வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 26, 2015

சொல் ! வெறும் சொல்லல்ல

.
ஒரு சொல் சிலரிடமிருந்து வருகிற போது எத்தகைய சக்தியைப் பெருகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் அமீர்கானின் கருத்து நாட்டில் ஏற்படுத்தியுள்ள அதிர்வலை
என் மனைவி நாம் வேறு நாட்டுக்கு சென்று விடலாமா என்று கேட்கிறார் என்று மத்திய அமைச்சர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்திலேயே அவர் கூறினார்.
இன்றைய முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு அச்சத்தை ஆமீர்கானின் கருத்து உலகிற்கு எடுத்துச் சென்று விட்டது.

அமீர்கானின் கருத்து தேச துரோகம்  என்று சொல்கிறவர் களே உண்மையில் தேசத் துரோகிகள். தேசத்தின் இறையாண்மையையும் ஸவ்ய்ஜ்ாண்யத்தஇயும் ஸீஇற்குளைப்பவற்கா

மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புத நிஃமத்துக்களில்  ஒன்று நாவு.
உணவை ருசிக்கவும் பேசவும் நாக்கு பயன்படுகிறது,
ருசிப்பது பேசுவது இரண்டிலும் நாவை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும். இல்லை எனில் கசக்கும்.  
நாவுக்கு நாம் பொறுப்பேற்றுக் கொண்டால் நம்முடைய சொர்க்கத்திற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَتَكَفَّلْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَتَكَفَّلْ لَهُ بِالْجَنَّةِ    - الترمذي

நாவு எச்சிலின் ஈரத்திலிருக்கிறது, அது திக்ரில் நனைந்ததாக இருப்பது ஒரு மனிதனுக்கு கிடைக்கிற பெரும் பாக்கியம்.
وأخرج أحمد والترمذي وابن ماجه عن ثوبان قال: لما نزلت وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ الآية، قال بعض أصحاب رسول اللّه صلّى اللّه عليه وسلم، لو علمنا أيّ المال خير اتخذناه، فقال رسول اللّه صلّى اللّه عليه وسلم: «أفضله لسان ذاكر، وقلب شاكر، وزوجة صالحة تعين المؤمن على إيمانه»

வாழ்க்கையில் பல வற்றை சேமிக்கவும் சேகரிக்கவும் ஆசைப்படுகிற நாம் நம்முடைய நாவு திக்ரால் நனைந்திருக்க ஆசைப்படுவோம்.

சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லா  என்று சொல்லிப் பழகுவோம். இது விசயத்தில் கூச்சம் தவிர்ப்போம்.

ஒரு சகோதரின் பெரிய வீட்டிற்கு சென்ற போது மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் என்று சொன்ன போது என் வீட்டை பாராட்டிய வார்த்தைகளில் இது சிறந்தது என்று அவர் சொன்னார்.

அரபிகளிடம் ஒரு பழக்கம் இருக்கிறது, வீடு பிரமிப்பாக இருந்தால் வீட்டுக்காரரிடம் இப்படிச் சொல்வார்கள், இப்படிச் சொல்லாவிட்டால் வீட்டுக் காரர் கோபித்துக் கொள்வார் என அரபிகளுடன் பழகிய ஒரு நண்பர் கூறினார்.

குழந்தை அதிக பதிப்பெண் பெற்றை ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டை காட்டுகிற போது முஃமின்களான நாம், கங்கிராட்ஸ் என்று சொல்வதற்கு முன்னால் அல்ஹமது லில்லாஹ் மாஷா அல்லாஹ் என்று சொன்னால் அது அல்லாஹ்வை புகழ்ந்ததாகவும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதாகவும் நாவை திக்ரால் நனைத்த்தாகவும் ஆகிவிடும்.

