வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 24, 2016

ஒன்றேனும் நன்றாய்

(தேர்தல் நெருங்கி வருகிற சூழலில் பரபரப்பாக அரசியல் வாதிகளைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
நம்பகத் தன்மைக்கும் மரியாதைக்கும் உரிய எந்த அம்சத்தையும் அரசியல் வாதிகளிடம் பார்க்க முடியாத நிலையில் நன்மைகளைப் பற்றிய அல்லது தீமைகளை விட்டு விலகி நிற்பதைப் பற்றி பொது மக்களுக்கு விரக்தி மேலிடுகிறது.
இனி எல்லாம் நல்லவன் கெட்டவன் வித்தியாசம் பார்க்க முடியாது என்று நினைப்புக்கு பொது மக்கள் வந்து விட்டார்கள்.
இந்த சூழ்நிலையில்  )                                             இரண்டு கருத்துக்களை மனதில் பதிய வையுங்கள்.
1.   மனித வாழ்வு நற்குணங்ககளை கடைபிடிப்பதாலும் தவறான விசயங்களை விட்டு விலகி நிற்பதாலும் அழகு பெறுவது

நேர்மையான வியாபாரி – இலஞ்சம் வாங்காத அதிகாரி ஆகியோர் தமது பொறுப்புக்களுக்கு மட்டுமல்ல மனிதத் தன்மைக்கு அழகு சேர்ப்பவர்கள் ஆவர்.
2.   நற்குணங்களில் ஏதாவது ஒன்றை பலமாக பற்றிப் பிடிப்பவர் அதே போல ஒரு தீமையை நான் செய்யவே மாட்டேன் என உறுதியாக நிற்பவர் நிச்சயமாக வாழ்வில் உயர் நிலையை அடைவார்.
ஒரு நல்ல குணத்தைப் பற்றி வாழ்ந்த்தால் சொர்க்கத்திற்கு சொந்தக் காரரான சஹாபி
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : " أَمَا إِنَّهُ سَيَطْلُعُ عَلَيْكُمْ مِنْ هَذَا الْبَابِ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ " . قَالَ : فَجَاءَ سَعْدُ بْنُ مَالِكٍ ، فَدَخَلَ ، فَنَظَرْنَا إِلَيْهِ فَغَبَطْنَاهُ ، ثُمَّ قَالَ الْيَوْمَ الثَّانِيَ مِثْلَ ذَلِكَ ، فَدَخَلَ سَعْدٌ ، ثُمَّ قَالَ الْيَوْمَ الثَّالِثَ مِثْلَ ذَلِكَ ، فَدَخَلَ سَعْدٌ ، فَلَمْ نَشُكَّ فِيهِ . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ : مَا أَنَا بِالَّذِي أَنْتَهِي حَتَّى أُبَايِتَ هَذَا الرَّجُلَ ، فَأَنْظُرَ إِلَيْهِ وَمَا عَمَلُهُ . قَالَ : فَأَتَيْتُهُ بَعْدَ الْعِشَاءِ الْآخِرَةِ ، فَضَرَبْتُ عَلَيْهِ الْبَابَ ، فَخَرَجَ إِلَيَّ ، فَرَحَّبَ بِي ، وَقَالَ : ابْنَ أَخِي ، مَا جَاءَ بِكَ ؟ قَالَ : قُلْتُ : حَاجَةٌ . قَالَ : فَنَقْضِيهَا أَوْ تَدْخُلُ ؟ قُلْتُ : بَلْ أَدْخُلُ . قَالَ : فَدَخَلْتُ ، فَثَنَى لِي عَبَاءَةً ، فَاضْطَجَعْتُ عَلَيْهَا قَرِيبًا ، أَرْمُقُهُ لِيَلِي جَمِيعًا ، كُلَّمَا تَعَارَّ سَبَّحَ ، وَكَبَّرَ ، وَهَلَّلَ ، وَحَمِدَ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى ، حَتَّى إِذَا قَامَ فِي وَجْهِ السَّحَرِ ، قَامَ فَتَوَضَّأَ مِنَ الْمَاءِ ، ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَسْجِدَ ، فَصَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً ، بِاثْنَتَيْ عَشْرَةَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ ، لَيْسَ مِنْ طِوَالَهِ ، وَلَا مِنْ قِصَارِهِ ، يَدْعُو فِي كُلِّ رَكْعَتَيْنِ بَعْدَ التَّشَهُّدِ وَالصَّلَاةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، بِثَلَاثِ دَعَوَاتٍرَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ، اللَّهُمَّ اكْفِنَا مَا هَمَّنَا مِنْ أَمْرِ آخِرَتِنَا وَدُنْيَانَا ، إِنَّا نَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ ، وَنَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ . فَاسْتَقْلَلْتُ صَلَاتَهُ ، وَقِرَاءَتَهُ ، وَدُعَاءَهُ ، وَظَنَنْتُ أَنَّهُ مَنَعَهُ مَكَانِي أَنْ يَصْنَعَ شَيْئًا قَدْ كَانَ يَصْنَعُهُ ، فَأَبَتْ نَفْسِي إِلَّا مُعَاوَدَتَهُ ، فَعَاوَدْتُهُ فِي مِثْلِ السَّاعَةِ الَّتِي أَتَيْتُ فِيهَا . قَالَ : فَخَرَجَ إِلَيَّ وَرَحَّبَ بِي ، وَقَالَ : يَا ابْنَ أَخِي ، لَعَلَّ بَيْنَكَ وَبَيْنَ أَحَدٍ مِنْ أَهْلِكِ شَيْءٌ ؟ قُلْتُ : لَا وَاللَّهِ يَا عَمِّ ، مَا بَيْنِي وَبَيْنَ أَهْلِي إِلَّا خَيْرٌ . قَالَ : فَهَاتِ حَاجَتَكَ . قُلْتُ : نَعَمْ ، سَوْفَ . قَالَ : فَتَدْخُلُ ؟ قُلْتُ : نَعَمْ . فَصَنَعَ مِثْلَ مَا صَنَعَ فِي اللَّيْلَةِ الْمَاضِيَةِ ، فَأَبَتْ نَفْسِي أَنْ تَطِيبَ ، حَتَّى عَاوَدْتُهُ الثَّالِثَةَ ، فَصَنَعَ مِثْلَ ذَلِكَ مِنَ الدُّعَاءِ ، وَمِثْلَ ذَلِكَ مِنَ الْقُرْآنِ ، وَمِثْلَ تِلْكَ الرَّكَعَاتِ . قَالَ : فَجَاءَ ، فَقَالَ : الصَّلَاةَ . فَقُمْتُ فَانْطَلَقْتُ أَنَا وَهُوَ ، فَصَلَّيْنَا صَلَاةَ الْفَجْرِ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، حَتَّى إِذَا خَفَّ النَّاسُ ، فَقُمْتُ إِلَيْهِ ، فَقُلْتُ : أَيْ عَمِّ ، حَاجَتِي الَّتِي بِتُّ عِنْدَكَ . قَالَ : نَعَمْ ، وَمَا هِيَ ؟ قُلْتُ : إِنَّمَا بِتُّ عِنْدَكَ لِيَزِيدَنِي اللَّهُ مِنْكَ ، وَمِنْ صَلَاةٍ ، وَمِنْ دُعَاءٍ ، وَقَدِ اسْتَقْلَلْتُ مَا كَانَ مِنْكَ ، وَظَنَنْتُ أَنَّهُ مَنَعَكَ مَكَانِي أَنْ تَصْنَعَ شَيْئًا كُنْتَ تَصْنَعُهُ . فَقَالَ : وَإِنَّمَا بِتَّ عِنْدِي مِنْ أَجْلِ ذَلِكَ ، وَلَسْتُ ضَعِيفًا مُقَصِّرًا ، هُوَ مَا رَأَيْتَ . قُلْتُ : إِنِّي أُذَكِّرَكَ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى ، وَأَخْلَاقَ الْإِسْلَامِ ، أَمْنَعَكَ مَكَانِي أَنْ تَصْنَعَ شَيْئًا كُنْتَ تَصْنَعُهُ ؟ قَالَ : اللَّهُمَّ لَا . فَلَمَّا قُمْتُ ، نَادَانِي : ارْجِعْ يَا ابْنَ أَخِي ، خَصْلَةٌ أُخْرَى ، آخُذُ مَضْجَعِي ، وَلَيْسَ فِي قَلْبِي غُمٌّ عَلَى أَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ . قَالَ ابْنُ عُمَرَ : هَذِهِ بَلَغْتَ بِهَا *
சொர்க்கத்தில் பிலால் (ரலி) அவர்களின் காலடிச் சத்ததை பெருமானார் கேட்டார்கள். அதன் இரகசியம் ஒரு நற்செயலை பிலால் ரலி தொடர்ந்து கடை பிடித்ததே!

