வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 19, 2016

நல்லாட்சி பெறுவதில் நமக்கும் பொறுப்புண்டு

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெற்று அடுத்த ஆட்சியாளர் யார் என்பது முடிவாகிவிட்டது,

வழக்கம் போல மக்கள் தெளிவாக ஒரு கட்சி தனி அதிகாரம் பெறும் வகையில் – குழப்பங்களுக்கு இடமளிக்காதவாறு ஆட்சியாளர்களை தீர்மாணித்து விட்டார்கள்.,

தமிழிகம் மற்றும் வடமாநில செய்தி ஊடகங்கள் நடத்திய பல கருத்து கணிப்புக்கள் பொய்யான நிலையில் ஆளும் கட்சியே கூட எதிர்பாராத அளவில் தனித்த மெஜாரிட்டியுடன் அரசு அமைந்திருக்கிறது . அல்ஹம்துலில்லாஹ்.

ஆட்சிப் பொறுப்பேற்ற கட்சி நல்லதா கெட்டதா என்ற விவாதங்களுக்கு அப்பால் முஸ்லிம்களாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய – ஏற்கெணவே உணர்ந்திருந்தால் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய் ஒரு தத்துவம்

ஆட்சி அல்லாஹ்வுடையது அவன் நாடியவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கிறான்.

முஸ்லிம்களின் உள்ளத்தில் திடத்தையும் தெளிவையும்ஏற்படுத்துகிற சித்தாந்தம் இது.

அல்லாஹ் கூறுகிறான்,

قُلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ263;

அல்லாஹ் தான் மாலிகுல் முல்க் அவன்விரும்புகிறவர்களுக்குத் தான் அரசு.

இந்த சத்தியக் கோட்பாட்  வரலாற்றில் பல வகையிலும் நிரூபணமாகியுள்ளது,

·                     மக்காவிலிருந்து பதுங்கிப் பதுங்கி வெளியேறியமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் எட்டுவருடத்தில்இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அரசரானார்கள்.

·                      ஓட்டகை ேய்க்க ூட குதியற்றவர் ன்றுதந்தை த்தாபால் சப்பட்ட மர் (ரலி)இருபத்திரண்ட்ரை லட்சம் துர ைல்களைகட்டியாண்டார்கள்.
·                     ியாபாரியான உஸ்மான் (ரலி) அவர்களும்சாமாணிய கூலித் தொழிலாளியான அலி ரலிஅவர்களும் அதிபர்கள் ஆனார்கள்.

திருக்குர் ஆன் சில பழைய வரலாறுகளை சுட்டிக்காட்டுகிறது.
·                     கன்ஆன் தேசத்தில் பிறந்து சகோதரர்களால்கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் (அலை) எங்கோஇருக்கிற எகிப்தின் அரியனையைஅலங்கரித்தார்கள்.
·                      ஜாலூத்தின் (கோலியத்) படையில் சாதரண கவன்அடிக்கும் வீர்ரான தாவூத் (அலை) டேவிட் இஸ்ரவேலர்களின் அரசரானார். 

இந்த வகைக்கான உதாரணங்களாக இந்திய அரசியலில் இன்னும்   பலரையும் சுட்டிக்காட்ட முடியும்.  
·         லால்பகதூர் சாஸ்திரி , 
·         வி.பி. சிங் , சுமார் 10 மாதங்கள் இந்திய பிரதமராக இருந்தார்,
·         தேவகவுடா 11 மாதம் இந்தியப் பிரதமராக இருந்தார்,
·         சரண்சிங் - இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக 1979  ஜூலை 28 முதல் 1980 ஜனவரி 14 வரை 6 மாதம் பணியாற்றிய சரண்சிங் ஒரு நாள்கூட மக்களவையை சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்க
·         சந்திரசேகர் 7 மாதங்கள் இந்திய பிரதமராக இருந்தார்,

என பலர்  திடும்  என பிரதமரானார்கள்.

