வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 30, 2026

மதரஸாக்களின் மகத்தான பணி

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ إِنَّمَا يَتَذَكَّرُ اُولُوْا الْاَلْبَابِ

நம் இந்திய நாட்டில் எழுத்தறிவின்மையை போக்குவதற்கு ஏன் உலகில் எழுத்தறிவின்மையை போக்குவதற்கு மகத்தான பங்களிப்புச் செய்தவை மதரஸாக்கள்.

அதே போல மனித நாகரீகத்தை பண்பாட்டையும் இளம் தலைமுறையிடம் விதைப்பதிலும் நிகர் சொல்ல முடியாத சாதனைகளை செய்பவை மதரஸாக்கள்.

மதரஸாக்களுக்கு எதிரான் வெறுப்பு ஏன்?

மதரசா என்ற சொல்லை இன்று பிற்போக்கானதாகவும் தீவிரவாத்தை போதிக்கும் இடமாக சித்தரிப்பதில் இந்துத்துவ சக்திகள் பெரு முயற்சி செய்கீறார்கள்.

ஒரு எதார்த்தம் என்ன வென்றால்

மதரஸாக்கள் செய்கின்ற ஒரு மகத்தான பணி எது என்றால்

இஸ்லாம் இந்த மண்ணீல் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க மதரஸாக்களே காரணமாகும்.

இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளும்மார்க்க சட்டங்களும் இஸ்லாமிய கலாச்சாரமும் முஸ்லிம்களின் வாழ்விலிருந்து அழிந்து போய்விடாமல் இருக்க மதரஸாக்கள் மட்டுமே இப்போது துணை செய்கின்றன.

மதரஸாக்கள் சிறப்பாக நடைபெறுகிற இடத்தில் இஸ்லாமிய வாழ்வில் செழிப்பாக இருக்கிறது.

இதை பொருத்துக் கொள்ள முடியாமல் தான் மதஸாக்களுக்கு எதிராக தீய சக்திகள் தீவிரம் காட்டுகின்றன.

மதரஸாக்களின் மரியாதை

உலகில் மற்ற மதங்களின் நிறுவனங்களில் நிலவும் தீமைகளை பட்டியலிடுகிற போது மதரஸாக்கள் எவ்வளவு புனிதமானவை என்பது தெரியும்.

ஒரே ஒரு உதாரணம்

இந்து சாமியார்கள் நடத்தும் மடங்கள் பலவற்றிலும் போதை கலாச்சாரம் தலை தூக்கி இருக்கிறது.

நேற்று முன் தினம் இலங்கையில் மிகப் பெரிய அளவில் - அதாவது 100 கோடிக்கும் அதிகமான கஞ்சாவை கட்த்தியதாக 22 புத்த பிக்குகள் கைது செய்யப் பட்டார்கள்.

ஆனால் மதரஸாக்களில் மட்டுமே இன்று நல்லொழுக்கம் கற்பிக்கப் படுகிறது.

பெற்றோருக்கு கட்டுப்படு! ஆசிரியருக்கு கட்டுப்படு! ஒழுக்கமாக முடி வைத்துக் கொள். பண்பாட்டை பேணிக் கொள் என்று இன்று உபதேசிக்கப் படுகிற ஒரே நிறுவனமாக நம்முட்டய நாட்டில் மதரஸாக்கள் இருக்கின்றன.

இது மறுக்க முடியாத உண்மை

அது போல கல்வி நிறுவனங்களின் நிலை எப்படி இருக்கிறது ?

ஜெமினி கூறுகிறது.

யூனிபார்ம் வருகைப் பதிவு ஆகியவற்றியில் (Institutional Discipline) ஆகியவற்றில் நிலை மேமப்பட்டிருக்கிறது என்றாலும் ஆசிரியர்களுக்கான மரியாதை சமூக ஒழுங்கு என்பது வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது

பள்ளிக்கூடங்களின் சர்வதேச நிலவரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் படிக்கிற மாணவர்களில் நான்கு பேரில் ஒருவர் பயந்து கொண்டே படிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் உள்ள 57 சதவீத இளம் பருவத்தினர் தங்கள் சொந்தப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடக்கக்கூடும் என்று கவலைப்படுவதாகத் தெரியவந்துள்ளது

1999 பிறகு, 187,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க மாணவர்கள் பள்ளிகளில் துப்பாக்கி வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.

