வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 23, 2022

அக்னிபாத்

 இஸ்லாம் ராணுவச் சேவையை பாராட்டுகிறது.

وَأَعِدُّولَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدْوَّ اللّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لاَ تَعْلَمُونَهُمُ اللّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُواْ مِن شَيْءٍ فِي سَبِيلِ اللّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لاَ تُظْلَمُونَ)

மார்க்கத்திற்காகவும் நாட்டிற்காகவும், நீதியை நிலைநாட்டிட மற்ற எதிரிகளுக்கு எதிராகவும் பயிற்சி பெற்று தயார் நிலையில் இருக்க வேண்டும். இதில் செலவழிக்கப் படும் ஒவ்வொன்றுக்கும் உரிய பதில் தரப்படும் என்று அல்லாஹ் வாக்களிக்கிறான்.

தேவைப்படும் நேரத்தில் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை மற்றொரு ஆயத் தெளிவுபடுத்துகிறது. ஒரு சிறப்பான சமூகத்தின் அடையாளம் அது.

(قَالُوا نَحْنُ أُوْلُوا قُوَّةٍ وَأُولُوا بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانظُرِي مَاذَا تَأْمُرِينَ

இந்த வசனத்திலுள்ள குவ்வத் என்ற வார்த்தைக்கு பெருமானார் (ஸல்) விளக்கம் கூறினார்கள்

أنّ رسول الله صلى الله عليه وسلم قرأ هذه الآية: (وَأَعِدُّواْ لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ) على المنبر ثم قال: «ألاَ إنّ القوة الرمي» قالها ثلاثاً.

தற்காலத்திலுள்ள ஆயுதப் பயிற்சிகள் அனைத்தையும் இது எடுத்துக் கொள்ளும் என்று சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்.

: ركوب الخيل، என்பது தரைப்படை கப்பல் படை விமானப்படைக்கான அனைத்து பயிற்சிகளையுக் குறிக்கும் என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அதாவது படை களுக்கான பயிற்சிகள் ஆயுதப் பயன்பாட்டிற்கான பயிற்சிகள் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

மக்களை காத்து நிற்கும் பணியில் பெருமானார் (ஸல்) அவர்கள் முந்தி நின்றார்கள். ஒரு முறை மதீனாவில் ஏதோ சப்தம் கேட்டது. தீரம் மிக்க  சில இளைஞர்கள் வெளியேறி வந்த பார்த்த போது அதற்கு முன்னதாக பெருமானார் அதை பற்றி அறிந்து கொண்டு நின்றார்கள். பயப்படாதீர்! பயப்படாதீர் என்று கூறினார்கள்.

لما سمع أهل المدينة صوتاً قام الشجعان من المسلمين ليروا ما الخبر، فإذا ﷺ على فرس عري قد خرج وسبقهم، ورأى الخبر، واستقصى الأخبار، ورجع، وقال:لن تراعوا، لن تراعوا

அவர்களால் உருவாக்கப் பட்ட முஸ்லிம் சமூகத்தில் உலகின் மிக அற்புதமான வீர்ர்கள் இருந்தார்கள்.

பாரசீக வல்லரச இரானுவ தளபதியின் சபையில் தனது வாளால் அவனது கூடாரத்தின் கம்பளத்தை கிழித்துக் கொண்டு உள்ளே சென்றார் ரிப்யிய்யு பின் ஆமிர் (ரலி). நாங்கள் படைப்புகளை வணங்குபவர்களை படைத்தவனை வணங்குவதின் பால் அழைக்க வந்தவர்கள். அநீதிக்குள்ளான மக்களை நீதியின் நிழலில் வாழ வைக்க வந்தவர்கள் என்ரு கூறிவிட்டு தங்களது எண்ணிக்கை குறைவாக இருப்பதை அவன் சாமாணியமாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்பதற்காக தங்களது மனோ உறுதியை வெளிப்படுத்துகிறார்.  ஒன்று வெற்றி அல்லது சொர்க்கம் என்ற இரண்டு இலட்சியங்கள் மட்டுமே எங்களுக்கு என்று புலப்படுத்துகிறார்.

