அர்ப்பணித்தல் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான ஒரு நற்பண்பாகும்.
உறக்கத்தை அர்ப்பணித்து
படிக்கிறவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள்
ஓய்வை அர்ப்பணித்து
உழைப்பவர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள்.
சுயநலத்தை அர்ப்பணித்து
பாடுபடுகிறவர்கள் பொதுவாழ்வில் தலைவராவாவார்கள்.
இது சகஜமாக நாம்
அறிந்த ஒன்று
இந்த அர்ப்பணிப்பு
உணர்வை முஃமின்கள் அனைவரும் கைகொள்ள வைக்கும் ஒரு ஏற்பாடுதான் குர்பானி ஆகும்.
وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
குர்பான் என்ற
வார்த்தைக்கு நெருங்குதல் என்று பொருள்
அல்லாஹ்வை நெருங்குவதற்காக
செய்யப்படுகிற அறுப்பை குர்பானி என்கிறோம்.
அல்லாஹ்வின் நெருக்கத்தை
நிரூபிப்பதறகாக இபுறாகீம் அலை அவர்கள் தனது மகனை அறுத்துப் பலியிட்ட போது அல்லாஹ் அவருக்கு
சொர்க்கத்தில் இருந்து ஒரு ஆட்டை வழங்கி அதை பலியிடுமாறு கூறினான்.
இதில் இரண்டு தத்துவங்கள்
இருக்கின்றன.
ஒன்று அல்லாஹ்
கூறினால் மக்கள் எதையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும்.
இரண்டு, அப்படி
தயாராகிவிடுவோம் என்றால் அல்லாஹ் பெரிதாக சோதிக்க மாட்டான். அதற்கு பதிலாக பெரும் அன்பளிப்பை
தருவான்.
அர்ப்பணித்தலின்
பலன் இது.
நாமும் குர்பானி
கொடுக்கிறோம்.
அல்லாஹ்விற்காக
அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக நான் எதையும் அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன் என்பதன் ஒரு அடையாளமாகத்தான்
நாம் குர்பானி கொடுக்கிறோம்.
ஆனால் அல்லாஹ்விற்காக
அர்ப்பணிப்புகளுக்குத்தயாராக இருக்கிறோமா என்பதை கொஞ்சம் சிந்திப்போம்.
நாம் அல்லாஹ்விற்காக
என்னால் முடிந்த அர்ப்பணிப்புக்களுக்கு தயாராவேன் என்று உறுதி ஏற்றுக் கொள்வது நமது
குர்பானியை அர்த்தமுள்ளதாக ஆக்கும். அல்லாஹ் அந்த மனப்பக்குவத்தை தந்தருள்வானாக!
அல்லாஹ்விற்காக
– அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக நான் முடிந்த வரை அர்ப்பணிப்புகளுக்கு தயாராவேன் என்ற
உறுதியுடன் வாழ வேண்டியது முஃமின்களின் அடையாளமும் பொறுப்பும் ஆகும்.
நபி இபுறாகீம்
அலை அவர்கள் மனைவி மகன் சொந்த ஊர் என அனைத்தையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க தயாராக
இருந்தார்கள்.
இதில் அவர்கள்
எதையும் இழக்க வில்லை. மாஷா அல்லாஹ்
ஆனால் எல்லாவற்றிலிருந்தும்
பெரும் பெரும் நற்பெயர்களை பெற்றார்கள். காலா காலத்திற்கு பின்பற்றப்படுகிற முன்னேற்றத்தை
அடைந்தார்கள்.
பெருமானார் (ஸல்)
அவர்கள் மார்க்கத்திற்காக சொந்த ஊரை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றார்கள்.
அல்லாஹ் பெருமானாருக்கு அவர்கள் சென்ற இடத்தில் நல்ல மரியாதையை கொடுத்தான் . அவர்களது
சொந்த ஊரையும் திருப்பிக் கொடுத்தான்.
இது போன்ற எந்த
அர்ப்பணிப்புகளில் மிக நிச்சயமாக நாம் மேற் சொன்ன இரண்டு உத்தரவாதங்களை உறுதியாக பார்க்க
முடியும்
அதிக சோதனைக்கு உள்ளாக வேண்டியது வராது.
உன் மகனை ஆற்றில் அனுப்பு அவரை நான் சீக்கிரமே உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று அல்லாஹ் சொன்னான்.
فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي ۖ إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ
அதிக மரியாதையும் நன்மையும் வந்து சேரும்.
قال رسول الله صلى الله عليه وسلم: «لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ: يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ، وَيُرَى مَقْعَدَهُ مِنَ الجَنَّةِ، وَيُجَارُ مِنْ عَذَابِ القَبْرِ، وَيَأْمَنُ مِنَ الفَزَعِ الأَكْبَرِ، وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الوَقَارِ، اليَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَيُزَوَّجُ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الحُورِ العِينِ، وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِهِ»[
அர்ப்பணிப்பு எனும் போது உயிரை கொடுக்கனும், சொத்துக்களை துறக்கனும், குடும்பத்தை சிரமப்படுத்தனும் என்று அர்த்தமில்லை.
