வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 17, 2017

எப்படி வாழ்கிறோம் என்பதே மிக முக்கியம்.

அல்லாஹ் நமக்கு செய்திருக்கும் நிஃமத்துக்களில் ஈமானுக்கும் பெருமானாருக்கும் அடுத்த பெரிய நிஃமத் வாழ்நாள் ஆகும்.
வாழ்நாளுக்கு நிகர் எதுவும் இல்லை.
எத்தனை கோடி கொடுத்தும் அடுத்தவருடைய ஒரு மணி நேரத்தை நாம் விலைக்கு வாங்க முடியாது. யாரிடமிருந்தும் விலைக்கு கிடைக்காது.
கிடைத்திருக்கிற இந்த வாழ்நாட்களில் நாம் எத்தனை நாள் வாழ்கிறோம் என்பதை விட எப்படி வாழ்கிறோம் என்பதே மிக முக்கியம்.
وَابْتَغِ فِيمَا آَتَاكَ اللهُ الدَّارَ الآَخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الفَسَادَ فِي الأَرْضِ إِنَّ اللهَ لَا يُحِبُّ المُفْسِدِينَ) [القصص‏:77].‏
இந்த உலகில் நமக்கு கிடைத்திருக்கிற பங்கு நமது வாழ்நாட்களே ! அது நன்மைகளின் பாற்பட்ட்தாக இருக்குமாறு நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும். தவறுகளுக்கும் குழப்பங்கள் செய்வதற்கும் பயன்படுத்தி பாழ் படுத்தி விடக் கூடாது.
மிக எச்சரிக்கையாக கவனிக்க வேண்டிய விசயம் இது

கிடைத்திருக்கிற வாழ்நாட்களை இப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசைகளை தீர்த்துக் கொள்ள, சொத்து சுகங்களை , தோட்டந்துறைவுகளை சேகரிக்க,
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالبَنِينَ وَالقَنَاطِيرِ المُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالفِضَّةِ وَالخَيْلِ المُسَوَّمَةِ وَالأَنْعَامِ وَالحَرْثِ ذَلِكَ مَتَاعُ الحَيَاةِ الدُّنْيَا وَاللهُ عِنْدَهُ حُسْنُ المَآَبِ) [آل عمران‏:14]

இவ்வுலக வேட்கை அதிக மதிப்பிற்குரியதோ இலாபமானதோ அல்ல.

இதை விட மிகச் சிறப்பான இலக்கு நமது வாழ்க்கைகு அவசியம்.
வாழும் நாட்கள் எவ்வளவாக இருந்தாலும் அதில் கவனத்திற்குரிய நன்மையான பல அல்லது சில பணிகளை ஆற்ற வேண்டும். அதற்கு ஆசைப்பட வேண்டும் .

அஸ் அது பின் ஜராரா (ரலி) சில வருடங்களே இஸ்லாத்தில் வாழ்ந்தார்கள்., சுமார் 3 ஆண்டுகள்.  ஆனால் அதற்குள் அவரது சாதனைப் புத்தகத்தை நிறைத்த நிகழ்வுகள் ஏராளம்.

