வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 02, 2022

சோதனைக் களத்தில் இஸ்லாம்

 ஒவ்வொரு கால கட்ட்த்திலும் ஏதோ ஒரு வகையான போக்கு மிகைத்திருக்கும்.

ஒரு காலகட்டத்தில் உணவின் மீது மோகம்

மற்றொரு கால கட்ட்த்தில் அழகு படுத்துக் கொள்ளுதலில் மோகம்,’

இன்னொரு காலகட்ட்த்தில் அலங்கோலப் படுத்திக் கொள்ளுதலில் மோகம்.

ஒரு சந்தர்ப்பத்தில் திருமணத்தின் மீது மோகம். ஒரு காலகட்ட்த்தில் விவாகரத்தின் மீதான மோகம் என ஒவ்வொரு சீசன் இருக்கும்.

உமய்யா மன்னர்களில் ஒருவரின் காலத்தில் மக்கள் ஒருவரை ஒரு சந்தித்தால் இன்று என்ன சாப்பிட்டீர்கள் என்று விசாரித்துக் கொள்வார்களால், இன்னொரு மன்னரின் காலத்தில் நீ எத்தனை திருமணம் செய்திருக்கிறாய என்று விசாரித்துக் கொள்வார்களாம். உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹி அவர்களது காலத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தால் இன்று இரவு எத்தனை ரகாஅத் தொழுதீர்கள் என்று விசாரிப்பார்களாம்.

ஒவ்வொரு காலகட்ட்த்திற்கும் ஒரு பேஷன் இருப்பது போல இந்த காலகட்ட்த்தின் பேஷன் ஃபிரீடம் அதாவது சுதந்திரம் என்ற கோஷம்.

இது தனிமனிதர்களின் சிந்தனை செயல்களிலும் சமூகத்தில் அரசியல் நீதி என அனைத்து துறைகளை ஊடுறுவியுள்ளது.

ஒரு கட்டுப்பாட்டை எல்லா நிலையிலும் வலியுறுத்துகிற இஸ்லாம் இந்தச் சூழலில் கடும் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது.

இஸ்லாம் ஒழுக்க நெறிகள் விசயத்தில் மிக கண்டிப்பான நடைமுறைகளை முஸ்லிம்களுக்கு கூறுகிறது.

இஸ்லாம் என்பதே ஒரு முழுமையான ஓழுக்க நெறிகளுக்கான பெயராகும்.

ஒழுக்கம் என்றால் மக்களை புகழுக்குரிய காரியங்களை செய்யத் தூண்டக் கூடியது. ஒழுக்க மீறுதல் என்றால் மக்களை இழிவான காரியங்களை செய்யத் தூண்டக் கூடியது என்று பொருள்/

ما دعا الخلق إلى المحامد ومكارم الأخلاق وتهذيبها.

 

وذكر ابن حجر -رحمه الله تعالى- في شرحه لكتاب الأدب، من صحيح الإمام البخاري -رحمه الله-، قال: الأدب استعمال ما يحمد قولاً وفعلاً.

 

அதன் அடிப்படை அவ்ரத்தை மறைத்தல் என்பதில் தொடங்குகிறது. ஆண்களுக்கு தொப்புளிலிருந்து முழங்கால் வரை உள்ள பகுதி அவ்ரத்தாகும் பெண்களுக்கு முகம் முன்கை பாதம் ஆகியவை தவிர அனைத்தும் அவ்ரத்தாகும், அத்தியாவசியமான சந்தர்ப்பத்தில் தவிர மற்ற நேரங்களில் பெண்களின் குரலும் அவ்ரத்தே என்று இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உடுத்துவதிலிருந்து உண்பது உறவு கொள்வது வரை ஒவ்வொன்றிலும் இஸ்லாம் ஒழுக்க நெறிகளை கூறியிருக்கிறது.

சிறு நீர் கழிக்கும் போது கிப்லாவின் திசையை முன்னோக்கியோ அல்லது முதுகை காட்டியோ உட்காரக் கூடாது என்பது போல …

அந்த நெறிகளில் சிலவற்றை கட்டாயமாக்கியிருக்கிறது சிலவற்றை சிறப்பானது என்று கூறியிருக்கிறது.

