வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 12, 2024

ஷாம் எனும் சிரியா ஈமான் செழிக்கும் நிலம்

 سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ ) الإسراء (1)

சிரிய நாட்டில் புரட்சி ஏற்பட்டு, சுமார் 54 ஆண்டுகளாக அங்கு நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது.

சிரியாவின் கடந்த கால வரலாற்றிலும் நிகழ்கால நடப்பிலும் உலக முஸ்லிம் சமுதாயத்திற்கு நம்பிக்கயையும் ஊக்கத்தையும் அளிக்கும் பல செய்திகள் இருக்கின்றன.  

வரலாற்றில் மிகவும் செல்வாக்குள்ள நாடாக இருந்த்து  சிரியா.

الَّذِي بَارَكْنَا حَوْلَهُ என்று திருக்குர் ஆன் அதன் பெருமையை கூறுகிறது. ஏராளமான நபிமார்கள் அந்த பகுதியில் தோன்றினார்கள்.

 முஸ்லிம்களின் பேரரசு டமாஸ்கஸை தலைமையிடமாக கொண்டு நூறு வருடங்களுக்கு மேல் வல்லமை மிக்க ஆட்சியை நடத்தியது.

 அதன் பிறகும் கூட முஸ்லிம் அறிஞர்களும் அரசியல்வாதிகளும் செல்வாக்கு செலுத்தும் நிலமாக சிரியா திகழ்ந்தது.

 முஸ்லிம்களிடம் சிறப்பு வாய்ந்த நான்காவது பெரிய பள்ளிவாசல் எனப்படுகிற ஜாமிஉல் உமவீ பள்ளிவாசல் டமாஸ்கஸில் உள்ளது.

 இவ்வளவு சிறப்பிற்குரிய சிரியா இப்போது உள் நாட்டு போரினால் மிகவும் சீரழிந்த நாடாக மாறியிருக்கிறது. நாட்டின் தலை நகரை தவிர மற்ற பகுதிகளில் 97 சதவீதம் அழிந்து போய்விட்டது என விக்கீபீடியா கூறுகிறது.

இந்த அழிவுக்கு காரணம் 2011 ம் ஆண்டிலிருந்து அங்கு நடைபெற்று வருகிற உள் நாட்டுப் போர் காரணமாகும்.

1970 லிருந்து 2000 ம் ஆண்டு வரை ஹாபிழ் அஸத் என்பவரும் அவருக்கு பின் அவரது மகன் பஷர் அஸத் என்பவரும் ஆட்சி செய்தனர். இவ்விருவரும் ஷியா பிரிவை சார்ந்தவர்கள். சிரியாவின் மக்கள் அஹ்லுஸ்ஸத் வல்ஜமாஅத்தை சார்ந்தவர்கள். அங்குள்ள மக்கள் தொகையில் 10 சதவீதமே இருக்கிற ஷியா இனத்தை சார்ந்த இவ்விருவரும் மிக கொடூரமான அக்கிரமத்தை தம்முடைய நாட்டு மக்கள் மீது செலுத்தியவர்கள். ஆவார்கள். இரான், ரஷ்யா ஆகியவை இவ்விருவருக்கும் ஆதரவக இருந்தன.

2011 ம் ஆண்டு சிரிய மக்கள் ஜனநாயகத்திற்காக போரடினர். பஷர் அல் அஸத் ரசாயன ஆயுதங்களை மக்கள் மீது ஏவினார். சுமார் 5 இலட்சம் மக்களை கொன்று குவித்தார். சுமார் 60 இலட்சம் இவர்களது சித்ரவதையை பயந்து சிரியாவை விட்டு வெளியேறி லெபனான் துருக்கி ஆகிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இத்தனை அக்கிரமங்களுக்கு இடையிலும் பஷர் அல் அஸத் தன்னுடைய ஆதிக்கத்தை வலுவாகவே வைத்திருந்தார். உலகளாவிய எந்த கண்டனமும் பயனளிக்கவில்லை. அவரை கடுமையாக எதிர்த்து வந்த சவூதி அரேபியா கூட சமீபத்தில் அரபு லீக்கில் அவரை சேர்த்துக் கொண்டது. 2023 மே மாதத்தில் சவூதி அரேபியாவில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப் பட்டது. இதனால் பஷர் அல் அஸதை ஒன்றும் செய்ய முடியாது. அவரது அக்கிரமத்தை தடுத்து நிறுத்த முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் அல்லாஹ் அக்கிரமக்காரர்களை ஒரு போதும் சகித்துக் கொள்வதில்லை. அவர்களை வளர விட்டுஒரு நேரம் வரும் போது எப்படி அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை உணர்வதற்குள்ளாக அவர்களுக்கான தண்டனையை கொடுத்து விடுகிறான்.

எகிப்தின் மாபெரும் சக்ரவர்த்தியான அநியாயக்கார பிர் அவ்னின் அழிவு அப்படித்தான். எதிர்பாராத வகையில் அமைந்த்து.

பஷ அல் அஸத் கதையும் அப்படித்தான். சிரியாவை தனது கடும் கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்று கருதப் பட்ட பஷர், கடந்த 10 ம் தேதி திடீரென் சிர்யாவிலிருந்து தப்பி ஓடி ரஷ்யாவுக்குள் அட்டக்கலமாகியிருக்கிறார். ஒரு இழிவான முடிவு அவருக்கு ஏற்பட்டிருக்கீறது.

