வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 17, 2015

நபித்துவத்திற்கு சான்றளித்த 40

ரபீஉல் அவ்வல் பிறந்து விட்டது,  இது முஸ்லிம்களின் வசந்த காலம். பெருமானார் (ஸல்) அவர்களின் பிறப்பை எண்ணி மகிழ்ந்து அவர்களது அருமை பெறுமைகளை மஹல்லாக்கள் தோறும் நினைவு கூர்கிறார்கள். அண்ணலாரைப் பின் பற்றி நடப்பதில் தமக்குரிய கடமையை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
நாமும் மகிழ்வோம். புதிப்பித்துக் கொள்வோம்.
பெருமானார் (ஸல் அவர்களைப் புரிந்து கொள்பவர்கள் பாக்க்யவான்கள்.
நபி (ஸல்) அவர்களின் பக்கத்து வீட்டுக் காரன் அபூலஹ்பு. (இன்னொரு பக்கத்து வீட்டுக் காரன் உக்பது பின் அபீமூஈத்) பெருமானாரை சரியாக புரிந்து கொள்ள வில்லை. நபித்துவத்தை பற்றி அறியாமல் அவன் கேலி பேசினான்.
 وَقَالُوا مَالِ هَذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الْأَسْوَاقِ لَوْلَا أُنزِلَ إِلَيْهِ مَلَكٌ فَيَكُونَ مَعَهُ نَذِيرًا(7)
இவரும் ஒரு மனிதர் தானே என்பது தான் அவனது கேலியின் மையப் பொருள். 
எங்கோ தொலைவில் யமன் நாட்டிலிருந்த உவைஸுல் கர்னீ பெருமானாரை சரியாக புரிந்து கொண்டு,  பெருமானாரைச் சந்திக்காமலே இஸ்லாமை ஏற்றார். மிகச் சிறந்த தாபிஈ என் ற அந்தஸ்த்தை பெற்றார்.
وقال أحمد في مسنده: حدثنا أبو نعيم حدثنا شريك عن يزيد بن أبي زياد عن عبد الرحمن بن أبي ليلى قال: نادى رجل من أهل الشام يوم صفين: أفيكم أويس القرني؟ قالوا: نعم قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " إن من خير التابعين أويساً القرني "

பெருமானாரைப் பார்க்காமலே அவர் மீது அலாதியான அன்பு கொண்டிருந்தார்.

அவரது ஊருக்கு மதீனாவிலிருந்து வியாபாரக் கூட்டம் வந்துள்ளது எனக் கேள்விப்பட்டால் ஓடோடி வந்து “உங்களில் முஹம்மதைப் பார்த்தவர்கள் உண்டா என்று கேட்பார், ஆம் நான் பார்த்திருக்கிறேன் என்று யாராவது சொல்வார்கள் எனில் அவரைக் கட்டி அணைத்து அவரது இரு கண்களுக்கிடையே முத்தமிடுவார்.

பெருமானாரைச் சரியாகப் புரிந்து நிறைவாக அவரை நேசிக்கிற மக்களாக நம்மை அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

இனி வரும் நாட்களில் நம் அன்பிற்குரிய பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

பெருமானாரின் வரலாற்றை அடுத்தவர்களுக்கு சொல்லும் அளவுக்கு தெரிந்து வைத்திருக்க வேண்டியது முஸ்லிமாக நமது தார்மீக கடமையாகும்.

