வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 02, 2017

மழையெனப் பெய்யும் பிழை

மழையெனப் பெய்யும் பிழை
ü    الم* أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لا يُفْتَنُونَ* وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ)، 
ü     وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ

இது சபர் மாதம்
ஹிஜ்ரீ 212 ம் ஆண்டு இதே போன்ற ஒரு சபர் மாதத்தில் முஸ்லிம் உம்மத்தை பாடுபடுத்திய ஒரு மோசடியான கருத்தை சிலர் உருவாக்கிவிட்டனர். அதனால் சமுதாயம் சுமார் 15  ஆண்டு காலம் தேவையற்ற ஒரு பெரும் குழப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்தது.  கடுமையான வலி வேதனையை சமுதாயச் சான்றோர் அனுபவித்தனர்.
அந்தக் குழப்பத்தின் பொருள்குர் ஆன் படைக்கப்பட்டதுஎன்பதாகும்.
ஒரு வெளிப்பார்வைக்கு இந்த வாதம் சரியானது போல தோன்றினாலும் இது தவறான கருத்தாகும்
நம்மிடம் இருக்கிற குர் ஆன் அல்லாஹ்வின் வாக்காகும். எனவே நாம் குர் ஆன் என்று சொல்லும் போது நம் கைகளில் தவழ்கிற அரபி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டிருக்கிற புத்தகத்ததை மட்டும் குறிக்காது.  அந்தப் பேப்பரில் இருக்கிற வாசகங்களும் அது சுமந்து நிற்கிற கருத்துக்களுமான பெயரே குர் ஆன் ஆகும்..
சாதாரணமாக நம்முடைய பழக்கத்தில் குர் ஆனை முஸ்ஹப் என்று அழைக்கிற பழக்கம் இருந்தது. அதன் பொருள் குர் ஆன் அச்சடிக்கப்பட்ட ஏடு என்பதாகும். எனவே அதை முஸ்ஹப் என்று அழைப்பதே பொருத்தமானது.
இந்த அச்சடிக்கப்பட்ட புத்தகம் படைக்கப் பட்டது தான். ஆனால் அது பொதிந்திருக்கிற அரபு வாசகங்களும் அதன் கருத்துக்களும் அல்லாஹ்வுடைய வாக்காககும்.
அல்லாஹ்வுடைய வாக்கு அல்லாஹ்வைப் போலவே கதீம். படைக்கப் படாதது ஆகும் (கைரு மஹ்லூக்)
يعتقد أهل السنة والجماعة أن القرآن الكريم كلام الله غير المخلوق، فقد روي عن الإمام أحمد بن حنبل أنه قال: والقرآن كلام الله، ليس بمخلوق، فمن زعم أن القرآن مخلوق فهو جهمي كافر
இது விவாதப் பொருளாக்கப்பட வேண்டிய விசயமல்ல. அதனால் எந்த நன்மையும் சமுதாயத்திற்கு இல்லை.
ஆனால் அப்பாஸிய மன்னர் மஃமூன்  (ஹிஜ்ரி 170 -218 )அவருடைய சில சகாக்களின் தூண்டுதலின் பேரில் குர் ஆன் படைக்கப்பட்டதே என்ற கருத்தை பரப்பினார். மஃமூனின் தலைமை நீதிபதி அஹ்மது பின் அபீதாவூதுக்கு இதில் முக்கியப் பங்கிருந்தது. மஃமூன்  அனைவரும் தனது கருத்தை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என வலியுறுத்தினார். முதலில் பக்தாதில் உள்ள தனது படை வீரர்கள் அனைவரும் குர் ஆன் படைக்கப்பட்டதே என்று கூறவேண்டும் என நிர்பந்தித்தான்.  நீதிபதிகள் ஓவ்வொருவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார். யார் மன்னரின் கருத்தை ஒத்துக் கொள்ளவில்லையோ அவர்கள் அனைவரையும் பதவியிலிருந்து நீக்கினார்.
மார்க்கத்தின் செய்திகளை மார்க்கத்தின் அடிப்படையில் , மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலில் புரிந்து கொள்ளாமல் தனது அறிவின் அடிப்படையில் அவர் சிந்தித்ததே இந்தப் பிரச்சனை உருவாகக் காரணமாக இருந்தது. அவரது கருத்துக்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை. மஃமூன், இஸ்லாமிய அறிவியல் கலைகள் வளர்ச்சியின் உச்ச நிலையில் இருந்த கால கட்டத்தில் வாழ்ந்தார் என்பது அவரது சிந்தனையின் தடுமாற்றத்திற்கு காரண்மாக இருந்தது. மஃமூனின் காலம் விஞ்ஞானச் சிந்தனையின் ஆக்ரமிப்புக் காலம் என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.
தேவையற்ற ஒரு கருத்தை உற்பத்தி செய்து அதற்காக மஃமூன் செய்த சித்ரவதைகள் கொஞ்ச நஞசமல்ல.
முஹத்திஸ்கள் பலரிடம் இந்தச் செய்தி அனுப்பினான். பலரும் அவனுக்கு பயந்து தலையசைத்து வைத்தனர்.
எனது கழுதை பேசினால் அது கூட தன்னை சுன்னத் ஜமாத் என்று சொல்லும் எனற அபூ மஃமருல் கதீஈ யும் கூட  மஃமூனின் கருத்துக்கு தலையசைக்க நேர்ந்தது.
وكان من الذين أجابوا أبو معمر القطيعي، وكان من شدة إدلاله بالسنة يقول: لو تكلّمتْ بغلتي لقالت: إنها سنية. وأخذ في المحنة، فأجاب، فلما خرج قال: كفرنا وخرجنا.
இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் சிங்கமென கர்ஜித்தார்கள் . குர் ஆன் அல்லாஹ்வுடைய வாக்கு. அது படைக்கப் பட்டதல்ல என்றார்கள். தனது கருத்தில் மிக உறுதியாக இருந்தார்கள். அரசருக்கு பயந்து தலையாட்டியவர்களின் ஜன்ஸா தொழுகையில் கூட அவர் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.
ولم يُصَلِّ على من أجاب، منهم أبو نصر التمار
.
இமாம் அஹ்மதுவுடன் மூன்று பேர் இந்தக் கருத்தில் உறுதியாக நின்றனர்.

