வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 07, 2016

சரித்திர வாழ்வின் நிறைவு



الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் நிறைவுக் கால கட்டத்தின் சாதனையையும் சிறப்பையும் சொல்ல இந்த ஒரு ஆயத் போதுமானது.

பெருமானார் அவர்களின் வாழ்வு நிறைவு பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் இந்தப் பிரகடனத்தை அல்லாஹ் திருக்குர் ஆனில் வெளியிட்டான்.
மார்க்கம் நிறைவு பெற்று விட்டது.”

எந்தப் பணிக்கு பெருமானார் தேர்வு செய்து அனுப்பப் பட்டார்களோ அந்தப் பணியை முழுமையாக செய்து முடித்தார்கள். அதுவும் மிகக் குறைந்த காலக் கெடுவுக்குள்.
அந்த முழுமைக்கான ஒரு விளக்கம் தான். எதிரிகளை நம்பிக்கை இழந்து விட்டனர் என்ற வாசகம்.
الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ


உங்களை இனி எதுவும் செய்ய முடியாது என எதிர்கள் உணர்ந்து கொண்டு விட்டனர் என்பது சாதனையின் சிகரத்தை சுட்டிக் காட்டுகிறது.
இது வெற்றியின் முழுமையை காட்டுகிறது.

பல நபிமார்களாலும் தமது இலக்கை எட்ட இயல வில்லை.
தன்னுடைய மக்களை வாக்களிக்கப்பட்ட நிலத்தில் குடியமர்த்தும் முன்னரே மூஸா அலை வபாத்தாகிவிட்டார்கள். யூசஃ பின் நூனின் தலைமையில் தான் யூதர்கள் தாம் வாக்களிக்கப்பட்ட நிலத்திற்கு திரும்பினார்கள்.
950 வருடங்கள் பிரச்சாரம் செய்தும் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களையே நூஹ் நபியால் மாற்ற முடிந்தது.  நபியின் கண் முன்னேயே அவரது சமூகம் அழிக்கப்பட்டது.  
குறைந்த காலத்திற்குள் மார்க்கத்தின் சகல சட்ட திட்டங்களையும் நடை முறைப் படுத்திக் காட்டி. பிரிந்து  கிடந்த மக்களை ஒரு வலிமையான ஒற்றுமையான உன்னதமான சமூகமாக ஆக்கி
புறக்கணிக்கப்பட்டவர்களை அதிகாரத்தில் இருத்தி ஒரு வலிமையான அரசை உருவாக்கிக் கொடுத்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள். 
அரபு பிரதேசத்தில் பெருமானாரை எதிர்த்த மக்காவின் காபிர்களை முறியடித்தார்கள் என்பது பெருமானாரின் பெரிய சாதனை அல்ல.
அரபுகளுக்கு கொடுத்த அந்த மாபெரிய நிஃமத் முழு உலகையும் சென்றடைய பெருமானார் வழியமைத்துக் கொடுத்தார்கள் என்பது தான் பெருமானாரின் சாதனையை பிரமாதப்படுத்துகிற செய்தியாகும்.
இந்த சாதனைப் பணிகளுக்கான வெற்றிக் களமாக பெருமானார் (ஸல்) அவர்களின் இறுதி நான்கு ஆண்டுகள் அமைந்தன.
தன்னுடைய 59 வயதில் ஹிஜ்ரி 6 ல் மக்காவின் காபிர்களோடு ஹுதைபிய்யா உடன்படிக்கை செய்து கொண்ட பெருமானார் அவர்களுக்கு அந்த உடன்படிக்கையை பெரும் வெற்றி என அல்லாஹ் அறிவித்தான்.
தோல்வி என நினைததுக் கொண்டிருந்த மக்களுக்கு அதிலிருக்கிற வெற்றிக்கான வாய்ப்பை எண்ணிப்பார்த்து செயல்பட அல்லாஹ் பழக்கினான்.
وكان أبو بكر الصديق يقول: ما كان فتح في الإسلام أعظم من فتح الحديبية ولكن الناس قصر رأيهم عما كان بين محمد صلى الله عليه وسلم وربه، والعباد يعجلون والله لا يعجل لعجلة العباد حتى تبلغ الأمور ما أراد.