பெரியவர்களோடு பேசும் போது பதிலளிப்பதில் மென்மையும் பனிவும் கடைபிடிக்க வேண்டும்.

அல்லாஹ் ஈஸா நபியிடம் உன்னை வணங்குமாறு நீ உன் மக்களிடம் கூறினீரா என்று கேட்பான். அதற்கு இல்லை என்று ஒருவார்த்தையில் அவர் பதில் சொல்ல சொல்லவில்லை, அவரது பதிலில் அதபு மிளிரும்.

أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ ؟ [المائدة: 116

إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ

பிரார்த்தனையில் கூட அதபை கடைபிடிக்க வலியுறுத்தியது குர் ஆன்.

இறைவா எனக்கு உணவு கொடு என்று மூஸா அலை அவர்கள் கேட்கவில்லை.

رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ 

என்றே கேட்டார்கள்.

அல்லாஹ்வோடு இறைத்தூதர்களோடு மதிக்கப் பட வைகளோடு இஸ்லாமிய சட்டங்கள் ஒவ்வொன்றோடும் ஒழுக்கமான நடைமுறைகளை கடைபிடிப்பதை இஸ்லாம் கட்டாயப்படுத்தியுள்ளது.

இன்னும் ஒரு வார்த்தையில் சொல்வதானால் இஸ்லாம் என்றாலே அதபு தான். இதை உலகமும் அறிந்திருக்கிறது.

முஸ்லிம்கள் என்றால் சாப்பிடுவதில் -  வியாபாரத்தில் வீடு கட்டுவதில் என வாழ்வில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதபை பேணுபவர்கள் என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது.

இமாம் அஹ்மது பின் ஹன்பலின் சபையில் ஐயாயிரம் மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள் எனில் அவர்களில் ஐநூறு பேர் ஹதீஸை எழுதுவார்கள் மீதியுள்ளோர் இமாம் அஹ்மதிடமிருந்து அதபை கற்றுக் கொள்வார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இஸ்லாம் கூறிய  ஒழுக்க விதிகள் அனைத்தும் மனிதர்களை புகழுக்குரியவர்களாக சிறந்த மனிதர்களாக வாழ உதவக் கூடியதாகும்.

இஸ்லாம் ஒழுக்க கேடு என்று சொல்லும் எதுவும் மனித குலத்திற்கு இழிவாகவும் கேடாகவும் அமையக் கூடியதாகும்.

அதனால் தான் அதபை மீறும் பல காரியங்களையும் பற்றி பேசுகிற போது பெருமானார் (ஸல்) அவர்கள் அத்தகையோர் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல. என்று கூறியுள்ளார்கள்.

இஸ்லாமின் மிக அழுத்தமான வழிகாட்டுதலாக இருக்கிற ஒழுக்க முறைகளை மற்றவர்கள் விமர்ச்சிக்கிறார்கள் என்பதை கடந்து இப்போது முஸ்லிம்களே அந்த ஒழுக்க விதிகளை பகிரங்கமாக மீறுகிறார்கள். அதை ஒரு பொருட்டே அல்ல என்பது போல நடந்து கொள்கிறார்கள். ஒரு கட்ட்த்தில் இஸ்லாமின் நடைமுறைகளை முஸ்லிம்களே கேலிப்பொருளாக்கவும் கேள்விக்குள்ளாக்கவும் செய்கிறார்கள்

இன்று இஸ்லாமிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்பட்க் கொண்டிருக்கிற சோதனைகளில் முக்கியமானது எதிரிகளால் ஏற்படக் கூடியதல்ல.

முஸ்லிம்களில் சிலரே இஸ்லாமிற்கு  எதிராக கருத்துச் சொல்லவும் இஸ்லாமின் கட்டளைகளுக்கு எதிராக பகிரங்கமாக சவால் விடுமளவு நடந்து கொள்வதாகும்,

கியன்வாபி பள்ளிவாசல் விவகாரம், ஹிஜாப் தடை விவகாரம் , ஆகியவற்றை விட இதுவே இஸ்லாமிற்கு பெரிய சவாலாகும்

நமது இளந்தலைமுறையின் தற்போதைய போக்கு அச்சத்தை தருமளவு மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது.

