وَيُطْعِمُونَ
الطَّعَامَ عَلَى حُبِّهِ
ரமலான் நன்மைகளை
மொத்தமாக செய்து முடித்து விட்ட காலம் அல்ல.
தொடர்ந்து நாம்
நல்வழிகளில் நடை போட பயிற்சியளிக்கும் மாதம்.
உடனடியாக நாம்
நோன்பை நிறுத்தி விடாமல் ஆறு நாட்கள் நோன்பு நோற்க இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
قال رسول الله – صلى الله عليه وسلم -: {من صام
رمضان ثم أتبعه ستاً من شوال كان كصيام الدهر} [رواه مسلم وغيره].
இமாம் நவவி ரஹ் கூறுகிறார்.
30*10=300
- 6*10=60 360 நாள் நோன்பு
قال الإمام النووي - رحمه الله -: قال العلماء:
(وإنما كان كصيام الدهر، لأن الحسنة بعشر أمثالها، فرمضان بعشرة أشهر، والستة
بشهرين
ஷவ்வாலின் நோன்பு சுன்னத் என்றாலும் ரமலானிய நோன்புடன் சேர்த்து வைப்பதால் பர்ளை போன்றே நன்மை கிடைக்கும். ஒரு வருடம் முழுக்க பர்ளான நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும்.
வுஹைப் பின் அல் வர்த் கூறுகிறார்.
தவாப் செய்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்காதீர்கள். தவாபு செய்ய வாய்ப்புக்
கிடைத்தால் அதற்கு எப்படி நன்றி செலுத்துவது என்று கேளுங்கள்.
நாம் நிய்யத் வைத்தால். அல்லாஹ் அதற்கான வாய்ப்பையும் வழிகளையும் இலேசாக்குவான்.
فَعَنْ بُرَيْدَةَ قَالَ: أَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِلَالًا فَقَالَ: "يَا بِلَالُ، بِمَ سَبَقْتَنِي إِلَى الْجَنَّةِ؟ مَا دَخَلْتُ الْجَنَّةَ قَطُّ إِلَّا سَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي، دَخَلْتُ الْبَارِحَةَ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي، فَأَتَيْتُ عَلَى قَصْرٍ مُرَبَّعٍ مُشَرَّفٍ مِنْ ذَهَبٍ، فَقُلْتُ: لِمَنْ هَذَا الْقَصْرُ؟ فَقَالُوا: لِرَجُلٍ مِنَ الْعَرَبِ، فَقُلْتُ: أَنَا عَرَبِيٌّ، لِمَنْ هَذَا الْقَصْرُ؟ قَالُوا: لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ، فَقُلْتُ: أَنَا قُرَشِيٌّ، لِمَنْ هَذَا الْقَصْرُ؟ قَالُوا: لِرَجُلٍ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ؟ فَقُلْتُ: أَنَا مُحَمَّدٌ، لِمَنْ هَذَا الْقَصْرُ؟ قَالُوا: لِعُمَرَ بْنِ الْخَطَّابِ"، فَقَالَ بِلَالٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَذَّنْتُ قَطُّ إِلَّا صَلَّيْتُ رَكْعَتَيْنِ، وَمَا أَصَابَنِي حَدَثٌ قَطُّ إِلَّا تَوَضَّأْتُ عِنْدَهَا، وَرَأَيْتُ أَنَّ لِلَّهِ عَلَيَّ رَكْعَتَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "بِهِمَا"؛ [أخرجه الترمذي
புனிதம் மிக்க ரமலானில் நாம் கடைபிடித்த ஒரு அற்புதமான இயல்பு.
எல்லோரிடமும் அனுசரனையோடு நடந்து கொண்ட்து.
அனுசரனை என்றால் மற்றவர்களை நாமாக கருதிக் கொள்வது.
கஞ்சி காய்ச்சி
வழங்கினோம். அதற்காக உதவினோம். பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க கொடுத்தோம். சஹர் உணவு
பலரும் இலவசமாக கொடுத்தார்கள். புத்தாடைகள் வழங்கினோம். ஜகாத் தர்மங்களை செய்தோம்.
