வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 02, 2026

வாழ்க்கைய சிற்ப்பாக்கி கொள்ளும் வழிகள்

 அல்லாஹ் இந்த உலகில் நம்மை படைத்ததும் வாழ்க்கை வசதிகளை கொடுத்ததும் சோதனைகளை ஏற்படுத்துவதும் இறுதியில் மரணிக்கச் செய்வதும் எதற்காக?

நம்மில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை அவன் அறிந்து கொள்வதற்காக!

خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ 

 எனவே நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை விட எப்படி சிறப்பாக வாழ்கிறோம் என்பதே முக்கியமானது.

 உண்மையாளர்களாக

உபகாரிகளாக

உத்தமர்களாக

 வாந்தோமா ?

 வஞ்சகர்களாக’

கஞ்சர்களாக

கடும் பாவிகளாக

 வாழ்ந்தோமா ?  என்பது தான் கவனிக்கப் பட வேண்டியது.

 எல்லாவற்றிலும் அல்லாஹ் நமக்கு நன்மையை நஸீபாக்கி தருவானாக

 சஃது பின் முஆத் ரலி அவர்கள் நான்கு வருடம் தான் பெருமானார் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தார்கள். ஆனால் இறுதியில் ஹிஜ்ரீ 4 ம் வருடம்  மரணித்த போது அந்த செய்தியில் அர்ஷு நடுங்கியது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அதே போல ஹழ்ரத அபூஹுரைரா ரலி அவர்களும் பெருமானாருடன் நான்கு வருடம் தான் வாழ்ந்தார்கள். ஹிஜ்ரீ 7 ம் ஆண்டில் தான் அவர் இஸ்லாமை தழுவினார். ஆனால் பெருமானாரிடமிருந்து அதிகப் படியான ஹதீஸ்களை அறிவித்தவராக தினம் தினம் முஸ்லிம் உம்மத்தால் அதிகம் நினைவு கூறப்படுகிற அவர் இருக்கிறார்.

 வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டிய வாழ்க்கை இது.

 வாழ்க்கைய தரமுள்ளதாக ஆக்கிக் கொள்ள நாம் நமது வாழ்வில் செய்கிற செயல்களை தரமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

 தொழுகிறோம். (தொழவேண்டும்)

தொழுகையை தரமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

  عن أنس قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((حبِّب إليّ من الدنيا النساء والطِّيب، وجُعلت قُرة عيني في الصلاة

 பாத்திமா ரலி அவர்கள் தொழுவார்கள். தொழுது விட்டு. அல்லாஹ்வே இந்த இரவை இவ்வளவு சின்னதாக படைத்து விட்டாயே என்று அழுவார்கள்

 முன்னோர்களின் முன்னேற்பாடுகள்

 இகாமத் சொல்லும் போது ஒழுவுடன் இருப்பேன்.

 قال عَدي بن حاتم: ما أقيمت الصلاة منذ أسلمت إلا وأنا على وضوء

 பாங்கு சொல்லும் போது பள்ளியில் இருப்பேன்.

 يقول سعيد بن المسيب: ما أذن المؤذن منذ ثلاثين سنة إلا وأنا في المسجد..

 இன்னும் ஏராளமான  செய்திகள் தொழுகையை சிறப்பானதாக ஆக்கிக் கொள்வதில் இருக்கின்றன.

 நாம் நம்மால் முடிந்தவரை தொழுகையை சிறப்பாக தொழ வேண்டும்

 அது போலவே மார்க்கத்தின் அனைத்து கடமையையும் சிறப்பாக செய்வேன் என்று தீர்மாணித்துக் கொள்ள வேண்டும்.

 சிறப்பாக நோன்பு

சிறப்பாக ஜகாத்

சிறப்பாக ஹஜ்

சிறப்பாக குடும்ப வாழ்க்கை

சிறப்பாக வியாபாரம்

சிறப்பாக பொதுச் சேவை என அனைத்திலும் சிறப்பியல்புகளை விரும்புகிறவர்களாக நாம் ஆக வேண்டும்.  