இன்று பெருமானாரின் பிறப்பு முதல், 40 வது வயதில் அண்ணார் நபியாக தேர்வு செய்யப்பட்டது வரையுண்டான வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த கால கட்டம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்தப் பருவத்தை தான் தன்னுடைய  நபித்துவத்தை நிரூபிக்கப் முக்கிய ஆதாரமாக பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.
فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ(16)
தன்னுடைய சத்தியத் தன்மையை நிருபிக்க பெருமானார் பயன்படுத்திய இந்த உத்தியை மக்காவின் காபிர்களால் இறுதிவரை மறுக்கவே முடியவில்லை.
காரணம்
அவர்களே நற்சான்று கொடுத்த புகழ் வாழ்வல்லவா அது?
இதில் நமக்கொரு முக்கிய பாடம் இருக்கிறது.
நம்முடைய நிகழ்காலத்தை தூயமையாக – பண்பானதாக - வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. அப்படி வைத்துக் கொண்டால் நாளை நம்முடைய வாழ்வை ஒரு தராசிற்கு முன் நிறுத்துப்பார்க்கிற சந்தர்ப்பம் வருகிற போது அது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களது ஆரம்ப கட்ட வாழ்வு தூய்மையானதாகவும் பேற்றுதலுக்குரியதாகவும் இருந்தது.
முஹம்மது (ஸல்) அவர்கள் அப்துல்லா ஆமினா தம்பதியரின் ஒரே மகனாக மக்காவில் கீ பி 571 ஏப்ரல் 20 தேதி திஙக்ட்கிழை அதிகாலை பிறந்தார்கள்.
அந்தக் குடும்பத்தை பெரும் கவலை சூழ்ந்திருந்த சந்தர்ப்பம் அது.
அப்துல்லாஹ் வியாபார பயணமாக சிரியாவிற்குச் செல்லும் கூட்டத்துடன் புறப்படத் தயாரானார். அப்போது அவரது இளம் மனைவி  ஆமினா அம்மா கர்ப்பமாக இருந்தார்.. மனைவியை பிரியும் ஏக்கத்தில் அவர் சொன்னார்.
நாங்கள் திரும்பி வரும் போது, பயணக்கூட்டம் திரும்பு கிறது என்பதற்கான அடையாளமாக சங்கு ஊதுவார்கள். அப்போது நீ வாசலில் வந்து எனக்காக காத்திருக்க வேண்டும், தலைவாசலிலேயே உன்னை நான் பார்த்து விட வேண்டும் என்றார்/
அது போலவே வியாபாரக் கூட்டம் திரும்புவதற்கான சங்கு ஊதப்பட்டது, ஆமினா அம்மா தன் கணவருக்காக தயாராகி வாசலில் காத்திருந்தார். வியாரக்கூட்டத்தில் வந்த ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிற்குள் சென்று விட்டனர். ஆமினா அம்மாவின் வீட்டிற்கு வர வேண்டியவர் வர வில்லை.
அந்த இளம் தாய் பரிதவிப்போடு பக்கத்தில் விசாரித்தார். அப்துல்லாஹ் சிரியாவிற்கு செல்லும் வழியிலேயே மதினாவில் காய்ச்சலுற்றதும் அங்கேயே தங்கிவிட்ட செய்தியும் பின்னர் மரணமுற்ற செய்தியும் பேரிடியாக வந்திறங்கியது,
கருவில் திருவைச் சுமந்திருந்த அம்மையாரின் வேதனை எத்தகையதாக இருக்கும்?
அவரை விட அதிக வேதனை அப்துல்லாஹ்வின் தந்தை அப்துல் முத்தலிபுக்கு
பாச மகனை பறிகொடுத்த துயரம் ஒரு புறம் என்றால் அவரது இளம் மனைவி கருவைச் சுமந்த நினைவில் பெரும் கவலையை சுமக்க வேண்டியதாகிவிட்டதே என்ற தாளமுடியாத சோகம் மறுபுறமாக அப்துல் முத்தலிப் தவித்தார்.
வானத்தை நோக்கிய் கைகள் உயர்ந்தன. புனித ஆலயமான கஃபாவை சுற்றி சுற்றிப் பிரார்த்தித்தார்.
அப்துல் முத்தலிப் மிகச் சிறந்த ஒரு மனிதர். மக்களின் அபரிமிதமான மரியாதைக்குரியவர், ஆபாசம் கொடிகட்டி வாந்த காலத்திலும் உத்தம குணங்களின் இருப்பிடமாக திகழ்ந்தவர், சிறந்த தீர்க்கமான சிந்தனைகளை கொண்டவர்,
கஃபாவை இடிக்க வந்த  ஆப்ரகாவிடம் என்னுடைய ஒட்டகைகளுக்கு நான் பொறுப்பு, கஃபா அல்லாஹ்வுடையது அதை அவன பார்த்துக் கொள்வான் என்று தயங்காமல் சொன்ன வார்த்தைகளிலேயே அப்துல் முத்தலிபின் மன உறுதியையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.  
அப்துல் முத்தலிபின் சிறப்பியல்கள்
ويؤثر عن عبد المطلب سنن جاء القرآن وجاءت السنّة بها،
منها الوفاء بالنذر، والمنع من نكاح المحارم، وقطع يد السارق، والنهي عن قتل الموءودة، وتحريم الخمر والزنا والحد عليه، وألا يطوف بالبيت عُريان، وتعظيم الأشهر الحرم. وهو أول من سنَّ دية النفس مائة من الإبل فجرت في قريش، ثم نشأت في العرب وأقرَّها رسول الله.

