ரமலானின் நிறைவு நாட்களில் இருக்கிறோம்.
ரமலான் வந்த போது
அதிக மகிழ்ச்சியடைந்தோம். உரிய மதிப்போடு ரமலானுக்கு வழியனுப்பி வைப்போம்.
ஒரு காரியத்தை
நிறைவு செய்வதில் அதிக கவனம் செலுத்துவது முஸ்லிம்களின் இயல்பாகும்.
தொடக்கத்திற்கு
அதிக முக்கியத்துவம் கொடுப்பது கிருத்துவர்களின் பழக்கம்
படைப்புக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லாஹ் படைக்கத்
தொடங்கினான்.
حديث ابن عباس أن اليهود أتت النبي صلى الله عليه
وسلم، فسألته عن خلق السماوات والأرض، فقال: «خلق الله عز وجل الأرض يوم الأحد
அந்த தொடக்க நாளை கிருத்துவர்கள் தங்களுடைய .பெருநாளாக ஆக்கிக் கொண்டார்கள். ஒபனிங்க் செர்மனி
என்பது அவர்களது கலாச்சாரத்தில் முக்கியமானது. அதனால் தான் இப்போதும் அவர்கள் எந்த
நிகழ்ச்சியின் தொடக்கத்தையும் பிரம்மாண்டமாக செய்கிறார்கள். பர்த் டே போன்ற கொண்டாட்டங்களில்
அவர்களுடைய ஈடுபாட்டையும் நாம் அறியலாம். ஒன்று தொடங்கும் போது அவர்கள் குதூகலிப்பார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
وإنما الأعمال بخواتيمها
والعاقبة للمتقين
கடைசி நிலை பற்றி கவனம் செலுத்துவது தக்வாவின்
அடையாளமாகும் என்பது இதனுடைய கருத்தாக அமையும்.
எனவே ரமலானுக்கு
விடை கொடுக்கும் இந்த பொழுதுகளை மிக கவனமாகவும் மரியாதையாகவும் பயன்படுத்துவோம்.
இந்த பொழுதுகளை
நாம் பயன்படுத்துகிற விதத்தில் தான் மொத்த ரமலானையும் நாம் எப்படி எதிர் கொண்டோம் என்பதும்
நமது ரமலான் எந்த தரத்தில் இருந்தது என்பதும் தீர்மாணமாகப் போகிறது.
பொதுவாக நம்மில்
சிலர் ரமலானின் தொடக்கத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தி விட்டு ரமலான் நிறைவடையும் போதும்
சோம்பலினாலும் பெருநாளுக்கு தயாராகிற முனைப்பினாலும் இந்த பொன்னான பொழுதுகளை அலட்சியம்
செய்துவிடுவதுண்டு. கடைத்தெருக்கலில் காலத்தை போக்கிவிடுவதுண்டு.
மக்களில் பலருக்கு
கடைசி நேரத்தில் காசு பணம் கையுக்கு வருகிறது. அவர்கள் அப்போதுதான் கடைகளுக்கு செல்ல
முடியும் என்றிருந்தாலும் அவர்களும் கூட ரமலானின் இறுதி நேரத்தின் மரியாதையை கருத்தில்
கொண்டு தேவைகளை விரைவாக நிறைவு செய்து விட்டு தமது ரமலானை அமல்களால நிறைக்க முயற்சிக்க
வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
லைலத்துல் கத்ரு.
ليلة القدر خير من الف شهر
அந்த இரவு நாம்
செய்கிற நற்செயல்களுக்கு அல்லாஹ் அதிகமதிகள் நற்கூலியை தருகிறான்.
வருட்த்தில் ஒரு
இரவிற்கு இந்த சிறப்பை வைத்த இறைவன், 360 இரவுகளில் தேடும் நிர்பந்தததை வைக்க வில்லை.
30 இரவுகளில் என்று அதை ஆக்கினான். அதை கூட பெருமானார் (ஸல்) அவர்கள் கடைசி 10 நாட்கள்
என்றார்கள். பிற்கு கடைசி 7 நாட்கள் என்றார்கள். இப்போது 23,25,27,29 என்ற நான்கு நாட்களுக்குள்
என்று அது குறிப்பிட்டு காட்டப் பட்டுவிட்டது.
மாஷா அல்லாஹ் லைலத்துல்
கத்ர் இரவை பெற்றுக் கொள்வதை அல்லாஹ்வும் பெருமானார் (ஸல்) அவர்களும் மிக இலகுவானதாக
ஆக்கி விட்டார்கள். அந்த இரவில் துஆக்கள் அங்கீகரிக்கப்படுகிற ஒரு நேரம் இருக்கிறது.
