إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ
وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ
مِنْ وَالٍ
நாடு சுதந்திரம் பெற்ற 67 ம் ஆண்டை வெகு சிறப்பாக கொண்டாடினோம்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு ஒரு முக்கியச் சிறப்பு இருக்கிறது.
நமது சுதந்திரப் போராட்டம் தான் உலகின் பல நாடுகளிலும் சுதந்திர வேட்கை உருவாக காரணமாக இருந்தது. நமது சுந்தந்திரத்திற்கு பிறகு தான் உலகின் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன.
உலகின் 90 நாடுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்தன, இந்தியாவில் தான் சுதந்திரத்திற்கான முதல் மணி ஓலித்தது. அதனால் இன்றும் உலகின் பல நாடுகள் சுதந்திரக்காற்றை சுவாசித்ததில் நமக்கு தம்பியாகவோ தங்கையாகவோ தான் இருக்கிறார்கள்.
1947 ஆகஸ்ட் 15 ம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவின் முதல் பாரளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஜவஹர்லாக் நேரு சொன்னார்.
When the world in deep sleep india is awaking
உலகம் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிற போது இந்தியா கண் விழிக்கிறது.
இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதில் முன்னணியில் இருக்கிறது என்ற பெருமிதத்தில் தான் நேரு அவ்வாறு சொன்னார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு.
இங்கு நடை பெற்றது போல வகைவகையான போராட்டங்கள் உலகில் வேறெங்கும் நடை பெற்றிருக்க முடியாது.
ஆயுதங்களை கொண்டும் சட்டங்களை புறக்கணிப்பது மூலமும் ஆதிக்க சக்திகளை இந்தியர்கள் எதிர்த்தார்கள். கைராட்டை நூற்றும் கதராடை அணிந்தும் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். அந்நியத்துணிகளை எரித்தும் ஆங்கிலேயர் தந்த பட்டங்களை துறந்தும் எதிர்த்தார்கள். பள்ளிக்கூடங்களை புறக்கணித்தும் உப்பு அள்ளியும் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியும் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். கப்பலோட்டி எதிர்ப்பை காட்டினார்கள். கப்பம் கட்ட மறுத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஒரு சுதந்திரப் போராட்டத்தில் இத்தனை வகையான போராட்ட முறைகளை இந்தியாவில் தவிர வேறெங்கும் பார்த்திருக்க முடியாது.
இதில் முஸ்லிம்களின் பங்கு முதனமையாக இருந்தது.
ஆங்கிலேயர்களை எதிர்ப்பதிலும் சுதந்திரத்திற்கான போராட்டத்திலும் தங்களது சதவீத சக்திக்கு மேலாகாவே முஸ்லிம்கள் போராடினார்கள் என குஷ்வந்த் சிங் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
1857 ல் நடை பெற்ற முதலாவது சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு ரங்கூனில் சிறை வைக்கப் பட்டிருந்த மன்னர் பஹ்தூர் ஷா ஜாபரிடம் ஆங்கில அதிகாரி ஹட்சன் இரண்டு தட்டுக்களை துணியால் மூடி கொண்டு வந்து “ இது ஆங்கில் அரசு உங்களுக்கு அனுப்பியுள்ள காலை உணவு என்று சொன்னான். பஹதூர் ஷா தட்டுக்களை திறந்து பார்த்தார். இரண்டு தட்டுக்களிலும் அவருடை இரண்டு மகன்களுடைய தலை வைக்கப்பட்டிருந்தது. பஹதூர் ஷா தாங்கிக் கொண்டார். உங்களுக்கு அழுகை வரவில்லையா? என ஹட்ஸன் கேட்டான். பஹ்தூர் ஷா சொன்னார். அரசர்கள் அழுவதில்லை.
இழப்புகளுக்கு எந்த விதத்திலும் அஞ்சாது முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர், மார்கக் அறிஞர்கள் முன்னின்று போராட்டங்களை நடத்தினர். ஒரு முறை நூற்றூக்கணக்கான ஆலிம்கள் தூக்கிலிடப்பட்டனர்.
