வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 26, 2026

போர் நியதிகள் வெல்லட்டும்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் அக்கிரமமாக ஈரான் மீது தொடுத்த யுதத்த்தில் இதுவரை  ஈரானிலும் லிபியாவிலும் சுமார் 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கடும் காயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு மாத காலத்தை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிற யுத்தத்தில் அமெரிக்கா இஸ்ரேல் தரப்புக்கு உயிர் சேதாரம் அதிகம் இல்லை என்றாலும் பொருள் நஷ்டம் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த யுத்தத்தின் காரணமாக எந்த தரப்பிலும் சாராத கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளவர்கள் பயந்து கொண்டே வாழ்கிற நிலை உருவாகியுள்ளது.  

அல்லாஹ் அப்பாவிகள் அனைவரையும் தனது கேடயத்தால் பாதுகாத்தருள்வானாக!

நமது நாட்டில் பெட்ரோல் விலை கனிசமாக உயரக் கூடும். காஸ் தட்டுப்பாடு இன்னும் அதிக நாட்களுக்கு நீடிக்க கூடும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

போரை தொடங்கிய அமெரிக்காவுக்கோ  பெரிய இழப்புகள் எதுவும் இல்லை. காரணம் அமெரிக்காவின் இழப்பை ஈடு செய்ய அரபு நாடுகள் தயாராக இருக்கின்றன. இதுவர்ர 6 டிரில்லியன் டாலர்கள் கத்தார் சவூதி துபாய் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வத்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் கூறுகிறார். இஸ்ரேலுக்கும் பாதிப்பு அதிகமில்லை. காரணம் இஸ்ரேலின் மொத்த பாதிப்பையும் அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் இதற்காகவும் கூட  உதவுமாறு அமெரிக்கா அரபு நாடுகளுக்கு உத்தரவிடும்.

இவ்வளவு சண்டைக்கு நடுவிலும் கூட அமெரிக்க டாலரின் மதிப்போ இஸ்ரேலிய செகலின் மதிப்போ பெரிதாக குறையவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சுமார் 94 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது . அதாவது நூறு ரூபாய் கொடுத்தால் அமெரிக்காவின் ஒரு டாலர் நமக்கு கிடைக்கும்.

இந்த யுத்தம் விரைவாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதன் முழு பொறுப்பும் யுத்தைதை தொடங்கிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இதை வலியுறுத்த வேண்டும். ஐரோப்பிய நாடுகள் இந்த யுத்த்தில் நாங்கள் பங்கேற்க வில்லை என்று சொன்னாலும் கூட அவை இஸ்ரேலையோ அமெரிக்காவையோ குற்றம் சுமத்த முன் வருவதில்லை.

இத்தனைக்கும் அமெரிக்கா உளவுப் பிரிவின் உயர் அரசியல் தலைவர்கள் ஈரானினால் அமெரிக்காவுக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலும் இருக்க வில்லை என்று தெளிவாக கூறியுள்ளனர்

எனவே இஸ்ரேலிம் அமெரிக்கவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அநீதியானது. சில தனிப்பட்ட லாபங்களுக்காக  ஒட்டு மொத்த உலகையும் சிக்குளுக்குள் தள்ளியிருக்கிறது.   

இப்போது யுத்த்த்தின் பாதிப்பு எல்லை மீறி சென்று விடும் ஆபத்து தென்படுகிற போது மனித சமூகம் உறுதியாக நீதியின் பக்கம் நிற்க வேண்டும்.

இரண்டு தரப்பிலும் பேசப்படுகிற வீர வசனங்கள் உலகை சூடேற்றி விடக் கூடாது.

அமெரிக்க அதிபர் தான் நேற்று பாகிஸ்தான் மூலம் 15 அம்ச போர் நிறுத்த திட்டத்தை அறிவித்திருப்பதாக கூறினார். அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வில்லை. சைத்தானின் கொடி அவரது தலைக்கு மேல் உயர்ந்து பறக்கிறது. ஈரானியர் நம்மிடம் கெஞ்சுகிறார்கள் . என்னை ஈரானின் உச்ச தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு வேண்டி நிற்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக பேசுவதில்லை என்கிறார்.

