வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 28, 2016

இஸ்லாத்தை விட்டு வெளியேறியோர்


இஸ்லாமிற்கு சில எல்லைகள் உண்டு. அதற்குள்ளிருப்பவர் மட்டுமே முஸ்லிமாக இருக்க இருக்க முடியும்.
அதை கடப்பவர் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழப்பார்.
வார்த்தை சித்தர் வலம்புரிஜான் இதைப் புகழ்ந்து பாராட்டுவார். ஒரு சரியான மார்க்கம் என்பது இப்படித்தான் இருக்க முடியும். நீ எதை வேண்டுமானாலும் செய்து கொள் அல்லது கருதிக் கொள் உன் விருப்பப் படி நடந்து கொள் , சாமியை கும்பிடுகிறாயா சரி! இல்லை ஏசுகிறாயா அதுவும் சரி என்பது ஒரு உண்மை சமயத்தை அடையாளமாக இருக்க முடியாது என்பார்.
تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ(229)
وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ(4
இந்த வகையில் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை தமிழகத்தில் முஸ்லிம்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிற – திரு பிஜே வை இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டார் என்று அறிவித்திருக்கிறது.

கருத்து வேறுபாடுகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான், ஆனால் அவ்வேறுபாடுகள் மார்க்கத்தை பலப்படுத்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும். தக்வாவை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். திரு பிஜே வின் கருத்து வேறு பாடு மார்க்கத்தை பலவீனப்படுத்துவதாகவும் அதன் அடிப்படைகளை ஆட்டங்கானச் செய்வதாகவும் இருக்கிறது, 

சாமாணிய மக்கள் பேச்சுக் கவர்ச்சியில் மயங்கி அதிகம் யோசிக்காமல் இத்தீய சக்தியின் பின்னே சென்று விடுகிறார்கள், அதன் மூலம் தமது அடிப்படையான ஈமானை இழந்து வருகிறார்கள், மார்க்கத்தை முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டே தகர்த்து வருகிறார்கள், 

இன்றைய முஸ்லிம் சமூகத்தில் விஷமிக்கிருமிகளுக்கான அத்தனை அம்சங்களோடு இயங்கி வருகிறார்கள், இந்தச் சூழலில் மக்களை முறையாக எச்சரிப்பதற்காக ஜமாத்துல் உலமா இப்படி ஒரு தீர்மாணத்தை அறிவித்திருக்கீறது,  இது அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவல்ல, ஆழ்ந்த சிந்தனைக்கும் போதிய நிதானத்திற்கும் பிறகும் எடுக்கப்பட்டிருக்கிற முடிவாகும்.

இதற்கான நியாயயத்தை புரிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம் சமுகத்தின் கடமையாகும்.

இது போல ஒரு இழி நிலைக்கு வேறு யாரும் ஆளாகிவிடக் கூடாது, அது போல இவரை விட்டு இவர் சார்ந்த அமைப்பை விட்டு விலகி நிற்கவேண்டும்.

அவரது அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு என்பது ஒரு இஸ்லாமிய அமைப்பு அல்ல, அது வேறு ஒரு புதிய மதம் என்பதை சமுதாய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை நமக்கு பக்க்கத்திலிருக்கிற சமூகத்திற்கும், அதிகாரிகளுக்கும் நாம் அறிவித்து விட வேண்டும். அப்போது தான் இந்த விஷமிகளினால் ஏற்படுகிற ஆபத்துக்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். நமது அடுத்த தலைமுறையின் ஈமானையும் பாதுகாக்க முடியும்.

இவ்வமைப்பினர் ஒரு புதிய மதத்துக்காரர்கள் என்பதை சரியாக நாம் மற்றவர்களுக்கு புரிய வைக்காத வரை இவர்களுடைய பித்னாவிலிருந்து நாம் தப்பிக்க முடியாது,

திரு  பிஜே முஸ்லிம் அல்ல, அவர் ஒரு புதிய மதத்தின் நிறுவனர் என்று நாம் ஏன் கூறுகிறோம் என்றால்

அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று அவர் கூறுகீறார்,

முஸ்லிம்கள் உருவமற்ற ஏக இறைவனை வணங்குகிறார்கள் என்பது சின்னக் குழந்தைக்கும் தெரிந்த இஸ்லாத்தின் அடிப்படை உண்மையாக இருக்கிற போது –
பிஜே கூறுகிறார்.
         அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, ( பிஜே தர்ஜமா பக் 1643)  
         அந்த உருவம் மனிதனின் உருவத்தைப் போன்று இருக்கிறது
         இறைவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வான்,
          இறைவனிடம் மாற்றங்கள் ஏற்படும்
         இறைவனுக்கு பல உருவமுண்டு
         அந்த உருவங்களை ஒவ்வொருவரும் கற்பனை செய்யலாம் என்றும், அவரவர் கற்பனை செய்த உருவங்களில் மறுமையில் இறைவன் காட்சியளிப்பான்

