வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 04, 2022

ஆஷூரா எனும் அழியாத பாடம்

முஹர்ரம் மாத்ததின் 10 ம் நாளை இஸ்லாம் மகிமைப்படுத்தி இருக்கிறது. அன்றும் அதனுடன் சேர்த்து மற்றொரு நாளுமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்க இஸ்லாம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கு காரணம். ஸஹீஹுல் முஸ்லிமின் ஒரு ஹதீஸில் வருகிறது.

·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ  

அதாவது பிர் அவினிடம் சிக்கியிருந்த யூதர்களை அல்லாஹ் செங்கடலை பிளந்து பாதுகாத்த நாள் ஆஷூராவுடைய நாள்.

இந்நிகழ்வு கீ.மு 1447 ம் ஆண்டு நடந்த்தாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது இன்றிலிருந்து சுமார் 3469 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்துள்ளது.

 இந்த பாதுகாப்பு ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த யூத சமூகத்திற்கு கிடைத்தது என்றாலும் செங்கடல் பிளந்து பாதையேற்பட்ட மகத்துவத்தின் வலிமை காரணமாக அனைத்து சமூக மக்களும் அதை கொண்டாடினர்.

இமாம் நவவி இந்த ஹதீஸீன் விரிவுரையில் கூறுகிறார்.

 قال الإمام النووي رحمه الله: والحاصل من مجموع الأحاديث: أن يوم عاشوراء كانت الجاهلية من كفار قريش، وغيرهم، واليهود ، يصومونه ، وجاء الإسلام بصيامه متأكداً، ثم بقيَ صومه أخف من ذلك التأكد.( شرح النووي على مسلم 8 / 9، 10).

 மக்காவிலும் இந்த நாளுக்கு ஒரு மரியாதை இருந்துள்ளது. அதனால் கஃபாவின் திறையை மாற்றுவதற்கு அந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளனர். .

   عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ

ஒரு கொடுமைக்காரனிடமிருந்து சாமாணிய மக்கள் பாதுகாக்கப் பட்ட ஒரு நாளை உலகிலுள்ள அனைத்து தரப்பினரும் சிறப்பித்துள்ளனர். இஸ்லாமும் அந்த நல்ல விசயத்தை தனதாக்கிக் கொண்டது.

அதன் பிறகு அதில் சத்தியத்தியத்திற்கான ஒரு மாற்றம் தேவைப்பட்ட போது அதன் கவுரவத்தை அதிகப்படுத்தும் வகையில் ஒரு நோன்பை அதிகப்படியாக சேர்த்துக் கொண்டது.

أخرج الإمام مسلم في صحيحه عن عَبْد اللّهِ بْن عَبَّاسٍ رَضِيَ اللّهُ عَنْهُمَا قال: حِينَ صَامَ رَسُولُ اللّهِ صلى الله عليه وسلم يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ، قَالُوا: يَا رَسُولَ اللّهِ: إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَىٰ. فَقَالَ رَسُولُ اللّهِ صلى الله عليه وسلم : «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ، إِنْ شَاءَ اللّهُ، صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ ». قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ، حَتَّىٰ تُوُفِّيَ رَسُولُ اللّهِ

ரமலான் நோன்பு கடமையாக்கப் பட்ட பிற்கும் கூட ஆஷூரா நாளின் நோன்பின் மரியாதை குறையாமல் இஸ்லாம் கவனித்துக் கொண்டது.

 أخرج الإمام مسلم في صحيحه عن أبي قتادة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم (صيام يوم عاشوراء أحتسب على الله أن يُكفّر السنة التي قبله

أخرج الإمام مسلم في صحيحه عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم:(إن عاشوراء يوم من أيام الله ، فمن شاء صامه ومن شاء تركه

இன்றும் அந்த மரியாதை நீடித்துக் கொண்டிருக்கிறது, முஸ்லிம் உம்மத்தின் பிரதான வணக்கங்களில் ஒன்றாக அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இஸ்லாமின் இந்த ஏற்பாட்டின் பின்னணியில் பல தத்துவங்கள் இருக்கின்றன.

அவற்றில் பிரதானமான ஒன்று. இன்று நம் கவனத்திற்குரியது.

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிற ஒரு சமூகத்திற்கு ஆஷூரா நாள் தருகிற பாடம் வலிமையானது. அழுத்தமானது.

வெளிப்படையான பகட்டும் வல்லமையையும் விட ஆத்மார்த்தமான பலமும் பக்குவமும் தான் இறுதியில் வெற்றி பெறும்.

பிர்அவ்னுக்கு அவனுடைய ஆட்சியின் வலிவும் படையின் பலமும் முட்டாள்தனமாக கடலுக்குள் இறங்க தூண்டியது.

காண்போர் வியக்கும் வகையில் கடல் பிளந்து வழி விடுகிறது என்பதை கண்ட பிறகும் தன்னை திருத்திக் கொள்ளாத ஒருவனை எந்த வகையில் சேர்ப்பது ? அவன் மட்டும் அழியவில்லை. அவனது ஒட்டு மொத்த சமூகத்தையும் அல்லவா அழிவில் தள்ளினான்.   