அதில் நாம் என்ன துஆ கேட்டாலும் நிச்சயமக அல்லாஹ் தந்துவிடுவான்.
அந்த நேரத்தை இரவில்
எந்த நேரத்தில் தேடுவது , இரவு முழுவதும் விழித்திருக்க முடியாதே என்று நாம் யோசிக்கலாம்.
நம்முடைய முன்னோர்கள்
அதிலும் ஒரு வழி கண்டு சொன்னார்கள்.
பஜ்ரு உதயமாகும்
வரை என்று அல்லாஹ் குர் ஆனில் கூறியிருக்கிறான். எனவே இந்த 4 இரவுகளிலும் உள்ள அந்த
கடைசிப் பொழுதை நாம் பக்தியோடு துஆ விலும் நல் அமல்களில் கழிப்போம். இன்ஷா அல்லாஹ்
நமக்கு லைலத்துல் கத்ரின் நன்மை கிடைத்து விடும்.
லைலத்துல் கதிருடைய
புனிதம் மிக்கா இரவுகளில் ஊர் சுற்றுவதிலும், விளையாட்டாக பொழுதை கழிப்பதிலும் மோட்டார்
சைக்கிள்களில் வீலிங்க் செய்வதையும் குறைத்துக் கொண்டு நம்முடைய இளைஞர்கள் இந்த இரவை
பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள் எனில் நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள்பார்வை அவர்கள்
மீது விழும் என்பதில் சந்தேகமில்லை. பள்ளிவாசலில் குழுமுகிற இளைஞர்கள் கூட இந்த மதிப்பு
மிகு நேரத்தை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் கழித்து விடுகிறார்கள். அதை விடுத்து
திருக்குர் ஆனை கொஞ்ச நேரம் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது அதன் பொருளை படித்துக் கொண்டிருந்தால்
குறைந்த பட்சம் கைகளை ஏந்தி துஆ செய்து கொண்டிருந்தால் அது லைலைத்துக்கத்ரை தேடிக்
கொள்ளும் சிறப்பான முயற்சியாக இருக்கும்.
இன்றைய இளைஞர்களுக்கு
நேரத்தை வீணடிப்பதின் பாதிப்பு எப்படிப் படிட்டது என்று அதிகமாக விளக்கிச் சொல்ல தேவையில்லை.
ஒரு அரியரில் விட்டு விட்டால் இன்னொரு அரியரில் பிடித்துக் கொள்ளலாம் என்பது போன்ற
விசயமல்ல இது. எனவே அனைத்து தரப்பாரும் லைலத்துல் கத்ரை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும். அல்லாஹ் கிருபை செய்வானாக!
இந்த இட்த்தில்
இன்னொரு செய்தியையும் குறிப்பிட்டாக வேண்டும்.
தற்காலத்தில் இரவுத்தொழுகை
என்ற பெயரில் ஜமாத்தாக பள்ளிவாசலில் தொழுகைக்கு ஏற்பாடு செய்வதும் சஹர் உணவிற்கான ஏற்பாடுகளை
செய்வதும் ஏதோ மிக சிறந்த நல் அமல் என்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டு வருகிறது.
சில ஊர்களில் ஆங்காங்கே
இருந்த நடை முறை இப்போது ஒரு இட்த்தை தொட்டு இன்னொரு இடம் என்ற வகையில் பரவி வருகிறது.
என்ன நம்முடைய மஹல்லாவில் கியாமுல்லைல ஏற்பாடு இல்லையா ? சஹர் ஏற்பாடு செய்ய வில்லையா
என்று கேட்கிற பொதுமக்கள் காரணமாக ஆலிம்களும் ஜமாத்துக்களின் நிர்வாகிகளும் இதில் கவனம்
செலுத்த வேண்டிய நிர்பந்த்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இது மாதிரியான
ஏற்படுகளில் கூட சில வேளைகளில் லைலத்துல் கத்ரின் நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள
முடியாது போகிறது.
இந்த இடத்தில்
மிக உறுதியான ஒரு கருத்தை நன்மையை நாடுகிறவர்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில்
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இதில் யாரையும் குறை சொல்வது நிச்சயமாக நோக்கமில்லை.
மார்க்கத்தின் எதார்த்த்தை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது நோக்கமாகும்.
