قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (1) الَّذِينَ يُظَاهِرُونَ مِنكُم مِّن نِّسَائِهِم مَّا هُنَّ أُمَّهَاتِهِمْ ۖ إِنْ أُمَّهَاتُهُمْ إِلَّا اللَّائِي وَلَدْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنكَرًا مِّنَ الْقَوْلِ وَزُورًا ۚ وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ (2) وَالَّذِينَ يُظَاهِرُونَ مِن نِّسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِّن قَبْلِ أَن يَتَمَاسَّا ۚ ذَٰلِكُمْ تُوعَظُونَ بِهِ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (3) فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا ۖ فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ۚ ذَٰلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۗ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ (4
இஸ்லாமிய வார்த்தைகளில் ஜிஹாது எனும் சொல் மிகத் தவறாகவே புரியப்பட்டுவருகிறது.
முஸ்லிம்களும் கூட ஜிஹாது என்றால் சண்டையிடுவதுو ஆயுத தாக்குதல்
நடத்துவது அல்லது உயிர்த்தியாகம் செய்வது என்றே அர்த்தம் கொள்கிறார்கள். ஆனால் உண்மை
அதுவல்ல. போர்க்களத்தில் சண்டையிடுவது என்பது ஜிஹாதின் ஒரு அம்சமே தவிர ஜிஹாதின் முழுப்
பொருளும் அதுவல்ல.
திருக்குர் ஆன் கூறுகிறது
ٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ
فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِندَ
ٱللَّهِ ۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلْفَآئِزُونَ
ஈமான் கொண்டு தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் தங்களது உடலாலும் பொருளாளும் நன் முயற்சி செய்கிறவர்கள் அல்லாஹ்விடம் பெரும் அந்தஸ்திற்கு உரியவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். என்பது இதன் பொருள்
இதிலுள்ள ஜிஹாத் என்ற வார்த்தைக்கு சரியான முயற்சி என்று அர்த்தமாகும். .
பெருமானார் (ஸல்) அவர்களது வார்த்தைகளைப் பாருங்கள்
روى ابن مسعود رضي الله عنه:
(سألت رسول الله صلى الله عليه وسلم يا رسول الله أي العمل أفضل؟ قال: (الصلاة على
ميقاتها) قلت ثم أي ؟ قال: (ثم بر الوالدين) قلت ثم أي ؟ قال: (الجهاد في سبيل
الله) فسكت رسول الله صلى الله عليه وسلم، ولو استزدته لزادني) [البخاري
நற்செயல்களின் வரிசையில் மூன்றாவதாக ஜிஹாத் பொதுவாக சொல்லப்படுகிறது. இதன் கருத்து
நல்ல முயற்சி என்பதே ஆகும்.
இன்றுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் தங்களது பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்களில்
தமது தரப்பை நிலை நாட்டப் போராடுவதும் ஒரு ஜிஹாதே ஆகும். அது ஒரு நல்ல முயற்சியாகும்.
சுமார் 30 ஆண்டு கால் சட்டப் போராட்ட்த்திற்குப் பிறகு ராஜீவ் கொலையில் குற்றம்
சாட்டப் பட்ட பேரறிவாளனை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
தமது பிரச்சனைகளுக்காக கேள்வி எழுப்புவோரை இஸ்லாம் பாராட்டுகிறது.
فَقَالَتْ عَائِشَة رضي الله عنها: نِعْمَ
النِّسَاءُ نِسَاءُ الأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ
يَتَفَقَّهْنَ فِي الدِّينِ.
عَنْ أبي سعيدٍ الخدري - رضي الله عنه- عنِ النَّبي
صلَّى اللهُ عليه وسلَّم قال: «أفضلُ الجهادِ كلمةُ عدلٍ عند سلطان جائرٍ"
رواه أبو داود،
قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ
فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا ۚ
إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ
அவ்ஸ் ரலி தனது மனைவி ஹவ்லாவைப் பார்த்து நீ என் அம்மாவின் முதுகு போல அதாவது என் அம்மாவைப் போல எனக்கு ஹராம் ஆகிவிட்டாய் என்று கூறினார். அக்கால நடைமுறையில் பெண்களை திருமண உறவிலிருந்து விலக்கி வைக்கும் ஒரு நடைமுறையாக அது இருந்த்து. இதற்கு ழிஹார் என்று பெயர்.
அவ்ஸின் மனைவி ஹவ்லா ரலி பெருமானாரிடம் இது பற்றி முறையிட்ட போது அன்றைய நடைமுறைக்கேற்ப பெருமானார் உன்னை அவர் அப்படி கூறீவிட்ட பிறகு எப்படி உனக்கு ஹலால் ஆவார் என்று கேட்டார்கள். தனக்கு ஒரு நீதி வேண்டும் என்று தேடி வந்த அம்மையாருக்கு இது ஏமாற்றமாக இருந்த்து. அவர் பெருமானாரிடம் கேள்விகளை எழுப்பினார். என் இளமை முழுவதையும் பயன்படுத்திக் கொண்ட பிறகு என் முதுமையில் என்னை இப்படி நட்டாற்றில் என் கணவர் தவிக்க விடுவது எப்படி நியாயமாகும் என்று கேள்வி எழுப்பினார். அப்போது தான் முஜாதலா அத்தியாயத்தின் இந்த வசனம் இறங்கியது, பெண் இனத்தின் மீதான இந்த அறியாமைக் கால கொடுமைக்கு முடிவு கட்டியது. இப்படி கூறுவதால் ஒரு பெண்ணை தள்ளிவைத்து விட முடியாது. இப்படி கூறிய குற்றத்த்திற்காக சத்தியத்தை முறித்த்தற்கான குற்றப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஒரு
நபியின் சபையில் தனது நிலைக்காக குரல் உயர்த்திய பெண்மணி வரலாறு உள்ளலவும் நினைவு கூறும்
வகையில் பதிவு செய்யப் பட்டுள்ளார். இந்த வசனம் பேசப்படுகிற இடங்களில் எல்லாம் அந்த
அம்மையாரின் பெயர் நினைவு கூறப்படும்.
அது
மட்டுமல்ல்ல தனது நிலையில் அவர் வெற்றியும் பெற்றார்.
எனவே
முஸ்லிம்கல் சட்டப் போராட்ட்த்தில் தமது நிலைப்பாட்டுக்கான முழு வாதங்களையும் நிறைவாக
எடுத்து வைக்க சிறப்பாக முயற்சி செய்ய வேண்டும்.
நேற்றைய
முந்தினம் ஜேகே எல் எப் என்று சொல்லப் படக்கூடிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசீன் மாலிக் அவர்களுக்கு தில்லி என் ஐ ஏ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது.
ஆரம்பத்தில் ஆயுதம் தாங்கிய அமைப்பாக இருந்த ஜேகே எல் எப் பின்னர் முந்தைய இந்திய அரசியல் தலைவர்களின் முயற்சியால் அமைதி வழியில் போராடும் இயக்கமாக் மாறியது என விக்கீபீடியா கூறுகிறது. (Malik renounced violence in 1994 and adopted
peaceful methods to come to a settlement of the Kashmir conflict.)
யாசீன் மாலிக் இந்திய பாகிஸ்தான் இரண்டிடமிருந்தும் விடுதலை பெற்ற ஒரு சுதந்திர காஷ்மீர் வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்தார்.
இந்தியா அதை ஒரு போதும் ஏற்கவில்லை. ஆயினும் யாசீன் மாலிக் தொடர்ந்து காஷ்மீரில் செயல்பட அனுமதிக்கப் பட்டார். காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு அனுசரித்துப் போகும் ஒரு முடிவை அவர் மேற்கொள்ளக் கூடும் இந்தியா நினைத்தது.
மத்தியில் பாஜக அரசு அமைந்த போது காஷ்மீர் விவகாரத்தில் கடும் போக்கை கையாள ஆரம்பித்தது.
