வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 10, 2011

வடிகால் வரம்


வடிகால் ஆக்ரமிப்பை தவிர்ப்பீர்!
وَأَنزَلْنَا مِنْ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ(18) – المؤمنون

إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ(49) القمر

கடந்த ஒரு வார காலத்தில் தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்து விட்ட்து.

மழை அல்லாஹ்வின் மாபெரிய அருள்.
மழைபூமியின் செழிப்புக்கு, மனித வாழ்வுக்கு , உணவு உற்பத்திக்கு அடிப்படை.
மழைத்துளிகள் விவசாயியை மகிழ்ச்சிப்படுத்துவது ஒரு அற்புதமான அனுப்வம்.

பருவ காலத்தில் தேவையான அளவு அல்லாஹ் மழை  பொழியச் செய்கிறான்.

கடல் நீர் பூமியின் ஓர் ஓரத்தில் இருக்கிறது. அது உப்பாக இருக்கிறது. மனிதர்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களது வாழ்விடங்களின் ஊடாக நன்னீரை அல்லாஹ் ஓடவிட்டுள்ளான்.

மழை நீர் மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிந்தோடவும்தேங்கி நிற்கவும் அல்லாஹ் ஏற்பாடு செய்தான்.

ஒரு பக்கம் பெய்கிற ம்ழை அந்த ஊருக்கு மட்டுமல்ல பல ஊர்களுக்கு நன்மையை கொண்டு போகிறது.

முஃமினூன் 18 வ்சனத்திற்கு உதாரம் நைல் நதி.
.
நைல் நதி எகிப்துக்கு அல்லாஹ் வழங்கிய மாபெரும் அருள். அது ஆப்ரிக்காவில் எங்கோ ஒரு இட்த்தில் உற்பத்தியாகி எகிப்துக்குள் பாய்கிறது. தண்ணீரை மட்டுமல்ல தரமான மண்ணையும் எகிப்துக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. (தப்ஸீர் இபுனு கதீர்)

உலகிலுள்ள பல ஆறுகளின் கதையும் இதுதான்.

அல்லாஹ்வின் நேர்த்தி மிக்க வலிமையான ஆற்றலுக்கு அடையாளம் இது.

தண்ணீர் மென்மையனது அதே நேரத்தில் வலிமையானதும் கூட.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ فَعَادَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ فَعَجِبَتْ الْمَلَائِكَةُ مِنْ شِدَّةِ الْجِبَالِ قَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْجِبَالِ قَالَ نَعَمْ الْحَدِيدُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْحَدِيدِ قَالَ نَعَمْ النَّارُ فَقَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ النَّارِ قَالَ نَعَمْ الْمَاءُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْمَاءِ قَالَ نَعَمْ الرِّيحُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الرِّيحِ قَالَ نَعَمْ ابْنُ آدَمَ تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ

மழைதண்ணீர் விசயத்தில் எச்சரிக்கையும் அவசியம்

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوا الرِّيحَ فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ ترمذي
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أُمْطِرَ قَالَ اللَّهُمَّ اجْعَلْهُ صَيِّبًا نَافِعًا- 1506

மேட்டிலிருப்பவர் கணுக்கால் அளவு தண்ணீரை ம்ட்டுமே தடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் வ்ழிந்தோட இடம் தரவேண்டும் என பெருமானார் உத்தர்விட்டார்கள். தண்ணீரின் ஓட்ட்த்தை தடுக்கிற வகையில் செயல்படக் கூடாது என்பது இஸ்லாமின் கட்டளை இது காட்டுகிறது..

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ الْكَلَأُ -  البخاري

أَنَّ رَجُلًا مِنْ قُرَيْشٍ كَانَ لَهُ سَهْمٌ فِي بَنِي قُرَيْظَةَ فَخَاصَمَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَهْزُورٍ يَعْنِي السَّيْلَ الَّذِي يَقْتَسِمُونَ مَاءَهُ فَقَضَى بَيْنَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْمَاءَ إِلَى الْكَعْبَيْنِ لَا يَحْبِسُ الْأَعْلَى عَلَى الْأَسْفَلِ - ابوداوود

தண்ணீர் வடிந்தோட அனுமதிக்க வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பது இந்நபிமொழிகளின் கருத்தாக அமையும்.
  