أحمد بن حنبل، ومحمد بن نوح، وعبيد الله بن عمر القواريري، والحسن بن حماد

அதிலும் கடைசி இரண்டு பேர் அரசரின் கருத்துடன் இணங்கி ப் போய்விட்டனர்.

وأصر أحمد ومحمد بن نوح على الحق: "القرآن كلام الله غير مخلوق".

அவ்விருவரையும் கைது செய்து அனுப்பி வைக்குமாறு மஃமூன் உத்தரவிட்டார்  ஒரே ஒட்டகையில் இருவரும் கட்டி அனுப்பப் பட்டனர். வழியிலேயே மற்றவர் இறந்தார். இமாம் அஹ்மது துஆ செய்தார். அவர் வருவதற்கு முன்னரே மஃமூன் இறந்தார். இமாம் அஹ்மது (ரஹ்) பக்தாதில் சிறை வைக்கப்பட்டார்கள்.

هنا حبس الشيخان، وقيدا، وحملا على جمل متعادلين، وبُعث بهما إلى المأمون في طرسوس، وكان أحمد وهو في الطريق يسأل الله أن لا يرى المأمون، فمات المأمون، وهما في الطريق سنة (218هـ) فردّا إلى بغداد، ومات محمد بن نوح في الطريق بمحل اسمه: " عانات " فحلت أقياده وغسِّل، وصلى عليه الإمام أحمد، ودُفع بأحمد إلى السجن في بغداد.

கலீபா மஃமூன் மரணத்தின் தருவாயில் அடுத்து பட்டத்துக்கு வருகிற இளவரசரான் முஸ்தஃஸிமுக்கு தனது கருத்தையே கடைபிடிக்குமாறும் அதில் கடுமையாக நடந்து கொள்ளுமாறும் வஸிய்யத் செய்தார்.

فلما أحس بدنو الأجل، كانت وصيته لأخيه المعتصم الخليفة من بعده، أن يواصل أمر المحنة على القول بخلق القرآن، وحمل الناس عليه، ولهذا بلغ البلاء أشده في عهد المعتصم.

