வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 16, 2022

பழுதடைந்த பாதகைகளும் பக்குவமான் ஹாஜியும்

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ ۗ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ (197)

1443 ம் ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்டது.

ஹிஜ்ரீ 9 ம் ஆண்டில் இஸ்லாமிய ஹஜ் தொடங்கியது. இது 1434 ம் ஹஜ்ஜாகும்.

கொரோனோ காலத்தின் நெருக்கடியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைவரும் ஹஜ்ஜுக்கு அனுமதிக்கப் படாமல் மிக குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டார்கள். 2019 ம் ஆண்டு 24 இலட்சம் பேர் ஹஜ் செய்தனர். 2020 ல் கோவிட் தொற்று பரவல் காரணமாக பிப்ரவரியில் மக்கா மதீனா நகரங்கள் முழு ஊரடங்கு கட்டு பாட்டுக்குள் இருந்தன. அப்போது மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுன் னபவி ஆகிய இரண்டு புனித தலங்களும் வெளி ஆட்கள் வர இயலாதபடி மூடப் பட்டன. ஹஜ்ஜின் சமயத்தில் சவூதியில் உள்ள அதுவரை ஹஜ் செய்யாத அனைத்து நாட்டினருக்கும் அனுமதிக்கப் பட்டது. 2020 ல் 10 ஆயிரம் பேர் ஹஜ் செய்தனர். அவர்கள் அனைவரும் ஹோட்டல்களில் ஒருவாரம் தனிமைப் படுத்தப் பட்டனர். 20 பேர் கொண்ட ஒரு குழுவாக பிரிக்கப் பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு ஹஜ் முடியும் வரை ஒரு பொறுப்பாளர் நியமிக்கப் பட்டிருந்தார்.

2021 ம் ஆண்டு அதாவது கடந்த ஆண்டு வெளிநாட்டுப் பயணிகளுக்கான தடை தொடர்ந்த போதும் உள் நாட்டிலிருந்த அனைத்து நாடுகளையும் சேர்ந்த 60 ஆயிரம் பேர் அனுமதிக்கப் பட்டனர். 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ். இந்த ஆண்டு ஏப்ரல் 9 ம் தேதி உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் 10 இலட்சம் பேர்  ஹஜ் செய்ய சவூதி அரசு அனுமதிப்பதாக அறிவித்தது.. எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வெளிநாட்டினர் ஹஜ்ஜுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களது மக்கள் தொகை அடிப்படையுல் இந்தோனேஷியாவிலிருந்து ஒரு இலட்சத்து 51 ஆயிரம் பேரும், பாகிஸ்தானிலிருந்து 81,132 பேரும் இந்தியாவிலிருந்து  79,237 பேரும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.  பிரிட்டனிலிருந்து 12,348 பேர், அமெரிக்காவிலிருந்து 9,504 பேர் பிரான்ஸில்ரிந்து 9,268 பேரும் ஹஜ் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து அனுமதிக்கப்பட்ட 79 ஆயிரம் பேரில் சுமார் 57 ஆயிரம் பேர் ஹஜ் கமிட்டி மூலமாகவும் மற்ற 22 ஆயிரம் பேர் தனியார் ஹஜ் நிறுவன்ங்கள் மூலமாகவும் ஹஜ் செய்கின்றனர். ஹஜ் கமிட்டி மூலம் தமிழகத்திற்கு அனுமதிக்கப் பட்ட சுமார் 1700 ஹாஜிகளும் கொச்சி விமானம் நிலையம் வழியாக கடந்த 14 ம் தேதி முதல் 16 ம் தேதிக்குள்ளாக புனித மதீனா நகரம் சென்று சேர்ந்து விட்டனர். அல்ஹம்து லில்லாஹ்