பார்க்க : ஏகத்துவம். மார்ச் 2009, பக்கம் 5.
17,18-7-2010 அன்று சென்னை விவாதம்

இறைவனுக்கு உருவமுண்டு என்று கூறுவது யூதர்களின் கருத்து. தூய இறைக்கோட்பாட்டை கொண்ட  முஸ்லிம்களிடத்தில் அந்த யூதக் கருத்தை கொண்டு வந்து திணிக்கிறார் பிஜே.
புகாரியில் ஒரு ஹதீஸ் வருகிறது.
عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ يَهُودِيًّا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالْأَرَضِينَ عَلَى إِصْبَعٍ وَالْجِبَالَ عَلَى إِصْبَعٍ وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ وَالْخَلَائِقَ عَلَى إِصْبَعٍ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَرَأَ وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ
ஒரு யூதர் பெருமானாரிடம் வந்துஅல்லாஹ் வானங்களை ஒரு விரலிலும், பூமிகளை ஒரு விரலிலும், மலைகளை ஒரு விரலிலும் , மரங்களை ஒரு விரலிலும், மற்ற படைப்பினங்களை ஒரு விரலிலும் வைத்துக் கொண்டு பின்பு. நானே அரசன் என்று கூறுவான்என்று சொன்னார்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியுமளவு சிரித்து விட்டுஅவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை. எனும் யூதர்களைப் பற்றிய 6;91 ஆவது வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (புகாரி 7414)  
இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகிற   இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.
قَالَ الْقُرْطُبِيّ فِي الْمُفْهِم قَوْله " إِنَّ اللَّه يُمْسِك " إِلَى آخِرالْحَدِيث،هَذَا كُلّه قَوْل الْيَهُودِي وَهُمْ يَعْتَقِدُونَ التَّجْسِيم وَأَنَّ اللَّه شَخْص ذُوجَوَارِح كَمَا يَعْتَقِدهُ غُلَاة الْمُشَبِّهَة مِنْ هَذِهِ الْأُمَّة،

இந்த கூற்று யூதனின் கூற்றாகும். யூதர்கள் இறைவனுக்கு உருவமுண்டு என்றும், இறைவனுக்கு உறுப்புக்கள் இருக்கிறது என்றும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். இந்த உம்மத்திலும் இது போன்ற வரம்பு மீறிய கூட்டத்தினர் இருக்கிறார்கள்.  
நூல் : முஃப்ஹிம்
மஹ்மூது சுப்கீ (ரஹ்) அவர்கள் “இத்திஹாபுல் காயினாத்” எனும் தனது நூலில் கூறுகிறார்.
( மறைவு ஹிஜ்ரி 1352 - இவர் அல் அஜ்ஹர் பல்கலைக் கழகத்தைச்சார்ந்த பெரும் இஸ்லாமிய அறிஞரும், எகிப்தின் ஷரீஆ அமைப்பின் நிறுவனரும் ஆவார் )

وقال محمود خطاب السبكى في كتابه إتحاف الكائنات ببيان مذهب السلف و  الخلف فى المتشابهات-
وقد قام إجماع السلف والخلف على أن من اعتقد أن الله تعالى في جهة فهو كافر  كماصرح به الحافظ العراقي وبه قال أبوحنيفة ومالك والشافعي وأبوالحسن الأشعري والباقلاني


"அல்லாஹ் ஒரு திசையில் இருக்கிறான் என்று நம்புகிறவன் காபிர், இதை ஹாபிழ் இராக்கி அவர்கள்  கூறியுள்ளார்கள்.  இதுவே இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரி, பாகில்லானி ( ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்”.

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கருத்து.

قال الشافعي: لايكفرأحد من أهل القبلة واستثنى من ذلك : المجسم ومنكرعلم الجزئيات
- الأشباه والنظائر - للشافعي - (1 / 744(

கிப்லாவை ஏற்றுக் கொண்டவர்கள் யாரையும் காபிராக்கக் கூடாது என்று கூறுகிற இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று சொல்கிறவனையும் அல்லாஹ்வுக்குச் சின்னச் சின்ன விசயங்கள் தெரியாது என்று சொல்கிறவனையும் காஃபிர் என்று கூறினார்கள்.
நூல் : அல்அஷ்பாஹ் வந்நழாயிர் (1/744)

திரு பிஜே முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் மற்ற நபுமார்களையும் சாதாரணாம இழிவு படுத்தி தொடர்ந்து இழிவு படுத்தி பேசிக் கொண்டிருக்கீறார், எந்த அளவுக்கென்றால் அவரது தொண்டர்கள் முஹம்மது (ஸல்) அவர்களையும் மற்ற நபிமார்களையும் சர்வ சாதாரணமாக குறை சொல்லிப் பேசுகிற அளவுக்கு துணிச்சல் பெற்று விட்டார்கள்,

நபித்தோழர்கள் தம்மை அறியாமல் நுனுக்கமான ஷிர்க் வைத்திருந்தார்கள் , முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு யூதன் சொல்லிக் கொடுக்கும் வரை இதை அறியாமல் இருந்தார்கள் என பிஜே தனது உரை ஒன்றில் கூறுகிறார்.