சிறையில் இமாம் அஹ்மது.
قي أحمد مقيداً في بغداد ينقل من سجن إلى سجن، حتى حول إلى سجن العامة، وكان يصلي بأهل السجن، وهو مقيد، فصار مكثه نحواً من ثلاثين شهراً.
இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களுக்கு கசையடி
ثم حمل الإمام أحمد على دابة إلى المعتصم في العشر الأواخر من رمضان عام (219هـ)،
فيناظره أحمد بن أبي دؤاد، وجمع كثير من أصحابه في مجالس متعددة يحاجه هذا ثم يحاجه آخر.
وكان الإمام أحمد لا يلتفت إلى أحمد بن أبي دؤاد ولا ينظر إليه، وكان يرفض أحياناً محاجته، لأنه عامي، فيزداد غيظ ابن أبي دؤاد، وينزل من عيون الحضور.
இமாம் அஹ்மது (ரஹ்) தெளிவான வாதங்களை எடுத்துரைத்தார். அரசவையிலிரிந்தோர் அவற்றை குறிப்பெடுத்துக் கொண்டனர். எனினும் சித்ரவதை நிற்கவில்லை. இமாம் அஹ்மதுவிற்கு கசையடி கொடுத்த முஸ்தஃஸிம் உத்தரவிட்டார்.
அன்றைய இஸ்லாமிய உலகின் மகத்தான கல்விப் பெருமகன் மூடர்களின் கசையடிக்கு ஆளானார். வரலாற்றில் அந்தப் பெருங்களங்கம் நிகழ்ந்தது

அவர் மரணித்து விட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் என பயந்து விடுதலை செய்தார்கள்.
இமாம் அஹ்மது பஃதாதில் தனது கல்விப் பணியை தொடர்ந்தார்.

இமாம் அஹ்மது ரஹ் தனது கொள்கையில் பின் வாங்கவில்லை. மன்னர் முஸ்தஃஸீம் இறந்து போனார்.

حتى مات المعتصم سنة (227هـ).

அவருக்கு பின்னால் வாசிக் பில்லாஹ் பொறுப்பேற்றார். அவருடைய காலத்தில் இந்தக் குழப்பத்திற்கான முடிவு வந்தது.
அந்த வரலாற்றை வாசிக்கின் மகன் முஹம்மது கூறுகிறார்/

ஒரு பெரிய மனிதர் வரலாற்றின் போக்கை மாற்றினார். அவர் தலைமை நீதிபதியிடம் தன்னுடைய கருத்து என்ன வென்று முதலில் கூறவில்லை. உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டார். அவர் குர் ஆன் மக்லூக் என்று கூறினார். இது அல்லாஹ்வுடைய தூதரும் மற்ற கலீபாக்களும் அறிந்த ஒரு செய்தியா ? அல்லது  அறியாத ஒரு செய்தியா ? என்று கேட்டார். நிறைய யோசித்த நீதிபதி அவர்கள் அறிந்தே இருந்தனர் என்றார். அப்படியானால் அவர்கள் அறிந்திருந்தும் அழைக்காத ஒரு விசயத்திற்கு நீங்கள் அழைப்பது சரியா என்று கேட்டார். இந்த வாசகம் கலீபா வாசிக்கின் இதயத்தை தைத்தது, சபையிலிருந்து எழுந்து சென்று தனது படுக்கையில் மல்லாந்து விழுந்து இந்த வாசகத்தையே உருப்போட்டுக் கொண்டிருந்தார். பிறகு திரும்பி வந்து அந்தை பெரியவரின் கட்டுக்களை அவிழ்த்துவிடச் சொன்னார். அவருக்கு 400 தீனார்களை வழங்கினார்.
இனி அரசில் யாரும் இந்தப் பேச்சை பேசக் கூடாது . தமது கருத்திலிருந்து விலகி விட வேண்டும் என்றார்.
அத்தோடு தேவையற்று உருவாக்கப்பட்ட இந்தக் குழப்பம் முடிந்தது,
ஆனால் 15 ஆண்டுகளில் ஏராளமான குழப்பத்தை முஸ்லிம் சமுதாயம் சந்தித்தது