நம் நாட்டில் நிலமை இவ்வளவு மோசம் இல்லை என்றாலும் இங்கும் பாதுகாப்பும் பண்பாட்டு வளர்ச்சியும் வேகமாக சீரழிந்து வருகிறது.

நான் என்ன செய்கிறேன் பார் என்று திருநெல்வேலியில் ஒரு ஆசிரியரை மிரட்டுமிற மானவரின் வீடியோ ஒன்று சமூக ஊடக்ங்களில் வைரலானதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இது போல போதைக் கலாச்சாரமும் இந்திய மற்றும் தமிழ்க கல்வி நிறுவனங்களில் அச்சத்தை தரும் வகையில் வளர்துள்ளன.

இவற்றை எல்லாம் கருத்திலு கொண்டு கூறுகிறது

கல்வியும், ஒழுக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. ஆழமான கல்வியறிவுடன், நற்பண்புகள் புகட்டுவது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது

இந்த கட்டாய கடமையை நிறைவேற்று ஒற்றை நிறுவனமாக மதரஸாக்கள் இயங்கி வருகின்றன.

சிந்தித்துப் பாருங்கள் !

இன்று யாராவது ஒரு பெற்றோர்தன் பிள்ளையின் ஒழுக்கத்தை பற்றி பள்ளிக் கூட ஆசிரியர்களிடம் புகார் செய்து திருத்த முடியுமா?

ஆனால் இன்று மிக சாதாரணமாக சமூகத்தில் மதிக்கப்படுகிற மதரஸா ஆசிரியர் எவரிடமும் பெற்றோர் இந்த புகாரை தெரிவிக்க முடியும். அதற்குரிய சீர் திருத்த்தையும் பெற முடியும்

மதரஸாக்கள் மட்டுமே அறிவை ஒரு கண்ணாகவும் ஒழுங்கத்தை மறு கண்ணாகவும் போற்றி வருகின்றன.

மதரஸாக்களுக்கான சிலபஸை அல்லாஹ் வகுத்திருக்கிறான்.

மதரஸாக்களுக்கான அடிப்படை வழிகாட்டுதலை குர் ஆன் கற்பித்திருக்கிறது.

نْ اُرِيْدُ إِلاَّ الإِصْلاَحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوفِيْقِي إِلاَّ باللهِ عَلَيهِ تَوَكَّلتُ وَإِلَيهِ اُنِيْبُ» (سورة هود، 

 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எது பிரதானம் என்பதை சொல்லிக் கொடுக்கிறார்கள்.

 قوله  ﷺ: ‹‹ خياركم أحاسنكم أخلاقا ››

 وحين سأل الصحابة النَّبيُّ ﷺ: ‹‹ يا رسول الله، ما خير ما أعطى الإنسان ؟ قال: الخلق الحسن

இமாம் கஸ்ஸாலி மாணவர்க்ளுக்கு சொல்லுவார்

فعلى المتعلم أن يكون متواضعًا لمعلمه، وأن يكون بين يديه كالمريض بين يدي الطبيب الماهر

அறிஞர் அப்துல்லாஹ் பின் முபாரக் சொல்லுவார் : ஒழுக்கம் அழுகு படுத்தினால் மட்டுமே எந்த அறிவும் அதன் மேன்மையை தராது..

 

عبدالله بن المبارك رحمه الله: لا ينبل الرجل بنوع من العلم ما لم يزين علمه بالأدب.

 

இமாம் சஃதி சொல்லுவார். ஒழுக்கம் தான் மனிதனின் புறா வாழ்வையும் அக வாழ்வை சரிப்படுத்தும்.

