தமிழகத்தின் பெரும்பாலான
முஸ்லிம் மஹல்லாக்களில் மக்தப் மதரஸாக்கள் ஆண்டு விழாக்களை கொண்டாடி வருகிற நேரம் இது,
நமது குழந்தைகளுக்கு குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கிற மதரஸாக்கள் விசயத்தில்
நாம் அக்கறை செலுத்த வேண்டும்.
மதரஸக்களின் நிகழ்ச்சிகளில்
பங்கேற்க வேண்டும். தேவை எனில் உதவிகள் செய்ய வேண்டும்.
மதரஸாக்களை அலட்சியமாக
நினைக்க வேண்டாம். மார்க்கம் மதரஸாக்கள் வழியாகத்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது,
மதரஸாக்கள் நமது
குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தர வேண்டும் என்பதில் நமக்கும் தெளிவு அவசியம்,
மூன்று நான்கு
வருடங்களில் நமது குழந்தைகள் திருக்குர் ஆனை எழுத்து திருத்தமாகவும் (மக்ரஜுடன் ) அழகாகவும்
(கிராஅத்) ஓதக் கற்றுக் கொண்டு விட வேண்டும். அத்தோடு மார்க்கத்தின் அவசியமான நம்பிக்கைகள்
முக்கியச் சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டு. துஆக்களுக்கான பயிற்சியும் தொழுகைப் பயிற்சியும்
கிடைக்க வேண்டும்.
நம்முடைய மதரஸாக்கள்
இதை சரியாக நிறைவேற்றுகின்றனவா என்பதில் நமக்கு கவனம் தேவை,
அதே நேரத்தில்
நம்முடைய குழந்தைகளுக்கான மதரஸாக்கள் சுன்னத் ஜமாத் கொள்கைக்கு உட்பட்டவையா என்பதிலும்
கவனம் செலுத்த வேண்டும்
குர் ஆன் ஓதுதல்
என்பதில் யாரிடமிருந்து கற்கிறோம் என்பதும் முக்கியமாகும்.
அரபுகளுக்கு அரபு
எழுத்துக்களை ஒத யாரும் கற்றுத்தர தேவையில்லை என்றாலும் ஓதிக் கொடுப்பதை துதரின் கடமையாக
அல்லாஹ் அமைத்திருந்தான்,
يتلو عليهم أياته
நபி ஓதிக் கொடுக்கிற போது தான் அது மக்கள் மனதில்
பரிசுத்ததை தரும்.
அதனால் தான் அடுத்து அல்லாஹ் கூறினான்.
ويزكيهم
எனவே ஓதிக் கொடுப்பவர் யார் என்பதும் முக்கியம்.
குர் ஆனை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்காதவர்கள்
– வெறும் வாயளவில் குர் ஆன் என்ற வார்த்தையை பிரயோகிப்பவர்களிடம் மக்கள் ஏமாந்து விடக்
கூடாது.
இந்த சமூகத்தில் முதல் கொள்கை வழி கேடார்களான
கவாரிஜ்களை பற்றி வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா
كانوا اكثر بكاء علي قراة القرآن
அதிகமாக குர் ஆன் ஓதுகிறவர்களாகவும் அதிகம்
நோன்பு வைப்பவர்களாகவும் இருந்தார்கள்,
ஆனால் அவர்களைக் குறித்து பெருமானார் (ஸல்)
சொன்னார்கள், நரகவாசிகளின் நாய்கள்,
روى ابن ماجة (173) ، وأحمد (19130) عَنْ ابْنِ أَبِي أَوْفَى : قَالَ
: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( الْخَوَارِجُ
كِلَابُ النَّارِ )
காரிஜிகள் அதபு கொட்டவர்களாக இருந்தார்கள்,.
அதனால் உண்மையினான ஈமான் அவர்களுக்கு வாய்க்கவில்லை.
அலி ரலி அவர்களை முஃமின் அல்ல என்றனர். அவரை
கொலை செய்தனர்.