ஆனால் அவர் சிரியாவை விட்டு ஓடும் போது சும்மா ஓட வில்லை. ஆட்சியிலிருக்கும் போது கொள்ளையடித்த கணக்கிலடங்காத செல்வத்தையும் உடனே எடுத்துச் சென்றிருக்கிறார்.

பிரிட்டிஷ் உளவுத்துறையான  எம்16 அமைப்பு பஷர் அல் அஸதிடம் 200 டன் தங்கமும் 16 பில்லியன் டாலர்கள் (அதாவது 135 இலட்சம் கோடி ரூபாய்) அவரது கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ளது.

இத்தனைக்கும் சிரிய நாடு செவந்த நாடல்ல; அந்த நாட்டின் 90 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் ஆவார்கள்.

ஒரு ஏழை நாட்டின் மக்களை வஞ்சித்து அவர்களது செல்வத்தை சூறையாடி அவர்களிடம் மிக கொடூரமாக நடந்து கொண்ட ஒரு அதிபர் தான் எங்கே இருக்கிறார் என்பதை வெளிப்படுத்த முடியாத நிலையில் ஒரு திருடனைப் போல தப்பி ஓடியிருக்கிறார்.

நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிற மக்களை துன்புறுத்துகிற எந்த ஆட்சியாளருக்கும் இதுதான் கதி என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகியிருக்கிறது

நம்முடைய நாட்டிலும் ஆட்சியில் இருந்து கொண்டு சிறுபான்மை மக்களுக்கும் சாமாணிய மக்களுக்கு சொல்லணா துயர்களை கொடுத்துக் கொண்டிருக்கிற ஆட்சியாளர்களுக்கு இது ஒரு பாடமாகும்.

அவர்களில் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் செய்து ஜெயித்தாலும் இத்தகையோரின் அக்கிரமங்களுக்கு எதிராக நடக்கிற போராட்டங்கள் நிச்ச்யமக ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையையும் இந்நிகழ்வு தருகிறது.

சிரியாவில் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற அமைப்பை பற்றி இப்போதுதான் பலரும் கேள்விப்படுகிறார்கள். அதன் தலைவராக கூறப்படுகிற அபூமுஹம்மத் அல்ஜுலானி நேற்று வரை தீவிரவாதியாக தேடப்பட்டவர். அவரை பிடிப்பதற்காக தரப்படும் எந்த ஒரு தகவலுக்கும் ஒரு கோடி டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. (பிபிசி)

அல்லாஹ் நாடிவிட்டால் எத்தகைய அதிசயங்களும் நிகழும் இன்று செய்யப்படுகிற துர் பிரச்சாரங்களும் மாறும். அவதூறுகளுக்கு பதில் சாதனைகளை பற்றி மக்கள் பேசுகிற ஒரு சூழ்நிலை வரும்

சிரியாவில் அக்கிரமக்கர ஆட்சியாளர் ஒழிந்து விட்டாலும் ஒரு முழுமையா அடுத்த ஆட்சித்தலைமை இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது.

இதை பயன்படுத்தி இஸ்ரேல் நாடு கடந்த இரண்டு தினங்களில் சுமார் 480 ராக்கெட்களை சிரியாவின் மீது ஏவி கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிரியாவின் ராணுவக் கட்டமைப்புக்களையும்  தொலை தொடர்பு அமைப்புக்களையும் ஆராய்சிக் கூடங்களையும் கப்பற்படை தளங்களையும் அழித்திருக்கிறது.

இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்காமல் உலக வல்லரசுகளும் ஊடகங்களும் இதை இஸ்ரேலின் திறமை என்பதாக காட்டிக் கொண்டிருக்கின்றன.

எல்லாம் வல்ல அல்லாஹ் 50 ஆண்டுகளாக தொல்லைக்குள்ளாகியிருக்கிற மக்களுக்கு இப்போது கிடைத்திருக்கிற வாய்ப்பை நன்மையானதாக மகிழ்ச்ச்கரமானதாக வளர்ச்சிக்கானதாக ஆக்கியருள்வானாக!

சுயநலம்மிக்க அரபு நாடுகளின் சதியிலிருந்தும் இஸ்லாமிற்கு எதிரான வஞ்சக குணம் கொண்ட அழிவுச் சக்திகளிடமிருந்தும் அல்லாஹ் சிரியாவை பாதுகாத்து அருள்வானாக!

------------------------------

உலக முஸ்லிம்கள் அனைவரும் சிரியாவை உற்றுப் பார்க்க கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இன்றைய சிரியா என்பது சிறிய நாடு இஸ்லாமிய வழக்கில் பயன்படுத்தப்படும் ஷாம் என்பது பாலஸ்தீன் லெபனான் ஜோர்டான் சிர்யா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பெரிய நாடாகும்.

