வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 09, 2014

ஏந்தல் நபியின் ஏகத்துவப் பிரச்சாரம்




وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا(36) அந்நிஸா

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையில் ஏராளமான சாதனைகள் உண்டு

23 ஆண்டுகளில் மார்க்கத்தை பரிபூரணமாக செயல்படுத்தினார்கள்

10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் சமூக கட்டமைப்பை நிலை நாட்டினார்கள்

8 ஆண்டுகளில் அரபுலகில் இஸ்லாமிய குடியரசை நிறுவினார்கள்.

ஜாஹிலிய்யாவிலிருந்த

குலப்பெருமையை ஓழித்து சகோதரத்துவத்தை நிலைநாட்டினார்கள்

மதுவை ஓழித்தார்கள்

சூதாட்டத்தை தடை செய்தார்கள்

வட்டியை தடுத்தார்கள்

பெண்களை இழிவு படுத்தும் அடிமைத்தன கூறுகளை தகர்த்தார்கள்.

இன்னும்,,,, இன்னும் ,,,நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

பெருமானாரின் இந்தச் சாதனைப் பட்டியலில் உச்ச பட்சமானது அவர்களது ஏகத்துவ பிரச்சாரமும் அதில் அவர் கண்ட அளப்பெரிய வெற்றியுமாகும்.

முந்தைய பல நபி மார்களைப் போல சிலை வணக்கம் கோலோச்சிய ஒரு சமூகத்தில் தான் பெருமானார் (ஸல்) பிறந்தார்கள்.

கஃபாவை சுற்றி 360 சிலைகளை வைத்து வணங்கிக் கொண்டிருந்தார்கள் மக்காவாசிகள்.

இபுறாகீம் அலை அவர்களால் தூய்மையாக உருவாக்கப் பட்டிருந்த சமூகத்தில் பெருமானார் ஸல் பிறப்பதற்கு நானூறு வருடங்களுக்கு முன் சிலை வணக்கம் வந்து சேர்ந்தது.

காரணம் ; இஸ்மாயில் நபி திருமணம் செய்திருந்த ஜுர்ஹும் குலத்தாரை விரட்டி விட்டு பனூ குஸா ஆ என்ற குலத்தார் கஃபாவை கைப்பற்றியிருந்தனர். அவர்களுக்கு இபுறாகீம் நபியின் மார்க்கத்தை பற்றி எதுவும் தெரியாது. மக்களிடம் கஃபாவிற்கு இருந்த கண்ணியம் மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருந்தது.

ஜுர்ஹும்களின் தலைவன் லஹ்யுக்கு கடும் நோய் ஏற்பட்டது. பல்கா எனும் ஊரிலிருக்கிற சுடு தண்ணீர் ஊற்றில் குளித்தால் நோய போகும் என்று பலரும் சொன்னார்கள், அங்கு போனான், அம்மக்கள் சிலை வணங்குவதைப் பார்த்தான்.

அவன் தான் ஹுபல் சிலையை முதலில் கொண்டு வந்து கஃபாவில் வைத்தான். பிறகு அதற்கேற்ற சடங்குகளை உருவாக்கினான்..

وكان أول من غيَّر دين إسماعيل عليه السلام فنصب الأوثان ع لُحَيّ بن حارثة بن عمرو بن عامر الأزدي وهو أبو خزاعة.

إنه مرض مرضاً شديداً، فقيل له: إن بالبلقاء من الشام حمَّة إن أتيتها برأت فأتاها فاستحم بها فبرأ ووجد أهلها يعبدون الأصنام، فقال: ما هذه؟ فقالوا: نستسقي بها المطر ونستنصر بها على العدو، فسألهم أن يعطوه منها ففعلوا فقدم بها مكة ونصبها حول الكعبة، وقيل: إنهم أعطوه صنماً يقال له هُبل فقدم به مكة فوضعه عند الكعبة فكان أول صنم وضع بمكة.

சில வணக்கின் இயல்பே ஒன்று பத்தாக பெருகும் என்பது தான், அதற்கேற்ப மக்காவிலும் பெருகியது. கொள்கைகளும் சடங்குகளும் மாறின.