وهذا الذي قاله ربعيّ بن عامر لرستم لما واجهه وقد تقدم إليه بسيفه يتوكأ عليه على النمارق حتى خرقها بين يدي قائد الفرس وبلغّه الرسالة: نحن جند الإسلام خرجنا لقتالكم لموعود الله في أرضكم إما أن نظفر عليكم، ونظهر عليكم، أو يموت منّا أناس فيذهبون إلى الجنة"

பெருமானாரின் குதிரைகளையும் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒட்டகைகளை திருடிச் சென்ற திருடர்களின் கூட்டத்தை கால் நடையாகவே தனியாக துரத்திச் சென்ற சல்மத் பின் அக்வஃ ரலி அவை ஒவ்வொன்றாக அவர்களிடமிருந்து மீட்டார்

وسلمة بن الأكوع يخرج على رجليه يعدو وراء الذين سلبوا خيل رسول الله ﷺ وإبل المسلمين فيرميهم بسهامه، ويخلص منهم متاع رسول الله شيئاً شيئاً، حتى أجلاهم عن المتاع كله، وعن الماء، وحتى أرهقهم وما معهم، حتى جاءت جنود المسلمين وطلائع المسلمين

அம்ரு பின் ஜமூஹ் ரலி என்ற சஹாபி கால் ஊனமுற்றிருந்த நிலையிலும் வயதான காலத்திலும் இரானுவத்தில் இணைந்து பணியாற்றினார்.

 

உஹது யுத்த்த்தின் போது முஹ்ம்மது நபி (ஸல் ) அவர்களை கொன்று விட்ட்தாக எதிரிகள் ஒரு பொய்யை பரப்பிய போது அதில் திடுக்குற்று பல சஹாபாக்கள் திரும்பிச் செல்ல முயன்ற போது அனஸ் பின் நுழர் (ரல்) அற்புதமாக கோஷமெழுப்பினார். அவர் இறந்து போயிருந்தால் அவர் வழியில் நாமும் இறப்போம் வாருங்கள் என்றார்.

 

أنس بن النضر، في غزوة أحد قال: "قوموا موتوا على ما مات عليه"

 

70 வெட்டுக் காயங்களோடு அவர் ஷஹீதாக்க ப் பட்டுக் கிடந்தார். அவரது விரலை வைத்து அவரது சகோதரி உடலை அடையாளம் கண்டு கொண்டார்.

 

முஸ்லிம் வீர்ர்கள் ஒவ்வொருவரும் தமது திறமையால் அற்புதான் பங்கை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

சலாஹுத்தீன் அய்யூபியின் பெரிய வெற்றிக்கு பின்னணியில் ஒரு இளைஞனது தொழில் நுடப திறன் முக்கியப் பங்கு வகித்தது.

அவர் தனது திறமையான அனுகுமுறையால் முஸ்லிம்களின் மீது தீப்பந்தங்களை எறிந்து கொண்டிருந்த இரண்டு பீரங்கி போன்ற வாகன்ங்களை அழித்தார். அதுவே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த்து என்று கூறுகிறது வரலாறு.  

 

لقد حفظ لنا التاريخ قصصاً أخرى، هذا الشاب في معارك الصليبيين، صلاح الدين لما قاتل الصليبيين على أرض فلسطين كان فيه شاب من المسلمين كان عنده قدرات فنية عالية يتخصص في إحراق أبراج الكفار التي يرمون منها الشهب على المسلمين، فأحرق اثنين منها

 

எனவே முஸ்லிம்கள் இராணுவப் பயிற்சி மற்றும்  இராணுவப் பணிகளில் அக்கறை செலுத்துவது இஸ்லாமின் வரவேற்பிற்குரிய ஒரு செயலாகும்.

 

அந்த வகையில் மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள அக்னி பாத் என்கிற திட்ட்த்தில் இணைந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் எனில் முஸ்லிம்கள் அதில் அக்கறை செலுத்துவது நன்மையானதே. இதில் பல நல்ல வாய்ப்புகள் இருப்பதை நாம் அறியலாம்.

 

மத்தியை ஆளும் பாஜக அரசு மிகப்பெரிய ஒரு சதித்திட்ட்த்தோடு இப்போது அக்னி பாத் என்கிற திட்ட்த்தை கொண்டு வந்துள்ளது.

 

இந்த திட்ட்த்தை கொண்டு வந்த்தன் நோக்கம்  "ராணுவத்தில் அதிகப்படியான இளைஞர்களை சேர்க்க போகிறோம்", "ராணுவ வலிமையை பல மடங்கு பெருக்க போகிறோம்" என்று அரசு கூறுகிறது.

'அக்னிபாத்'. இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 46 ஆயிரம் இளைஞர்கள் ராணுவத்தில் சேரவுள்ளார்கள். அவர்கள் 4 ஆண்டுகள் ராணுவ வீரர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.

இது ஒரு தற்காலிக இராணுவப் பணியாகும். அதனால் முறையான இராணுவ வீர்ரகளுக்கான சலுகைகள் எதுவும் இதில் கிடைக்காது.