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الْإِسْلَامِ فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ- البخاري 1149

இன்னொரு சஹாபியையும் இங்கு நினைவூட்டுகிறேன். அதி அற்புதமான வரலாறுகளுக்குச் சொந்தக்கார்.

حارثة بن النعمان الخزرجي
அவர் ஒரு ஹதீஸை கூட அறிவித்ததில்லை. ஆணால் அற்புதமான குணங்களுக்குச் சொந்தக்காரர்,

பெருமானார் (ஸல்) அவர்களின் வீட்டுக்கு அருகே வசித்தவர்.  அதற்காக மிகமிக எச்சரிக்கையாக நடந்து கொண்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் வீட்டில் உரையாடல்களில் ஈடுபடுவதை பார்த்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார். அவருக்கு ஏற்படுகிற சிரமங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

قال الواقدي : كانت له منازل قرب منازل النبي - صلى الله عليه وسلم- فكان كلما أحدث رسول الله أهلا تحول له حارثة عن منزل ، حتى قال : لقد استحييت من حارثة ، مما يتحول لنا عن منازله

ஜிப்ரயீல் அலை அவர்களை இரு முறை பார்த்திருக்கிறார். இரண்டாவது முறை பார்த்த போது பெருமானாரும் ஜிப்ரயீல் அலை அவர்களும் பேசிக் கொண்டிருந்தனர். அதனால் சலாம் சொல்லாமல் பெருமானாரைக் கடந்து சென்று விட்டார், அவரைப் பற்றி விசாரித்த ஜிப்ரயீல் அலை அவர்கள் சொன்னார்கள் இவர் சலாம் சொல்லியிருந்தால் நாங்கள் பதில் சொல்லியிருப்போம்,

قال حارثة بن النعمان  رأيت جبريل من الدهر مرتين : حين خرج رسول الله إلى بني قريظة ، مر بنا في صورة دحية ، فأمرنا بلبس السلاح ; و حين رجعنا من حنين ، مررت وهو يكلم النبي - صلى الله عليه وسلم- فلم أسلم . فقال جبريل : من هذا يا محمد ؟ قال :حارثة بن النعمان . فقال : أما إنه من المائة الصابرة يوم حنين الذين تكفل الله بأرزاقهم في الجنة ، ولو سلم لرددنا عليه . 

அவர் பெரும் கொடையாளி . அவருடைய கடைசி காலத்தில் பார்வை போய்விட்டது. வீட்டில் தன்னுடைய அறைக்கும் தொழுகிற இடத்திற்கும் இடையே ஒரு கயிற்றைக் கட்டி வைத்து அதை பிடித்தபடி நட்ந்து செல்வார், பக்கத்தில் ஒரு பையுல் பேரீத்தம் பழம் இருக்கும், எவரேனும் யாசகம் கேட்டு வந்தால் அந்தப் பையிலிருந்து பேரீத்தம் பழங்களை எடுத்து தானே கொண்டு போய்க் கொடுப்பார். நாங்கள் கொடுக்கிறோமே என்று வீட்டுக் காரர்கள் சொன்னால் மறுத்துவிடுவார், மிஸ்கீன்களுக்கு கொடுப்பது தீய மரணத்திலிருந்து காக்கும் என பெருமானார் (ஸல்) சொல்லக் கேட்டதாக  .

أن حارثة كف ، فجعل خيطا من مصلاه إلى حجرته ، ووضع عنده مكتلا فيه تمر وغيره ; فكان إذا سلم مسكين ، أعطاه منه ، ثم أخذ على الخيط حتى يأتي إلى باب الحجرة ، فيناول المسكين . فيقول أهله : نحن نكفيك . فيقول : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : مناولة المسكين تقي ميتة السوء .

( ஹாரிதா ரலி பற்றிய இந்த செய்திகள்   سير اعلام النبلاء வருகின்றன, )

இவ்வளவு நற்குணங்களுடைய மனிதர் சொர்க்கம் செல்வதற்கு ஒரே ஒரு முக்கியக்காரணம் இருந்தது.

சொர்க்கத்தில் அவர் குர் ஆன் ஓதும் சபதத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
காரணம்   وكان برا بأمه

அஹ்மதில் இந்த ஹதீஸ் வருகிறது. 22951

عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلْتُ الْجَنَّةَ فَسَمِعْتُ فِيهَا قِرَاءَةً قُلْتُ مَنْ هَذَا قَالُوا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ كَذَاكُمْ الْبِرُّ كَذَاكُمْ الْبِرُّ وَقَالَ مَرَّةً عَنْ عَائِشَةَ إِنْ شَاءَ اللَّهُ

மக்கள் உறுதியாக பற்றி நிற்கிற ஒரு நல்ல குணம் அல்லது நல்ல செயல் அவர்களது வாழ்வை மகத்தான தாக்கி விடுகிறது.
சில நபிமார்கள் குறித்து பேசுகிற போது அவர்களது குண இயல்புகளில் மிகச்சிறப்பானதை அல்லாஹ் சொல்லிக் காட்டத் தவறு வதில்லை.

واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا 

நபி இஸ்மாயீல் அலை அவர்கள் ஒரு வாக்குச் சொல்லிவிட்டால் அதில் அணுவளவும் தவறமாட்டார்கள், என்னை அறுங்கள் நான் பொறுமையாக இருப்பேன் என்று தந்தைக்குக் கொடுத்த வாக்கு முதல் பல உதாரணங்கள் அவர்களது வரலாற்றில் உண்டு,

வருகிறேன் என்று சொன்ன ஒருவரை எதிர்பார்த்து அங்கே கூடாரமடித்து தங்கினார் இஸ்மாயீல் (அலை)
وقال ابن جرير : 
 أن إسماعيل النبي ، عليه السلام ، وعد رجلا مكانا أن يأتيه ، فجاء ونسي الرجل ، فظل به إسماعيل وبات حتى جاء الرجل من الغد ، فقال : ما برحت من هاهنا ؟ قال : لا . قال : إني نسيت . قال : لم أكن لأبرح حتى تأتيني . فلذلك ( كان صادق الوعد . 

وقال ابن شوذب : بلغني أنه اتخذ ذلك الموضع سكنا . 

நபி மூஸா அலை அவர்களிடம் வெட்க உணர்வு மேலோங்கியிருந்தது,
ஒரு பெண்ணுக்கு பின்னால் நடக்க அந்த வெட்கம் அவரை அனுமதிக்கவில்லை, வழி காட்ட வேண்டிய பெண்ணை பின்னே வரச் செய்து வழி அறிந்து சுஐபு அலை அவர்களிடம் சென்றார்,
இந்த குணமே தன்னுடைய தந்தையிடம் அவரை வேலைக்கு பரிதுரைக்குமாறு அந்தப் பெண்மணியை தூண்டியது,
(قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين ( 26 )
இவர் நம்பிக்கயாளர் என்று உனக்கு எப்படித் தெரியும் என்று தந்தை கேட்க அந்தப் பெண்மனி சொன்னார்
ஆடை என்னதான் கட்டியாக இருந்தாலும் காற்றடிக்கிற போது அது உடலை ஒரு புறமாக இறுக்கி உடற் கோலங்களை காட்டி விடும் என்வே எனக்குப் பின்னால் வா என்று மூஸா அலை கூறினார், .
وأما أمانته : فإنه قال لي امشي خلفي حتى لا تصف الريح بدنك - تفسير البغوي  
ஆதரவற்ற நிலத்தில் மூஸா அலை அவர்களுக்கு ஒரு ஆதரவை பெற்று தந்தது அவருடை வெட்கம்.
இதே போலத்தான் நேர்மை,உதவுவும் மனப்பான்மை கற்பொழுக்கம் என ஒரு மனிதர் உறுதியாக கடைபிடிக்கும் நல்ல காரியங்கள் எதுவும் அவரது வாழ்வில் உயர்வுக்கு காரணமாக அமையும்.
அதே போல தீமைகளை விட்டு விலகி நிற்பதும் வாழ்வில் உயர்ந்த அந்தஸ்திற்கு கொண்டு போய்ச் சேர்க்கும்.
வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் எங்களுடைய உஸ்தாது பூவார் முஹம்மது ஹனீப் ஹஜ்ரத் அவர்கள் மிகச் சிறந்த ஆலிம்களுல் ஒருவர் . கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் திருவணந்தபுரத்திற்கு அருகில் உள்ள பூவாறு என்றும் ஊரில் வபாத்தாகி அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்,
அதிர்ந்து பேசுகிற பழக்க மற்ற உஸ்தாது அவர்கள் மிக உறுதியான கருத்தையும் வாழ்வையும் கொண்டவர்.
தன்னுடைய உஸ்தாதுகளுக்கு சமமான ஒரு பெரிய உஸ்தாதாக உயர்ந்த நிலையிலும் = வேறு பல வகைகளில் பெரும் அந்தஸ்தை அடைந்த நிலையிலும் கூட தன்னுடைய ஆசிரியர்களிடம் ஒரு சிறு மாணவனைப் போலவே நடந்து கொண்டவர்.