சிரியாவை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட போதுதான் இஸ்லாம் உலகளாவிய மதமாக வழி ஏற்பட்டது என்பது சிரியாவின் கேந்திர முக்கியத்துவத்திற்கு எடுத்துக் காட்டாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்க்கயில் ஷாம் தேசத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பெருமானார் (ஸல்) அவர்கள் ஷாமுக்கு மட்டுமே வெளிநாட்டு பயணம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய 12 வயதில் பெரிய தந்தை அபூதாலிபுடனும் 25 வயதில் கதீஜா அம்மையாரின் சரக்குகளின் விற்பனையாளராக மைஸிரா என்பவருடனும் சிரியாவுக்கு சென்று வந்துள்ளார்கள்.

அந்த இரண்டு பயணங்களின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள் பலதும் வெளிப்பட்டன.

சிரிய பயணத்தின் பின்னரே செல்வச் சீமாட்டியான கதீஜா ரலி அவர்களது கவனம் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது திரும்பியது. அவ்விருவரின் திருமணம் நடைபெற்றது, இது பெருமானாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் வளமும் மகிழ்ச்சியும் பரவ வழி வகுத்தது. அது மட்டுமல்ல மக்காவின் மக்களுக்கு வழக்கமாக வியாபாரத்திற்கு செல்லும் இடமாகவும் சிரியா இருந்தது. 

இது சிரியாவின் பரக்கத்திற்கு இரு அடையாளமாகும்.   

சிரிய படையெடுப்பு

பெருமானார் (ஸல்) அவர்களது காலத்தில் இன்றைய சவூதி யமன் பஹ்ரைன் ஆகிய நாடுகள் முஸ்லிம்களிடம் இருந்தன.

முதல் கலீபா அபூபக்கர் சித்தீக் ரலி காலத்தில் முதலாவதாக் இராக் கைப்பற்றப் பட்டது.

முஸ்லிம்களின் நிலப்பரப்பிற்கு மேலே சிரியா இருந்தது. அது ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் எல்லை பகுதியில் ரோம் அரசப் படைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க மட்டுமே வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒரு குழுவை காலித் பின் ஸஈத் பின் ஆஸ் (ரலி) அவர்களது தலைமையில்  அபூபக்கர் ரலி நியமித்திருந்தார்கள். இதுவே சிரியாவிற்கு எதிரான முதல் நடவடிக்கை ஆகும்.

இப்படி ஒரு குழு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத ரோமப் படையினர் அந்தக் குழுவுடன் மோதி, அதன் தளபதியின் மகனை கொன்று திரும்பி ஓட வைத்தனர்  

இதனால் சிரியாவிற்கு எதிராக படை எடுக்கும் நிரிபந்தம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.

சிரியாவின் வெற்றி ஹழ்ரத் உமர் ரலி அவர்களது காலத்தில் தான் கிடைத்தது என்றாலும் சிரியாவிற்கு எதிரான படை எடுப்பை திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்த பெருமை ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களையே சேரும்,

ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் அமைதியானவராக தெரிந்த அபூபக்கர் ரலி அவர்களுக்குள் இருந்த ராணுவத்தளபதி எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பது புரிய வரும்.

சிரியா ஒரு பெர்ய நாடு என்பதால் அதை நான்கு புறமும் சூழ்ந்து தாக்குவது என்று முடிவு செயத அபூபக்கர் ரலி அவர்கள் தலா 8 ஆயிரம் போர் வீரர்களை கொண்ட 4 படைகளை அமைத்தார்கள். அபூஉபைதா ரலி அவர்களது தலைமையிலான படையை ஹிம்மஸ் நகரை நோக்கி அனுப்பினார்கள், யஜீத் பின் அபீசுப்யான் ரலி அவர்களது தலைமையிலான படையை டமாஸ்கஸை நோக்கியும், ஷரஹ்பீல் ஹஸனா (ரலி) அவர்களது தலைமையிலான படையை புஷ்ராவை நோக்கியும்,அமரு பின் ஆஸ் ரலி அவர்களது தலைமையிலான் படையை பலஸ்தீனை நோக்கியும் அனுப்பினார்கள். 

நான்கு படையினரையும் தனித்தனியாகவே இருக்குமாறும் அவரவர் வெற்றி கொள்ளும் நிலங்களுக்கு அவரே தலைவராக இருக்க வேண்டும் எனவும் நிர்பந்தமான தேவை ஏற்பட்டால் நான்கு படை அணியினரும் ஒன்றாக சேர்ந்து கொள்ளலாம் என்றும் அவ்வாறு ஒன்று சேரும் போது அபூஉபைதா ரலி அவர்களின் தலைமையை அணைவரும் ஏற்க வேண்டும் என்றும் அபூபக்கர் சித்தீக் ர்லி அவர்கள் திட்டம் வகுத்துக் கொடுத்தார்கள்.

மிக ஆச்சரியமான அரபுகளின் நுன்னறிவுத்திறனை வெளிப்படுத்தும் ஏற்பாடு இது.

படைத்தளபதிகள் ஒவ்வொருவருக்கும் உன்னதமான இஸ்லாமிய யுத்த நெறிகளை தெளிவுபடுத்தினார்கள்.

போர்க் கைதிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திகிற தற்காலத்தை ஜெனிவா பிரகடனங்களை விட மிக சிறப்பானவை அவை.  மட்டுமல்ல; வெறும் ஏட்டில் இல்லாமல் நாட்டில் கடை பிடிக்கப் பட்டவை அவை.