நபிலான தொழுகைகள்
அல்லாஹ்வுக்கும் நமக்கு இடையில் உள்ள ரகசியமாகு, அதை தனிமையில் தொழுவதும் ரகசியமாக
செய்வதும் சிறப்பாகும். நம்முடைய முன்னோர்களில் பலர் தங்களுடைய மனைவியருக்கு கூட தெரிந்து
விடா வண்ணம் தஹஜ்ஜுத் தொழுகையில் ஈடுபடுவார்கள் என்று தான் நமது முன்னோர்களின் வரலாறு
கூறுகிறது.
ஹனபீ சட்டப் படி
கிரகண தொழுகை, தராவீஹ் தொழுகையை தவிர மற்ற தொழுகைகளை ஜமாத்தாக தொழுக அழைப்பு விடுத்து
தொழுவதில் ஆட்சேபனை (கராஹத்) இருக்கிறது.
ஷாபி மத்ஹபிலும்
இது வரவேற்பிற்குரிய செயல் அல்ல; ஏதேச்சையாக ஒரு இடத்தில் மக்கள் கூடுகிறார்கள். அவர்கள்
ஜமாத்தாக தொழுது கொண்டார்கள் என்றால் சரி. இத்தகைய தொழுகைக்காக போஸ்டர் அடித்து நோட்டீஸ்
விநியோகித்து பரபரப்பாக்குவது அவ்வளவாக விரும்பத்தக்கது அல்ல என்பதே மார்க்கமாகும்.
பெரும்பாலும் இவ்வாறு
நாம் புதிதான காரியங்களில் அக்கறை செலுத்தும் போது வழமையான அதை விட சிறப்பான நற்செயல்களை
மக்கள் தவற விட்டு விடுவார்கள் என்பது அறிஞர்களின் கருத்தாகும். இப்போது கூட ரமலானின்
தராவீஹ் தொழுகையில் கவனம் குறைந்து போய் கியாமுல்லைல் என்ற தொழுகையில் கவனம் அதிகரிப்பதை
பார்க்கிறோம்.
பொதுவாக கியாமுல்லைல்
என்ற வார்த்தையே கூட இரவுகளில் விழித்திருப்பதற்கு சொல்லப்படுமே தவிர குறிப்பிட்ட தொழுகையை
குறிப்பிடுவது அல்ல. இரவின் சிறப்பான தொழுகையை தஹஜ்ஜுத் தொழுகை என்று குறிப்பிடுவதே
இஸ்லாமிய மரபாகும். தஹஜ்ஜுத் வருட்த்தின் எல்லா நாளும் இருக்கிறது. ரமலானில் மட்டுமோ
அல்லது ஒற்றைப்படைகளில் மட்டுமோ அல்ல.
வீட்டில் தொழுது கொள்ளலாம் என்றால் நடக்காது. இப்படி ஜமாத்தாக
தொழுதால் பலரும் தொழுவார்கள் என்ற ஆர்வமூட்டுதல் என்ற காரணத்திற்காக மட்டுமே இத்தகைய
ஜமாத்து தொழுகைகளுக்கான அழைப்புக்களும் சஹர் ஏற்பாடுகளும் நடக்கின்றன.
நாம் இதை புரிந்து
கொண்டு லைலத்துல் கத்ரை தேவையற்ற பரபரப்பில் கழித்து விடாமல் பரீட்சைக்கு தயாரகிற ஒருவர்
எப்படி கடைசி நேரத்தில் கிடைக்கிற ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்வாரோ அது
போல லைலத்துல் கத்ரை அமல்களால் முழுமையாக அழகு படுத்த முயற்சி செய்வோம். அல்லாஹ் நமது
மொத்த வாழ்வையும் அழகு படுத்துவான்.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
சதகத்துல் பித்ரு
என்பது நோன்பு பெருநாள் அன்று தொழ வருவதற்கு முன்னதாக ஒவ்வொரு வரும் அவருக்காகவும்
அவருடைய குடும்பத்திற்காகவும் வெளிப்படுத்துகிற தர்மமாகும்.
حديث عبد الله
بن عباس قال: «فَرَضَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً
لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا
قَبْلَ الصَّلاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاةِ
فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ»
பெருநாள் செலவுக்குப் போக அதிகப்படியாக காசு வைத்திருக்கிற அனைவரும் இந்த தர்மத்தை நிறைவேற்ற வேண்டும்
.
ஹன்பி மத்ஹபின் படி 1 கிலோ 700 கிராம் கோதுமை அல்லது அதற்குரிய பணமாக ரூ 90
ஐ பித்ரு
சதகாவாக
கொடுக்க வேண்டும்.