وقال العلامة السعدي رحمه اللهالأخلاق الكاملة تجعل صاحبها مستقيم الظاهر والباطن، 

ஒழுக்கம் இல்லை என்றால் படிப்பது ஒன்றாக இருக்கும் செய்வது வேறொன்றாக இருக்கும்.

அதிகமாக விளைகிற போது தர்பூசணியின் விலை குறை கிறது. ஆனால் ஒழுக்கம் கூடக் கூட அது நன்மையாகவே அமையும்.

وقال الشيخ محب الدين الخطيب رحمه الله: كل شيء إذا كثر رخص، إلا الأدب فإنه إذا كثر غلا

ஒழுக்கம் படிப்பதே இனியது

 قال الإمام ابن شهاب الزهري رحمه الله: كنا نأتي العالم فما نتعلم من أدبه أحبُّ إلينا من علمه.

இத்தகைய அடிப்படையில் மதிக்க வேண்டியவற்றை உரிய முறையில் மதிப்பதுஒதுக்க வேண்டியவற்றை கண்டிப்பாக ஒதுக்குவது என்ற பிரதான  அளவுகோள்களில் பயிற்றுவிக்கப்படுவது மதரஸாக்களில் மட்டுமே

எனவே இன்றைய சூழலில் நல்லொழுக்கமும் பண்பாடும் வேண்டும் என்றால் மதரஸாக்கள் மட்டுமே அவற்றை தர முடியும்.

நாட்டிற்கு நல்ல குடிமக்களை மதரஸாக்களால் மட்டுமே வழங்கமுடியும்.

ஆடை உடுத்துவது, முடி வெட்டிக் கொள்வது, அபாசங்களுக்கு அடிமையாகி இருப்பது எதற்கும் கட்டுப்படாமல் இருப்பது என தறி கெட்டு அலைகிற இளம் சமுதாயம் இன்றைய நம் நாட்டின் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.   அதை மாற்ரும் மருந்து மதரஸாக்களிடமே இருக்கிறது.

லால்பகதூர் சாஸ்திரி இந்தியாவின் ஒப்பற்ற அரசியல் வாதி. அவர் தாஷ்கண்டில் இறந்த போது அமெரிக்க அதிபர் நாகரீக அரசியல் சரி பாதி

 மறைந்து விட்டதாக கூறினார்.

சாஸ்திரிக்கு ஒண்ணரை வயது இருக்கும் போது அவரது தந்தை மறைந்தார். அவரது தாயார் தனது மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கு சென்றார். அங்கு மதரஸா தான் இருந்தது. சாஸ்திரி மதரஸாவில் படித்தவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாஸ்திரிக்கு பள்ளி படிப்பு சிறப்பாக கிடைக்க வில்லை என்று அவரை பற்றிய தகவல்களில் படிக்கலாம். காரணம் அவர்களது ஊரில் பள்லிக்கூட வசதிகள் இருக்கவில்லை. ஆனால் அவர் பண்பாட்டில் சிறந்தவராக இருந்ததற்கு அவருடைய மதரஸா வாழ்க்கை ஒரு காரணமாகும்.

இந்த உண்மை இப்போது வெளிவருவதில்லை.  

இது பற்றி ஏ ஐ தகவல் தருகிறது.

·         லால் பகதூர் சாஸ்திரி:

·         இந்தியாவின் இரண்டாவது பிரதமரான இவர், தனது ஆரம்பக் கல்வியின் ஒரு பகுதியை வாரணாசியில் உள்ள ஒரு மௌலவியிடம் கற்றுக்கொண்டார். இது அக்காலகட்டத்தில் நிலவிய கல்வி முறையின் ஒரு பகுதியாகும்.

 நம் இந்திய திருநாட்டிற்கு பண்பாடு மிக்க குடி மக்களை கொடுத்த்தில் மதரஸாக்களின் பங்கு மகத்தானது.

 மதரஸாக்களின் இரண்டாவது பெரும் பணி இந்திய நாட்டில் எழுத்தறிவின்ம்மயை போக்குவதில் முதல் பங்காற்றியதும் மதரஸாக்கள் ஆகும்.