இப்போது இருக்கும் நடைமுறைப்படி, குறுகிய கால (short term) ராணுவப் பணியில் சேருபவர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும். அதற்கு மேல் அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் அல்லது பணியில் தொடரலாம். நிரந்தர அடிப்படையில் (Long term) சேருபவர்கள் தாங்கள் ஓய்வுபெறும் வயது வரை ராணுவத்தில் பணிபுரியலாம். இவ்வாறு பணியில் சேருபவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, ராணுவ வீரர் ஒருவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வோ அல்லது ஓய்வோ பெற்று செல்லும் போது, மிகப்பெரிய தொகை (ரூ.1 கோடி வரை) அவருக்கு கிடைக்கும். அதுதவிர ஓய்வூதியப் பலன்களும் அவருக்கு உண்டு.

ஒருவேளை, ஒரு ராணுவ வீரர் பணியில் இருக்கும் போது உயிரிழந்தால் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் அவரது குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும். இதுவே போர் சூழலில் எதிரி நாட்டு வீரர்களிடம் சண்டையிட்டு, நமது ராணுவ வீரர் உயிரிழந்தால் ரூ.5 கோடி வரையிலான தொகையும் ஓய்வூதியமும் அவரது குடும்பத்தினருக்கு நிச்சயம் கிடைக்கும். விருப்ப ஓய்வு பெற்று வெளி வருபவர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் இடஒதுக்கீட்டில் வங்கி உள்ளிட்ட துறைகளில் எளிதில் பணி கிடைக்கும்.

துமட்டுமல்லாமல், பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு விதவை ஒதுக்கீடும் (war widow quota) வழங்கப்படும். இந்த ஒதுக்கீட்டை பெற்றிருக்கும் பெண்ணுக்கு, அரசுத் துறைகள் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் அதிக முக்கியத்துவம் தரப்படும். இன்னும் கூறப்போனால், அவர் தேர்வுகளை எழுதினாலே போதுமானது. வேலை உறுதி

இந்த சலுகைகள் எதுவும் வழங்கப் படாமல் 4 வருடங்களுக்கு பிறகு 11 இலட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்படும். அதை வைத்து பின் திய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்

 

இது இராணுவ வீர்ர்களால் அதிகம் பயன்படும் மாநிலங்களில் பெரு  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிகப் பெரும் செலவாக இருப்பதாக் அந்த செலவை குறைப்பதற்காக இந்த் திட்ட்த்தை கொண்டு வந்துள்ளதாக அரசு கூறுகிறது.

ஆனால் செல்வு குறைப்பு என்ற இந்த நடவடிக்கை இராணுவத்தின் பலத்தை கேள்விக்குள்ளாக்கி விடும். ஏனெனில் ஒரு இராணுவ வீரனுக்கு குறைந்படம் நான்கு ஆண்டுகளுக்கான பயிற்சியாவது அவசியம் என்று முன்னாள் இராணுவத்தினர் பலரும் கூறுகீறார்கள்

இது கவந்த்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றே ஆகும். .

அதே நேரத்தில்  பாஜக் கட்சியை நெருக்கமாக கவனித்து வருபவர்கள் ஆர் எஸ் எஸின் மூளை கொண்டு உருவாக்க் பட்டுள்ள இந்த திட்டம் அவர்களிடம் ஷாகா பயிற்சியை பெற்றவர்களை இன்னும் மேம்படுத்துவதற்காகவும் இரானுவத்தில் அவர்களை நுழைக்கும் ஏற்பாடு. அவர்களுக்கு இன்னும் மேம்பட்ட பயிற்சிகளை வழங்கும் ஒரு ஏற்பாடு. இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் இது அரசு நட்த்தும் ஷாகா பயிற்சி என்கிறார்கள்.

அதனால் சித்தாந்த ரீதியிக் இந்த திட்ட்த்தை சித்தாந்த ரீதியில் நாம் எதிர்த்தாலும் கூட இந்த திட்டத்தை எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு அமுல் படுத்த தொடங்கி விட்டது.

இந்த சூழ்லில் முஸ்லிம் சமூகத்து  இளைஞர்களிலும் இராணுவப் பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இதையும் பயன்படுத்திக் கொள்வதே நல்லதாக அமையும்.

அல்லாஹ் போதுமானவன்

   (மக்கா முகரமா ஹில்டன் சூட் அறை எண் 621 லிருந்து )  

 

 

 

3 comments:

  1. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. கால் சூழ்நிலைக்கேற்ப அருமையான பதிவு

    ReplyDelete
  3. Masha allah dua seinga usthad engalukkum inda bakiyam kidaikanum

    ReplyDelete