தில்லியில் ராமநவமி அன்று ஜஹாங்கீர்புரி பகுதி வழியாக சென்ற இந்துக்களின் ஊர்வலம் ஒன்று அங்கிருந்த பள்ளிவாசல் அருகே நின்று கலவரத்தை உருவாக்கியது. இதில் ஏராளமான முஸ்லிம்களின் கடைகள் வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன்.
ஊர்வலத்திற்கு அனுமதி
வழங்கப்படவில்லை
என்று கூறிய தில்லி காவல்துறை அதற்கு
எதிராக ஒரு வழக்கை மட்டுமே பதிவு செய்து விட்டு கலவரம் செய்தார்கள் என்ற பெயரில் ஏராளமான முஸ்லிம் குடும்பங்களை கைது செய்தது. அதன் பிறகு தில்லி பாஜக தலைவர் தில்லி மேற்கு மாநகராட்சிக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து ஜஹாங்கீர்பூர் பகுதியிலிருந்த வீடு கடைகளை திடீரென கடந்த புதன்கிழமை புல்டோசர்களை கொண்டு இடிக்கத் தொடங்கியது. பாஜக
வசம் உள்ள இம்மாநகராட்சியின் அதிகாரிகள் வீடுகளில் கடைகளில் உள்ள சாமான்களை எடுக்க கூட மக்களை அனுமதிக்க வில்லை.
வீடுகளை
கடைகளை புல்டோஸர் கொண்டு இடித்த தில்லி மேற்கு மாநகராட்சி
உச்சநீதிமன்றத்தின் தடை
உத்தரவு வந்த பிறகும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வீடுகளை இடித்து தள்ளியிருக்கிறது.
தில்லி
மேற்கின் மேயரிடம் கோர்ட் உத்தரவு கொடுக்கப் பட்ட பிறகும் இடிப்பு தொட்ர்ந்த்து குறித்து சீரியசாக விசாரிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக
ஜம் இய்யத்தே உலமாயே ஹிந்த் சார்பாக வாதாடிய துஷ்யந்த் தேவ் மிக அற்புதமாக வாதிட்டார்.
Dushyant
Dave said why only one community is being targeted when there are 731
unauthorised colonies in Delhi with lakhs of people residing. "If you want
to act against unauthorized constructions, you go to Sainik Farms. Go to Golf
Links where every second home is an encroachment. You don't want to touch them,
but target the poor people,"
ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறிவைக்கப் பட்டுள்ளது. தில்லியில் 732 அங்கீகரிக்கப்பாத காலனிகள் இருக்கின்றன. இலட்சக்கணக்கான மக்கள் அதில் வசிக்கிறார்கள். நீங்கள் அனுமதி பெறா மனைப்பிரிவுகளின் மீது நடவடிக்கை எடுப்பதானால் சைனிக் பார்ம் ஏரியாவுக்கு செல்லுங்கள் அல்லது கோல்ப் லிங்க் ஏரியாவுக்கு செல்லுங்கள் ஒவ்வொரு விநாடியும் அங்கு ஆக்ரமிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை எல்லாம் நீங்கள் தொட மாட்டீர்கள். ஏழை மக்களை இம்சிக்கிறீர்கள்.
சட்டத்தின்
ஆட்சி தினமும் தகர்க்கப் பட்டு வருகிறது, இனி நாடு சட்டமோ நீதியீ இல்லாத நாடாகிவிடு ம் என்று ப,சிதம்பரம் கூறியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக
வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல் “You may bulldoze my home Not my spirit நீங்கள் எனது வீட்டை இடித்து தள்ளலாம். எனது எழுச்சியை ஒன்றும் செய்ய முடியாது. என்று கூறீயுள்ளார்.
கம்யூனிஸ்ட
இயக்கத்தின் தலைவி பிருந்தா காரத் கோர்ட் ஆர்டரை நேரடியாக கொண்டு சென்று புல்டோசருக்கு முன்னாள் நின்று தடுத்துள்ளார்.
ஒரு கொடுங்கோல்
ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் நீதிக்காக குரல் கொடுத்த பெருமக்கள் நன்றிக்குரியவர்கள்
. கபில் சிபல் அவர்களும் பிருந்தா காரத் அவர்களும் இன்று மீடியா சிம்பல்களாகியிருக்கீறார்கள்
என்பது மட்டுமல்ல. இந்த தேசத்த்தின் மிதான நம்பிக்கையையும் மரியாதையையும் மீட்டெடுத்திருக்கிறார்கள்
என்று தான் சொல்ல வேண்டும்.
அநீதியிழைக்கிற
அரசுகள் ஒரு போதும் நிலைக்காது.