 கல்வி கற்கும் பணியில் எந்த அளவிலும் சிரமத்தை தாங்கிக் கொள்ள இஸ்லாம் மாணவர்களை பக்குவப்படுத்துகிறது

அதிக தூரம் பயணம் செய்வது

சரியான தூக்கம் கிடைக்காமல் போவது

ஆசிரியர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள்

சக மாணவர்களால் ஏற்படும் இடையூறுகள் என எதையும் சகித்து கொண்டு மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்.

பெருமானார் (ஸல்0 அவர்கள் ஒரு எக்ஸ்டிரீம் நிலையை விவரிக்கிறார்கள்;

وعن الحسن مرسلاً قال قال رسول الله صلى الله عليه وسلم: «من جاءه الموت وهو يطلب العلم ليُحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة» (رواه الدارمي، 

 மதரஸாக்கள் குர்ஆனை பிரதானமாக கற்றுக்கொடுத்தன.

 அதற்கு அரபு மொழியின் லிபியை அறிவு  அதாவது அலி ப் பா பற்றிய் அறிவு அத்தியாவசியமானது.

 உருது மொழிக்கும் அதுவே அடிப்படையாக இருந்ததால் மதரஸாக்களில் அரபு மொழியோடு உருதுவும் கற்பிக்கப் பட்டது. அத்தோடு பண்டைய காலங்களில் மதர்ஸாக்களில் கணிதமும் அடிப்படை அறிவியலும் கற்பிக்கப் பட்டது.

 இதனால் மதரஸாக்கள் இந்திய நகரங்களிலும் கிராமங்களிலும் அடிப்படை கல்விக்கான முதன்மை தேர்வாக இருந்தன.

 பல வட இந்திய நகரங்களில் இப்போதும் கூட தொடக்கப் பள்ளி கிடையாது.

 உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 1972 அரசு பள்ளிகள் இயங்கின்றன. அங்கு ஒரு கிலோ மீட்டருக்கு 300 பேர் வசிக்கிறார்கள்.

 தமிழ் நாட்டில் 2300 தொடக்கப் பள்ளிகள் இருக்கின்றன. உத்திரப் பிரதேசம் தமிழகத்தை விட பன் மடங்கு பெரியது. நமக்கு 39 எம் பி கள் இருக்கிறார்கள் எனில் உத்திரப் பிரதேசத்திற்கு 80 எம் பி க்கள் இருக்கிறார்கள்.

 பீகார் ஜார்கண்ட் மத்திய பிரதேச போன்ற வட மாநிலங்கள் பலவற்றின் நிலையும் இப்படித்தான்அங்கு தொடக்க பள்ளிகள் உள்ள நகரங்களின் எண்ணிக்கையே குறைவு, கிராமங்களின் நிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

 இந்த பகுதிகளில் எல்லாம் எழுத்தறிவு பெற பள்ளிக்கூடங்கள் இல்லாத குறையை மதரஸாக்களே நிறைவு செய்தன. ஏனெனில் ஒவ்வொரு பள்ளிவாசலோடும் ஒரு மதரஸா இருந்தது. இதல்லாம் முஸ்லிம்களின் இஸ்லாமிய கலவி வளர்ச்சிக்காகவும் மதரஸாக்கள் தனியாகவும் நடைபெற்று வந்தனர். அங்கு அடிப்படை தேவையான கல்வி அனைத்தும் கற்றுக் கொடுக்க பட்டது.

 இம்மதரஸாக்களில் பயின்றோர் இந்தியாவில் நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.

மதரஸாக்களின் கல்விப் பங்களிப்புக்கு முக்கிய அடையாளம் . டாக்டர் அபுல்கலாம் ஆசாத் ஆவார். மதரஸாவில் படித்தவ அவர் தான் இந்தியாவின் முதல் கல்வியமைச்சராக இருந்தார்.

 மதரஸாக்களில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்து மத சிறுவர்களும் கூட கல்வி பெற்றனர்.

