وَالْفَجْرِ * وَلَيَالٍ عَشْرٍ
ஒரு காலத்தில்
ஹஜ் மிகுந்த சிரமத்திற்குரிய பயணமாக இருந்தது.
ஹஜ்ஜில் காணாமல்
போகிறவர்கள் மரணமடைகிறவர்களின் எண்ணிக்கை இப்போதிருப்பதை விட அதிகமாக இருந்தது, கபனாடையை
கையில் வைத்துக் கொண்டுதான் ஹஜ்ஜுக்குப் புறப்படுவார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால்
போக்கு வரத்து வசதிகளும் தொலைத் தொடர்பு வசதிகளும் வாழ்க்கைச் சாதனங்களும் பெருகி விட்ட
சூழலில் ஹஜ் அச்சமற்றதாகவே மாறிவிட்டது. (அல்ஹம்துலில்லாஹ்.)
பல்லாயிரம் மைல்
களுக்கு அப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட நாட்களில் பெருந்திரளாக மக்கள்
ஒன்று கூடுகிற போதும், அதிக அசெளகரியங்கள் இல்லாமல் பாதுகாப்பாகவே மக்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி
வந்தனர்; நடை கால்வலி என்ற சிரமத்தை தவிர ஹாஜி வேறெந்த சிரமத்தையும் அனுபவிப்பதில்லை.
ஜம்ரா பாலத்தில்
தான் பெரும்பாலும் ஹஜ்ஜில் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியாகி வந்தனர். 2006ம்
ஆண்டில் ஜம்ராவில் கூட்ட நெரிசலில் சுமார் 300 பேர் ஷஹீதானார்கள். 2007 ல் பாலம் பெரிதாக விரிவு படுத்தப்பட்டு சீரான
ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் எத்தகைய கூட்டத்திலும் ஜம்ராவில் பிரச்சனைகள் இல்லை.
. ஜம்ராவிற்கு வருகிற வரை கூட நெரிசல் இருக்கும் ஜம்ராவில் நெரிசல் இருக்காது என்ற
சூழ்நிலை ஏற்பட்டிருந்தது
மினாவிலும் அரபாவிலும்
முஸ்தலிபாவிலும் இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடினாலும், அவர்களில் பலர் வயோதிகர்களாக
நோயாளிகளாக இருந்தாலும். அந்த மைதானங்களின் சுகாதார ஏற்பாடுகள் உணவுக்கான வசதிகளும்
மாஷா அல்லாஹ் ஆச்சரியகரமாகவே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முகம் சுளிக்கவோ அருவருப்படையவோ
அச்சப்படவோ கூடிய சூழல் பெரும்பாலும் இல்லை.
உணவு சுகாதாரம்
பாதுகாப்பு ஆகிய வசதிகள் மேம்பட்ட ஹஜ் என்ற நிலையை எட்டியிருந்த நிலையில் கடந்த வாரம்
அல்லாஹ்வின் நாட்டப்படி ஹரம் ஷரீபின் வளாகத்திலேயே கண் மூடித்திறப்பதற்குள் 111 பேர்
ஷஹீதாகவும் 330 க்கும் மேற்பட்டோர் காயமடையவுமான விபத்து எதிர்பாராத விதமாக நடை பெற்று
விட்டது/
இன்னாலில்லாஹி
ஹரம் ஷரீபில் மக்கள்
தன்னைப் பற்றிய சுய சிந்தனை கூட இல்லாதவர்களாக நாவு திக்ரால் நனைந்திருக்க, அல்லது
கஃபாவின் ஈர்ப்பில் மனம் இலயித்திருக்க நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் தவாபு
செய்து கொண்டும் இருப்பார்கள். அல்லாஹ்வின் அடிமைகளாக மட்டுமே அந்த வளாகத்தில் சுற்றி
வருகிறார்கள். ஊண் உறக்கத்தை மறந்தவர்களாக வலம் வந்து கொண்டிருப்பார்கள்.
