வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 28, 2022

கத்ரு எனும் போனஸ்

சென்னையில் ஒரு நிறுவனம் தனது 5 ஊழியர்களுக்கு போனஸாக பி எம் டபுள் யூ ரக கார்களை போனஸாக வழங்கியுள்ளது. இக்கார்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாகும். ப

குடும்பதோடு கெட் டூ கெதர் பார்ட்டி இருப்பதாக வரவழைத்து அவர்களுக்கு கார் பரிசாக வழங்கி இருக்கிறோம். இதன் மதிப்பு சுமார் 1 கோடி என தெரிவித்தார் Kissflow நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் சம்பந்தம்.

அவரது நிறுவனம்  இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் அடிப்படையில் 10வது இடத்தில் இந்த நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.

பத்ரிகை தொலைக்காட்சிகளில் இது பெரிய அளவில் இடம் பெற்றது.

இவ்வளவு பெரிய போனஸ் கொடுத்தற்கு என்ன காரணம்

13 ஆண்டுகளுக்கு முன் 5 ஊழியர்களோடு தொடங்கப்பட்ட நிறுவனம் இப்போது 10 இட்த்தை எட்டியுள்ளது. இதற்காக உழைத்தவர்களுக்கு நன்றியாக இதை வழங்குவதாக கூறினார்.

ஆனால் அவருடைய நோக்கம்

இப்படி பரிசு வழங்கும் போது ஊழியர்களிடையே ஆர்வம் அதிகரிகரிக்கும். அவர்கள் நிறுவனத்தை இன்னும் மேலே கொண்டு செல்வார்கள் என்பதே

போனஸ் வழங்குவதன் தத்துவம் இதுவே–

ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முஃமின்களின் ஈமானுக்கு பரிசாக வழங்கப்ட்ட கத்ருடைய இரவும் ஒரு போனஸே

அதைப் பெற்று மகிழ்ந்தோம் என்பதன் பொருள் நன்மையான காரியங்களில் நமது ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே!

வாழ்வில் இனி வரும் நிமிடங்களில் எந்த நன்மையையும் நாம் தவற விட்டு விடக் கூடாது என்று உறுதி ஏற்போம்.

அல்லாஹ் மேன்மக்கள் குறித்து நமக்கு கூறுகிறான்.

إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ [الأنبياء: 90].

நன்மைகளால் நமக்கு எந்த வகையிலெல்லாம் பயன் கிடைக்கும் என்பதை ஒரு நீண்ட நபி அற்புதமாக நமக்கு உணர்த்து கிறது.

ஒரு நீண்ட ஹதீஸ் தான், ஆனால் அற்புதமானது. இப்னு கஸீரில் இடம் பெறக் கூடியது.  பொறுமையாக கேட்போம்.  

என்னென்ன நற்செயல்கள் எப்படி நம்மை பாதுகாக்கின்ற என்று பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு கதை போல கூறுகிறார்கள்.

عبد الرحمن بن سمرة قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة بالمدينة ، فقام علينا فقال :إني رأيت البارحة عجبا :
رأيت رجلا من أمتي أتاه ملك الموت ليقبض روحه، فجاءه بره بوالديه فرد ملك الموت عنه

பெற்றோர்களை பேணுவோர் அல்பாயில் மரணம் ஏற்படாது தப்பிக்கலாம்.


ورأيت رجلا من أمتي قد احتوشته الشياطين ، فجاء ذكر الله فطير الشياطين عنه .

சைத்தானுடைய ஊசலாட்டங்கள். பயம் சந்தேகம். மனப்பிறழ்வு  ஆகியவற்றை தவிர்க்க திக்ரு உதவும்


ورأيت رجلا من أمتي قد احتوشته ملائكة العذاب ، فجاءته صلاته فاستنقذته من أيديهم .

கப்ரின் வேதனைகளிலிருந்து தொழுகை காப்பாற்றும்.

ورأيت رجلا من أمتي عطشا ، كلما دنا من حوض مُنع وطُرد ، فجاءه صيامه شهر رمضان فأسقاه ورواه

நோன்பு மஹ்ஷரின் தாகத்திலிருந்து காக்கும்..

ورأيت رجلا من أمتي ورأيت النبيين جلوسا حلقا حلقا ، كلما دنا إلى حلقة طُرد ومُنع ، فجاءه غسله من الجنابة فأخذ بيده فأقعده إلى جنبي

ஜனாபத்து .குளியலில் அலட்சியம் காட்டக் கூடாது. உடனே செய்ய வேண்டும். சரியாக செய்ய வேண்டும்

நீண்ட நகம்  நைல் பாலிஷ் உடன் குளிக்கும் போது கவனம், தண்ணீர் செல்லாது.

ورأيت رجلا من أمتي من بين يديه ظلمة ، ومن خلفه ظلمة ، وعن يمينه ظلمة، وعن يساره ظلمة ، ومن فوقه ظلمة ، وهو متحير فيها ، فجاءه حجه وعمرته فاستخرجاه من الظلمة وأدخلاه في النور .