 ஏற்கெனவே நாம் லால்பகதூர் சாஸ்திரியை பற்றி அவர் மதரஸாவில் கல்வி பயின்றவர் என்று கூறுயிருந்தோம்.

 அப்படி மதரஸா கல்வி பெற்ற இந்துக்களில் பலர் இந்திய அரசியல்வானில் நட்சத்திரங்களாக ஜொலித்துள்ளனர்.

 ஏ ஐ மதரஸாக்களில் பயின்ற இன்னும் சிலரை பற்றி சொல்கிறது.

 ·         டாக்டர் ராஜேந்திர பிரசாத்: இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இவர், ஒரு மௌலவியிடம் தனது தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். அவர் பாரசீக மொழி மற்றும் கணிதத்தை மதரஸா முறையிலேயே முதலில் பயின்றார்.

 ·         முன்ஷி பிரேம்சந்த்: புகழ்பெற்ற எழுத்தாளரான இவர், தனது ஆரம்பக் கல்வியை ஒரு மதரஸாவில் பயின்றார். அங்குதான் அவர் உருது மற்றும் பாரசீக மொழிகளைக் கற்றுக்கொண்டார், இது அவரது பிற்கால இலக்கியப் படைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது.

 இந்த பட்டியல் பழைமையானது. இதற்கான முற்றிலும் புதிய ஒரு உதாரணத்தை நேற்றைக்கு முன் தினம் சமூக ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.

பீகார் மாநிலத்தில் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் பதவியை ராஜினா செய்து விட்டு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் ஆகிவிட்டார். பீகாரில் இப்போது பாஜக வின் சார்ந்த சாம்ராட் சவுத்ரீ ஒரு பத்ரிக்கைகு அளித்த பேட்டியில் நான் போஜ்புரி மொழியில் ஆணா ஆவன்னா படிப்பதற்கு முன் அலிப் பே படித்தவன் என்று கூறுயிருக்கிறார்.

இது ஒரு மகத்தான சாட்சி.

சாம்ராட் சவுத்ரிக்கு வயது சுமார் 55 ஆக இருக்கும்.

அப்படியானல் மிக சமீபத்திய தலைமுறை வரை பீகார் மாநிலத்தில் எழுத்தறிவு பெறுவதற்கு  மதரஸா கல்வி தான் காரணமாக இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.  

இந்திய மக்களின் எழுத்தறிவுப் புரட்சிக்கும் கலாச்சார பண்பாட்டு மேன்மைக்கு காரணமாக இருந்த மதரஸாக்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள பாஜக மாநிலத்தை ஆளும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு முயற்சி செய்து வருகின்றன. மத்திய அரசும் தூய கல்விப் பணி செய்து வருகிற  மதரஸாக்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது.

 இது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது. இந்திய சிறுபானமையின் முஸ்லிம்களுக்கு அரசியல் சாசணம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்க கூடியது.

 அது மட்டுமல்ல இந்திய அரசியல் பண்பாட்டுக்கு மதரஸாக்கள் வழங்கிய கொடையை மறந்து செய்கிற நன்றி கெட்ட தனமும் ஆகும்.

 அது மட்டுமல்ல இன்றுள்ள சூழலில் சீர்க் கெட்டுப் போயிருக்கிற கலாச்சாரத்தை மீட்கப் போராடுகிற மதரஸாக்களுக்கு இடையீறு செய்வது ஒரு சமூக குற்றமும் ஆகும்.

 மத்திய மாநில அரசுகள் மதரஸாக்களுக்கு எதிரான தங்களது அநாகரீக திட்டங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகைய செயல்பாடுகள் உண்மையில் பரிசுத்தமான இந்திய கல்விப் பாரம்பரியத்திற்கு எதிரான ஒரு தேச விரோத செயலே ஆகும்.

இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் ஜமாத்துக்கள் மதரஸாக்களை தீனின் அடிப்படை கேந்திரங்களாக தொடரந்து பராமரித்து வருவது அடிப்படை கடமையாகும்.