தளபதி யஜீத் பின் அபீசுப்யான் (ரலி) அவர்களிடம்  அபூபக்கர் சித்தீக் ரலி கூறினார்.

 وجاء فى وصية الصديق لـ يزيد بن أبي سفيان هذه الكلمات: "وإني موصيكم بعشر كلمات فاحفظوهن: لا تقتلوا شيخًا فانيًا ولا صبيًا صغيرًا ولا امرأة، ولا تهدموا بيتًا ولا بيعة، ولا تقطعوا شجرًا مثمرًا، ولا تعقروا بهيمة إلا لأكل، ولا تحرقوا نخلاً ولا تُغرقوه، ولا تعص، ولا تجبن".

 "நான் உங்களுக்கு 10 கட்டளைகளை அறிவுறுத்துகிறேன். வயதானவர்களை கொல்லாதீர்கள்! சிறுவர்களை கொல்லாதீர்கள்! பெண்களை கொல்லாதீர்கள்! வீடுகளை இடிக்காதீர்கள்! துறவிகளின் மாடங்களை இடிக்காதீர்கள்! பயன் தரும் மரங்களை வெட்டாதீர்கள்! உணவுக்காகவே தவிர பிராணிகளை அறுக்காதீர்கள். தோட்டங்களுக்கு தீ வைக்காதீர்கள்! பயிர்களை தண்ணீரீல் ஆழ்த்தாதீர்கள். உத்தரவுகளை மீறி நடக்காதீர்கள். கோழைகளாகிவிடாதீர்கள்.!"

 ஆளுமைத்திறன்மிகு தளபதி அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் அபூபக்கர் சித்தீக் ரலி கூறினார்கள்.

 وجاء في وصيته لـ عمرو بن العاص: «.. اسلك طريق إيلياء حتى تنتهي إلى أرض فلسطين، وإياك أن تكون وانيًا عما ندبتك إليه، وإياك والوهن، وإيا أن تقول: جعلني ابن أبي قحافة في نحر العدو ولا قوة لي به، واعلم يا عمرو أن معك المهاجرين والأنصار من أهل بدر، فأكرمهم واعرف حقهم، ولا تتطاول عليهم بسلطانك.. وكن كأحدهم وشاورهم فيما تريد من أمرك، والصلاة ثم الصلاة، أذن بها إذا دخل وقتها، واحذر عدوك، وأمر أصحابك بالحرس، ولتكن أنت بعد ذلك مطلعًا عليهم

 "நான் உங்களை இந்த பொறுப்பிற்கு நியமித்த விவகாரத்தில் ஆதிக்க மனோபாவத்துடன் நடந்து கொள்ள வேண்டாம். கோழைத்தனமாகவும் நடந்து கொள்ளவேண்டாம். எதிரிகளின் எண்ணிக்கையை கண்டு நீங்கள் ஏமாற வேண்டாம். அதிக எண்ணிக்கையிலான எதிரிகளை குறைந்த வீரர்களை கொண்டு வென்றதுதான் நமது வரலாறு. உன்னுடன் நபியின் தோழர்களும் பத்று யுத்த்தில் பங்கேற்றவர்களும் உள்ளனர் என்பதை நின்னவில் வைத்துக் கொள்க! உனது அதிகாரத்தை அவர்களிடம் காட்ட வேண்டாம். அவர்களில் ஒருவனாக நீ நடந்து கொள்! அவர்களது ஆலோசனைகளை கேட்டுக் கொள்! கால் காக்கும் பணியை சரியாக கவனித்துக் கொள்ளுமாறு து தோழர்களிடம் சொலு! நீ அவர்களை கவனித்துக் கொண்டிரு!

 அற்புதமான இந்த அறிவுரைகளை கேட்டு புறப்பட்ட்து முஸ்லிம்களின் அணி. இதை அறிந்து ரோமப் பேரரசர் ஹிர்கல் தனது படைகளை திரட்டினார். ஒரு அடியில் முஸ்லிம்களை வீழ்த்திவிட வேண்டும் என்றூ முடிவு செய்தார் . அவரது படையினர் அவருக்கு உதவிக்கு வரதயாராக இருக்கும் படையினர் என பலரையும் திரட்டினார்.

ரோமப் பேரரசின் ஒரு சிறு பகுதிதான் சிரியா. ஆனால் முஸ்லிம்களை எதிர்க்க ரோமின் அரசர் தனது சக்தி முழுவதையும் திரட்டினார். இதனால் 4 முஸ்லிம் தளபதிகளும் ஒன்று சேர்ந்த போரிட முடிவு செய்தனர். அப்போதும் படையினரின் எண்ணிக்கை 24 ஆயிரம் மட்டுமே இருந்தது. இலட்சக்கணக்கான ரோமர்களை எதிர் கொள்ள மேலும் உதவிப்படையினரை அனுப்புமாறு அவர்கள் கலீபாவுக்கு கோரிக்கை வைத்தனர். இக்ரிமா ரலி அவர்கள் தலைமையில் ஒரு சிறு குழு அனுப்பப்பட்டது. அதுவும் போதுமானதாக இருக்க வில்லை.

போர் முனை பற்றிய கவலை அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை வாட்டியது. அப்போது அவர்களுக்கு இராக்கில் போர் புரிந்து வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த காலித் பின் வலீத் ரலி அவர்களைப் பற்றி நினைவு வந்தது.