عن محمد بن الواثق بن الأمير في ذلك الوقت قالكان أبي إذا أراد أن يقتل أحدا أحضرنا فأتي بشيخ مخضوب مقيد فقال أبي ائذنوا لأبي عبد الله وأصحابه يعني ابن أبي دؤاد قال فأدخل الشيخ فقال السلام عليك يا أمير المؤمنين فقال لا سلم الله عليك فقال يا أمير المؤمنين بئس ما أدبك مؤدبك قال الله تعالى: وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها فقال ابن أبي دؤاد الرجل متكلم قال له كلمه فقال يا شيخ ما تقول في القرآن قال لم ينصفني ولي السؤال قال سل قال ما تقول في القرآن قال مخلوق قال الشيخ هذا شيء علمه النبي صلى الله عليه وسلم وأبو بكر وعمر والخلفاء الراشدون أم شيء لم يعلموه قال شيء لم يعلموه فقال سبحان الله شيء لم يعلمه النبي صلى الله عليه وسلم علمته أنت فخجل فقال أقلني قال المسألة بحالها قال نعم علموه فقال علموه ولم يدعوا الناس إليه قال نعم قال أفلا وسعك ما وسعهم قال فقام أبي فدخل مجلسا واستلقى وهو يقول شيء لم يعلمه النبي صلى الله عليه وسلم ولا أبو بكر وعمر وعثمان وعلي ولا الخلفاء الراشدون علمته أنت سبحان الله. شيء علموه ولم يدعوا الناس إليه أفلا وسعك ما وسعهم. ثم أمر برفع قيوده وأن يعطى اربع مئة دينار ويؤذن له في الرجوع وسقط من عينه ابن أبي دؤاد ولم يمتحن بعدها أحدا.

முஸ்லிம் உம்மத் பெரும் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

சமுதாயத்தில் அவ்வப்போது சிலர் தேவையற்ற குழப்பங்களை இது போல உருவாக்கி விட்ட வண்ணம் இருப்பர். அதற்கு பலருடைய ஒத்துழைப்பும் கிடைக்க கூடும்.

·         சர்வதேச பிறை
·         தொப்பி போடுவது அவசியமா?
·         குர் ஆன் ஹதீஸ் போதும்


இது போல சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட கருத்துக்கள் வெளிப்பார்வைக்கு சரியானவை போல தோன்றினாலும் .அடிப்படையில் தவறனாவை. விவாதப் பொருளாக்க தேவையற்றவை

சர்வதேச பிறை என்ற சொன்னவர்களே பிறகு உள்ளூர் பிறைக்கு திரும்பி வந்தார்கள்.
தொப்பி போடுவதை சர்ச்சை ஆக்கியவர் எப்போதும் தொப்பி அணிந்தே இருந்தார்.
குர் ஆன் ஹதீஸ் போதும் என்றவர்கள் தங்களூடைய ஆய்வையும் முன் வைத்தார்கள். மட்டுமல்ல. குர் ஆனிலும் ஹதீஸிலும்  கூட சமுதாயம் இது வரை சந்திக்காத சர்ச்சையை உருவாக்கினார்கள்.

சிந்தித்துப்பாருங்கள்

அவசியமின்றி நேர்மையின்றி உருவாக்கப்பட்ட  இத்தகைய கருத்துக்களால் எவ்வளவு குழப்பங்களும் சச்சரவுகளும் சமூகத்தில் உருவாக்கப்பட்டு விட்டன. ?

மார்க்கத்தில் மட்டுமல்ல. அரசியல் சமூகம் ஏன் குடும்பங்களில் கூட குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துக்கள் உருவாக்கப்படும்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகிய ஆதித்யநாத் தாஜ்மஹாலை சுற்றுலாத் தலமல்ல என்று கூறினார். அவரது தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டது. அதில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம்பெறவில்லை. தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.

என்ன அபத்தமான வாதம் ?

