இறந்து போனவர்களை அடக்கம் செய்கிற நேரத்தில் இந்த வசனம் ஓதப்படுவதை கேட்டிருப்பீர்கள்.
يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي
உலகில் வாழ்கிற
போது மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது என்பதை இது எடுத்துக்
கூறுகிறது.
இறந்த பிறகு ஓதப்படுகிற
வசனத்தில் வாழ்வியல் தத்துவமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
உண்மையில் இது
சிறப்பாக வாழ்ந்த மனிதர்களுக்கு சொல்லப் படும் ஒரு நற்செய்தியாகும்.
தப்ஸீர் தப்ரீ
கூறுகிறது. இந்த வாசகம் சொர்க்க வாசிகளைப் பார்த்து மலக்குகள் கூறும் நற்செய்தியாகும்.
وقوله: (يَا
أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةَ * ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً
مَرْضِيَّةً) يقول تعالى ذكره مخبرا عن قيل الملائكة لأوليائه
يوم القيامة:
தப்ஸீர் குர்துபி கூறுகிறது.
நல்ல மனிதர்களின்
உயிரைப் பறிப்பதற்கு முன்னால் அவரிடம் இரண்டு மலக்குகள் வந்து இந்த வாழ்த்தை கூறுவார்கள்
. இந்த பூமியின் மேற்பரப்பிலுள்ள எந்த மூக்கும் நுகர்ந்திராத சுகந்தத் தோடு அந்த் ஆன்மா
விடை பெறும்.
وقال
عمرو بن العاص : إذا توفي المؤمن أرسل الله إليه ملكين ، وأرسل معهما تحفة من
الجنة ، فيقولان لها : اخرجي أيتها النفس المطمئنة راضية مرضية ، ومرضيا عنك ،
اخرجي إلى روح وريحان ، ورب راض غير غضبان ، فتخرج كأطيب ريح المسك وجد أحد من
أنفه على ظهر الأرض
தப்ஸீர் குர்துபியில் இன்னும் ஒரு செய்தி இருக்கிறது.
இந்த வசனத்தில் கருத்தில் அகமகிழ்ந்த அபூபக்கர் சித்திர்க் ரலி
அவர்களைப் பார்த்து பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த வாழ்த்து உங்களுக்கு
கிடைக்கும்.
وقال سعيد بن زيد : قرأ رجل عند النبي - صلى الله
عليه وسلم - يا أيتها النفس المطمئنة ، فقال أبو بكر : ما أحسن هذا يا رسول الله
فقال النبي - صلى الله عليه وسلم - : " إن الملك يقولها لك يا أبا بكر " .
சயீத் பின் ஜுபைர்
ரலி கூறுகிறார்;
இப்னு அப்பாஸ்
ரலி அவர்கள் அடக்கம் செய்யப்ப் பட்ட போது அவரது கப்ருக்கு அருகே இந்த வசனத்தை ஓதப்பட்டது.
யார் ஓதினார்கள் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
وقال سعيد بن جبير :
مات ابن عباس بالطائف ، فلما دفن تليت هذه الآية على شفير القبر - لا يدرى من
تلاها - : يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية
ஆக நல்லமனிதர்கள்
இறந்து போகிற போது மலக்குகள் இந்த வார்த்தையை சொல்வார்கள்
அதனால் தான் இன்று
நாம் மனிதன் எப்படி வாழ்ந்திருந்தாலும் அவனுக்கு இந்த நற்செய்தி கிடைக்கட்டும் என்று
ம் பிராத்தித்து இந்த வசனத்தை ஓதுகிறோம்.
எதார்தத்தில் இந்த
துஆ ஒரு சிறப்பாக வாழ்ந்த வாழ்கைக்கான வாழ்த்தாகும்.
இந்த வசனத்தின்
படி சிறப்பான வாழ்க்கை என்பது நிம்மதியான மனதுடன் வாழ்வதாகும்.
ஒவ்வொரு முஸ்லிமும் அமைதியான ஆன்மா அதாவது நிம்மதியான மனதுடன் வாழ ஆசைப்பட வேண்டும் அதற்காக முயற்சிக்க வேண்டும்.
