வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 23, 2017

பெருமானார் (ஸல்) அவர்களை நேசிக்கும் வழிகள்

பெருமானாரை நேசிக்கும் வழிகள்
உலகம் முழுவதிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களது மீலாது மெளலிது வைபவங்கள் மிகச் சிறப்பாக நடை பெற்று வருகின்றன.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை நேசிக்க வேண்டியது நமது ஈமானிய கடமை
رواه أبو هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال: لا يؤمن أحدكم حتى أكونَ أحبَّ إليه من والده وولده، والناس أجمعين))
அந்த நேசத்தை நாம் எப்படி வெளிப்படுத்துவது ?
சிலர் சொல்கிறார்கள், நபியை நேசிப்பது நடி வழி நடப்பதே!
ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் தங்களது பேனர்களில் இப்படி வாசகம் எழுதிவைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
இது தவறான ஒரு விளக்கமாகும்.
அலுவலகத்தில் அதிகாரிக்கு உழியர்கள் கட்டுப்படுவார்கள். தொழில் செய்யும் இடத்தில் முதலாளிக்கு வேலைக்காரர்கள் கட்டுப்படுவார்கள், குடும்பத்தில் மற்ற அமைப்புக்களில் தலைவருக்கு கீழே உள்ளவர்கள் கட்டுப்படுவார்கள்.
ஊழியர்களோ வேலைக்காரர்களோ தொண்டர்களோ விருப்பம் இல்லாமலும் மரியாதை இல்லாமலும் கூட மேலுள்ளவர்களுக்கு கட்டுப்படலாம்.
பெருமானாருக்கு கட்டுப்படுதல் என்பது இந்த வகை சார்ந்த்து அல்ல. அது முழுக்க அன்பு மரியாதை பக்தி சார்ந்த கட்டுப்பாடாகும். அத்தகைய கட்டுப்பாடு வேணும் எனில் அதற்கு முன்னேற்பாடான சில அம்சங்களும் அவசியமாகும்.  
அதனால் தான் நபியை நேசிப்பது என்பதற்கு 10 வழிமுறைகளை நமது முன்னோர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே ! இந்த அடிப்படையில் இருந்தால் தான் பெருமானாரின் மீதான கட்டுப்பாடும் உண்மையாக இருக்கும். பெருமானாரின் மீதான் நேசமும் உண்மையாக இருக்கும்.
பெருமானார் (ஸல்) அவர்களின் நேசிக்கும் வழிமுறைகள்
1.   توقيره கண்ணியப் படுத்துதல்
பெருமானார் (ஸ்ல்) அவர்களைப் பற்றிய முழு மரியாதையை மனதுக்குள் தேக்கி வைக்க வேணும்.
அவர்களை அழைக்கிற போது யாரஸூல்ல்லாஹ் யா நபிய்யல்லாஹ் யா ஹபீபல்லாஹ் யா ரஹ்மதன் லில் ஆலமீன்  என்று அழைக்கும் பழக்கம் வரவேண்டும்
நமது குழந்தைகளுக்கும் பெருமானாரை இப்படி அழைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அவ்ரங்கசீப் முஹம்மது என்ற பெயரைக் கூட ஒளு இல்லாமல் உச்சரிக்க மாட்டார். அவரது பணியாளர் குல் முஹம்மதை ஒளு இல்லாவிட்டால் குல் என்று கூப்பிடுவார். பணியாளர் உடனே ஒளு செய்ய தண்ணீர் கொண்டு செல்வார்
இன்று நம்மில் பலர் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்கும் பெருமிதமாகவும் படோபடமாகவும் செல்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொல்ல பயன்படுத்த வேண்டிய மரியாதையான வார்த்தைகளை கூட அறியாதவர்களாக இருக்கிறோம்.
பெருமானார் (ஸல்) அவர்களை கண்ணியமாக அழைக்கும் சொற்றொடர்களை நாபகப்படுத்திக் கொள்வோமாக!
2.   عدم التقدم بين يديه  وعدم الصوت عنده
பெருமானார் ஸல்) அவர்களது முன்னிலையில் அலட்சியமாக அவமரியாதையாக நடந்து கொள்ளக் கூடாது.
இப்போதும் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு செல்லும் போது இந்த மரியாதையை கவனமாக நினைவில் வைக்க வேண்டும்.
ஒரு மனிதர் மஸ்ஜிதுன்னபவியில் ஜியாரத் செய்து விட்டு வெளியே வரும் போது தன்னுடைய செருப்பை கையிலிருந்து பொத்தென்று சப்தம் வர கீழே போட்டார். அப்போது அங்கிருந்த ஒரு ஆலிம் சொன்னார். இப்படி செய்யாதீர் இது மரியாதைக்குறைவு, பெருமானாரின் சபைதில் சப்தத்தை எழுப்ப வேண்டாம் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான் என்றார்
பெருமானார் (ஸல்) அவர்கள் விவகாரத்தில் எந்த ஒரு வார்த்தையும் அவமரியாதையாக பேசிவிடக் கூடாது. எந்த ஒரு செயலையும் அவமரியாதையாக செய்து விடக் கூடாது.
இன்று முஸ்லிம் என்ற பெயரில் சிலர் பெருமானார் (ஸல்) அவர்கள் யுத்த களங்களில் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும் காம உணர்வினால் பெருமானார் (ஸல்) அவர்கள் ஆயிஷா அம்மாவை திருமணம் செய்தார்கள் என்றும் பேசுகிற அளவிற்கு துணிந்து விட்டார்கள். (நவூது பில்லாஹ்)
இத்தக்கய தீய சக்திகளை விட்டு முழு அளவில் விலகி நிற்க வேண்டியது நபி (ஸல்) அவர்களை நேசிக்கிற அனைவரது கடமையாகும்/