மதீனாவாசிகளில் முதல் முஸ்லிம் அவர்
வெள்ளிக்கிழமைகளில் மதீனாவில் முதன் முதலில் முஸ்லிம்களை ஒன்று கூட்டியவர் அவர்
மஸ்ஜித்ன்னபவி பள்ளிவாசலுக்கு இடம் கிடைக்க காரணமாக இருந்தவர் அவர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் பற்றிய அறிவிப்பும் விளக்கமும் கிடைத்த போதே அவர்களுடைய சொந்த ஊரான மக்காவிலிருந்து வெளியேற்றப் படுவார்கள் என்ற விவரமும் கிடைத்திருந்தது. அதனால் மக்காவின் வாழ்க்கை அதிக நெருக்கடிக்குள்ளான போது தான் வெளியேறிச் செல்லும் இடம் தாயிபாக இருக்கட்டும் என பெருமானார் (ஸல்) அவர்கள் நினைத்தார்கள். அதனால் மக்காவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிற தோட்டந்துறவுகள் நிறைந்த தாயிபுக்குச் சென்றார்கள். அங்கே அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேற வில்லை, பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். அப்போது அவர்களுக்கு வயது 50.
அந்த  வருடம் நடை பெற்ற ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் மினா வில் சைத்தனை கல்லடிக்கிற கடைசி இடமான ஜம்ரத்துல் அகபாவிற்கு அருகே ஒரு கூடாரத்தில் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்திருந்த 6 நபர்களைச் சந்தித்து இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன்னார்கள். அப்போது அவர்களில் மூத்தவர் ஒருவர் தயங்கினார்.  “மதீனாவிலுள்ள இரண்டு சகோதரச் சமூகமான அவ்ஸ் கஜ்ரஜ்களின் சண்டையை சுட்டிக் காட்டி எங்களுக்குள் முக்கியமான சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை முடித்து விட்டு வருகிறோம். இரண்டு சமூகமும் சேர்ந்து ஒத்துழைக்கும் எனில் நீங்கள் சிறப்பான வெற்றியை பெற முடியும் என்று கூறி பெருமானாரிடம் இஸ்லாமை ஏற்க தாமதிப்பதற்கான  காரணத்தை கூறிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களில் இளைஞராக இருந்த அஸ் அது பின் ஜராரா (ரலி) பாந்ந்தோடி வந்து பெருமானாரின் கையைப் பிடித்துஇவர் நல்லதற்கு அழைக்கிறார். இவரோடு நான் இப்போதே  உடன் படுகிறேன்என்று கூறி பை அத் செய்தார். மதீனா வாசிகளின் முதல் பைஅத்அது. அஸ் அது (ரலி) அவர்கள் மீதிருந்த நல்லெண்ணம் காரணமாக அந்த ஆறுபேரும் உடனடியாக இஸ்லாமை தழுவி பை அத் செய்தனர்அந்த உடன் படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் முதலாவது அகபா உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது. அகபா என்றால் கடைசி இடம் என்று பொருள். சைத்தானை கல்லெறியும் கட்டசி இடத்திற்கு அருகே நடை பெற்றதால் அது அகபா உடன் படிக்கை என்று பெயர் பெற்றது,
உலக மனித வரலாற்றில் மகத்தான திருப்பங்களுக்கு வாய்பளித்த நிகழ்வு அது.