நாம் ஒரு காரியம் செய்தால் அது வெற்றிகரமானதாக மட்டுமல்ல சிறப்பானதாகவும் ஆகுமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

 வாழ்க்கையின் வசதிகள் உயரும் போது ஒரு குறீப்பிட்ட பிராண்டை தான் பயன்படுத்துவேன் என்று செல்வந்தர்கள் தீர்மாணிப்பது உண்டு.

 அது போல முஃமின்கள் ஒவ்வொருவரும் தமது செயல்களை பிராண்டிற்குரியதாக சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள முய்ல வேண்டும்.

 எதை எப்படி சிறப்பாக்கி கொள்வது ?

 மார்க்கத்தின் மகத்தான வழிகாட்டி ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவரகள் எதை எப்படி சிறப்பானதாக ஆக்கிக் கொள்வது என்பதற்கு 7 வழிகளை சொன்னார்கள்.

 1.   நிஃமத்தை நன்றியால் சிறப்பாக்குகள்

 அல்லாஹ் நமக்கு எவ்வளவோ நிஃமத்துக்களை செய்கிறான். ஆரோக்கியம் அந்தஸ்த்து வீடு குடும்பம் சமூக செல்வாக்கு என அவன் வழங்கும் ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்த்து அவனுக்கு நன்றி செலுத்தும் போது அந்த நிஃமத்துக்களை நாம் அனுபவிப்பது சிறப்பானதாக அமைந்து விடும்.  

 அல்லாஹ் எல்லோருக்கும் நிஃமத்துகளை கொடுக்கிறான். ஆனால் அதற்கு நன்றி செலுத்துகிறவர்களே நல்லவர்களாக மிளிர்கிறார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையை அதிகம் சொல்லுவோம்.

 அல்ஹம்துலில்லாஹ் நன்றாக இருக்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ் சப்பிட்டுவிட்டேன்.

அல்ஹம்துல்லிலாஹ் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தேன்

அல்ஹம்துலில்லாஹ் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்

 என ஒவ்வொரு காரியத்திலும் அல்ஹ்மது லில்லாஹ் சொல்லும் போது அது நமக்கு கிடைத்த நிஃமத்தை நாம் சிறப்பானதாக ஆக்கிக் கொண்ட்தாகும்.

 ஒரு பெரிய ஆலிம் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார். அவரிடம் ஒரு பணக்கார்ரை அறிமுகம் செய்தார்கள். சற்று நேரத்தில் அவரிடமிருந்து ஆலிம் விலகி வந்து விட்டார். என்ன வென்று சுற்றியிருந்தவர்கள் காரணம் கேட்டார்கள் ஹழ்ரத் சொன்னார். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன் . எல்லாம் நல்லபடி போகிறது என்றார். ஒரு அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வில்லை. அவரோடு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று வந்து விட்டேன் என்று சொன்னார்.

 அல்ஹம்து லில்லாஹ் சொல்லாத போது எவ்வளவு பணம் இருந்தாலும் அது சிறப்பானதாக அமைவதில்லை.

 அல்ஹம்து லில்லாஹ் சொல்லும் போது அல்லாஹ் மேலும் சிறப்பாக்குகிறான்.

 2.   சோதனைகளை பொறுமையால சிறப்பாக்குங்கள்

 மக்களுக்கு பல்வேறு விதமான சோதனைகள் ஏற்படலாம்.

·         பணக் கஷ்டம்

·         ஆரோக்கிய குறைவு

·         அவமரியாதைகள்

·         மனக் கவலைகள்

 இதில் எது நிகழும் போது பொறுமையாக நடந்து கொள்கிறவர்கள் சிறப்பான மனிதர்கள் ஆவார்கள்.

 பொறுமை இல்லாமல் நடந்து கொள்வதால் நன்மை எதுவும் விளையாது.