அந்தமான சிறச்சாலை முஸ்லிம் கைதிகளுக்காகவே கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது,
இந்தியச் சுதந்திரத்தின் அடையாளமாக இருந்த கதரடைக்கு கத்ர் மரியாதைக்குரியது என்று பெயர் வழங்கியதே முஸ்லிம்கள் தான்.
மாப்பிள்ளை கிளர்ச்சியார்கள்
கேரளாவில் கைது செய்யப்பட்ட மாப்பிள்ளை கிளர்ச்சியார்கள் இரயில் வண்டியின் சரக்கு வாகன்களில் கூட்டம் கூட்டமாக ஏற்றப்பட்ட போது கோவை இரயில் நிலையத்தில் அந்த வாகன்களில் அவர்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்த வரலாற்றை யாரும் மறந்திருக்க முடியாது.
பொக்காத்துரில் உயிரிழந்த மாப்பிள்ளை முஸ்லிம்களின் எண்ணிக்கை
600. பட்டாம்பியில் உயிரிழந்தவாகளின் எண்ணக்கை 500. கைது செய்யப்பட்டு திரூலிருந்து கோயம்பத்துருக்கு சரக்கு ரயிலின்
காற்றுப்புகாத பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டு கொண்டு வரும்போதுமூச்சுத்திணறி இறந்த
மாப்பிள்ளைகளின் எண்ணிக்கை 55 என்று 1921 செப்டம்பா 1 - இல் வௌயான தி இண்டிபென்டன்ட்
பத்திக்கை கூறியது.*
ஹஜ்ரத் மொஹானி
1921 -இல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில பூரண சுயராஜ்யம் தீர்மானத்தை முதன் முதலாக முன்மொழிந்து ஹஜ்ரத் மொஹானி ஆவார். அப்போது காந்திஜி அதை எதிர்த்தார்.
ஆனால் 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அதே புரண சுயராஜ்யம் கோக்கையை காந்திஜியே முன் மொழிந்தது வரலாறு
மிகச் சிறந்த எழுத்தாளராள ஹஜ்ரத் மொஹானி அவர்கள் தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக உருது முஹல்லா என்ற பத்திக்கையை ஆரம்பித்தார் அப்பத்திக்கை பிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.
ஒருமுறை உருது முஹல்லாவில் பிட்டீஷாருக்கு
எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய
சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆக்கவிதையை
ஏழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது.
அதற்கு ஹஜ்ரத் மொஹானி மறுத்து விட்டார். கவிதையைப் பிரசுத்த பத்திக்கையின் ஆசியர் நான்
எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது
நடவடிக்கை எடுங்கள் என்று நோட்டீஸுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.
ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது
நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்களித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை
வழங்கியது. உருது முஹல்லா பத்திக்கையைத் தடை செய்தது. அப்பத்திக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு
சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.
யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள்
இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா? என்று அன்னாடம் கேட்டபோது அது
யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தை
களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திக்கையில் பிரசுத்ததற்காக நான் பெருமைப் படுகிறேன்.
அதற்காக எனக்கு இத்தணடனை என்றால் என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு
ஏற்கிறேன்!. - என்று பதிலளித்திருக்கிறார்.
ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது
செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. அக்குழந்தையை ஈன்ற அத்தாய்
தன் கணவன் திருமுகத்தைப் பார்க்கவும் வாசைக்காட்டவும் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு
ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைகிறார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக்
கூற ஆங்கில அரசு மறுத்து விடுகிறது. மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும்
அலைந்த அத்தாய் இறுதியில் தன் கணவனைச் சந்திக்கிறார்.
தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த ஹஜ்ரத் மொஹானி அவர்கள் சிறைக் கம்பிகளினூடே கைகொடுத்து குழந்தையை வாங்கி முத்தமிடுகிறார். தன் குழந்தைக்கு ஒரு தகப்பன் முத்தமிட்டது குற்றமா?
ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது.சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. சுறைச்சாலையில் ஹஜ்ரத் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது
வள்ளல் ஹபீப்
1943 ஜுலை 2 - ஆம் தேதி சிங்கப்பீரில் ஆஸாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்கால்க சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும்: ஆசாத் ஹிந்த் பவ்ச் என்ற இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்புர் மலேசியா பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் உன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். கூடிஇருந்த அந்நகரத்து வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது தேசவிடுதலைக்காகப் போராடும் நம் இநிதிய தேசிய ராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள் - என்று வேண்டுகோள் விடுத்தார். வருகைதந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசி எங்கள் வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம் என்று அறிவித்தனர். இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி சற்று கோபத்துடன்
தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் 10 சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்? நீங்கள் கணக்குப் பார்த்து நிதி வழங்க பார்க்கின்றிரீர்களே !- என்று பேச கூட்டத்திலிருந்து தலையில் தொப்பி தாடியுடன் மதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார். வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?
ரங்கூன் மாநகால் எனக்குச் சொந்தமான
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான்
எழுதி வைக்கிறேன் என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில்
இடம் பெற்றருந்தன. அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச்
சொந்தக்காரரான முகம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக
இவர் தான் ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.
இவ்வாறு நேதாஜி படை நடத்துவதற்கான
பொருளாதாரப் பிண்ணனியை உருவாக்கிக் கொடுத்தவர்களுள் பெரும்பாலோர் கீழை நாடுகளில் வாழ்ந்த
முகம்மது ஹபீப் போன்ற முஸ்லிம் தனவந்தர்களாவர்.
(ஜெயமணி சுப்பிரமணியம் நேதாஜியின்
வீப்போர் இரண்டாம் பாகம் பக்கம் 181)
.அமீர் ஹம்சா
எம்.கே.எம்.அமீர் ஹம்சா. ஏண்பது
வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத்
துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வா வழங்கியவராவார்.
1943 இல் நேதாஜி ரங்கூனுக்கு
முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக
ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.
உமர் சுப்ஹானி
பம்பாயின் மிகப் பொய பஞ்சாலையின்
அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நோல் சென்று திலகர் நினைவு சுயராஜ்ய
நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே
திருப்பிக் கொடுத்து சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி
சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். அந்நியத்
துணி பகிஷ்காப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது அந்நியத் துணிகளை
உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எயுட்டலாமா? என்று காந்திஜி கேட்டார். அதற்கு என் பஞ்சாலை இதைவிட
வேறு ஒரு நல்ல காயத்திற்குப் பயன்படவாப் போகிறது
என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார். அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் தின்னக் கொடுக்கும்
எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.
ஆஙிகில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தொந்தும் தன் பஞ்சாலையை
அந்நியத் துணிகளை எயுட்டும் களமாக அமைத்துக் கொடுத்ததோடு 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எயுட்ட வழங்கினார்.
1921 அக்டோபர் 9 ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எயுட்டும் மற்றொரு
நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. உத்தமபாளையத்திலிருந்து போடிநாயக்கனூருக்கு செல்லும்
வழியில் உள்ள ஓர் அழகிய கிராமம் கோமபை உ.ம.சே
முஹைதீன் பிள்ளை சாஹிப்
ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது
சேட்
1905 - இல் சுதேசிக் கப்பல்
கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி. சுப்பிரமண்ய சிவா சர்க்கரை செட்டியா
ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசாத்தார். சுதேசிக் கப்பல் கம்பெனி
பங்குகளைத் தான் வாங்கியதுடு உத்தமபாளையம்கம்பம் சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள்
பலரைப் பங்குதாரர்களாக்கிக் கொடுத்தார்.
வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும்
முஙற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவா ஹாஜி ஏ.ஆர். பக்கீர்
முகம்மது சேட் ஆவார். ரூபாய் இரண்டு வட்சம்
மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பென்
சார்பாக வாங்கினார்.
