தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
மீண்டும் பாஜக
ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
நாம் இவ்வளவு தூரம்
பிரார்த்தனை செய்தோமே ?
இதற்காகவே உம்ராவிற்கு
கூட மக்கள் சென்று வந்தார்களே/
அல்லாஹ்வின் தர்பாரில்
கேட்கப்பட்ட பிரார்த்தனைகள் கூட இப்படி தோற்றுப் போய்விட்டதே!
இந்தப் பிரார்த்தனைகளுக்கு
பலனேதும் இல்லையா ?
என்று நம்மில் சிலர் யோசிக்கலாம்.
நிச்சய்மாக நமது
எந்த ஒரு பிரார்த்தனைக்கும் பலன் உண்டு.
பிரார்த்தனை சாமாணியமானது
அல்ல்
திறக்காத எந்த இரும்புக் கதவையும் திறக்கும் ஆற்றல் துஆ விற்கு உண்டு.
நபி ஜகரிய்யா அலை
அவர்களுக்கு 120 வயது அவரது மனைவிக்கு 80 வயது – அவர்களுக்கு குழந்தை இல்லை. இத்தனை
வயதான பிறகு எப்படி குழந்தையை கேட்பது என்று தயங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த சூழ்நிலையில்
தான் மர்யம் அம்மாவுடைய அறையில் அந்த காலகட்டத்தில் கிடைக்காத பழங்கள் இருந்தன. இவை
எப்படி என்று ஆச்சரியமாக கேட்டார் ஜகரிய்யா
(அலை) , இது இறைவனது கொடை என்று மர்யம் அம்மையார் கூறினார். பருவம் கடந்தும் பழங்களை
அல்லாஹ்வால் தரமுடியும் என்ற வார்த்தையில் தனது மனக்குறையை கேட்க அல்லாஹ் அனுமதிக்கிறான்
என்று புரிந்து கொண்ட ஜகரிய்யா அலை ஓடிச் சென்று அல்லாஹ்விடம் துஆ கேட்டார். அல்லாஹ்
உடனே குழந்தைய தருவதாக கூறியது மட்டுமல்ல, அந்த குழந்தை அவர் விரும்பும் ஆண் குழந்தை
என்று அவருக்கு யஹ்யா என்று பெயர் வைக்குமாறும் கூறினான்.
كُلَّمَا
دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَا
مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ ۖ إِنَّ اللَّهَ
يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ (37)
هُنَالِكَ
دَعَا زَكَرِيَّا رَبَّهُ ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً
طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ (38) فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ
اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا
وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ (39
மூஸா அலை அவர்கள்
எகிப்திலிருந்துஅ தப்பி வந்த நீண்ட பயணத்தில் மிகவும் களைத்துப் போயிருந்தார்தக்ள்.
பசிய் வாட்டியது. இந்த சூழலில் தண்ணீர் கிணற்றின் அருகே தவித்து நின்ற பெண்களுக்கு
உதவி செய்தார்கள். அப்போதும் கூட அந்த பெண்களிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. . அல்லாஹ்விடமே
பசியை முறையிட்டார்.
فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰ إِلَى
الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24) فَجَاءَتْهُ
إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ
لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا ۚ فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ
الْقَصَصَ قَالَ لَا تَخَفْ ۖ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (25)
மூஸா அலை அவர்களுக்கு உணவும் கிடைத்தது. தங்குமிடம் வேலை, குடுமப் எல்லாம் கிடைத்தது.
الراوي : أسلم
مولى عمر بن الخطاب | المحدث
: البخاري
உமர் ரலி
விரும்பி சஹாதத்தும் கிடைத்தது.
மதீனாவில் ஒரு ஹதீஸ் கலை அறிஞராக உழைத்துக் கொண்டிருந்தவர்
அப்துல் மலிக் பின் மர்வான் ரஹ் பிற்காலத்தில் மிக ஆச்சரியமான வகையில் இஸ்லாமிய பேர்ரசின் கலீபாக ஆனார்கள்.
ثم قام مصعب، فأخذ بالركن اليماني، ثم قال: اللهم
إنك رب كل شيء، وإليك يصير كل شيء، أسألك بقدرتك على كل شيء، ألا تميتني من الدنيا
حتى توليني العراق، وتزوجني بـ سكينة بنت الحسين.
அடுத்த்தாக அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் இறைவா எனது பாவங்கள் மன்னிக்கப்பட்டவனான ஆக்காமல் என்னை மவ்தாக்கி விடாதே என்று கேட்டர்.