3.   إكرام مشاهده وامكنته من مكة والمدينة
நபி (ஸல்) அவர்களோடு தொடபுடைய அனைத்தையும் மதிக்க வேண்டும்.

மஜ்னூன் ஒரு நாயின் காலை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். இது லைலாவின் தெருவில் நடந்து வந்தது என்றான்.
இது எப்படி எதார்த்தமானதோ இதே போன்ற அனைத்து வழிகளிலும் பெருமானார் (ஸல்)அவர்களோடு தொடர்புடைய வற்றை மதிக்க வேண்டும் .

·      كان مالك لا يركب بالمدينة دابة وكان يقول أستحي من الله أن أطأ تربة فيها رسول الله بحافر دابة
·        பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வில்லை இமாம் மாலிக் ஒளு இல்லாமல் தொட்டதில்லை.
مامست القوس بيدي إلا علي طهارة منذ بلغني ان النبي اخذ القوس بيده
·        இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் மதீனாவின் தெருக்களுக்கு நடுவே நடந்து செல்ல மாட்டார். ஓரத்தில் நடந்து செல்வார்
·        அன்வர்ஷா கஷ்மீரீ ரஹ் ஒளுவில்லாமல் ஹதீஸ் நூல்களை தொடமாட்டார்.
·        தேவ்பந்தின் ஸ்தாபர் காஸீம் நாநூத்தவீ ஆபாரே அலியில் அதாவது மதீனாவின் எல்லையில் இருக்கிற துல்ஹுலைபாவில்  செருப்பை கழற்றி விட்டு விடுவார்.
நம்முடைய முன்னோர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு தொடர்புடைய விசயங்களை மதிப்பதில் அளவு கடந்து அக்கறை செலுத்தியதற்கு பன்னூற்றுக்கணக்கான உதாரணங்கள் உண்டு,

4.   حب الصحابة واهل بيته
பெருமானாரை நேசிப்பது எனபது ஒரு பெரும் சங்கிலித் தொடர் அம்சமாகும். அவர்களை நேசிப்பது தீனின் ஆதர சுருதியுமாகும்.

·        لكل شيء أساس وأساس الإسلام حب أصحاب رسول الله وحب أهل بيته
சஹாபாக்களின் பெருமையை பறைசாற்றுவதிலும் அவர்களது பெருமையை காப்பாற்றுவதிலும் நபி (ஸல்) அவர்கள் ஏராளமான அறிவுரைகளை சமுதாயத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்
அவர்களில் யாராவாது தீங்கிழைத்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்றார்கள்.
روى الشيخان عن أنس رضي الله تعالى عنه أنه- عليه الصلاة والسلام- قال في الأنصار «اعفوا من مسيئهم، واقبلوا من محسنهم» وللبخاري «أوصي الخليفة من بعدي بالمهاجرين والأنصار أن يقبل من محسنهم، ويتجاوز عن مسيئهم» .