ஈரானின் வெளியுறவுத்துறை செயலாளரோ அமெரிக்கா பொய் சொல்கிறது. நாங்கள் சொல்லும் ஐந்து திட்டங்களை நிறைவேற்றினால் தான் போர் நிறுத்தம் பற்றி சிந்திக்கலாம் . அதுவும் அமெரிக்காவோடு பேச்சு வார்த்தை நடத்த முடியாது. அவர் பேசிக் கொண்டே முதுகில் குத்துகிறார்கள் என்று அறிவிக்கிறார்.

அவரது அந்த அறிவிப்பை பார்க்கிற போது கடந்த கால வரலாற்றின் நினைவுகள் வந்து போகின்றன.

இதே ஈரானை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட போது ஈரான் வல்லரசாக இருந்தது. சாஸானியப் பேரரசு என்ற பெயரில் அது தனிச்சிறுப்ப்புற்று விளங்கியது, இன்றைய சவூதி அரேபியாவின் ஒரு பகுதியிலிருது அஜர் பைஜான் வரை அதன் ஆதிக்கம் பரவி இருந்தது. இன்றைய இராக் இரான் பாலஸ்தீன், சிரியா முழுவதும் அதன் கட்டுப்பாட்டில் இருந்தனர்.    கலீபா உமர் ரலி அவர்கள் நீதியற்ற அந்த அரசை நீக்குவதற்காக அதனிடம் போர் புரிய 30 ஆயிரம் வீர்ர்களை படையினரை அனுப்பி வைத்தார்கள்.

பாரசீகத்திடம் 21/2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீர்ர்கள் இருந்தன.

காதிஸிய்யா என்ற இட்த்தில் முஸ்லிம்களும் பாரசீகர்களும் சந்தித்தித்தார்கள். காதிஸிய்யா என்பது இன்றைய இராக் நகரத்தில் இருக்கிற ஒரு புகழ் பெற்ற நகரம். பண்டைய மொசபடோமிய நாகரீகம் செழித்து வளர்ந்த நகரம்

பாரசீக படையின் தளபதியாக பிரபல போர் வல்லுனர்  தளபதி Rostam Farrokhzad  ருஸ்தும் பர்ஹுஸாத் இருந்தார்.

அவர் முஸ்லிம்களின் குறைந்த எண்ணிக்கையை பார்த்து வியப்படைந்தார். முஸ்லிம் வீர்ர்களோடு பேசினார். அதிக நாள் அவகாசம் கேட்டார்.  முஸ்லிம் வீர்ர் ரிப்ஈ பின் ஆமிர் ரலி மூன்று நாள் மட்டுமே உங்களுக்கு நாங்கள் அவகாசம் தருவோம் என்று கூறினார். அதற்குள் சண்டைக்கு தயாரா இல்லையா என்று முடிவு செய்து கொள் என்று கூறினார்.

ருஸ்தும் கொக்கரித்தார். முஸ்லிம் வீரக்களை காதிஸிய்யாவில் சமாதியாக்குவோன் என்று கூறினார்.

கீபி 636 ம் ஆண்டில் டைகிரிஸ் நதிக்கரையின் மேற்கே உள்ள அந்த காதிஸிய்யா நகரத்தில் நடந்த யுத்தத்தில் ருஸ்தும் தோற்று ஓடினார். கடைசியில் காபூலில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து போனான்.

ஆணவத்தில் கொக்கரித்தவர்களின் முடிவு எப்படி இருந்த்து என்பதற்கு இது போல வரலாறுகள் சாட்சியாக இருக்கின்றன.

ஈரான் இப்போது நீதியின் தரப்பில் நின்று வீரம் பேசுகிறது, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆணவத்தின் தரப்பில் நின்று அகங்காரம் செய்கிறாரகள்.

இதில் ஈரான் பக்கம் இருக்கிற நியாயத்தை நாம் ஆதரிக்க வேண்டும். நிச்சயமாக

அதே நேரத்தில் சண்டை தொடர்வதை நாம் வெறுக்க வேண்டும். சண்டை முடிவுக்கு வந்தாக வேண்டும்.

நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் அநீதமான் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிற ஈரானுக்கு மரியாதையான ஒரு போர் நிறுத்தம் உடனடியாக ஏற்பட வேண்டும்.