அந்த வெள்ளிக்கிழமை
ஜும் ஆ தொழுகை முடிந்த பிறகு இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இம்தியாஸ்,
தன்னுடைய மனைவியை வா அறைக்குப் போய் சாப்பிட்டு வரலாம் என அழைக்கிறார். மனைவி நீங்கள்
நீங்கள் போய் சாப்பிட்டு வாருங்கள் என கணவனை அனுப்பி வைத்து சபாவின் ஓரமாக உட்கார்ந்து கொள்கிறார். அல்லாஹ்வின் அருள்
பொழிவாக மழைச் சாரல் விழுந்து கொண்டுருக்கிறது. அச்சுறுத்துகிற வகையில் காற்று வேகமாக
சுழன்றடிக்கிறது. எந்தச் சூழலிலும் தவாபு மட்டும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அஸருக்குப் பிந்திய அந்த மாலை நேரத்தில் நிமிட நேரத்தில் ஹரமின் புதிய விரிவாக்கப்பணிக்காக
சலாம் வாசலுக்கு வெளியே பிரம்மாண்டமாக நிலை நிறுத்தப்பட்டு 2011 லிருந்து பணியீருந்த
பிரம்மாண்ட கிரேன் வீசும் காற்ற எதிர்த்து நிற்க முடியாமல் கீழே முறிந்து விழுகிறது.
ஹர்மிலிருந்து
வெளியேறப் பிடிக்காமல் உண்ணவும் உறங்கவும் போகாமல் அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட்டிருந்த
அல்லாஹ்வின் விருந்தாளிகள் தீடீர் தாக்குதலுக்கு ஆளானார்கள். கோவை நகரைச் சேர்ந்த மூன்று
குழந்தைகளுக்குத் தாயான முஃமினாவும், சபாவில் இருந்த இம்தியாசின் மனைவி உட்பட பலரும்
ஷஹீதானார்கள் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் ஷஹீதானார்கள். 19 பேர் காயமடைந்தனர். பலர் தமது உறுப்புக்களை இழந்தனர், பலர் காயமுற்றனர்.
உலக முஸ்லிம்களின்
இதயம் இந்தச் செய்தியை கேட்டு துடி துடித்துப் போனது. யா அல்லாஹ் என கைகளை உயர்த்தி
துஆ செய்யாதோர் யாரும் இல்லை,
சவூதி அரசு கண்ணீர்
வடிக்கிறது. கணக்கற்ற பணத்தை ஈட்டுத் தொகையாக வாரி வழங்குகிறது. உயிரிழந்தவர்களுக்கு
ஒண்ணே முக்கால் கோடி, காயமடைந்தவர்களுக்கு முக்கால் கோடி என கொட்டிக் கொடுக்கிறது. விபத்திற்கான காரணம் பலமான காற்று என்றாலும் கிரோன் சரியான பொஷிஸனில் இருக்க வில்ல என்பதால் சவூதியின் பிரபல கட்டிட காண்டாரக்டர் கம்பெனியான பின்லாடன் கம்பெனியின் மீது விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி பக்ரு பின் லேடன் உள்ளிட்ட அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மனிதர்களே இப்படி
மனமிறங்குகிற போது அல்லாஹ் இந்த ஷஹீதுகளுக்கு தரும் கூலி அபரிமிதமானதாக இருக்கும்,
சந்தேகம் இல்லை.
புதுமாப்பிள்ளையாக
மனைவியுடன் தங்கிருந்த ஹன்ழா ரலி உஹது யுத்தத்திற்கான அழைப்பை கேட்டதும் அல்லாஹ்விற்காக
குளிக்காமல் அப்படியே கிளம்பினார். யுத்தத்தில் ஷஹீதானார். அவருக்கும் அவரது பாரம்பரியத்திற்கும்
பெரும் சிறப்பை அல்லாஹ் வழங்கினான்
استشهد حنظلة يوم أحد قتله شداد بن الأسود مع أبو
سفيان اشتركا في قتله، لحق بأحد صبيحة عرسه فاستشهد
وغسلته الملائكة بنص الحديث، ولما علم رسول الله بمقتله قال: ((إني رأيت الملائكة
تغسل حنظلة بن أبي عامر بين السماء والأرض بماء المزن في صحاف الفضة))
قال أبو
أسيد الساعدي: فذهبنا فنظرنا إليه فإذا رأسه يقطر ماء. ولما
سئلت زوجته عن ذلك قالت: خرج وهو جنب لما سمع الهيعة (منادي الجهاد)، فقال :
((لذلك غسلته الملائكة))
فلقب من يومها بـ ((غسيل
الملائكة)) وقد افتخرت به الأوس على الخزرج كما جاء في الخبر الذي رواه قتادة عن
أنس قال: افتخرت الأوس والخزرج فقالت الأوس: منا غسيل الملائكة
ولد لحنظلة عبد الله، فكان
بنوه يقال لهم: بنو غسيل الملائكة.
