வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 09, 2022

முஹம்மது நபி (ஸல்) முஸ்லிம்களின் உயிரை விட மேலானவர்

 إِنَّا كَفَيْنَٰكَ ٱلْمُسْتَهْزِءِينَ

நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களது பெயரே முஹம்மது.

முஹம்மது என்றால் அதிகம் புகழப்படுபவர் என்று பொருள்.  எதிரிகளால் கூட புகழப்படுபவர் என்று அதன் கருத்து விரியும்.

முஹம்மது நபியின் வாழ்வு அப்படித்தான் எதிரிகளால் கூட புகழப்படும் வாழ்வாக இருந்த்து.

அபூஜஹல் கூட பெருமானாரை உண்மையாளர் என்று ஒப்புக் கொண்டிருந்தான்.

யாசீன் அத்தியாயத்தின் இந்த வசனத்தின் விரிவுரையில் ஒரு செய்தி உண்டு,

قَدۡ نَعۡلَمُ إِنَّهُۥ لَیَحۡزُنُكَ ٱلَّذِی یَقُولُونَۖ فَإِنَّهُمۡ لَا یُكَذِّبُونَكَ وَلَـٰكِنَّ ٱلظَّـٰلِمِینَ بِـَٔایَـٰتِ ٱللَّهِ یَجۡحَدُونَ

 

நீங்கள் உண்மையாளர் என்று தெரிந்த பிறகும் நம்பமறுப்பவர்கள் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.

 

தப்ஸீர் இபுனு கஸீரில் இதற்கான விளக்கத்தில் இப்படி வருகிறது.

 

عن علي [ رضي الله عنه ] قال : قال أبو جهل للنبي - صلى الله عليه وسلم - : إنا لا نكذبك ، ولكن نكذب ما جئت به ، فأنزل الله( فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون )

 

 عن أبي يزيد المدني ; أن النبي - صلى الله عليه وسلم - لقي أبا جهل فصافحه ، قال له رجل : ألا أراك تصافح هذا الصابئ ؟ ! فقال : والله إني أعلم إنه لنبي ، ولكن متى كنا لبني عبد مناف تبعا؟ ! وتلا أبو يزيد( فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون )

 

முஸ்லிம் அல்லாத பலரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பை முஸ்லிம்களேகூட சிந்திக்காத வகையில் வகை வகையாக பேசுகிறார்கள்.

 

 

ஸ்காட்லாண்டின் பிரபல எழுத்தாளர் Dr. Marcus Dods கூறுகிறார். அவர் கிருத்துவ திருச்சபைகளை பற்றி கடுமையாக விமர்சிப்பவர்.

 

"Certainly he had two of the most important characteristics of the prophetic order. He saw truth about God which his fellowmen did not see, and he had an irresistible inward impulse to publicize this truth

 

"நிச்சயமாக அவரிடம் தீர்க்க தரிகளுக்குரிய இரண்டு குணங்கள் இருந்தன.  அவருடைய சக மனிதர்கள் அறியாத கடவுளைப் பற்றிய உண்மையை அவர் அறிந்திருந்தார்.  அந்த உண்மையைப் பகிரங்கப்படுத்த அவரிடம் தடையற்ற ஒரு உத்வேகம் இருந்தது. ."

 

ஜான் வில்லியம் தராப்பர்

in Arabia, the man who, of all men, has exercised the greatest influence upon the human race,"

 

மனித இனத்தின் மீது மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய்வர்

 

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தைச் சார்ந்த புரபஸர்  Caesar E. Farah கூறுகிறார்.

 

While our knowledge of men who filled similar roles from Moses to Zoroaster to Jesus is shrouded with legend, often incomplete and frequently colored, and while the accounts of Muhammad's life and deeds contain their share of incompleteness and coloring, the fact remains that he was the first to live and preach in the full light of history.

 

மூஸா முதல் ஈஸா வரை ஒரே மாதிரியான பெருமக்களின் வாழ்வு வண்ணமயமானதாக இருந்தாலும் அவை பெரும்பாலும் மரபு வழிக்கதைகளால் மூடப்ப்ட்டிருந்தன. முஹம்து வின் வாழ்விலும் பல வண்ணச் செய்திகள் இருந்தாலும் அவருடைய வாழ்வும் பிரச்சாரமும் வரலாற்றின் முழு வெளிச்சத்தில் நிரப்பப் பட்டிருந்தது.