அவ்வாறு ஆட்சியதிகாரம் தரப்படுகிற எல்லோரும் நல்லவர்களாகவும் வல்லவர்களாக இருப்பதில்லை. இருக்கு வேண்டும் என அல்லாஹ் தீர்மாணிப்பதும் இல்லை,

ஒரு சமூகத்திற்கு நன்மையை நாடுகிற போது  அல்லாஹ் சிறந்த  ஆட்சியாளர்களை  கொடுக்கிறான்,


இஸ்லாமிய கலீபாக்கள் மனித சமூகத்திற்கு அல்லாஹ் செய்த மாபெரும் கொடைகள்

البداية والنهاية வில் அபூபக்கர் ரலி அவர்களின் பதவியேற்பை பற்றி இப்னு கஸீர் ரஹ் கூறுகிறார்,

خطب أبو بكر رضي الله عنه خطبة البيعة فقال:

إني قد وليت عليكم ولست بخيركم ، فإن أحسنت فأعينوني ، وإن أخطأت فقوموني ، الصدق أمانة ، والكذب خيانة .. أطيعوني ما أطعت الله ورسوله ، فإذا عصيت الله ورسوله فلا طاعة لي عليكم

இப்படியே எல்லா ஆட்சியாளர்களும் இருப்பார்கள் என எதிர்பார்க்க கூடாது, பல போதும் ஆட்சியாளரகள் தீயவர்களாக இருப்பார்கள்
ஏனெனில் ஒரு சமூகத்திற்கு வேதனையை கொடுக்க நினைத்தால் அல்லது அவர்களை சோதிக்க நினைத்தால்  அவர்கள் மீது  தீய  ஆட்சியாளர்களை அல்லாஹ்  ஏவீ டுகிறான்  என திருக்குர் ஆனியஅறிஞர்கள் கூறுகிறார்கள்
  
قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ انظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ(65(6:

மேலெயிருந்து வருகிற தண்டன் என்றால் அது  புயற்காற்று,கல்மழை பொழிவது ஆகியவை போல தீய ஆட்சியையும் குறிக்கும் 

அதே போல கீழிருந்து ஏற்படுகிற தண்டனை என்பது பூகம்பம் நிலச்சரிவுபோல விசுவாசமற்ற வேலைக்காரர்களையும் குறிக்கும்

தப்ஸீர் இபுனு கஸீரில் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாக இத்தகவல் இடம் பெற்றுள்ளது.

إن ابن عباس كان يقول في هذه الآية "قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم" فأئمة السوء "أو من تحت أرجلكم" فخدم السوء -

அதாவது ஒரு மக்களுக்கு தண்டனையாக அல்லாஹ் தீயஆட்சியாளர்களை தருகிறான். தலைவர்களுக்கு தண்டனையாக  தீய தொண்டர்களை  தருகிறான் 

ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தால் மழையை போலஅது அல்லாஹ் நமக்கு கொடுத்த கொடை  என்றும் ஒருவேளை  ஆட்சியாளர்கள்  தீயவர்களாக  இருந்தால்  அது அல்லாஹ்  நமக்கு  வைத்த  சோதனை  என்றும்  நாம்  புரிந்துகொள்ள  வேண்டும்.

நமக்கு கிடைத்துள்ள புதிய ஆட்சி அல்லாஹ் நமக்கு கொடுத்த கொடையா அல்லது சோதனையா என்பதை மக்கள் சிந்தித்து பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

நமக்கு கிடைத்த அரசு நீதியான மக்கள் நலன் பேணும் அரசு நாம் அந்த அரசுக்கு கட்டுப்படனும்.

ஆட்சியாளர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். துஆ செய்ய வேண்டும்.

