நபி
(ஸல்) அவர்களின் அற்புதங்களில் மூன்று, பேரற்புதங்கள்
1.
குர் ஆன்- நிலையான
அற்புதம்.
2.
சந்திரன் பிளந்தது, (இது குர் ஆனில் சொல்லப்பட்டதன் மூலம் காலகாலத்திற்கும் நிலைத்த பேரற்புதமாகிவிட்டது.
3.
மிஃராஜ் – இது வும் திருக்குர் ஆனின் இரண்டு அத்தியாயங்களில் இஸ்ரா – அந்நஜ்மு – சொல்லப்பட்டதன் மூலம் நிலைத்த பேரற்புதம். என்பது மட்டுமல்ல இதன் தன்மையினாலும் இது தனித்துவம் மிக்க பேரற்புதமாகிவிட்டது.
மிஃராஜின்
தனித்துவம்,
வேறெந்த
மலக்குக்கும் நபிக்கும் கிடைத்ததில்லை.
மிஃராஜின்
நிகழ்வை இஸ்ரா மிஃராஜ் என்று இரண்டு பகுதியாக மார்க்க அறிஞர்கள் வகைப்படுத்துவதுண்டு,
இதில்
இஸ்ரா என்பது முஹம்மது (ஸல்) அவர்களின் தனிப் பட்ட பெருமை இல்லை.
லூத்
அலை அவர்களுக்கும் இஸ்ரா உண்டு.
قَالُوا يَالُوطُ
إِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَصِلُوا إِلَيْكَ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنْ اللَّيْلِ
وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ أَحَدٌ إِلَّا امْرَأَتَكَ إِنَّهُ مُصِيبُهَا مَا أَصَابَهُمْ
إِنَّ مَوْعِدَهُمْ الصُّبْحُ أَلَيْسَ الصُّبْحُ بِقَرِيبٍ(81)
இரவின்
கடைசி நேரத்தில் – வைகறை வெளிச்சம் வெளிப்படத் தொடங்கிய நேரத்தில் நம்பிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு ஊரைக் காலி செய்யுமாறு லூத் அலை அவர்களுக்கு சொல்லப்பட்டது. வேதனைக்குள்ளாக்கப்படும் நகரத்திலிருந்து வெகு தூரத்தை லூத் அலை கொஞ்ச நேரத்தில் கடந்து சென்றார்கள். அதுவும் தன்னுடைய குழுவினரோடு.
லூத் நபி தொலைவுகளை
சீக்கிரம் கடந்தார். புராக் வாகனம் இல்லாமலே! .
இமாம்
குர்துபி கூறுகிறார்.
إن لوطا خرج عند
طلوع الفجر
فخرج لوط وطوى الله
له الأرض في وقته حتى نجا ووصل إلى إبراهيم.
அந்த
இஸ்ராவின் இடையிலேயும் பல அதிசயங்கள் நடை பெற்றதுண்டு
திரும்பிப்
பார்த்த லூத் நபியின் மனைவி கல்லாய் மாறினார். அந்தக் கல் இப்போதும் சாக்கடலுக்கு அருகே இருக்கிறது.
அதே போல மூஸா நபிக்கும்
இஸ்ரா உண்டு.
وَلَقَدْ أَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي فَاضْرِبْ لَهُمْ
طَرِيقًا فِي الْبَحْرِ يَبَسًا لَا تَخَافُ دَرَكًا وَلَا تَخْشَى(77)
சுமார் 6 இலட்சம்
மக்களை பின்னால் துரத்திக் கொண்டு வந்தவர்கள் வந்து சேருவதற்குள் நாடு கடத்தினார் மூஸா
அலை)
அந்த இஸ்ராவிலும்
பல அதிசயங்கள் நடந்தன அவற்றில் ஒன்றுதான் பிர் அவ்னுடைய உடல்
فَالْيَوْمَ نُنَجِّيكَ
بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ
آيَاتِنَا لَغَافِلُون)).سورة يونس
அது மம்மியாக –
பதப்படுத்தப்பட்ட நிலையில் அல்ல. பதப்படுத்தப்படாத நிலையிலேயே அப்படியே இருக்கிறது.
