வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 18, 2011

சுதந்திரத்திற்கு ஆபத்து


நாடு சுதந்திரம் பெற்றதன் 65 வது நினவுக் கொண்டாடங்கள்  நாடு முழுவதும் கொண்டாடப் பட்ட்து.

ஆனால் மகிழ்ச்சியாக கொண்டாடப் பட்ட்தா என்பது கேள்விக்குரியதாகும். பல்வேறு பட்ட நெருக்கடியில் நாடு சிக்கியிருக்கிறது.

ஊழல், பொறுப்பற்ற அரசியல், இந்துதுத்துவாவின் வளர்ச்சி காரணமாக நாட்டின் ஸ்திரத்தன்மை அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.

ஆனாலும் தமது சுதந்திரத்தை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்துக் கொண்டு போதிய படிப்பறிவற்ற இந்திய மக்கள் இனியும் தீரத்தோடு பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை அழுத்தமாக இருக்கிறதுஇது விசயத்தில் முஸ்லிம்களுக்கும் பல கடமைகள் உண்டு.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து விட்டு சுந்தந்திர தின உரையாற்றிய தமிழக முதல்வர் இந்த நாள் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு உரியது  என்று கூறினார்.

நாட்டு விடுதலைக்காக போராடுவதில் முஸ்லிம்கள் முன்னணியில் இருந்தார்கள். இன்னும் சொல்வதானால் சுதந்திரப் போராட்டம் என்பது அடிமை இந்தியாவில் முஸ்லிம்களால் தான் முன்னெடுத்துச் செல்லப் பட்ட்து என்று சொன்னால் அது மிகையாது.

நாட்டு விடுதலைக்காக போராடுவது என்பது முஸ்லிம்களைப் பொருத்த வரை தேசப்பற்றாக மட்டும் இல்லாமல் அது சமயத்தின் வழிகாட்டுதலாகவும் இருந்தது.

முஸ்லிம்கள் தான் ஆங்கிலேயாரிடம் ஆட்சியை பறிகொடுத்திருந்தனார் அதனால் தீரத்தோடு போராடினார்கள் என்று பலரும் சொல்வது வாடிக்கை.

ஆனால், விடுதலைப் போரில் முஸ்லிம்கள் தீவிரமாக  ஈடுபட  பிரதான காரணம் இஸ்லாம் ஆகும்.

லாயிலாக இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமா.
மனிதன் மனிதனுக்கு தலைவணங்கிச் கிடப்பதை தடை செய்கிறது. அது தனிமனிதனின் சுய ரியாதையை மீட்டெடுத்து அவனுக்கு சுதந்திர மனிதனுக்குரிய கம்பீரத்தை வழங்கியது.

பிலால் (ரலி) அவர்களை  ஒரு நாள் அபூதர்; (ரலி) கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். பெருமானார் (ஸல்) வர்கள் பூதர்; (ரலி) அவா;களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள்.
يا أبا ذر أعيرته بأمه إنك امرؤ فيك جاهلية     (புகாரி:30)

இத்தனை ஆண்டுகளாக அடிமைப் பட்டுக்கிடந்த பிலாக் (ரலி) அவர்களுக்கு சுய மரியாதையைப் பற்றிய பிரகஞயை ஏற்படுத்தியது இஸ்லாமாகும். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விசாரித்த்து, தனிமனித சுதந்திரத்திற்கும் சுய மரியாதைக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த முன்னுரிமைக்கு எடுத்துக் காட்டாகும். ஒரு முன்னாள் அடிமைக்காக சமுதாயப் பிரமுகரான அபூதர் (ரலி) யை பெருமானார் கண்டித்த்து சுதந்திர உலகில் அனைத்து மனிதர்களும் சம்மாமானவர்களே என்பதை நிரூபித்த்து  


அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற போராடுவதும் ஆதிக்க வெறியர்களின் கொட்டத்திற்கு முடிவு கட்டுவதும் நபிமார்களின் வழிமுறையாக இருந்ததது என்பதை திருக்குர் ஆன் சுட்டிக்காட்டுகிறது.

فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى(47)20:

நபி தாவூத் (அலை) ஜாலூத்தின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டினார்கள் எனபதையும் குர்ஆன் குறிப்பிட்டுச் சொல்கிறது. (2.251)

நபிகள் நாயகம் (ஸல்) வர்கள் தனது கடைசி ஹஜ்ஜின் போது இனம் நிறம் மொழி தேசம் என்ற எந்த அடிப்படையிலும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்த முடியாது என்ற பிரகடணத்தை வெளியிட்டார்கள்.

فقال يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى (அஹ்மது: 22391)

1906 ஆண்டு பாலகங்காதர திலகர்,  “ சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற கோஷத்தை  முன்வைத்தார். அது இந்தியாவிலிருந்த மற்றவர்களுக்கு புதிய கோஷமாக இருந்திருக்கலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு அது புதியதல்ல.

கி.பி. 7 ம் நூற்றாண்டிலேயே ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் உலகுக்கு  சுதந்திரம் மக்களது பிறப்புரிமை என்ற கருத்தை முன்வைத்து விட்டார்கள்.

எகிப்தின் ஆளுநர் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களின்   மகன் முஹம்மது  எகிப்து தேசத்தைச் சார்ந்த  கிப்தி இன இளைஞனை ஓங்கி ஒரு குத்து விட்டார். எகிப்தில் நீதி கிடைக்காது என்று பயந்த அந்தி கிப்தி இளைஞன் மதீனாவிற்கு வந்து கலீபா உமர் (ரலி)யிடம் முறையிட்டார்.    

உமா; (ரலி) அவர்கள்  ஆளுநர்; அம்ர் (ரலி) அவர்களைப் பார்த்து, மதா தஅப்பத்துமுன்னாஸ வகத் வலதத்ஹும் உம்முஹாத்துஹும் அஹ்ராரா)  எனறு கேட்டார்கள்.
متي تعبدتم الناس وقد ولدتهم أمهاتهم احرارا

சுதந்திரத்தை பிறப்புரிமையாக அறிவித்த முதல் அரசியல் தலைவர் உமர் ஆவார்.

பிரஞ்சுப் புரட்சியோ உலகின் மற்ற பகுதிகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களோ இஸ்லாமிடமிருந்தும் முஸ்லிம்களிடமிருந்தும் இரவல் பெற்ற்வையாகும்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்ட்த்திற்காக மக்களை தூண்டி விட்ட்தில் இஸ்லாத்தின் பங்கு முக்கியமானது.

முதல் சிப்பாய் கலகம் என்பது இஸ்லாம் பன்றியை ஹரமாக்கியிருக்கிறது என்ற சட்ட்த்திலிருந்து தோன்றியதாகும்.

பன்றிக் கொளுப்பு தடவப் பட்ட துப்பாக்கித் தோட்டாக்களை பல்லில் கடித்டு பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு கிழக்கிந்திய படையினர் இந்திய வீர்ர்களை நிர்பந்தித்த போது அதை எதிர்த்து முஸ்லிம் வீர்ர்கள் நிகழ்த்திய போராட்டம் தான் சிப்பாய் கலகம் என்று கூறப்பட்ட்து. அதைதான் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று வரலாறு வர்ணிக்கிறது.

இன்று இந்திய நாட்டில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை சிதைக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றனர்.

இந்த சக்திகள்தான் விடுதலைக்காக நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த போது ஆங்கிலேயர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து சொந்த சகோதர்களை காட்டிக் கொடுத்த்து வந்தவர்கள்.

இந்து மதம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு கோடிக்கணக்கான அப்பாவி மக்களை தாழ்த்தப்பட்ட்வர்களக தீண்ட்த்தாகாதவர்களாக நட்த்தியவர்க்ள்.

