வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 29, 2013

உணவுப் பாதுகாப்பு மசோதா ஒரு பார்வை


وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا * إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا} [الإنسان:8-9]

நமது நாட்டில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜனத்தொகையில் 67 சதவீதம் பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க இச்சட்டம் வகைசெய்கிறது.

ரேஷன் கடைகள் மூலம் கிராமப்பகுதிகளில் 75 சதவீதம் மக்களுக்கும் நகர்ப் புறங்களில் 50 சதவீதம் மக்களுக்கும் மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்படும்.

கிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் ஐந்துகிலோ அரிசியோ. கிலோ 2 ரூபாய் என்ற அடைப்படையில் ஐந்து கிலோ கோதுமையோ கிலோ 1 ரூபாய் என்ற விலையில் மாதம் ஐந்து கிலோ தானியமோ சலுகை விலை உணவு தானியங்களுக்கு தகுதி உடையவர்களுக்கு கிடைக்கும்.

மொத்ததில் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 81 கோடி மக்களுக்கு 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவில் 6.12 கோடி டன் உணவு தானியங்கள் வழங்கப்படும்.

மக்களுக்கு இலவசமாகவோ, மலிவு விலையிலோ உணவுப் பொருட்களை வழங்கினால் அதற்கு அதிகப்படியாக நிறைய செலவாகும். போதிய வருவாய் இல்லாமல் நாடு பெரும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர் கொண்டிருக்கிற சூழலில் இப்படி ஒரு திட்டமும் சட்டமும் சரியானது தானா என்ற விவாதம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கான பணம் நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியை விட ஏழைகளுக்கு உணவு கிடைப்பதை உத்தவாதப்படுத்த வேண்டியது நாட்டின் கடமை என திருமதி சோனியா காந்தி கூறியிருக்கிறார்.

ஏழைகள் நிறைந்த  நம்முடைய நாட்டின் மக்களுடையை நிலையை கவனித்துப்பார்க்கிற போது திருமதி சோனியாவின் அக்கறை நியாயமானதே!

ஏனேனில் உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள 88 நாடுகளில் இந்தியா 66 ஆவது இடத்தில் இருக்கிறது.

உலகெங்கிலும் சத்தான உணவின்றி அரைகுறைப் பட்டினி நிலையில் வாழும் மக்களில் ஏறத்தாழ 27 சதவீதத்தினர் (23 கோடி பேர்) இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்;
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 75,000 குழந்தைகள் சத்தான உணவின்றி இறந்து போகின்றன;

உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 15 இலட்சம் குழந்தைகள் அரைகுறைப் பட்டினி நிலைக்குத் தள்ளப்படுகின்றன

என பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.

கிரயோனிக் ராக்கெட்டுகள், நீர் மூழ்கிக் கப்பல்கள், அணு ஆயுதங்கள், சந்திரணுக்கும் செவ்வாய்கிரகத்துக்கும் விண் கலங்கள், விண்ணை முட்டுகிற ஷாப்பிங்க் மால்கள் என ஒரு பக்கம் இந்தியா பளபளப்பு காட்டினாலும் அதன் மறுபக்கம் மிகவும் துன்பயமானதாக இருக்கிறது.

அரசியல் சாசனத்தில் சொல்லப் பட்ட சுத்தமான தண்ணீருக்கும் போதிய உணவுக்கும் இன்னும் இந்த நாட்டின் முக்கால் பங்கு மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், மின்சார வசதியும்,சாலை வசதியும், சுகாதார மருந்த்துவ வசதிகளும் அடிப்படைக் கல்வி வசதியும் போய்ச் சேராத பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கின்றன.

இன்னும் இந்த நாட்டில் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் வறுமைக் கோட்டிற்கு கீழே 30 சதவீதம் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்

இந்தச் சூழிலில் ஏழை மக்களின் அடிப்படை உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் இப்படி ஒரு திட்டம் நிறைவேற்கப்படுவதை வரவேற்காமல் இருக்க முடியாது.

ஆனால் அதே நேரத்தில் ஆனால் சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளை கடந்த பிறகும் நாட்டின் முக்கால் பங்கு பிரஞைகள் அரசாங்கத்திடம் இலவசத்திற்கு கை ஏந்த வேண்டிய வர்களாகவே இருக்கிறார்கள் என்பது வருந்தததக்கது. 