தண்ணீரின் ஆழத்தில் மூழ்கும் போது எழும்பு உடைந்திருக்கிறது. ஆனால் சதை கெட்டுப் போக
வில்லை. கையில் கேடயத்தை பிடித்திருந்த நிலையில் அப்படியே தண்ணீருக்குள் மூழ்கியாதால்
இடது கை கேடயம் பிடித்த நிலையிலேயே சற்று தூக்கியபடி இறந்து போனான். அந்த உடல் அப்படியே
இன்றும் எகிப்தின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. (பிரான்ஸின் நவீஅன் தடயவியல் ஆய்வகத்தில்
அது தண்ணீருக்குள் மூழ்கி இறந்த பிர் அவ்ன் இரண்டாம் இராம்சேசின் உடல்தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
)
இஸ்ரா பல நபிமார்களுக்கும்
கிடைத்ததுண்டு.
இஸ்ரா வல் மிஃராஜ்
என்பது தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தனித்த பெருஞ்சிறப்பாகும்.
அந்த மிஃராஜ் பெருமானார்
பூமியில் வாழ்ந்த உடலுடன் நடந்தது என்பது தான் முஃஜிஸாவின் அந்தஸ்த்தை மிகவும் உயர்த்தி
வைக்கிறது.
பெருமானாருக்கு ஆத்மார்த்த்மாக மிஃராஜ் செய்து அல்லாஹ்வை சந்தித்து
வானம் பூமியின் இரகசியங்களை பார்த்தது 32 தடவை நடந்துள்ளது என் ஹதீஸ்களை அறிஞர்கள்
குறிப்பிடுகிறார்கள் (குத்பாத்தே முனவ்வர் பக் 163)
ஆத்மீக மிஃராஜ்
என்பது மற்ற நபிமார்களுக்கும் கிடைத்துள்ளது. பெருமானாரின் தனித்தன்மை அல்ல அது.
وَكَذَلِكَ نُرِي
إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنْ الْمُوقِنِينَ(75)
அல்லாஹ்வே ஆச்சரியத்தின்
வாசகத்தை வெளியிட்டு “சுப்ஹான” என்று சொல்வது ஆத்மீக மிஃராஜ் அல்ல.
அதே போல் பி அப்திஹி
என்ற வார்த்தையும் பெருமானாரின் இந்த முஃஜிஸா உடலுடன் சென்றதையே குறிப்பிடுகிறது.
எனவே முஹம்மது
நபி (ஸல்) அவர்களின் தனித்துவம் அவர்கள் பூத உடலுடன் வானங்களை கடந்து சென்று அல்லாஹ்வை
பார்த்தார்கள் நேரடியாக பேசினார்கள் என்பதே யாகும்.
இதில் கவனிக்க
வேண்டிய இன்னொரு அம்சமும் முக்கியமானது. நபி (ஸல்) அவர்கள் பூத உடலுடன் வானங்களுக்கு
ஏறிச் சென்றது பெரிய அதிசயமல்ல,
ஏனெனில் பூத உடலுடன்
வானத்திற்கு உயர்த்தப்பட்ட ஈஸா அலை அவர்களை
நபி (ஸல்) நான்காம் வானத்தில் சந்தித்தார்கள்.
பெருமானாருக்கு
முன்பே அந்தச் சிறப்பு ஈஸா அலை அவர்களுக்கு கிடைத்துள்ளது.
எனவே இதுவும் முஹம்மது
நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்பல்ல.
இவற்றை எல்லாம்
கடந்து எந்த மனிதரும் மலக்கும் சென்றடைந்திராத அல்லாஹ்வின் அர்ஷை சென்றடைந்து அல்லாஹ்வை
நேரிட்டு கண்டு உறையாடி வந்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் என்பதே பெருமானாரின் தனிப்பட்ட
சிறப்பாகும்.
இதில் இன்னும்
சில விசேச் செய்திகள் உண்டு.
ஆத்மீகமான மிஃராஜ்
என்றால் மக்காவிலிருந்தே பெருமானாரை அழைத்துச் சென்றிருக்க முடியும்.