பீரோவில் வைத்திருக்கிற தங்கத்தை விட இந்த திக்ரு சிறந்த சொத்து,

நாவைப் பாதுகாத்து வைப்பது  
வெற்றிகரமான வாழ்க்கைக்கு நாவைப் பாதுகாப்பது அவசியம்,

عَنْ أَبِي أُمَامَةَ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا النَّجَاةُ قَالَ أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلَى خَطِيئَتِكَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ

நாவை பாதுகாக்க தவறினால் எல்லாவற்றிற்கும் கஷ்டம்

عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَفَعَهُ قَالَ إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الْأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّمَا نَحْنُ بِكَ فَإِنْ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنْ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا

ரோட்டில் போகிற போது எதிரிலிருக்கிறவனை எகத்தாளமாக ஏதாவது பேசி விட்டால் நமது  பல்லு பேர்க்க்கப்பட்டு விடுகிறது, முகம் காயப்பட்டு விடுகிறது, உடல் அலங்கோலப்படுத்தப்படுகிறது

வண்டியை கொண்டு போய் அடுத்தவன் மீது ஏற்றினால் நாவை குலைத்து ஒரு சாரி சொல்லி விட்டால் எல்லாம் பாதுகாக்கப்படுகிறது.

நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதன் விளைவு நாம் விரும்புகிற மாதிரி மட்டும் நடக்காது, நாம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தி விடும்

அதனால் நாவை அதிகம் பயப்படனும்

عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ قَالَ قُلْ رَبِّيَ اللَّهُ ثُمَّ اسْتَقِمْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَخْوَفُ مَا تَخَافُ عَلَيَّ فَأَخَذَ بِلِسَانِ نَفْسِهِ ثُمَّ قَالَ هَذَا   - الترمذي
 அதிகமாக  பேசிக் கொண்டே  இருப்பது  இதயத்தை  கடுமையாக்கி விடும்

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُكْثِرُوا الْكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ فَإِنَّ كَثْرَةَ الْكَلَامِ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ قَسْوَةٌ لِلْقَلْبِ وَإِنَّ أَبْعَدَ النَّاسِ مِنْ اللَّهِ الْقَلْبُ الْقَاسِي- الترمذي

நாம் பேசுகிற வார்த்தைகளில் நன்மையை ஏவி தீமையை தடுத்தவை மட்டுமே நமக்கு நன்மையானவை.

நன்மைக்கானவை தவிர மற்ற விசயங்களில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

عَنْ أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ كَلَامِ ابْنِ آدَمَ عَلَيْهِ لَا لَهُ إِلَّا أَمْرٌ بِمَعْرُوفٍ أَوْ نَهْيٌ عَنْ مُنْكَرٍ أَوْ ذِكْرُ اللَّهِ-  الترمذي

நல்ல விசயங்களை பேசுகிற போது அது சில வேலைகளில் பெரும் அந்தஸ்தை பெற்றுத் தரும்.

إِنَّ لِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلِرَبِّكَ عَلَيْكَ حَقًّا وَلِضَيْفِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ

என்று சொன்னது சல்மான் ரலி ஆவார், ஆனால் அவர் சொன்ன நல்லதை பெருமானார் (ஸல்) அங்கீகரித்தார்கள். அது பெருமானாரின் ஹதீஸாகிவிட்டது,

عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ وَبَيْنَ أَبِي الدَّرْدَاءِ فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ مَا شَأْنُكِ مُتَبَذِّلَةً قَالَتْ إِنَّ أَخَاكَ أَبَا الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا قَالَ فَلَمَّا جَاءَ أَبُو الدَّرْدَاءِ قَرَّبَ إِلَيْهِ طَعَامًا فَقَالَ كُلْ فَإِنِّي صَائِمٌ قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ قَالَ فَأَكَلَ فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ لِيَقُومَ فَقَالَ لَهُ سَلْمَانُ نَمْ فَنَامَ ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ لَهُ نَمْ فَنَامَ فَلَمَّا كَانَ عِنْدَ الصُّبْحِ قَالَ لَهُ سَلْمَانُ قُمْ الْآنَ فَقَامَا فَصَلَّيَا فَقَالَ إِنَّ لِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلِرَبِّكَ عَلَيْكَ حَقًّا وَلِضَيْفِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَأَتَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَا ذَلِكَ فَقَالَ لَهُ صَدَقَ سَلْمَانُ-  الترمذي

நமது நாவிலிருந்து வரும் சொற்கள் நல்லவையாக வெளிச்சமானவையாக வெளிச்சத்தை ஏறபடுத்துபவையாக இருக்க வேண்டும். அதற்கு ஆசைப்பட வேண்டும்.