வீடியோ பதிவு :

ஒரு யூதர் பெருமானாரிடம் வந்து ஒரு பயங்கரமான குற்றச் சாட்டை முன்வைக்கிறார். உன்னுடைய உம்மத்தினர் மா ஷாஅல்லாஹ் வ ஷிஃத என்று சொல்வதன் மூலம் இணைக் கற்பிக்கிறார்கள். கஃபாவின் மீது சத்தியமாக என்று சொல்லி இணைக் கற்பிக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். உடனே ரசூலுல்லாஹ் என்ன செய்கிறார்கள். ஆகா ! ஆமா ! நுனுக்கமான இந்த விசயத்தை நாம கவனிக்காம விட்டுட்டோமே! அப்ப அவ்வளவு சஹாபாக்களுக்கும் அது ஷிர்க் என்று விளங்கல! ரஸூல் (ஸல்) அவர்களும் இதை கவனிக்காம இருந்துட்டாங்க!”

இதில் உண்மை என்ன வென்றால்

ஒரு ஹதீஸ் இப்படி வருகிறது

عَنْ قُتَيْلَةَ امْرَأَةٍ مِنْ جُهَيْنَةَ أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّكُمْ تُنَدِّدُونَ وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ وَتَقُولُونَ وَالْكَعْبَةِ فَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا وَرَبِّ الْكَعْبَةِ وَيَقُولُونَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ شِئْتَ
سنن النسائي 3713 –

ஜுஹைனா குடும்பத்தைச் சேர்ந்த குதைலா என்ற பெண்மணி அறிவிக்கிறார்.

ஒரு யூதர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் இணை வைக்கிறீர்கள், அல்லாஹ் நாடினால், நீயும் நாடினால் என்று சொல்கிறீர்கள். கஃபாவின் மீதாணையாக என்றும் சொல்கிறீர்கள் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் சத்தியம் செய்வதானால் கஃபாவின் இறைவன் மீதாணையாக என்று சொல்லுங்கள் அவ்வாறே இறைவன் நாடினால் என்று சொல்லி விட்டு பிறகு நீ நாடினால் என்று சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டார்கள்.  (நஸயீ : 3713.

மாஷா அல்லா வ ஷிஃத என்று இப்போது ஒரு வர் சொன்னாலும் அது ஷிர்க் ஆக ஆகாது, இது ஷிர்கும் அல்ல, இந்த வாசகத்தை தடுக்கும் உத்தரவு எதுவும் இந்த ஹதீஸ்லி இல்லை, இது மாதிரியான பல வாசகங்கள் குர் ஆனில் இடம் பெற்றுள்ளனர். அல்லாஹ் தன்னையும் இறைத்தூதரையும் வாவு இட்டு இணைத்துக் கூறியுள்ளான்,


பத்ஹுல் பாரியில் அபூஜஃபர் தாவூதி (ரஹ்) அவர்கள் கூறுவதாக  குறிப்பிடப்படுகிறது.

عَنْ أَبِي جَعْفَرالدَّاوُدِيِّ قَالَ : لَيْسَ فِي الْحَدِيث الَّذِي ذَكَرَهُ نَهْي عَنْ الْقَوْل الْمَذْكُورفِي التَّرْجَمَة،وَقَدْقَالَ اللَّه تَعَالَى ( وَمَانَقَمُوا إِلَّا أَنْ أَغْنَاهُمْ اللَّهُ وَرَسُولُهُ مِنْ فَضْلِهِ ) وَقَالَ تَعَالَى ( وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْت عَلَيْهِ ) وَغَيْرذَلِكَ-
فتح الباري شرح صحيح البخاري – ابن حجر (19/ 9(

எங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள் என்ற அர்த்தமுடைய ராஇனா என்ற வார்த்தையை சஹாபாக்கள் பயன்படுத்தினார்கள். யூதர்கள் சூழ்ச்சியாக அதை தங்களது வழக்கில் திட்டும் வார்த்தையாக மாற்றிப் பயன்படுத்தினார்கள். அல்லாஹ் அதை தடுத்து நீங்கள் உன்ழுர்னா என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள் என்று முஃமின்களுக்குச் சொன்னான். இதில் ராஇனா என்ற வார்த்தை தவறானது அல்ல என்ற போதும் யூதர்களின் சூழ்ச்சியை தடுப்பதற்காக அல்லாஹ் அந்த வார்த்தையை மாற்றினான். அதுபோலத்தான் இந்த இடத்தில் மா ஷாஅல்லாஹ் ஷிஃத வை பெருமானார் (ஸல்) அவர்கள் மாற்றினார்கள்.