நமது மனது எப்படி
இருக்கிறது எனபதை அளவிட்டுக் கொள்ள மார்க்க் அறிஞர்கள் வழிகாட்டுகிறார்கள்.
மனம் மூன்று வகையாக
இருக்கிறது.
தீயவற்றை சுற்றியே
சிந்திக்கும் மனம். நப்ஸ் அம்மாரா.
திருக்குர் ஆன்
கூறுகிறது. பொதுவாக மனது தீயைதையே சீக்கிரம் விரும்பும்.
إِنَّ النَّفْسَ لأَمَّارَةٌ بِالسُّوءِ إِلا مَا
رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ (53).
இன்று யாரை ஏமாற்றலாம்.
எதை கொளுத்தலாம். யாரிடமிருந்து பிடுங்கலாம். என்ன குழப்பம் செய்யலாம் என்பதை மட்டுமே
யோசித்துக் கொண்டிருக்ப்போர் சிலர் இருக்கிறார்கள் அல்லவா அவர்களது மனம் இத்தகையது.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு
எதிரான சிலரது நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவர்களை பேய்தான் பிடித்து ஆட்டுகிறதோ
என்று தோன்றுகிறது. இல்லை எனில் உடன் வாழும் மக்கள் மீது இவ்வளவு ஆத்திரமும் வன்மமும்
வெளிப்படாது.
அரசியல் அதிகாரம்
பெறுதல் என்ற நிலையை தாண்டி.எதிலும் அமைதியடையாத சிலர் எதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்
என்று தெரியவில்லை.
முஸ்லிம்களுக்கு
எதிராக சட்டம் போடுகிறார்கள். போராட்டங்களை தடை செய்கிறார்கள். போராடுகிறவர்களின் வீடுகளை
புல்டோசர்களால இடிக்கிறார்கள். முஸ்லிம்கள் உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் வணங்கும்
இடங்கலிலும் பிரச்சனை செய்கிறார்கள். பர்தா அணிந்த பெண்களை தடை செய்கிறார்கள். ஆனால்
கடந்த வாரம் மைசூர் சென்றிருந்த போது முழு நிர்வாணமாக சிலர் பொதுமக்கள் நடமாடும் சாலைகளில்
சர்வசாதாரணமாக நடந்து செல்வதை நான் பார்த்தேன்.
இவர்களுக்கு என்ன
தான் பிரச்சன்ன ? எது தான் பிரச்சனை? என்று தெரியவில்லை. .
ஒன்று மட்டும்
தெரிகிறது. இதன் முடிவு நல்லதாக இருக்கப் போவதில்லை. இலங்கை அதற்கு ஒரு உதாரணம் .
இன்று நாம் அரசியல்
பேசப் போவதில்லை.
இன்று நமது நாட்டில்
பலபேருடைய இதயமும் அமைதியற்று இருக்கிறது. அதற்கு காரணம் அது எப்போதும் தீயவ்ற்றை சிந்தித்துக்
கொண்டே இருக்கிறது.
நமது மனதிலும்
ஒரு பெண்ணின் மீதான ஆசையையோ அல்லது குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதித்து விடுவதன்
மீதான ஆசையையோ அல்லது முறைகேடாக அரசியல் அதிகாரம் பெறுவதன் மீதான ஆசையோ இடம் பிடித்து
விடுமானால் நமது சிந்தனையில் எல்லா விதமான தீமைகளையும் வருத்தமின்றி தயக்கமின்றி உட்கார்ந்து
கொள்ளும்.
அதன் பிறகு மனது
அமைதியை இழந்து விடும்.
நப்ஸே அம்மாராவின்
அடையாளங்கள்
எப்போதும் உலகை
பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும்.