முஸ்லிம்களுக்கும் மக்காவின் காபிர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதே அரபு பிரதேசத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
மக்காவின் சுற்றுப் புறத்தில் இருந்த மக்கள் பலரும் குறைஷிக் காபிர்களை பகைத்துக் கொள்ள வேண்டியதாகிவிடுமே என்று பயந்தே இஸ்லாத்தை ஏற்க தயங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த உடன்பாடு அவர்களது தயக்கத்தை கலைத்தது.
மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமை ஏற்கத் தொடங்கினர்.  குறிப்பாக எமன் பஹ்ரைன் போன்ற பகுதிகள் மொத்தமாக முஸ்லிம்களால் நிரம்பியது
பெருமானார் (ஸல்) அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பக்கத்திலிருந்த ஆட்சித்தலைவர்களை தீனுக்கு அழைத்து கடிதம் எழுதினார்கள்.
முஸ்லிம்ககளையும், உலகையும் பொறுத்து இது ஒரு அசாதாரண நிகழ்வாகும்..
இது ஒரு நபித்துவ அற்புதமாகும்.
அரசர்களுக்கு கடிதம் அனுப்புகிற அளவுக்கு துணிச்சல் பெற்ற அரபுத்தலைவர்கள் யாரும் அதுவரை பிறக்கவில்லை.
பூமியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் நாடோடிக் கூட்டங்களாக மட்டுமே கருதப்பட்ட மக்களிடமிருந்து கடிதம் வந்த போது கடிதத்தைப் படிக்காமலே பாரசீக மன்னன் கொத்தித் தெழுந்தான்.
ஒரு அடிமை எனக்கு கடிதம் எழுதுவதா?
أيكتب إلي عبدي ؟
பெருமானாரின் இந்த நடவடிக்கை தீனை உலகம் முழுவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனையை முதல் முஸ்லிம் உம்மத்திற்கு வழங்கியது. தமது பொறுப்பை அவர்கள் உணர வழி வகுத்தது.
அன்றை மாபெரும வல்லரசின் தலைவர் ரோமச் சக்ரவர்த்திக்கு பெருமானார் (ஸ்ல்) கடிதம் எழுதினார்கள்.
كان إرسال الكتاب إلى هرقل سنة ست من الهجرة بعد رجوعه صلى الله عليه وسلم من الحديبية وكان وصوله إليه في المحرم سنة سبع وقد أمر رسول الله صلى الله عليه وسلم دحية بن خليفة الكلبي أن يدفعه إلى عظيم بصرى وهو الحارث ملك غسان ليدفعه إلى هرقل
கடிதத்தின் வாசகம் இது
(بسم الله الرحمن الرحيم، من محمد رسول الله إلى هرقل عظيم الروم، سلام على من اتَّبع الهدى، أما بعد: أسلم تسلم، وأسلم يؤتك الله أجرك مرتين وإن تتول فإن إثم الأكارين عليك)
கடிதத்தின் பலன்
ஹிர்கல் பாலஸ்தீனில் வைத்து கடிதத்தைப் படித்தார். மக்கா வியாபாரிகளை அழைத்து கடிதம் எழுதிய நபியைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார். பெருமானார் ஒரு நபி என்பதை உணர்ந்து கொண்டார். இஸ்லாமைப் பற்றிய நல்லெண்ணத்தை அவர் வெளிப்படுத்திய போது அவரது ஆட்கள் அதை ஒத்துக் கொள்ள வில்லை. இந்தப் பிரச்சினையில் தனது அரசு பறிபொய்விடக்கூடாது என பயந்து பின்வாங்கினார். எனினும் பெருமானாரின் கடிதத்திற்லு அவர் முக்கியத்துவம் அளித்தார். அதனாலேயே அவரது ரோம் சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை பல வருடங்களுக்கு  துருக்கியப் பிராந்தியத்தில் அல்லாஹ் விட்டு வைத்தான்.
ஆனால் பாரசீக மன்னன் கடிதத்தை கிழித்துப் போட்டான். அவனது சாம்ராஜ்யம் வெகு சீக்கிரமே வீழந்தது.
كتب رسول الله صلى الله عليه وسلم إلى كسرى أبرويز بن هرمز وبعث بالكتاب مع عبد الله بن حذافة السهمي
فمزق كسرى كتاب رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله: «مزق الله ملكه».
எகிப்திய மன்னருக்கு கடிதம்- அவரது அன்பளிப்பு
بعث رسول الله حاطب بن أبي بلتعة رضي الله عنه إلى المقوقس   
إنه دفع له مائة دينار وخمسة أثواب ودعا رجلاً عاقلاً فلم يجد بمصر أحسن ولا أجمل من مارية (مريم) وأختها سيرين فبعث بها إلى رسول الله صلى الله عليه وسلم وأهدى له بغلة وعسلاً