வடிகால் வசதி சரியாக செய்யப் படாவிடில் சிறிய மழையும் பெரிய ஆபத்தாக முடியக் கூடும். அல்லாஹ் இயறகையாகவே ஆச்சரியமான முறையில் வடிகால் வசதியை ஏற்படுத்தியிருக்கிறான்.

வீடுகள் தோட்டங்கள் அமைப்போரும் அதை பாதுகாக்க சிறந்த வடிகால் வசதியை ஏற்படுத்துவதை பார்க்கிறோம்.

மேட்டூர் அணையை கட்டிய பிரிட்டிஷ் இன்ஞினியர்கள் தமிழகத்தின் த்ஞ்சை பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை பகுதிகளுக்கு கால்வாய் வெட்டி நீர்ப்பாசனத்திற்கு வழி வகை செய்த போது ஒரு கால்வாயை நீர்ப்பாசனத்திற்கு என்றும் இன்னொரு கால்வாயை வடிகாலுக்கு என்றும் வெட்டியிருக்கிறார்.

வடிகால்கள் சரியாயக் இல்லாவிட்டால் ஆபத்து தான். தண்ணீர் தடம் புரள்வதையும் ஊரை அழிப்பதையும் தவிர்க்க முடியாது.

மனிதன் தண்ணீருக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் கை கட்டி நின்று புலம்பத்தான் வேண்டியது வரும்.

வடிகால்களையும் நீர்தேக்கங்களையும் முறையாக  கவனிப்பதும் பராமரிப்பதும் மக்களின் கடமை.

சமீப காலமாக கால்வாய் தூர்வாருதல், ஆற்றங்கரை யோரப்பகுதிகளை, குளங்களை கண்காணித்தல் போன்ற வேலைகளில் எந்த அரசும் அக்கறை எடுக்க வில்லை. அரசின்  துறைகளுக்கிடையே இருந்த போட்டிகள் வேறு பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது.

கட்சிகள் தருகிற இலவசங்களில் போட்டி போட்டுக் கொண்டு மயங்குகிற மக்கள் இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை.

இதற்கு மேலாக மக்களே வ்டிகால்களை ஆக்ரமிக்கிறார்கள்.
இப்போதெல்லாம் வடிகால்களை ஓடை புறம்போக்கு நிலங்களை ஆக்ரமிப்பது சாதாரண இயல்பாக இருக்கிறது

யார் ஆக்ரமிக்கிறார்கள் என்பதல்ல கேள்வி? யார் தான் ஆக்ரமிக்கவில்லை என்பதே கேள்வி!

உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஓடைப் புறம் போக்கு நிலம் இருந்தால் அது உங்களுக்கு சொந்தம்ல்ல மழைக்குச் சொந்தம். அதை நீங்கள் சொந்தம் கொண்டாடினால் மழை நீர் ஒரு நாளில் உங்கள் சொந்தமாக்கிவிடும் என்ற எச்சரிக்கையை கடந்த கால்நூற்றாண்டுகளாக மக்கள் கவனிக்க தவறிவிட்டார்கள்.

தமிழகம் முழுவதும் மழைக்குப் சுமார் 40 பேர் பலியாகியுள்ளனர். ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட , காளவாய்களிலும் ஓடைகளிலும் தீடீரென வெள்ளம் பாய, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பல்ரும் குடும்பத்தோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.  சில நிமிட இடைவெளியில் பலரது வாழ்க்கை நடுத்தெருவிற்கு வந்து விட்ட்து.

இந்த முறை பெருமழையினால் பாதிக்கப்பட்ட மக்களில் கனிசமனோர். ஆற்றுப்படுகைகளிலும் கால்வாய்க் கரையோரங்களையும் ஆக்ரமித்துக் குடியிருந்தவர்கள் ஆவர்.