 ஒரு அறிஞர் கூறினார். ஒரு சோதனை ஏற்பட்ட மூன்றாம் நாள் ஒரு மனிதர் எப்படி நடந்து கொள்வாரோ அது போலவே முதல் நாளில் நடந்து கொள்ள பழக வேண்டும். அது தான் சிறப்பு.

 பொறுமை நிச்சயம் பலன் தராமல் போகாது.  திருக்குர் ஆன் உறுதியளிக்கிறது.  إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (153)

 கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்வோர்.

 وقال علي بن الحسين زين العابدين : إذا جمع الله الأولين والآخرين ينادي مناد : أين الصابرون ليدخلوا الجنة قبل الحساب ؟ قال : فيقوم عنق من الناس ، فتتلقاهم الملائكة ، فيقولون : إلى أين يا بني آدم ؟ فيقولون : إلى الجنة . فيقولون : وقبل الحساب ؟ قالوا : نعم ، قالوا : ومن أنتم ؟ قالوا : الصابرون ، قالوا : وما كان صبركم ؟ قالوا : صبرنا على طاعة الله ، وصبرنا عن معصية الله ، حتى توفانا الله . قالوا : أنتم كما قلتم ، ادخلوا الجنة ، فنعم أجر العاملين .

3.   அறிஞனின்  சிறப்பு நிதானம்

 அறிவாளி என்பவர் நிதானமாக நடந்து கொள்ளும் போதே சிறப்படைவார்.

திருக்குர் ஆன் அல்லாஹ்வை அடையாளப்படுத்துகிறது.

 وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا

அல்லாஹ் மக்களின் எத்தனை குற்றங்களை பார்க்கிறான். அவன் சினம் கொண்டு சீற்றமடைவதில்லை.

 பெருமானார் (ஸல் அவரக்ளின் நபித்துவ அடையாளங்களில் ஒன்றாக நிதானம் இருந்தது. அவர்கள் அனைத்து தரப்பிடமும் நிதானமாக நடந்து கொண்ட்தற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. அதை கண்டு பலர் இஸ்லாமை தழுவியதும் உண்டு.

 இமாம் அபூயூசுப் ரஹ் அவர்களிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். இமாம் அபூயூசுப் ரஹி பதில் தெரியவில்லை என்றார்கள். (லா அத்ரீ)

அவர் இரண்டாவதாகவும் ஒரு கேள்வி கேட்டார் இமாம் அபூஹனீபா எனக்கு தெரியாது என்றார்கள்.

அவன் கடும் கோபத்து அரசாங்க கஜானாவின் பாதி சம்பளத்தை சாப்பிடுகிறீர்கள். கேட்டதற்கெல்லாம் தெரியாது என்கிறீர்களே என்றான்.

இமாம் அபூயூசுப் பதில் சொன்னார்கள். சகோதரரே! எனக்கு தெரிந்தவைகளுக்குத் தான் இந்த பாதி சமபளம் தருகிறார்கள். எனக்கு தெரியாதவைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் இரண்டு மூன்று கஜானாக்களை மொத்தமாக கொடுத்தாலும் பத்தாது என்றார்கள்.

 4.   மாணவர்களுக்கு சிறப்பு இயலாமையை வெளிப்படுத்துவது.

 புத்திசாலி மாணவர் என்பவர் எல்லாம் தனக்கு தெரியும் என்பது போல நடந்து கொள்ள கூடாது.

 எனக்கு அதிகமா எதுவும் தெரியாது என்று நினைப்பாரானால் அவர் அதிகம் கற்றுக் கொள்வார்.

 அறிஞர்கள் சொல்வதுண்டு.   لا يتعلمُ العلمَ مستحيٍ ولا متكبِّرٌ

 கற்றுத்தருபவர்களிடம் பணிந்து நிற்பதே கல்வியை நிலைக்க செய்யும்.

 உமர் ரலி அவர்கள் அற்புதமாக கூறினார்கள்.