ஒரு முறை கவலை தோய்ந்த மனத்தோடு அப்துல் முத்தலிப் கஃபாவைச் சுற்றிக் கொண்டிருக்கிற போது அந்த முற்றத்திற்கு வந்த அடிமைப் பெண் ஒருவர் சப்தமிட்டுக் கூறினார்,
فقالت له: يا أبا الحارث ولد لك مولود عجيب، فذعر عبد المطلب وقال: أليس بشراً سوياً؟ فقالت: نعم، ولكن سقط ساجداً ثم رفع رأسه وأصبعيه إلى السماء فأخرجته ونظر إليه وأخذه ودخل به الكعبة وعوَّذه ودعا له ثم خرج ودفعه إليها

பெருமானார் (ஸல்) திங்கட் கிழமை பிறந்தார்கள். அவரை தம்து தங்கக் கரத்தால் தாங்கிக் கொண்டார் ஷிபா அம்மையார்.
ولد النبي صلى الله عليه وسلم في فجر يوم الاثنين لاثنتي عشرة ليلة مضت من شهر ربيع الأول
ونزل على يد الشفاء أم عبد الرحمن بن عوف فهي قابلته، رافعاً بصره إلى السماء واضعاً يده بالأرض. وكانت أمه تحدث أنها لم تجد حين حملت به ما تجده الحوامل من ثقل ولا وحم ولا غير ذلك
முஹம்மது என்று. பெயர் சூட்டிய பாட்டனாரின் ஆசை
فقيل: كيف سميت بهذا الاسم وليس لأحد من آبائك؟ فقال: إني لأرجو أن يحمده أهل الأرض كلهم،
யாருக்கும் தம் குழந்தையைப் பற்றிய ஒரு மேலெண்ணம் இருக்கும். இருக்க வேண்டும். அப்துல் முத்தலிபுடையதைப் போல வெற்றியடைந்தது எதுவும் இல்லை.
பிற பெண்களிடம் பால்குடிக்க வைக்கும் வழக்கம் அரபுகளிடமிருந்தது. கிராமங்களிலிருக்கிற சுகாதாரம், சுத்தமான பேச்சு வழக்கிற்காக அரபுகள் இவ்வாறு செய்தனர்,
أرضعته صلى الله عليه وسلم من النساء ثمان
وأكثرهن إرضاعاً له حليمة بنت أبي ذؤيب السعدية وتكنَّى أم كبشة - زوجها - الحارث بن عبد العزى
وأسعدها الله بالإسلام هي وزوجها وبنوها

இரண்டு வருடங்களுக்கு பிறகு தாயார் ஆமினாவிடம் திரும்பி வந்தார்கள் பெருமானார்.
ஆறாவது வயதில் மதீனாவிற்கு தந்தை ஜியாரத் செய்து விட்டு திரும்பும் வழியில் அப்வா என்ற இடத்தில் தாயார் ஆமினா அம்மா இறப்பெய்தினார்கள்.
ودُفنت بالأبواء بين مكة والمدينة وعمره ست سنين وكان عمر آمنة حين وفاتها ثلاثين سنة .
பிற்காலத்தில் ஆயிரம் போர்வீரர்களோடு  தாயின் கப்ரை பெருமானார் (ஸல்) ஜியாரத் செய்தார்கள். அப்போது அழுதார்கள்
وفي الحديث: أن رسول الله صلى الله عليه وسلم زار قبر أمه بالأبواء في ألفِ مُقَنَّعِ، فبكى وأبكى،
அப்துல் முத்தலிபின் பெறுப்பும் இறப்பும்..
لما بلغ رسول الله صلى الله عليه وسلم ثماني سنوات توفي جده عبد المطلب بمكة سنة 578
அப்துல் முத்தலிப் மரண தருவாயில் தம் பேரரை தனது மகன்களில் சிறந்தவரான அபூதாலிபிடம் ஒப்படைத்தார்,
சிறுவயதில் பெருமானார்
பெருமானார் (ஸல்) சிறுவயதில் துறு துறு வென்று இருந்தார்கள், சுறு சுறுப்பான அச்சிறுவரை பார்க்கிற எவரும்   إن لهذا الغلام لشأنا  என்றே கூறுவர்.