ஷாபி மத்ஹபின் படி 2.400 கிலே அரிசி பித்ராவாக கொடுக்க வேண்டும்.
பெருநாள் அன்று
சுபுஹ்லிருந்து பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு முன்னதாக இந்த தரமத்தை நிறைவேற்ற வேண்டும்.
முதல் நாள் மஃரிபிலிருந்தும் கொடுக்க தொடங்கலாம். ஏழைகளை சென்றடைவது சில இடங்களில்
சிரம்மாக இருக்கும் என்பறால் ரமலானில் ஓரிரு நாட்களில் முன் கூட்டியே கொடுத்தாலும்
செல்லும்
பெருநாள் அன்று
ஏழைகளை திருப்திப்படுத்துவதான் இதன் நோக்கம் என்பதால் இரண்டு நாட்களை விட முன் கூட்டியே
கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஹதீஸ் கூறுகிறது.
பெருநாளில் ஏழைகளில் மக்களுக்கிடையே வலம் வரும் தேவையை தவிருங்கள் .
ஏழைகளை கண்டறிவதில்
இருக்கிற சிரம்ம் காரணமாக வே ரமலான் தொடங்கியதில் இருந்து சதகத்துல் பித்ரை கொடுக்கலாம்
என்று சட்ட அறிஞர்கள் அனுமதி வழங்கினார்கள்.
قال ابن عمر: : زَكَاةَ
الْفِطْرِ مِنْ رَمَضَانَ»
இதற்கு இன்னொரு
காரணமும் சொல்லப்படுகிறது.
பித்ரத் என்ற
வார்த்தைக்கு இயற்கை என்றும் பொருள் இருக்கிறது.
.வசதியற்றவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்லாம் எப்படி எல்லாம் சட்டம் சொல்கிறது. உனக்கு மட்டும் கொடுத்தால் போதாது. உன் குடும்பத்தில் இருக்கிற மற்றவர்களுக்காகவும் கொடு என்கிறது.
சமூக அமைப்புக்கள் பலவும் அரசியல் அமைப்புக்க்ள் சிலவும் தங்களுடைய செலவுகளுக்காகவும்
தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் தொண்டர்களை திருப்தி படுத்துவதற்காகவும் இவ்வாறு
வசூல் செய்கிறார்கள். அவர்கள் எதற்கோ வசூல் செய்து விட்டு செல்லட்டும். அமைப்புக்களிடம்
கொடுப்பவர்கள் அமைப்புக்காக கொடுக்கீறார்கள் என்பதே பொருளாகும்.
وأحسن كما أحسن الله إليك
சில பெற்றோர்கள் சம்பாதிக்கிற தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அவர்களே கொடுத்து விடுகிறார்கள். இதை தவிர்த்து , பிள்ளைகளுக்கு நினைவூட்டி அவர்களையே அவர்களுக்குரிய பித்ரு சதகாவை கொடுக்க செய்வது சிறப்பானது.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
பெருநாள் பிறை
பெருநாள் பிறை விசய்த்தில் குழப்பத்திற்கு ஆட்பட வேண்டாம், கம்பீரமான தெளிவான வழிகாட்டுதல்
பெருமானுருடையது,
29 இரவு பிறை தென்பட்டது என
காழி அறிவித்தால் 6 ம் தேதி ஈதுல் பித்ரு
பெருநாளைக் கொண்டாடுவோம். இல்லை எனில் 7 ம்
தேதி பெருநாளைக் கொண்டாடு வோம்.
அருள் கூர்ந்து முஸ்லிம்களே இதில் தேவையற்ற அவசரம்
காட்டாதீர்கள், சர்வதேச பிறை சவூதிப் பிறை
என்ற குழப்பத்திற்கு ஆட்படாதீர்கள், இந்தக்
குழப்பத்தை எல்லாம் பேசி முடிவு கண்டு பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் பிறை பார்ப்பதைக்
கொண்டே பெருநாளை கடை பிடிக்க வேண்டும் என உலக இஸ்லாமிய அறீஞர்கள் தெளிவுபடுத்தி
விட்டனர்.
பழை குப்பையை கிளரி குளிர்காய நினைக்கும் குழப்ப
வாதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.
திடல் தொழுகை
சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் பெருநாள் தொழுங்கள். திடல்
தொழுகை என்ற பெயரில் செய்யப்படும் ஏமாற்று வித்தைகளுக்கு ஆட்பட்டு விடாதீர்கள்
இது விசயத்தை
மிகவும் முக்கியமான ஒரு கருத்தாக பரப்புவதில் தவ்ஹீத் பேசும் அமைப்புக்கள் வலிந்து
பிரச்சாரம் செய்கின்றன, ஊரெங்கும்
போஸ்டர் ஒட்டுகிறார்கள்.