மதரஸா என்பதுஅழுக்கடைந்த அறைகள் கிழிந்து போன பாய்கள் திட்டமிடப்படாத பாட திட்டங்கள் ஆகியவை என்ற மதரஸாக்களைப் பற்றி ஒரு மோசமான தோற்றம் ஏற்பட காரணமாகி இருக்கலாம் .

மதரஸாக்களில் சிறப்பு கவனம் செலுத்தி அவ்ற்றின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்த ஜமாத்துகள் முயல் வேண்டும்.

இன்றைய சூழலுக்கு இது அவசியமாகும்.

விரைவான தரமான மார்க்க கல்வி என்ற உத்வேகம் மிக்க இலக்குகளோடு மதரஸாக்களை செயல்படச் செய்ய வேண்டும்.

மதரஸாக்களின் மேம்பாட்டிற்கு 3 வழிகளில் கவனம் செலுத்தலாம்.

1.   மதரஸாக்களின் அமைப்பு சூழலை நவீனப்படுத்தல்

(காற்றோட்டமான  அறைகள், பென்ச்சுகள். மின் விசிறிகள் பளிச்சென்று காணப்படுகிற கரும்பலகைகள் இது போல இன்னும் பல

2.   கற்பிப்புபு நடைமுறைகலை நவீனப்படுத்துதல் தரப்படுப்படுத்துதல்

ஸ்மார்ட் கிளாஸ்கள், இணையத்தின் கிடைக்கிற தரமான ஒளி ஒலி வடிவ பாடங்களை பயன்படுத்துதல் பவர் பாயிண் ஸ்லைடு ஷோக்கள் பாடல்களை பயன்படுத்துதல்

3.   சமூக செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல்

துப்புறவு பணிகளில் ஈடுபடுதல், நோயாளிகளை சந்தித்தல், பொது நன்மைக்குரிய காரியங்களைப் பற்றி விழுப்புணர்வு ஊட்டுதல் ஆகிய    

இந்திய விடுதலை போராட்ட்த்தில் மதரஸாக்கள் ஆற்றிய பணியை சாவர்க்கர் உட்பட் இந்திய வரலாற்றை ஆய்வு செய்த அத்தனைபேரும் பாராட்டியுள்ளனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கதது.

எனவே  மதரஸா ஆசிரியர்களும் ஜமாத் நிர்வாகத்தினரும் தீவிர அக்கறை செலுத்தினால் மதரஸாக்களை பற்றி தேவையின்றி உருவாக்கப்படும் தீய மனப்போக்கை மற்ற முடியும் என்பது மட்டுமல்ல காலத்தின் வளர்ச்சிக்கேற்ப நாமும் வளர முடியும். .

மதரஸாக்களுக்கு முக்கியத்தும் அளிக்க முஸ்லிம்களை தூண்ட இந்த ஹதீஸை விட வேறொரு வழிகாட்டுதல் தேவையில்லை.

 وعن عثمان قال: قال رسول الله صلى الله عليه وسلم: «خيركم من تعلَّم القرآن وعلَّمه» (رواه البخاري

 

எல்லாம் வல்ல இறைவன் அவதூறாக உருவாக்கபடுகிற கற்பனை கதைகளிலிருந்து மதரஸாக்களை காப்பாற்றுவானாக!

மதரஸாக்கள் மீது சரியான அக்கறை கொண்டு தரம் மிக்க மதரஸாக்களை உருவாக்க முஸ்லிம் உம்மத்திற்கு தவ்பீக் செய்வானாக!

((மக்கா முகர்ரமாவின் ரொடானா ரைஹான் விடுதியின் வரவேற்பறையில் இருந்து)


  

2 comments:

  1. Anonymous9:31 PM

    உஸ்தாத் எங்களுக்கும் ஹஜ்ஜின் பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள் மிக்க நன்றி ஜஸாகல்லாஹ் கைரா

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஹஜ்ரத் எங்களுக்கும் ஹஜ்ஜின் பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள் மிக்க நன்றி ஜஸாகல்லாஹ் கைரா

    ReplyDelete