவதே நாடு முழுவதும் பல தரப்பட்ட கொந்தளிப்பை ஏற்படு வதற்கு காரணமாகும்.

இப்போது கொலை செய்யப் பட்டுள்ள கிருஷ்னா லால் முஹம்மது நபியை அவதூறாக பேசிய நிபுர்ஷர்மாவுக்கு ஆதரவாக .மீடியாக்களில் செய்தி வெளியிட்டு உள்ளார். இதற்காக அவர் மீது ராஜஸ்தான அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த ஜூன் 10 ம் தேதி அவர் கைது செய்யப் பட்டுள்ளார். ஆனால் 17 ம் தேதி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதுவே ஒரு தரப்பினரிடையே பெரும் கோவம் எழக் காரணமாகும்.

மத்திய அரசு கடந்த மாத்த்தில் இது விசயத்தில் சர்ச்சை கிளம்பிய போதே சரியான நடவடிக்கை எடுத்த்ருக்குமானார்ல் இந்த விவகாரம் தொடர்ந்திருக்காது.  அதே தேதியில் தான் கொலை கார்ர்கள் என்று குற்றம் சாட்டப்படுவோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

நிபுர் ஷர்மாவையும் ஜிண்டாலையும் மத்திய அரசு பாதுகாத்து வருவது அவர்களை சமூக விரோத சக்திகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அது வே நாடில் மத மோதல்களை ஏற்படுத பாஜ செய்யும் கடந்த கால வழிமுறையாகும்.

வழக்கை சரியான கோணத்தில் கொண்டு போகாமல் கொலை யாளிகள் ஒருவருக்கு பாக்கீஸ்தான் தொடர்பு இருக்கிறது என்று என் ஐ ஏ கூறுகிறது. அப்படியானால் இப்படியான ஒரு கொலை நடை பெறு வதை என் ஐ ஏ வால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுதுகிறது.

இன்னொரு வார்த்தையில் இந்தக் கொலையின் பின்னணியில் கூட மத்திய அரசு இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஏனெனில் கிருஷ்னலாலுக்கு பாதுகாப்பு கோரி பல முறை மனு செய்தும் மத்திய அரசு அதற்கு இணங்கவில்லை. அது இந்தக் கொலையில் மத்திய அரசின் பங்கு என்ன என்ற கெள்ளிவியை எழுப்புகிறது.

 

எப்படி இருப்பினும்

நியாயமற்ற கொலை என்பது வன்மையாக கண்டிக்க தக்கது.

அதே நேரத்தில் பெருமானாரை அவமதித்தவர்களை தண்டித்த பிறகு மத்திய அரசு மற்ற நியாயங்களுக்கான நடவடிக்கை இறங்க வேண்டும்.

 

ஆனால் தறோதைய மத்திய அரசு தனது அனத்து தவறுகளையும் மறைப்பதற்காக தொடர்ந்து பிறர் மீது குற்றம் சாட்டுவதை போலவே இப்போதும் குற்றம் சாட்டி வருகிறது.

உண்மையில் இந்த்துவ சக்திகளுக்கு தெரிந்தே இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.

இதில் நாட்டில் அமைதியை சீர்குலைப்போரை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு கொலைகளை தடுப்போம்  என்று மத்திய  அ ரசு கூறுவது மது அருந்தி விட்டு காரோட்டுவோம் என்று கூறுவது போல அபத்தமானது.

மத்திய அரசு இப்போதாவது முஹம்மஹு ந்பி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நிருபருக்கு சரியான தண்டனை வழங்கப் பட வேண்டும்

இந்தப் படுகொலை விவகாரத்தில் கூட மற்றொரு சந்தேகம் எழுகிறது.

நிபுர் ஷர்மா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரிலிருந்து தப்பிப்பதற்காக மத்திய அரசின் உளவுத்துறையே இப்படி இருவரை தூண்டு விட்டு பிரச்சனையை திசை திருப்ப பார்க்கீறது என்ற குற்றச் சாட்டும் இருக்கிறது.

 

என்வே நாட்டில் முஸ்லிம்கள் மானாவாரியாக கொலை செய்யப் பட்ட போதெல்லாம் வாய் திறக்காமல் வேடிக்கை பார்த்து விட்டு ஒரு படுகொலை நடைபெற்றவுடன் அதை பெரிது படுத்தப் பார்க்கும் முயற்சியானது ஒரு அரசியல் நாடகமாகவே அமையும்.

இதற்கப்பால் முஸ்லிம்களுக்கு சொல்லப்படுவதற்கு ஒரு செய்தி உண்டு .

அது என்ன வெனில் 

தன்னிஷ்டத்திற்கு உயர்த்தப்படும் கத்தியால் ஒருக்காலும் சமுதாயத்திற்கு நன்மை ஏற்படாது.   

 

  

 

 

 

 

 

 

 


1 comment: