வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 19, 2022

கியான்வாபி மஸ்ஜித்

 

கியான் வாபி பள்ளிவாசல் உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி நாகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு ஜாமியா பள்ளிவாசலாகும். அந்தப் பள்ளிவாசல் வாரணாசியின் புகழ் பெற்ற  காசி விசுவநாதர் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது. ஒரு காலத்தில் காசி நகரத்தில் தழைத்தோங்கி நின்ற ஆன்மீக ஒருமைப்பாட்டின் சின்னமாக பள்ளிவாசலும் கோயிலும் அருகருகருகே அமைந்துள்ளன.

கியான் வாபி என்பது தமிழில் ஞானவாபி என்று கூறப்படுகிறது. அதன் பொருள் ஞானத்தின் கிணறு என்பதாகும். பள்ளிவாசலுக்கு அருகே உள்ள ஒரு இந்தப் பெயரில் ஒரு கிணறு உள்ளது. அதை யொட்டி இப்பெயர் வந்துள்ளது. ஒரு காலத்தில் வாரணாசி நகரம் அறிஞர்களின் பெரு நிலமாக இருந்துள்ளது.

முகலாய மன்னர் அவுரங்கசீப் விசுவநாதர் ஆலையத்தை இடித்து விட்டு இந்த பள்ளிவாசலை கட்டினார் என்று அப்பட்டமான ஒரு பொய்யை விக்கீபீடியா உட்பட உள்ள அனைது ஊடகங்களிலும் பதிவு செய்வதில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்றுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இது பொய் என்பதற்காக இலட்சன்ங்களை இப்பள்ளிவாசல் பற்றி எழுதப்படுகிற வாசகங்களில் புரிந்து கொள்ள முடியும்.  விக்கீபீடியாவின் வாசகத்தை பாருங்க்ள்

“அவுரங்கசீப். கோயிலை இடித்த போது மூலவர் சிலையை ஞானவாபி கிணற்றில் பிராமணர்கள் போட்டு விட்டதாக காலம் காலமாக இந்துக்கள் நம்புகின்றனர்.”

ஞானவாபி பள்ளிவாசல் குறித்த ஆக்கங்கள் அனைத்திலும் அப்பட்டமான வரலாற்று திரிபை சாதாரணமாக நாம் அடையாளம் கண்டு விட முடியும். ஏமாற்றும் வேலையாக சில ஆங்கில வரலாற்றாசிரியர்களின் மேற்கோள்களை காட்டியிருப்பார்கள். அது அவுரங்கசீப்பை பற்றி ஆங்கிலேயர்களின் கருத்தாக இருக்குமே அன்றி இந்த பள்ளிவாசல் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்ட்து என்பதாக இருக்காது.

முதலில் காசிவிசுவநாதர் ஆலயத்திற்கும் அவுரங்கசீப்பிற்கும் என்ன தொடர்பு என்பதை பார்க்கலாம்.

அவுரங்கசீப் அவரது குறுநில மன்னர்களோடு காசி நகரை கடந்த போது அவருடனிருந்த இந்து மன்னர்கள் இந்த நகரிலுள்ள ஆலயத்தை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். அரசர் படைகளை அங்கு தங்க வைத்து அவர்களை கோயிலுக்கு சென்று வர அனுமதித்தார். சென்றவர்கள் எல்லோரும் திரும்பி விட்டனர். ஒரு இளவரசியை மட்டும் காணவில்லை.  அவரை தேடிவருமாறு வீர்ர்களை அனுப்பினார் அவுரங்கசீப் . விசுவநாதர் ஆலையத்தில் உள்ள ஒரு நிலவரையில் அவரது பிணம் கிடந்தது. கோயிலில் பணி செய்த பிராமனர்கள் அவரை கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதில் கடுமையாக கோபமடைந்த இந்து மன்னர்கள் கோயில் ஆச்சாரப்பட்டுவிட்டதாக கோயிலை இடித்து விட்டு மர்ம அறைகள் இல்லாத வாறு கோயிலை கட்டுமாறும் கேட்டுக் கொண்டனர். அதற்கேற்ப அவுரங்கசீப் கோயில்ல இடித்து விட்டு மீண்டும் கோயிலை கட்டிக் கொடுத்தார்.

இது தான் விசுவநாதர் கோயிலுக்கும் அவுரங்க சீப்புக்குமான வரலாறு. இக்கால கட்டத்தில் கட்டப் பட்டதால் அக்கோயில் முகலாய பாணியும் கலந்து கட்டப்பட்டிருக்கிறது.

கோயிலுக்கு அருகே இருக்கிற பள்ளிவாசல் என்பது அவுரங்கசீப் கட்டியதில்லை.

திரும்ப திரும்ப இது அவுரங்கசீப் கோயிலை இடித்து விட்டு கட்டிய பள்ளிவாசல் என்ற பொய்யை சொல்கிறார்கள்.

ஆனால் அவர்கள் பேசுகிற வரலாற்று செய்திகளுக்கு இடையிலேயே அக்பர் காலத்திலேயே இந்தப் பள்ளிவாசல் இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும், அக்பர் காலத்துக்கு முந்தை மக்தூம் ஷா பனாரஸி என்ற மிகப்பெரிய சூபி அறிஞர் இந்தப் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுதிருக்கிறார் என்ற வரலாற்று குறிப்புகள் உண்டு.

அவுரங்கசீப் இந்த பள்ளிவாசலை புணர் நிர்மாணம் செய்திருக்கிறார் என்பது மட்டுமே உண்மை.

இஸ்லாமிய பாரம்பரியம் என்பது எந்த ஒரு வரின் நிலத்தையும் ஆக்ரமித்து பள்ளிவாசலை கட்டுவதல்ல.

அப்படி கட்டப்பட்ட பள்ளிவாசலில் தொழுவதே கூடாது என்பது தான் இஸ்லாமின் சட்டம்.

கலீபா ஹாரூன் ரஷீதின் காலத்தில் பக்தாதில் ஒரு பெரிய பள்ளிவாசலை கட்ட பக்தாதின் கவர்னர் நினைத்தார். அதற்கு ஒரு யூதப்பெண்ணின் வீடு தேவைப் பட்டது. அதை விலை பேசினார்கள். அப்பெண் ஆரம்பத்தில் மறுத்தார். தொடர்ந்து அதிகாரிகள் பேசி இரண்டு மடங்கு விலைக்கு அந்த இட்த்தை வாங்கினார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்டது. ஒரு முறை கலீபாவை சந்தித்த போது தனது விருப்ப மின்ற தனது வீடு பெறப்பட்ட்து என்று அப்பெண் புகார் கூறினார். கலீபா அந்தப் பள்ளிவாசலை இடித்து அப்பெண்மணியின் வீட்டை அது இருந்தவாறு திரும்ப கட்டிக் கொடுக்க உத்தரவிட்டார். அவருக்கு கொடுத்த பணம் திரும்ப பெறப்படவில்லை.

இது தான் உலகம் முழுவதிலும் காலம் காலமாக முஸ்லிம்கல் கட்டபிடித்து வரும் வரலாறு, நியாயமின்றி எதைய்ம் யாருடையதையும் ஆக்ரமிப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை

ஒரு மதப்பற்றாளராக அவுரங்கசீப் வாழ்ந்தார் என்று சொல்கிற இந்திய வரலாற்றாசிரியர்கல் அவர் ஆக்ரமித்து பள்ளிவாசலை கட்டினார் என்று சொல்வதைப் போன்ற முரண் வேறெதுவுமில்லை

அவுரங்கசீப் வாரணாசியில் செய்த ஏற்பாடுகளில் மிக முக்கியமானது பணாரஸீல் உள்ள பிராமணர்களின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறார். வாரணாசியிலிருந்த பிராமணர்கள் பெரும் அட்டூழியக்கார்ர்களாக இருந்தனர் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் கூறுகிறார்கள். இந்துக்கள் தங்களது மேலான புனித இடமாக கருதி நாடு முழுவதிலிருமிருந்து இங்கு வருகிற போது இங்கிருந்த பிரமாணர்கள் அவர்களிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டனர் என்பதை பலரும் பதிவு செய்துள்ளார்கள்.

விசுவ இந்து பரிஷத் அமைப்பு தொடர்ந்து அந்த பள்ளிவாசலை கோயில் என்று வாதிட்டு வருகிறது. 1996 ல் பாபரீ மஸ்ஜிதை இடித்த்து போல இந்த பள்ளிவாசலையும் இடிக்க விசுவ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்தது. ஆனால் மக்கள் வரவில்லை.

தொடர்ந்து அந்தப் பள்ளிவாசலை ஆகரமிப்ப்தற்கான என்னென்ன வேலைகள் உண்டோ அத்தனையையும் முறைகேடாக செய்துவருகிறது அந்த அமைப்பு.

2019 மார்ச் மாதம் அந்தப் பள்ளீவாசலின் மேற்குப் புற வாசலில் நந்தி சிலை இருப்பதாக புரளியை கிளப்பி விட்டது.

2021 அக்டோபர் 8 ம் தேதி வாரணாசி கோர்ட் இந்திய தொல்பொருள் துறைக்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

2022 ஏப்ரல் 14 மே 15 ஆகிய நாட்களில் ஞானவாபி பள்ளிவாசலை வீடியோ பதிவு செய்தனர்.

இந்த பணிக்கு நியமிக்கப் பட்ட ஒரு ஹிந்து அதிகாரி நீதிமன்ற நடைமுறைகளுக்கு எதிராக அவரது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பதிலாக பொது வெளியில் தெரிவித்தார்.

அவர் பள்ளிவாசலின் ஒளு செய்யுமிட்தில் அலங்காரத்திற்காக கட்டப்படும் நீரூற்றை லிங்கம் இருப்பதாக கூறியுள்ளர்.

வாரணாசி நீதி மன்றம் உடனடியாக இதை ஏற்று ஒளு செய்யும் இட்த்திற்குள் முஸ்லிம்கள் செல்வதை தடுத்ததோடு பள்ளிவாசலுக்கு 20 முஸ்லிம்கல் மட்டுமே தொழு அனுமதிக்கப்படுவார்கள் என்ற் கூறீயது.

இதை எதிர்த்து மஸ்ஜித் இந்திஜாம கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட்து.

சுப்ரீம் கோர்ட் ஒலூ செய்யும் மிட்த்திற்கான தடையை அப்படியா தொடரவும் ஆனால் பள்ளிவாசலில் தொழுகைக்கான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளது.

வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது.

நாம் இது பற்றி அதிகம் பேச முடியாது. ஆனாலும் நாடு சுதந்தரம் பெற்ற காலத்தில் பல வழிபாட்டுத்தலங்கள் விவகாரத்திலும் சர்ச்சை இருந்துள்ளது.

அப்போது சுதந்திரம் பெற்ற போது வழி பாட்டுத்தலங்கள் எந்த அளவில் உள்ளதோ அதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப் பட்டது.

இதே போலவே பாபரி மஸ்ஜித இடிக்கப் பட்ட போதும் ஒரு சட்டம் இயற்றப் பட்டது.

நமது நாட்டின் நீதிமன்றங்கள் அப்படி ஒரு சட்டம் இருப்பது போலவே கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பள்ளிவாசல்களில் தலையிட்டு வருகின்றன.

நீதி மன்றங்கள் என்ன தீர்ப்பு வழங்கும் என்பது பாபரீ வழக்கிலேயே தெரிந்து விட்டது. அனைத்து நியாயஙகளும் முஸ்லிம்களின் தரப்பில் இருப்பதாக கூறீவிட்டு பள்ளிவாசலின் இடத்தில் கோயில் கட்ட அனுமதித்து.

நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் அதிகரித்து வருகிற சூழலில் மக்களின் கவனைத்தை திசை திருப்ப மேலும் கோயில் விவாகரத்தை கையில் எடுத்துள்ளனர். இந்துத்துவ சக்திகள்.