கேரளாவில் ஒரு முஸ்லிம் இளைஞன் இஸ்லாமை விட கடுமையான பாஸிசம் வேறில்லை என்று பொது வெளியில் கருத்துக் கூற இஸ்லாமிற்கு எதிரான சக்திகள் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறன. அவனது வாதங்களுக்கு கிடைக்கிற பப்ளிசிட்டியில் முஸ்லிம் சமுதாயம் சிக்கலுக்குள்ளாகி வருகிறது.

கோவையில் பகுத்தறிவு சிந்தனை என்ற பெயரில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக கருத்துக்களை பேசியும் எழுதியும் வந்த ஒரு இளைஞன் கொல்லப்பட்டான். இதற்குப் பிறகு நகரில் பகுத்தறிவாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் இப்போது மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஒரு வழக்கின் தீர்ப்பு.

ஆதிலா நஸரீன் என்ற கேரளா மாநிலம் ஆலுவாவை சேர்ந்த 23 வயது  பெண்ணும், கோழிக்கோடு தாமரச்சேரியைச் சேர்ந்த பாத்திமா நூரா என்ற பெண்ணும் சவூதியில் படிக்கும் இடத்தில் பழகி லெஸ்பியன் என்ற தவறான பழக்கத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.

இதையறிந்த பாத்திமாவின் பெற்றோர் அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளனர். 

இந்த ஆண்டு மே 19 தேதி ஆதிலாவும் இந்தியாவிற்கு வந்து தனது தோழியை சந்தித்துள்ளார்.

பாத்திமாவின் பெற்றோர் பாத்திமாவை மீட்டு தங்களுடன் அழைத்த்துச் சென்று விட்டனர். ஆதிலா காவல்துறையினரின் வழிகாட்டுதலின் பேரில் ஹேபியஸ் கார்பஸ் மனுவின் மூலம் பாத்திமாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஆலுவா நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி பெற்றோருடன் இருந்த பாத்திமாவை காவல் துறை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. நீதிமன்றம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய உறவை தொடர அனுமதி உண்டு என்று கூறி ஆதிலாவுடன் பாத்திமா உறவைவை தொடர அனுமதித்துள்ளது. அத்தோடு பாத்திமாவின் பெற்றோர்களால் எந்த இடையூறும் அவர்களுக்கு ஏற்படக் கூடாது என்று எழுதியும் வாங்கியுள்ளது.

இதற்குப் பின்னணியில் தான் தோன்றித்தனமான உறவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புக்களும் காவல் துறையும் இருக்கிறது.

ஆதிலா தனக்கு ஹேபியஸ் கார்பஸ் மனு குறித்து முன்பு எதுவும் தெரியாது எனவும் காவல்துறையினர் தான் இது பற்றி தனக்கு கூறியதாகவும் கூறினார்.  

தனது சொந்தக் குடும்பத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அனுமதிப்போமா சீர்திருத்த முயற்சிப்போமா என்பதை சிந்திக்காத காவல் துறை ஒரு முஸ்லிம் விவகாரம் என்றவுடன் பெற்றோர்களை மிரட்டி காரியம் சாதித்திருக்கிறது.

பெரும்பாலான ஒழுக்க மீறல் விவகாரங்களில் நாடு முழுவதிலும் காவல்துறை இப்படித்தான் நடந்து கொள்கிறது.

இப்போதுள்ள நீதிமன்றங்களின் மனோ நிலை, மனித உரிமை அமைப்புக்களின் போக்கு எதுவும் கலாச்சாரம் பண்பாடு குறித்து கவலைப்படுவதற்கோ அக்கறை செலுத்தவோ தயாராக இல்லை. இளைய சமுதாயமும் அதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு செயல்படும் துணிச்சலை பெற்றிருக்கிறது.

சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் நியாயப்படுத்தி விட் முடிகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

இன்றைய இந்தப் போக்கினால் இஸ்லாம் வெளி உலகில் கேள்விக்குள்ளாகிறது. மக்களை கட்டுப் படுத்தும் அதன் செல்வாக்கு குறைந்து வருவதாக எதிரிகள் பேசு வது அதிகரித்திருக்கிறது.

ஒரு உண்மையில் இஸ்லாமிற்கு இதனால் எந்த குறையும் இல்லை.

ஏனெனில் இஸ்லாமை எதிர்ப்போர் அல்லது இஸ்லாமிய நடைமூறைகளை மீறுவோர் எந்த அளவு அதிகரிக்கிறார்களோ அதை விட பன் மடங்கு இஸ்லாமை ஏற்போரும் அதன் சட்ட திட்டங்களுக்கு தாமாக உட்படுவோரும் அதிகரித்தே வருகிறார்கள்.

சமீபத்திய உதாரணம் பாத்திமா சபரிமாலா. அவர் சிறந்த ஒரு கல்வியாளாராக சமூகப் போராளியாக – மாணவர்கள் இளம் பெண்களீன் உரிமைக்காக சமரசமின்றி போராடுபவராக இருந்தார். இஸ்லாமை தழுவிய பிறகு முழு பர்தாவில் இஸ்லாமின் பிரச்சாரகா இப்போது மாறியிருக்கிறார்.

எனவே இஸ்லாமிற்கு பிரச்ச்னை எதுவும் இல்லை.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் ஆலிம்களும் ஜமாத்துகளும் இஸ்லாமை விரும்பும் முஸ்லிம்களும் ஏன் கண்ணியமான வாழ்வை விரும்பும் ஒவ்வொரு தனி மனிதரும் தமது குடும்பத்தில் இப்படி ஒரு அவலம் நடப்பதை தடுப்பதற்கான வழிகள் குறிந்த்து சிந்திக்க வேண்டும்.

முதலாவதாக இஸ்லாமிய அறிஞர்கள்

இன்றைய காலகட்ட்தின் சுதந்திர வேட்கை அதை ஆதரிக்கும் சட்ட அமைப்புகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கேற்ப தமது பிரச்சார உத்திகளை கையாள வேண்டும்.

அதிகாரத் தொனியில் பேசுவது, இஸ்லாத்தை மீறினால் சும்மா விட மாட்டோம் என்று எச்சரிப்பது, மதம் அல்லது ஜமாத் கட்டுப்பாட்டை கூறி எச்சரிப்பது.  கபரஸ்தானில் இடம் தர மாட்டோம் என்ற மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பது என்ற பழங்கால உத்திகள் பொருந்தாது.

ஃபிரீடம் என்ஜாய் என்ற வார்த்தைகளுக்கு சிக்கியிருக்கும் இளந்தலைமுறையினரிடம் முன்னேற்றம் நிம்மதி என்பது குறித்த சரியான புரிதலை உருவாக்க வேண்டும்.  நெகடிவாக பேசுவதை விட பாஸிட்டிவாக பேசுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

குறிப்பாக கவனிக்க வேண்டியது எல்லை மீறுதலில் ஈடுபடுவோர் முதலில் ஒரு அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். அதன் குரலாகவே அவர் கள் எதிரொலிக்கின்றன. 

ஆதிலா விவாகரம்கூட அப்படித்தான், அது இந்த ஜூன் மாதத்தில் சர்ச்சையாகி இருப்பதில் ஒரு பெரிய கார்ப்பரேட் குணம் இருக்கிறது.

ஏனெனில் ஜூன் மாதம் என்பது LGBTQ+ அதாவது தன்பாலின உறவாளர்களின் Pride Month பெருமைக்குரிய மாதமாகும்.

