வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 10, 2015

துயர் துடைப்பு ஈமானிய குணம்

உதவி! முஸ்லிம்களின் அடையாளம்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் நடை பெற்ற வெள்ள நிவாரணப்பணிகளில் முஸ்லிம் ஜமாத்துக்கள் காட்டிய அக்கறையும் வேகமும் தாராளமும் தமிழக மக்களிடையே மத நல்லிணக்கம் இறுக காரணமாகியிருக்கிறது,

·         பிரசவ வேதனையில் துடித்த ஒரு பெண்ணுக்கு யூனுஸ் என்ற இளைஞர் உதவினார். அப்போது பிரந்த பெண் குழந்தைக்கு அந்தப் பெற்றோர் யூனுஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

·         பள்ளிவாசல்களில் பிற சமூக் மக்களுக்கு இடமளித்த முஸ்லிம்கள் தமது தொழுகையை வெளியே நிறைவேற்றிக் கொண்டனர்.

இது போன்ற ஏராளமான செய்திகள் முஸ்லிம்களின் உதவியின் சதவீதத்தை தொடர்ந்து பறைச் சாற்றிக் கொண்டிருக்கின்றன,
(உங்களுக்குத் தெரிந்த அருகில் நடை பெற்ற நிகழ்வுகளில் சிலதையும் பட்டியலிடலாம்.)
இந்திய ஊடகங்களும் பத்ரிகைகளும் மகத்தான சேவை என பாராட்டுகின்றன. மாநில முதல்வர் அவர்களும் பாராட்டியுள்ளார்.
இந்த பாராட்டுக்களை எதிர்பார்த்து முஸ்லிம்கள் இந்த காரியத்தில் இறங்க வில்லை, ஆற்றக் கூடாது.
ஏனெனில்
முகஸ்துதிக்காக காரியம் ஆற்றுகிறவர்கள் தொழுகையாளிகளே ஆனாலும் அவர்களை திருக்குர் ஆன் வன்மையாக கண்டித்திருக்கிறது.
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ(4)الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ(5)الَّذِينَ هُمْ يُرَاءُونَ(6)

மக்களுக்கு இடையூறு ஏற்படுகிற போது அதைக் கண்டும் காணாமல் இருக்கவோ  உதவாமல் இருக்கவோ ஒரு முஃமினால் முடியாது.

மக்களின் துயர் துடைப்பது ஈமானின் அடி நிலைப் பண்பு

قال النبي صلى الله عليه وسلم : الإيمان بضع وستون شعبة أعلاها قول لا اله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق
( رواه البخاري 9 ومسلم 152)

அது ஒரு தர்மம்

قال النبي صلى الله عليه وسلم: إماطة الأذى عن الطريق صدقة(رواه مسلم 1668 وأبو داود 1285

எத்தகைய தர்மம் என்றால் ?

அல்லாஹ் நன்றி சொல்லுகிற தர்மம்.

தொழுகைக்கு விரைந்து வந்த ஒரு சஹாபி பாதையில் விழுந்து கிடந்த மரக்கிளையை அப்புறப்படுத்தி விட்டு வந்தார். அதற்குள் சில ரக்க அத்துகள் தவறிவிட்டன. ஜமாத் முடிந்த பிறகு தனியே எழுந்து தொழுதார். பெருமானார் (ஸல்) அவர்கள் அவரை அழைத்தார்கள், எங்கே தாமதத்திற்காக கண்டிப்பார்களோ என தோழர் பயந்தார்.  உங்களுக்கு அல்லாஹ் நன்றி சொல்கிறானே அப்படி என்ன காரியம் செய்தீர்கள் என பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள், புகாரியில் இது சுருக்கமாக இடம் பெற்றுள்ளது,    

قد روى البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: "بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ".