 وتواضعوا لمن تعلمتم منه العلم،

உலகின் மாக சக்ரவர்த்திகளில் ஒருவரான ஹாரூன் ரஷீத் இமாம் அபூயூசுப் ரஹ் அவரக்ளின் முன் கை கட்டி நிற்பார் என்று வரலாறு சொல்கிறது.

 இத்தகைய பணிவே கல்வியை சிறப்பானதாக ஆக்கும்.

 5.   உபகாரத்தின் சிறப்பு சொல்லிக் காட்டாமல் இருப்பது.

திருக்குர் ஆன் கூறுகிறது.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ 

 நாம் கொடுப்பதே அல்லாஹ் கொடுத்த்தை தான். அதை மறந்து நான்

உனக்கு நான் இப்படி உதவி செய்தேனே என்று சொல்லிக் காட்டி விடுகிற போது நீ யா கொடுத்தாய் என்று இறைவன் நம்மை பார்த்து திருப்பி கேட்கிற சூழ்நிலை உருவாகும்.

 6.       தொழுகையின் சிறப்பு அடக்கம்.

 தொழுகையில் உலக நினைவுகள் வருவதை தவிர்க்க கூடுமானவரை முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு அல்லாஹ்வை நினைப்பதும், திக்ரு திலாவத்துக்களை கவனமாக ஒதுவதும் துணை செய்யும்.

 7.   அல்லாஹ்வை பயப்படுவதன் சிறப்பு பாவங்களை தவிர்ப்பது.

 நாம் எல்லோரும் அல்லாஹ்வை பயப்படுகிறோம் தான்.

யா அல்லாஹ் என்று சொல்லும் போது நடுங்காத இதயம் இருக்காது.

ஆனால் அந்த பயத்தின் சிறப்பான அளவு எதில் இருக்கிறது என்றால்

அல்லாஹ் தடை செய்தவற்றை நெருங்காமல் இருப்பதில் இருக்கிறது.   

 பாவம் செய்து விட்டு அல்லாஹ்வை அஞ்சி அழுவது பயப்படுவதன் முதல் படியாகும்.

பாவம் செய்யாமலே வாழ முயற்சிப்பது பயத்தின் சிறப்பான அளவாகும்.

 இது சிறப்பான வாழ்க்கையை மக்களுக்கு தரும்.

 ஹராமான வற்றை பார்க்காமல் தவிர்ப்பது நல் அமல்களை செய்ய பாக்கியம் தரும் என்று ஒரு ஹதீஸ் உண்டு.

 பாவம் செய்ய வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ்வின் திருமுகத்தை பார்க்கும் பாக்கியம் மறுமையில் கிடைக்கும் என்று அறிஞர்கள் சொல்வதுண்டு,

  وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ (40فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ (41)

 நாம் வாழ்கிற இன்றைய காலம் எல்லா வகையிலும் உணவு உடை பழக்க வழக்கங்கள் சம்பாத்தியம் கட்டுப்பாடு கண்ணியம் என அனைத்து வகையிலும் சீரழிவுகளை சந்திக்கிற காலமாக இருக்கிறது.

 மிக எச்சரிக்கையாக சின்ன பாவங்களை கூட தவிர்த்துக் கொள்வதற்கு முயல்வோம் குறைந்த பட்சம் பெரும் பாவங்களை நெருங்கவும் வேண்டாம்.

அல்லாஹ்வின் அச்சம் நம் இதயத்தில் சிறப்பாக இருக்கட்டும்.

 வாழ்க்கையை எல்லா வகையிலும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள் உலகின் மிகச் சிறந்த மனிதர் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் சொன்ன இந்த அறிவுரைகள் மிக அடிப்படையானவைகள்.

 நாம் உயர நினைத்தில் உள்ளத்தில் அழுத்தமாக இவற்றை பதித்து வைத்துக் கொள்வோம்.

 ஒரு அற்புதமான ரலமானுக்கு பிறகு வாழ்க்கையை மேலும் சிறப்பாக்கிக் கொள்ள முடிந்த வரை முயற்சிப்போம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக

No comments:

Post a Comment