 

கிருத்துவ உலகம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அப்பட்டமான  பொய்யான குற்றச் சாட்டுகளுக் வருந்தி An Apology for Mohammad and the Koran" ( முஹம்மதிடமும் குர் ஆனிடமும் ஒரு மன்னிப்பு கோரல்) என்று நானூறு வருடங்களுக்கு ஒரு நூலை எழுதிய John Davenport கூறுகிறார்.

 

"It is strongly corroborative of Mohammad's sincerity that the earliest converts of Islam were his bosom friends and the people of his household, who all intimately acquainted with his private life, could not fail to have detected those discrepancies which more or less invariably exist between the pretensions of the hypocritical deceiver and his actions at home."

 

இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட்து அவரது குடும்பத்தினரும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் என்பது முஹம்மதுவின் உண்மைத் தன்மையை வலுவாக உறுதிப்படுத்துகிறது. எதார்த்த்திற்கும் நடிப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை அவர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.  

 

பிரபல கிருத்துவ பாதிரி Bosworth Smith கூறுகிறார்.

 

"Head of the State as well as of the Church, he was Caesar and Pope in one; but he was Pope without Pope's pretensions, Caesar without the legion of Caesar. Without a standing army, without a bodyguard, without a palace, without a fixed revenue, if ever any man had the right to say that he ruled by the right divine,

 

அவர் அரசுத்தலைவராக இருந்த்து போல மத்தலைவராகவும் இருந்தார். ஆனால் பாசாங்குத்தனம் இல்லாத மத்த்தலைவர். மகுடம் சூடிக் கொள்ளாத அரசர். அவரிடம் நிலையான ராணுவம் இருக்கவில்லை. மெய்க்காப்பாளர் இல்லை. அரண்மனை இல்லை. நிலையான வருமானம் இல்ல்ல. தெய்வீகத்தால் வழி நட்த்தப்பட்டவர் என்று சொல்ல முஹ்ம்மதை தவிர வேறெவரும் இல்லை.

 

உலகம் இப்படி பெருமானாரை புகழ்ந்து கொண்டிருக்க காழ்ப்புணர்சி கொண்ட மடையர்கள் மாத்திரமே நபி (ஸல்) அவர்களை குறை கூறுவார்கள்.

 

ஏனெனில் பெருமானார் (ஸல்) அவர்களால் இந்த உலகம் அன்றிலிருந்து இன்று வரை நன்மை அடைந்திருக்கிறதே தவிர தீமைகளுக்கு உள்ளானதில்லை.

 

அநீதியாக அவர் யாரைம் தண்டித்த்தில்லை. ஆனால் நீதிக்கு மேலே அவர் பலரையும் மன்னித்தார்.

 

அக்கிரம்மாக அவர் யாரையும் ஒதுக்கி வைத்தது இல்லை. ஆனால் அக்கறையோடு எதிரிகளையும் அவர் அரவணைத்தார்.

 

எவர் மனதையும் அவர் புண்படுத்தியதில்லை. அனைவரையும் அவர் பண்படுத்தினார்.

 

இப்படிப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து தப்பாக கருத்துப் பேசுவோர் மடையர்களாகத் தவிர வேறெப்படி இருக்க முடியு,

 

பாரதீஹ ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நிருபம் சர்மா பெருமானார் அவர்கள் ஆயிஷா ரலி அவர்கள்ள திருமணம் செய்த்த்தைப் பற்றி ஒரு தொலைக் காட்சி விவாத்த்தில் அவமரியாதையாக பேசினார்.  இலண்டனில் படித்தவராம். ஆனால் பெருமானாரைப் குறை படுத்த முயற்சித்த்தில் இன்று எவ்வளவு பெரிய முட்டாளாக அறியப்படுகிறார்.

 

இந்து மத சகோதர்ர்களே அவருக்கு பதிலளிக்கிறார். ராம்பிரான் 6 வயதில் சீதயை திருமணம் செய்தார் என்று தான் ராமாயணம் கூறுகிறது. அதனால் ராமரை நீ அமதிப்பாயா என்று கேட்கிறார்க்ள்

 

நிருபமாவின் மெஸேஜை தில்லி பிரதேச பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர்

ஜிண்டால் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து டிவிட்டரி பதிவிட்டிருக்கிறார். அவரை ஹிந்து சகோதர்ர்களே கலாய்க்கிறார்கள். தசரத சக்ரவர்த்தி 300 பெண்களோடு வாழ்ந்தார் என்று புராணம் கூறுகிறது. நீயெல்லாம் முஹம்மதை பற்றி பேசலாமா என்று எள்ளி நகையாடுகிறார்கள்.