இந்நிகழ்விற்குப் பிறகு அஸ் அது பின் ஜராரா (ரலி) அவர்களின் வீடு மதீனாவில் இஸ்லாமை பரப்பும் கேந்திரமாயிற்றுஅடுத்த வருடம் மினாவின் அகபா வெளியில் மதீனாவாசிகள் 12 பேர் இஸ்லாமை ஏற்று பை அத் செய்தனர். அஸ் அது பின் ஜராரா அப்போதும் பெருமானாரிடம் பை அத் செய்தார். அதற்கடுத்த வருடம் ஏராளமான மதீனா வாசிகள் மக்காவிற்கு ஹஜ்ஜுக்கு வந்தனர். அவர்களில் எழுபது பேர் மட்டுமே அகபாவில் பெருமானாரை ரகசியமாக சந்தித்து பை அத் செய்தனர். அப்போதும் அஸ்அது (ரலி) உடனிருந்தார். அந்த மூன்றாவது முறையில் தான் மதீனாவாசிகள் பெருமானாரை மதீனாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பிற்கும் அஸ்அதே காரணமாக இருந்தார்.
அஸ் அது என்றால் பெரும் சீதேவி என்று பெருள்! சில பெயர் பொருத்தங்கள் கச்சிதமாக அமைந்து விடுவதுண்டு. அஸ் அது அவர்களில் ஒருவர். அவர் பெரும் சீதேவியாக இருந்தார் என்பதல்ல; முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிரச்சார் பயணத்திற்கும் இஸ்லாமிய உம்மத்திற்கும் பெரும் பாக்கியமான மனிதராக இருந்தார் என்பதே மிகவும் கவனிக்கத் தக்கது.
மதீனாவில் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களை ஒன்று கூட்டி தொழுவது அவர் உருவாக்கிய பழக்கமாக இருந்தது. அதுவே பிறகு வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் பெருநாளாகவும் விசே தொழுகைக்கான நாளாகவும் மாறியது. பல பெரும் மதீனத்து சஹாபாக்கள் பிற்காலங்களில் வெள்ளிக்கிழமை ஜும் ஆவிற்கான பாங்கு சப்தம் கேட்கையில் கண்ணீர் மல்க அஸ் அது பின் ஜராரா (ரலி) அவர்களுக்காக துஆ செய்பவர்களாக இருந்தனர்.
قال ابن إسحاق: عن عبد الرحمن بن كعب بن مالك قال: كنت أقود أبي حين ذهب بصره فكنت إذا خرجت به إلى الجمعة فسمع الأذان بها صلى على أبي إمامة أسعد بن زرارة قال: فمكثت حينًا على ذلك لا يسمع لأذان الجمعة إلا صلى عليه واستغفر له. قال: فقلت في نفسي, والله إن هذا بي لعجز، ألا أسأله؟ فقلت: يا أبتِ ما لك إذا سمعت الأذان للجمعة صليت على أبي إمامة؟ فقال: أي بني, إنه كان أول من جمع بنا بالمدينة، في هرم البيت من حرة بني بياض في بقيع يقال له: بقيع الخَضِمات قال: قلت: وكم أنتم يومئذ؟ قال: أربعين رجلاً.
நியாயப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழைந்த போது அவர்களை தன் வீட்டிற்கு அழைக்கிற உரிமை அஸ்அது (ரலி) இருந்தது. ஆயினும் அவ்ஸ் கஜ்ரஜ் களின் குடும்பச் சண்டை தன்னுடை முதல் தேர்விலேயே முளை விட்டு விடக் கூடாது என நினைத்த பெருமானார் (ஸல்) அவர்கள் என் ஒட்டகையை விட்டு விடுங்கள். அது இறைவனின் நாட்டப்படி செல்லட்டும் என்றார்கள்.
பெருமானாரின் ஒட்டகை தற்போதைய மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் உட்கார்ந்தது. அந்த இடத்திற்கு மிக அருகே இருந்த அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி ) அவர்கள் பெருமானாரின் கையை விரைந்து வந்து பற்றிக் கொண்டு தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பெருமானாரின் ஒட்டகையின் பின்னே சென்று கொண்டிருந்த அஸ் அது பின் ஜராரா (ரலி) மிகுந்த ஏக்கமுற்றார்கள். காரணம் பெருமானாரின் ஒட்டகை உட்கார்ந்த காலியிடம் அவரது கட்டுப் பாட்டில் இருந்த்து. பக்கத்து வீட்டுக் காரரான அபூஅய்யூபுல் அன்சாரி (ரலி) முந்திக் கொண்டு விட்டார்கள். என்ன செய்வது ? பெருமானார் (ஸல்) வீட்டிற்குள் சென்ற பிறகு வெளியே நின்று கொண்டிருந்த பெருமானாரின் ஒட்டகையை தன்னுடைய வீட்டிற்கு ஓட்டிச் சென்று தனது ஏக்கத்தை தீர்த்துக் கொண்டார்கள்.
அடுத்த நாள் அந்த காலியிடம் குறித்து நபி (ஸல்) அவர்கள் விசாரித்த போது அது அஸ் அது பின் ஜராரா ரலி அவர்களின் பொறுப்பில் இருக்கும் இரண்டு எதீம் சிறுவர்களுடைய என தெரிய வந்த்து. அந்த இடத்தை விலைக்குத் தருமாறு பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். எதற்கு என அஸ் அது வினவினார். பள்ளிவாசல் கட்டுவதற்கு என பெருமானார் (ஸல்) பதிலளித்தார்கள். அதற்கெனில் நாங்கள் இலவசமாக தந்து விடுகிறோமே என்றார் அஸ் அது (ரலி). இல்லை நான் விலை கொடுத்து வாங்க விரும்புகிறேன் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் தீர்க்கமாக சொல்லவே பத்து தீனார் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அபூபக்கர் சித்தீக் (ரலி) மக்காவிலிருந்து புறப்படுகிற போது  கொண்டு வந்திருந்த 6 ஆயிரம் திர்ஹம் களிலிருந்து 10 தீனார் கொடுத்து அந்த இடம்  விலைக்கு வாங்கப்பட்டது.
அங்கே மஸ்ஜிதுன்னபவியின் கட்டுமாணப் பணி தொடங்கியது. பெருமானார் (ஸ்ல்) அவர்கள் உள்ளிட்ட சஹாபாக்களில் அந்தப் பணியில் வேகமாக வேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென வந்த செய்தி முஸ்லிம்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அஸ் அது பின் ஜராரா (ரலி) வபாத்தாகி விட்டார்கள். ஜன்னதுல் பகீ கப்ரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்ட முதல் மதீனத்து நபித்தோழர் என்றும் அஸ் அது ரலி சிறப்புப் பெற்றார்கள்.
அவரது மறைவிக்குப் பிற்கு பெருமானாரை அணுகிய அவருடைய பனுன்னஜ்ஜார் குடும்பத்தார், தங்களுக்கு தலைவர் இல்லையே என முறையிட்டனர். அஸ் அது பின் ஜராரா (ரலி) அவர்களுக்கு தன் வாழ்நாளிலேயே ஒரு பரிகாரம் செய்து விட நினைத்த நபி (ஸல்) அவர்கள், இனி பனுன்னஜ்ஜார்களுக்கு நானே தலைவன் என்று அறிவித்தார்கள்.
மானுட உலகின் தனிப்பெரும் தலைவராவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தொடுத்துக் கொண்ட முதல் தலைமை பொறுப்பு அது.
வரலாற்றின் மாபெரும் திருப்பு முனைக்கு காரணமானவர்களி ஒருவர் அந்த வரலாற்றில் சுமார் 3 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
எத்தனை நாட்கள் அல்ல எப்படி வாழ்கிறோம் என்பதே பிரதானம் என்பதை உணரவைக்கிற அற்புதமான வாழ்வு இது.
இதே போல இன்னொரு வாழ்க்கைகுச் செந்தக்காரர் அபூஹுரைரா ரலி அவர்கள்
ஹதீஸ்களை திரட்டுவதில் பேரார்வம் கொண்டிருந்தார்.
أخرج البخاري عن أبي هريرة قال: قُلْتُ: يَا رَسولَ الله مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ؟ فَقَالَ: «لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لَا يَسْأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ؛ لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ، أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا الله خَالِصًا مِنْ قِبَلِ نَفْسِهِ».
தூக்கத்தில் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பெருமானாரை பின் தொடர்ந்தார்.
لم يكد يفارقه قط الا في ساعات النوم..
இந்தப் பணிக்காக மன்னம் செய்வதில் பேராசை கொண்டிருந்தார்.