إِنَّهُ لا يُفْلِحُ الظَّالِمُونَ } [الأنعام 21] .
இந்த வார்த்தையை
ஹழ்ரத் யூசுப் அலை , ஹழ்ரத் மூஸா அலை ஹழ்ரத் முஹம்மது நபி (ஸல்) ஆகிய பல நபிமார்களும்
எச்சரித்துக் கூறியிருக்கிறார்கள்.
இது உலகின் பழமையான
எச்சரிக்கைகளில் ஒன்று.
பலாஹ் என்ற வார்த்தைக்கு
இறுதி வெற்றி என்று பொருள்.
வரலாற்றில் இதுவரை
பல கொடுமையான ஆட்சியாளர்களை எல்லாம் இஸ்லாம் சந்தித்திருக்கிறது. அவர்களில் எவரும்
இறுதி வெற்றி கண்டதில்லை. அவர்களை இஸ்லாம் வென்றிருக்கிறது.
ஹுலாகு கான், செங்கிஸ்கானின்
பேரன் . தாத்தாரிகளின் படைத்தளபதி. 1258 ம்
ஆண்டு பக்தாதை கைப் பற்றி 10 இலட்சத்திற்கு மேலானவர்களை கொலை செய்தான். பள்ளிவாசல்கள்
மதரஸாக்கள் நூலகங்களை தீக்கிரையாக்கினான். அதன் சாம்பலால் திஜ்லா டைகிரீஸ் நதி கருப்பாக
ஓடியது. நியாயமே இருக்கவில்லை.
அவனை சந்திக்க
வந்த அப்பாஸிய மன்னரிடம் நாட்டின் உயர் குடிமக்கள் அனைவரையும் வரழைக்குமாறு கூறினான்.
மன்னர் குடும்பத்தினர் உயர் அதிகரிகள் அறிஞர்கள் நீதிபதிகள் இராணுவ அதிகாரிகள் அனைவரும்
அழைத்து வரப்பட்டனர்.
மன்னரின் கண் முன்னாலே
அவரது குடும்பத்தினரை கொலை செய்தான். அதே போல மற்றவர்களையும்.
خرج الخليفة للقاء هولاكو
الذي اشترط استقدام العلماء والقادة والأئمة والتجار وسائر الأعيان وأبناء
الخليفة؛ فجاءوا معًا، فلما أتوا أُخِذوا جميعًا للقتل عدا الخليفة وسبعة عشر من
الوفد منهم ابن واحد للخليفة؛ حيث قُتِل له ولدان أمام عينيه
உலகின் அதி உன்னதமான
அப்பாஸி சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்திக்கு என்ன நேர்ந்த்து தெரியுமா ?
கலீபா முஸ்தஃஸிம் கருவூலங்களை அடையாளம் காட்டுவதற்காக விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டார்.
வரலாறு மேலும் கூறுகிறது.
அரசனுக்கு பாதிப்பு ஏற்பட்டு இரத்தம் சிந்துவது மங்கோலியர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு செயலாக இருந்தது. எனவே 1258ஆம் ஆண்டு, பிப்ரவரி 20ஆம் நாள், ஹுலகு முன்னெச்சரிக்கையாக அல்-முஸ்தாஸிமை ஒரு கம்பளத்தில் மூடி, குதிரைகளால் மிதித்து மரணம் அடையச் செய்தார். கலீபாவின் குடும்பத்தினரும் திட்டமிட்டு தூக்கிலிடப்பட்டனர். விதிவிலக்காக, அவரது இளைய மகன் மட்டும் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டார். அவரது ஒரு மகள் ஹுலுகுவின் மாளிகையிலும், அந்தப்புரத்திலும் வேலைக்காரியாகவும் அடிமையாகவும் ஆக்கப்பட்டார்
கலீபாவை கொன்ற பிறகு 40 நாட்கள் பக்தாதில் இரணுவம் என்ன வேண்டுமானாலும் செய்து
கொள்ள அனுமதிக்கப் பட்ட்து.
மொத்த பக்தாதும் சூறையாடப் பட்டது. பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வது நிறுத்தப் பட்டது.
10 இலட்சம் பேர் கொல்லப் பட்டனர்.
وسيق الخليفة المستعصم
مقيدًا ليدلَّ التتار على أماكن الأموال والذخائر والنفائس في القصور، ثم أصدر
هولاكو أمره باستباحة بغداد أربعين يومًا كاملة، قتل فيها الرجال، وسُبِيت النساء
واغتُصِبن، وقُتِل الرُّضَّع، ونُهِبت الأموال، وكان حصاد تلك الاستباحة مليون
قتيل!! نَعَمْ مليون قتيل!!