ஈரான் ஐந்து திட்டங்களை முன் வைத்திருக்கிறது. அவற்றில் பிரதானமானது.

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். தலைவர்கள் தேடி தேடி கொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

அதே போல ஈரானுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நஷ்ட ஈடு தரப்பட வேண்டும்.

ஹுர்முஸ் நீரினையில் தனக்குள்ள உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்.

இதில் முந்திய இரண்டும் மிக நியாயமானவை. ஹுர்முஸ் நீரினைவ்வ கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இப்போது கேட்பது பொறுத்தமாக இருக்காது.

சவூதி துபாய் ஓமன் போன்ற நாடுகள் பாரசீக வளைகுடா எனும் கடலுக்கு அருகில் இருக்கின்றன. அவை வெளியுலகை தொடர்பு கொள்ள அங்கிருந்து இந்துமா கடலுக்கு வரவேண்டும். இந்த இரண்டுக்கும் நடுவே வளைவான ஒரு கடல் பகுதி இருக்கிறது. சுமார் 39 கடல்மைல்களை கொண்ட அந்த பக்தி தான் ஹுர்முஸ் நீரினை என்று சொல்லப்படுகிறது. பாரசீக் வளைகுடாவையும் இந்துமகா சமுத்திரத்தையும் இணைக்கும் கடல் பகுதி அது. முற்காலத்தில் இருந்த ஒரு பாரசீக கடவுளின் பெயரால் ஹுர்முஸ் நீரிணைவு என்று அது அழைக்கப்படுகிறது. உலகிற்கு தேவையான கச்சா எண்ணையில் 30 சதவீதம் இந்த வழியாகத்தான் முழு உலகிற்கும் செல்கிறது. இந்த வழி ஈரானின் பார்டரில் இருக்கிறது.

இந்த வழி அடைக்கப்படும் எனில் அல்லது அதை கடக்க சுமார் 18 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனில் அது பெட்ரோல் உற்பத்தி செய்கிற நாடுகள் மற்றும் பெட்ரோலை உபயோகிக்கும் நாடுகள் அனைத்திற்கும் பெரும் பிரச்சனையாக அமையும். எனவே இது விசயத்தில் ஈரான் கொஞ்சம் இறங்கி வர வேண்டும். ஈரானுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கான கப்பல்களை மட்டும் அனுமதிக்க முடியாது என்ற அதன் தற்போதைய நிலை ஏற்புடையது. ஈரான் இதற்கு மேல் இதில் கண்டிப்பு காட்டுவதை தவிர்க்கலாம்.

நிச்சய்ம் ஈரான் அதை தவிர்க்க்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் கேந்திர முக்கியத்துவம் வாழ்ந்த அந்த பகுதியை தடுக்க 49 ஆண்டு கால வர்த்தக தடையில் இருந்த போதும் கூட ஈரான் நினைக்கவில்லை.  

எப்படியோ ஈரான் ஒரு சுமூக முடிவை எட்ட வேண்டும். அதற்கு அல்லாஹ் வழி செய்ய வேண்டும்.

ராணுவ பலத்தையும் தொழில் நுட்ப வசதியை மட்டுமே வைத்துக் கொண்டு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற அமெரிக்க இஸ்ரேலிய சக்திகள் பின் வாங்க வேண்டிய  நிர்பந்த்தை அல்லாஹ் ஏற்படுத்த வேண்டும்.

தன்னை எதிர்க்கும் நாடுகள் மீது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடுமையான நிபந்தனைகளை வித்தித்தது தான் இரண்டாவது உலக யுத்த்திற்கு காரணமாகும். முதல் உலக யுத்த்த்தின் போது ஜெர்மனியின் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தான் ஹிட்லர் உருவாக காரணம் என்பதை வரலாற்றை வாசிக்கிற எவரும் அறிவர்.

எனவே ஈரான் மீது நியாயமற்ற நிபந்தனைகள் எதையும் விதிப்பதை ஜனநாயகத்தை விரும்பும் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதில் மெளனம் காக்கவும் கூடாது.

வம்பு சண்டைக்கு அழைப்பவர்கள் தீயவர்கள்

وكان علي يقول : لا تدع إلى المبارزة ، فإذا دعيت فأجب تنصر ، لأن الداعي باغ

 நாம் தொடர்ந்து அல்லாஹ்விடம் ஆபியத் எனும் நிவாரணத்தை தருகிற நிம்மதிக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருப்போம்.