அபீசீனிய மன்னர் நஜ்ஜாஷிக்கு கடிதம். அவர் முஸ்லிமாகுதல்

وقد حمل عمرو بن أمية الضمري رسالته إلي النجاشي
فلما وصل إليه الكتاب وضعه على عينيه ونزل عن سريره فجلس على الأرض ثم أسلم

وجاء في مسند الشافعي (من كتاب الجنائز والحدود) عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم نعى للناس النجاشي اليوم الذي مات فيه وخرج بهم إلى المصلى فصف بهم وكبّر أربع تكبيرات وهذا دليل على إسلام النجاشي

எமாமாவி அரசனுக்கு கடிதம்

أرسل رسول الله صلى الله عليه وسلم كتاباً إلى هوذة بن علي الحنفي صاحب اليمامة مع سليط بن عمرو العامري
எமாமாவின் அரசனுக்கு உண்மை புரிந்தது, எனினும் தயங்கினான். பெருமானாரின் மற்ற உத்தரவுகளுக்கு கட்டுப்படக் காத்திருப்பதாக பதில் கடிதம் அனுப்பினான். சத்தியத்தை விட்டு விலகி விட்டார் என்று பெருமானார் கூறினார்கள். சில நாட்களில் அவன் இறந்ததாக செய்தி வந்தது.

பஹ்ரைன் தலைவருக்கு கடிதமும் அவரது இஸ்லாமும்

كان المنذر بالبحرين، بعث النبي صلى الله عليه وسلم العلاء بن الحضرمي رضي الله عنه ومعه كتاب يدعوه إلى الإسلام
فأسلم وحسن إسلامه

உமான் நகருக்கான கடிதமும் அவர்களது இஸ்லாமும்
எமனில் இருக்கிற உமான நகர ஆட்சியாளருக்கு பெருமானார் கடிதம் அனுப்பினார்கள்<.

بعث رسول الله بكتابه مع عمرو بن العاص إلى جَيْفر وعبد ابني الجلندي
وأسلما وأسلم معهما خلق كثير ووضعت الجزية على من لم يسلم

نتيجة إرسال الرسل إلى الملوك والأمراء
ذكرنا الكتب التي أرسلها رسول الله صلى الله عليه وسلم إلى الملوك والأمراء يدعوهم فيها إلى الإسلام بعد صلح الحديبية وقبل وفتح مكة ولا شك أن في ذلك قوة عجيبة وشجاعة عظيمة لأن رسول الله وإن كان قد عقد الصلح مع مكة لكنه لم يكن قد تم له فتحها ولم يسلم أهلها وهذه الكتب ليس من السهل إرسالها إلى هؤلاء ولا سيما إلى هرقل وكسرى والمقوقس يدعوهم فيها إلى الإسلام ولو كان غير رسول الله لخشي عاقبة ذلك فإن هؤلاء ملوك أقوياء على تخوم بلاده ولكان إرساله الرسل سابقاً لأوانه، إلا أن رسول الله لما كان واثقاً من قوة رسالته ونصر الله سبحانه وتعالى أقدم على إرسال رسله بقلب ثابت وعزم صادق فكانت النتيجة ما يأتي:
1 - أنه صلى الله عليه وسلم تمكن من معرفة سياسة هؤلاء الملوك والأمراء نحوه وميلهم إليه فكانت هذه الكتب بمثابة جس نبضهم.
2 - إسلام «باذان» أمير اليمن ومن معه.
3 - أن المقوقس وإن كان لم يسلم إلا أنه أظهر الود بتلطفه مع رسول الله صلى الله عليه وسلم وإرساله الهدايا.
4 - إسلام النجاشي على ما هو مشهور في كتب التاريخ وإن كان لم يستطع حمل شعبه على الإسلام.
5 - إسلام المنذر بن ساوى التميمي صاحب البحرين.
6 - إسلام مَلَكَيْ عُمان وإسلام خلق كثير معهما.
نقول: لا شك أن الإسلام قد ربح بإرسال الرسل إلى هؤلاء الملوك والأمراء وعلا شأنه وصارت له مكانة دينية وسياسية بين الدول وذلك قبل فتح مكة.