தங்களுக்கு இழப்புகளுக்கு
ஏற்படும் போது “யா அல்லாஹ் இது உனக்காக நடந்தது என்று சொல்வது முன்னோடி முஃமின் களின்
வழக்கம்.
உர்வா ரஹ் அவர்களின்
காலை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. கால்
துண்டித்து எடுக்கப்பட்ட பின் அந்தக் காலைப் புரட்டிய படி உர்வா பேசினார். அல்லாஹ்வுக்குத்
தெரிய்ம் நான் இந்தக் காலை ஒரு பாவத்திற்கும் அழைத்துச் செல்லவில்லை.
والتابعي
الجليل عروة بن الزبير أحد فقهاء المدينة المنورة رحمه الله تعالى عندما أرادوا أن
يقطعوا رجله ... طلبوا منه أن يتعاطى مخدراً حتى لا يشعر بالألم .
ومعلوم أن
ذلك يجوز للضرورة ولكنه أبى ذلك ورعاً منه وتقوى وقال لهم: أعوذ بالله أن أستعين
بمعصية الله على ما أرجوه من العافية إنه لا يريد أن يغفل عن الله تعالى قال لهم:
دعوني أصلي ثم افعلوا ما بدا لكم وحقاً فإنه كبر ودخل في الصلاة وبتروا ساقه
بمنشار ثم وضعوا رجله في زيت مغلي حتى ينقطع الدم وهو يصلي ثم أغمي عليه
فلما أفاق
قال لهم: قربوا لي ساقي فأخذ يقلبها ويقول: الله يعلم أني ما مشيت بك إلى معصيته
ما مشيت بك إلا إلى المساجد في الظلم وزيارة الإخوان والأرحام ثم قال: الحمد لله
على كل حال لئن أخذ الله فكثيراً ما أعطى ولئن ابتلى فكثيراً ما عافى.
நாளை மறுமையில்
ஹரமின் இந்த ஷஹீதுகள், யா அல்லாஹ் எங்களுடைய இந்த மரணம்,, இந்தக் கோலம் உன்னுடைய ஹரமில்
நடந்தது என ஷஹீதுகள் சொல்வார்கள் எனில் அல்லாஹ்வின் கருணை பொங்கிப் பிரவாக மெடுத்து
விடாதா?
இவர்களில் சிலர்
இஹ்ராமில் இருந்திர்க்க கூடும். இஹ்ராமுடன் மவ்தாகிறவன் தல்பியா சொல்லிய படி மஹ்ஷரில்
எழுந்து வருவார்;
இஹ்ராம் அணிந்த
ஒருவரை அவரது வாகனம் கீழே தள்ளி விட்டதில் ஷஹீதானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
ما روى ابن عباس ، أن رجلا
وقصه بعيره ، ونحن مع النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم :
اغسلوه بماء وسدر ، وكفنوه في ثوبين ، ولا تمسوه طيبا ، ولا تخمروا رأسه ، فإن
الله يبعثه يوم القيامة ملبدا . } وفي رواية " ملبيا " . متفق عليه .
இந்த ஷஹீதுகளின்
குடும்பங்களுக்கு அல்லாஹ் சிறந்த பரிகாரத்தை தர வேண்டும். காயம் பட்டவர்களுக்கு விரைவான
நிறைவான நிவாரணத்தை தர வேண்டும். நிச்சயம் அல்லாஹ் தருவான். முஃமின்களில் காலில் குத்துக்கிற
முள்ளுக்கு கூட நற்கூலி வழங்குகிற ரப்பு, இந்தப் பேரிழப்புகளுக்கு தகுந்த அல்ல அதற்கு
மேலாக ஈடு செய்ய மாட்டானா?