வியாபாரப் பயணம்
அபூதாலிப் 12 வயதில் பெருமானாரை வியாபாரத்திற்காக சிர்யாவுக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது தான் புஹைரா என்ற பாதிரி பெருமானாரின் அந்தஸ்து பற்றி குறைஷிகளிடம் கூறினார்,

அரபுகள் பல சமயத்திலும் புகைரா பாதிரியின் மாடத்தின் அருகே தங்குவார்கள். ஒரு தடவை கூட அவர் இறங்கி அவர்களின் அருகே வந்த்தில்லை, தமது மாளிகையின் மேலிருந்து பெருமானாரைப் பார்த்துவிட்ட பாதிரி கீழே இறங்கி வந்து பெருமானாரை ப் பற்றிய நற்செய்தியை கூறினார்.

இளம் வய்தில் பெருமானார்

நற்குணங்களின் மொத்த உருவாக திகழ்ந்தார்.

·         ابتعاده صلى الله عليه وسلم عن معايب الجاهلية
·         كان رسول الله صلى الله عليه وسلم يكره كشف العورة قبل البعثة
·         ولم يذق شيئاً ذبح على الأصنام حتى أكرمه الله برسالته،
·         ولم يلعب الميسر ولم يشرب خمراً قط مع أنها كانت منتشرة

அரபகத்தின் சூழல் சீர் கெட்டுக் கிடந்த்தால் அதிலிருந்து தப்பித்துக் கொண்ட பெருமானார் தனி அடையாளத்துடன் திகழ்ந்தார்கள்
சமூக் நலப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார்கள்
மக்காவில் உயர் குலத்தச் சார்ந்தவர்களின் பாதுகாப்பு இல்லாமல் நுழைபவர்களுடைய உடமைகளை பறித்துக் கொள்ளப்படுவது வாடிக்கையாக இருந்து, இவ்வாறு அநீதிக்குள்ளானவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக பழ்ல் என்ற பெயருடைய மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு உறுதி மொழி எடுத்டுக் கொண்டனர். அது ஹில்புல் புழூல் பழ்ல்களின் சத்தியம் என்ற சமூக நீதிப் பேரவையாக அறியப்பட்டது, அவர்களோடு பெருமானார் தன்னையும் இணைத்துக் கொண்டார்கள்.
.உண்மை நீதியின் மீதான் அக்கறை நற்செயல்களில் ஈடுபாடு துற்செயல்களில் விலகி நிற்பது ஆகிய பெருமானாரின் இளமைக்கால பண்புகள் வாழ்வில் உயர நினைப்போருக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.
ஆடு மேய்த்தல்
வியாபாரம் செய்வதற்கேற்ற பெருள் வசதி அபூதாலிபிடம் இல்லாததால் பெருமானார் தொடந்து வியாபாரத்தில் ஈடுபட முடியவில்லை. அதனால் தன்னுடைய் உறவினர்களுடை ஆடுகளை மேய்த்தார்கள்

قال رسول الله صلى الله عليه وسلم «ما من نبي إلا قد رعى الغنم»، قالوا: وأنت يا رسول الله؟ قال: «وأنا»، وقال: «ما بعث الله نبياً إلا رعى الغنم» قال له أصحابه: وأنت يا رسول الله؟ قال: «وأنا رعيتها لأهل مكة بالقراريط»،

 அபூதாலிப் தன் பிள்ளைகளை விட அதிக அன்போடும் மரியாதையோடும் பெருமானாரை வளர்த்தார். ஆயினும் வாலிப வயதிலுள்ள இளவலுக்கு வியாபாரத்திற்கான வசதிகளை செய்து தர முடியாததால் கதீஜா அம்மையாரின் வியாபாரக் கூட்டத்திற்கு ஒரு ஆள் தேவை என்று அறிந்து அவரிடம் சேர்த்து விடட்டுமா என பெருமானாரிடம் கேட்டு சம்மதம் பெற்ற பிறகு பெருமானாரின் 25 வயதில் கதீஜா அம்மையாரிடம் பணியாளராக சேர்த்து விட்டார்/