ஈமானுக்கு அடுத்த மதிப்பிற்குரியது ஆபியத்தாகும்.

وروى الصديق رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قالسلوا الله العافية ، فما أعطي أحد أفضل من العافية إلا اليقين

 அமெரிக்காவு இஸ்ரேலும் போர் நியதிகள் எதையும் கொஞ்சம் கூட பேணுவதில்லை.

பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூட்த்தை தாக்குதகிறார்கள். பொது மக்களை கொல்கிறார்கள். அதனால் இப்போது ஈரானில் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

சம்பந்தமே இல்லாமல் லிபியாவில் 1500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

 

இதற்கு எதிராக மிக சில அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களுமே கொல்லப்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் பலியானோரும் சொற்ப எண்ணிக்கையிலானவர்கள் தான்.

 

சண்டையின் போது சம்ப்ந்தமில்லாத அப்பாவிகள் கொல்லப்படுவதை இப்போதைய ஆட்சியாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதே இல்லை.

 

சவூதி அரேபியா மற்றும் கத்தாரின் நாட்டின் அதிகாரிகள் கூட ஹுர்முஸ் வளைகுடா தடுக்கப்படும் போது ஏற்படும் பொருளாதார பாதிப்புக்களை பற்றி பேசுகிறார்களே தவிர ஈரானிலோ ஏன் தங்களது நாட்டிலோ ஏற்பட்ட உயிரிழப்புக்களை பற்றி பேசுவதில்லை.

 

யுத்தங்களில் இஸ்லாம் கடை பிடிக்க கூறுகிற அடிப்பைடைகளில் முக்கியமானது .

 

உயிர்களைப் பாதுகாப்பது முக்கியம் அவன் எதிரியாக இருந்தாலும்

 

فقال تعالى (من أجل ذلك كتبنا على بنى إسرائيل أنه من قتل نفسا بغير نفسا أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم ر سلنا بالبينات ثم أن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون) المائدة الآية 32

 சம்பந்தமில்லாதவர்களோடு சண்டையிடுவது தடுக்கப்பட வேண்டும். இதற்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

 وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين,

 பெண்கள் சிறுவர்கள் கொல்லப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க கூடாது. அது போர்க்குற்றமாக பார்க்கப் பட வேண்டும்.

 عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ وُجِدَتْ امْرَأَةٌ مَقْتُولَةً فِي بَعْضِ مَغَازِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ -  البخاري 3015

    இஸ்ரேலின் அமைச்சர் ஒருவர் பாலஸ்தீன் குழந்தைகள்ள கொல்லுங்கள் என்று இராணுவத்திற்கு கூறுகிறார். ஏனெனில் அவர்கள் இஸேரேலுக்கு எதிரானவர்கள் என்று வாதிடுகிறார்.

70 வருடங்களுக்கு முன் இப்படித்தான் ஹிட்லர் யூதர்கள் விவகாரத்தில் கூறினார் என்பதை மறந்து விடுகிறார்.

 அபூபக்கர் ரலி அவர்கள் இன்னும் பல நியதிகளை  போர் வீரர்களுக்கு கூறினார்கள்

لا تخونوا ولا تغلوا ولا تغدورا ولا تمثلوا ولا تقتلوا طفلاً صغيرًا ولا شيخًا كبيرًا ولا امرأة ولا تقطعوا نخلاً ولا تحرقوه ولا تقطعوا شجرة مثمرة ولا تذبحوا شاة ولا بقرة ولا بعيرًا إلا لمأكلة وسوف تمرون على قوم فرَّغوا أنفسهم في الصوامع فدعوهم وما فرَّغوا أنفسهم له

நேற்றை முன் தினம் இஸ்ரேல் ஒரு பள்ளிவாசல் மினாராவை குறிவைத்து தாக்கியது. இது பற்றி எல்லாம் இப்போது யாரும் பேசுவதில்லை.

 அவர் மேலும் கூறினார்.