இப்போதும் தங்களது ஜாதிய மேலான்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்து மதம் இந்து தேசம் என்ற பெய்ரைச் சொல்லிக் கொண்டு மக்களை உணர்ச்சி வசப்படச் செய்ய முயல்கின்றனர்.
அவர்களால் இந்து மத்த்தின் பெயரைச் சொல்லி இந்துக்களை ஒன்று படுத்த முடியாது. காரணம் நம்முடைய சக இந்துக்களுக்கு இந்தப் பார்ப்பண் ச்கதிகளை விஷத் தன்மை எப்படிப் பட்ட்து என்பது தெரியும்.

பாம்புக்கு பல்லில் மட்டும் தான் விஷம் பார்ப்பானுக்கு உட்ம்பெல்லாம் விஷம் என்று பெரியார் சொன்னதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்து என்று சொல்லி மக்களை ஒன்று படுத்த முடியாத சூழ்நிலையில் முஸ்லிம் எதிர்ப்பு என்ற வழியைப் பயன்படுத்தி இந்துக்களை ஒன்று திரட்ட திட்டமிடுகின்றனர்.


ஒற்றுமையாக இருக்கிற நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி தலைவர்களாக முயற்சி செய்கின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜூலை 16 ம் தேதி DNA என்ற ஆங்கில நாளிதழில் சுப்ரமணய சுவாமி இந்துதுதுவா வெறியை தூண்டும் வகையில் ஒரு கட்டுரை எழுதி முஸ்லிம்களுக்கு எதிராக கடும் கண்டனத்திற்குரிய கருத்துக்களை எழுதியிருக்கிறார். முஸ்லிம்களை மிகவும் கேவலமாக அந்தக் கட்டுரை சித்தரிக்கிறது.

ஆனால் சுப்ரமணய சுவாமியை போல கேவலமான ஒரு ஆள் இந்திய அரசியலில் வேறு யாரும் கிடையாது. அந்நிய நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்திய நாட்டைப் பற்றி உளவு சொல்வதன் மூலம் வாழ்கை நட்த்திக் கொண்டிருப்பவர் அவர் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி.

சாத்த்தான் வேதம் ஓதுகிற கணக்கில் அவர் இஸ்லாமிய தீவிரவாத்தை ஒடுக்குவது எப்படி என்ற தலைப்பில் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு தீவிரவாதம் தெரியாது இந்து தீவிரவாத்தைப் பார்த்துத்தான் முஸ்லிம் தீவிரவாதம் உருவானது. இந்து தீவிரவாதம் ஒடுக்கப் படும் என்றால் முஸ்லிம் தீவிரவாதம் தானாக ஒடுங்கி விடும் என்பது தான் எதார்த்தம்.

ஆனால் சுபரமண்ய சுவாமி இஸ்லாமின் வளர்ச்சியை காட்டி இந்துக்களை அச்சப் படுத்த நினைக்கிறார். பாகிஸ்தானில் தாலிபான்கள் கை ஓங்கி ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா பின்வாங்கி விடுமென்றால் முஸ்லிம்களின் கை ஓங்கி இந்தியாவை முஸ்லிம் நாடாக ஆக்க முயற்சி செய்வார்கள் என்கிறார்.  அவர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முடிக்காமல் விட்ட இந்த நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றும் திட்ட்த்தை இனி செயல் படுத்த முயற்சி செய்வார்கள் என்கிறார். 

உண்மையில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இணைந்தால் கூட நாம் பயப்பட்த்தக்க ஒரு நாடாக ஒரு போதும் மாறமுடியாது. இந்தியாவோடு ஒப்பிடுகையில் வெகு குட்டி நாடுகள் அவை. அந்த நாடுகளை நம் நாட்டுக்கு எதிராக சித்தரிப்பதே ஒரு மிகப்பெரிய  ஏமாறு வேலையாகும். குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி தங்களது பக்கம் இழுப்பது போலவே இந்துதுதுவ சக்திகள் பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டி இந்துக்களை தங்கள பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்கள்.