أخرج النسائي عن قيس بن مخرمة أن رجلا جاء زيد بن ثابت ، فسأله عن شيء، فقال له زيد: عليك بأبي هريرة، فإني بينا أنا وأبو هريرة وفلان ذات يوم في المسجد ندعو ونذكر ربنا عز وجل إذ خرج علينا رسول الله ^ حتى جلس إلينا فسكتنا، فقال: «عُودُوا لِلَّذٍي كُنْتُمْ فِيهِ» قال زيد: فدعوتُ أنا وصاحبي قبل أبي هريرة، وجعل النبي ^ يؤمِّن على دعائنا، ثم دعا أبو هريرة فقال: اللهم إني أسألك مثل ما سألك صاحباي وأسألك علما لا يُنْسَى، فقال النبي ^:« آمِينَ» فقلنا: يا رسول الله نحن نسأل الله علما لا يُنْسَى. فقال رسول الله ^: «سَبَقَكُمَا بِهَا الْغُلَامُ الدَّوْسِيّ».
அதனால் நபித்தோழர்களிலேயே அதிக ஹதீஸ்களை அறிவித்தவர் ஆனார்
உமர் ரலி அறிவித்தது  537  ஹதீஸ்கள்
அலி ரலி அறிவித்தது  536  ஹதீஸ்கள்
உதுமான் (ரலி) அறிவித்தது  – 147 ஹதீஸ்கள்
அபூபக்கர் ரலி அறிவித்தது  142 ஹதீஸ்கள்