 

இது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு அவரை ஒருவர் இகழ முயற்சித்தால அவரைப் புகழ ஒரு இலட்சம் அவர்களது சமூகத்திலிருந்தே வருவார்.

 

பாஜக கட்சியை சார்ந்த பலரும் இதே பாணியில் முஸ்லிம்களை துன்புறுத்துக் நோக்கில் தொடர்ந்து பேசி வந்தனர். தொலைக்காட்சி ஊட்கங்களும் அதை வெளியிட்டு வந்தன. ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது போல இப்போது உலக நாடுகள் பாஜகவினரின் இந்த இழிவான போக்கை கடுமையாக க்ண்டித்துவருகின்றனர்.

 

பாஜக அவர்களை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம் என்று கூறினாலும் அரசு அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கத்தார் குவைத் உள்ளிட்ட நாடுகள் கோரிக்க்க வைத்துள்ளது.

 

பாஜக கட்சி நியாயமாக இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். அதுவே  நமது நாட்ட்டின் மரியாதையை காப்பாற்றும் வழி.

 

அதே போல பயங்கரவாத நடவடிக்கை தடுப்புச் சட்ட்த்தில் கீழ் அவர்கள் இருவரையும் மத்திய அரசு உடனே கைது செய்ய வேண்டும். பிரச்ச்னை பெரிய அளவில் தொடர்ந்து வளர ஆரம்பித்த பிறகு இப்போதுதான் தில்லை அரசு வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் பல முஸ்லிம்கள் மீதும் சிவலிங்கத்தை குறை பேசியதாக வழக்கு பதிந்திருக்கிறது. வன்முறையாக பேசினார்கள் என்று பலர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை அரசின் பாரபட்சமான போக்கையே வெளியுலகிற்கு அம்பலப் படுத்து, உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டவர்களை உடனடியாக கடுமையான சட்ட்த்தின் கீழ் கைது செய்தால் மாத்திரமே நாங்கள் எல்லா மதங்களையும் மதிக்கிறோம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்க முடியும்.

 

இல்லை எனில் நமது நாட்டின் பெருமை இனியும் தலை குணிவுக்கு ஆளாகிவிடும்.

 

முஹம்மது நபி (ஸல் அவர்களை நியாயமற்று விமர்சிப்போர் எவருக்கும் ஏற்படும் முடிவு அது.

 

திருக்குர் ஆனின் إِنَّا كَفَيْنَٰكَ ٱلْمُسْتَهْزِءِينَ என்ற வசனத்திற்கு விளக்கம் எழுதும் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்

 

هذا وعد من الله لرسوله، أن لا يضره المستهزئون، وأن يكفيه الله إياهم بما شاء من أنواع العقوبة. وقد فعل تعالى فإنه ما تظاهر أحد بالاستهزاء برسول الله صلى الله عليه وسلم وبما جاء به إلا أهلكه الله وقتله شر قتلة

قال الإِمام الرازى : واعلم أن المفسرين قد اختلفوا فى عدد هؤلاء المستهزئين ، وفى أسمائهم ، وفى كيفية طريق استهزائهم ، ولا حاجة إلى شئ منها . والقدر المعلوم أنهم طبقة لهم قوة وشوكة ورياسة ، لأن أمثالهم هم الذين يقدرون على إظهار مثل هذه السفاهة ، مع مثل رسول الله صلى الله عليه وسلم فى علو قدره ، وعظم منصبه ، ودل القرآن على أن الله - تعالى - أفناهم وأبادهم وأزال كيدهم .

 

முஸ்லிம் சமுதாயம் எதையும் பெருத்துக் கொள்ளும் முஹம்மது நபிக்கு எதிராக ஒரு விரல் உயர்ந்தால் கூட பொருத்துக் கொள்ளாது.

காரணம் முஹம்மது நபி (ஸல்) முஸ்லிம்களின் உயிரை விட மேலானவர்

No comments:

Post a Comment