கடைசியில் என்ன நடந்தது ?.
காட்டுமிராண்டித்தனமான அதிகாரத்தின் அதி உச்சியில் இருந்த ஹூலாகு கானை அவனது ஒன்று
விட்ட சகோதரனே எதிர்த்தார். செங்கிஸ்கானுடைய மகன் சூச்சிகானுடைய மகன் பர்க்கீகான் ஹூலாகுகான்
மீது போர்தொடுத்து அவனை தோற்கடித்தான். ஹுலாகு கான் அந்த மன அழுத்தத்திலேயே இறந்து
போனான்.
ஹுலாகுகானுடைய மகன் அபாகாகானே இஸ்லாமை தழுவியிருந்தார் என்று அறிய முடிகிறது .
ஷைகு சஃதீ ஷீராஜியிடமும் ஜலாலுத்தீன் ரூமியிடமும் அவன் அதிகம் பற்று கொண்டு அவர்களை
அதிகம் சந்தித்தாக வரலாறு கூறுகிறது.
அபகாகானின் மகன் தகுதார்கான்
தந்தையின் காலத்திலேயே இஸ்லாமை தழுவியிருந்தார். அவர் தனது பெயரை அஹ்மது கான் என
மாற்றிக் கொண்டார். அடுத்து அரச பொறுப்பை ஏற்ற அவர் மங்கோலியர்களின் தவறான பழக்க வழக்கங்களையும்
சடங்குகளையும் ஒழித்தார். அவர் இஸ்லாமின் வளர்ச்சிக்காக
தன்னலியன்ற அனைத்தையும் செய்தார் என்று வரலாறு கூறுகிறது.
(பார்க்க )أحمد تكودار بن هولاكو خان (توفي 26 جمادى الأولى
اعتنق الإسلام وهو صبي بتأثير الشيخ الصوفي كمال
الدين عبد الرحمن الرافعي واتخذ لنفسه اسم أحمد فكان أول إيلخاني يعتنق الإسلام
அபாகாகானின் இன்னொரு மகன் அர்கூகான் இஸ்லாமிற்கு எதிரியாக இருந்தான். ஆனால் அவனது
சகோதரன் கைதுகானும் அவனது மகன் கஸன்கானும் இஸ்லாமை தழுவினர்.
கைதுகான் தனது ஆட்சி காலத்தில் அச்சிட்ட முதல் காகித நாணயத்தின் இரு பக்கங்களிலும்
லாயிலாக இல்ல்ல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று அச்சிடப்பட்டிருந்தாக வரலாறு கூறுகிறது.
கஸன்கான் தனது பெயரை மஹ்மூத் கான் (محمود غازان )என்று மாற்றிக் கொண்டார். அவர் இஸ்லாமை தழுவிய போது அவருடன் ஒரு இலட்சம் பேர் இஸ்லாமை தழுவினர். அவர் இஸ்லாம
அரச மதமாக அறிவித்தார். அரச தர்பாரில் அனைவரும் தலைப்பாகை அணிந்திருக்க உத்தரவிட்டார்.
தலை நகர் தப்ரேஜில் பெரிய பள்ளிவாசல் மதரஸா நூலகம் ஆகியவற்றை எழுப்பினார். அவரது காலமே
தாத்தரியர்கள் நாகரீகத்தை அறிந்து கொண்ட காலம் என வரலாறு போற்றுகிறது.
ويعتبر بأنه أبرز ملوك دولة الإلخانات وأقواهم، وهو
من طراز جده هولاكو وأباقا، وقد اعتنق الإسلام سنة 694 هـ / 1295 م قبل توليه
الحكم، مما اعتبر انها نقطة تحول بالنسبة لديانة المغول في آسيا الوسطى،
·
فأسلم على يد الشيخ صدر الدين إبراهيم ابن الشيخ سعد الدين
حمويه الجويني
·
ويعتبر عهد غازان هي الفترة التي تحول فيها المغول من حياة
البدو إلى الاستقرار،
·
بعد أن تولى محمود غازان الحكم أصدر قرارا ً يقضي بأن الإسلام
هو الدين الرسمي للدولة. انقطعت الروابط التي كانت تربطه ببلاط الخاقان الأعظم للمغول
في الصين
·
قام بتجميل عاصمة مملكته تبريز بأبنية
فخمة منها مسجد عظيم، ومدرسة كبيرة، ودار للكتب،
மஹ்மூத் கான் தான் அச்சிட்ட நாணயங்களில் முதலாம் கலிமாவை பதித்தார். அத்தோடு அரச உத்தரவுகள் ஒவ்வொன்றிலும் அல்லாஹு அக்பர் என்று எழுத கட்டளையிட்டார்
மஹ்மூத் கானை தொடர்ந்து செங்கிஸ்கானுடைய பேரர்கள் பலரும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக
இஸ்லாமை தழுவினர். சீனா உள்ளிட்ட கிழக்கு நாடுகள் பலற்றிற்கும் இஸ்லாமை அவர்களே கொண்டு
சென்றனர்.