நம்முடைய குழந்தை சைக்கிள் பழகுகிற போது அது சாக்கடையில் விழுந்து விட்டாமல் ஒருவர் பாதுகாத்தார் எனில் அவருக்கு நாம் எப்படி நன்றி சொல்லுவோமோ அது போல் தனது படைப்புக்கு ஒரு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்குகிறவருக்கு அல்லாஹ் நன்றி சொல்லுகிறான்.
துயருற்றோருக்கு உதவுதல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயல்பாக இருந்தது, நபித்துவத்திற்கு முன்போ பெருமானாரின் இந்த இயல்பு அறியப்பட்டிருந்தது,
ஹிராவிலிருந்து திரும்பிய பெருமானாருக்கு கதீஜா அம்மா (ரல்) ஆறுதல் கூறிய வார்த்தைகளில் இந்த அம்சம் குறிப்பிடப்பட்டடிருந்தது,
 لقد عرف بذلك قبل بعثته صلى الله عليه وسلم، فعند نزول الوحي عليه أول مرة رجع إلى خديجة فأخبرها الخبر ثم قال: "لقد خشيت على نفسي". عندئذ أجابته أم المؤمنين خديجة رضي الله عنها: كلا والله! ما يخزيك ا لله أبدًا، إنك لتصل الرحم، وتحمل الكلَّ، وتكسب المعدوم، وتقري الضيف، وتعين على نوائب الحق.

வழித்தடங்களில் அமர்ந்திருப்பர்வர்களின் பொறுப்பு: துயர் துடைத்தல்
وعند أحمد من حديث البراء بن عازب رضي الله عنه قال: مرَّ رسول الله صلى الله عليه وسلم بقوم جلوس في الطريق. قال: "إن كنتم لابد فاعلين فاهدوا السبيل، وردوا السلام، وأغيثوا المظلوم".

இப்னு அப்பாஸ் (ரலி) இஃதிகாபில் இருக்கிற போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்திற்கு  வந்து தன் மிதிருக்கிற கடன் சுமையை பற்றி தீனமாக முறையிட்டார். இப்னு அப்பாஸ் ரலி) அவரது கையை பிடித்து அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கலானார், நீங்கள் இஃதிகாபில் இருப்பவர் அல்லவா? என அந்த தோழர் கேட்ட போது இப்னு அப்பாஸ் ரலி சொன்னார்

பத்து வருட இஃதிகாபை விட ஒருவரின் துயர் துடைப்பது சிறந்தது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்)  
எனது இந்தப் பள்ளியில் இரண்டு மாதம் இஃதிகாப் இருப்பதை விடச் சிறந்தது என்றார்கள் .

 حديث ابن عباس مرفوعا: من مشى في حاجة أخيه كان خيرا له من اعتكاف عشر سنين ـ الترغيب والترهيب

وقال: رواه الطبراني في الأوسط٬ والحاكم٬ وقال: صحيح الإسناد ـ إلا أنه قال: لأن يمشي أحدكم مع أخيه في قضاء حاجته ـ وأشار بأصبعه ـ أفضل من أن يعتكف في مسجدي هذا شهرين. اهـ.

நெருக்கடிக்கு ஆளான மக்களுக்கு அவர்களின் தேவையைக் கண்டறிந்து செய்கிற ஒவ்வொரு உதவியும் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது.

 أحب الأعمال إلى الله عز وجل ، سرور تدخله على مسلم، أو تكشف عنه كربة أو تطرد عنه جوعاً، أو تقضي عنه ديناً 

ஒரு தீப்பட்டி , அல்லது ஒரு கொசு வர்த்திச் சுருள், அல்லது ஒரு சானிட்டரி நாப்கின் எந்த அளவில் மிக அவஸ்த்தையான ஒரு கட்டத்தில்  உதவியாக முடிய்ம் என்பதை தற்போதைய நிவாரணப்பணிகள் வெளிப்படுத்து கின்றனறன்.  

முஃமின்கள் இத்தகைய ஒரு வேலையை – துயர் துடைப்பணிகளை – தமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதுவார்கள்,

முன்னோர்களின் அற்புதமான பார்வையை என்ன வென்பது? , மாஷா அல்லாஹ்

·        كان سفيان الثوري -رحمه الله- ينشرح إذا رأى سائلاً على بابه ! ويقول: "مرحباً بمن جاء يغسل ذنوبي"

என் பாவங்களை கழுவ வந்தவரே வருக! என யாசகனை வரவேற்றார் சுப்யான் அஸ் ஸவ்ரீ ரஹ்

நிவாரணப் பணியில் ஈடுபட்டோர் முதியவர்களை சுமந்தார்கள், மூட்டைகளை சுமந்தார்கள், கர்ப்பிணிகளைச் சுமந்தார்கள், பிணங்களைக் கூட சுமந்தார்கள், அதை மீடியாக்கள் வானளாவ உயர்த்திப் பேசுகின்றன,

புழல் பின் இயாழ் ரஹ்நமது பார்வையை திருப்பி விடுகிறார்கள், நீங்கள் சுமந்தது கொஞ்சம் உங்களுக்காக  மீஸான் வரை அவர்கள் சுமந்து வருவார்களே அது அதிகம்.