உடனே அவருக்கு கடிதம் எழுதினார்கள். சிரியாவிலிருக்கிற படையுடன் சேர்ந்து கொள்ள உத்தரவிட்டார்கள். படையின் ஒரு பகுதியை இராக்கில் விட்டு விட்டு ஒரு பகுதியை தன்னுடன் அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள்.

சூழ்நிலையை புரிந்து கொண்டு கலீபாவின் உத்தரவை சிரமேற்கொண்டு 9 ஆயிரம் போர் வீரர்களை தன்னோடு அழைத்துக் கொண்டு புலிப்பாய்ச்சலில் புறப்பட்டார் காலித் பின் வலீத் ரலி அவர்கள்.

ஆயிரம் கிலோ மீட்டர் கொடும் பாலைவனத்தை பதினெட்டே நாட்களில் டமாஸ்கஸ் நகரின் கிழக்கு வாசலை வந்தடைந்தார் காலித் ரலி அவர்கள்.  

حيث قطع أكثر من ألف كيلو متر في ثمانية عشر يومًا في صحراء مهلكة حتى نزل بجيشه أمام الباب الشرقي لدمشق      

அவர் வந்து சேருவதற்கு முன்னதாக அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அடுத்த கட்ட தலைமையை பற்றிய உத்தரவை அபூஉபைதா ரலி அவரகளுக்கு நயமாகவும் உறுதியாகவும் எழுதியிருந்தார்கள்.

 فإني قد وليت خالدًا قتال الروم بالشام، فلا تخالفه، واسمع له وأطع أمره، فإني قد وليته عليك، وأنا أعلم أنك خير منه، ولكن ظننت أن له فطنة في الحرب ليست لك، أراد الله بنا وبك سبل الرشاد والسلام عليك ورحمة الله»...».

சிரியாவிற்கு எதிரான போருக்கு உங்களது தலைவராக காலிதை நியமித்திருக்கிறேன். நீங்கள் அவருக்கு மாற்றமாக நடக்க வேண்டாம். அவரது சொல்லை கேளுங்கள்! அவரது உத்தரவுகளுக்கு கட்டுப்படுங்கள்! நீங்கள் அவரை விடச் சிறந்தவர் என்பது எனக்கு தெரிந்தும் உங்களுக்கு அவரை தலைவராக்கியிருக்கிறேன். ஏனெனில் போர் செய்வதில் உங்களிடம் இல்லாத திறமை அவரிடம் இருக்கிறது. அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் நன்மையை தீர்மானிப்பானாக! வஸ்ஸலாம்.

என்ன அற்புதமான உத்தரவு? எவ்வளவு அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது.?

காலித் ரலி பொறூப்பேற்றதும் சிரியாவின் எல்லைப் புறத்தில் உள்ள புஸ்ரா நகரை கடுமையான் முற்றுகைக்கு உள்ளாக்கினார். அவ்வூர் வாசிகள் சமாதானத்திற்கு உடன்பட்டனர். புஸ்ரா வெற்றி கொள்ளப் பட்டது. சிரிய நிலப்பரப்பில் முஸ்லிம்களுக்கு கிடைத்த முதல் வெற்றி அது. உடன்படிக்கையால் அது கிடைத்தது. சண்டையால் அல்ல. 

புஸ்ராவின் இந்த நிலை ரோம் மன்னருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு கட்டுப் பட்டுக் கிடந்த பிரதேசம் அது. முஸ்லிம்களை சாமாணியமாக எதிர்க்க முடியாது என்று தெரிந்து கொண்ட ரோம் மன்னர் தனது சக்திக்குட்பட்ட அனைத்து படைகளையும் திரட்டிக் கொண்டு அஜ்னாதைன் என்ற பகுதிக்கு அனுப்பி வைத்தான்.

அஜ்னாதைன் என்பது இப்போது பாலஸ்தீனில் உள்ள ரமல்லா நகரிலிருந்து 39 கீமி தொலைவில் இருக்கிறது.

முஸ்லிம்களிடம் 36 பேர் இருந்தனர். ரோமர்களிடம் 70 ஆயிரம் பேர் இருந்தனர். சுமார் 1 இலட்சம் வீர்ர்கள் திரண்டிருந்த போர்க்களம் அது. எதிரிகளின் அணியில் ஒரு அணிக்கு ஆயிரம் பேர் இருந்தார்கள் என்கீறது வரலாறு.

காலித் ரலி அவர்கள் மிக அற்புதமாக படையினரை அணிவகுக்கச் செய்திருந்தார்.