ஹுலாகுகான் நிகழ்த்திய அக்கிரமங்கள் இன்றும் அவரை கொடுமைக்கார தளபதியாக காட்டுகிறது.
அவன் மன வேதனையில் இறந்தான். எந்த அளவு வேதனை என்றால்
அவனை அடக்கம் செய்த போது மங்கோலிய வழக்கில் ஒரு புதுமை செய்தார்கள்.
அவனை அடக்கம் செய்ய ஒரு அறையை கட்டி அதற்கு ஏராளமான ஆடம்பர ஆடைகளை வைத்து அத்தோடு
அவனை மகிழ்விக்க வென்று அழகிய பெண்கள் பலரையும் உள்ளே வைத்து மூடி விட்டார்கள்.
என்ன கொடுமை ?
ஆனால் ஹூலாகுகான் எந்த அளவு மன அழுத்த்திற்கு ஆளாகி இறந்திருக்கிறான் என்பதை புரிந்து
கொள்ள இது உதவுகிறது.
புல்டோசர்கள் மூலம் முஸ்லிம்களை துன்புறுத்தும் வழக்கத்தை உ பி முதல்வர் யோகி
ஆரம்பித்தார். அவரை புல்டோஸ்ர் யோகி என்கிறார்கள். அதை பெருமையாக பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால் வரலாறு காத்திருக்கிறது. அந்த வார்த்தையாலே அவர் பெரும் இழிவை சந்திப்பார்.
மக்களை அழவைத்தவர்கள் தொடர்ந்து வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை.
புல்டோசர்களை பயன்படுத்தி முஸ்லிகளின் வீடுகளை கொடூரமாக இடித்து தள்ளும் கலையை
இஸ்ரேலியர்களிடமிருந்து இந்துத்துவ சக்திகள் கற்றுக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் கூட இஸ்ரேல் இராணுவம் ஒரு முஸ்லிமை கொன்று அவரது உடலை புல்டோசரில்
முன்னாள் கட்டி எடுத்து வந்து மேலும் கீழுமாக ஆட்டி தங்களது ஆவேசத்தை காட்டியது.
ஆனால் வரலாறு என்ன காட்டுகிறது என்றால் எத்தகைய அக்கிரமத்தாலும் பாலஸ்தீன
மக்களின் மன வலிமையை ஒன்றும் செய்து விட முடியவில்லை.
கபில் சிபல் சொல்வது போல “You
may bulldoze my home Not my spirit
திருக்குர் ஆன் கூறுகிறது
إِنَّهُ لا يُفْلِحُ الظَّالِمُونَ } [الأنعام 21] .
இந்தியாவின் பல பாகத்திலும் தொடர்ந்து அல்லல்பட்டுவருகிற முஸ்லிம்களுக்கு
அல்லாஹ் விரைவில் நிம்மதியளிப்பானாக
இந்தியாவில் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கு கண்ணியமளிப்பானாக!
நாம் லைலத்துல் கத்ர் இரவுகளில் இது குறித்து கவலையுடன் அல்லாஹ்விடம்
பிரார்த்திப்போம்.
ஜகாத் கடமையை முன்னதாகவே நிறைவேற்றி விடுவோம். ஏழைகள் பயன்பெறட்டும்.
ஊழியர்கள் உறவுக்கார்ர்களுக்கு முன்னதாகவே போனஸ் உள்ளிட்ட அன்பளிப்புகளை
வழங்குவோம்.
ஜகாத் என்பது கட்டாய தர்மம். அதை முன்னதாகவே நிறைவேற்றுவோம். ஸதகா
என்கிற உபரி தர்மத்தை லைலைத்துல் கத்ரில் நிறைவேற்றுவோம்.
லைலத்துல் கத்ருக்காக காத்திருப்பதை விட ஏழைகளின் கண்ணீரை துடைப்பது
அதிக மரியாதைக்குரியது.
லைலத்துல் கத்ரை அமல்களால் அழகு படுத்துவோம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
(கண்ணியமிகு
ஆலிம்கள் இப்புனித மிகு இரவுகளில் எனக்காகவும் எனது குடும்பத்திற்காக துஆ செய்ய வேண்டுகிறேன்.)
No comments:
Post a Comment