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முழுவதும் வெள்ளை சலவைக்கல்லால் கட்டப்பட்டது. தாஜ்மஹாலுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வெளிநாட்டு தலைவர்கள் வருகிற போது அங்கு நின்று புகைப்படும் எடுப்பதை பெருமையாக கருதுகின்றனர்.
முகலாய மன்னர்களும் அதற்கு முந்தைய முஸ்லிம் மன்னர்களும் உருவாக்கிய கட்டிடங்கள் மிக நேர்த்தியாக எழுதப்பட்ட திருக்குர் ஆனிய வசனங்களை உள்ளடக்கியவை. தாஜ் மாஹாலிலும் அப்படித்தான்.

சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து இது  "இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்.


தேவைய்ற்று உருவாக்கப்படும் இத்தகைய குழப்பங்களை அடையாளம் கண்டு அனைத்து சமுதாய மக்களும் விலகி நிற்கவேண்டும்.  

விலகி நிற்காவிட்டால் பெரும் பாதிப்புக்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த பாதிப்புக்கள் விலக நெடுநாள் ஆகக் கூடும்.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் ஏற்படும் குழப்பங்களை குறித்து மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله Mohamed peace be upon him.svg قال :(( بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا)

குழப்பங்களையே இஸ்லாமின் முடிவு என பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

وعن كرز بن علقمة قال قال أعرابي يا رسول الله هل للإسلام من منتهى فقال  نعم أيما أهل بيت من العرب والعجم أراد الله بهم خيرا أدخل عليهم الاسلام ثم تقع الفتن كأنها الظلل)

வாழ்வதை விட சாவதே மேல் எனத் தோன்றும்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ عَلَى الْقَبْر فَيَتَمَرَّغَ عَلَيْهِ وَيَقُولَ يَا لَيْتَنِي كُنْتُ مَكَانَ صَاحِبِ هَذَا الْقَبْرِ، وَلَيْسَ بِهِ الدّيْنُ إلاَ الْبَلاَءُ}.متفق عليه

وعن حذيفة رضي الله عنه: أنه قال: "ليأتين عليكم زمان يتمنى الرجل فيه الموت من غير فقر".

وعن أبي سلمة بن عبد الرحمن؛ قال: "عدت أبا هريرة، فسندته إلى صدري، ثم قلت: اللهم اشف أبا هريرة ! فقال: اللهم لا ترجعها. ثم قال: إن استطعت يا أبا سلمة أن تموت؛ فمت. فقلت: يا أبا هريرة ! إنا لنحب الحياة.فقال: والذي نفس أبي هريرة بيده؛ ليأتين على العلماء زمان الموت أحب إلى أحدهم من الذهب الأحمر، ليأتين أحدكم قبر أخيه، فيقول: ليتني مكانه

தீனின் வழி நடப்பது தீயின் வழி நடப்பது போல சிரமமாக மாறிவிடும்.

وقال عند الترمذي : (يأتي على الناس زمان القابض على دينه كالقابض على الجمر) فمن تمسك بالسنة حقاً فأول من يعاديه أمه وأبوه وأهله.

இவ்வாறு உருவாக்கப்படும் குழப்பங்களால் கொலைகள் சாதாரணமாகி விடும்

قال النبي صلى الله عليه وسلم: (إن بين يدي الساعة لأياماً ينزل فيها الجهل، ويرفع فيها العلم، ويكثر فيها الهرج). والهرج القتل.

குழப்பமான கருத்துக்கள் மதுவை விட வேகமாக மக்களின் மூளை கெடுத்து விடும்.

عن حذيفة - رضي الله عنه - قال: ما الخمر صرفاً  بأذهب بعقول الرجال من الفتنة.    حلية الأولياء

குழப்பத்திற்கு ஆட்பட்டு விட்டோமா என்பதை கண்டறியும் வழி

இதுவரை சரி எனக் கருதி வந்ததை இப்போது தவறாக நினைக்கிறோமா ? அல்லது அதற்கு மாற்றமாக நடக்கிறதா ? குழப்பம் குடி கொண்டு விட்டது எனறு பொருள்

عن حذيفة - رضي الله عنه - قال: إن الفتنة تعرض على القلوب، فأي قلب أشربها: نكتت فيه نكتة سوداء، فإن أنكرها: نكتت فيه نكتة بيضاء؛ فمن أحب منكم أن يعلم: أصابته الفتنة، أم لا؛ فلينظر: فإن كان يرى حراماً ما كان يراه حلالاً، أو يرى حلالاً ما كان يراه حراماً: فقد أصابته الفتنة   .حلية الأولياء