பெருநாளன்று பித்ரு சதகா வழங்கினோம். அக்கம் பக்கத்திலிருப்பவர்களை உறவுக்கார்ர்களை
அழைத்து நோன்பு திறக்கவும் சஹர் உணவு கொடுக்கவும் செய்தோம். மற்றவர்களின் தேவைகளை நமது
தேவையாக கருதிக் கொண்டது தான் இதற்கு காரணம்.
வயிற்றில் பசி இருக்கிற போது அக்கம் பக்கத்திலிருப்பவர்களிடம் அனுசரசனையாக நடந்து கொள்ளத் தோன்றுவது இயல்பு.
குறிப்பாக முஸ்லிம் பெருமக்கள் தமது அண்டை வீட்டார். மஹல்லா வாசிகள் ஊர்மக்கள் வியாபாரத் தொடர்புகள் சமூக உறவுகள் அனைத்திலும் இந்த அனுசரனையை தொடர்ச்சியாக்கிக் கொண்டால் அது சிறப்பானதாகும்
என்பது போன்ற காரியங்களில் மட்டுமல்ல நான் அனுசரனையானவன் என்று மனதில் நம்மை பற்றி ஒரு உறுதி எடுத்துக் கொண்டால்
அதிலிருந்து பல்வேறு
நன்மைகள் கிளர்ந்து வரும்.
ஒரு நற்காரியத்திற்கு
நம்மால் இயன்ற அளவில் ஒத்துழைப்பதில் தொடங்கி.
சகோதரர்கள் நண்பர்களுக்கிடையில்
விட்டுக் கொடுப்பதில் தொடர்ந்து
பேருந்திலோ இரயிலிலே
நமக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களுடன் அனுசரித்து போவது என்பது வரை பல காரியங்கள்
இதில் தெளிவாகும்.
முஸ்லிம் மஹல்லாக்கள்
ஒன்று மற்றொண்டோடு தொடர்பு கொண்டு நன்மைகளை பகிர்ந்து கொள்வதும் இந்த வகையிலானதாகும்.
روى الشيخان عن أبي موسى
الأشعري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: ((المؤمن للمؤمن كالبنيان
يشد بعضه بعضًا)) وشبك بين أصابعه؛ (البخاري
عن النعمان بن بشيرٍ قال:
قال رسول الله صلى الله عليه وسلم: ((مَثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم
مَثل الجسد، إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى))؛ (البخاري
அனுசரித்து போகுதல்
என்ற இயல்பு வந்து விட்டால் பெரும் சிரமங்கள் இலேசாகிவிடும்.
روى مسلم عن جابر بن عبدالله
رضي الله عنهما، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((طعام الواحد يكفي
الاثنين، وطعام الاثنين يكفي الأربعة، وطعام الأربعة يكفي الثمانية))؛ (مسلم
ரமலானுகுப் பின்னும்
நான் முஃமின்களாக தொடர்கிறோம் என்று உறுதி ஏற்றுக் கொள்வோம். நன்மைகளை தொடர்வோம்.
அதில் ஒரு அம்சமாக
அனுசரனை உணர்வோடு வாழ்வோம் என்று உறுதியேற்றுக் கொள்வோம்.
அனுசரனையை பற்றிய
நிறைவாக ஒரு வார்த்தை, அதுவே மதீனாவாசிகளின் குணமாகும்.
பெருமானாருக்கும்
இஸ்லாமிற்கும் அவர்கள் எப்படி அனுசரனையாக நடந்து கொண்டார்கள் ?
ஆதரித்தார்கள்.
அரவணைத்தார்கள் போர் புரிந்தார்கள். தியாகம் செய்தார்கள். தமக்கு கிடைத்த நன்மைகளை
பிறருக்கு வாரி வழங்கினார்கள். தமக்காக அனுசரனையானவர்கள் அன்சாரிகள் என்ற பெயரை மட்டும்
வைத்துக் கொண்டார்கள்.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
மா ஷா அல்லாஹ் மிக்க நன்றி
ReplyDeleteநின்றி
ReplyDelete