பாகிஸ்தான் என்ற நாடு உருவாக காரணமே இந்துத்துவ சக்திகள் தான் என்பது தொடர்ந்து அமபலமாகி வருகிறது.

கனிசமான அளவு முஸ்லிம்களை தங்களோடு வைத்துக் கொண்டால, அவர்கள் இந்த நாட்டிலிருக்கிற தாழ்த்தப் பட்ட தீண்ட்த்தகாதவர்களாக இருக்கிற மக்களை உணர்வூட்டி தட்டி எழுப்பி விடுவார்கள் பிறகு தங்களது ஜம்பம் பலிக்காது என்று திட்டமிட்ட்தனால் தான் இந்துதுதுவாவுக்கு சார்பான வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் பிரிந்து சென்று விடுங்கள் என்று ஜின்னாவிடம் கோப்ம் உண்டாக்கும் வகையில் பேசினார்கள்,      

இரண்டு இனத்தாருக்கும் இடையே ச்மரத்தை ஏற்படுத்தி, பிளவுபடாத ஒன்று பட்ட் ஒரே தேசமாக இருக்க  முடியும் என்ற நம்பிக்கை காந்தி உட்பட பதவியை விரும்பாத பல தலைவர்களுக்கும் இருந்த்து. ஆனால் சீக்கிரமாக பதவி வேண்டும் என்று ஆசைபட்ட நேரு உள்ளிட்ட சிலை தலைவர்களின் அவசரத்தினால் தான இந்தியப் பிரிவினை ஏற்பட்ட்து என வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் ஒத்துக் கொள்கிறார்கள். 

சுதந்திரம் பெறுவதை இன்னும் இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்திருந்தால், பிரிவினைய தவிர்த்திருக்க முடியும் என்று இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல்கலாம் ஆசாத் கூறியதை இங்கு நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.

பார்க்க : சம்நிலைச் சமுதாயம் 2011 ஆகஸ்ட் இதழ  

பாகிஸ்தானிய பிரிவினைக்கு காரணமாக இருந்த்தே இந்துதுவ வெறி கொண்ட தலைவர்கள் தான். இப்போது அதே பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டி இந்தியாவிலுள்ள இந்துக்களுக்கு வெறியேற்ற நினைக்கிறார்கள்.

சுபரமண்யசாமியின் அந்தக் கட்டுரை புதிதான ஒன்று அல்ல. இந்துதுவாவின் பழைய பல்லவி தான்.

கட்டுரையின் பல வாசகங்களும் இந்திய முஸ்லிம்களை மிக கேவலமாக ஒடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்று இந்துக்களை தூண்டி விடுகிற வகையில் அமைந்திருக்கிறது.

இந்திய முஸ்லிம்கள் தங்களை இந்துபாரம்பரியம் கொண்டவர்கள் என்று ஒத்துக் கொண்டால் தான் அவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும்.

காசியில் பள்ளிவாசலை அகற்ற வேண்டும். அது போல 300 இடங்களில் உள்ள பள்ளிவாசலை அகற்ற வேண்டும்.

பொது சிவில் சட்ட்த்தை அமுல் படுத்த வேண்டும், சமஸ்கிருதம் படிப்பதையும் வந்தே மாதரம் பாடுவதையும் கட்டாயப்படுத்த வேண்டு,

மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும். மற்றவர்கள் இந்து மத்த்திற்கு வருவதை தடுக்க கூடாது.


இது போன்ற விசமத்தான பேச்சுக்களை இந்திய சமூதாயம் காதில் போட்டுக்கொள்வதில்லை என்பது ஆறுதலான விச்யம். இப்படிப் பேசுகிற சாமிகளை நோக்கி ஒரு நாய் கூட திரும்பிப்பார்ப்பதில்லை.