நம்மில் பலரும் சாதாரணமாக குடும்பத்தில் மஹல்லாவில் ஜமாத்துக்களில் அமைப்புக்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை கசிய விடுகிறோம்.
எச்சரிக்கை !
குழப்பத்தை ஏற்படுத்தும் செய்திகளை உருவாக்க கூடாது.
அதன் விளைவுகள் ஏற்படுத்தும் பாரதூரமான விளைவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும். அதனால் ஏற்படும் தீமைகள் ஒவ்வொன்றிற்கும் பொறுப்பேற்க நேரிடும் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டும்
குழப்பமான கால கட்டத்தில் மக்கள் என்ன செய்ய வேண்டும் ?
1.   சிக்கிக் கொள்ளாமல் தவிர்த்தல்
أبي هريرة - رضِي الله عنه - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((ستكون فِتَنٌ، القاعد فيها خيرٌ من القائم، والقائم فيها خيرٌ من الماشي، والماشي فيها خيرٌ من الساعي، ومَن يُشرِف لها تَستَشرِفْه، ومَن وجد ملجَأً أو مَعاذًا فليَعُذْ به))؛ رواه الشيخان.
குழப்பமான காலகட்டத்தில் அதிலிருந்து விலகி நிற்பது எனும் பாடத்தில்-: "باب التَّعَرُّب في الفتنة".
  இமாம் புகாரி ரஹ் ஒரு செய்தியை பதிவு செய்கிறார்கள். பிரபலமான சஹாபி மதீனாவை விட்டே வெளியேறினார். மரணத்திற்காக மட்டுமே திரும்பி வந்தார்;
وعن يزيد بن أبي عُبَيد قال: لما قُتِل عثمان بن عفَّان خرج سلَمة بن الأَكْوَع إلى الربذة، وتزوَّج هناك امرأةً، وولدت له أولادًا، فلم يزل بها حتى قبل أن يموت بليالٍ نزل المدينة"؛ رواه البخاري

இரு கண்ணுள்ள வாளை கொடுங்கள் என்றார் சஃது ரலி

سعدُ بن أبي وقَّاص - رضِي الله عنه - ذهَب في غنَمِه وترَك الناس يَموجُون في الفِتَن، فجاءَه ابنُه عمر - وكان ممَّن انغَمَس في الفِتَن - فلمَّا رآه سعدٌ قال: أعوذ بالله من شرِّ هذا الراكب، فنزل فقال لأبيه: أنَزلتَ في إبلك وغنَمِك وتركتَ الناس يَتنازَعون الملك بينهم؟ فضرب سعدٌ في صدرِه فقال: اسكت، سمعت رسول الله - صلَّى الله عليه وسلَّم - يقول: ((إن الله يحبُّ العبدَ التقيَّ الغنيَّ الخفيَّ))؛ رواه مسلم.

وجاءه مَرَّة أهل فتنة فدعَوْه - رضِي الله عنه - إلى الخروج معهم، فأبى عليهم سعدٌ وقال: لا، إلا أن تُعطُوني سيفًا له عينان بصيرتان، ولسان ينطق بالكافر فأقتله، وبالمؤمن فأكف عنه

ஒரு தாபிஈயின் முடிவு =
குழப்பமான எந்தச் செய்திக்கு இடம் தராத வாழ்க்கை

مُطَرِّفُ بن عبدالله تلميذ عِمران بن حُصَيْن - رضِي الله عنهم أجمعين - وقد نُقِل عنه أعاجيب في تَوَقِّي الفِتَن والحَذَر منها، قال قتادة - رحمه الله تعالى -: "كان مُطَرِّف إذا كانت الفتنة نهى عنها وهرب".