சவூதி அரேபியாவைன் ஆரெம்கோ பெட்ரோல் நிறுவனத்தின் முதல் தலைவராக இருந்த சைக் யாசீனைப் பற்றி இஸ்லாமிய கலைக்களஞ்சியம் சொல்கிறது, அவர் அருமையாக இனிமையாக பேசுவார், எந்த அளவுக் கென்றால் அவர் ஒருவரிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு உன் இடது கையை வெட்டித்தா என்று கேட்டால் வெட்டிக் கொடுத்து விடுவார்கள்.

முஸ்லிமின் இலக்கணம் தன்மையான பேச்சு

عَنْ جَابِرٍ قَالَ قِيلَ : يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ؟ قَالَ :« مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ


பிறர் பற்றி குறை பேசுவதை கூடுமானவரை தவிர்த்துக் கொள்க!
இருக்கிற குறையைத்தானே சொல்கிறோம் என்று நியாயப்படுத்தக் கூடாது.
ஒரு குறையை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருந்தால் தவிர பிறர் குறைகளை கூறக் கூடாது.

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قِيلَ لَهُ : مَا الْغِيبَةُ؟ قَالَ :« ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ ». قِيلَ : فَإِنْ كَانَ فِى أَخِى مَا أَقُولُ؟ قَالَ :« فَإِنْ كَانَ فِيهِ فَقَدِ اغْتَبْتَهُ ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ فَقَدْ بَهَتَّهُ »

பிறர் குறைகளை கூறுவதில் சுகம் காணுதல் மிக இழிந்த குணம் , சிலரால் அப்படி பேசாமால் இருக்க முடியாது. அத்தகையோரை அருகே வைத்துக் கொள்ளக் கூடாது. விலகி நின்று விடனும்

பொய்புறம் பேசுவதுசண்டையை மூட்டிவிடுகிற கோள் சொல்வது என நாவின் தீமைகள் அனைத்திலிருந்தும் விலகிக் கொள்ள ஒரு முஃமின் முழுவதுமாக விலகிக் கொள்ள வேண்டும்.

தப்பாகவும் சபித்தும் எப்போது பார்த்தாலும் அமங்கலமாகும் சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள், இதுவும் தவறு.

நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ள பழக வேண்டியது. முஃமினின் இயல்பாகும்

நாவைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே மனிதர்களில் நன்மையான காரியங்களைச் செய்ய ஆற்றல் மிக்கவர் என பெருமானார் (ஸல்) கூறினார்கள்:

أخرج البيهقي

عن معاذ بن جبل قال : كنا مع النبي صلى الله عليه وسلم في غزوة تبوك ، فأصاب الناس ريح فتقطعوا ، فضربت ببصري فإذا أنا أقرب الناس من رسول الله صلى الله عليه وسلم ، فقلت : لأغتنمن خلوته اليوم ، فدنوت منه فقلت : يا رسول الله أخبرني بعمل يقربني - أو قال - يدخلني الجنة ، ويباعدني من النار؟ قال : لقد سألت عن عظيم ، وأنه ليسير على من يسره الله عليه ، تعبد الله ولا تشرك به شيئاً ، وتقيم الصلاة المكتوبة ، وتؤتي الزكاة المفروضة ، وتحج البيت ، وتصوم رمضان ،

وإن شئت أنبأتك بأبواب الخير . قلت : أجل يا رسول الله .

قال : الصوم جنة ، والصدقة تكفر الخطيئة ، وقيام العبد في جوف الليل يبتغي به وجه الله ، ثم قرأ الآية { تتجافى جنوبهم عن المضاجع } [ ألم السجدة : 16 ]

ثم قال : إن شئت أنبأتك برأس الأمر وعموده وذروة سنامه . قلت أجل يا رسول الله .