இந்தியா சுதந்திரம் பெற்று முதல் மக்கள் அரசு அமைந்த போது காந்தியடிகள் சுதந்திர இந்தியாவின் முதல் தலைவர்களை ஏழ்மையை அகற்றுவதை முதற் கடைமையாகக் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் நமக்கு கிடைத்த அரசுகள் நாட்டு மக்களின் வறுமையை ஓழிப்பதில் எந்த அக்கறையும் செலுத்த வில்லை என்பது தான் உண்மை.

இரண்டாம் உலக யுத்ததின் போது கிட்டத்தட்ட அழிந்தே போய் விட்டது என்று சொல்லப்பட்ட ஜப்பான் நாற்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தின் உச்சத்திற்கு சென்று விட்டது. சுதந்திரம் பெற்ற 30 ஆண்டுகளில் சிங்கப்பூர் என்ற குட்டி நாடு உலகின் ஐந்தாவது பணக்கார நாடாகிவிட்டது. 

ஆனால் 67 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியக் குடிமக்களில் பெரும்பாலோர்  கையேந்து நிலையிலேயே இருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் ஜனநாயக வியாபாரம் சிறப்பாக நடந்ததே தவிர அரசியல் இலாபம் சம்பாதிக்கிற ஒரு தொழிலாக வளர்ந்ததே தவிர நாட்டு மக்களின் ஏழ்மையை போக்குகிற திட்டங்கள் எதுவுமே செயல்பட வில்லை.

உலகின் மிகப்பெரிய ஏழை நாடான இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எண்ணிப்பாருங்கள் 549 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கணக்கு காட்டிய கோடீஸ்வரர்கள். இன்னும் முக்கால்வாசிப்பேர் கணக்கு காட்ட்டாத கோடீஸ்வரர்கள். சாமாணிய மனிதர்கள் பத்து பேர் இருந்தால் அது ஆச்சரியமே!

 

 

கோடீஸ்வர மக்கள்  பிரதிநிதிகள் பணக்காரர்களின் பாக்கெட்டுகளில் இருக்கிறார்களே தவிர மக்களின் பக்கம் இல்லை,

 

அதனால் அடிப்படையில் மக்களை கைதூக்கி விடுகிற திட்டங்கள் வெகு சொற்பமாகவேமிகத்தாமதமாகவே நிறைவேற்றப் படுகின்றன.  விவசாயிகளோ தொழிலாளர்களோ சிறு வியாபாரிகளோ ஊக்கு விக்கப்படுகிற நிலையில் இல்லாமல், தங்களது வாழ்வாதாரத்திற்காக அவர்கள் அரசின் தயவை எதிர்பார்த்துஅதிகாரிகள் அமைச்சர்களின் வாசல்களுக்கு   கையேந்தி நிற்க வேண்டிய நிலை நீடிக்கிறது.

 

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் உத்தரவை சொன்ன போது, அதை ஒன்றுபட்டு எதிர்த்து ஒரு மாததிற்குள் நாடாளுமனறத்தில் சட்டம் கொண்டு வந்த நம்முடைய அரசியல் தலைவர்கள்  இந்தியா சுதந்திர மடைந்து 67 ஆண்டுகளை கடந்த பிறகு மக்களுக்கு பிச்சையிடுகிற மற்றுமொரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

 

வறுமையை போக்குகிற திட்டங்கள் இல்லாமல் ; ஏழைகளுக்கு அவ்வப்போது உணவு வழங்கிற சட்டங்கள் போதுமா என்று யோசித்துப் பார்க்கிற கடமை இந்தியர்களான நமக்கு இருக்கிறது.

 

ஆனால் இதை எல்லாம் யோசித்துப் பார்க்கிற நிலையில் இந்தியர்களான நாம் இல்லை. அரசாங்கம் இலவசமாகவோ சலுகையாகவோ எதையாவது கொடுத்தால் சரி. அது நமக்கு கிடைத்த நன்மை என்று வாங்கிக் கொள்ள வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். ரேஷன் கடைகளின் வாசல்களில் கால் கடுக்க காத்து நிறக் தயாராகி விடுகிறோம்.

 

அதனால் தான் மக்களிடம் காலில் விழாத குறையாக - சில இடங்களில் காலில் விழுந்தும் கையை பிடித்தும் கெஞ்சி ஓட்டுப் பொறுக்கிறவர்கள் தேர்தலில் வெற்றியடைந்த பிறகு அந்த மக்களின் எஜமானார்களாக தங்களை கருதிக் கொள்கிறார்கள். அவ்வப்போது இலவசங்களை தூக்கி எறிகிறார்கள்.  