இப்போதும் நாம் மிக எச்சரிக்கையாக அனுக வேண்டிய விசயம் இது. பெருமானாரின் தோழர்களை சகட்டு மேனிக்கு மரியாதையற்று பேசும் காலம் இது.
ஈமானை பறி கொடுக்க இத்தகைய ஒரு பழக்கம் போது.

وقال عبد الله بن المبارك: خصلتان من كانتا فيه نجا، [الصدق وحب أصحاب محمّد

5.  الآقتداء
மேலுள்ள அம்சங்களில் பெருமானார் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அடிப்படையில் பெருமானார பின்பற்ற வேண்டும்
இத்தகைய பின்பற்றுதலையே மார்க்கம் எதிர்பார்க்கிறது.
அதுவே உண்மையான பின்பற்றுதாலக இருக்கும்.

இத்தக்கய அன்பின் வெளிப்பாடகவே சஹாபாக்கள் பெருமானாரைப் பின்பற்றினார்கள்

மிக நன்றாக யோசித்துப் பார்த்து தெளிவடைய வேண்டிய விசய்ம் இது.

சஹாபாக்களுடைய பின்பற்றுதலை கவனியுங்கள் அதில் நேசத்தின் உச்சத்தை காண முடியும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு செல்லும் வழியில் ஒரு இடத்தில்  பாதை மாறிச் சென்றார்கள். சற்று தூரம் சென்றது பாதை இது வல்ல என்று அறிந்து திரும்பினார்கள். அப்போது அவர்களது ஒட்டகம் திரும்பிய இடத்தில் இருந்த ஒரு மரத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் தலைப்பாகை மாட்டியது. அதை எடுத்து  மீண்டும் மாட்டிக் கொண்டு சரியான பாதையில் நடந்தார்கள்.
இதைக் கண்ட இப்னு உமர் ரலி அவர்கள் அதற்கு பின்னர் எப்போது மக்காவிற்கு போனாலும் அந்த வழியில் சென்று அந்த மரக்கிளையில் தனது தலைப்பாகையை மாட்டி பிறகு அதை எடுத்து அணிந்து கொண்டு கிளம்புவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வகிடு எடுத்து சீவும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். ஒரு கருப்பின சஹாபி  அவரது தலை முடி சுருட்டை சுருட்டையாக இருந்த்து, அவரால் வகிடு எடுக்க முடியவில்லை. அவர்  தனத் தலையில் இரும்பை சூடாக்கி வாங்கு எடுத்துக் கொண்டார்.

இதில் பின்பற்றுதலின் ஆழத்தை கவனியுங்கள்! இத்தகைய பின்பற்றுதல் என்பது முழுமையான நேசத்தின் அடிப்படையிலேயே சாத்தியமாகும்.

எனவே நபியை நேசிப்பது என்பது எந்த வகையில் எல்லாம் நேசிக்க வேண்டுமோ அந்த வழிகளில் எல்லாம் நேசிப்பதாகும் .எடுத்த எடுப்பில் நபியை பின்பற்றுவதுதான் என்று சொல்லக் கூடாது.
6.  بغض من ابغض الله ورسوله

أم حبيبة  انكرت فراش رسول الله لآبيها

பெருமானார் (ஸல்) அவர்களை அவமதிப்பவர்கள் சகித்துக் கொள்ளமுடியாது
உம்மத் இந்த விசய்த்தில் இன்றும் உறுதியாகவே இருக்கிறது.

7.  كثرة ذكر له

من احب شيئا كثر ذكره
நாம் நமது அன்றாட வாழ்வில் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய பேச்சை அதிகரிக்க வேண்டும்.
வீடுகளில் அலுவலகங்களில் பொது இடங்களில் சகஜ்மாக நபி (ஸல்) அவர்களை பற்றிய செய்திகளை பேசுகிற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு எதார்த்தம் என்ன வென்றால் நாம் நமது நபி (ஸல்) அவர்களது பெயரைக் கூட சரியாக முறையாக உச்சரிக்க கூட தெரியாதவர்களாக இருக்கிறோ. நமது பிள்ளைகளோ அதை விட மோசமாக இருக்கிறார்கள்.