2019 ம் ஆண்டு ஜே கே எல் எப் தடை செய்யப் பட்டது. யாசீன் மாலிக் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார்.
இந்த ஆண்டு மே 10 ம் தேதி தில்லி நீதிமன்றம் யாசீன் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. ‘அவர் நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகவும். தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டியது.
யாசீன் மாலிக் தனக்கு சார்பாக வாதாட வக்கீல் வைத்துக் கொள்ள வில்லை. தானே நீதிமன்றத்தில் பேசினார்.
மே 25 ம் தேதி யாசீன் மாலிக்கிற்கு இரண்டு ஆயுள் தண்டனையும் 5 பத்தாண்டு சிறை தண்டனையும் ஒரு ஐந்தாண்டு சிறைத்தண்டனையையும் வழங்கியது.
யாசீன் மாலிக் 1990 லேயே தான் வன் முறை வழியிலிருந்து விலகி, காந்தியின் அகிம்சா வழிக்கு திரும்பி விட்டதாகவும் எந்த ஒரு வன்முறையிலும் தான் ஈடுபட்டதை என் ஐ ஏ வால் நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
தீர்ப்புக்கு முன்னதாக அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்க மளிக்க நீதிமன்றம் கூறிய போது.
தான ஒரு தீவிரவாதியாக இருந்திருந்தால் வி பி சிங்க் முதல் வாஜ்பாய் வரை ஏழு பிரதமர்கள் தன்னை சந்தித்திருப்பார்களா ? வாஜ்பாய் அரசு தனக்கு பாஸ்போர்ட் வழங்கியிருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
ஆயினும் அவரது வாதங்களை நிராகரித்த நீதிமன்றம் அவர் துப்பாக்கியை கீழே போட்டார் எனினும் காஷ்மீரில் நிலவும் தீவிரவாதத்தை அவர் எதிர்க்க வில்ல என்று கூறி தீர்ப்பளித்ததது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது என்றாலும்
இத்தனை ஆண்டுகளாய் பல பிரதமர்களையும் சந்திக்க வாய்ப்பளிக்கப் பட்ட ஒருவரை – முந்தைய பாஜக பிரதமர் வாஜ்பாய் அவர்களது அரசால் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட ஒருவரை திடீரென தற்போதைய பாஜக அரசு குற்றவாளியாக்கியது இந்தியா அரசு கடைபிடிக்கும் முஸ்லிம் எதிர்ப்புணர்வின் ஒரு அம்சமாகவே அமைந்துள்ளது.
யாசீன் மாலிக்கின் கேள்விகளை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட வில்லை. குற்றவாளி என்று தீர்ப்பளித்த போதும் அவரது கருத்தை நீதிமன்றம் கேட்கிறது. ஆனால் அவர் கூறும் கருத்தை ஊடகங்கள் வெளியிடுவதில்லை.
நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது குறித்து யாசீன் மாலிக் கருத்து எதையும் கூறவில்லை. அநீதி என்றோ அக்கிரமம் என்றோ முழங்கவில்லை. . நீதிமன்றத்திடம் தான் உதவி எதையும் கேட்கப்போவதில்லை என்றே அவர் கூறினார்.
அவரே அப்படி கூறாத போது நாம் வலிந்து அவரை நியாயப் படுத்த போவதில்லை.
ஆனால் அவரது வாதம் தள்ளிவிடக் கூடியதில்லை.
காஷ்மீரில் இன்னும் சில பேர் சுதந்திரம் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்
அத்தகையோரை நியயமற்ற ஒடுக்குமுறையால் அடக்கிவிடலாம் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு நினைக்கிறது.
இத்தகைய முடிவுகள் வர்லாற்றில் எந்த கட்டத்திலும் வெற்றியை தந்ததில்லை
சுதந்திரம் கேட்கும் காஷ்மீரிகளை இந்தியாவுடன் இணைந்திருப்பதற்கான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதே சரியானது
அதற்கான காலம் கணிந்து கொண்டுதான் இருந்தது. பிரிவினை கோஷம் குறைந்து ஜனநாயக் பாதைக்கு காஷ்மீர் பெருமளவில் திரும்பி இருக்கிறது.