நீதிமன்றங்களில் அவர்களது ஆட்களே நிரம்பியிருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களுக்கு சார்பாக இருக்கிறது.

இப்போது வழக்கம் போல தொழுகைக்கு அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூட ஒரு கண்துடைப்பாக இருக்கலாம்.

முஸ்லிம்கல் மிக கவனமாக சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அது வே சரியானது. இன்னும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் சட்ட ரீதியான போராட்ட்த்தை முன்னெடுப்போம். இன்ஷா அல்லாஹ்,

சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதம் வைத்திருந்தார் என்பது போன்ற பொய்கள் எப்படி பத்தாண்டுகளுக்குள் அம்பலப்பட்ட்தோ அதே போல பொய்கள் அம்பலமாகும்.

ஆனால் பொய்யர்களும் சமூகத்தை சீரழிப்போரும் அதிக நாட்கள் நிலைக்க முடியாது.

நாம் கவனம் செலுத்த வேண்டியது. ஊடகங்கள் – குறிப்பாக – பொது ஊடகங்களில் இந்துத்துவ சக்திகள் நீண்ட நாட்களாக முயற்சி செய்து அப்பட்டமான பொய்களை உண்மை போல எழுதி வைத்திருக்கிறார்கள்

உதாரணமாக விக்கீபீடியா ஏதேனும் செய்தியில் பிரச்சனை இருந்தால் இது எடிட்செய்ய தகுந்த்து என்று கூறி செய்தி வெளியிடும். ஆனால் ஞான வாபி பள்ளிவாசல் பற்றிய செய்தியில் கோயிலை இடித்து விட்டு அவுரங்கசீப் பள்ளிவாசல் கட்டினார் என்று ஏதோ உறுதியான வரலாற்றுச் செய்தி போல எழுதியுள்ளது.

புதிய தலை முறையை சார்ந்த இளைஞர்கள் நாட்டில் ஒரு பிரச்ச்னை என்ற உடன் இண்டர் னெட்டை தான் தேடுவார்கள், தேடுகிற இடங்களில் சந்தேகத்திற்கு இடமற்றது போல் இப்படிச் செய்திகள் தரப்படுமானால அந்த தலைமுறையின் இதயத்தில் விஷம் ஏறிவிடும்.

எனவே பொது ஊடகங்களில் தவ்றான தகவல்கள் பதிவதை கண்காணிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது முக்கியமானது.

பள்ளிவாசலகளை தகர்க்க முயற்சிப்பவர்களுக்கான பாட்த்திற்கு அல்பீல் அத்தியாயம் ஒன்றே போதுமானது.

எதிரிகள் யானைகளைப் போல பிரமாண்டமாக தெரிந்தாலும்

அவர்களை அல்லாஹ் அழித்து விடுவான்.

அபாபீல் என்பது இன்று வரை அறியப்படாத ஒரு பறவை.

அது ஒரு சிறு வடி ஆபத்து ஆனால் சீறிப்பாயும் ஆபத்து.

வரும், நிச்சயம் வரும்.

நாம் இருக்கிற பள்ளிவாசலகளை பத்திரமாக பாதுகாப்போம்.

அக்கம் பக்கத்தில் இருக்கிற மக்களிடம் நல்லிணக்கம் பேணுவோம்.

பெரும்பாலும் மற்ற மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ஜும் ஆ நேரத்தில் வாகணம் நிறுத்தம் அதிகப்படியான தேவையற்ற ஒலி பெருக்கி சத்தம் ஆகியவற்றை தவிர்த்து விடலாம்.

ஒரு முஸ்லிம் தனது கையாலோ நாவாலோ பிறருக்கு துன்பம் இழைக்க மாட்டார் என்கிற பெருமானாரின் வழிகாட்டுதலை பேணி நிற்போம்.

நிச்சயமாக அல்லாஹ் நீதிக்கு துணை செய்வான். .

 

 

 

 

No comments:

Post a Comment