அறிந்து கொள்ளுங்கள் ! நபியை நேசிப்பதன் அடையாளம் அவர்களைப் பற்றிய பேச்சுக்களை அதிகம் பேசுவதாகும்.

8.  كثرة شوقه إلي لقائه

வயது முதிர்ந்த் ஒரு சஹாபி பள்ளிக்கு வருவார் ஒரு ஒரமாக உட்காந்து இருப்பார் எழுந்து சென்று விடுவார்.
பெருமானார் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். வீட்டில் மன அமைதியில்லாமல் இருக்கிற போது இங்கு வந்து உட்கார்கிறேன். தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனம் அமைதி அடைகிறது எழுந்து சென்று விடுகிறேன்.

காலையில் எழுந்துதும் பெருமானாரைத் தான் முதலில் பார்ப்பேன் என சத்தியம் செய்திருந்தார்கள் சில சஹாபிகள்

நாம் கனவிலும் நாளை மறுமையிலும் பெருமானார் (ஸல்) அவர்களை காண ஆசைப்பட வேண்டும்.
சஹாபாக்கள் இதற்காக மரணத்திற்கு ஆசைப்பட்டார்கள்/

பிலால் ரலி அவர்கள் சகராத்தி; இருக்கும்  போது அவருடை  மனைவி  واحزناه என்றார்.
பிலால் ரலி அவர்கள் கூறினார்கள். எனக்கேற்பட்ட மகிழ்சியே! நாளை நான் முஹம்மது (ஸல்) அவர்களை  சந்திப்ப்பேனே! என்றார்கள்.  
وا طرباه غدا ألقي محمدا وحزبه


9.  الشفقة علي الآمة والسعي في مصالحهم
பெருமானார் (ஸல்) அவர்கள் உம்மத்தின் மீது பெருங்கருணை கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களின் நேசிப்பதன் ஒரு அடையாளமாக அவர்களது உம்மத்தின் மீது நாம் கருணை காட்ட வேண்டும்

கந்தூரி வைபவம் , நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் என மீலாது விழாக்களை அலங்கரிக்கும் நிகழ்ச்சிகள் இந்த அடிப்படையில் உருவானவையே

நமது மீலாது விழாக்கள் இந்த அடிப்படையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெட்டிச் செலவுகளை விட உதவும் கரங்களே பெருமானார் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அடையாளங்களாகும்.

எந்த உறவின் தொடர்பும் இல்லாதவர்களுக்கு, பணம் கொடுக்கல் வாங்கல் இல்லாதவர்களுக்கு உதவுகிறவர்களை பார்த்து நபிமார்கள் பெருமைப் படுகிறார்கள் என்றார்கள் பெருமானார் (ஸல்)

وقد روى عمر بن الخطاب فيما رواه أبو داود عن رسول الله صلى الله عليه وسلم أنه قال :
(( إن من عباد الله لأُناساً ما هم بأنبياء ولا شهداء ، يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله . قالوا : يا رسول الله تخبرنا من هُم ؟ قال عليه الصلاة والسلام: قومٌ تحابّوا بروح الله على غير أرحامٍ بينهم ، ولا أموالٍ يتعاطونها ، فوالله إن وجوههم لنور ، وإنهم لعلى نور ، لا يخافون إذا خاف الناس ، ولا يحزنون إذا حزن الناس))

10.                كثرة الصلوة والسلام عليه

 நபி (ஸல்) அவர்களை நேசிப்பதன் மிக எதார்த்தமான எல்லோருக்கும் வசதியான வழிமுறை சலவாத்து ஆகும்.

இது அல்லாஹ் உத்தரவிட்ட கடமையாகும்.
உபைய்யிப்னு கஃப் ரலி பெருமானாரிடம் கூறினார்
நான் நாளில் மூன்றில் ஒரு பங்கு உங்கள் மீது சலவாத்துச் சொல்கிறேன்.
பெருமானார் : இன்னும் அதிகரித்தால் நல்லது.
நான் சரிபாதிநாள் சலவாத் ஓதுகீறேன்.
பெருமானார் (இன்னும் அதிகரித்தால் நல்லது.)
நான் முழு நேரமும் சலவாத் ஓதுகிறேன்.