எதார்த்தம் இப்படி இருக்க, சஹாபாக்கள் ஷிர்க் வைத்திருக்க பெருமானார் (ஸல்) அதை அறியாமல் இருந்தார்கள் என  யூதர்களைப் போலவே பிஜே வும் கூறுகிறார்

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கடமையையும் அந்தஸ்தையும் ஒரு சேர படுகுழியில் தள்ளுகிற வார்த்தைகளை  சர்வ சாதாரணமக  பேசி  இழிவு படுத்தும் பிஜே வின்  இப்பாதகச் செயலை இஸ்லாத்தின் துரோகிகள் கூட சிந்தித்திருக்க மாட்டார்கள்.  

நபி (ஸல் அவர்கள் யுத்த களத்தில் பொய் சொல்லுவார்கள் என அதனால் தான் நமது ஆர்ப்பாட்டங்களுக்கு 500 பேர் வந்தாலும் 5000 பேர் வந்தார்கள் என்று சொல்லுகிறோம் என மிக பகிரங்கமாக கூறுகிறார்,

முஹம்மது நபி (ஸல்) அவர்களையே சகட்டு மேனிக்கு பந்தாடுகிறவர் மற்ற நபிமார்களை விட்டு வைப்பாரா?

இதே இன்னும் சில

·         தாவூத் (அலை) அவர்கள் தனது ஆட்சியைப் பயன்படுத்தி அடுத்தவரின் சொத்தை அபகரித்தார்.  மொழிபெயர்ப்பு  8 வது பதிப்பு 1374

·         யூசுஃப் (அலை) அவர்கள் அடுத்தவரின் மனைவியை விபச்சாரம் செய்ய நாடினார்
·         (8 வது பதிப்பு 511)

·         அல்லாஹ் தன் மீது சக்தி பெற மாட்டான்என்றும் யூனுஸ் (அலை) அவர்கள் இறைவனின் வல்லமையை குறைத்து மதிப்பிட்டார்  (8 வது பதிப்பு 646)
   

இறைத்தூதரின் தரத்துக்கு குறைவான ஒன்றை அவர்களுடன் சம்பந்தப்படுத்துவது மரண தண்டனைக்குரிய குற்றம் என சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர்.

قال الإمام أحمد بن حنبل : كل من شتم النبي صلى الله عليه وسلم ، أو تنقصه ، مسلمًا كان أو كافرًا فعليه القتل ، وأرى أن يقتل ولا يستتاب .

நபியை ஏசுபவன், அல்லது குறைத்து பேசுகிறவன், முஸ்லிமாக இருந்தாலும் காஃபிராக இருந்தாலும் அவனுக்கு மரண தண்டைதான். அவன் கொல்லப்பட வேண்டும். தவ்பா செய்யுமாறு அவனிடம் கோரப்படக் கூடாது என்பதே என் கருத்தாகும் என இமாம் அஹ்மது பின் ஹன்பல்( ரஹ்) கூறுகிறார்கள்.

وقال الإمام مالك : من سب النبي صلى الله عليه وسلم أو شتمه أو عابه أو تنقصه ، قُتِل ، مسلمًا كان أو كافرًا ولا يستتاب
நபியை திட்டுகிறவன், ஏசுகிறவன், குறை பேசுகிறவன் முஸ்லிமாக இருந்தாலும். காஃபிராக இருந்தாலும் கொல்லப்படுவான்தவ்பா செய்யுமாறு அவனிடம் கோரப்படக் கூடாது என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் செய்திகளை மேற்கோள்காட்டுகிற இப்னுதைமிய்யா கூறுகிறார்கள்.

وقـد دلــت الآيــة على أن كـل مـن تـنـقـص رســـول الله صلى الله عليه وسلم جــادًا أو هــازلاً فــقــد كــفــر

قُلْ أَبِاللَّهِ وَءَايَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ   என்ற வசணம் இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேணுமென்றோ, அல்லது நகைச்சுவையாகவோ, குறைத்து பேசுகிறவன் காஃபிராகிவிட்டான் என்பதை அறிவிக்கிறது.
நூல் : الصارم المسلول   
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நபித்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை
நாம் முஹம்மது நபி (ஸ;) அவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். அவர்கள் என்ன சொன்னார்களோ அது அனைத்தும் சத்தியம் என்று நம்புகிறோம்.
மக்தப் மதரஸாக்களில் ஈமான் முபஸ்ஸலுக்கு முன் ஈமான் முஜ்மல் என் ஒன்றை நமக்கு உஸ்தாதுகள் கற்றுக் கொடுத்ததை மறந்திருக்கிற  மாட்டீர்கள்,
الأيمان المجمل : التصديق بكل ما جاء به محمد
.  
அல்லாஹ்வை நம்புகிறோம் என்பதற்கு முன்னனதாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய வேண்டிய அடிப்படை ஈமானாகும் இது,
ஆனால் திரு பிஜே பெருமானார் தம்மிஷ்டத்திற்கு பல விச்யங்களை சொல்லி யிருக்கிறார்கள், அவை வஹி அல்ல , அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்கிறார்.
·         பணயத் தொகையை பெற்றுக் கொண்டு பத்ரு போர்க் கைதிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுவித்தனர். இறைவனின் கட்டளையை எதிர்பாராமல் இவ்வாறு செய்தது தவறு என்று இறைவன் கண்டித்து திருத்துகிறான்வஹிக்கு மாற்றமாக கவனக்குறைவாக அவர்கள் எடுத்த முடிவையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. ( (நபித்தோழர்களும் நமது நிலையும் 63)