عن عبد الله قال دخل النبي صلى الله عليه وسلم مكة وحول الكعبة ثلاث مائة وستون نصبا فجعل يطعنها بعود كان بيده ويقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا جاء الحق وما يبدئ الباطل وما يعيد مسلم

من أشهر أصنامهم اللات ومناة والعزى، وكانوا يعبدون الأصنام لتقربهم إلى الله لاعتقادهم أن الله عظيم ويجب أن يكون هناك واسطة بين العبد وربه. فإذا كان الأولون يعترفون لله بالألوهية والربوبية الكبرى، ويكتفون بالشفعاء والأولياء، كان الآخرون يشركون آلهتهم مع الله ويعتقدون فيهم قدرة ذاتية على الخير والشر والنفع والضر والإيجاد والإفناء مع معنى غير واضح عن الله كإله أعظم ورب الأرباب.

சிலைகளை ஆரம்பத்தில் உருவாக்கியவர்கள் அவை பரிந்துரைக்கும் என்று நம்பினார்கள். பின்னால் வந்த அவர்களின் சந்த்தியினர் சிலைகளுக்கே சக்தியிருக்கிறது என்று நம்பத் தொடங்கினர்.

சிலை வணக்கம் எங்கே இருக்கிறதோ அங்கே அறிவுக்கு இடமிருக்காது

காண்பதெல்லாம் கடவுளாகி விடும்

உமர் (ரலி) இஸ்லாத்திற்கும் முன் பேரீத்தம் பழத்தில் ஒரு சிலை செய்து வைத்திருந்தார். பசி வந்தால் அதையே சாப்பிட்ட்டு விடுவார். பிறகு அது மாதிரி மற்றொன்றை செய்து கொள்வார்.

கஃபாவிற்குள்ளேயும் சபாவிலும் மர்வாவிலும் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. தொங்கோட்டம் சிலைகளுக்கானதாக ஆக்கப்பட்டது.

குறி கேட்பதும் – ஆட்டம் பாட்டமும் – சிலகளுக்காக பிராணிகளை அர்ப்பணிக்கும் இயல்பும் பரவியது,

குஸா ஆக்களிடமிருந்து பின்னர் கஃபாவை கைப்பற்றிய ஜுர்ஹும் வமிசத்தை சார்ந்த குறைஷிகளுக்கும் தங்களது பூர்வீக மதம் மறந்து போனது. அவர்களும் சிலை வணக்கத்தில் விழுந்தனர்.

இந்த நிலையில் தான்  பெருமானார் (ஸல்) அவர்கள் சிலை வணக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து புனித கஃபாவையும் அதன் மக்களையும் மனித சமூகத்தையும் சிலை வணக்கத்திலிருந்து மீட்டு ஏக இறைவனை மட்டுமே நம்பியும் வணங்கியும் வாழ்கிற சமுதாயத்தை உருவாக்கினார்கள்.

23 ஆண்டுகளில் பெருமானார் நிகழ்த்திய மகத்தான சாதனை இது. பல நபிமார்களால் நூற்றாண்டுகளாக செய்ய முடியாமல் போன பணி இது.

எந்த அளவு சிலை வணக்கத்தை ஒழித்தார்கள் எனில்?

இனி ஒரு போதும் அரபுலகில் சிலை வணக்கம் வராது என்று உறுதிபடச் சொன்னார்கள்.

عن جابر قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الشيطان قد أيس أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحريش بينهم مسلم 2812

அரபு தீப கற்பத்தில் தான் வணங்கப்படுவோம் என்பதில் சைத்தான் நிராசை அடைந்து விட்டான். ஆயினும் பகையை ஊண்டுபன்னுவதில் அவன் நிராசை அடையவில்லை.

இது விசயத்தில் இன்னொரு பெரும் சாதனை

அவர்கள் உருவாக்கிய தெளிவான ஏகத்துவக் கொள்கையை கடைபிடிக்கும் சமுதாயம் ஏகத்துவக் கோட்பாட்டில் முஸ்லிம் சமுதாயம் ஒரு போதும் சஞசலத்திற்கு ஆளானதில்லை. இனி ஒரு போதும் ஆளாகாது,

இது கியாமத் நாள் வரை பெருமானாரின் பெருமையை நிலை நாட்டிக் கொண்டே இருக்கும்.