இந்த தீர்ப்பின் பின்னணியில் அரசியல் ரீதியான இலாபமும் இருக்கிறது. இந்திய அரசு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிடம் இந்த தீர்ப்பை தங்களது நாட்டின் நீதி அமைப்பு சுதந்திரமாக இருக்கிறது என்பதை காட்டலாம், அதன் மூலம் பல வகையான நிதியுதவிகளை பெற முடியும். குற்றச் சாட்டுக்களிலிருந்து தப்பிக்க முடியும்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு விளப்பரத்திற்காக பலிகடாவானவர்கள் விவகாரத்தை பெரிது படுத்தாமல் மற்றுள்ள இளந்தலைமுறையின் இதயத்தில் எப்படி வெற்றிகரமான வாழ்வு – கண்ணியமான வாழ்வு – பிரச்சனைகள் அற்ற வாழ்வு என்பதை புரிய வைக்க வேண்டும்.

அதே போல பெண்களின் அந்தஸ்து உரிமைகள் குறித்து இன்றைய ஆண்களுக்கு சரியான புரிதலை தர வேண்டும்.

பழங்காலத்து ஆணாதிக்க சிந்தனையோடு நடந்து கொள்வது பல குடும்பங்களை சிதைத்திருக்கிறது.

ஒரு இளம் பெண். இளவயதில் ஒரு டி வி ஷோவில் ஒரு பாடல் பாடுகிறார். அது அவரை பிரபலமாக்கி விடுகிறது. பின்னர் திருமணம் செய்து ஒரு நல்ல இஸ்லாமிய கணவரோடு வளை குடாவில் வாழ்கிறார். இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு இன்றுள்ள மீடியா மோகம் அவரை கவர்கிறது. தான் மீண்டும் பாட விரும்புவதாக கூறுகிறார். குடும்பமே திகைக்கிறது. குடும்பத் தலைவர் – மார்க்கப் பற்றுள்ளவர் – சந்தர்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு, சாதுர்யமாக சரி நீ நல்ல பாடல்களை யூட்யூபில் மரியாதையாக பாடு. அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். என ஏற்பாடு செய்கிறார். அந்தப் பெண் மிகவும் பிரபலமாகிறார். அதே நேரத்தில் கணவருடைய ஒத்துழைப்பினார் தான் புகழ் பெற்றதாக கூறுகிறார்.

இதில் கவனிக்க வேண்டியது. இஸ்லாமிய பாரம்பரியம்மிக்க அந்த குடும்பம் சுழ்நிலையை புரிந்து கொண்டு கூடுமானவரை இஸ்லாமை கடைபிடித்து மருமளின் ஆசை நிறைவேற வாய்ப்பளித்தது.

இந்த நாசூக்கான அனுமுறை இல்லாமல் போயிருந்தால் அந்த குடும்பம் சிதறி இருக்கும்.

இத்தகைய சூழலை எதிர் கொள்வதில் முஸ்லிம் சமுதாயம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முஸ்லிம் அறிஞர்கள் ஆராய்ந்து முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவையான கவுன்சிலிங்குகளை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முஸ்லிம் பெற்றோரும் தமது சந்ததிகளில் நேர்வழி கண்னியம் குறித்தது மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் சிந்திக்க வேண்டும்.

கட்டாயப் படுத்தலாக இல்லாமல், இயல்பாகவும் நல்ல பழக்க வழக்கங்களை தமது வாழ்விலும் குடும்பத்திலும் கட்ட பிடிப்பதன் வழியாகவும் இஸ்லாம் வளர்தோங்க சிந்திக்க  வேண்டும்.

இன்று பெரும்பாலான குடும்பங்களில் இளந்தலைமுறையினரின் கல்வி, சம்பாத்தியம், அவர்களது சுக வாழ்வு பற்றி சிந்தனை அதிகமாக இருக்கிறது. அவர்களது  நேர்வழி – கண்ணியம் பற்றிய சிந்தனை குறைவாக இருக்கிறது.

இதுவே ஆபத்துக்களை வர வழைக்கிறது.

அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாமிய ஒழுக்க விதிகளை இளந்தலைமுறை ஏன் மீறுகிறது. 