அதே போல தன்னுடைய அறிவுக்கு சரியாகப் பட வில்லை என்பதன் பேரில் ஸஹீஹ் என்று முஸ்லிம் உலகம் ஏகோபித்து அங்கீகரித்துக் கொண்ட நபிமொழிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்கிறார்.
இன்று அவருடைய தொண்டர்களோ வெண்டைக்காயை முறித்துப் போடுவது போல ஹதீஸ்களை குப்பதை தொட்டிக் குள் அனுப்பிக் கொண்டிருக்கீறார்கள்,
புகாரி முஸ்லிம் என்று நாவரளக் கத்தியவர்கள் இன்று இமாம் புகாரியையை குப்பையில் தூக்கி போடு என்கிறார்கள், சூனியம் இருக்கிறது என்று நம்பிய அவரது ஈமான் சரியில்லை என்கிறார்கள்.   
திரு பிஜே ஏற்றுக் கொண்டது மட்டும் தான் ஹதீஸ் மற்றவை ஹதீஸ் அல்ல என்ற கொள்கையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற மதம் செயல் படுகிறது,
இஸ்லாத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் சிலதை எடுத்துக் கொண்ட சீக்கிய பஹாய் மதங்களைப் போலவே இந்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பும் இஸ்லாத்த்திலிருந்து சிலதை எடுத்துக் கொண்டு செயல்படுகிறது,
திரு பிஜே குர் ஆனில் பிழை இருக்கிறது என்று கூறுகிறார்.
உலக் முஸ்லிம்களை மிகவும் திகைப்பில் ஆழ்த்திய விசயம் இது, முழுக்க நம்பத்தகுந்த வேதமான திருக்குர் ஆனை இப்படி கொச்சைப் படுத்திப் பார்க்கும் எண்ணம் முஸ்லிம் உம்மத்தை சிதைக்கும் சதித்திட்டத்தின் அடி வேறாகும்,
குர் ஆனில் இருக்கக்கூடிய சில எழுத்துக்களை  இவை  தவறாக எழுதப்பட்டு விட்டது.  இவை  இருக்கக் கூடாது என்று பிஜே  கூறுகிறார்.

பிஜே மொழிபெயர்ப்பின் 10 ம் பதிப்பு பக்கம் 64 ல் எழுத்துப் பிழைகளின் பட்டியலை எழுதிவிட்டு சுமார் 20 இடங்களில் குர் ஆனில் இருக்கும் எழுத்துக்களை அவை குர்ஆனில் உள்ளவை அல்ல என்று கூறுகிறார்.  

கவனியுங்கள் இதுகாரும் முஸ்லிம் உம்மத ஒன்று பட்டு நிற்கிற குர் ஆனில் திரு பிஜே நிகழ்த்தும் கைங்கர்யம் எதில் எத்தகைய சந்தேக விதையை விதைக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்!

அவர் மீது கொண்டிருக்கிற மோகத்தில் ஒரு சிறு குழுவினர் எத்தனை தூரம் முஸ்லிம்களின் வழியிலிருந்து விலகிச் சென்று விட்டனர் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

இவ்வாறு குர் ஆனின் எழுத்துக்களை குறை கூறுவது இஸ்லாமிய நோக்கில் குப்ராகும்.  

காழி இயாழ் (ரஹ்) ஷிபா எனும் தமது நூலில்  கூறுகிறார்கள்.

وَاعْلَمْ أَنَّ مَنِ اسْتَخَفَّ بِالْقُرْآنِ، أَوِ الْمُصْحَفِ، أَوْ بِشَيْءٍ مِنْهُ، أَوْ سَبَّهُمَا، أَوْ جَحَدَهُ، أَوْ حَرْفًا مِنْهُ، أَوْ آيَةً أَوْ كَذَّبَ به، أو بشيء منه.. أو بِشَيْءٍ مِمَّا صُرِّحَ بِهِ فِيهِ مِنْ حُكْمٍ، أَوْ خَبَرٍ، أَوْ أَثْبَتَ مَا نَفَاهُ، أَوْ نَفَى مَا أَثْبَتَهُ.. عَلَى عِلْمٍ مِنْهُ بِذَلِكَ، أَوْ شَكَّ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ، فَهُوَ كَافِرٌ عِنْدَ أَهْلِ الْعِلْمِ بِإِجْمَاعٍ.