ஆட்சியாளர்களை கடவுளாகவோ கடவுளைப் போன்றோ கருதி விடக் கூடாது,

எந்த ஆட்சியாளரின் உதவியும் எல்லையற்றதோ – அவர்களாக தருவதோ அல்ல,

அன்று ஆங்கிலேயர் கொடுத்த சின்ன சின்ன பட்டங்களுக்காக நாட்டையே காட்டிக் கொடுத்தனர் சிலர்,

இன்று ஆட்சியாளர்களிடமிருந்து கிடைக்கிற அற்ப நன்மைகளுக்காக  அளவுக்கதிமாக புகழ்ந்து அவர்களையும் நாட்டையும் சீரழிக்கின்றனர் பலர்

قد مدح رجل عثمان رضي الله عنه في حضرته ، فأخذ المقداد رضي الله عنه يحثو عليه الحصباء ، فقال له عثمان ما شأنك ؟ فقال : إن رسول الله صلى الله عليه وسلم قال "إذا رأيتم المداحين فاحثوا في وجوههم التراب" . رواه مسلم

அளவு கடந்த பொய்யான புகழ்ச்சிகள் யாவும் மறுமை நாளில் நமக்கெதிரான சாட்சியங்களாக இருக்கும் என்பது மட்டு மல்ல இந்த உலகிலும் கூட கால மாற்றம் ஏற்படும் போது அது நமது மரியாதைக்கு கேடு விளைவிப்பதாக அமையும்,
 
அளவு கடந்த புகழ்ச்சிகளே ஆட்சியாளர்களை அதிக மமதை பிடித்தவர்களாக மாற்றுகிறது,

வெளிநாடுகளில் ஆட்சியாளர்கள் மிகச் சாதராணமாக இருக்கிறார்கள்

இலண்டன் நகராக மேயராக சமீபத்தில் பெறுப்பேற்றிருக்கிற சாதிக் கான் சாதரணமாக பஸ்ஸுக்கு காத்திருந்த்தை சமீபத்தில் வாட்ஸ் அப்பில் பரவிய புகைப்படங்கள் காட்டின,

நம்முடைய நாட்டிலேயே பல பிரமுகர்கள் வெகு சாதரணமாக இருக்கிறார்கள்.

தற்போதைய தேர்தலில் மகா வெற்றி பெற்றிருக்கிற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மிக சாதாரணமாக இருக்கிறார்.

இதற்கு காரணம் அதிகப்படியான மிகையான புகழுரைகளுக்கு அவர்கள் ஆட்படாமல் இருப்பதே காரணமாகும்,

ஒருவேளை நீதியான  அரசுகள்  அமையும்  என்றால்  மக்கள்  அதைமாற்ற அல்லது சரி செய்ய  முயற்சி  செய்ய வேண்டும்.

அநீதியான அரசு என்பது பாய்ந்து தாக்க வரும் புலியை விட கொடியது.

சீனத் தத்துவ அறிஞர் கான்பியூசஸ் தாய் மலையருகே ஒருபெண்மணியை  சந்தித்தார்.

அவள் ஒரு சமாதியின் அருகே கதறிக் கொண்டிருந்தாள்.

அவளது அருகே சென்ற கான்பியூஸஸ்   “ பெருங் கவலைக்கு  ஆளானவள்  போல் அழுகிறாயே ஏன்? என்று கேட்டார்.

இதோ இந்த என் குழுந்தையின் கண்ணெதிரே  ஒரு  புலி  என்  கணவரையும் மாமனாரையும்  சாப்பிட்டு  விட்டது.  அவர்கள் இறந்து விட்டார்கள்இந்தக் குழந்தையோ  இருந்தும் இறந்தவன் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். என்றாள் அந்தப் பெண்.
கான்பியூஸஸ் கேட்டார். அது சரி! புலி அடித்து திண்ணும் அச்சம்  சூழ்ந்த  இடத்தில் இன்னும் ஏன் வாழ்ந்து  கொண்டிருக்கிறாய்?

அதற்கு அந்தப் பெண் சொன்னாள்:           : இங்கே இருக்கிற அரசு அநியாயம்செய்கிற அரசல்ல.  

கான்பியூஸ்ஸ் அந்த இடத்தை கடந்து சென்றார் அவரதுவாய் முனுமுனுத்தது
அநியாயமான் அரசு பாயும் புலியைவிடக் கொடியது.