 

தமிழகத்தை போல பளபளப்பு அரசியல் வாதிகள் மிகுந்த மாநிலங்களில் இலவச அல்லது மலிவு விலை உணவுத்திட்டம் ஏற்கெனவே இருக்கிற நடைமுறையில் இருக்கிற மாநிலங்களில்  மத்திய அரசின் புதிய திட்டத்ம் மக்களை புதிதாக தெரியாவிட்டாலும் கூட இதுவரை இந்தச் சலுகையை கூட அனுபவித்திராத கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு இந்தச் சட்டம் உணவுப் பாதுகாப்பை வழங்கும் என்பதனால் சட்டம் சரியா? தவறா ? இந்தச் சட்டம் உணவை உத்தரவாதப் படுத்துவதற்கா ஓட்டுவாங்குவதை உத்தரவாதப் படுத்துவதற்கா என்றெல்லாம் யோசிக்காமல் எப்படியாவது பசி தீர்ந்தால் சரி என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை இந்திய மக்கள் வரவேற்கிறார்கள்.

 

நம்முடைய பிரார்த்தனை என்ன வென்றால் இந்த திட்டமாவது ஏழைகளை சென்றடைய வேண்டும் என்பதே! தமிழகத்தின் இலவச அரிசித் திட்டம் கேரளாவுக்கு அரிசி கடத்துகிற அரசியக் வாதிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது போல் ஆகிவிடக்கூடாது என்பதே!

 

நாடு தற்போது சென்று கொண்டிருக்கிற இன்றைய சூழலில் மக்கள் தமது தலைவர்களைப் பற்றி அக்கறை செலுத்த வேண்டும்.

 

இறைவா ! எங்கள் மீது கருணை காட்டுகிற தலைவர்களை கொடு! பய பக்தியுள்ள தலைவர்களை கொடு! என்று   اللهم لا تسلط علينا من لا يخافك فينا و لا يرحمنا  என்று தொடர்ந்து  பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

போகிற போக்கை பார்த்தால் அச்சமாக இருக்கிறது. இந்திய அரசியல் வாதிகள் உள்ளூர் பணக்காரர்களில் கைகளில் இருக்கிறார்களா? அந்நிய நாடுகளின் கையாட்களாக இருக்கிறார்களா ? அல்லது பன்னாட்டு கமபெனிகளின் பங்காளர்களா இருக்கிறார்களா என்ற சந்தேகம் பெருகி இருக்கிறது. 

 

யா அல்லாஹ் எங்களுக்கு உமர் (ரலி) போன்ற ஆட்சியாளர்களை கொடு என்று பிரார்த்திக்க வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கிறோம்.

மிக உயர்ந்த பதவியில் இருந்த போது மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவராகஅந்தப் பதவியின் சுகத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொள்ளாதவராக எப்போதும் மக்கள் பிரச்சினையில் அக்கறை செலுத்திய உன்னதமான அரசியல் தலைவராக உமர் (ரல்) திகழ்ந்தார்கள்

 

ஹஜ்ரத் உமரைப் பற்றிய ஒரு பழையை வரலாற்றை உங்களுக்கு நான் ஞாபகப் படுத்துகிறேன். இன்றைய சூழநிலைக்கு அது கற்பனையாக கனவாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இது கதையல்ல் நிஜம்.

 

மக்களதிபர் உமர் (ரலி) ஜும் பிரசங்கத்திற்காக பள்ளி வாசலுக்கு வருகிறர். அவரை சல்மான் அல் பார்ஸி என்ற தோழர் தடுத்து நிறுத்திக் கேட்கிறார். உமரே! நீங்கள் இப்போது அணிந்திருக்கிற ஆடை ஒருசந்தர்ப்பத்தில் வெகுமதியாக உங்களுக்கு கிடைத்த்து. இதே போல ஒன்று எனக்கும் கிடைத்தது. இப்போது நீங்கள் இரண்டு ஆடைகளை கீழுக்கு ஒன்றாக மெலே ஒன்றாக அணிந்திருக்கிறீர்களே அது எப்படி என்று கேட்டார்.

 

உமர் (ரலி), தனது மகன் அப்துல்லாஹ்வை நோக்கினார். அப்துல்லாஹ் (ரலி) சொன்னார். சகோதரரே என் தந்தையுடையது ஒரு ஆடைதான். உங்களுக்கு வெகுமதியாக ஆடை கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் எனக்கும் ஒரு ஆடை கிடைத்த்து. அதை நான் என் தந்தைக்கு கொடுத்தேன். என்றார்.