குர் னையோ அதன்  உருவெழுத்தையோ அல்லது அதில் கொஞ்சத்தையோ மலிவாக கருதுகிறவர் அல்லது குர்ஆனை ஏசுபவர் மொத்த குர்ஆனையோ அதில் ஒரு எழுத்தையோ வசனத்தையோ மறுப்பவர், குர் ஆனை பொய்ப்பிப்பவர், அல்லது அதில் தெளிவாக கூறப்பட்டுள்ள ஒரு சட்டத்தையோ செய்தியையோ பொய்பிப்பவர், அதில் இருக்கிற ஒன்றை இல்லை என்று கூறுகிறவர், இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுகிறவர்  னைவருமே, அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவின்படி காஃபிராவார்கள்.


திப்யானில் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

أجمعواعلى أن  من جحد منه حرفا مما أجمع عليه أوزاد حرفا لم يقرأ به أحد وهوعالم بذلك فهوكافرالتبيان في آداب حملة القرآن - (1 / 164

முஸ்லிம்கள் ஏகோபித்துள்ள  குர்ஆனின் ஒரு எழுத்தை மறுப்பவன் அல்லது அதில் யாரும் ஓதாத ஒரு எழுத்தை தெரிந்து கொண்டே அதிகப்படுத்துபவன்  காஃபிராவான் – (பாகம் 1 பக் 164).

இமாம் பத்ருத்தீனுல் ஐய்னீ (ரஹ்) அவர்கள்  உம்ததுல் காரியில் கூறியுள்ளார்கள்:

وقدأجمعواعلى أن من جحد حرفا مجمعاعليه من القرآن فهوكافر-  عمدة القاري شرح صحيح البخاري - (29 / 85(

“முஸ்லிம்கள் ஏகோபித்த குர்ஆனின் ஒரு எழுத்தை மறுப்பவன் காபிராவான் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளனர்  
தப்ஸீர் தப்ரியில் இப்படி ஒரு செய்தி வருகிறது.

عن إبراهيم،عن عبدالله، قال: من كفربحرف من القرآن، أوبآية منه، فقد كفربه كله - تفسيرالطبري -        (1 / 55)
குர் ஆனில் ஒரு எழுத்தையோ அல்லது வசனத்தையோ மறுப்பவன் முழு குர்ஆனை மறுத்தவனை போன்றவனே என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி கூறியுள்ளார்கள். (தப்ஸீ தப்ரீ)