அன்னார் மார்க்கம் அனுமதித்த முறையில் ஓதிப்பார்ப்பதில் செய்வினை போன்ற காரியங்களுக்கு நிவாரணம் செய்வதில் மிகவும் கெட்டிக் காரராக விளங்கினார். ஒருவருக்கு ஒரு காரியத்திற்காக ஓதிப்பார்த்தால் 12 வருடங்களுக்கு அவருக்கு  தொந்தரவு இருக்காது எனும் அளவில் இத்துறையில் மிகவும் பிரபலமாக இருந்தவர்,
பல சிக்கலான பிரச்சனைகளை தீர்த்து வைத்ததை அவர்களுடைய மாணவர்கள் நேரில் அறிந்திருக்கிறார்கள்,
அன்னாருடைய வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா ? என்று கேட்டு விட்டு எங்களுடைய உஸ்தாது கண்ணியத்திற்குரிய ஷபீர் அலி ஹஜ்ரத் கூறினார்கள்.
ஹனீப் ஹழ்ரத் எந்த ஒரு அந்நியப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள்
ஹனீப் ஹழரத்தை அறிந்த அனைவருக்கும் இந்த உண்மை நிதர்சனமாக் தெரியும்.
ஒரு வருடத்திற்கு முன் ஹழரத் அவர்கள் பூவாறில் மிகவும் உடல்நலமில்லாமல் இருந்த நிலையில் எனது குடும்பத்தினருடன் ஹழ்ரத்தை பார்க்க சென்றிருந்தேன், எனது மகள்களை அவர்களது அறையில் நிறுத்தி “எனது மகள்கள் துஆ செய்யுங்கள்” என்றேன், என்னைப் பார்த்த ஹழரத் அவர்கள் எனது மகள்கள் இருந்த திசையை கூட திரும்பிப் பார்க்க வில்லை, உதவியாளரிடம் அவர்களை உபசரிக்க குடும்பத்தாரிடம் சொல்லுமாறு சைகை செய்தார்கள்.
ஹழரத் அவர்கள் வபாத்தாவதற்கு முன் அவருக்கு நெருங்கிய சீடராக இருந்த மெளலவி அப்துஷ் ஷகூரிடம் நீ என மகனாக இருந்தால் என் மவ்திற்கு பிறகு அந்நியப் பெண்கள் என்னைப் பார்க்க அனுமதிக்காதே என்று கூறியிருக்கிறார்கள்.
அவ்வாறே அவர்கள் மவ்திற்கு பிறகு அந்நியப்பெண்கள் ஹழரத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட வில்லை,
ஹழரத் பாத்திமார் ரலி அவர்களின் வெட்கம் என்ற ஒரு குணம் எப்படி அவர்களது பெரும் புகழுக்கு காரணமாக இருந்ததோ அது போல ஹனீப் ஹழ்ரத் தன் பார்வையை தாழ்த்திக் கொண்ட விதம் – அதுவும் இந்த துறையில் இருந்து கொண்டு – ஹழரத் அவர்களின் பெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنْ الْهَوَى(40)فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى(41)
அந்த சொர்க்கம் மறுமையில் மட்டுமல்ல இந்த உலகிலும் வெற்றியாக அமையும், குர் ஆன் இன்னொரு இடத்தில் கூறுகிறது,
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ(46)

நற்குணங்களை கடை பிடிப்பதும் தீயவற்றிலிருந்த் விலகி நிற்பதுமே நமது வாழ்வை அழகு படுத்து கிற அம்சங்கள்
ஏதேனும் ஒரு நற்செயலை அல்லது நற்குணத்தை அழுத்தமாக கடை பிடித்தால் அல்லது ஒரு தீய நடவடிக்கையிலிருந்து உறுதியாக விலகி நின்றால் நிச்சயமாக அது நமது வாழ்வில் சிறப்பான வெற்றிகளுக்கு காரணமாக அமையும்,

அல்லாஹ் கிருபை செய்வானாக!

3 comments:

  1. நல்ல தகவள் அருமையான விஷயம் எழிமையான கருத்து

    ReplyDelete
  2. Arumayana. Saithigal. Alhamdu lillah

    ReplyDelete
  3. காலத்தின் அவசியம் கருதி பதிவிடப்பட்ட கருத்தாழமிக்க அருமையான ஆக்கம்
    இன்ஷாஅல்லாஹ் நற்குணங்களை உருவாக்குவோம்.....

    ReplyDelete