ஆனால் இந்த வருடம் தமிழகத்தை சேர்ந்த ஹாஜிகள் சென்னையிலிருந்து புறப்பட முடியாத படி மத்திய பாஜக அரசு செய்துவிட்டது. தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்ட்தும் பயனிக்கவில்லை.  சென்னை தமிழகத்தின் தலை நகர் என்பதை விட தென்னிந்தியாவின் தலை நகர் என்றால் அது மிகையல்ல. சென்னையை தவிர்த்து விட்டு கொச்சியை புறப்பாட்டு தளமாக மாற்றியது மத்திய பாஜக அரசு புனிதப் பயணிகள் விசயத்தில் கூட வன்மமாக நடந்து கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த உரிமையை மீட்க தமிழக மக்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். எனினும் தமிழக அரசு சார்பாக கொச்சி செல்லும் பயணிகளுக்கு செய்யப் பட்ட ஏற்பாடுகள் காரணமாக மக்களின் கோபம் குறைந்திருக்கிறது, எனினும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தகாகும். இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகள் பெரும்பாலும் முடிந்து விட்டன அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலமாக ஹஜ்ஜுக்கு செல்வோர் பயணமாகி வருகின்றனர்.

அல்லாஹ் இந்த ஆண்டும் ஹஜ்ஜை பாதுகாப்பானதாக ஆக்கியருள்வானாக! அனைவரது ஹஜ்ஜை கபூல் செய்வானாக!  அனைவருக்க்கும் பரிபூரண உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் வழங்கி ஹஜ்ஜின் கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற தவ்பீக் செய்வானாக!  ஹாஜிகள் அனைவரும் நிம்மதியாக தங்களது இல்லங்களுக்கு திரும்ப தவ்பீக் செய்வானாக!

அனைவரது ஹஜ்ஜையும் ஹஜ் மப்ரூர் ஆக ஆக்குவானாக!

ஹஜ்ஜைப் பற்றி சொல்லப் படும் போது மப்ரூர் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுவதை கவனித்த்திருப்பீர்கள்

عن النبي - صلى الله عليه وسلم - أنه قال: الحج المبرور ليس له جزاء إلا الجنة

ஹஜ் மப்ரூர் என்றால் நல்ல ஹஜ் என்று பொருள்

இது மிக ஆழமான புரிதலுக்குரியதாகும்.

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் மட்டுமல்ல செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் கூட தாங்கள் ஹஜ் மப்ரூர் செய்ய வேண்டும் என்றே ஆசைப்பட வேண்டும். ஏனென்றால் அதுவே சரியான ஹஜ்ஜாகும். அப்படி நிறைவேற்றுகிறவரே உண்மையான ஹாஜி ஆவர்/ இல்லை எனில் அவர் பயணி மாத்திரமே!

உமர் ரலி அவர்கள் காலத்தில் ஹஜ்ஜுக்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். ஒருவர் சொன்னார். كم من الحجاج  எவ்வளவு ஹாஜிகள்?

உமர் ரலி அவரை திருத்தினார்கள். كم كم راكب  எவ்வளவு பயணிகள் என்று சொல்லுங்கள்.

நாம் ஹாஜியாக ஆகவேண்டுமே தவிர பயணியாகி விடக் கூடாது. எத்தனை தடவை ஹஜ் செய்தாலும் சரி.

ஹஜ்ஜுக்கு ஆசைப்படும் போதே நமது நிய்யத் சரியாக அமைந்து விட வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

ஹஜ் மப்ரூர்க்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.

وإنما يكون مبروراً باجتماع أمرين فيه

முதலாவது

 أحدهما الإتيان فيه بأعمال البر؛

நன்மைகளை செய்வது என்பதை தான் முதலில் குறிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும்

நன்மைகளை செய்வது என்றால் ஒரு சரியான பொருளில் மனிதர்களாக வாழ்வது என்றே அர்த்தமாகும்.

நன்மைகளை செய்வது என்பதற்கு அறிஞர்கள் விளக்கமளிக்கிறார்கள்

وفي المسند عن جابر بن عبد الله - رضي الله عنهما - عن النبي - صلى الله عليه وسلم - قال: الحج المبرور ليس له جزاء إلا الجنة قالوا: وما بر الحج يا رسول الله؟ قال: إطعام الطعام وإفشاء السلام وفي حديث آخر: وطيب الكلام.

وسئل سعيد بن جبير: أي الحاج أفضل؟ قال: من أطعم الطعام وكف لسانه

பிறருக்காக துஆ கேட்கும் போது கேட்பவரின் பாவம் மன்னிக்கப்படும்.