 

ஜனாதிபதி உமர் (ரலி)  அவர்களுக்கு ஒற்றை ஆடை கூட கேள்விக்குரியதாக இருந்த்து.  அவரது ஆடைகளில் ஒட்டுக்களும் அதிகம். உமரின் ஆடையில் தோளபுஜங்களுக்கு இடையே நான்கு ஒட்டுக்களை நான் பார்த்தேன் என நபித்தோழர் அனஸ் கூறுகிறார் :  

 

கி.பி 630 ல் அரபுலகத்தை கடுமையான பஞ்சம் வாட்டியது. கிராமவாசிகள் பலர் பசி பட்டினியால் இறந்து போனார்கள். பன்னூற்றுக் கணக்கானோர் தலைநகர் மதீனாவை முற்றுகையிட்டனர். அங்குதான் உணவு பங்கிடப் பட்டு வந்த்து. உடனே உமர் (ரலி) சிரியா இராக் பாலஸ்தீனில் உள்ள கவர்ணர்களுக்கு கடிதம் எழுதினார். சரியான நேரத்தில் ஆளுநர்களுடை உதவி வரவே பல்லாயிரக்க்கணக்கானோர் உயிர் பிழைத்தனர். சிரியாவின் ஆளுநராக இருந்த அபூ உபைதார் (ரலி) பெருமளவிலான உதவிப் பொருட்களை அனுப்பியதோடு ஒரு கடிதமு எழுதினார். அதில புகழ் பூத்த அந்த வாசகம் எழுதப் பட்டிருந்த்து.

 

நான் உங்களுக்கு உணவுப் பொதிகளைச் சுமந்த ஒட்டக அணிகளை அனுப்பி வைக்கிறேன். அதன் ஒரு முனை சிரியாவில் இருக்கும்.மறு முனை மதீனாவில் இருக்கும் என அதில அபூஉபைதா எழுதியிருந்தார். மதீனாவை தேடி வந்த மக்களின் துயரை ஆற்றிய பிறகு பாலைவனத்தில் உள்ளோடிய மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு உதவ உமர் (ரலி) ஆட்களை அனுப்பினார். அக்காலங்களில் இரவு தோறும் மக்களை உமர் பொது விருந்துக்கு அழைத்தார். நூற்றுக் க்ணக்கானோர் அந்த விருந்தில் கலந்து தங்களது பசியை ஆற்றிக் கொண்டனர். (ஹய்கல்)

 

நிலமை ஓரளவு சீரடைந்த்தும் மதீனாவில் தங்கியிருந்தவர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை உமர் செய்து கொடுத்தார்.

 

மக்களுக்கான அத்தியாவசியக் கடமைகளை நிறைவேற்றுவதை அவர்களுக்கு தான் செய்கிற கிருபையாக கொடையாக அவர் அர்த்தப் படுத்த முயல்வில்லை. கடமையாக கருதினார்.

 

இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னாள் தோழர்களோடு பேசுகிற போது  அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் வாசிகளின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவை யில்லாத நிலையில் தான் விட்டுச் செல்வேன்:” என்று உமர் (ரலி) சொன்னார்.

 

மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக இரவு ரேந்தில் தனியாக ரோந்து போவது உமர் ரலி யின் வழக்கம். ஒரு நாள் ஒரு வீட்டில் ஒரு தாய காலிப்பனையை அடுப்பில் வைத்து சமைப்பபது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். அதன் மூலம் அழுகிற பசிக்காக அழுகிற குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்து கண்ணீர் வடித்த உமர் (ரலி) அரசின் கருவூலத்திற்கு சென்று கோதுமை மூட்டை தன்னுடைய தோளில் சுமந்து வந்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்கள்.

இதை நாங்கள் சுமந்து செல்கிறோம் என்று தோழர்கள் சொன்ன போது என்னுடை அரசாங்கத்தில் பட்டினியால் ஒரு நாய் இறந்து போனால் கூட என்னிடமே விசாரிக்கப்படும் என்று பதிலளித்தார்கள்.

உமர் ரலி அவர்களைப் போல மக்களது சிரமங்களை சுமந்து கொள்கிற தலைவர்கள் கிடைக்காவிட்டாலும் கூட நம்மையும் நாட்டையும் சுரண்டாத தலைவர்கள் வேண்டும் என்று நாம் ஆசைப் படுவோம்.

முதலில் நாம் ஆசைப்பட்டால் தானே அல்லாஹ் தருவான். யார் ஆண்டாள் என்ன ? எப்படி ஆண்டாள் என்ன? என்றிருந்தால் இப்படித்தான் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் நமக்கு கிடைப்பார்கள்.

இந்தக் கட்டத்தில் எண்ணிப் பார்க்க வேண்டிய மற்றொரு செய்தியும் முக்கியமானது.