قال : أما رأس الأمر فالإسلام ، وأما عموده فالصلاة ، وأما ذروة سنامه فالجهاد ،

وإن شئت أنبأتك بأملك الناس من ذلك كله . قلت : ما هو يا رسول الله؟ فأشار بإصبعه إلى فيك . فقلت : وإنا لَنُؤَاخَذَ بكل ما نتكلم به؟! فقال : ثكلتك أمك يا معاذ ، وهل يُكِبُّ الناس على مناخرهم في جهنم إلا حصائد ألسنتهم ، وهل تتكلم إلا ما عليك أو لك؟! » .

பேசத் தேவையற்ற பொழுதுகளில் மெளனமாக இருக்கப் பழகுவது ஈமானிய குணம். சிறந்த வணக்கம்.

أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذى جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت  - اخرجه البخاري

وأخرج البيهقي عن أبي جحيفة قال : قال رسول الله صلى الله عليه وسلم : « أي الأعمال أحب إلى الله؟ قال : فسكتوا ، فلم يجبه أحد . قال : هو حفظ اللسان » .

وأخرج البيهقي عن عمران بن الحصين « أن رسول الله صلى الله عليه وسلم قال : مقام الرجل بالصمت أفضل من عبادة ستين سنة » .


சில நேரங்களில் தேவையற்ற பேச்சு மாபாதகங்களுக்கு இழுத்துச் சென்று விடும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ، مَا يَتَبَيَّنُ فِيهَا، يَزِلُّ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ المَشْرِقِ» رواه البخاري

இன்று நம்முடைய நாட்டில் பலபேர் நாவைக் கட்டுப்படுத்தாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுப்படுத்த வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்துக் கொன்டிருக்கிறார்கள்

மத்திய அமைச்சர்கள பேசினார்கள், ராமர் கோவில் வேண்டும் என்பவர்கள் ராம் ஜாதாக்கள் மற்றவர்கள் ஹ்ராம் ஜாதாக்கள் என்று ஒரு மத்திய அமைச்சர் பேசினார்.
தற்போது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுநர்கள் பேசுகீறார்கள்.
முஸ்லிம்கள் தங்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கருதினால் பாக்கிஸ்தானுக்கு போகட்டும் என்கிறார்கள்.

பேச்சுக்கள் வரலாற்றில் எத்தகைய பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறியாமல் அதிகாரப் பெருப்பில் இருப்பவர்கள் பேசுகிறார்கள்.

இது அந்தப் பொறுப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்பதைக் காட்டுகிறது.

அதே நேரத்தில் இத்தகைய அநீதியான சக்திகள் மேலோங்குகிற போது வாயை மூடிக் கொண்டு மெளனியாக இருந்து விடாமல் நீதிக்காக குரல் கொசுக்க நாவை திற்கக வேண்டியது மக்களின் தார்மீக கடமையாகும். அவ்வாறு குரல் கொடுக்கிற போது அது சிறந்த ஜிஹாதாகிவிடுகிறது.

அக்கிரமக்கார அரசனின் முன்னிலையில் சத்தியத்தை சொல்வதே சிறந்த ஜிஹாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அமீர் கான் ஒரு முஸ்லிமாக தனக்கேற்பட்டுள்ள வேதனையான சூழ்நிலையை விவரித்துள்ளார்.

ஒரு செல்வாக்குள்ள பண வசதி படைத்த ஒரு நடிகரே இவ்வாறு பேச வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார் என்றால் சாமாணிய முஸ்லிம்களின் சிரமங்களும் எண்ணவோட்டமு ம் எப்படி இருக்கும் என்பதை நாட்டில் ஜனநாயக அக்கறையுள்ள அனைவரும் உணர்ந்து பார்க்க வேண்டும்.  

மத்திய அரசு உடனடியாக வெறுப்புணர்வை ஊட்டும் பேச்சுக்களை முழு சக்தியுடன் தடுக்க வேண்டும். பாதுகாப்பும் அபயமும் கேட்கிற மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்.

No comments:

Post a Comment