ஆனால் தற்போதைய பாஜக அரசு கடை பிடிக்கும் வழி முறைகள் காஷ்மீர் விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய அம்சம் என்ன வென்றால் காஷ்மீரில் ஜனநாயக சக்திகளான ஃபரூக் அப்துல்லாஹ் மஹ்பூபா முப்தி போன்ற வர்களை மத்திய பாஜக அரசு தொடர்ந்து அரசியல் பங்காற்ற விடாமல் தடுத்து வருகிறது.
இந்திய மக்களைப் பொறுத்து இந்த அரசியல் சக்திகளின் பங்கு மிக முக்கியமானது. பாரட்டப்பட வேண்டியது. ஏனெனில் சந்தர்ப்ப சூழ்நிலை – பூகோள அமைப்பின் பலம். பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி ஆழ்ந்த அறிவில்லாமல் சுதந்திரம் சுதந்திரம் என்று மட்டுமே உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருக்கிற மக்களை இந்திய ஜனநாயக வழிக்கு அழைத்து வந்ததிலும் வருவதிலும் இந்த அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது. இவர்களும் இல்லை என்றால் காஷ்மீரில் இந்திய அரசியல் என்பது இன்னும் சிக்கலானதாக மாறியிருக்கும். ஆனால் தற்போதைய பாஜக அரசு காஷ்மீரை அடிமைகளின் தேசமாக மாற்ற நினைக்கிறதோ என்ற எண்ணும் அளவிற்கு அங்கு அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கிறது. .
காஷ்மீர் இந்தியா ஐக்கியத்தின் ஒரு பகுதியாக மக்கள் நிம்மதியுடனும் வளமாகவும் வாழும் நிலமாகவும் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
சுய நல அரசியல் சக்திகளால் அம்மக்களின் வாழ்வு சிதைந்து விடக் கூடாது.
இதில் இன்று நாம் கவனிக்கிற முக்கிய அம்சம் என்ன வெனில் யாசீன் மாலிக் தனக்காக
ஒரு வக்கீல் வைத்து வாதிட மறுத்துவிட்டார்.
அது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.
இன்றைய நிலையில் அது ஒரு ஹீரோயிசம் போல தோன்றினாலும். அவர நீதிமன்றத்தில் முன்
வைத்த கேள்விகள் பொட்டில் அறைந்த்து போல சரியானதாக இருந்தாலும் இந்த விவகாரங்களை ஒரு
திறமையான வக்கீலை வைத்து வாதிட்டிருந்தால் தனது தரப்பிற்கு நீதியை பெறுவதில் அவர் ஓரளவிற்காவது
வெற்றி பெற்றிருக்க முடியும்.
பாபரீ மஸ்ஜிதின் தீர்ப்பில் முஸ்லிம்களின் தரப்பு நியாயங்கள் ஏற்றுக் கொள்ளப்
பட்ட்து போல. குறைந்தத்து முஸ்லிம்களுக்காக ஒரு பள்ளிவாசலுக்கான இடமாவது தரப்பட்ட்து
அல்லவா?
யாசீன் மாலிக் இதற்கு மேல் சட்டப் போராட்டம் நட்த்துவாரா என்று தெரியவில்லை.
நீங்கள் கூறும் குற்றச்சாட்டு எதையும் நான் மறுக்கப் போவதில்லை என்ற பாணியில்
அவர் நீதிமன்றத்தில் பேசுவது ஒரு வகையில் விரக்தியின் வெளிப்பாடாக இருக்குமே அன்றி
விவேகமான நல்ல முயற்சியாக இருக்க முடியாது.
அவர் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நட்த்த வேண்டும்.. அதுவே சரியான ஜிஹாது ஆகும்.
எல்லாம் வல்ல இறைவன் காஷ்மீரில் அமைதி திரும்பவும் காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழவும் அருள் புரிய
வேண்டும்.
No comments:
Post a Comment