முஸ்லிம்களின் ஏகத்துவக் கோட்பாடான உருவமற்ற ஏக இறைக் கோட்பாட்டை மறுத்து அல்லாஹ்விற்கு உருவமுண்டு என்று சொன்னது
பெருமானாரை முழுமையாக ஏற்க மறுப்பது, பிஜே ஒப்புக்கொண்ட ஹதீஸை மட்டுமே ஏற்க முடியும் என்று கூறுவது
அதே போல வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை
கழா தொழ வேண்டியதில்லை.
ஆடைக்கு மேல் உடலை மறைக்கும் ஒரு பேர்வையாக பர்தா அணியத் தேவையில்லை
அல்லாஹ்விற்கு எதிராக கேள்வி கேட்க சைத்தான் மலக்குகளை தூண்டிவிட்டான்,
சஹாபாக்கள் மார்க்கத்தின் கருத்துக்களை திசை திருப்பி விட்டனர்
பெருமானார் (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் தர்காக்களை ஜிராரத் செய்திருக்க, தர்காக்களை ஜியாரத் செய்வோரை சமாதி வழிபாடு செய்வோர் என்று கூறுவது போன்ற இன்னும் ஏராளமான வழி கெட்ட கருத்துக்களை கூறுகிற காரணத்தால் தான் திரு பிஜே இஸ்லாமிலிருந்து விலகி விட்டார் என தமிழ் மாநில ஜமாத்துல் உலமா அறிவித்திருக்கிறது,
அவரை பின்பற்றுவோர் அவரை ஒரு இஸ்லாமிய பேச்சாளராக கருதுவோர் அனைவரும் எச்சரிக்கை அடைய வேண்டிய விசய்ங்கள் இவை,
அவரை ஆதரிப்போர்  இந்த விவகாரங்களில் அவரது கருத்தை ஒத்துக் கொள்வதாகவே பொருள் அமையும்.
அத்தகையோருக்கும் முஸ்லிம் உம்மத்திற்கு எந்த சம்ப்ந்தமும் இல்லை என்பதை இன்றைய தினம் பிரகடணம் படுத்திக் கொள்கிறோம்.
இப்படி பிரகடணப் படுத்த வேண்டியது நாளைய நமது தலைமுறையை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய கால கடமை என்பது மட்டும் அல்ல,
இவ்வாறு பிரகடணப் படுத்துவதற்குரிய முழு தகுதியும் சத்தியமும் நம்மிடம் இருக்கிறது
தர்கா ஜியாரத்தை தாயத்து அணிவதை ஓதிப்பார்ப்பதை ஷிர்க் என்று பேசுகிறவர்கள் போலித்தனமாகவே பேசுகிறார்கள்.
சத்தியம் துளி அளவும் அவர்களிடம் இல்லை.
நெஞ்சில் உரமும் நேர்மை திறமும் இல்லாத வாய்ச்சொல் வீரர்களான கோழைகள் அவர்கள்.
தர்கா ஜியாரத், தாயத்து அணிதல், ஓதிப்பார்த்தலை ஏற்போரும், சூனியம் உள்ளது என்பதை நம்புவோரும் ஷிர்க் செய்கிறார்கள் என்று கூறும் கூற்றில் இவர்கள் உண்மையான ஆண்பிள்ளைகளாக இருப்பார்களானால் அதற்கேற்ற அறிவிப்பை இவர்கள் செய்யட்டும் பார்க்கலாம்.
தர்கா ஜியாரத் செய்வோர் தாயத்து அணிவோர் ஓதிப்பார்ப்போருக்கு எங்கள் மதத்திற்கும் எந்த சம்ப்ந்தமில்லை என்று சொல்லட்டுமே பார்க்கலாம்.
குறைந்த பட்சம் அவர்களது மாநாட்டு தீர்மாணாக அவர்களது தொண்டர்களுக்குச் இதை  உறுதியேற்கச் சொல்லட்டும்
தர்கா ஜியாரத், தாயத்து அணிதல், ஓதிப்பார்த்தலை ஏற்போரும், சூனியம் உள்ளது என்பதை நம்புவோரும்
உன் தகப்பன் எனில் அவனது சொத்தில் பங்கு கேட்காதே! உன்னுடைய சொத்தில் அவருக்கு பங்கில்லை என எழுதி வைத்து விடு!
அந்தப் பள்ளிவாசல்களுக்கு போகாதே ! அத்தகையோர் பின் நின்று தொழாதே!
அத்தகைய குடும்பங்களில் திருமணம் செய்து கொள்ளாதே!
அவர்களுடை கப்ருஸ்தானும் நமக்கு வேண்டாம். அதை விட இந்துக்களின் மயானங்களே மேல்! ஏனெனில் சிலை வணக்கம் ஷிர்கில் வரவில்லை அல்லவா?
என்று தம்முடைய தொண்டர்களுக்குச் சொல்லி, உறுதி மொழி ஏற்கட்டுமே பார்க்கலாம்!
எத்தனை போஸ்டர் அடிக்கிறாய்?  இப்படி ஒரு போஸ்டர் அடி பார்க்கலாம்,
இவற்றை நம்புகிறவர்கள் இப்படிச் செயல்படுகிறவர்களுடைய மதம் எங்களுடைய மதம் அல்ல.
செய்ய மாட்டார்கள், ஏனெனில்,
இவர்கள் சத்திய வான்கள் அல்ல. வெட்கம் கெட்ட விஷமிகள்.  
சுய நலத்தை மையமாக கொண்டு ஒரு குரூப்பிஸமாக இருந்து முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்த நினைக்கும் சதிச் சக்திகள்.
சுன்னத் ஜமாத்தினர் அறுத்ததை சாப்பிடுவதற்கு சப்புக் கொட்டிக் கொண்டு காரணம் சொல்கிறார்கள், அபூஜஹ்ல் அறுத்ததை கூட சாப்பிடலாம் என்கின்றனர்.
மக்கா இமாம்கள் சிஹ்ரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பின்பற்றித் தொழலாமா என்ற அப்பாவி ஒருவனின் கேள்விக்கு மக்கா இமாம்கள் விவரமற்றவர்கள் வெறுமனே குர் ஆன் ஓதத்தெரிந்தவர்கள் தான் நம் அளவுக்கு ஆய்வு செய்யத் தெரிந்தவர்கள் அல்ல எனவே அறியாமல் அவர்கள் நம்புவதால் அவர்களை பின்பற்றலாம் என்கிறான்.
கேனத்தனமாக ஒரு கூட்டம் அவன் சொல்வதை ரசித்து சிரிக்கிறது,  
ஜமாத்துல் உலமா தலைவரே தங்களது மாநாட்டிற்கு அழைப்பதாக போலி விளம்பரம் செய்து இலாபம் பார்க்க நினைத்தவர்கள்.
அத்தனை விதமான மோசடித்தனங்களையும் மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு தைரியமாக செய்கிறவர்கள்.
அந்த அசட்டு தைரியத்தை மூலதனமாக கொண்டவர்கள் ஒரு புதிய மதத்தை உருவாக்கி சாதித்துக் காட்ட நினைக்கிறார்கள்.
தன்னையும் தனது ஆதாரவாளர்களையும் தவிர மற்ற அனைத்து முஸ்லிம்களையும் சரமாரியாக காபிர் முஷ்ரிக் என்று சொல்வதில் பிஜே சாதனை படைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களையும் காபிர்களாக்கி விட்டு இவரும் இவருடனிருக்கிற சில ஆயிரம் பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பது அவருடைய வாதமாகும். இவர்களுடைய காபிர் முத்திரைக்கு, மக்கா மதீனா புனித பள்ளிவாசல்களின் இமாம்களும் தப்பவில்லை. இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் போன்ற ஹதீஸ்கலை இமாம்களும் தப்பவில்லை. இமாம் ஷாபிஈ, இமாம் அபூஹனீபா போன்ற மத்ஹபு இமாம்களும் தப்பவில்லை. ஏன்  சஹாபாக்களும் தப்பவில்லை.  