وعن ابن عباس أن النبي - صلى الله عليه وسلم - كان يطوف مرة إذ سمع رجلا بين الركن والمقام يقول: اللهم اغفر لفلان بن فلان فقال النبي: من هذا الرجل؟ فقال: فلان أقسم على أن أدعو له بين الركن والمقام فقال الرسول: أبشر فقد غفر لصاحبك.

 

ஹஜ்ஜின் போது பொறுமையாகவும் பெருந்தன்மையாகவும் உதவும் மனப்பான்மையோடும் நடந்து கொள்வதே ஹஜ்ஜை மப்ரூராக்கும் முதல் வழி.

 அருமையானவர்களே! பல இலட்சம் பேரின் பாவங்களை மன்னிப்பது என்றால் அல்லாஹ் அவர்கள் இருக்கும் இட்த்திலேயே மன்னித்து விடலாம்.

 யூனுஸ் அலை அவர்களின் மக்கள் நபியை ஏற்றுக் கொள்ளவில்லை. நபி ஊரை விட்டு வெளியேறினார்.  ஆனால் யூனுஸ் அலை அவர்களின் மக்கள் அந்த ஊரிலிருந்தே அல்லாஹ்வை அழுது பிரார்த்தித்தனர். வேதனைக்கான நாள் குறிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர்கள் அனைவரையும் மன்னித்தான்.  

 அது போல மற்றவர்களையும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியும்.

அப்படியிருக்க உலகின் அனைத்து பாகத்திலுமுள்ள மக்களை இவ்வளவு தூரம் அல்லாஹ் அழைத்து வர காரனம் என்ன என்றால் ?

 நாம் சர்வதேச மனித சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக வாழும் பழக்கத்தை ஏற்படுத்துவதே என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 எனவே ஹஜ் மப்ரூரின் முதல் நிபந்தனை மக்காவில் மினாவில் அரபாவில் முஸ்தலிபாவில் நல்ல மனிதராக நடந்து கொள்வதே!

 மினாவில் சில நேரத்தில் சிலர் தங்களது பக்கத்து படுக்கையை தூக்கி வெளியே எறிந்து விடுவார்கள். கடைசியாக வருகிறவர் தனது படுக்கையை காணோம் என தேடிக் கொண்டிருப்பார்.

 இது போல இன்னொருவர் மற்றவரை தாறுமாறாக ஏசிக் கொண்டிருந்தார். காரணம் வேறொன்றும் இல்லை. அவர் ஒதுக்கிவைத்திருந்த இருக்கையில் வேறு இடமில்லாததால் அவர் உட்கார்ந்து விட்டார். அவ்வளவு தான்.

 ஹஜ் மப்ரூர் ஆக இத்தகைய குணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 ஹஜ் மப்ரூர் ஆக இரண்டாவது நிபந்தனை

فعل الطاعات

ஹஜ்ஜில் நிறைவேற்றப் பட வேண்டிய அமல்கள் அனைத்தையும்  சரியாக நிறைவேற்ற வேண்டும்.    

 ஹஜ்ஜுக்காக செய்யப்படும் ஒரு தவாபு உண்டு. அதற்குப் பெயர் தவாபே இபாழா – அல்லது தவாபே ஜியாரா என்பது.

 ஹஜ்ஜின் தொடர்ச்சியான அலைச்சல்களுக்கு இடையே இதை நிறைவேற்றுவது சற்று சிரமமே! ஒரு சிலர் இந்தக் கடமையை சரியாக நிறைவேற்றாமல் இருந்து விடுகிறார்கள். எனக்கு கால் வலிக்கிறது, முடியாது என்கிறார்கள்.

அதே போல ஊருக்கு திரும்பும் போது செய்யப் படும் தவாபுல் விதா வாஜிபானதாகும். பயணத்திற்கு தயாராகிற மனோ நிலையில் இருக்கிற சிலர் இதை தேவையற்றதாக கருதிக் கொள்கிறார்கள். கணவன் தவாபு செய்து விட்டால் அதுவே மனைவிக்கு போதும் என்று நினைப்பவர்களும் உண்டு.

 இவை அறியாமலும் உடல் ஒத்துழைக்காததாலும்  செய்கிற பிழைகளாகும். வேண்டுமென்றே செய்கிறவை அல்ல. என்றாலும் ஹஜ்ஜில் நிறைவேற்றப்பட வேண்டிய அமல்களை நிறைவேற்றினால் அல்லாவா ஹஜ் கபூல் ஆகும் ?