ஆனால் அபூஹுரைரா ரலி அவர்களோ 5374 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

நாங்கள்த வறவிட்டதைஅபூஹஉரைராவிடம்கேட்போம் என  طلحة بن عبيد الله   ரலி கூறிகிறார்கள்
நாங்கள் பெருமானாரிடம் கேட்க அஞ்சியதை அபூஹுரைராவிடம் கேட்போம் என  إبن  عمر ரலி அவர்கள் கூறினார்கள்.
நாங்கள் பெருமானாரிடம் கேட்க தயங்கியதைஅபூஹுரைராவிடம்கேட்போம் என    أبي بن كعب  ரலி கூறினார்கள்

அபூஹுரைரா ரலி அவர்களின் பணியின் தரத்தையும் வெகுமதியையும் இது காட்டுகிறது.

இத்தகைய மகத்தான் வாழ்க்கைக்கு சொந்தக்காரான அபூஹுரைரா ரலி பெருமானார் (ஸல்) அவர்களுடன் 4 வருடங்கள் மட்டுமே தங்கியிருந்தார்.

ஹிஜ்ரி 7 ம் ஆண்டின் மத்தியில் தான் அவர் பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்.

ஹிஜ்ரி 11 ல் பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற உதாரண புருஷர்கள் இப்படி சிறப்பான வாழ்க்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் இன்னொரு மனிதர் முஹம்மது பின் காஸிம்.

சிந்துப் பகுதிக்கு இஸ்லாமை கொண்டு வந்த இறை நேசர் 

ஹிஜ்ரி 72 ல் தாயிபில் பிறந்தவர் ஹிஜ்ரீ 95 ல் இராக்கில் மரணமடைந்தார்.

கீபி 712 முதல் 714 வரை 11 போர்களில் வெற்றியை தேடி தந்துள்ளார்.

17 வய்தில் 6 ஆயிரம் பேருடன் சிந்து பயணம் செய்த அவர் சிந்து வில் தொடங்கி  முல்தானில் தொடர்ந்து குஜ்ராத் இஸ்லாமை கொண்டு வந்து சேர்த்தார்.   

இமாம் சுயூத்தி 17 வயதில் எழுத ஆரம்பித்தார் 62 வயதில் அவர் வபாத்தான போது 300 கிதாபுகளும் 415 சிறு நூல்களையும் எழுதினார்.

فقد اتسع عمره التأليفي (45) سنة، ولو وُزع عمره على الأوراق التي كتبها لأصاب اليوم الواحد (40) ورقة
ஒரு நாளைக்கு 40 பக்கம் என்ற வீதம் எழுதியிருக்கிறார்.

நமது வாழ்நாள் எப்படி அர்த்தமற்றதாக கழிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த சாதனை மனிதர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

நமது வாழ்வை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள தீர்மாணிப்போம். அல்லாஹ் கிருபை செய்வானாக!

5 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. எத்தனை வருடம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்கிறோம்?.. என்பதே முக்கியம். என்பதை அழகாக கூறியுள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا أستاذ

  ReplyDelete
 2. மிக அருமையான பதிவு

  ReplyDelete
 3. ரொம்ப நன்றி ஹளரத்

  ReplyDelete
 4. நன்றி ஹளரத்

  ReplyDelete
 5. நன்றி ஹளரத்

  ReplyDelete