பிற சமூகத்தவருடன் கலந்துறவாடுவது. அவர்களைப் போல வாழத்தூண்டுகிறது.

மார்க்கம் சத்தியமான என்ற உறுதி குறைந்துவருவது.

தனி மனிதர்கள் அளவில் மார்க்க சட்டங்களை கடை பிடிக்காமல் இருப்பது.

உதாரணத்திற்கு ஆண்கள் வீடுகளீல் அரை நிக்கர்களோடு உலாவருவதை தவிர்க்க வில்லை எனில் பெண்கள் தெருக்கலில் பர்தா அணிவதை தவிர்த்துவிடுவார்கள்.

தம் பிள்ளைகளிடமும் தீன் வேண்டும் என்ற அக்கறையும் துஆவும் பெற்றோர்களிடம் குறைந்து வருவது.

நபி மார்கள் தங்களை பற்றி சிந்தித்த அதே அளவில் தம் சந்த்திகளைப் பற்றியும் சிந்தித்தார்கள்.

ومن ذريتي امة مسلمة لك

இந்த எண்ணம் பிள்ளைகள் வழி தவறிச் சென்று விட்டால் சமூகத்தில் மரியாதை போய் விடுமே என்ற கவலையில் இல்லாமல் பிள்ளைகள் நாளை அல்லாஹ்வுக்கு எதிரானவர்களாகிவிடக் கூடாதே பிள்ளைகளும் சொர்க்கம் செல்லவேண்டுமே என்ற இகலாஸில் அமைய வேண்டும்.

இன்றையசூழலில் நாம் எத்தகைய புறச் சூழலில் கல்வி கற்கவும் மற்ற நடைமுறைகளில் பங்கேற்கவும் நமது பிள்ளைகளை அனுப்புகிறோம். அவர்களது நட்பு வட்ட ம் எப்படிப் பட்ட்து என்பதில் கண்டிப்பான கவனம் அவசியமாகும்.  

ஆதிலா விவகாரத்தில் கூட இவ்விருவரும் சவூதியில் படிக்கும் போது தொடர்பு கொண்டுள்ளனர். (பெற்றோர்கல் இவர்களை சவூதியிலேயே வைத்திருந்தால் கூட பிரச்சனை இந்த அளவில் போயிருக்காது)

எந்த நல்ல சூழ்நிலையிலும் கூட நட்பு கேடாய் முடிந்துள்ளதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

அதே நேரத்தில் கூடா நட்பிற்கு ஆளாகும் பிள்ளைகளை நட்புறவோடு திசை மாற்ற முயற்சிக்க வேண்டும். நிர்பந்தமோ – பலப் பிரயோகமோ இன்றைய சூழலில் பயன்படுவதில்லை.

முஸ்லிம்கல் தமது பிள்ளைகளுக்கான ஆசிரியர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை அறிஞர்கள் வழிகாட்டுகிறார்கள்.

قال النخعي -رحمه الله-: "كانوا إذا أتوا رجلاً ليأخذوا عنه، نظروا إلى سمته وصلاته وإلى حاله، ثم يأخذون عنه

 

قال أبو عبد الله البلخي: "أدب العلم أكثر من العلم".

 

وقال ابن المبارك -رحمه الله-: "لا ينبل الرجل بنوعٍ من العلم ما لم يزين علمه بالأدب".

 

கல்வியை விட கேரக்டரை மேம்படுத்தும் கல்வி நிறுவன்ங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

சம்பாத்தியத்தை விட சற்குணத்தை பெற உதவுகிற கல்வி நிறுவன்ங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அல்லாஹ் நம்மையும் நமது சந்த்திகளையும் முஸ்லிம்களாக வாழ வைப்பானாக என்ற பிரார்த்தனையை அதிகமதிகம் கேட்பதோடு அதை குறித்து சிந்தித்து நடந்து கொள்ளவும் நாம் முயற்சிப்போம்

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

3 comments:

  1. அருமையான தகவல்கள்

    ReplyDelete
  2. மிக அற்புதமான பதிவு. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  3. Anonymous6:56 PM

    நபியின் நட்பு

    ReplyDelete