 ولا تقاتل مجروحًا فإن بعضه ليس منه، أقلل من الكلام فإن لك ما وعي عنك، وأقبل من الناس علانيتهم وكلهم إلى الله في سرائرهم ولا تحبس عسكرك فتفضحه ولا تهمله فتفسده، وأستودعك الله الذي لا تضيع ودائعه

 காயம்பட்டவனுடன் போரிடாதே, ஏனெனில் அவர்களில் சிலர் அவர்களை சார்ந்தவர்கள் அல்ல. குறைவாகப் பேசு, ஏனெனில் நீ பேசும் ஒவ்வொன்றும் குறித்து வைக்கப்படும். மக்களின் வெளித்தோற்றத்தை ஏற்றுக்கொள், ஏனெனில் அவர்களின் உள் எண்ணங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். உன் படையைத் மிகவும் கட்டுப்படுத்தி வைக்காதே!, அப்படிச் செய்தால் அது அவமானமடையும்; அதைப் தன்னிஷ்ட்த்திற்கு விட்டு விடாதே , அப்படிச் செய்தால் அது சீர்கெட்டுவிடும். நான் உன்னைக் அல்லாஹ்வின் பொறுப்பில் ஒப்படைக்கிறேன், அவனுடைய பாதுகாப்பில் எதுவும் ஒருபோதும் இழப்புகள் ஏற்படுவதில்லை.

.நாயைக் கூட சித்த்ரவதை செய்யாதே!

 فقال صلى الله عليه وسلم (إياكم والمثله ولو بالكلب العقور

மரங்களை தோட்டங்களை சிதைக்க கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ قَتَلَ صَغِيرًا أَوْ كَبِيرًا أَوْ أَحْرَقَ نَخْلًا أَوْ قَطَعَ شَجَرَةً مُثْمِرَةً أَوْ ذَبَحَ شَاةً لِإِهَابِهَا لَمْ يَرْجِعْ كَفَافًا- احمد 21334

மக்கள் வாழும் கட்டிடங்கள்ள குறி வைத்து இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்கி அழிக்கின்றன்

ஒரு உண்மை என்ன வென்றால்.

ஈரானின் தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலின் சில இலக்குகள் தாக்கப்படுகின்றன என்பது வாஸ்த்தவம் தான் , இன்று ஈரானின் தாக்குதலில் ஒரு கார் சேதமடைவதை இஸ்ரேல் காட்டுகிறது. ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் பல தலைமுறைகளுக்கு மக்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

சுமார் 130 போர்க் கப்பல்களை ஈரான் இழந்திருக்கிறது . 11 நீர்மூழ்கி கப்பல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.அணு சக்தி நிலையங்கள் பலதும் தகர்க்கப்ப்ட்டுள்ளன. அரசியல் தலைவர்கள் ராணுவ ஜெனரல்கள் ஆராய்ச்சியாளர்கள் ஏராளமானோர் கொல்லப் பட்டுள்ளனர். ஏராளமான நகரங்கள் சிதைக்கப் பட்டிருக்கின்றன.

 அதனால் ஈரானின் பதிலடியை பார்த்து சமூக ஊடகங்கள் மகிழ்ச்சியடைவது சரியானது அல்ல; ஈரானுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் அதே போல அரபு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளா பாதிப்புகள் மிகப் பெரியவை என்பதை நாம் உணர வேண்டும்.

இப்போது அமெரிக்க ஈரானின் மின் உற்பத்தி நிலையத்தை தாக்கிவிடுவேன் என்று மிரட்டுகிறது. இதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று யாரும் அமெரிக்காவிடம் கேள்வி எழுப்ப வில்லை. இதனால் அப்பாவி பொதுமக்களுக்கு ஏற்படப் போகிற பாதிப்பை குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை.

ஆக்ரமிப்பு சக்திகளின் கை ஓங்கியே இருக்கிறது.

எனவே இந்த யுத்தம் முற்றிலுமாக  நிற்க வேண்டும் என்று தொடர்ந்து நாம் பிராத்தனை செய்வோம்.

இந்த சூழலிலும் மலேஷியா இந்தோனேஷியா போன்ற சில இஸ்லாமிய நாடுகள் ஈரானுக்கான  தங்களது தார்மீக ஆதரவை வெளியிட்டிருக்கின்றன. அதே போல ஸ்பெயின் போன்ற சில ஐரோப்பிய நாடுகளும் வெளிப்படையாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கின்றன.