ஹுதைபிய்யாவிற்கு பிறகு இறங்கு அல் பத்ஹ் அத்தியாயம் நிஜமான வரலாறு இது

ஹிஜ்ரி 7 கைபர் யுத்தம்

இஸ்லாமிய அரசு சிறப்பாகவும் வலுவாகவும் உருவாகி வந்த நிலையில் மதீனாவிலிருந்து சிரியாவிற்கு செல்லும் பாதையில் 100 மைல் தொலைவிலிருந்த கைபர் பகுதியில் வலிமையான கோட்டைகளை அமைத்து வளமாக வாழ்ந்து வந்த யூதர்களும்   மதீனா விலிருந்து வெளியேறிய யூதர்களும் அங்கிருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு இடையூறு செய்து வந்த போது அவர்களை அடக்கி வைப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவந்தப் பகுதிக்கு படை எடுத்தார்கள். பெருமானாரை எதிர்க்கும் நிலையில் இல்லாத போதும் சண்டைக்கு தயாரான அவர்களிடம் சில இடங்களில் போரிட்டு அந்தப் பகுதியை முஹம்மது (ஸல்) அவர்கள் கைப்பற்றினார்கள். அவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டு நிம்மதியாக வாழ வழிய்மைத்தார்கள்.

இதன் மூலம் அரபுப் பிரதேசத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசாக இஸ்லாமிய அரசு அமைந்தது,

உமரத்துல் கழா
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் படி ஹிஜ்ரீ 7 ம் ஆண்டு துல்கஃதா மாதத்தில் உம்ரா செய்ய பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தார்கள். மக்கா வாசிகள் மூன்று நாட்கள் தம் இருப்பிடங்களை விட்டு மலைகளில் தங்கிக் கொண்டனர்.  பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் தங்கி உம்ராவை நிறைவேற்றினார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் குறைஷிக் குல சீமாட்டியான மைமூனா அம்மாவை பெருமானார் திருமணம் செய்து கொண்டார்கள்.

நாலாம் நாள் மதியம் மக்கா வாசுகளின் தலைவர் சுஹைல் பின் அம்ரு மக்காவை விட்டு வெளியேறு மாறு கேட்டுக் கொள்ள வந்தார்;  மைமூனா அம்மையாரை ம் திருமணம் செய்தத்தற்காக வலீமா விருந்து தர இருப்பதாகாவும் அதற்காக சற்று பொறுக்குமாறும் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்ட போது உமது விருந்து எங்களுகு தேவையில்லை .உடனே கிளம்பும் என்றனர் மக்கா வாசிகள். பெரும்னார் (ஸல்) உடனே வெளியேறினார்கள்.

மைமூனா அம்மையார பெருமானார் (ஸல்) திருமணம் செய்த போது அது காலித் பின் வலீத் அம்ரு பின் ஆஸ் போன்ற பல முக்கிய தலைவர்கள் இஸ்லாமை ஏற்க காரணமானது.

இதற்கிடையே பல பகுதிகளுக்கு சஹாபாக்களை சிறு படைகளாக அனுப்பி வைத்த பெருமானார் (ஸல்) அப்பகுதி மக்களுடன் பெரும்பாலும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள், சில இடங்களில் யுத்தம் நடந்து அவர்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்கள்.

ஹிஜ்ரி 8 மக்கா வெற்றி

நம்மில் ஒருவரை ஒருவர் 10 ஆண்டுகள் தாக்கிக் கொள்ளக் கூடாது, எதிரிகளுக்கு உதவக் கூடாது என்று பெருமானார் (ஸல் அவர்களும் மக்காவின் காபிர்களும் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்து கொண்ட போது இந்த உடன்படிக்கையில் சேர விரும்புவோர் சேர்ந்து கொள்ளலாம் என ஒரு பொது அறீவிப்பும் செய்யப்பட்டிருந்தது, முஸ்லிம்களின் சார்பாக பனூ குஸா ஆக்கள் உடன்படிக்கையில் சேர்ந்து கொண்டனர். பனூ பிக்ரு குறைஷிகளின் சார்பாக இதில் இணைந்து கொண்டனர்.
இந்நிலையில் பனூ பிக்ரு திடீரென் பனூ குஸா ஆக்களை தாகி கடும் சேதத்தை ஏற்படுத்தினர். பனூ பிக்ரு களுக்கு மக்கா குறைஷிகளின் பின்பலமும் இருந்தது..

பனூ குஸா ஆக்களின் தலைவர் காயம்பட்ட உடலோடும் கிழிந்த ஆடைகளோடும் மதீனாவிற்கு விரைந்து வந்து செய்தியை சொன்னார்.

மக்காவின் குறைஷிக் காபிர்கள் ஒப்பந்த்தை குறைஷிகள் முறிந்த்து விட்டதாக கூறினார்கள்.