கொடிய மிருகங்கள் இருந்தாலும் நியாயமாக நடந்து கொள்ளும் அரசுகள் இருக்கிற நாட்டில் வாழலாம். எத்தனை சவுகரியமாக தோன்றினாலும் அநீதி கோலோச்சுகிற இடத்தில் வாழ்வது சரியல்ல என்ற தத்துவத்தை இது தருகிறது,

ஆட்சியாளர்ள் அநீதியிழைப்பவர்களாக அல்லது நெறி தவறி நடப்பவர்களாக இருந்தால் அதை சுட்டிக் காட்டும் தைரியம் மக்களுக்கு இருக்க வேண்டும்.

அப்போது தான் நாடு நாடாக இருக்கும்.

يدخل رجل على عمر بن الخطاب ويقول له اتق الله يا عمر فأخذت في الجالسين غضبة، فقال لهم عمر لا خير فيكم إن لم تقولوها ولا خير فينا إن لن نقبلها

உலகே அஞ்சி நடுங்கிய ஆட்சியாளர் உமர் ரலிக்கு முன்னாள் ஜும் ஆ பிரசங்கத்தில் உரிமைக் குரல் எழுப்பினார் ஒரு பெண் மணி.
عن الشعبي عن مسروق قال : ركب عمر منبر النبي صلى اللَّه عليه وسلم ثم قال : أيها الناس ما إكثاركم في صداق النساء ، وقد كان رسول اللَّه صلى اللَّه عليه وسلم وأصحابه إنما الصدقات فيما بينهم أربع مائة درهم فما دون ذلك ، ولو كان الإكثار في ذلك تقوى عند اللَّه أو مكرمة لم تسبقوهم إليها فلا أعرفن ما زاد رجل في صداق امرأة على أربع مائة ، قال : ثم نزل ، فاعترضته امرأة من قريش فقالت له : يا أمير المؤمنين ، نهيت الناس أن يزيدوا النساء في صدقاتهن على أربع مائة درهم ؟ قال : نعم ، فقالت : أما سمعت ما أنزل اللَّه في القرآن ؟ قال : وأي ذلك ، فقالت : أما سمعت اللَّه يقول وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا سورة النساء آية 20 قال : فقال : اللَّهم غفرا كل الناس أفقه من عمر ، قال : ثم رجع فركب المنبر فقال : أيها الناس إني كنت نهيت أن تزيدوا النساء في صدقهن على أربع مائة درهم ، فمن شاء أن يعطي من ماله ما أحب ، 
முஆவியா ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் அவரது மகன் யஜீதுக்கு பட்டம் சூட்ட பைஅத் பெறப்பட்டது, இதை மதீனாவின் அப்போதைய ஆளுநரான மர்வான் மின்பரி அறிவித்தார்,  அப்போது அதை அபூபக்கர் உமர் ரலி ஆகியோரின் சுன்னத்து என்று அவர் சொன்ன போது அப்துர் ரஹ்மான் பின் அபீபக்கர் பகிரங்கரமாக மறுத்துரைத்தார். இது ஹிர்கலிஸம் என்றார்.


فحين خطب مروان بن الحكم أمير المدينة ، في شأن عهد معاوية لابنه يزيد بالخلافة ( أي : التوريث ) فقال" سنة أبي بكر وعمر " ، أنكر عليه عبدالرحمن بن أبي بكر علنا ، وقال " بل سنة هرقل وقيصر " .
وفي لفظ " جئتم بها هرقلية تبايعون لأبنائكم " ؟
இந்த எதிர்ப்பை அன்னை ஆயிஷா ரலி அவர்களும் மற்ற் சஹாபாக்களும் அங்கீகரித்து ஆதரவு தெவித்தனர் என பத்ஹுல் பாரியில் வருகிறது,
அதே மர்வான் பின்னர் ஆட்சியாளராக இருந்த போது ஒரு தடவை பெருநாள் தொழுகையில் தொழுகைக்கு முன் குத்பா வுக்கு எழுந்த போது ஒரு சாமாணியர் எழுந்து ஆட்சேபித்தார். அதை சஹாபாக்கள் அங்கீகரித்தனர்,  
 وأنكر رجل من عامة الناس على مروان تقديم خطبة العيد على الصلاة ، وأقره أبو سعيد الخدري رضي الله عنه على ذلك الإنكار ، ثم ذكر حديث "من رأى منكم منكرا فليغيره..".