 فعل الطاعات  என்பதில் ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றுவது என்று மட்டும் அர்த்தமாகாது. ஹஜ்ஜின் காலத்தில் முடிந்தவரை அதிகமதிகம் இபாத்த்த செய்ய வேண்டும் என்பதே கருத்தாகும். ஒவ்வொரு நிமிட்த்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமான நேரத்தில் ஹரம் களில் கழிக்க முயற்சிக்க வேண்டும்.

 10 உம்ரா செய்வேன் 50 தவாபு செய்வேன் என்று நிய்யத்து வைத்துக் கொண்டு அமல்களில் ஈடுபடுவது சிறப்பானது.

ஒரு கத்தம் முடிப்பேன். ஒரு நாளாவது நோன்பு வைப்பேன் இவ்வளவு தர்மங்கள் செய்வேன் என்று நிய்யத் வைத்துக் கொள்வதும் சிறப்பானது.

 இமாம் ஜமஹ்ஷரீ என்று ஒரு அறிஞர் உண்டு. திருக்குர் ஆனுக்கு கஷ்ஷாப் என்ற விரிவுரையை எழுதியவர். அவரை ஜாருல்லாஹ் அல்லாஹ்வின் பக்கத்து வீட்டுக்காரர் என்று அழைப்பார்கள். அதற்கு காரணம். ஹஜ்ஜுக்கு செல்லும் போது அவர் கஃபாவை விட்டு அகல மாட்டார். கஃபாவிற்கு அருகிலேயே இருப்பார். ஏதோ கஃபாவை ஒட்டிக் கொண்டிருப்பவர் போலவே நடந்து கொள்வார்.

அதனால் அந்தப் பெயர் வந்த்து.

 காரி ரஹீம் பானிபத்தீ (ரஹ்) கூறுகிறார். நான் ஹஜ்ஜில் இருந்த காலமெல்லாம். முதல் சப்பில் தக்பீர் தஹ்ரீமாவுடனேயே தொழுதிருக்கிறேன்.

எண்ணிப்பாருங்கள்! அப்படியானால் அவர் ஓய்வெடுக்க தனது அறைக்கு எப்போது சென்றிருப்பார்?

 70 வயது முதியவர் ஒருவர் தான் தினசரி 70 தவாபுகள் செய்ததாக பதிவு செய்திருக்கிறார். 70 தவாபுகள் என்றால் 490 சுற்றுகள். அது மட்டுமல்ல. 140 ரகாஅத்துகள்!  

 ஹஜ்ஜை அமல்களால் நிரப்புவது என்பதற்கு ஒரு உதாரணம் இது.

 இப்படி நிரப்புகிற போது ஹஜ் மப்ரூர் ஆகிவிடும்.

 நாம் இப்படி ஒரு ஹஜ்ஜுக்கு ஆசைப்பட வேண்டும்.

 இன்று ஹஜ் மிகவும் வசதியானதாக மாறிவிட்டது. நமது அமல்கள் இன்னும் அதிகமாக மாற வேண்டும்.

 முந்தைய காலத்தில் ஹஜ் மிகவும் சிரம்மானதாக இருந்த்து. ஆனால் அவர்கள் நிறைய அமல் செய்தார்கள். இன்று நாம் வசதியாக ஹஜ்ஜுக்கு செல்கிறோம். 5 மணி நேரத்தில் ஜித்தா அங்கிருந்து 1 மணி நேரத்தில் மக்கா அதுவும் ஏசி பஸ்களில் ஏசி தங்கும் அறைகளில் என மிக வசதியாக ஹஜ் அமைந்திருக்கிறது.

 ஒரு பெரியர்வர் சொன்னார். ஒரு காலத்தில் பாதைகள் பழுதாக இருந்தன. ஆனால் பயணி பக்குவமானராக இருந்தார். இப்போது பாதைகள் பக்குவமாகிவிட்டன. பயணி பழுதாக இருக்கீறார்.

 அவ்வாறு இல்லாமல் நல்ல மனிதராக அதிகமான அமல்களுடன் ஹஜ்ஜை நிறைவேற்ற நாம் ஆசைப்படுவோம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

No comments:

Post a Comment