இந்த விபத்தில்
பலரும் தங்களுக்கு நெருகமானவர்களை இழந்திருக்கலாம். ஹாஜியாக திரும்பும் அவர்களை வரவேற்க
தயாராக காத்திருந்தவர்களுக்கு ஏற்பட்ட சோகம் அளவிடற்கரியது. அந்த சோகத்திலும் பாதிக்கப்பட்டோர்
அனைவரும் பொறுமை காத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரினால் அவர்களது உடல்களை
ஊருக்க அனுப்பத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக சவூதி அரசு கூறிய போதும்
யாரும் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அங்கேயே தம்மவரை அடக்கம் செய்ய கூறிவிட்டனர்.
கோவையைச் சார்ந்த
முஃமினா என்ற ஷஹீதுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை அதை விடச் சிறிய இரண்டு ஆண் குழந்தைகள்.
இந்த நிலையிலும் முஃமினா அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்டோரின்
குடுமத்தினர் தங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை அது எந்த இடத்தில் நடை பெற்றது – எப்போது
நடை பெற்றது என்பதை உணர்ந்து தாங்கிக் கொண்டனர். அல்லாஹ் அவர்களுக்கு உயர்ந்த கூலியையை
ஆறுதலையும் தரட்டும்.!
இந்த இழப்பை உணர்ந்து
கொள்ள முடியாத பருவத்திலிருக்கிற சிறு குழந்தைகளுக்கு இறைவா! நீயே பொறுப்பேற்றுக் கொள்!
இறைவா! நீயே பொறுப்பேற்றுக் கொள்வாயாக!
அல்லாஹ்விற்காக
சோதனைகளை பொறுத்துக் கொள்வதும் கழாவை பொருந்திக் கொள்வதும் அதிக நன்மையைப் பெற்றுத்தரும்.
·
عن أبي سنان قال: دفنت ابني سنانا وأبو طلحة
الخولاني على شفير القبر جالس، فلما أردت الخروج أخذ بيدي وأنشطني، فقال: ألا
أبشرك يا أبا سنان؟ قال: قلت: بلى، قال: حدثني الضحاك بن عبد الرحمن بن عرزب، عن
أبي موسى الأشعري أن رسول الله صلى الله عليه وسلم قال: «إذا مات
ولد العبد قال الله عز وجل لملائكته: قبضتم ولد عبدي؟، فيقولون: نعم، فيقول: قبضتم
ولد عبدي؟ فيقولون: نعم، فيقول: قبضتم ثمرة فؤاده؟ فيقولون: نعم، فيقول: ماذا قال
عبدي؟ فيقولون: حمدك واسترجع، فيقول: ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد»
·
أنا عبد العزيز بن عمر، أن النبي صلى الله عليه
وسلم قال: «كل عبد موكل به ملكان في مرضه، فإذا مرض، قالا:
يا رب، إن عبدك فلانا قد مرض، وهو أعلم به، فيقول: انظروا ماذا يقول؟ فإن صبر
واحتسب ورجا فيه الخير، أديا ذلك إلى الله، فيقول الله: فإني أشهدكم أنه إن رفعته
أبدلته دما خيرا من دمه، ولحما خيرا من لحمه، وغفرت له ذنبه، وإن قبضته أدخلته
الجنة، وإن جزع وهلع قال: إن رفعته أبدلته لحما شرا من لحمه، ودما شرا من دمه،
وعاقبته بذنبه، وإن عاقبته أدخلته النار».
அல்லாஹ் இனி எந்தச்
சிறு பிரச்சனையும் இல்லாது பாதுகாக்கப்பட்ட ஹஜ்ஜாக இந்த ஹஜ்ஜையும் இனி வரும் ஹஜ்ஜுக்களையும்
ஆக்கியருள்வானாக!
நமக்கும் ஒன்றுக்குப்
பல முறை ஹஜ்ஜு செய்கிற தவ்பீக்கை தந்தருள்வானாக!