மர்வானின் மகன் பிஷ்ரு ஒரு முறை குத்பாவில் கையை உயர்த்தி துஆ செய்த போது அதை ஒரு நபித்தோழர் கண்டிக்க த் தவற வில்லை,

 وخطب بشر بن مروان ، فرفع يديه في الدعاء ، فأنكر عليه عمارة بن رؤيبة رضي الله عنه علانية ، وقال "قبح الله هاتين اليدين.." . رواه مسلم

மக்கள் பணியாற்றுமாறு ஆட்சியாளர்களை தூண்டவும் அவர்கள் செயல்படாவிட்டால் அல்லது அநீதி இழைத்தால் அதை எதிர்த்து போராடவும் தட்டிக் கேட்கவும் மக்கள் முன்வர வேண்டும்

உதாரணத்திற்கு மதுவிலக்கை அமுல் படுத்து வதாக சொல்லியிருக்கிற தற்போது வெற்றி பெற்ற அரசு அதை அமுல் படுத்த வேண்டும் என்ற போராட்டம் வலுக்கும் என்றால் நிச்சயம் அது விரைவாக நடை முறைக்கு வரும்.

அதே போல கல்வியை வியாபாரமாக்குகிற அரசின் நடவடிக்கை மக்களின் முழு கண்டிப்புக்கு ஆளாகும் என்றால் நிச்சயம் அதில் மாற்றம் வரும்.

காந்தீய போராட்ட நடை முறைகளை நாட்டு மக்கள் மறந்து விட்டார்கள்,

அறப்போராட்டத்தின் வழியே அரையாடை உடுத்திய காந்தி ஆங்கிலேயர்களை கிலி பிடிக்கச் செய்தார்,

மக்கள் சக்தி அறப்போராட்டங்களில் இறங்கத் தவறினால் அல்லது அவ்வாறு இறங்கியவர்களுக்கு ஆதரவு கொடுக்கத் தவறினால் ஆட்சியாளர்கள் எல்லை மீறுவது சகஜமாகிவிடும்.

அது நமக்கு சோதனையான ஆட்சியாகிவிடும்.

இப்போது நமது மாநிலத்தில் அமைந்திருக்கிற புதிய சட்டமன்றமும் கூட அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு நல்ல வாய்ப்பாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆட்சியதிகார்ம் ஒரு கட்சிக்கு கொடுக்கப் பட்டாலும் ஒரு வலிமையான எதிர்க்கட்சியை அல்லாஹ் அமைத்திருக்கிறான்,

மக்களுக்காக உழைக்க போராட எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கும் என்றால் ஆளும் கட்சியை நல்ல ஆட்சியை தரத்ததக்கதாக மாற்ற முடியும்.

தங்களது தலைமையைப் பற்றி துதிபாடவும் சண்டையிட்டுக் கொள்ளவுமே சட்ட மன்றத்தை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பயன்படுத்திக் கொள்வார்கள் எனில் இந்த் ஐந்து ஆண்டும் அல்லாஹ் நமக்கு வைத்த சோதனையாகவே அமையும்

அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் மக்கள் நலனில் அக்கறை கொன்டவர்களாக! மக்கள் விசயத்தில் கருணை மிக்கவர்களாக – இறைவனை பயந்து நடந்து கொள்ளக் கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!

பரா அத் இரவு

இன்ஷா அல்லாஹ் வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு பரா அத்துடை இரவாகும்.

பராஅத் இரவு

பராஅத் இரவை பித் அத் என்றும் ஆதாரமற்றது என்றும்சிலர் வேகமாக பிரச்சாரம் செய்கின்றன, அது சத்தியத்தைமூடி மறைக்கும் பிதற்றலாகும்.