என்ன செய்தாதவது தங்களது பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்ற மலிவான ஏற்பாட்டில் தான் இத்தகைய கருத்துக்களை இவர் போன்றவர்கள் வெளியிடுகிறார்கள் என்பதை இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படாமல் இத்தகைய சக்திகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்ய வேண்டும். நீதிமன்றங்கள், மனித உரிமை அமைப்புக்கள், பிரஸ்கவுன்சில் ஆகியவற்றில் முறையிடுவதன் மூலம் இவர்களுக்கு தகுந்த பாடம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  

அதை சில முஸ்லிம் அமைப்புக்கள் செய்ய ஆரம்பித்திருப்பது மகிழ்சியளிக்கிறது.

ஆனால், அதேநேரம் இந்திய மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய அரசியல் அநாமத்துக்களை விட்டு வைத்து அரசு வேடிக்கை பார்ப்பது சரியா என்பதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்? சுதந்திர இந்தியாவிற்கு இவர்களாக் ஏற்படுகிற ஆபத்துக்களை அரசுகள் தொடர்ந்து க்ண்டும் காணாமல் இருப்பது, இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தீய சக்திகளுக்கு சாதகமாகிவிடாதா என்பதை அரசும் மக்களும் யோசிக்க வேண்டும்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டோர் அனைவரும் ஒன்றாக இத்தகைய தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டு. தீவிரவாத்த்தை அனைத்து வழிகளும் ஒடுக்குவதற்கான வழிகளுல் இதுவும் ஒன்றாகும்.

இது போல வன்ம்ம் தொனிக்கிற ஒரு கட்டுரையை, முஸ்லிம்களை ஒத்துக் கொள்ளும் இந்துக்களை தான் நாம் ஒத்துக் கொள்ள முடியும் என்று ஒரு கருத்தை ஒரு முஸ்லிம் எழுதியிருந்தால் அரசு எவ்வளவு விரைவாக செயல்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

சுபரமண்ய சாமி போன்ற நிழலுலக மனிதர்கள் இவ்வாறு பேசுவது அல்லது எழுதுவதன் மூலம் நாட்டிற்குள் வகுப்பு வாத கலவரத்தை தூண்டி விடுகிற போது அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல் தடுப்பதற்காகத்தான் மத்திய அரசு வகுப்பு துவேச த்டுப்புச் சட்ட்த்தை கொண்டு வந்திருக்கிறது.

நாட்டில் நிலவுகிற எதார்த்த சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் நம்முடை மாநில அரசு அந்த சட்ட்த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது துரதிஷ்டவசமானதும் சிறுபான்மையினருக்கு குறிப்பக முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பது மாகும்.

ஒரு சுத்ந்திர தினத்தை கொண்டாடு கிற வேளையில் நாட்டின் அமைதியை குலைக்கிற வகையில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளை விட கொடூரமாக நாடு முழுவதும் வன்முறை சிந்தனையை தூண்டி விடுகிற சுபரமணய சாமி போன்ற அநாமத்து பேர்வழிகலை அரசு நிர்வாகம் தடுத்து நிறுத்தாவிட்டால் சுதந்திரம் கேலிக் கூத்தாகி விடும்.

அல்லாஹ் நமது இந்திய நாட்டின் அமைதியை ஆயுதங்களாலும் கருத்துக்களாலும் குலைக்க் முயற்சி செய்கிற் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக! மதத்தின் பெயரால மனித சமூகத்தை அடிமைப்படுத்த முயல்கிற சக்திகளை தன்னுடைய பலத்தால் அல்லாஹ் ஒடுக்குவானாக!

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த வார தலைப்பு இனி வரவிருக்கும் இஃதிகாப் பற்றியோ அல்லது நரக விடுதலை பற்றியோ இருந்திருந்தால் என் போன்றோருக்கு மிக்க பலனுல்லதாய் அமைந்திருக்கும்

    ReplyDelete