மௌலானா முகம்மது அலி
1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற
மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பொயார் அவ்வரவேற்புரையின்
போது :
காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது.
ஆனால் அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்!
என்றார். அந்த அளவிற்கு தனது
தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது
அலி. 1930 - இல் லண்டனில் நடந்த
வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது. தேச நலனுக்காக
தேக நலனையும் பொருட் படுத்தாமல் பேசுகிறார். குல அவகாசத்தை மற்ந்து இரண்டு மணி நேரம்
ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு அவரது உரையைக் கேட்டது.
மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி
வார்த்தைகள் :
என் தேசத்திற்கு நான் திரும்ப
விரும்புகிறேன். (என்று உரத்த குரலில் கூறியவர்) அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது
எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே
சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை.
நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே
எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக
ஒரு கல்லறை கொடுங்கள் !ழூ
* ‘’I Want to go back to my country’’. He said in a loud voice. ‘’If I can
go back with the substance of Freedom in my hand. Otherwise Iwill not go back
to a slave country. Iwill even prefer to die in a foreign country so long as it
is a Free Country,and if you do not give us Freedom in India, You will have to
give me a grave here.’’
- Shan Muhammad,
Freedom Movement in India-
The Role of Ali Brothres, P.231.
லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி
பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். அவர்
எண்ணம போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும் அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில்
அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம்
என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன. இறுதியாக பைத்துள்
முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க
மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் அல்-அக்ஸா பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேளலானா முகம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது
புன்த கஃபா ஆலயத்தின் திரைசீரையைப் பிடித்து கண்ணர் மல்கியவாறு கேட்ட பிரார்த்தனை
:
இறைவா...
என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத்
தா !
சுதந்திரம் பெற்ற இந்தியாவில்
இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா
!
இந்த நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்குமான
வாழ்விற்கு இந்தியர்களாகிய நாம் முயற்சி செய்யவும்
போராடவும் கடமை பட்டிருக்கிறோம்.
67 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் போராளிகளாகவும்
வள்ளல் களாகவும் இருந்த முஸ்லிம்களின் நிலை மிகவு வருத்த்திற்கு குரிய நிலையில் இருக்கிறது.
இந்தியாவில் 14 கோடி முஸ்லிம்கள் இருப்பதாக குறிப்பிடும் சச்சா குழு அவாகள் எவ்வளவு மேசமாக பாதிக்கப் பட்டிருக்கிறாகள் என்பதையும் அவாகளது பின்னடைவை சா செய்வதற்கு எத்தகைய விவான தளங்களில் நடவடிக்கை தேவை என்பதையும் மிகுந்த எச்சாக்கையோடு பதிவு செய்திரக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிதத்தினராக இருக்கின்றனா. ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் அவாகள் உய விகிதாச்சாரத்தில் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாகளில் 3 சதவீதத்தினா தான் முஸ்லிம்கள். சாவதேச விவகாரங்களை தீமாணிக்கிற ஐ.எப்.எஸ் அதிகாகளில் 1.8 சதவீததினராகவும் ஐ.பி.எஸ் அதிகாகளில் 4 சதவிததத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் இருக்கிறாகள்.
மத்திய சாவ் காவல் படை எல்லை பாதுகாவல் படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் 3.2 சதவீதத்தினராகவும் மாவட்ட நீதிபதிகளில் 2.7 சதவீதத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் பதவி வகிக்கிறாகள். மத்திய மாநில அரசு ஊழியாகளின் மொத்த எண்ணிக்கையில் 4.9 சதவீதத்தினா மட்டுமே முஸ்லிம்கள்.