இனியும் கஃபாவை காபிர்களின் கையில் விட்டு வைக்க முடியாது என்று கருதிய நபியவர்கள் மிக இரக்சியமாக ஒரு பெரும் படையை திரட்டி திடீரென மக்காவை சூழ்ந்தார்கள். 

அந்தச் சந்தர்ப்பத்தில் படை இருந்த பகுதி வழியே வந்த மக்காவின் தலைவர் அபூசுப்யான் இஸ்லாமைத் தழுவினார்.

முஹம்மது நபி (ஸல் அவர்கள் தன்னை விரட்டிய நகரத்தை பழி தீர்க்க வேண்டு என்ற சிந்தனை இல்லாதவர்களாக சீர்திருத்தம் ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு மக்காவை கைப்பற்றினார்கள்.

அதனால் மக்கா வாசிகள அனைவரையும் மன்னித்தார்கள்.  வரலாற்றின் நிகர் சொல்ல முடியாத மகத்தான நிகழ்வ் அது,

روى البخاري عن عبد الله بن عمر رضي الله عنهما أنه صلى الله عليه وسلم أقبل يوم الفتح من أعلى مكة على راحلته القصواء مردفاً أسامة بن زيد رضي الله عنهما خلفه ودخل واضعاً رأسه الشريف على راحلته تواضعاً لله تعالى حين رأى ذلك الفتح العظيم وكثرة المسلمين وهو يقول: «اللهم إن العيش عيش الآخرة» وكان دخوله يوم الاثنين وكان معتجراً بشقة برد حبرة حمراء.
கஃபாவிற்கு உள்ளே நுழைந்து சிலைகளை அப்புறுப்படுத்தி விட்டு அங்கிருந்த ஒரு தூணின் பின்னாள் நின்று இரண்டு ரக் அத்துகள் தொழுத பிறகு 7 அடி உயரமுள்ள கஃபாவின் வாசலில் வந்து நின்ற பெருமானார் (ஸல்) உயிரைக் கையில் பிடித்த படி கஃபாவின் முற்றத்தில் திரண்டிஉந்த காபிர்களுடன் பேசினார்கள்.
يا معشر قريش ويا أهل مكة ما ترون أني فاعل بكم؟ قالوا: خيراً، أخ كريم وابن أخ كريم، ثم قال: «اذهبوا فأنتم الطلقاء» فأعتقهم رسول الله صلى الله عليه وسلم وقد كان الله أمكنه من رقابهم عنوة

மக்காவின் வெற்றி பெருமானாரின் அரசியல் வெற்றியை நிறைவு படுத்தியது.

அடுத்த ஹிஜ்ரீ 9 ம் ஆண்டில் பல பகுதிகளிலிருந்து தூதுக்குழிவினர்கள் வந்து பெருமானாரை சந்தித்து இஸ்லாமை அறிந்து சென்றனர்..

தபூக் யுத்தம்

அதே 9ம் ஆண்டு பெருமானாரின் கவனம் அரபு தேசத்திற்கு வெளியே நோக்கித் திரும்பியது,  கடிதம் கொண்டு சென்ற நபித்தோழரை தாக்கி கொன்ற புஷ்ரா மாநில ஆளுநரைச் எதிர்ச் சென்ற ஜைது பின் ஹாரிதா ரலி தலைமையிலான படையை மூஃதா யுத்தத்தில் கடும் சேதத்திற்குள்ளாக்கிய ரோமப் பேரர்சின் பிரதிக்கு எதிராக ஒரு பெரும் படையை பெருமானார் (ஸால்) அவர்க்ள் திரட்டினார்கள். பெருமானாரின் வரலாற்றில் ஒரு அரசுக்கு எதிரான படை எடுப்பு என்று இதத்தைத்தான் சொல்ல வேண்டும்.

30 ஆயுரம் நபித்தோழர்களும் ஒரு இலட்சம் குதிரைகளுமாக இந்தப் படை எடுப்பு பிரம்மாண்டமாக இருந்தது.

மதீனாவில் மிகச் சிரமமான அறுவடைக் காலத்தில் அதிக தூரம் (700 மைல்கள்( கொண்ட பயணத்தில் தபூக் யுத்ததிற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் அதி அற்புதமாக தயாகி நின்றார்கள்.

சஹாபாக்கள் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு நலினர். முஸ்லிம் உம்மத்தின் சமூதாயக் கட்டுப்பாட்டை மிக அற்புதமா சுட்டிக்காடும் ஒரு விச்யமாக ஆது ஆனது.