ஹஜ்ஜும் உம்ராவும் திரும்ப திரும்ப செய்தல்

ورأيت رجلا من أمتي يتقي وهج النار وشررها ، فجاءته صدقته فصارت سترا بينه وبين النار وظلا على رأسه

தர்மம் கேட்டு வருபவர்களுக்கு கொடுக்கிறோம். கேட்காதிருப்பவர்களை தேடிச் செல்லும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  கொடுக்க செல்வது.

நமது உறவுக்கார்ர்களையும் ஊழியர்களையும் முதலில்  கவனிப்க்க வேண்டும்.

ورأيت رجلا من أمتي يكلم المؤمنين ولا يكلمونه ، فجاءته صلته لرحمه فقالت : يا معشر المؤمنين ، إنه كان وصولا لرحمه، فكلِّموه ، فكلمه المؤمنون وصافحوه وصافحهم .

உறவுகளை பேணிணால் புதிய உறவுகள் மலரும்.

ورأيت رجلا من أمتي قد احتوشته الزبانية ، فجاءه أمره بالمعروف ونهيه عن المنكر فاستنقذه من أيديهم ، وأدخله في ملائكة الرحمة

காவலர்களின் தீமைகளிலிருந்து பாதுகாப்பு

எங்கும் நாம் சொல்ல வேண்டியதை சொல்லி விட வேண்டும்.

இதனால் என்ன பயன் என்று யோசிக்க கூடாது. .

 .ورأيت رجلا من أمتي جاثيا على ركبتيه ، وبينه وبين الله حجاب ، فجاءه حسن خلقه ، فأخذ بيده فأدخله على الله عز وجل

நற்குணம் இறைவனுக்கு நெருக்கமாக்கும்.

நிஜாமுத்தீன் வலியுல்லாஹ் கூறினார்கள்.உனது பாதையில் யாராவது முள் வீசினால் நீயும் அது போல வீசினால் பூமி முழுவதும் முள்ளாகத்தான் இருக்கும்.

ورأيت رجلا من أمتي قد ذهبت صحيفته من قبل شماله ، فجاءه خوفه من الله عز وجل فأخذ صحيفته فوضعها في يمينه

அல்லாஹ்வை பற்றிய அச்சம் எந்த சூழலும் பாதுகாக்கும்.

ورأيت رجلا من أمتي خف ميزانه ، فجاءه أفراطه –أي من مات من أولاده - فثقلوا ميزانه

குழந்தைகளை பறிகொடுத்தோர். குழந்தையில்லாதோர்.,உறவுளைப் பறிகொடுத்தோர். அனைவருக்குமான அற்புதமான ஆறுதல் இது.


ورأيت رجلا من أمتي قائما على شفير جهنم ، فجاءه رجاؤه من الله عز وجل فاستنقذه من ذلك ومضى

அல்லாஹ்மீது விரக்தி கொள்ளாமல் இருப்பது தான் ஈமானின் முதல் அம்சம். அவன் மீதான நமது பற்றை எந்த நிலையிலும் உறுதியாக வைத்துக் கொண்டால் செங்கடலை பிளந்து யூதர்களை காத்த்து போல் அல்லாஹ் அனைவரையும் காப்பான்


ورأيت رجلا من أمتي قد هوى في النار ، فجاءته دمعته التي قد بكى من خشية الله عز وجل فاستنقذته من ذلك .

தனிமையில் கண்ணீர் விட்டழுதல் மிக அற்புதான் ஒரு பாவ மன்னிப்பு. உடனடியாக பலன்

 ورأيت رجلا من أمتي قائما على الصراط، يرعد كما ترعد السعفة في ريح عاصف ، فجاءه حسن ظنه بالله عز وجل فسكن روعه ومضى .

அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம்

அல்லாஹ் என்ன தீயவர்கள் பக்கமே நிற்கிறான்.  நம்முடைய தூஆ எங்கே ஏற்கப்படும் என்றெல்லாம் நினைக்க கூடாது. எந்த பாவிக்கும் அல்லாஹ் உதவி செய்வான். சைத்தானுடைய கோரிக்கையையையே அல்லாஹ் ஏற்க வில்லையா என்று யோசிக்க வேண்டும்.

 ورأيت رجلا من أمتي يزحف على الصراط ، يحبو أحيانا ويتعلق أحيانا ، فجاءته صلاته فأقامته على قدميه وأنقذته

பெருமானார் மீது சொல்லப் படும் சலாத் சிராத்துல் முஸ்தகீமில் முதுகை நிமிர்த்தும்

.ورأيت رجلا من أمتي انتهى إلى أبواب الجنة ، فغلقت الأبواب دونه ، فجاءته شهادة أن لا إله إلا الله ففتحت له الأبواب وأدخلته الجنة

ஈமான் எந்த வாசலையும் திறக்கும்.

இனி வரும் காலத்தில் அமல்களில் ஒவ்வொன்றையும் கவனமாக செய்வொம்.

லைலத்துல் கத்ர் ஒரீரவு அமல் மட்டுமல்ல. ஒவ்வொரு பொழுதையும் அமலாக்கிக் கொள்ளூவதற்கான போனஸ் என்பதை நினைவில் வைப்போம். செயல்படுவோம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!


No comments:

Post a Comment