وكان يُمسِك لسانَه عن الخوض فيها، ويُغلِق آذانَه عن الاستِماع إلى أخبارها، فنَجَّاه الله - تعالى - بوَرَعِه وتَقواه، قال - رحمه الله تعالى -: "لَبِثْتُ في فتنة ابن الزبير تِسعًا أو سبعًا ما أُخبِرت فيها بخبر، ولا استَخبَرت فيها عن خبر"، وسُئِل أخوه يزيد: "ما كان مُطرِّف يصنع إذا هاجَ في الناس هَيْجٌ؟ قال: كان يَلزَم قَعْرَ بيته، ولا يقرب لهم جمعة ولا جماعة حتى يَنجَلِي لهم عمَّا انجلَتْ".


குழப்பமான கருத்துக்க்காக சண்டை - மோதலில் ஈடுபடுவதை தவிரக்க வேண்டும்
حديث ثوبان - رضِي الله عنه - أن النبي - صلَّى الله عليه وسلَّم - قال: ((إذا وُضِع السيفُ في أمَّتي لَم يُرفَع عنها إلى يوم القيامة))؛ رواه الترمذي، وقال: حسن صحيح.

2.       முஸ்லிம்களின் ஜமாத்தைப் பின்பற்றி நடத்தல்
 كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير، وكنت أسأله عن الشر مخافة أن يدركني، فقلت: يا رسول الله! إنا كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد الخير شر؟ قال:نعمفقلت: فهل بعد هذا الشر من خير؟ قالنعم وفيه دخَنٌ، قال قلت: وما دخَنُهُ؟ قالقومٌ يستنُّونَ بغيرِ سُنتي ويَهْدونَ بغير هدْيِي تعرفُ منهُمْ وتُنكرُ، فقلت هل بعد ذلك الخير من شر؟ قالنعم , فتنةٌ عمياءٌ , دُعاةٌ على أبوابِ جهنم، مَنْ أجابَهُمْ إليها قذفوهُ فيها.فقلت: يا رسول الله ! صِفْهُمْ لنا، قالنعم، قوم من جَلدتِنا ويتكلمونَ بألسنتِنا، فقلت: يا رسول الله، وما تأمرني إن أدركت ذلك، قال : تلزَمُ جماعةَ المسلمين وإمامِهِمْ,  قلت فإن لم يكن لهم جماعة ولا إمام؟ قالفاعتزلْ تلك الفرقُ كلِّها، ولوْ أنْ تعَضَّ على أصلِ الشجرةِ حتى يُدركُكَ الموتُ وأنتَ على ذلك

3.   குழப்பங்களில் சிக்கி விடக் கூடாது என்று துஆ கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அத்தஹிய்யத்தில் நாம் கேட்கும் துஆ இது.
كان النبي  يقول في الصلاة بعد التحيات ( أعوذبالله من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال )

குழப்ப வாதிகளை அடையாளும் காணும் வழி

இது தான் மிகவும் சிக்கலானது என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் இது எளிதானது. இதயத்தையும் விழிகளையும் விசாலமாக தெரிந்து வைத்திருந்தாலே போது.  

ü  தங்களை அதிகப்படியாக தூய்மைப் படுத்திக் கொள்வோர்
ü  கருத்துக்களின் பேரில் பிரச்சனைகளை உண்டுபண்ணுவர்
ü  மக்களை பிரித்துவிடுவர்

ü     وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ (11أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ 
ü     قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي ۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي 
ü     وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ

ü  சபர் மாதம் நமக்கு தருகிற பாடங்களில் மிக முக்கியமானது. மக்களில் சிலர்தேவையற்ற குழப்பங்களை உருக்குவார்கள். உம்மத் அவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
ü  குழப்பங்களுக்கு ஆட்படுவதை ஜிஹாதை போல கருதக் கூடாது.
ü  குழப்பங்களிலிருந்து விலகி நிற்கனும்
ü  ஜமாத்துக்களை பின்பற்றி நிற்கனும்.
ü  புதிய புதிய ஜமாத்துக்களை உருவாக்கி கொண்டிருக்க கூடாது..

இது அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய மிக எச்சரிக்கையான செய்தி. அதனால் தான் அத்தஹிய்யாத்து துஆ வில் இதை ஓதுகிறோம். 
ஓதுவதை கருத்தில் நிறுத்திக் கொள்வோம்.

அல்லாஹ் கிருபை செய்வானாக!

No comments:

Post a Comment