பொதுவாக தமிழ் நாட்டில் 1980 ம் ஆண்டுகளில் பெரும் வறட்சி நிலவியது, நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருந்த ஆறுகள் குளங்கள் வற்றின. பல ஆறு களும் குளங்களும் காணாமல் போய்விட்டன் என்றும் சொல்லும் அளவுக்கு வற்ட்சியான சூழ்நிலை நிலவியது.

இதே கால கட்ட்த்தில் ந்கர மயமாக்களும் பெருமளவில் நடந்த்து, மக்கள் நகரங்களில்குடியேறினர். அவர்களில் பலர் புறம்போக்கு நிலங்களிலிம் ஆறு குளக்கறைகலிலும் குடியேறினர். போதாக்குறைக்கு ரியல் எஸ்டேட் பேர்வழிகள் நீர்வழித்தடங்களை எல்லாம் பிளாட்டுகளாக்கி விற்றனர். அரசியல் வாதிகள் அதிகாரிகளின் துணையோடு இந்த கபளீகரம் நடந்த்து.

கடந்த 10 ஆண்டுகளாக வறட்சி நிலமை மாறி பழைய படி மழை கணிசமாக பொழிய ஆரம்பித்துள்ளது. வறண்டு போன ஆற்றுப் படுகைகளில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. எதிர்பாராமல் மழை அதிகமாக பெய்து விடும் போது காள்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கிற மக்கள் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.

கடந்த வாரம் பெய்த மழையில் திருப்பூர் நகரில் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காயிதே மில்லத் நகர் சத்யா நகர் பகுதிகள் இரண்டும் மொத்தமாக வெள்ளத்திற்கு பலியாகிவிட்டனபலத்த  சேதம் ஏற்பட்டுள்ளது. பன்னூற்றுக்கணக்கான மக்கள் தங்களது ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். மக்களுக்கு உதவுக் வள்ளல்கள் பலர் தங்களது பொருளாதாரத்தை இழந்துள்ளது பெருந்துயராகும்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14  என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை சரியானதல்ல இப்போதைக்கு 22  பேருக்குமேல் காணவில்லை. இன்னும் எத்தனை  பேர் நீரில் அடித்துச் செல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும் என்று அங்கிருந்து வருகிற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருநாளைக்கு முந்தின நாள் பெய்த ம்ழையில் திருப்பூர் நகர மக்கள் ஆற்றமுடியாத சோகத்திற்கு ஆளானார்கள். பெருநாளைக்கு வாங்கி வைத்த அரிசி பருப்புக்களும் காய்கறிகளும் தண்ணீரில் மிதந்ததை பார்த்து என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று நண்பர் ரபீஉத்தின் பாகவி சொன்னார். 

இதில் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஏதோ கொஞ்ச்ம் நிவாரணத்தை வழங்கி விட்டு அரசாங்கம் சும்மா இருந்து விடுகிறது. யாரோ பாதிக்கப்படுகிறார்கள் நமக்கென்ன என்று மக்களும் சும்மா இருந்து விடுகிறார்கள். இழப்புக்கு உள்ளானவர்களும் ஏதோ கடவுளின் விதி நாம் என்ன செய்யமுடியும் என்று வேதாந்தம் பேசி விட்டு பழைய படி தங்களுடைய வாழ்க்கயை தொடர ஆரம்பித்து விடுகிறார்கள்.

இஸ்லாம்
எச்சரிக்கையோடு வாழும் படி மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
ஆபத்துக்களை அலட்சியம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறது.
ஒரு முறை பாதிக்கப் பட்டபின் மிண்டு அதே போன்ற பாதிப்புக்கு ஆளாக் கூடாது என்று எச்சரிக்கிறது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانفِرُوا ثُبَاتٍ أَوْ انفِرُوا جَمِيعًا(71)  النساء
وَخُذُوا حِذْرَكُمْ
தனக்குச் சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டியவர் (அதில் யாரேனும் மனிதனோ மற்ற பிராணிகளோ விழுந்து இறந்து போனால்) அதற்கு நஷ்ட ஈடு தரமாட்டார்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَعْدِنُ جُبَارٌ وَالْبِئْرُ جُبَارٌ وَالْعَجْمَاءُ جُبَارٌ وَفِي الرِّكَازِ الْخُمْسُ – البخاري 2355

சுரஙகத்தினாலோ கிணற்றினாலோ அல்லது மிருகஙகளாலோ ஏற்படும் இழப்பு மன்னிக்கப்பட்டதாகும். புதையலில் ஐந்தில் ஒரு பஙகு (அரசுக்கு ஸகாத்தாகக்) கொடுத்துவிட வேண்டும்.  