நல்ல மதியம் வரும் வரை காலித் ரலி போரை தாமதப்படுத்தினார். மதிய நோரத்தின் வெப்பக் காற்று வீசத் தொடங்கிய போது போரை தொடங்கினார். ரோமர்கள் முதலில் தக்குதல் தொடுத்தனர். முஸ்லிம்களின் அணியையும் அவர்களால் ஊடுறுவ முடியவில்லை. எதிரிகளுக்குள் அப்போது பாய வேண்டாம் என காலித் ரலி தடை செய்தார். முஸ்லிம்கள் தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். இதை எதிரிகள் பலவீனமாக நினைத்து விடக் கூடாதே என்று முஸ்லிம்களில் சிலர் நினைக்கும் அளவு தாமதப்படுத்தினார். முந்தைய தக்குதலில் எதிரிகள் ஓரளவு சோர்வுற்று விட்டார்கள் என்பதை கனித்துக் கொண்ட காலித் ரலி இனி தாக்குங்கள் என்று உத்தரவிட்டார் ,முஸ்லிம்களுடைய குதிரைப்படையும் காலாட்படையும் பாய்ந்து தாக்கத் தொடங்கின. எதிரிகள் சிதறி ஓடினார்கள். தோற்றுப் போனார்கள்.

உலக வரலாற்றை விக்கித்து நிற்கவைத்த சத்தியம் இது.

ழிரார் (ரலி) என்ற நபித்தோழர் அன்று 39 எதிரிகளை கொன்றார். உம்மு ஹகீம் (ரலி)என்ற பெண்மணி தனது கூடாரத்தின் கம்பை கழற்றியடித்து 4 பேரைக் கொன்றார்.

برز في هذا اليوم من المسلمين «ضرار بن الأزور»، وكان يومًا مشهودًا له، وبلغ جملة ما قتله من فرسان الروم ثلاثين فارسًا، وقتلت «أم حكيم» الصحابية الجليلة أربعة من الروم بعمود خيمتها.

இந்த போரில் முஸ்லிம்கள் தரப்பில் 450 பேரும் ரோமர்களில் பல்லாயிரக்கணக்கானோரும் உயிரழந்தனர்.

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் வபாத்தாவதற்கு ஒரு மாத்திற்கு முன்பு ஹிஜ்ரி 13 ஜமாதில் அவ்வல் மாத்த்தில் இந்த வெற்றி முஸ்லிம்களுக்கு கிடைத்தது.

சிரிய மண்னில் முஸ்லிம்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.

யர்மூக் யுத்தம்

அஜ்னாதைன் வெற்றியை தொடர்ந்து ஷாம் எனும் அன்றைய சிரியாவின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்கள் கைப்பற்றி வந்தனர். அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்குப் பிற்கு பொறுப்பேற்ற் உமர் ரலி அவர்களும் அதை தொடர்ந்து வழி நடத்தி வந்தார்கள். 

  முஸ்லிம் படையினர் தனித்தனியாகவும் கூட்டு சேர்ந்தும் பல வெற்றிகளை கண்டனர். டமாஸ்கஸ், பஃலபக் போன்ற நகர்கள் வெற்றி கொள்ளப் பட்டன.

இஸ்லாமிய வரலாற்றாசிரியர் வாகிதி இது குறித்து தனியாக புதூஹுஸ் ஷாம் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் பண்டைய சிரியாவில் முஸ்லிம்கள் அடைந்த வெற்றியை விவாவாரியாக விவரித்திருக்கிறார். ஒரு நிலப்பரப்பின் வெற்றி குறித்து தனியாக புத்தகம் எழுதப்பட்டது இதற்குத்தான் என்று சொல்ல வேண்டும்.

ஹிஜ்ரீ 15 ம் ஆண்டுகீபி 636 – ஆகஸ்ட 15 ம் தேதி ரோம் சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை சிரிய நிலப்பரப்பிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றிய யர்மூக் யுத்தம் நடை பெற்றது.

யர்மூக் என்பது இன்றைய ஜோர்டானின் எல்லையில் உள்ள ஒரு நதியின் பெயராகும். இப்போது அந்த பகுதி இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ளது. ஜோர்டான் சிரியா பாலஸ்தீன் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் உள்ள இடமாகும் இது

இங்கு ரோமர்களின் அரசர் ஹிர்கல் தனது படையின் மொத்த பலத்தையும் திரட்டியிருந்தார். 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் அவரது படையில் இருந்தனர். வாஹான் என்பவர் படையின் தலைமை பொறுப்பில் இருந்தார்.

முஸ்லிம்களின் படைத்தளபதியாக அபூஉபைதா ரலி அவரக்ளை உமர் ரலி அவர்கள் நியமித்தார்கள். காலித் பின் வலீத் ரலி அவர்களை பொறுப்பிலிருந்து விடுவித்திருந்தார்கள்.  மக்கள் வெற்றிக்கு அல்லாஹ்வை நம்புவதை விட காலித் ரலியை நம்புகிற சூழ்நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தார்கள்.

இதனால் எந்த வருத்தமும் கொள்ளாத காலித் ரலி அவர்கள் அபூஉபைதா ரலி அவரகளின் தலைமையின் கீழ் ஒரு தளபதியாக செயல்பட்டார்கள். யுத்தத்தில் தனது அனுபவத்தாலும் தீரத்தாலும் மகத்தான பங்குபனியை ஆற்றினார்கள். வழக்கமாக கையாள்கிற யுத்த அனுகுமுறையை மாற்றி காராதீஸ் அனுகுமுறையை கையாண்டார்கள். இந்த அனுகுமுறைக்கு காலித் அனுகுமுறை என்ற பெயரும் உண்டும்.