எதார்த்தத்தில்
மதீனாவில் மஸ்ஜிதுன்னபவியில் இடம் பற்றாக்குறை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள்
திடலுக்குச் சென்று தொழுதுள்ளார்கள்,
நீங்கள் ஒரு
திடலுக்குச் சென்றுதான் தொழ வேண்டும் என்ற அறிவுரை ஒன்று கூட இல்லை.
மதீனா
பெருமானார் (ஸல்) அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு பெருநாள் தொழுகைகென்று
ஒரு வெளியிடத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள் என்ற அடிப்படையில்
வழி வழியாக முஸ்லிம்களும் தம்முடைய ஊரில் பெருநாள் தொழுகைக்கு என்று ஒரு இடத்தை
வாங்கி, அல்லது
ஒதுக்கி வைத்திருந்தார்கள், ஈத் மைதானம்
என்ற அந்த இடத்தில் இரு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
ஈத்காஹ்
மைதானம் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை என்ற நிலையில் பள்ளிவாசலிலேயும் தொழுது
கொண்டார்கள்,
ஈத்காஹ்
மைதானம் இல்லாத இடங்களில் மைதானங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது இலவசமாக பெற்றோ
அல்லது பொது இடங்களில் அனுமதி கேட்டோ பெருநாள் தொழ வேண்டும் என்பதற்கு எந்த
முன்னுதாரனும் இல்லை, மார்க்கத்தில்
சுய விளக்கம் என்பதை தவிர இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை,
மஸ்ஜிதுல்
ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும்
பெருநாள் தொழுகை நடை பெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,
கோவையில்
நல்லாயன் பள்ளியில் தவ்ஹீத் பேசும் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டமாக தொழுகை
நடத்தினார்கள். இவர்கள் தொழுத இடத்தின் நேர் மேலே கிழக்கை நோக்கி கை நீட்டியபடி
இயேசுவின் சிலை நின்று கொண்டிருந்தது, ஒரு தடவை இது பற்றிய புகைப்படத்தில் சிலைக்கு
கீழே இவர்கள் நின்று தொழுவது போல படம் வந்தது.
திடல்
தொழுகைகளின் சமீபத்திய சாதனை ;
இவர்கள்
தொழுகை நடத்தியதாக அடுத்த நாள் செய்தித்தாள்களில் கட்டாயமக செய்தி இடம் பெறும், அதற்கு சாட்சியாக பெண்கள் தொழுவது போன்ற புகைப்படங்களை
மட்டுமே பத்ரிகைகள் கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வருகின்றன,
أما أهل مكة، فلا يصلونها إلا في
المسجد من الزمن الأول).
மக்காவின்
மக்கள் ஆதிகாலத்திலிருந்து பள்ளிவாசலில் மட்டுமே தொழுது வருகிறார்கள் என இமாம்
நவவி ரஹ் கூறுகிறார்.
இமாம ஷாபி ரஹ்
அவர்கள் உம்முவில் எழுதுகிற போது பள்ளிவாசலின் இடவசதியிம் மதீனாவிலிருந்த சுற்று
புரங்கள் நெருக்கடியாக இருந்ததுமே பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்ற
காரணம் என நான் அறிகிறேன். என வே ஒரு ஊரில் பள்ளிவாசல் பெரிதாக
கட்டப்பட்டிருக்கும் என்றால் அங்கிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை என்று நான்
கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்கள்,
أن سبب ذلك سعة المسجد، وضيق أطراف
المدينة، فلو عمر بلد فكان مسجد أهلها يسعه في الأعياد لم أر أن يخرجوا منه! فإذا
كان لا يسعهم كرهت الصلاة فيه، ولا إعادة
தக்பீர்
பெருநாளன்று தக்பீரை உரத்துச் சொல்லுங்கள் அதுவே பெருநாளின்
அழகாகும்.
வேகமாக எங்களிடமிருந்து விடைபெறுகிற ரமலானே சீக்கிரமே எங்களிடம் திரும்பிவா! உன்னுடைய அருள் மழையை
அள்ளித்தா!
இந்தப் புனிதம்
மிக்க ரமலானை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சார்பானதாக ஆக்கியருள்வானாக!
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அற்புதமான தொகுப்பு
ReplyDeleteமாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அற்புதமான தொகுப்பு
ReplyDelete