நியாயத்தின் பக்கம் நிற்போர் கை வலுப்படட்டும்.

இந்த யுத்தத்தை இப்போது நிறுத்தியாக வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிற நாடுகள் நியாயத்தையும் சார்ந்து நிற்பவர்களாக இருக்கட்டும்.

இவ்வளவு நடந்ததிலும் உலக அறிஞர்கள் ஒரு விசயத்தை கவனிக்கிறார்கள்.

ஈரான் அமெரிக்காவை திருப்பி தாக்கும் நோக்கில் சவூதி, கத்தார், பஹ்ரைன், அபுதாபி போன்ற நாடுகளை பலமாக தாக்கியது. என்றாலும் அந்த நாடுகள் ஏவுகனை தடுப்பு நடவடிக்கையில் இறங்கிய போதும் கூட ஈரானை திருப்பி கடுமையாக தாக்கவில்லை.

அதற்கு இஸ்லாமிய சகோதரத்துவ சிந்தனை ஓரளவில் பயன்பட்டிருக்கிறது என்றே அறிஞர்கள் பார்க்கிறார்கள்.

இஸ்ரேலும் அமெரிக்கவும் அரபு நாடுகளுக்கு நட்பு நாடுகளாக இருந்தாலும் கூட அவை ஈரான் தாக்கப்பட்ட்தை அவை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஈரானின் தாக்குதலில் உள்ள ஒரு நியாயம் அவர்களுக்கு உரைத்தது இதில் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் ஒரு பங்கு நிச்சயமாக இருக்கிறது.

அரபு நாடுகளின் அரசர்களுக்கு இந்த சிந்தனை வளர வேண்டும். உலக முஸ்லிம்களுக்கும் இந்த சிந்தனை வளர வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்.

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (10

அஹ்வான் என்றாலும் சகோதரர்கள் தான். இஹ்வத் என்றாலும் சகோதர்ர்கள் தான். எனினும் இஹ்வத் என்ற சொல் ஒரே தாய் வயிற்றில் பிறந்த இரத்த பந்த சகோதரர்களுக்கு சொல்லப்படும்.

இந்த யுத்த்த்திற்கு பிறகு இஸ்லாமிய சகோதரத்துவ கட்டமைப்பு வலிமை பெற அல்லாஹ் துணை செய்யட்டும்.

உலகில் சண்டை வருவது இயல்புதான். யாராவது ஒரு தரப்பு வெற்றி பெறும். யார் வெற்றி பெற்றார்கள் என்று முடிவாகாமல் இருப்பது சண்டையை இழுத்துக் கொண்டே செல்லும்.

எனவே போர் சீக்கிரம் முடிய வேண்டும்.

சண்டையை முடித்தாக வேண்டும் என்ற சிந்தனை அனைத்து தரப்பினருக்கும் வந்திருக்கிறது. இதில் ஈரானை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை என்பது மட்டுமே பிரதிபலனாக கிடைத்திருக்கிறது.

இந்த போரில் தான் வென்று விட்டதாக அமெரிக்க அதிபர் கூறுகிறார். வெட்கமே இல்லாமல் சர்வதேச ஊடக்ங்களும் அவை செய்தியாக்கி வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளும் கனவு கான்பது போல அவர்கள் வென்று விட்டதாகவே இருக்கட்டும். ஐரோப்பிய மற்றும் அரபியே சக்திகளும் அதை நம்பட்டும். ஆனால் அவர்கள் மிக எச்சரிக்கையாக ஈரானின் கோரிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் வைக்கட்டும் ஈரான் ஒருவேளை இறங்கி வருமானால் அதன் மீது அதிகப்படியான சுமைகளை ஏற்ற அமெரிக்காவிற்கு உலக நாடுகள் வாய்ப்பளித்து விடக் கூடாது.

இதுவே இன்றைய சூழலில் மிக முக்கிய மான போர் நியதியாகும்.

இதில் ஆக்ரமிப்பு சக்திகள் வெற்றி பெறுகிறார்களா அப்பாவிகள் வெற்றி பெறுகிறார்களா என்பதை விட இனி வரும் நாட்களில் போர் நியதிகள் வென்று உலகிற்கு நிம்மதியை தரட்டும்.

ஆமீன்

No comments:

Post a Comment