முஸ்லிம்களில் 4 சதவீதத்தினா தான் பள்ளிப்படிப்பை தாண்டி கல்லூரிக்கு செல்கிறாகள். 7.2 சதவீதத்தினா தான் உயாநிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறாகள் என்றும் பட்டமேற்படிப்பு படித்தவாகள் 1.2 சதவிதத்தினா தான் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஓரு அதிச்சியளிக்கிற செய்தியாக தலித்துகளைவிட முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கிறாகள் என்ற உண்மையை புள்ளி விபரங்களோடு சச்சா அம்பலப்படுத்துகிறா.
இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்களில் 94.8 சதவீதம் போ வறுமைக்கோட்டுக் கீழே இருக்கிறாகள். இந்திய நகரங்களில் இருக்கிற முஸ்லிம்களில் 28.3 சதவீதம் போ மிக மோசமான வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வதாக குறிப்பிடுகிற சச்சா குழு இந்தியாவில் இந்நிலையில் வாழ்பவாகளின் மொத்த சதவீதமே 22.8 தான் என்று குறிப்பிடுகிறது.
நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்தகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவாகளின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது.
சதவீதமாக இருக்கிறது.
தலித்துகளில் 23 சதவீதத்தினருக்கு
குழாய் குடிநீ கிடைக்கும் போது முஸ்லிமகளில் 19 சதவிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.
தலித்துகளில் 32 சதவீதம்
பேருக்கு ரேஷன் காடு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிததினரே ரேஷன் காடு வைத்திருக்கின்றனா.
பொதுத்துறை (7.2) சுகாரத்துறை (4.4) ரயிலவே துறை (4.5) போன்ற பல்வேறு துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின்
பங்கு குறைவாகவே இருக்கிறது.
முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவீதத்தினாதான் சொந்தமாக டிராக்டா வைத்திருக்கிறாகள். ஒரு சதவீதத்தினா
தான் நிலத்துக்கு நீபாய்ச்ச பம்ப்செட் வைத்திரக்கிறாகள்.
எல்லா வற்றுக்கும் மேலாக சச்சா குறிப்பிடுகிற முக்கியமான விசயம்
முஸ்லிம்களுக்கு அவாகளது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம்
வழங்கப்பட வில்லை என்பதாகும். தற்போதைய மக்களவையில் 543 உறுப்பினாகள் இருக்கிறாகள் என்றால் முஸ்லிம்களின்
மக்கள் தொகைக்கு சச்சா வழங்கும் எண்ணிக்பைபடி பாத்தாலும் சுமா 75 போ முஸ்லிம் எம்.பி க்கள் இருக்க வேண்டும்.
ஆனால் இப்பொதைய மக்களவையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33 மட்டுமே!
மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவாகள் முஸ்லிம்கள்.
அது போல சோகளில் வாழபவாகளிலும் முஸ்லிம்களே அதிகம். இவற்றில் தலித்துகளைவிட முஸ்லிம்கள்
மோசமாக இருக்கிறாகள் என்பது போன்ற தகவல்கள் பெருமைமிகு சமுதயாத்தின் அந்தஸ்த்திற்கும்
அடையாளத்திற்கும் சிறிதும் பொருத்தமானதல்ல.
முஸ்லிம்கள் சுதந்திர இந்தியாவில்
தங்களது இப்போதைய நிலை குறித்த உணர்வை பெற வேண்டும், இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்ய
வேண்டும் என்று யோசித்து செயல்பட வேண்டும்.
இன்று நமக்கு எதிராக செய்யப்படுகிற பிரச்சாரங்கள் அனைத்தும் நமது முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே செய்யப்படுகின்றன. நாம் நமது முன்னேற்றத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் கவனம் கொண்டு செயல் பட வேண்டும்.
உடனடியான் தீர்வுகளை விட நீண்ட கால நோக்கிலான தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும்
உணர்ச்சிவசப்படுகிற வழிமுறைகளை அறிவு வழி சார்ந்த ,சந்தர்ப்ப சூழ்நிலைகளை புரிந்த செயல்பாடுகள் மூலம் முயற்சி செய்ய வேண்டும்.
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ
وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ
مِنْ وَالٍ
Salute
ReplyDelete