ஒரு பெரிய பணக்கார்ரை
ஒரு ஆலிம் சந்தித்தார். எப்ப்டி இருக்கிறீர்கள் என்று கேட்டார். வாவ்! கடந்து காலம்
சிறப்பாக இருந்த்து என்று அவர் சொன்னார். அந்த ஆலிம் முகம் திருப்பிக் கொண்டு அவரை
விட்டு நகர்ந்து விட்டார். பெரிய மனுசனாச்சே ஏன் நீங்கள் நகர்ந்து விட்டீர்கள் என்று
மக்கள் கேட்டனர். அவர் சொன்னார். என்ன மனிதர் அவர். ஒரு அல்ஹம்துலில்லாஹ் சொல்ல வில்லையே!
நம்ஸே அம்மாராவின்
மற்றொரு அடையாளம். ஆசை அதிகமாக பெருகுவது. அதற்காக எந்த நியதிகளையும் பொருட்படுத்தாமல்
போவது.
நம்ஸே அம்மாராவின்
மற்றொரு அடையாளம் கோபத்தில் நிதானம் தவறுவது.
இத்தகைய மனிதர்களிடம்
பிர் அவ்னின் தற்பெருமையும் காரூனின் கஞ்சத்தனமும் குடிகொள்ளும்.
இத்தகையோர் கோழைகளாகவும்
சுயநலமிகளாகவும் இருப்பார்கள்
ஒரு தேவை ஏற்படும்
எனில் கழுதையை கூட தந்தை என்று சொல்லிக் கொள்வார்கள்
மனித வாழ்வின்
மிக மோசமான கீழ்த்தரமான மனோ நிலை இது.
நப்ஸே லவ்வாமா
மனதில் இன்னொரு
வகை இருக்கிறது. தவறு செய்யும் ஆனால் அதற்காக
வருத்தப் படும். நாம் இப்படிச் செய்திருக்க கூடாது என்று நம்மையே பழித்துக்
குறும். இதற்கு பழிக்கும் ஆன்மா நப்ஸ லவ்வாமா என்று பெயர்.
நாம் இந்த நிலையிலாவது
இருக்க வேண்டு, இதுவே மனித வாழ்வின் மிக அடிநிலையான குணமாகும்.
உண்மையில் இந்த
பரிதாபம் கூட இல்லாவிட்டால் அந்த வாழ்கை மிருக வாழ்கையாகும்.
மனதிற்குள் ஆசைகள்
கணக்கின்றி வரத்தான் செய்யும். தவறான ஆசைகளை தவறு என்று நினைக்கும் வரை – தவறான ஆசைகளை
நியாயப் படுத்தாத வரை இந்த இடை நிலையில் இருக்க முடியும்.
சைத்தான் இதயத்திற்குள்
ஏற்படுத்தும் சலனத்திற்கும் மனதிற்குள் தானாக எழும் சலனத்திற்கு வித்தியாசம் இருக்கிறது.
சைத்தான் ஒரு பாவத்தை
தூண்டுவான். அதை பாவம் என்று உணர்ந்து செய்யாமல் தவிர்த்து விட்டால் இன்னொரு பாவத்திற்கு
தூண்டுவான். அதுவும் நடக்கவில்லை எனில் மூன்றாவது வேறொன்றுக்கு தூண்டுவான்.
நமது மனது பாவத்திற்கு
தூண்டுவது எப்படி இருக்கும் எனில் மனது ஒரு நேரத்தில் ஒரு பாவத்தை தூண்டும். அது அப்போது நடக்க வில்லை எனில் மீண்டும்
சிறிது நேரம் கழித்து அதே பாவத்தை தூண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே
பாவத்தை தூண்டும். இதை தான் மனதின் பிடிவாதம் என்பார்கள்.
இத்தகைய மனோ நிலையிலிருந்து
சில பயிற்சிகல் மூலம் நம்மை தேற்றிக் கொள்ள முடியும்.
இந்த சூழ்நிலையிலிருந்து
நம்மை காத்துக் கொள்ளும் வழி
1.
ஷரீஅத்தின் அடிப்படையில் எதையும் யோசிப்பது ஒவ்வொரு செயலிலும்
இது பற்றி விழிப்புடன் இருப்பது.
ஜுனைதுல்
பக்தாதி ஆசையாய ஒரு பறவை வளர்த்தார். திடீரென அதை பறக்க விட்டுவிட்டார். மக்கள் காரணம்
கேட்டனர். அது எனக்கு ஒரு உபதேசம் செய்வதாக கூறியது அதனால் பறக்க விட்டேன். அது கூறியது.