இந்த ஹதீஸின்  கருத்து இந்தப் பகுதியில் வசிப்பவர் அல்லது கடந்து செல்ப்வர் தான் எச்சரிக்கயோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

பாத்திரத்தை மூடி வை! கதவை சாத்தி வை! விளக்கை அணைத்து வை! பையை கட்டி வை! ஆயுத்த்தின் முனையை பிடித்துகொள் என்றெல்லாம் பெருமானா எச்சரித்துள்ளார்கள்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا رَفَعَهُ قَالَ خَمِّرُوا الْآنِيَةَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَأَجِيفُوا الْأَبْوَابَ وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْعِشَاءِ فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتْ الْفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ قَالَ ابْنُ جُرَيْجٍ وَحَبِيبٌ عَنْ عَطَاءٍ فَإِنَّ لِلشَّيَاطِينِ  - البخاري

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْجُحْرِ قَالُوا لِقَتَادَةَ مَا يُكْرَهُ مِنْ الْبَوْلِ فِي الْجُحْرِ قَالَ يُقَالُ إِنَّهَا مَسَاكِنُ الْجِنِّ احمد

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَجْنَحَ اللَّيْلُ أَوْ قَالَ جُنْحُ اللَّيْلِ فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنْ الْعِشَاءِ فَخَلُّوهُمْ وَأَغْلِقْ بَابَكَ وَاذْكُرْ اسْمَ اللَّهِ وَأَطْفِئْ مِصْبَاحَكَ وَاذْكُرْ اسْمَ اللَّهِ وَأَوْكِ سِقَاءَكَ وَاذْكُرْ اسْمَ اللَّهِ وَخَمِّرْ إِنَاءَكَ وَاذْكُرْ اسْمَ اللَّهِ وَلَوْ تَعْرُضُ عَلَيْهِ شَيْئًا  - البخاري


இரண்டாம் முறை பாதிப்புக்கு ஆளாக்க் கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ   6131

أي ليكن المؤمن حازما حذرا لا يؤتى من ناحية الغفلة فيخدع مرة بعد أخرى ,
فيه تحذير من التغفيل , وإشارة إلى استعمال الفطنة .
قاله النبي صل الله عليه وسلم لأبي عزة الجمحي وكان شاعرا فأسر ببدر فشكى عائلة وفقرا فمن عليه النبي صلى الله عليه وسلم وأطلقه بغير فداء , فظفر به بأحد فقال من علي وذكر فقره وعياله فقال : لا تمسح عارضيك بمكة تقول سخرت بمحمد مرتين , وأمر به فقتل .

நில ஆக்ரமிப்பு கொடிய குற்றம், அதிலும் பொது இடங்களை ஆக்ரமிப்பதும், தண்ணீர் ஓட்ட்த்தை தடுக்கும் வகையில் ஆக்ரமிப்புக்களில் ஈடுப்டுவதும் தவிர்க்கப் பட வேண்டும்.

عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ أَرْوَى بِنْتَ أُوَيْسٍ ادَّعَتْ عَلَى سَعِيدِ بْنِ زَيْدٍ أَنَّهُ أَخَذَ شَيْئًا مِنْ أَرْضِهَا فَخَاصَمَتْهُ إِلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَقَالَ سَعِيدٌ أَنَا كُنْتُ آخُذُ مِنْ أَرْضِهَا شَيْئًا بَعْدَ الَّذِي سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ أَخَذَ شِبْرًا مِنْ الْأَرْضِ ظُلْمًا طُوِّقَهُ إِلَى سَبْعِ أَرَضِينَ فَقَالَ لَهُ مَرْوَانُ لَا أَسْأَلُكَ بَيِّنَةً بَعْدَ هَذَا فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَعَمِّ بَصَرَهَا وَاقْتُلْهَا فِي أَرْضِهَا قَالَ فَمَا مَاتَتْ حَتَّى ذَهَبَ بَصَرُهَا ثُمَّ بَيْنَا هِيَ تَمْشِي فِي أَرْضِهَا إِذْ وَقَعَتْ فِي حُفْرَةٍ فَمَاتَتْ

عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ وَكَانَ بَيْنَهُ وَبَيْنَ قَوْمِهِ خُصُومَةٌ فِي أَرْضٍ وَأَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ ذَلِكَ لَهَا فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبْ الْأَرْضَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنْ الْأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ مسلم

عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَعْظَمُ الْغُلُولِ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ ذِرَاعٌ مِنْ الْأَرْضِ تَجِدُونَ الرَّجُلَيْنِ جَارَيْنِ فِي الْأَرْضِ أَوْ فِي الدَّارِ فَيَقْتَطِعُ أَحَدُهُمَا مِنْ حَظِّ صَاحِبِهِ ذِرَاعًا فَإِذَا اقْتَطَعَهُ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ احمد  -

عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهِيَ لَهُ وَلَيْسَ لِعِرْقٍ ظَالِمٍ حَقٌّ قَالَ مَالِك وَالْعِرْقُ الظَّالِمُ كُلُّ مَا احْتُفِرَ أَوْ أُخِذَ أَوْ غُرِسَ بِغَيْرِ حَقٍّ  مالك


நிலத்தின் மீதான மோகம் மக்களிடம் பேராசையாக இருப்பது ஆச்சரியமானது.
ஒரு நிலத்திற்காக இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டார்கள். இது என்னுடையது என்ற்றன் ஒருத்தன். இல்லை என்னுடையது என்றான் மற்றொருத்தன். அந்த இருவரையும் பார்த்து நிலம் சொன்னது.
முட்டாள்களே, நீங்கள் இருவரும் என்னுடைய்வர்கள்

பொதுவாக நில ஆக்ரமிப்பு தவறானது. ஓடை, ஆற்றுப்படுகைகளை ஆக்ரமிப்பதும் மிகப்ப்பெரும் தவறு. மனித சமூகத்திற்கு எதிரான இயறகைகு எதிரான குற்றம் அது.

ரியல் எஸ்டேட்கார்ர்கள் தங்களிடம் இடம் வாங்கியவர்கள் அழிந்து போக காரணமாக்க் கூடாது.
அரசு உரிய எச்சரிகையை மேற்கொள்ள வேண்டும். வீடு இல்லாத ஏழைகள் தான் இத்தகைய ஆபத்தான் இடங்களில் குடியிருக்கிறார்கள். அரசிகள் இத்தகைய் குடியிருப்புக்களை கண்டறிந்து அவர்களுக்கு வீடு வசதி செய்து கொடுப்பதும் இனிமேல் இத்தைகைய பகுதிகளில் ஆக்ரமிப்புக்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை.

குறிப்பாக வ்டிகால் நிலங்களையும் நீர்த்தேக்கங்களையும்  பாதுகாக்க் அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலேஷியா சிங்கப்பூரில் பெய்யும் மழையோடு ஒப்பிட்டால் நம் ஊரில் பெய்யும் மழை சாதாரணம் தான். அங்கு மழை நேரத்தில் முழங்கால் அளவு இடுப்பளவு தண்ணீர் பெருகி நிற்கும். ஆனால் மழை நின்ற அரை மணி நேரத்தில் தண்ணீர் இருந்த தடம் ஈரமாக மட்டுமே தெரியும்.

அல்லாஹ் நம் அனைவரையும் தண்ணீரின் தண்டனையிலிருந்து பாதுகாப்பானாக! உறவினர்களை இழந்தும் உடமைகளை இழந்து வாடுவோருக்கு அல்லாஹ் தகுந்த ஆறுதலையும் சிரமபரிகாரத்தையும் தந்தருளவானாக!

No comments:

Post a Comment