எனவே அதபு கெட்டவர்கள் சமூக குழப்பவாதிகளிடம்
குழந்தைகளை அனுப்புவது குர் ஆனிலிருந்து கிடைக்க வேண்டிய வெளிச்சத்தை அவர்களுக்கு கிடைக்காமல்
செய்துவிடும்,
கொள்கை குழப்பவாதிகள் எவ்வளவுதான் டிப்டாப்பாக
ஸிஸ்டமாக மதரஸாக்களை நடத்துவதாக சொன்னாலும் உம்மத் அதில் ஏமாந்து விடக் கூடாது, நமது
குழந்தைகளுக்கு அலிப் பே சொல்லிக் கொடுப்பவரிடமிருந்து நம் குழந்தைகளின் இதயத்திற்கு
ஈமானிய வெளிச்சம் பரவ வேண்டும் என்று நினைக்க வேண்டும்
குர்ஆன் விசயத்தில் பேணப்பட வேண்டிய ஒழுக்கங்களை
சிலர் துச்சமாக தூக்கி எறிந்து ஒரு சாதாரணப் புத்தகம் போல அதை பயன்படுத்துவதை பார்க்கிறோம்.
அல்லாஹ் அந்த துன்மதியாளிர்களிடமிருந்து நம்மையும் நம் சந்ததிகளையும்
காப்பாற்றுவானாக!
திருக்குர் ஆன் நமது பார்வையில் பட்டாலே அதற்காக
நாம் அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வேண்டும் என சூபியாக்கள் சொல்கிறார்கள்,
ஏனெனில் இந்த பூமியில் இருக்கிற அல்லாஹ்வின்
தன்மை கொண்ட ஒன்றே ஒன்று குர் ஆன் மட்டுமே!
குர் ஆன் பிரிண்டாகியிருக்கிற இந்தப் பேப்பரும்
அட்டையும் நம்மால் உருவாக்கப்பட்ட தாக இருக்கலாம். இதற்கு பெயர் முஸ்ஹப்
இந்த முஸ்ஹப் சுமந்திருக்கிற கலாமுல்லாஹ் –
அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்லாஹ்வைப் போலவே கதீம் தொன்மையானதாகும். அது படைக்கப்பட்டதல்ல,
ஜிப்ரயீல் படைக்கப்பட்டவர். மக்லூக்
முஹம்மது நபி (ஸல்) படைக்கப்பட்டவர் மக்லூக்
ஆனால் அல்லாஹ்வின் வார்த்தையான குர் ஆன் மக்லூக்
படைக்கப்பட்டது அல்ல,
என்வே இந்த பூமியில் அல்லாஹ்வின் தன்மைகளில்
ஒன்றாக இருக்கிற கலாமுல்லாஹ் பார்க்கிற வாய்ப்பை ஒரு நஸீபாக கருதி அல்ஹம்துலில்லாஹ்
சொல்ல வேண்டும்.
இது மட்டுமல்ல, முஃமின்களுக்கு எல்லா நிலையிலும்
பாதுகாப்பை வழங்குவதும் வழங்கப்போவதும் குர்ஆனாகும்
குர்ஆன் தான் பூமியில் தொங்கிக் கொண்டிருக்கிற
அல்லாஹ்வின் கயிறு,
عن علي قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : كتاب الله
فيه خبر ما قبلكم ونبأ ما بعدكم وحكم ما بينكم ، هو الفصل ليس بالهزل ، هو الذي لا
تزيغ به الأهواء ، ولا يشبع منه العلماء ، ولا يخلق عن كثرة رد ، ولا تنقضي عجائبه
، هو الذي من تركه من جبار قصمه الله ، ومن ابتغى الهدى في غيره أضله الله ، هو
حبل الله المتين وهو الذكر الحكيم ، وهو الصراط المستقيم ، هو الذي من عمل به أجر
، ومن حكم به عدل ، ومن دعا إليه هدي إلى صراط مستقيم ، خذها إليك يا أعور .
عن عبد الله قال : قال رسول الله صلى الله عليه وسلم : إن هذا
القرآن مأدبة الله فتعلموا من مأدبة الله ما استطعتم ، إن هذا القرآن هو حبل الله
وهو النور البين والشفاء النافع ، عصمة لمن تمسك به ، ونجاة لمن تبعه لا يعوج
فيقوم ، ولا يزيغ فيستعتب ، ولا تنقضي عجائبه ، ولا يخلق من كثرة الرد .