·        كان الفضيل بن عياض - رحمه الله - يقول:" نعم السائلون، يحملون أزوادنا إلى الآخرة، بغير أجرة حتى يضعوها في الميزان "

நம்மிடமிருந்து உதவி பெறுகிறவர்கள் நமது நன்மையின் சுமைகளை மறுமைக்கு கொண்டு வந்து மீஸானில் வைக்கிறார்கள்  என்றார் புழைல் பின் இயாழ் ரஹ்

துயர் துடைக்கும் பணியில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சத்தை மஃமர் ரஹ் நினைவூட்டினார்கள்

ما أحسن ما قاله معمر - رحمه الله - : " من أقبح المعروف أن تحوج السائل إلى أن يسأل وهو خجل منك، فلا يجئ معروفك قدر ما قاسى من الحياء، وكان الأولى أن تتفقد حال أخيك وترسل إليه ما يحتاج، ولا تحوجه إلى السؤال".
ஒருவர் உங்களை விட வெட்கஸ்த்தராக இருப்பார், அவரை உங்களிடம் கேட்க விட்டு பிறகு உதவி செய்வதை விட நன்மைகளில் கெட்ட நன்மை யாகும்.  உனது உதவி அவனது வெட்கத்திற்கு நிகராக ஆகிவிட முடியாது, கேட்பதற்கு முன்பே உன் சகோதரனுக்கான உதவியைச் சேர்த்து விடுவதே சிறந்தது,

துய்ருக்கு ஆளானவரின் நிலையை அறிந்து கொள்வதும் அவரது தேவைகளை தெரிந்து கொள்வதும் துயர் துடைப்பு பணியின் முக்கிய அம்சமாகும். நம்மிடத்தில் இருப்ப்தை கொடுப்போம் என்பதை விட தேவையானதை கொடுப்போம் என்ற சிந்தனை துயர் துடைப்பு பணியின் முக்கிய அம்சமாகும்.

துயருக்குள்ளானவர்களை அறிவது என்பது மானுடத்தின் பிரதான பணியாகும்,

இஸ்லாமிய வரலாறு ஒரு காட்சியைக் காட்டுகிறது, ஒருவர் நண்பரின் வீட்டுக் கதவை தட்டிூற திர்ஹம் கடன் வேண்டும் என்றார், நானூறு திர்ஹத்தை கடனாக கொடுத்துவிட்டு கொடுத்தவன் அழுதான், என் நண்பன் கடன் கேட்கும் நிலையில் இருக்கிறான், என் வீட்டு வாசலை வந்து அவன் தட்டும் வரை அதை அறியாமல் இருந்து விட்டேனே என அழுதார்.

أتى رجل صديقًا له فدق عليه الباب، فخرج الصديق، وقال له: ما جاء بك؟
قال: علي أربعمائة درهم دين.
فوزن له صديقه أربعمائة درهم، وأعطاه إياها، ثم عاد وهو يبكي!
فقالت له امرأته: لم أعطيته إذ شق عليك؟!
فقال: إنما أبكي لأني لم أتفقد حاله حتى احتاج إلى مفاتحتي


துயர் துடைப்பு பணியைப் பெறுத்தவரை அதற்கு தூண்டுவதும், துணை நிற்பதும் கூட நன்மையானதேயாகும் அதற்கும் அலாதியான நற்கூலி உண்டும்

ஒரு மனிதர் தன் மகனிடம் நீ கடனை வசூலிக்கச் செல்லும் போது கஷ்டப்ப்டுபவனுக்கு கருணை காட்டு என்று சொன்னார், அதை தவிர அவர் வேறு பெரிதாக் எந்த நற்செயலும் செய்யவில்லை, இப்படிச் சொன்னதற்காக அவருக்கு சொர்க்கம் கிடைத்தது,

قال رسول الله صلى الله عليه وسلم: «كان رجل يداين الناس، فكان يقول لفتاه: إذا أتيت معسرًا فتجاوز عنه، لعل الله يتجاوز عنا، فلقي الله؛ فتجاوز عنه» [رواه البخاري ومسلم] وفي رواية للبخاري: «فأدخله الله الجنة!».