ஆனால் அல்லாஹ்
பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு பாறையிலிருந்து வானுலகிற்கு
அழைத்துச் சென்றான்.
அந்தப் பாறை சொர்க்கத்திலிருந்து
வந்த பாறையாகும்.
அந்தப் பாறை இப்போதும்
ஜெரூஸலத்தில் இருக்கிறது.
பைத்த்துல் முகத்த்ஸ்
பள்ளிவாசலில் இருந்து ஐநூறு மீட்டர் தொலையில் அந்தப் பாறை உள்ளது.
அந்தப் பாறைக்கு
– صخرة المعراج –
என்று பெயர்
அந்தப் பாறைக்கு
صخرة آخر الزمان
என்றும் ஒரு பெயர் உண்டு.
அந்தப்
பாறை மீது நின்று தான் இஸ்ராபீல் அலை சூர் ஊதுவார்கள்
அந்தப் பாறை பற்றிய
தகல் குர் ஆனில் இடம் பெற்றுள்ளது .
وَاسْتَمِعْ
يَوْمَ يُنَادِ الْمُنَادِي مِنْ مَكَانٍ قَرِيبٍ(41) ق
மாகானின் கரீப்
என்பதன் தப்ஸீர்களுல் குறிப்பாக தப்ரீயில் இது பற்றிய செய்திகளை காணலாம்,
அந்தப் பாறையில்
பெருமானாரி ஸல் அவர்கள் மிஃராஜுக்கு செல்லும் போது அவர்களது கால் பாதம் பதிந்த தடம்
இப்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே இறங்கிக்ச் சென்று இப்போதும் மக்கள்
தொழுகிற வழக்கம் இருக்கிறது.
நபி (ஸல் அவர்கள்
தனது பூத உடலுடன் வானுலகங்களை கடந்து அல்லாஹ்வை சந்தித்து உரையாடி சொர்க்கம் நரகின்
காட்ட்சிகளை கண்டு வந்தார்கள் என்பதே முஹம்மது நபி ஸல்) அவர்களின் மிஃராஜின் தனித்துவம்
ஆகும்.
இந்த அற்புதத்தை
ஆச்சரியகுறியோடு பேசுகீற அல்லாஹ் இஸ்ராவை பற்றி வெளிப்படையாக பகிரங்கமாக குர் ஆனில்
குறுகிறான்.
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ
الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ
لِنُرِيَهُ مِنْ آَيَاتِنَا إِنَّه هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
இதில்
இஸ்ரா வெளிப்படையாகவே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது,
மிஃராஜ்
அந்நஜ்மு அத்தியாயத்தில் சாடையாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
وَالنَّجْمِ إِذَا هَوَى مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ فَاسْتَوَى وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى
மக்காவின் காபிர்கள் இஸ்ராவையே நிராகரித்தார்கள். அதில் அவர்களின் துரதிஷ்டம் அடங்கியிருக்கிறது.
சித்தீக்குகளான முஃமின்கள் மிஃராஜை எந்தச் சலனமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள்.
மிஃராஜ்
நிகழ்வை நமக்குச் சொன்னது நபி (ஸல்) அவர்கள் மட்டுமே!
பெருமானாரை
முழுமையாக நம்பியதாலேயே அபூபக்கர் (ரலி) சித்தீக் (பெரு நம்பிக்கையாளர்) என பாராட்டப்பட்டார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்களை முழுமையாக நம்புவதிலும்
பின்பற்றுவதிலுமே முஃமின்களின் ஈமான் நிலை
பெறுகிறது என்பதை இதன் வழியாக அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான்.
மிஃராஜ் பெருமானார் (ஸல்) அவர்களுடைய பேரற்புதம் என்றால்
அதை முழுமையாக ஏற்பதிலும் அதிலிருந்து பாடங்களை பெறுவதிலும் முஃமின்களின் அற்புதம்
அடங்கியிருக்கிறது.
இந்தப் பாறைக்கு மேலே தான் உமர் ரலி அவர்களது பள்ளிவாசல் தங்க முலாம் பூசப்பட்ட
குப்பாவுடன் இருக்கிறது.
No comments:
Post a Comment