யூத கிருத்துவ சமுதாயங்கள் ஏகத்துவத்தில் தடம் புரண்டன. ஈஸாவையும் உஸைரையும் (அலை) கடவுளென்றும் கடவுளின் மகனென்றும் சொன்னார்கள்.

முஸ்லிம்கள் ஒருபோதும் தங்களது நபி விச்யத்தில் தடம் புரளவில்லை.

நபியின் எச்சிலை தமது கைகளில் ஏந்திக் கொண்டார்கள், அவர்களது வியர்வையை சேகரித்தார்கள். அவர் மிச்ச வைத்த தண்ணீரை போட்டி போட்டுக்கு முகத்திலும் உடலிலும் பூசிக் கொண்டார்கள். அவர் விச்யத்தில் எவனும் ஒரு சிறு அவமரியாதை செய்வதையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்கள்.

எனினும் பெருமானாரை அல்லாஹ் என்றோ அல்லாஹ்வின் மகன் என்றோ அல்லாவிற்கு நிகரான சக்தி படைத்தவர் அல்லது மரியாதைக்குரியவர் என்றோ முஸ்லிம்கள் ஒரு போதும் சொன்னதில்லை. கருதியதில்லை.

பள்ளி வாசல் பக்கமே தலை வைத்தும் பார்க்காத பாமர முஸ்லிமிடம் கூட அல்லாஹ் என்றால் யார்? நபி யார்  என்ற தெளிவு இருக்கிறது.

அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹூ என்ற வார்த்தை அந்த தெளிவை சமுதாயத்திற்கு அளித்துக் கொண்டே இருக்கிறது;.

மதீனாவின் நபியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு சமுதாயம் இப்படித்தான் சொல்லுகிறது ‘

அஷ்ஹது அன்னக அப்துஹு வரஸூலுஹூ

அல்லாஹ் தான் காலிக் – ராஸிக் நாபிஃ முழிர்ரு முஹ்யி முமீது என்பதில் இந்த உம்மதை கியாமத் நாள் தெளிவாக தெளிவாக இருக்கச் செய்தார்கள்.

இன்று வரை முஸ்லிம்களில் யாருக்கும் இந்த விசயங்களில் எந்த குழப்பமும் இல்லை.

தெளிவான ஏகத்துவ வழிக்கு முஸ்லிம் உம்மத்தை பக்குவப்படுத்திய பெருமானாரின் வழி தனி வழியாகும்

இபுறாகீம் அலை சிலைகளை உடைத்து  அவை சக்தியற்றைவை என்பதை உணர்த்தி ஏகத்துவததை மக்களுக்குப் புரிய வைத்தார்கள்.

பெருமானார் (ஸல்) அப்படி செய்ய வில்லை. (மக்கா வெற்றியின் போது கூட பெருமானார் (ஸல்) சிலைகளை அப்புறப்படுத்தவே செய்தார்கள்)

இறைவனை பற்றி – இறைமையியலைப் பற்றி நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தி பெருமானார் இந்த சாதனையை செய்ய வில்லை.

தன்னுடைய் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாஹ்வை முன்னுறுத்தியும் அதே போல முன்னிறுத்தும் ஒரு திட்டத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியும் ஏகத்துவத்தை ஆழமாக விதைத்தார்கள்.

பெருமானார் தன்னுடைய வாழ்வில எப்போதும் அல்லாஹ்வை முன்னிறுத்தியதை சமுதாயம் கண்டது.

 

 لا تحزن إن الله معنا  சவ்ரு குகையில்:  

பத்ரு யுத்தத்திற்கு தோழர்களை அணிவகுக்கச் செய்த பிறகு தன் கூடாரத்திற்கு வந்து ஸ்ஜதாவில் விழுந்து يا حي يا قيوم   என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அகழ் யுத்ததின் போது 10 ஆயிரம் பேர் தாக்க வருகிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் حسبنا الله என்றார்கள்.

பனூ முஸ்தலிக் யுத்ததிலிருந்து திரும்பும் போது தனியாக படுத்துறங்கிக் கொண்டிருந்த பெருமானாரின் கழுத்தில் கத்தியை வைத்து எழுப்பிய திஃசூர்  என்பவர் என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்ற முடியும் என்று கேட்ட போது அல்லாஹ் என்றார் பெருமானார், எதிரியின் கையிலிருந்து வாள் கீழே விழுந்தது.