நபி யூசுப் அலை அவர்கள் எகிப்தை பீடித்த பஞ்சத்தை வெற்றிகரமாக கடந்தார்கள். பஞ்ச காலத்தில் மக்கள் உணவின்றி பாதிக்கப் பாடாமல் பாதுகாத்தார்கள்.

வரலாறு என்ன சொல்கிறதென்றால் யூசுப் அலை அவர்கள் எகிப்தின் பஞ்சத்தை மட்டும் போக்கவில்லை. எகிபதை சுற்றியிருந்த மற்ற நாட்டு மக்களின் பஞ்சத்தையும் தீர்த்தார்கள். அவர்களுக்கும் உணவு கொடுத்தார்கள், அதனால் தான் எகிப்துக்கு வெளியே பாலஸ்தீனிலிருந்த மக்கள் தங்களது பஞ்சத்தை போக்க யூசுப் அலை உதவியை நாடி வந்தார்கள். யூசுப் அலை அவர்களின் சகோதரரகளும் அந்த வகையில் தான் எகிப்துக்கு வந்தனர்.

அந்த வரலாற்றின் தொடராக கிடைக்கிற இன்னொரு செய்தி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

மக்களின் பஞ்சத்தை போக்குகிற காலகட்டத்தில் யூசுப் அலை பெரும்பாலும் நோன்பு வைத்திருந்தார்கள், 

நாட்டு மக்களில் பெரும்பாலோர் பட்டினியில் வாடுகிற போது அரசியல் வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?  உண்மையான ஏழைகளின் மீதான அக்கறை என்பது என்பதை இது காட்டுகிறது.

நம்முடைய ஏழை நாட்டில் அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் ஆடம்பரமான நிர்வாகச் செலவுகள் குறைக்கப் பட வேண்டும். சிங்கப்பூரின் பிரதமரை விட நம்முடை நாட்டின் மாநில முதல்வர்கள் அதிக ஆடம்பரத்தோடு நடந்து கொள்கிறார்கள்.

ஏழைகளுக்கு உதவ உணவு கொடுக்கிறவர்கள் ஏழை தேசத்தின் தலைவர்களாக நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

அத்தகைய தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது கொண்டு வரப்பட்டிருக்கிற புதிய சட்டம் வெற்றியடை வேண்டும் என இறைவனை நாம் பிராத்தனை செய்வதற்கு அடுத்த படியாக நம்மை சுற்றியிருக்கிற ஏழைகளை பசியை போக்குவதற்கு நம்மால் ஆன முயற்சியை செய்ய வேண்டியது நம்முடையை மனிதாபிமானக் கடமையாகும்.

இஸ்லாம் அதை சிறந்த இஸ்லாமிய பண்பு என்று போதிக்கிறது.

இஸ்லாத்தின் சிறந்த காரியம் எது தோழர்கள் வினவிய பல சந்தர்ப்பத்திலும் பெருமானார் (ஸல்) அவர்கள் إطعام الطعام  என பதிலளித்துள்ளார்கள்.

 
عن عبد الله بن عمرو بن العاص ، رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وآله وسلم : " من أطعم أخاه خبزا حتى يشبعه وسقاه ماء حتى يرويه بعده الله عن النار سبع خنادق بعد ما بين خندقين مسيرة خمسمائة سنة " .

هذا حديث صحيح الإسناد ولم يخرجاه .

ولقد أكد رسول الله صلى الله عليه وسلم على هذا السلوك فور وصوله المدينة، حيث قال: «يا أيها الناس أفشوا السلام، وأطعموا الطعام، وصلوا الأرحام، وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام» «رواه ابن حبان، وأخرجه الحاكم في المستدرك وقال: هذا حديث صحيح على شرط الشيخين ولم يخرجاه

 

பக்கத்து வீட்டுக்காரகள் பசித்திருக்க வயிறாற சாப்பிடுகிறவன் உண்மை நம்மச் சார்ந்த்வன அல்ல என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

ஏழைகளுக்கு உணவ்ளிக்கத்தூண்டாவர்களை மார்க்கத்தை பொய்யாக்கியவர்கள் என்று குர் ஆன் கூறுகிறது.
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ(1)فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ(2)وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ(3)
 
 
இந்திய நாட்டில் உணவின்றி மக்கள் இறக்கிற நிலை அடியோடு மாற வேண்டும் என்று பிராத்திப்பது போது ஏழை மக்களின் வயிற்றுப் பசியை போக்க நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்
 

 

 

 

 

2 comments:

  1. அல்ஹம்து லில்லா மிகவும் அற்புதம் நல்ல கருதுக்கள் புதுகை உலமா

    ReplyDelete