வங்க
தேசத்தில் அமைச்சராக இருந்த பஜ்லுல் ஹக்
ஒரு முறை இரயிலில் பயணம் செய்தார். எதிரிகள்
அந்த இரயிலை குண்டு வைத்து
தகர்த்தனர், அடுத்த நாள் பஜ்லுல்
ஹக் இறந்து விட்ட செய்தி
பரவி நாட்டையே குலுக்கியது, திடீரென் இன்னொரு செய்தி வந்தது,
பஜ்லுல் ஹக் இன்று குறிப்பிட்ட
மைதானத்தில் உரையாற்றுகிறார் .
மாலை
பஜ்லுல் ஹக் உரையாற்றினார், எனக்கு
பயனத்தில் குர் ஆன் ஓதும்
பழக்கம் உண்டு, அன்று இரயில்
ஏறிய பிறகு குர் ஆனை
எடுக்க வில்லை என்று நாபகம்
வந்தது, அடுத்த இரயில் நிலையத்தில்
இறங்கிவிட்டேன், அல்லாஹ் என்னை குர்
ஆனை கொண்டு காப்பாற்றினான் என்றார்,
குர்
ஆன் நமது வாழ்க்கைகான அனைத்திற்கும்
வழிகாட்டக் கூடியது,
إِنَّ هَـذَا
الْقُرْآنَ يِهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ
يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْراً كَبِيراً
ஏராளமான
உதாரணங்கள் இதற்கு உண்டு, நாம்
அறியாதது அல்ல,
ஆகவே குர் ஆனைப்
பார்த்தாலே அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்ல வேண்டும்.
அதே போல குர்
ஆனை கையில் எடுக்கிற போதே பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும்.
குர் ஆனை ஓத
ஆரம்பிக்கிற போது அதன் தத்துவங்களும் அறிவுரைகளும் நம் இதயத்திற்குள் இறங்க வேண்டும்
என்ற துஆ வோடு ஓத் வேண்டும்.
அதிலுள்ள மகிழ்ச்சிக்குரிய
வசனங்களை ஓதுகிற போது மகிழவும் அச்சத்திற்குரிய வசனங்களை ஓதுகிற போது அழவும் வேண்டும்,
ஒருவேளை அழுகை வராவிட்டால் வரவழைக்க வேண்டும்.
குர் ஆனை ஓதிக்
கொண்டிருக்கிற போது யாராவது அழைத்தால் சட்டென்று பார்வையை உயர்த்தக் கூடாது மெதுவாக
தலையை உயர்த்த வேண்டும்.
குர் ஆனிலிருந்து
பார்வை உயர்கிற போதே கை குர் ஆனை முடி வைக்க வேண்டும்.
குர் ஆன் ஓதிக்
கொண்டிருக்கிற போது இடையில் பேசக் கூடாது, வேறு வேலைகளை செய்து கொண்டிருக்க கூடாது.
முழு கவனமும் அதிலேயே இருக்க வேண்டும்.
தாய் தந்தை
உஸ்தாதை தவிர வேறு யார் அழைத்தாலும் ஓதுதலை அப்படியே நிறுத்தி விடக் கூடாது. இவர்களில்
ஒருவர் அழைத்தால் நான் குர் ஆன் ஓதிக் கொண்டிருக்கிறேன் என்று பதில் சொல்லி விட்டு
குர் ஆனை நிறுத்து இடத்தில் நிறுத்தி விட்டு அவர்களது கேள்விகளுக்கு கவனம் செலுத்த
வேண்டும்.
குர் ஆன் ஓதிக்
கொண்டிருக்கிற போது யாரும் சலாம் சொன்னால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது கடமையில்லை.
குர் ஆனை அவமதிக்கிற
வகையில் கிழே வைக்க கூடாது. காலுக்கு நேரே வருகிற மாதிரி முழங்காலுக்கு கீழே இறுக்கிற
மாதிரியும் வைகக் கூடாது,
குர் ஆனுக்கு
மேலே எதையும் வைக்க கூடாது குர் ஆன் மேலே இருக்க வேண்டும்.