முதல் ஹஜ்

அதே ஆண்டு ஹஜ் கடமையாக்கப்பட்டது, அந்த ஆண்டு அபூபக்கர் சித்தீ ரலி அவர்களின் தலைமையில் இஸ்லாமிய ஹஜ்ஜை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை அனுப்பி வைத்தார்கள். அப்போது கஃபாவின் எல்லைக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் இனி இருக்கக் கூடாது, தற்போது இரூப்பவர்கள் குறிப்பிட்ட தவனைக்குள் வெளியேறிவிட வேண்டும் என்றூ உததரவிடப்பட்டது.

ஹிஜ்ரி 10 ஹ்ஜ்ஜத்துல் வதா

ஹிஜிரி 10 ல் பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னுடைய ஹ்ஜ்ஜை நிறைவேற்றீனார்கள். அப்போது அரபா மைதானத்தில் உரையாற்றினார்கள். அந்த உரையில் விடைபெறப்போகிறவரைப் போல பெருமானார் (ஸல்) அவர்கள் உரையாற்றியதால் அது ஹஜ்ஜத்துல் வதா விடை பெற்ற ஹஜ்ஜு என்று அழைக்கப்படுகீறது.

இந்த துல்ஹஜ்ஜின் 9 ம் நாளில் அரபாவில் பெருமானார் (ஸல்) கூடியிருந்த போது தான் இஸ்லாம் பரி பூரணப்படுத்தப்பட்ட தாக தெரிவிக்கும் இறைவசனம் அருளப்பட்டது,

ஹிஜ்ரி 11 சபர் பிறை 29 ம் நாள் புதன் கிழமை அஸருக்குப் பிறகு ஒரு ஜனாஸாவின் அடக்கத்திற்காக ஜன்னத்துல் பகீ கபருஸ்தானுக்கு சென்று வந்த நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா அம்மாவிடம் தலைவலிக்கிறது என்றார்கள்.

அன்று மஃரிப் தொழுகை வல் முர்ஸலாத் சூரா ஓதி தொழ வைத்தார்கள், அவர்கள் இமாமாக நின்ற கடைசி தொழுகை அது.

இஷாவிற்கு பெருமானார் வெளியே வர முடியவில்லை, மயக்கம் அதிக மாகி இருந்தது. .

இதற்குப் பிறகு 13 நாட்கள் உடல் நலமில்லாமல் இருந்த பெருமானார் (ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் பிறை 12 திங்கட் கிழமை சுபுஹ் தொழுகையின் நேரத்தில் அறையை மூடி யிருந்த திரச்சீலையை திறந்து எட்டிப்பார்த்தார்கள்,  பல நாட்களுக்குப் பிறகு பெருமானாரின் திருமகத்தை கண்ட தோழர்கள் தொழுகையில் அணியில் பரபரப்புக்கு ஆளானார்கள்,

தன்னால் உருவாக்கப்பட்ட ஒரு சமுதாயம் தான் இல்லாமலே  தம்மீதான கடமையை தமது வழியில் செவ்வனே நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியக் கண்டு அகமகிழ்ந்த நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பரபரப்படைந்த தோழர்களை கைகளால் அமைதிப் படுத்தி விட்டு திரையை தொங்க விட்டார்கள்,

உம்மத் தன்னுடைய தூத்ரை கடைசியாகப் பார்த்த தருணம் அது.

தன்னுடைய பணியை நிறைவாக செய்து விட்ட திருப்தியோடு ரபீஉல் அவ்வல் பிறை 12 அன்று  திங்கட் கிழமை முற்பகல் நேரத்தில் தன்னுடைய மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்  நெஞ்சில் தலை சாய்ந்திருந்த நிலையில் மிஸ்வாக் செய்து கொண்டு விட்ட பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் அர்ரபீக்குல் அஃலா என்ற படி தன் நேசனை சென்றடைந்தார்கள்.



3 comments:

  1. Nabiyin. Muzu walkkai. Kanneerudan mudiththullergal .jazakallah

    ReplyDelete
  2. அல்ஹம்து லில்லாஹ்
    உயிரிலும் மேலான நபி ஸல் அவர்கள் குறித்து வாழ்க்கையை தொடராக வந்த அனைத்தும் அருமை

    ReplyDelete
  3. அல்ஹம்து லில்லாஹ்
    உயிரிலும் மேலான நபி ஸல் அவர்கள் குறித்து வாழ்க்கையை தொடராக வந்த அனைத்தும் அருமை

    ReplyDelete