துல் ஹஜ்ஜினுடைய
10 நாட்கள் அதிக மரியாதைக்குரியவை
وَالْفَجْرِ * وَلَيَالٍ عَشْرٍ
قال ابن عباس - رضي الله عنه -:
"إن الليالي العشر التي أقسم الله بها هي ليالي العشر الأول من ذي
الحجة"،
وعن عبد الله بن الزبير في تفسير
(وَلَيَالٍ عَشْرٍ) أوّل ذي الحجة إلى يوم النحر
فعَنْ ابْنِ عَبَّاسٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ
- صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: ((مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى
اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ)) فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ
وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ -: ((وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ
خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ))
இப்னு ஹஜ்ர் ரஹ் கூறும் காரணம்
الإمام ابن حجر - رحمه الله تعالى - حيث قال: "وَاَلَّذِي
يَظْهَرُ أَنَّ السَّبَبَ فِي اِمْتِيَازِ عَشْرِ ذِي الْحِجَّةِ لِمَكَانِ
اِجْتِمَاعِ أُمَّهَاتِ الْعِبَادَةِ فِيهِ وَهِيَ: الصَّلَاةُ، وَالصِّيَامُ،
وَالصَّدَقَةُ، وَالْحَجُّ، وَلَا يَتَأَتَّى ذَلِكَ فِي غَيْرِهِ"
இந்த
நாட்களில் நிறைவேற்றப்படுகிற வணக்கங்கள் அல்லாஹ்வை அடியார் உணர்ந்து நிறைவேற்ற
வேண்டிய வணக்கங்களாகும்.
இந்த வணக்கங்களில்
உயிரோட்டம் அழுத்தமாக இருக்க வேண்டும். கவனிக்கப்பட வேண்டும்.
ஹாஜிகள் ஹஜ்ஜை
நிறைவேற்றுகிற போது இஹ்ராமில் இருக்கிறார்கள்.
இந்த உலகத்தில்
அவர்களுக்குச் சொந்தமானமது எது என்பதை நினைவூட்டுகிறது.
வீடு குடும்பம்
வியாபாரம் மற்ற சவுகரியங்கள அனைத்தையும் விட்டு விட்டு மக்காவிற்கு சென்று .
·
மினா வில் சிரமான கூடாரத்தில் தங்கி,
·
அரபாவில் அடிமையைப் போல அல்லாஹ்விடம் மன்றாடி,
·
கூரையும் மெத்தையும் இல்லாத கட்டாந்தரையான முஸ்தலிபாவில் இரவைக்
கழித்து
·
சைத்தானை அடையாளப்படுத்தும் ஜம்ராவில் கல்லெறிந்து
·
ஒரு பித்தனைப் போல கஃபாவைச் சுற்றீ தவாபு செய்து.
·
சபா மர்வாவில் அங்குமிங்கும் ஓடி
·
ஒரு ஹாஜி என்ன செய்கிறார் ?
·
அவர் இந்த வழுபாடுகளில் எதை உணர வேண்டும் ?
ஹாஜிகள் ஹஜ்ஜை
நிறைவேற்றுகிற போது இஹ்ராமில் இருக்கிறார்கள்.
அது இந்த உலகத்தில்
அவர்களுக்குச் சொந்தமானமது எது என்பதை நினைவூட்டுகிறது.
இஹ்ராம் ஆடை
பணியாளர்கள் அடிமைகளின் ஆடையாகும்.
ஹாஜி மகிழ்ந்து
உரத்து முழங்கும், லப்பைக் என்ன சொல்லுகிறது ?
இதோ வந்து விட்டேன்
எஜமானே!
ஹஜ் முழுக்க
முழ்க்க ஒரு மனிதர் தன்னை படைத்த ரப்பை உணர்ந்து அவனுக்காக சகலத்தையு விட்டு அடிபணிந்து
நிற்க வேண்டும் என்ற சிந்தனையை உணர்த்து கிறது.
ஹாஜி சைத்தானை
கல்லெறிகிறார்.
அதுவரை சொல்லி
வந்த தல்பியாவை அத்தோடு நிறுத்திக் கொள்கிறார்.
கல்லெறிந்த
பிறகு இஹ்ராமிலிருந்து வெளியேறி சாதாரண நடவடிக்கைகளுக்கு திரும்புகிறார்.