படைகளை சாதாரணமாக 5 பிரிவுகளாக பிரித்து நடு, வலது, இடது ,முன்னணி, பின் படை என்று பிரித்துக் கொள்வது தான் அதுவரை அரபுகளின் வழக்கமாக இருந்தது. காலித் ரலி அவர்கள் இந்த முறை அதை மாற்றி 600 பேர்களை கொண்ட தனித்தனி குழக்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு குழுவுக்கு ஒரு தலைவரை நியமித்தார்கள்.இது 36 ஆயிரம் பேர் கொண்ட முஸ்லிம் படையினரிடையே அதிக நெருக்கத்தையும் உத்வேகத்தையும் செயல் திறனையும் உண்டு பண்ணியிருந்தது. 36 ஆயிரம் பேர்களில் ஆயிரம் சஹாபாக்களும் 100 பதறு சஹாபாக்களும் இருந்தனர்.

உலக வரலாற்றில் நடை பெற்ற யுத்தங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிற இந்த யுத்தம் ஆறு நாட்கள் நடைபெற்றது.

அல்லாஹ்வின் ஏற்பாடு

ஆறுநாட்கள் நடை பெற்ற யர்மூக் யுத்தம் தொடங்கிய முதல் நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்த்து.

 اتجه جورج القائد في فرقة الوسط الأيمن في الجيش البيزنطي إلى جيش المسلمين ودخل الإسلام، وقتل شهيداً في نفس اليوم محارباً إلى جانب المسلمين

  எதிரிகளின் வலது மத்திய பகுதிக்கு பெறுப்பேற்றிருந்த தளபதி ஜார்ஜ் தியோடர் அந்த சூழ்நிலையில் இஸ்லாமை தழுவி முஸ்லிம்களுடன் இணைந்து போராடினார். அன்றே அவர் ஷஹீதும் ஆனார்.

முதல் நான்கு நாட்களிலும் முஸ்லிம்கள் எதிரிகளின் தாக்குதலை எதிர்த்தாடி போரிட்டுக் கொண்டிருந்தனர். இரண்டாம் நாள் போரில் ரோமர்களின் ஒரு முக்கிய படைத்தளபதி கொல்லப் பட்டான்.

நான்காம் நள் போரில் ரோமர்களுக்கு முஸ்லிம்களை விட அதிக சேதம் ஏற்பட்டது.

5 ம் நாள் ரோமர் படையின் தளபதி முஸ்லிம் படையினரிடம் மூன்று நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய கோரிக்கை வைத்தான்.

உலகில் நடை பெற்ற பேர் அதிசயங்களில் ஒன்று இது.

பைசாந்திய சாம்ராஜ்யத்தின் படைத்தளபதி ஓய்வு கேட்கிறான்.

காலித் பின் வலீத் ரலி அவர்கள் இதை நிராகரித்தார்.

نحن مستعجلون لإنهاء عملنا هذا»

எங்களது இந்த வேலையை சீக்கிரம் முடித்தாக வேண்டும் என்று காலித் ரலி கூறினார்.

உலகில் முஸ்லிம்களின் செல்வாக்கு எந்த அளவில் இருந்திருக்கிறது என்பதற்கான உன்னதமான எடுத்துக் காட்டுகளில் ஒன்று இது.

ஆறாம் நாள் யுத்ததில் ரோமப் படையினர் முழுமையாக தோல்வியுற்றனர். போர்க்களத்திலிருந்து அவர்கள் தப்பிப்பது கூட சிரம்மாக இருந்தது.

உலக வரலாற்றை மிகவும் திகைக்க வைத்த நிகழ்வு இது. இரண்டரை இலட்சம் வல்லரசுப் படையினர் 36 ஆயிரம் முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர்.

ரோமின் சக்ரவர்த்தி ஹிர்கல் அப்போது ஹிம்மஸில் இருந்தார். அவருக்கு யுத்தத்தின் முடிவு தெரிந்த போது மிகவும் வருத்தமுற்றார்.

சலாமுன் அலைக்க யா சூரியா என்று சொல்லி அவர் சிரிய எல்லையிலிருந்து வெளியேறினார் என்று வரலாறு  சொல்கிறது,.

George F. Nafziger என்கிற யுத்தக் கலை அறிஞர் கூறுகிறார். இன்று யர்மூக் யுத்தம் என்பது அவ்வளவு பிரபலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனித வரலாற்றில் அந்த யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம் .ஒரு வேளை அன்று ஹிர்கல் வெற்றி பெற்றிருந்தால் உலக வரலாறு வெறு விதமாக திரும்பியிருக்கும்.

ஆனால் இஸ்லாம் உலக வரலாற்றை வேறு விதமாக திருப்பி விட்டது. அரசாட்சி என்பது பகட்டுக்காகவும் மக்களை சுரண்டுவதற்காகவும் என்றில்லாமல் இயல்பாக மக்களை நன்மை செய்கிற ஆட்சியாளர்களைமக்களது விவகாரத்தில் இறைவனை பய்ந்து கொள்கிற ஆட்சியாளர்களை ஆயிரம் ஆண்டுகளாக உலகிற்கு கொடுத்து வந்த்து.

இந்த மாபெரும் வரலாற்றில் ஒரு துரதிஷ்டமாக பஷர் அல அஸதை போன்ற சிலர் அவ்வப்போது வந்து சேர்கிறார்கள்.