பறவைகள் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டே இருக்கும். அப்போது அவை மாட்டிக் கொள்ளாது.
அல்லாஹ்வை மறக்கிற ஒரு கணத்தில் அவை மாட்டிக் கொள்ளும். அப்படி ஒரு கனத்தில் தான் நான்
உங்களிடம் மாட்டிக் கொண்டேன் என்று கூறியது.
எந்த
ஒரு சிந்தனையிலும் ஷரீஅத் நினைவில் இருக்குமானால் தவறுகளில் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பம்
வராது.
2.
மனதிற்கு எது கஷ்டமானதோ அதை செய்வது
தவறுகள்
இலேசாக தோன்றும் நன்மை செய்வது சிரம்மாக தோன்றும் .சிரமத்தை எடுத்துக் கொள்ள பயிற்
எடுத்துக் கொள்வது நல்லது
3.
நல்லோர்களின் நடை முறைகளை பின்பற்றுவது.நல்லோர்களுடன் சேர்ந்திருக்க
முயற்சிப்பது.
ஒரு நாள் ஆயிஷா
ரலி அவர்கள் வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்து விட்டு இந்த அளவு நன்மை செய்தவர்கள்
யாரும் இருப்பார்களா என பெருமானார் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். ஆம் உமர் அப்படிப்பட்டவர்
என பெருமானார் பதிலளித்தார்கள். அடுத்து பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபக்கர்
என்னோடு சவ்ரு குகையில் மூன்று இரவுகள் தங்கியிருந்தாரே அதில் ஒரு இரவின் நன்மை இவற்றை
எல்லாம் விட மிக அதிகமானது.
மனதில் மூன்றாவது
வகை நப்ஸே முத்மஇன்னா
இந்த மனதில் அல்லாஹ்விற்கு
எதிரான சிந்தனையும் தோன்றாது. சக மனிதர்களுக்கு எதிரான சிந்தனையும் தோன்றாது.
அன்னை ஆயிஷா ரலி
அவர்கள் மீது அவதூறு சொன்னதற்காக தண்டிக்கப் பட்டவர்களில் ஒருவர் ஹஸ்ஸான் பின் சாபித்
ரலி.
அவர் ஒரு நாள்
ஆயிஷா அம்மாவின் வீட்டு முற்றத்தி உட்கார்ந்திருந்தார். அந்த வழியாக கடந்து சென்ற ஒருவர்
“இவர் உங்கள் வீட்டிலா என்று பழைய கதயை நினைவூட்டினார். ஆயிஷா அம்மா கூறினார்கள். இவர்
பத்று யுத்தத்தில் கல்ந்து கொண்டவர் அல்லவா? இவரை குறை கூறார்தீர்கள். என்றார்கள்.
இத்தகைய ஆத்மாக்கள்
இறக்கும் போதுதான் மலக்குகல் வாழ்த்துச் சொல்கிறார்கள்.
يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي
இது இறூதி நேர பிரார்த்தனை மட்டுமல்ல
இஸ்லாம் உலகிற்கு
கற்றுத்தருகிற வாழ்வியல் வழிகளில் ஒன்று. வாழும் காலம் வரையும் அதற்கு பின்னரும் ஆன்மா
அமைதியானதாக இருக்க வேண்டும். கொந்தளித்துக் கொண்டே இருக்க கூடாது.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
நல்லதொரு இம்மை மறுமை சிந்தனை
ReplyDeleteماشاء الله تبارك الله
ReplyDeleteأرى هذه الخدمة نقية من قلبك،
ReplyDeleteلعلك أوتيت الاستقامة أثناء المشغولات، ندعوا الله عز وجل أن يبارك فيك وفي أهلك يا استاذ ،
اللهم آمين.
மாஷா அல்லாஹ்
ReplyDeleteجزاك الله
ReplyDeleteالحمد لله على كل حال
ReplyDeleteشكراً جزاك الله خير الجزاء في الدارين