அறிவிப்பாளர் கூறுகிறார், முந்தின மூவருக்கும் அவர்கள் கேட்ட்து கிடைத்தை நான் பார்த்தேன். அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்களுக்கு அவர் கேட்ட்து கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த செய்தியில் உள்ள அதிசயம் என்ன என்றால், அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் உமர் ரலி அவர்களின் மகன். இஸ்லாமிய இரண்டாவது ஜனாதிபதியின் மகன் அவர் அதிகாரத்தை கேடகவில்லை. ஆனால் மற்றவர்கள் அதிகார பதவியோடு சம்பந்தம் இல்லாதவர்கள் .அவர்கள்
கேட்ட்து அவர்களுக்கு கிடைத்த்து.
இதில் இன்னொரு அதிச்யம் என்ன வென்றால், அப்துல் மலிக் பின் மர்வான் உமய்யா அரசர். ஆனால் அவர் இந்த அரசை நிறுவிய முஆவியா ரலி அவரிகளின் வாரிசு அல்ல,
முஆவியா
ரலி அவர்கலின் மகன் யஜீது மவ்த்தான போது, அவருடைய மகன் இரண்டாம் முஆவியா ஆட்சிக்கு
வந்தார். ஆனால் அவர் ஆட்சி செய்ய விரும்பாமல் இறந்து போனார். அதன் பிறகு அதிகாரம் எதிர்பாராமால்
மர்வான் கைக்கு இடம் மாறியது. மர்வானுக்குப்பிறகு அவரது மகன் ஹதீஸ் கலை அறிஞர் அப்துல்
மலிக் பின் மர்வான் ஆட்சிக் கட்டிலில் ஏறினார்.
வரலாற்றில் நிகழ்ந்த அதிசயங்களில் ஒன்று இது.
துஆ அங்கீகரிக்கப் பட்ட அற்புத வழி இது.
மக்களின் மனம் கூப்பிய பிராத்தனைகளை அல்லாஹ் தட்டுவதில்லை. அவற்றை ஏற்றுக் கொள்ளவே செய்கிறான்.
ஆனால் அதை ஏற்பதற்கு அல்லாஹ் மூன்று வழிமுறைகளை வைத்திருக்கிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் (அபூஸஈதில் குத்ரி ரலி அறிவிக்கிறார்)
ما من
مسلم يدعو بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث: إما أن
يعجل له دعوته وإما أن يدخرها في الآخرة، وإما أن يصرف عنه من السوء مثلها
ஒரு முஸ்லிம் பாவமற்ற – சொந்தங்களை பாதிக்காத எந்த பிரார்த்தனையை கேட்டாலும் அல்லாஹ் அதை அவருக்கு மூன்று வழிகளில் ஒரு வகையில் நிறைவேற்றுகிறான். ஒன்று அவர் கேட்டதை உடனடியாக கொடுக்கிறான். அல்லது மறுமையில் தர அதை பத்திரப்படுத்துகிறான். அல்லது வேறு வகையான தீமைகள் ஏற்படாம தடுக்கிறான்
இப்படி பெருமானார் (ஸல்) சொன்ன போது அதில் மகிழ்ச்சியடைந்த சஹாபாக்கள் சொன்னார்கள். அப்படியானால் நாங்கள் இன்னும் அதிகமாக கேட்கிறோம். என்றனர். பெருமானார் சொன்னார்கள் அல்லாஹ் அதைவிட அதிகமாக தருவான்
அல்லாஹ்
நமது பிரார்த்தனைகளை இந்த வகையில் ஏதாவது ஒரு வழியில் நிச்சயம் நிறைவேற்றுவான்.
நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்திருக்கிற முடிவையும் இந்த அடிப்படையில் நான் அனுகலாம்.
அல்லாஹ் நாம் கேட்ட்தை நேரடியாக தறாவிட்டாலும் நமக்கு ஏற்படுகிற தீமையை தடுக்க ஏற்பாடு செய்யக் கூடும்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் சரியான நாட்டை ஆளும் சரியான பலத்தை எட்ட வேண்டும் என்பதற்கான ஒரு ஏற்பாடாகவும் இது இருக்கலாம்.
நாம் நம்பிக்கையோடு பொறுத்திருந்து பார்ப்போம். நமது பிரார்த்தனை வீண் போகாது.
தொடர்ந்து மேலும் துஆ செய்து கொண்டிருப்போம். அல்லாஹ் இன்னும் சிறப்பான சூழலை தருவான்.
இன்ஷா அல்லாஹ்.
(மதீனா முனவ்வராவின் மர்கஜிய்ய ஏரியாவில் சப்வத் அல்மதீனா விடுதி அறை எண் 301 லிருந்து)
ماشاء الله تبارك الله
ReplyDeleteஅருமையான ஜுமுஆ உரை ஹஜ்ரத்.பாரகல்லாஹ்
ReplyDelete