இமாம் ஷாபி
ரஹ் அவர்கள் குர் ஆனை எழுதுவதற்காக ஒரு தோல் வாங்கி அறைக்குள் வைத்திருந்தார்கள், அந்த
அறைக்குள் தூங்குவதற்கு தயங்கி வெளியே சென்று தூங்கினார்கள்.
நமது முன்னோர்களிடம்
இத்தகைய மரியாதையை பேணுகிற வழக்கம் இருந்ததை நாம் பார்த்தோம்.
அதே போல ஒளுவுடன்
தா ன் குர் ஆனை தொட வேண்டும்.
ஹதீஸ்கள்
மற்றும் சஹாபாக்களின் ஒன்று
பட்ட முடிவு இது
قال النووي ( أجمع المسلمون على جواز قراءة القرآن للمحدث، والأفضل أن
يتطهر لها
أما مسه المصحف وحمله، فقد ذهب جمهور العلماء ومنهم الأئمة الأربعة إلى تحريم ذلك، وذهب الحاكم وحماد وداود الظاهري إلى جواز ذلك، وقولهم هذا مرجوح،
أما مسه المصحف وحمله، فقد ذهب جمهور العلماء ومنهم الأئمة الأربعة إلى تحريم ذلك، وذهب الحاكم وحماد وداود الظاهري إلى جواز ذلك، وقولهم هذا مرجوح،
روى الدارقطني و البيهقي و الحاكم بإسناد صححه و وافقه الذهبي عن حكيم
بن حزام رضي الله عنه قال : ( لما بعثني رسول الله صلى الله عليه و سلم
إلى اليمن قال : (لا تمس القرآن إلا وأنت طاهر) .
قال النووي في المجموع (
واستدل أصحابنا بالحديث ، وبأنه قول علي وسعد بن أبي وقاص وابن عمر رضي الله عنهم،
ولم يعرف لهم مخالف من الصحابة) انتهى.
قال شيخ الإسـلام ابن
تيمية : ( و أما مس المصحف فالصحيح أنه يجب له الوضوء كقول الجمهـور ) [ مجموع الفتاوى : 21/288
] .
و ذهب الحافظ ابن عبد البر أبعدَ من ذلك فقال : ( أجمع فقهاء الأمصار الذين تدور عليهم الفتوى و على أصحابهم بأن المصحف لا يمسه إلا طاهر ) [ الاستذكار ، 8/10 ] .
و ذهب الحافظ ابن عبد البر أبعدَ من ذلك فقال : ( أجمع فقهاء الأمصار الذين تدور عليهم الفتوى و على أصحابهم بأن المصحف لا يمسه إلا طاهر ) [ الاستذكار ، 8/10 ] .
குர் ஆனை அனைத்து
வகையிலும் மதிக்கவும் வேண்டும். எந்த வகையிலும் அவமதித்து விடக் கூடாது.
அவமதிக்கிற
சூழ்நிலைக்கு எடுத்துச் செல்லவும் கூடாது.
குர் ஆனை ஓதுவது
மிக்க நன்மையான காரியம்
إن تلاوة القرآن العظيم من أفضل الطاعات وأعظم القربات فينبغي للمسلم
إذا أراد تلاوة القرآن أن يهيئ نفسه لها، ويحصل الآداب المطلوبة لها لينال الثواب
الذي قال عنه النبي صلى الله عليه وسلم: " من قرأ حرفاً من كتاب الله تعالى فله به حسنة والحسنة بعشر أمثالها،
لا أقول: الم حرف، ولكن ألف حرف، ولام حرف، وميم حرف " رواه الترمذي عن ابن مسعود رضي الله عنه،
وقال النووي
في التبيان: واعلم أن
المذهب الصحيح أن قراءة القرآن أفضل من التسبيح والتهليل وغيرهما.
ஓதும் போது சில ஒழுங்குகளை
கடை பிடிக்க வேண்டும்
ومن أهم الآداب التي ينبغي لقارئ القرآن
أن يقصد بقراءته وجه الله تعالى والتقرب إليه، فالعمل إذا دخله الرياء
أو السمعة أو المنافسة..
فلا قيمة له بل ربما أصبح وبالاً على صاحبه.
ومنها: الطهارة الظاهرة والباطنة، فيطهر ظاهره من الحدث والخبث، وباطنه من الذنوب والمعاصي.