ஆனால் அவர்களது ஆட்டம் நிலைப்பதில்லை. அரை நூற்றாண்டுகளை கடப்பதற்குள்ளாகவே அல்லாஹ் அவற்றை முடித்து விடுகிறான்.

இப்போது சிரியாவிற்க் ஒரு நல்ல முடிவு வேண்டும்.

முஹம்மது நபி (ஸ்ல) அவர்களது 20 ஆதாரப் பூர்வமான நபி மொழிகளில் சிரியாவின் பெறுமையை அதன் வரலாற்று முக்கியத்துவத்தை -இனி வ்ரும் காலத்தில் அதன் மீதுள்ள எதிர்ப்பார்ப்பை உலகிற்கு வெளிச்சப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

சிரியாவின் வளம்

عن عبد الله بن عمر رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم: «اللهم بارك لنا في شامنا، اللهم بارك لنا في يمننا»، قالوا: "يا رسول الله، وفي نجدنا؟" فأظنه قال في الثالثة: «هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان» (أخرجه البخاري

நஜ்து என்பதுதான் இப்போதைய சவூதியின் தலை நகரான் ரியாழ் ஆகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது பெருமை நிலை நாட்டப்படும் என சிரியாவை குறிப்பிட்டார்கள். ஆமினா அம்மாவின் கனவு.

وعن أبي أمامة رضي الله عنه قال: قلت : يا نبي الله! ما كان أوّل بدء أمرك؟ قال: "دعوة أبي إبراهيم، وبشرى عيسى، ورأت أُمّي أنه يخرج منها نور أضاءت منها قصور الشام"

قال ابن كثير رحمه الله في تفسيره "وتخصيص الشام بظهور نوره : إشارة إلى استقرار دينه، ونبوته ببلاد الشام .

ولهذا تكون الشام في آخر الزمان معقلاً للإسلام وأهله، وبها ينزل عيسى ابن مريم

 ஈமான் குடியேறும் நிலம்

عن أبي الدرداء رضي اللَّه عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «بينا أنا نائم إذ رأيتُ عمود الكتاب احتمل من تحت رأسي، فظننتُ أنه مذهوب به، فأتبعته بصري، فعمد به إلى الشام، ألا وإن الإيمان حين تقع الفتن بالشام» (أخرجه أحمد

அரபு நாடுகளில் ஈமானிய வெளிப்பாடு குறையும் என்ற செய்தி இதில் உண்டு.

பேர் ஆபத்து வரும் நேரத்தில் ஒதுங்க தகுந்த இடம் சிரியாவே

عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «سَتَخْرُجُ نَارٌ فِي آخِرِ الزَّمَانِ من حَضْرَمَوْت تحشرُ الناس»، قلنا: "فماذا تأمرنا يا رسول الله؟" قال: «عليكم بالشام» (أخرجه أحمد


ஈஸா அலை அவர்களின் வருகை சிரியாவின் வழியாகத்தான்.

عن أوس بن أوس الثقفي رضي الله عنه أنه سمع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وعلى آله وسلم يقول: «ينزل عيسى بن مريم عليهما السلام عند المنارةِ البيضاء شرقي دمشق» (أخرجه الطبراني

 சிரியா சரியும் எனில் மோசமே!

عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أبيه رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم: «إِذَا فسدَ أهلُ الشامِ فَلا خيرَ فِيكُمْ، لا تزالُ طائفةٌ من أُمتي منصورين، لا يضرُّهم مَنْ خَذَلَهم حَتَّى تقومَ الساعةُ» (أخرجه أحمد

இன்று ஷாமின் கனிசமான பகுதி இஸ்ரேலிடம் இருக்கிறது. உலக அளவில் இது வே முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு கவலைகளுக்கும் பெரிய காரணமாக இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

அரபு நாடுகளிடம் என்ன வளம் இருந்தும் உலகில் ஒரு துளி செல்வாக்கு இல்லை. காரணம் அவர்களது செல்வாக்கை இஸ்ரேல் முடக்கிப் போட்டிருக்கிறது. சிரியா முற்றிலுமாக மீட்கப்படும் போதுதான் முஸ்லிம்களின் செல்வாக்கு நிமிரும்.

 முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளுக்குரிய நிலம் ஷாம்!

  عن أبي هريرة رضي الله عنه أنه سمع رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يقول: «إذا وقعت الملاحِمُ بعث الله من دمشقَ بعثًا من الموالي، أكرمَ العرب فرسًا، وأجودهم سلاحًا، يؤيدُ الله بهم الدين» (أخرجه ابن ماجة

எல்லாம் வல்ல இறைவன் உலக முஸ்லிம்களின் மீட்டுத்தரும் நிலம் என பெருமானார் குறிப்பிட்ட சிரியாவின் அமைதி செழிப்பு செல்வாக்கு ஆகியவை விரைவில் மீள் உருவாக்கம் தவ்பீக் செய்தருள்வானாக!

 

 

 

 

 

 

 

 

 

 

   

2 comments:

  1. Anonymous6:16 PM

    மாஷா அல்லாஹ் அருமை

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்... முழுமையாக படித்தேன்... அருமையான (பதிவு) படைப்பு... அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்...

    ReplyDelete