فقال أبي بن كعب : فقلت يا رسول الله إني أكثر الصلاة عليك فما أجعل لك من صلاتي ؟ قال : ما شئت قلت : الربع ؟ قال : ما شئت وإن زدت فهو خير . قلت : النصف ؟ قال : ما شئت وإن زدت فهو خير لك . قلت : الثلثين ؟ قال : ما شئت وإن زدت فهو خير . قلت : أجعل لك صلاتي كلها قال : إذا يكفي همك ويغفر ذنبك الراوي: أبي بن كعب - خلاصة الدرجة: حسن - المحدث: ابن حجر العسقلاني - المصدر: موافقة الخبر الخبر - الصفحة أو الرقم: 2/340 وحديث 71475 

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه قَالَ : ( إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ ، لا يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتَّى تُصَلِّيَ عَلَى نَبِيِّكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) . قال ابن كثير : إسناده جيد اهـ . وحسنه الألباني في صحيح الترمذي .

جاء من حديث أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله - صلى الله عليه وسلم -من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات. رواه الإمام أحمد (11587) والنسائي (1297)
عن عبد الله بن مسعود أن رسول الله - صلى الله عليه وسلم -قال أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة - قال الترمذي: هذا حديث حسن غريب - رواه الترمذي (484) بإسناد ضعيف.

அலி ரலி கூறினார்கள்

والله لــــولا مــا ذكـــــر الله ورســـوله مـن فضــــل التســـبيح والتكبيـــــر والتوحيـــــد لجعــلت كـــل أنفاســــي صـــلاة علـــى رســـول الله

சலவாத்துச் சொல்லும் சில முக்கியை இடங்கள்

·       பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
·       அத்தஹிய்யாத்தில்
·       பள்ளிவாசலை பார்க்கும் போது
·       கடை வீதிக்குள் நுழைய்ம் போது
·       வீட்டிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும்
·       மறதி ஏற்படும் போது
·       மழைவரும் போது
·       கல்வியைத் தொடங்கும் போது
·       கல்வியை முடிக்கும் போது
·       சொற்பொழிவை தொடங்கும் போது
·       சகோதரர்களை சந்திக்கும் போது
·       விடைபெறும் போது
·       ஹதீஸ் பாடங்களின் போது
·       பெருமானாரை நினைவு படுத்திக் கொள்ளும் போது
·       பெருமானார் காலத்து நினைவுகளை நினைவு கூறும் போது
·       மதீனாவிற்குள் நுழையும் போது
·       பெருமானாரின் ரவ்லாவை கடக்கும் போது

சலவாத்தின் பலன்கள்

·       إنها سبب لهداية المصلي وحياة قلبه
·       إنها سبب لزيادة المحبة
·       إنها سبب لقرب العبد ربه يوم القيامة
·       إنها  اداؤ لشئ خقه
·       إنها سبب كفاية الله عبده ما اهمه
·       إنها سبب إجابة الدعاء
·       إنها سبب زكوة وظهارة للمصلي
·       கஞ்சனாக மாட்டான்
·       மறுமையில் நஷ்டவாளியாக ஆகமாட்டான்
·       வானவர்களிடம் அவனது புகழ் பெருகும்
·       வாழ்விலும் நேரத்திலும் அல்லாஹ் பரக்கத்தை தருவான்
·       إنها سبب     لتثبيت قدم العبد علي الصراظ
·        إنها سبب لثقل كفة الميزان

மீலாது விழா நெருங்குகிறது. அதிகமதிகம் சலவாத்து சொல்வோம். குடும்பத்தாரை சலவாத்து சொல்ல உற்சாகப்படுத்துவோம்.
பெருமானாரின் மீது அன்பை வெளிப்படுத்தும் அனைத்து வழிகளிலும் அன்பை வெளிப்படுத்துவோம்.

அல்லாஹ் பெருமானாரின் ஷபாஅத்தைய்ம் அவர்களோடு சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தையும் நமக்கும் நமது குடும்பத்தார்களுக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நஸீபாக்குவானாக! ஆமீன்

2 comments:

  1. Anonymous1:16 AM

    ஆமீன்

    ReplyDelete
  2. ஒரே தலைப்பாக இல்லை

    ReplyDelete