முஸ்லிம் உம்மத் உஷாராக வேண்டும்.
ஒவ்வொரு மஹல்லாவிலும் இவர்களைப் பற்றிய எச்சரிக்கை சக சமூக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதிகாரிகளுக்கு இவர்களைப் பற்றிய நமது பிரகடணத்தை தெரிவிக்க வேண்டும்.
நமது பள்ளிவாசல்களின் முன்னால் நின்று கொண்டு இந்துத்துவ அமைப்பினர் நோட்டீஸ் விநியோகிப்பதை அல்லது போஸ்டர் ஓட்டுவதை எப்படி அனுமதிக்க மாட்டோமோ அது போல இவர்களையும் அனுமதிக்க கூடாது.
கோவை மாநகரில் சுன்னத் ஜமாத்துகள் காவல் துறையிடம் புகார் தெரிவித்த காரணத்தால் முஸ்லிம் மஹல்லாக்களில் இந்த விஷமிகள் ஊடுறுவுவதை அவர்கள் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.
இதை ஒவ்வொரு பகுதியுலும் காவல் துறையிடம் வலியுறுத்த வேண்டும்
சரியான புகார்களும். கோரிக்கை களும் வைக்கப்படுமானால் இந்த விஷமிகளை கட்டுப்படுத்த முடியும்.
தற்காலத்தில் இந்து புராணங்களைப் பற்றி விமர்சனம் செய்யப் போவதாக ஒரு நோட்டீஸ் வெளிவருமா?  அதை காவல் துறை அனுமதிக்குமா?
இதற்கு காரணம் என்ன ?
புகார் அளிப்பது தான்.  தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் கிளர்ந்து எழுந்தது தான்>
தர்கா  தாயத்து ஓதிப்பார்த்தல் என்ற வார்த்தையை இப்புதிய மதத்துக்காரர்கள் தவறாகப் பயன்படுத்துவதை எங்களால் ஏற்க முடியாது என்று  சுன்னத் ஜமாத்தினர் ஒன்று பட்டு ஒரு குரல் கொடுத்தால் இவர்களின் விஷமத்தனத்தை கட்டுப்படுத்த முடியும்,
இப்போது இப்புதிய மதத்துக் காரர்கள் மாநாடு என்ற பெயரில் கூட்டம் நடத்துவது தேர்தல் நேரத்தில் நடத்தும் ஒரு அரசியல் கூத்து.
கூட்டத்தை காட்டி ஆட்சியாளர்களிடம் காசுக்கு பேரம் பேசும் உத்திதான் என்றாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த விஷம்ச் சக்திகளை உலகிற்கு அடையாளப்படுத்திக் காட்டுவதோடு.. நமது மக்களை பாதுகாகவும் நாம் முயற்சிக்க வேண்டும்.
இது சத்தியத்தில் நமக்குள்ள உறூதியை வெளிப்படுத்தவும் எதிர்கால சந்தத்தியின் ஈமானைப் பாதுகாக்கவும் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு,
அல்லாஹ் வழி கேட்டிலிருந்தும் வழி கெட்ட கூட்டங்களிடமிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!


7 comments:

 1. Aameen. Jazakallahu khairan kaseeran fiddhaarain

  ReplyDelete
 2. ايدك الله برو ح القدس

  ReplyDelete
 3. Jazakallahu. Khairan kaseeran

  ReplyDelete
 4. Jazakallahu. Khairan kaseeran

  ReplyDelete


 5. ஜஸாகல்லாஹூ ஹைரா....அருமையான பதிவு

  ReplyDelete
 6. Anonymous10:28 PM

  MA SHA ALLAHU. ALLAHU AKBAR.

  ReplyDelete
 7. அல்ஹம்துல்லாஹ். திரு பிஜே அவர்கள் ஏன் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறியதாக ஜமா அத்துல் உலமா அறிவித்தது என்று முழுமையாக பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாது. ஏன் சில ஆலிம்களுக்கும் கூட முழு காரணங்களும் தெரியாது என்றே எண்ணுகிறேன். திரு பிஜே மவ்லீ தை , ஜியாரத்தை மறுப்பவர் என்ற அளவில் தான் அனைவருக்கும் தெரியும். இக்கட்டுரை காரணங்களைத் தெளிவாக அலசுகிறது. இதை இன்னும் செம்மை படுத்தி ஜமாஅத்துல் உலமா சார்பில் தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை செய்தால் மிகவும் நல்லது.

  ReplyDelete