அலி, ஆயிஷா, அபூ மூஸல் அஷ் அரி, (ரலி) போன்ற பலசஹாபாக்களின் அறிவுப்புக்களில் பரா அத் என்ற சஃபான்15 ம் நாள் இரவு பற்றி குறிப்புக்கள் கிடைக்கின்றன.

ஹதீஸ் நூல்களில் திர்மிதி இப்னுமாஜா போன்றவற்றில்
 باب ما جاء في ليلة النصف من شعبان  
என்ற தலைப்புக்கள் போடப்பட்டுஅதில் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன,

பரா அத் பற்றிய நபி மொழிகள்:

ابن ماجة   வின் ஹதீஸ்கள்

عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة 1144  


عن علي بن أبي طالب قال قال رسول الله   صلى الله عليه وسلم     إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر 

عن عائشة قالت   فقدت النبي   صلى الله عليه وسلم   ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن   الله تعالى   ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب    

  عن أبي موسى الأشعري عن رسول الله   صلى الله عليه وسلم   قال   إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقة إلا لمشرك أو مشاحن       

 بيهقي யின் ஹதீஸ்

عن عائشة – عن رسول الله   صلى الله عليه وسلم   قال    اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان  ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلبولا ينظر الله فيه الي مشرك--  ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل--  ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر


இப்படிப்பட்ட ஒரு விசயத்தை அடிப்படை ஆதாரமற்ற பித்அத் என்று சொல்லுவோர் மார்க்க விசயத்தில் எவ்வளவுதுணிச்சலாக பொய் சொல்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்கட்டும்

பரா அத் ஹல்வா, கொலுக்கட்டை , மற்ற இனிப்புகளை தயாரிப்பதும் அதை அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு பரிமாறுவதும் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாச்சாரமே தவிர அவை ஒரு வணக்கமல்ல.  

அல்லாஹ் நமது கோரிக்கைகளுக்ககு முக்கியத்துவம் அளிக்கிற நாள் என்கிற காரணத்தினேல் அன்றைய மஃரிபுக்குப்பிறகு மூன்று யாசீன்களை ஓதி துஆ முக்கிய மான துஆக்களை கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்களை மக்களை பக்குவப்படுத்தி அதன் பால் கவனத்தை தூண்ட நம்முடைய முன்னோர் கையாண்ட நடை முறையாகும்.

இவற்றை அவற்றிற்கு நாம் தராத முக்கியத்தை தந்த்தாக கூறி பரா அத் இரவின் சிறப்பையும் அதன் அமல்களையும் பெரிய பித் அத்தாக உருவக்கப்படுத்திக் காட்டு பூச்சாண்டிப் பேர்வழிகளை குழப்பவாதிகள் என்று உணர்து கொள்ளுங்கள்,

அல்லாஹ் விடம் இரணபாக்கியத்தை ஆபியத்தை ஆயுளை அதிகப்படுத்திக் கேட்கும் ஒரு வாய்ப்பை பிரபலத்திற்காக அலைகிற பேர்வழிகளின் பேச்சை நம்பி ஏமாந்து விடாதீர்கள்,

பள்ளிவாசலுக்கு வாருங்கள்! இல்லை எனில் வீட்டிலிருந்தாவது துஆ செய்யுங்கள்,

ஹதீஸ்கள் புனிதப்படுத்தும் ஒரு இரவை உங்களது சுய சிந்தனை அல்லது குழப்பவாதிகளின் பேச்சை கேட்டு வீணடித்து விடாதீர்கள்,  

அதே நேரத்தில் கொளுக்கட்டை இனிப்பு அலங்காரம் இவற்றில் மட்டும் அக்கறை செலுத்தி அமல்களில் கவனம் செலுத்தாது இருந்து விடுவது அடிப்படையை பாழாக்கி விடும்.  

மார்க்கம் சிறப்பாக்கியவற்றை மதித்து பயன்படுத்திக் கொள்ளும் தவ்பீக்கை நம்மனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக!



No comments:

Post a Comment