நமது விருப்பங்களை
தேவைகளை மார்க்கத்திற்காக என்று அல்லது அல்லாஹ்வின் விருப்பத்திற்காக என்று அர்ப்பணிக்க
அல்லது நாம் தயாராகிற போது அல்லாஹ் அதில் பெரும் பெருமையை வைத்திருப்பான்.
இமாம் அஹ்மது பின்
ஹன்பல் ரஹ் அவர்கள் சிறுவராக இருக்கும் போது ஒரு நாள் குளியளறைக்கு சென்றார்கள். ஆடைகளை
களைந்தார்கள். நிர்வாணமாக குளிப்பது தான் வழக்கம். ஆனால் அன்று காலை ஒரு ஹதீஸை அவர்கள்
கேள்விப்பட்டிருந்தார்கள்.
من كان يؤمن بالله واليوم الاخر فلا يدخلن الحمام عريانا
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர்கள்
குளியளறைக்குள் நிர்வாணமாக இருக்க வேண்டாம் என்று பெருமானார் கூறீனார்கள் என்ற அந்த
செய்தி நினைவுக்கு வந்த்தும்
தனது ஆடையை எடுத்து அணிந்து கொண்டார்கள்.
இமாம் அஹ்மது ரஹி
அவர்கள் பிற்காலத்தில் கூறுவார்கள்.
எனது இப்போதைய
அந்தஸ்த்திற்கு அந்த ஒரு செயல் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கலீபா ஹாரூன் ரஷீதின்
மனைவி ஜுபை தா அம்மா ஹாஜிகளுக்காக தாய்பிலிருந்து அரபாவிற்கு தண்ணீர் கொண்டு வர ஒரு
கால்வாய் வெட்டினார். மிக அற்புதமான ஒரு பணி அது.
அந்த கால்வாயின்
மிச்சங்கள் இப்போதும் மினாவின் மலைப்பகுதிகளில் பார்க்க முடியும்.
அவர் இறந்த பிறகு
அவருடைய தோழியின் கனவில் தோன்றி தனக்கு சொர்க்கம் கிடைத்து விட்டதாக கூறினார்.
கால்வாய் வெட்டிய
உங்களுக்கு கிடைக்காமலா போகும் என்ரு அந்த தோழி கேட்டார்.
ஜுபைதா அம்மா கூறினார்.
எனக்கு அதற்காக கிடைக்க வில்லை. நான் சிறுமியாக இருந்த போது ஒரு தடவை சிறுமிகளோடு விளையாடிக்
கொண்டிருந்தேன். அப்போது பாங்கு ஒலித்தது. மற்ற தோழிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
நான் விளையாட்டை நிறுத்தி விட்டு மரியாதை யோடு பாங்கை செவியேற்றேன். அதற்கு பதில் கூறினேன்.
அதற்காக எனக்கு சொர்க்கம் கிடைத்தது என்றார்கள்
நமது வாழ்விலும்
அல்லாஹ்விற்காக என்று அல்லது மார்க்கத்திற்காக என்று நமது விருப்பங்களையும் தேவைகளையும்
அர்ப்பணித்து நடந்து கொள்வொம் என்றால் நிச்சயம் அல்லாஹ் நமது வாழ்வில் அதிக சோதனை இல்லாமல்,
பெரும் பெயரையும் புகழையும் நன்மைகளையும் கொண்டு வந்து சேர்ப்பான்.
மார்க்கத்திற்கு
எதிரான ஒன்றை நாம் ஆசைப்படுவோம். அல்லது குடும்பத்தினர்கள்
ஆசைப்படுவார்கள், நண்பர்கள் வலியுறுத்துவார்கள், தலைவர்கள் கேட்டுக் கொள்வார்கள் என
எவுவாக இருந்தாலும் அல்லாஹ் ரஸீலின் வழிகாட்டுதலுக்கு மதிப்பளித்து அதை புறக்கணிப்போம்
அதனால் ஏற்படும் விளைவுகளை சகித்துக் கொள்வோம் என்றால் அதுவும் ஒரு அர்ப்பணிப்பு
ஆடுகளை குர்பானி
கொடுத்த்து போல நமது உணர்வுகளையும் அல்லாஹ்வுக்காக குர்பானி கொடுப்போம் என்று உறுதி
எடுத்துக் கொள்வோம்.
நிச்சயமாக நாம்
சிரமப்பட வேண்டியது வராது.
நிச்சயமாக நமது
அந்தஸ்து உயரும். நமக்கு வேண்டியது கிடைக்கும்
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
அனைவருக்கும் ஈதும்
அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்
ReplyDeleteபாரகல்லாஹ் உங்கள் துஆவை ஆதரவு வைத்தவர்களாக
ReplyDeleteتقبل الله منا ومنكم
ReplyDeletefee amanillah
ReplyDeleteماشاءالله و بارك فيكم
ReplyDeleteAlhamdulillah
ReplyDeleteAlhamdulillah
Alhamdulillah
ReplyDeleteاللهم ارزقنا زيارة بيتك الحرام.....امين
ReplyDeleteاللهم ارزقنا زيارة بيتك الحرام
ReplyDelete