சைத்தானை கல்லெறிகிற
செயல், சாமாணிய சிந்தனை அல்ல. ஹஜ்ஜை நிறைவு செய்கிற அந்தச் செயல் மகத்தான உணர்வுக்குரியவராக
அவரை ஆக்குகிறது.
மூன்று ஜம்ராக்களிலும்
சைத்தானை கல்லெறிகிறராரே சைத்தான் அங்கே தான்
இருக்கிறான் என்று அர்தத்தில் அல்ல.
சைத்தானை கல்லெறிகிற
போது ஹாஜி சொல்லுகிற வார்த்தையை கவனித்துப் பாருங்கள்!
بسم الله الله اكبر – رغما للشيطان ورضا للرحمن
சைத்தானை வெறுத்து - அல்லாஹ்வின் திருப்தியை நாடி என்கிறார்.
அவருடைய வாழ்க்கைப் பயணத்தை இலட்சியத்தை அது
உணர்த்து கிறது,
ஹஜ் நிறைவடையும் போது ஹாஜியின் மனதில் தோன்ற
வேண்டிய உறுதி மொழி என்ன வாக இருக்க வேண்டும் என்பத அது புலப்படுத்து கிறது.
துரதிஷ்டவசமாக இன்று இலட்சக்கணக்கில் ஹஜ்ஜுக்கு
மக்கள் பயணம் செய்கிறார்கள்
என்றாலும் இந்த உயிரோட்டத்தோடு – ஹஜ்ஜை உணர்ந்து
செய்பவர்கள் எத்தனை பேர் என்ற கேள்வி பிரதானமாக எழுந்து நிற்கிறது.
ஹஜ் செய்கிறவர்களும் நாளை நாமும் ஹஜ் செய்ய
வேண்டும் என்று ஆசைப்படுவோரும் தமது ஹஜ் உயிரோட்டமுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்க
வேண்டும்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!
நாம் ஹஜ்ஜுப் பெருநாளன்று குர்பாணிக்காக தயாராகிக்
கொண்டிருக்கிறோம்,
குர்பாணி மிகச் சிறந்த ஒரு வணக்கம்,
உங்களது குர்பானி பிராணியின் இரத்தம் தரையை தொடுவதற்குள்
உங்களுக்கான கூலி உறுதிப்படுகிறது,
عَنْ زَيْدِ بْنِ
أَرْقَمَ قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ
إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ
شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ
مِنْ الصُّوفِ حَسَنَةٌ إبن ماجة –
عن عائشة أن رسول الله
صلى اللهم عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم
إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وأن الدم ليقع من الله بمكان قبل أن يقع
من الأرض فطيبوا بها نفسا- ترمذي
அல்லாஹ்வுக்காக அவன்
சொன்ன கட்டளையை நிறைவேற்றுகிறேன் என்ற எண்ணத்தில் குர்பாணியை நிறைவேற்ற வேண்டும்.
அல்லாஹ்வுக்காக
சகலத்தையும் அர்ப்பணிக்க வேண்டிய கடமை – அது பிள்ளைகளாக இருந்தாலும் செல்வமாக இருந்தாலும்
அதை அர்ப்பணிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
என் இறைவன்
என்னிடமிருந்து இதை மட்டுமே கேட்டிருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ் . எல்லாம்
அல்லாஹிவிற்கு என்ற உணர்வுடன் குர்பானி எனும் வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.
பிராணியை அறுக்கிற போது
நாம் என்ன சொல்கிறோம்? கவனித்திருக்கிறீர்களா?
அல்லாஹும்ம! ஹாதா மின்க
இலைக்க!
அல்லாஹ்வே இது
உன்னிடமிருந்து உனக்காக!
என்ன அற்புதமான
இஸ்லாமிய வாழ்வியல் தத்துவத்தை குர்பானி
கற்பிக்கிறது.
மக்களில் சிலர் குர்பானி தேவையா? என யோசிக்கின்றனர், அந்த காசை
குமர்களின் திருமணத்திற்கு கொடுக்கலாமே என்று கருதுகின்றனர்.
ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன் “அப்படிச்
செய்யலாமா ஹஜ்ரத்” எனக் கேட்டார்.