ومنها: القراءة بتدبر لمعانيه وخشوع بقلبه وخضوع بجوارحه فلا يعبث بشيء منها، أو يشغل سمعه أو بصره، بما يتنافى مع التلاوة.
ومنها: أن يكون نظيف الثياب حسن الهيئة مستقبل القبلة إن أمكن.
ومنها: السواك قبله، وعليه أن ينظف فمه بأن يتمضمض كلما تنخم، ويجب عليه أن يبتعد عن التدخين وكل الروائح الكريهة.
ومنها: أنه لا ينبغي له أن يقطع التلاوة لشيء من أمور الدنيا إلا إذا كان ذلك ضرورياً.
ومنها: الطهارة الظاهرة والباطنة، فيطهر ظاهره من الحدث والخبث، وباطنه من الذنوب والمعاصي.
ومنها: القراءة بتدبر لمعانيه وخشوع بقلبه وخضوع بجوارحه فلا يعبث بشيء منها، أو يشغل سمعه أو بصره، بما يتنافى مع التلاوة.
ومنها: أن يكون نظيف الثياب حسن الهيئة مستقبل القبلة إن أمكن.
ومنها: السواك قبله، وعليه أن ينظف فمه بأن يتمضمض كلما تنخم، ويجب عليه أن يبتعد عن التدخين وكل الروائح الكريهة.
ومنها: أنه لا ينبغي له أن يقطع التلاوة لشيء من أمور الدنيا إلا إذا كان ذلك ضرورياً.
குர் ஆன் ஓதுகிற
போது அழகாக இராகமாக ஓத வேண்டும்
ﻭﻓﻲ اﻟﺤﺪﻳﺚ: «ﺯﻳﻨﻮا اﻟﻘﺮﺁﻥ ﺑﺄﺻﻮاﺗﻜﻢ»
ﻭﻓﻲ ﺁﺧﺮ: «ﻟﻴﺲ ﻣﻨﺎ ﻣﻦ ﻟﻢ ﻳﺘﻐﻦ ﺑﺎﻟﻘﺮﺁﻥ»
ﻭاﺳﺘﻤﻊ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﻟﻰ ﻗﺮاءﺓ «ﺃﺑﻲ ﻣﻮﺳﻰ» ﻓﻘﺎﻝ: «ﻟﻘﺪ ﺃﻭﺗﻲ ﻫﺬا ﻣﻦ
ﻣﺰاﻣﻴﺮ ﺁﻝ ﺩاﻭﺩ»
நம்மில்
பலரும் குர் ஆனை முறையாக
ஓத முயற்சிப்பதில்லை. முயற்சிக் வேண்டும்.
ﻭﻗﺎﻝ ﺃﻧﺲ: " ﺭﺏ ﺗﺎﻝ
ﻟﻠﻘﺮﺁﻥ ﻭاﻟﻘﺮﺁﻥ ﻳﻠﻌﻨﻪ
அவ்வாறு ஓதக்
கற்பதே சிறந்த மனிதனுக்கான அடையாளம்
ﻭﻗﺎﻝ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:
" ﺧﻴﺮﻛﻢ ﻣﻦ ﺗﻌﻠﻢ اﻟﻘﺮﺁﻥ ﻭﻋﻠﻤﻪ ".
குர்
ஆன் ஓதக் கற்பது நபித்துவத்தின்
சாற்றை விழுங்குவதாகும்
ﻭﻗﺎﻝ " ﻋﻤﺮﻭ ﺑﻦ اﻟﻌﺎﺹ
": " ﻣﻦ ﻗﺮﺃ اﻟﻘﺮﺁﻥ ﻓﻘﺪ ﺃﺩﺭﺟﺖ اﻟﻨﺒﻮﺓ ﺑﻴﻦ ﺟﻨﺒﻴﻪ ﺇﻻ ﺃﻧﻪ ﻻ ﻳﻮﺣﻰ ﺇﻟﻴﻪ
".
குர் ஆனை நாம் மதிக்கிறோம் என்பதன் அடையாளம் அந்த குர் ஆனை ஓதிக்
கொடுக்கும் மதரஸாக்களை மதிப்பதாகும்.
முந்தைய சில பதிவுகள்
முந்தைய சில பதிவுகள்
No comments:
Post a Comment