எனவே முஸ்லிம்களின் நிவாரப்பணி என்பது அவர்களின் ஈமானிய அடையாளமாகும். அவர்களால் இந்த வேகத்த்தில் இத்தகைய நிவாரணத்தை செய்யாமல் இருக்க முடியாது,
நிவாரணப்பணிகளில் ஈடுப்பட்டிருப்போரும், அவர்களுக்கான உதவிகளை தருவோரும் கூட இதை நாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மத்யன் நகரின் கிணற்றடியில் தமது பிராணிகளுக்கு தண்ணீர் புகட்ட முடியாமல் தவித்த இரு பெண்களைப் பார்த்த போது அவர்கள் பெண்களாக இருந்தாலும் அவர்களை அப்படியே விட்டு விட்டுச் செல்ல மூஸா அலை அவர்களின் மனம் ஒப்ப வில்லை, அவர்களின் சிரமத்தை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்தார்.

وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنْ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمْ امْرَأتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ * فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ)[القصص: 23، 24].

இப்படி ஒரு உதவி செய்து கொடுத்தற்காக எந்தப் பெயரையும் புகழையும் பிரதிபலனையும் மூஸா அலை எதிர்பார்க்க வில்லை,
என் தந்தை உங்களுக்கு கூலி தர விரும்புகிறார் என்று சுஐபு நபியின் மகள் கூறிய போது இதற்கு நான் கூலி வாங்க மாட்டேன்.  என மூஸா அலை கூறிவிட்டார், என் தந்தையிடம் நீங்கள் வேலைக்காவது சேரலாம் என சுஐபு நபியின் மகள் கூறியதனாலே அவருடன் சென்று சந்தித்தார். இதன் காரணமாகவே சுஜைபு நபியிடம் அவரது ம்கள் இவர் வேலைக்கு வைத்துக் கொள்ள பொறுத்தமானவர் எனக் கூறினார் என முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள்.
துயர் துடைப்பு பணிகளில் ஈடுபடுவதை நமது விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளாத பக்குவத்தை அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவருக்கும் தந்தருள்வானாக!
மதர்ஸா குழந்தைகள் தமது சேமிப்பை நிவாரணப்பணிகளுக்கு வழங்கினர் என்ற செய்தி நம்மை நெகிழ வைக்கிறது,
இதுபோன்ற தருணங்களில் நம்மாளான உதவியை வழங்க வேண்டியது நமது கடமை என்ற பக்குவத்த்தையும் அல்லாஹ் நம் அனைவருக்கும் தரட்டும்.
துயர் துடைப்பு பணிகளில் நாம் எல்லா தரப்பு மக்களுக்கும் உதவு வது போல இந்தப் பணியில் நாம் தனித்து நிற்க கூடாது, இந்தப் பணியில் மற்றவர்களோடு நம்மை இணைத்துக் கொள்வது  