குர்பானி ஏன் என சஹாபாக்கள் கேட்ட போது உங்களது தந்தை
இபுறாகீமின் சுன்னத்து என பெருமானார் (ஸல்) சொன்னார்கள் அதை அவருக்கு
நினைவூட்டினேன்.
இபுறாகீம் நபின் குர்பானி எத்தகைய மகத்தானது என நினைத்துப்
பாருங்கள்!!.
ஒன்றல்ல பல ஆடுகள் மாடுகள் ஒட்டகைகளை கொடுப்பீர்கள்.
உங்களது மகனுக்கு பதிலாக எத்தனை ஆடுகளை கொடுக்க
தயாராவீர்கள் யோசித்துப் பாருங்கள்!
பெருமானார் (ஸல்) அவர்கள் அப்படித்தான் பல ஆடுகளை ஒட்டகைகளை
குர்பானி கொடுத்தார்கள் என்று நான் சொன்னேன். நான் இப்படி யோசிக்க
தவறிவிட்டேன் ஹஜ்ரத் என்று அவர் கூறினார்.
குர்பானி விசயத்தில்
நிறைய அலட்சியப் போக்கை நாம் பார்க்கிறோம்.
இதனால் தவறான ஆசாமிகள்
இதை பணம் சம்பாதிக்கிற ஒரு வாய்ப்பாக ஆக்கிக் கொள்வதை பார்க்கிறோம். ஒரு அற்புதமான
வணக்கம் அற்ப வியாபாரமாகி வருகிறது.
இதில் கவனக்குறைவை
கலைவோம். இதற்காக எடுத்துக் கொள்கிற சிரமத்தை நமது அர்ப்பணிப்பாக கருதுவோம்.
அல்லாஹ் நமது
குர்பானியை ஏற்றுக் கொள்வானாக!
குர்பானி கொடுக்க நினைப்பவர்கள் துல் ஹஜ் பிறை தெரிந்தவுடன்
முடி நகம் வெட்டிக் கொள்ளக் கூடாது. அது சுன்னத்து.
· عَنْ
أُمِّ سَلَمَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ
رَأَى هِلَالَ ذِي الْحِجَّةِ فَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ مِنْ
شَعْرِهِ وَلَا مِنْ أَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ - نسائي
.
பிறை 9 ன் பஜ்ரு முதல் 13
ன்
அஸர் வரை ஜமாத்தாக –
தனியாக தொழுகிற அதாவாக கழாவாக தொழும் ஆண்கள் பெண்கள் அனைவரும் பர்ளு
தொழுகைக்குப் பின் தக்பீர் சொல்ல வேண்டு,
الشافعية قالوا: التكبير سنة بعد
الصلاة المفروضة، سواء صليت جماعة أو لا، وسواء كبر الإمام أم لا؛ وبعد النافلة
وصلاة الجنازة، وكذا يسن بعد الفائتة التي تقضي في أيام التكبير، ووقته لغير الحاج
من فجر يوم عرفة إلى غروب شمس اليوم الثالث من أيام التشريق
அல்லாஹ் அனைத்து வகையான
வணக்கங்களையும் அதன் உயிர்த்துடிப்போடு நிறைவேற்ற நமக்கு கிருபை செய்வானாக!
துல் ஹஜ் , ஹஜ் , குர்பானி , அரபா , பற்றிய முந்தைய பதிவுகள் தனியாக பதிவாகியுள்ளது.
மாஷா அல்லாஹ்...
ReplyDeleteகுர்பாணியின் தத்துவத்தை உணர்த்துவதோடு ஹரமில் ஷஹீதான ஹாஜிகளின் நினைவை மனதின் ஆழத்திலிருந்து கண்ணீருடன் வரவழைத்தது இந்த பதிவு...
அல்ஹம்துலில்லாஹ்
ஒரு தலைப்பில் மூன்று பயான்கள் நல்ல விஷயங்ஙள் ஷுக்ரன் ஜஸாகல்லாஹ்
ReplyDeleteAlhamdhulillah. Jazakallah.
ReplyDeleteJazaakallahu khairen.topic is very useful and made us understand well.
ReplyDeletearumai
ReplyDelete