ஒரு மனிதனின் வெளிப்படையான பகட்டும் வல்லமையும் வாழ்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் கைகொடுத்து காப்பாற்றாமல் ஆழ் கடலுக்குள் அல்லவா தள்ளிவிட்டுள்ளது ?

பிர்அவ்ன் எவ்வளவு பகட்டுக் காட்டினான் ?  

·        أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَـذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِن تَحْتِي

·        وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُم مِّنْ إِلَـهٍ غَيْرِي فَأَوْقِدْ لِي يَا هَامَانُ عَلَى الطِّينِ فَاجْعَل لِّي صَرْحًا لَّعَلِّي أَطَّلِعُ إِلَى إِلَـهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ مِنَ الْكَاذِبِينَ

·         قَالَ آمَنتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ ۖ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ


பிர் அவ்னை ஆதரித்த மக்கள் எவ்வளவு பகட்டுக் காட்டினார்கள்?

·        وَقالَ المَلَأُ مِن قَومِ فِرعَونَ أَتَذَرُ موسى وَقَومَهُ لِيُفسِدوا فِي الأَرضِ وَيَذَرَكَ وَآلِهَتَكَ

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி , அரசியல் அதிகாரம், பொருளாதார வலிமை ஆகியவற்றை முன் வைத்து மக்கள் மக்கள் அதிகம் தற்பெருமை கொள்வார்கள் எனில் அல்லாஹ் அவர்களை அவர்களது அறிவை கேலிக்குள்ளாக்கும் வகையில் சோதித்து விடுவான்.

எந்த நிஃமத்தும்

இறையச்சத்தை பெருக்கவேண்டும்.

தற்பெருமையை விட தன்னடக்கத்தை தர வேண்டும்.

அல்லாஹ்வை எதிர்பார்த்திருக்கிற பக்குவத்தை அளிக்க வேண்டும்.

அது கல்வியானாலும் உடல் வலிமையானாலும் பொருளாதார வளமானாலும் அரசியல் பலமானாலும் எது வானாலும் சரி.  

பிர்அவ்னின் குணத்திற்கு நேர் மாறாக நபி மூஸா அலை அவர்கள் நடந்து கொண்டார்கள்.

அவர்களிடம் அஸா இருந்த்து.

அது எவ்வளவு வலிமையானது என்பது அவர்களுக்கு தெரியும்.

பிர் அவ்னின் படைகளுக்கு எதிராக அவர் தானே அதை பயன்படுத்த வில்லை.

அஸ்ஸுஃரா அத்தியாயம் அந்த நிகழ்வின் மற்றொரு பாகத்தை அற்புதமாக நமக்கு காட்டுகிறது.

எதிரே கடல் ஆர்ப்பரித்து கிடக்கிறது. பின்னால் பிர் அவ்னின் படை ஆக்ரோஷமாக திரண்டு வருகிறது. இந்த நெருக்கடியில் சாமானிய மக்கள் புலம்புகிறார்கள்  

فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَىٰ إِنَّا لَمُدْرَكُونَ (61)

 யூதர்கள் பதறினார்கள். நெருக்கடி நேரத்தில் தேவையற்றதை எல்லாம் பேசினார்கள்

  أُوذِينَا مِنْ قَبْلِ أَنْ تَأْتِيَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا 

ஆனால் நபி மூஸா அலை அவர்கள் தளரவில்லை.

  قَالَ كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ (62)

 அதே போல தன்னிடமிருக்கிற கைத்தடியை தானே பயன்படுத்தவும் நினைக்கவில்லை.  காரணம் தன் மீதிருக்கிற அல்லது தன்னிடமிருப்பதை நம்பியதை விட அதை கொடுத்த அல்லாஹ்வை நம்பினார்கள்.

  فَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنِ اضْرِب بِّعَصَاكَ الْبَحْرَ ۖ فَانفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ (63وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ (64وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُ أَجْمَعِينَ (65)

 தனது ஆட்கள் முழுமையாக கரையேறிய பிறகு தனது கைத்தடியை தானே பயன்படுத்தி விட மூஸா அலை நினைத்தார்கள் என்றும். அல்லாஹ் தடுத்து காத்திருக்குமாறு கூறினான் / பிர் அவ்ன் அழிக்கப்படும் வரை காத்திருக்க கூறினான் என்றும்  தப்ஸீர்கள் கூறுகின்றன்.

سَيَهْدِينِ என்பதன் முழுப் பொருள் அது தான்.

  ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ (66إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ (67وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ (68

 ஆஷூராவின் பாடம் எல்லா காலத்திற்கும் தேவைப்படக் கூடியது. அல்லாஹ் அதை புரிந்து வாழ நமக்கும் உலகிற்கும் தவ்பீக் செய்வானாக

1 comment:

  1. Anonymous11:07 PM

    இமாம் நவவி ( ரஹ்மதுல்லாஹி அலைஹி ) என்று சேர்க்காதது வருத்தம் தருகிறது

    ReplyDelete