இந்த சந்தப்பத்தில் ஊடகங்களுக்கும் உலகிற்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
முஸ்லிம்கள் இந்த வெள்ள நிவாரணப்பணியில் எந்த வேகத்தோடும் தாரளத்தோடும் ஈடுபட்டார்களோ அதே வேகத்தோடும் தாராளத்தோடும் தான் நாட்டிற்கு ஏற்பட்ட எந்த நெருக்கடியின் கால கட்டத்திலும் இந்த சமுதாயம் செயல்பட்டது.
நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்திலும் இப்படித்தான் முஸ்லிம்கள் தம்முயிர் தன்னலன் பாராது விடுதலைப் போரில் பங்காற்றினர். தயங்கியும் நிற்கவில்லை. ஒதுங்கியும் நிற்கவில்லை, யாரையும் எதிர்பார்த்தும் கொண்டிருக்க வில்லை, முஸ்லிம்கள் முன்னே நடக்க இந்திய மக்கள் அவர்களது பின்னே அணிவகுத்தனர் என்பது தான் சத்தியம்.
மிகச்சிறந்த சமூக நல்லிணக்கம் அப்போது நிலவியது, நாடு பிரிவிணைக்கு ஆளான பிறகும் கூட இந்தியாவில் அந்த சமூக நல்லிணக்கம் பெரும்பாலும் இடரில்லாமல் தொடர்ந்து வந்தது,
சமீப கால அந்த நல்லிணக்கத்தை குலைத்து  முஸ்லிம்களின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்த சில சக்திகள் பெரும்பாடுபட்டு அத்தகைய ஓரு சூழ் நிலையை ஏற்படுத்துவதில் ஓரளவும் வெற்றியும் பெற்று வந்தனர், இந்து முஸ்லிம் ஒற்றுமை என்பது பலத்த சிதைவுக்கு உள்ளாகி வந்தது,
அல்லாஹ்வின் திட்டத்தை பாருங்கள்
ஒரு பெரும் சோதனையை கொடுத்த இறைவன் அதிலும் ஒரு நன்மையை வைத்தான்,
கடும் கோடை காலத்தில் ஒரு சிறு மேகம் நம்மைக் கடந்து போனால் எப்படி மொத்த வெப்பமும் நிமிடத்தில் குளிர்ந்து போகுமோ அது போல ஒரு மழையின் தாக்கத்தில் மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட செயற்கையான பெரும் பிளவு காணல் நீரைப் போல காணாமல் போனது,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் தான் முஸ்லிம்கள் நிவாரணப்பணிகளில் இறங்கினார்கள், அதன் பயனாக சமூக நல்லிணததிற்கான வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்தி யிருக்கிறான்,
முஸ்லிம்களை அவதூறாகவே பேசிக் கொண்டிருந்த மீடியாக்கள் கூட முஸ்லிம்களை பாராட்டும் நிலையை அல்லாஹ் ஏற்ப்டுத்திவிட்டான்,    
“இன்ன மஅல் உஸ்ரி யுஸ்ரா” என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது,
முஸ்லிம்கள் சகோதரத்துவ சமயத்தவருடனான தமது நல்லுறைவை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள இனியும் முயல் வேண்டும்.
அதற்கு எப்போதும் உதவி செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை,
சமூக நல்லுறவு குறித்த சிந்தனை அதிகரிக்க வேண்டும்.
அதற்கேற்ற் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும்.
நெருக்கடி நேரத்தில் மற்றவர்களுக்காக திறந்த பள்ளிவாசலின் கதவுகள் அதன் பின்னரும் அவர்களை வரவேற்கும் வகையிலும் அவர்களது சிரமங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் அமைய வேண்டும்.
மஸ்ஜித்களில் அந்தப் பகுதியில் உள்ள மாற்றுமத மக்களின் தேவைக்கு ஜும் ஆ வசூல் செய்து கொடுக்கலாம். ( மருத்துவம், போன்றவற்றீற்கு)
பள்ளிவாசல்களில் ஊதிப்பார்க்க வருகிறவர்களை மரியாதையாக நடத்துவது, தேவை எனில் பெஞ்சு போட்டுக் கொடுப்பது,
ஓதிப்பார்ப்பவர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதையும் தேவையற்ற காரியங்களையும் செய்வதை தடுப்பது,
தண்ணீர் போக்கு வரத்து வழி ஆகியவற்றை மற்றவர்களுக்காக திறந்து விடுவது,
உதவிகள் செய்யும் போது நாம் மனிதர்கள் என்ற உண்மையான உணர்வோடு இருப்பது,
இது போன்ற காரியங்கள் துயர் துடைப்பு பணியை நமது மீஸானுக்கு கணத்தை சேர்க்கும்,

அல்லாஹ் கிருபை செய்வானாக
உனக்கு விரும்புவதையே நீ பிறருக்கும் விரும்பு என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் 12 ம் தேதி தொடங்க இருக்கிறது, அன்றிலுருந்து பள்ளீவாசல்களில் நடைபெறுகிற மெளலூது நிகழ்ச்சியிலும் பயான்களிலும் கலந்து பயன் பெறுவோம். அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்தி வாழக்கூடியவர்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!


5 comments:

  1. அருமையான பதிவு! அல்ஹம்துலில்லாஹ்....

    ReplyDelete
  2. மக்களின் சேவை ஒருபக்கம் நடந்து கொண்டு இருந்தாலும் ஆலிம்களுக்கு உங்களின் சேவை மகத்தானது அருமையான பதிவு

    ReplyDelete
  3. Anonymous9:49 PM

    கடன கேட்ட செய்தியில் அரபிய வாசகம் اربعمائة என்று இருக்கு.
    தமிழில் "நாலு" என்றுள்ளது.

    ReplyDelete
  4. Mowlid Patti vilakam tharavum

    ReplyDelete