இப்படி ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம் பெருமானார் தன்னுடைய வாழ்க்கையை எல்லா நிலையிலும் அல்லாஹ்வை முன்னிறுத்திய வாழக்கையாக கொண்டார்கள்.

சங்கடங்கள் வருகிற போது அல்லாஹ்வை நினைப்பதும் துதிப்பதுமே அந்த சங்கடத்தை போக்கி விடும்

யூனுஸ் அலை மீன் வயிற்றிலிருந்து  அல்லாஹ்வை துதிக்க மட்டுமே செய்தார்கள்

لاإله إلآ أنت سبحانك إني كنت من الظالمين

 பெரும்பாலும் சங்கடங்கள் வருகிற சமயத்தில் தான் சமுதாயம் தடம் புரள்கிறது. ஒரு கஷ்டம் வந்த போதுதானே லுஹய் கஃபாவிற்கு சிலையை கொண்டு வந்து வைத்தான்.

சங்கடங்களின் போது அல்லாஹ்வை மட்டுமே தான் நினைவில் நிறுத்துவதை சமுதாயம் உணரருமாறு பெருமானார் (ஸல்) செய்தார்கள்.

அத்தோடு முஸ்லிம் உம்மத் தன்னுடைய வாழ்வில் மகிழ்ச்சி துக்கம் ஆச்சரியம் உறக்கம் விழிப்பு என அனைத்து நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூறும் ஏற்பாட்டை செய்தார்கள்.

பிஸ்மில்லா – அல்ஹம்து லில்லாஹ் – மாஷா அல்லாஹ்- இன்னாலில்லாஹ் – அல்லாஹு அக்பர்

இந்த திக்ருகள் முஸ்லிம் உம்மத்தை அல்லாஹ்வின் நினைவிலிருந்து திரும்பாமல் மட்டுமல்ல ஏகத்துவத்தின் வழியிலிருந்து தடம் புரளாமலும் பார்த்துக் கொண்டன.

இந்த உணர்வை பெற்றதனால் முஸ்லிம்கள் பெருமானாரை கூட அல்லாஹ்வாகவோ அல்லாஹ்வின் அளவுக்கு சக்திபடைத்தவராக ஒரு போதும் கருதவில்லை.

முஹம்மது (ஸல்) அவர்கள் விசயத்திலேயே தடுமாற்றத்திற்கு உள்ளாகாத சமுதாயம் ஒரு போதும் மற்ற எவர் விச்யத்திலும் தடுமாற்றத்தை சந்திக்க வில்லை.

மொலூது மீலாது விழாக்களில் பெருமானாரின் புகழ்மாலைகள் பாடப்படுகிறது என்றாலும் அதையும் கவனித்துப் பாருங்கள்!! அனைத்தும் அல்லாஹ்விடம் இறைஞ்சுதாலாகவும் அவனுடைய நெருக்கத்தை தேடுவதாகவும், பெருமானார் கற்றுக் கொடுத்த மார்க்கத்தை கடைபிடிக்க தவ்பீக்கை கேட்பதாகவுமே அமைந்திருக்கும்.

மொலூதுகளின் இறுதியில் பெருமானாரிடம் அல்ல. அல்லாஹ்விடமே சமுதாயம் துஆ கேட்கிறது.

ஏகத்துவம் விசயத்தில் விழிப்பாக இருக்கிற சமுதாயம் தெளிவாக உச்சரிக்கிற வார்த்தைகளுக்கு குழப்பமான அர்தத்தை கொடுத்து சில சகோதரர்கள் மொலூது விசயத்தில் குறை காண்கிறார்கள்.

அத்தகையோர் ஏகத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் பெருமானார் (ஸல்) அவர்கள் அற்புதமான சாதனையை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே அர்த்தமாகும்.  



 

  

 

 

2 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ். மிக அவசியமான, ஆழமான பதிவு

    ReplyDelete
  2. SIRAPAANA KATURAI VAAZTHUKKAL JANAB KOVAI ABDUL AZIZ BAKAVI AVARKALE

    ReplyDelete