لما بلغ رسول الله صلى الله عليه وسلم خمساً وعشرين سنة ، قال له أبو طالب: أنا رجل لا مال لي وقد اشتد الزمان علينا وهذه عير قومك وقد حضر خروجها إلى الشام وخديجة بنت خويلد تبعث رجالاً من قومك في عيراتها فلو جئتها فعرضت عليها نفسك لأسرعت إليك. وبلغ خديجة ما كان من محاورة عمه له فأرسلت إليه في ذلك وقالت له: أنا أعطيك ضعف ما أعطي رجلاً من قومك. فخرج مع غلامها ميسرة وجعل عمومته يوصون به أهل العير حتى قدم بُصرى من الشام وهي مدينة على طريق دمشق فنزلا في ظل شجرة، فقال نسطور الراهب: ما نزل تحت هذه الشجرة قط إلا نبي، ثم قال لميسرة: أفي عينيه حمرة؟ قال: نعم لا تفارقه، قال: هو نبيّ وهو آخر الأنبياء، وكان ميسرة إذا كانت الهاجرة واشتد الحر، يرى ملكين يظلان رسول الله صلى الله عليه وسلم من الشمس فوعى ذلك كله ميسرة وباعوا تجارتهم وربحوا ضعف ما كانوا يربحون، فلما رجعوا أخبرها ميسرة بما قال الراهب نسطور، فلما رأت خديجة الربح الكثير أضعفت له ضعف ما سمت له.

சீமாட்டி அன்னை கதீஜா (ரலி)யுடன் திருமணம்.

அன்னை கதிஜா அரபகத்தின் பெரும் செல்வந்தராக அறிவாளியாக வியாபாரியாக இருந்தார். அவரது பண்ணைகள் ஜித்தா வரை பல பகுதிகளிலும் இருந்தன,

كانت خديجة بنت خويلد بن أسد بن عبد العزى بن قصيّ امرأة حازمة جلدة شريفة غنية جميلة من أواسط قريش نسباً وأعظمهم شرفاً، وكانت تدعى في الجاهلية بالطاهرة وبسيدة قريش، وقد عرض كثيرون عليها الزواج فلم تقبل، فلما رجع رسول الله صلى الله عليه وسلم من رحلته إلى الشام، أرسلت إليه من يرغبه في الزواج وقيل: إنها أرسلت أختها، وقيل: أرسلت نفيسة مولاة لها، فقال: «ما بيدي ما أتزوج به»، فقالت: فإن كفيت ذلك ودعيت إلى المال والجمال والشرف والكفاءة ألا تجيب؟ قال: «فمن هي؟»، قالت له: خديجة، قال: «فأنا أفعل»، فذهبت فأخبرت خديجة فأرسلت إليه أن ائت لساعة كذا وكذا وأرسلت إلى عمها عمرو بن أسد ليزوجها، فحضر ودخل رسول الله صلى الله عليه وسلم في عمومته فزوجه أحدهم، فقال عمرو بن أسد: «هذا البضع لا يقرع أنفه»، وتزوجها رسولُ الله صلى الله عليه وسلم وهو ابن خمس وعشرين سنة وخديجة يومئذ بنت أربعين سنة ، وذلك بعد عودته من الشام بشهرين.
கதீஜா அம்மாவின் முந்தைய திருமணங்கள்


تزوج خديجة قبل رسول الله صلى الله عليه وسلم ـ وهي بكر - عتيق بن عائذ بن عبد الله بن عمرو بن مخزوم ثم هلك عنها وتزوجها بعده أبو هالة النباش بن زرارة.

وولدت خديجة لعتيق، هنداً بنت عتيق وولدت لأبي هالة هنداً بنت أبي هالة، وهالة بن أبي هالة، فهند بنت عتيق وهند وهالة ابنا أبي هالة وكلهم أخوة أولاد رسول الله صلى الله عليه وسلم من خديجة.
وبعد زواج رسول الله صلى الله عليه وسلم بخديجة لم يسافر في رحلة للتجارة بل أقام بمكة إلى أن هاجر
إلى المدينة.

பெருமானாரின் குழந்தைகள்

وولدت خديجة لرسول الله صلى الله عليه وسلم جميع ولده إلاّ إبراهيم فإنه من مارية القبطية، فأكبر أولاده القاسم وبه كان يُكنى: «أبا الاسم»  ثم الطاهر، ثم رقية، ثم زينب، ثم أم كلثوم، ثم فاطمة،
.
பெருமானாரின் 35 வயதில் மக்காவின் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரு வாய்ப்பு

கஃபாவின் கட்டிடம்  பழுதடைந்த போது அதை குறைஷிகள் புணரமைத்னர். அந்தப் பணியில் பெருமானாரும் பங்கெடுத்தார்கள். ஹஜருல் அஸ்வதை எடுத்து வைப்பதில் சர்ச்சை எழுந்தது,

فلما بلغ البناء موضع الحجر الأسود اختلفوا فيمن يضع الحجر موضعه وأرادت كل قبيلة رفعه وتواعدوا للقتال ثم تشاوروا بينهم فجعلوا أول من يدخل من باب بني شيبة يقضي بينهم، فكان أول من دخل رسول الله صلى الله عليه وسلم فلما رأوه، قالوا: هذا الأمين رضينا به، وأخبروه الخبر فوضع رسول الله صلى الله عليه وسلم رداءه وبسطه على الأرض ثم أخذ الحجر فوضعه فيه ثم قال: «لتأخذ كل قبيلة بناحية من الثوب ثم ارفعوه»، ففعلوا فلما بلغوا موضعه، وضعه هو بيده الشريفة فرضوا بذلك وانتهوا عن الشرور،
அல் அமீன்
قال المسيو سيديو Sedillot في كتابه «تاريخ العرب»: «ولما بلغ محمد من العمر خمساً وعشرين سنة استحق بحسن سيرته واستقامة سلوكه مع الناس أن يلقب (بالأمين). وقال موير Muir: إنه لقب بالأمين بإجماع أهل بلده لشرف أخلاقه.
وكان أهل مكة يستأمنونه صلى الله عليه وسلم ويودعون عنده ودائعهم إلى أن هاجر إلى المدينة
இளமைக்கால வாழ்வு என்பது பெரும் பாலும் பெறுப்பற்றதாக தவறுகளுக்கு இடமளிப்பதாக இருந்து விடும்
ஆனால் பெருமானாரின் இளமைக்காலம் பரிசுத்தமானதாக மக்களின் நம்பிக்கைக்குரியதாக இருந்தது,
இதுவே பெருமானாரின் பெரும் வெற்றிகளுக்கு அஸ்திவாரம் அளித்தது,
மக்களை அச்சமூட்டி எச்சரிக்குமாறு அல்லாஹ் உத்தரவிட்ட போது சபா குன்றின் மீதேறி இதே இந்த குன்றுக்குப் பின் ஒரு படை உங்களை தாக்க இருக்கிறது என்று சொன்னால் என்ன சொல்வீர்கள் என பெருமானார் வினவிய போது
ما جربنا فيك إلا صدقا
உண்மையை தவிர உங்களைப் பற்றி வேறெந்த அனுபவமும் எங்களுக்கில்லை என்று மக்காவின் மக்கள் கூறினார்கள்.
ஒரு நபிக்கு இதை விட பலம் வேறன்ன வேண்டும் ?
பெருமானாரின் இளமை வாழ்வு நபித்துவத்திற்கு சாட்சியாக எடுத்துச் செல்லப் போது மானதாக அமைந்தது.
நாம் நமது வாழ்வை எப்படி அமைத்துக் கொண்டிருக்கிறோம், குறும்புக்காரர்களாக தப்பானவர்களாக நாணயமற்றவர்களாக அமைத்துக் கொண்டால் நாளை ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை நம்புமாறு மக்களை கேட்டுக் கொள்வதற்கு நம்மிடம் எந்த நியாயமும் இருக்காது,
ஒரு வாழ்க்கை உன்னத வாழ்க்கையாக இருப்பதற்கும் சராசரியாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் அது,
அல்லாஹ் பெருமானாரின் வாழ்வை முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ள தவ்பீக் செய்வானாக!





1 comment: