வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 16, 2016

திருந்திக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு


ரமலான் வேகமாக நகர்கிறது என்று நம்மில் பலரும் சொல்லிக் கொள்கிறோம். 

எதார்த்தில் பதினான்கறை மணி நேரத்திற்குப் பிறகு தான் நமது நோன்பு தினசரி முடிகிறது. அதில் மாற்றம் எதுவும் இல்லை.

மகிழ்ச்சியான பொழுதுகளும் நன்மைய்ளயான நாட்களும் வேகமாக கடப்பது போல தெரிவது ஒரு பிரம்மையே ! 
எனினும் இந்த பிரம்மை நமக்கு ஒரு விழிப்புணர்வை தருகிறது. 
வேகமாக கழிந்து கொண்டிருக்கிற நிமிடங்களை அது முடிவதற்குள் முடிந்த வரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக!
ரமலானின் இரண்டாவது பகுதியை இறை மன்னிப்பிற்கானது என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன் பொருள் அல்லாஹ் நமது பாவங்களை மன்னிக்க தயாராக இருக்கிறான். நாம் அதை தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
அல்லாஹ் எப்போதுமோ நம்மை மன்னிக்கிறான்.
அது அவனுக்கு பிடித்தமானது.
·        إن الله يحب التوابين
·         மன்னிப்பு அகராதியிலே எனக்குப் பிடிக்காத வார்த்தை என்று சொல்வது மனிதர்களின் இயல்பு
·         அல்லாஹ்வுக்கோ அது மிகவும் பிடித்த வார்த்தை. எத்தனை தடவை கேட்டாலும்
·         நாம் அவனை ரப்பு என்று உணர்ந்து கொள்கிற காரணத்தால்.
عن أبي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول : ( إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ وَرُبَّمَا قَالَ أَصَبْتُ فَاغْفِرْ لِي فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَصَابَ ذَنْبًا أَوْ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ أَوْ أَصَبْتُ آخَرَ فَاغْفِرْهُ فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا قَالَ قَالَ رَبِّ أَصَبْتُ أَوْ قَالَ أَذْنَبْتُ آخَرَ فَاغْفِرْهُ لِي فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثَلاثًا ....رواه البخاري (7507) ومسلم ( 2758 )

பாவங்கள் கழுத்தை சுற்றி தொங்கிக் கொண்டிருப்பவை. அதில் கவலைப்படாமல் பிடிவாதமாக இருந்தால் சிரமம் தான். மன்னிப்பு கேட்டுவிட்டால் தப்பித்துக் கொள்ளலாம்.

قال  عمر بن عبد العزيز  : " أيها الناس مَن ألمَّ بذنبٍ فليستغفر الله وليتب ، فإن عاد فليستغفر الله وليتب ، فإن عاد فليستغفر وليتب ، فإنما هي خطايا مطوَّقة في أعناق الرجال ، وإن الهلاك في الإصرار عليها "
தவ்பாவிற்கு சடையவே வேண்டாம்!
இவ்வளவு பாவ செய்து விட்டேன். இதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று நினைப்பது சைத்தானின் செயல்.
قيل للحسن البصري : ألا يستحيى أحدنا من ربه يستغفر من ذنوبه ثم يعود ، ثم يستغفر ثم يعود ؟ فقال : ود الشيطان لو ظفر منكم بهذا ، فلا تملُّوا من الاستغفار .

சைத்தானை நஷ்டமடையச் செய்வது தவ்பா

روى ابن أبي الدنيا بإسناده عن علي قال : "خياركم كل مفتن تواب . [ يعني كلما فُتِن بالدنيا تاب ] . قيل فإذا عاد ؟ قال : يستغفر الله ويتوب ، قيل : فإن عاد ؟ قال : يستغفر الله ويتوب ، قيل : فإن عاد ؟ قال : يستغفر الله ويتوب ، قيل : حتى متى ؟ قال : حتى يكون الشيطان هو المحسور " .

எனவே அல்லாஹ் எப்போதும் மன்னிக்கிறான்.

وصح عنه صلى الله عليه وسلم أنه قال (إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها) رواه مسلم.


وعندما رأي رسول الله صلى الله عليه وسلم امرأة تبحث عن ولدها في السبي فلما رأته احتضنته وألقمته ثديها ، فقال صلى الله عليه وسلم : (( أترون هذه ملقية ولدها في النار ؟)) قالوا : لا ، قال : (( لله أرحم بعباده من هذه بولدها )).
குழந்தையை தவற விட்ட தாய அதை கண்டுகொள்ளும் போது வாரி அணைத்துக் கொள்வது போல தவ்பா செய்யும் அடியானை அல்லாஹ் வாரி அணைத்துக் கொள்கிறான் என்றும் இதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.

நாமும் எப்போதுமே பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
·         நமது துஆ க்கள் ஒவ்வொன்றும் பாவமன்னிப்பு கேட்டே தொடங்குகின்றன.
·         இவ்வாறு கேட்பது தான் ஈமானிய இயல்பு

அல்லாஹ்விடம் தமது உயிரையும் உடமைகளையும் விற்றுவிட்ட முஃமின்களின் அடையாளங்களை வரிசைப்படுத்துகிற போது அல்லாஹ் தவ்பாவை முதலில் சொல்கிறான். மற்ற வணக்கங்களும் சமூக கடமைகளும் அதற்கு பின்னாலேயே இடம் பெறுகின்றன.

التَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاكِعُونَ السَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنْكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ

ரமலானில் என்ன விஷேசம்

அல்லாஹ் எப்போதுமே மன்னிக்க தயாராக இருக்கும் போது ரமலானின் நடுப்பகுதியை மன்னிப்புக்குரியது பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியது இதன்பால் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே

சவூதி துபாய் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவர்கள் அரசின் பொது மன்னிப்புக் காலம் வராதா என்று காத்திருப்பார்கள்.

அத்தகைய அறிவிப்பு வந்தவுடன் பறந்தோடிச் செல்வார்கள்.

ரமலான் அல்லாஹ்வின் பொது மன்னிப்புக் காலம்.  

ரமலானின் தயவினாலாவது தவ்பா கிடைத்து விடும் என முஃமின்கள் முயற்சி செய்ய வேண்டும்.  

 عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (الصلوات الخمس، والجمعة إلى الجمعة، ورمضان إلى رمضان، مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر- رواه مسلم

பெருமானாரின் ஒரு ஆமின்

قال جبريل: (يا محمد! من أدرك شهر رمضان فمات، ولم يُغفر له، فأُدخل النار فأبعده الله، قل: آمين، فقال: آمين) رواه الطبراني،

وقال صلى الله عليه وسلم: (رغم أنف رجل دخل عليه رمضان، ثم انسلخ قبل أن يُغفر له) رواه الترمذي.

பாவத்தில் பல வகை இருக்கலாம். சிறியது பெரியது இலேசானாது கடுமையானது என. அதே போல பல இரக்சியங்களும் கதைகளும் அதில் அடங்கியிருக்கலாம். சிறுவயதில் நடந்தது, இளைமையில் விளைந்தது என.

ஒரு அரபு இலக்கியவாதி சொன்னார்

للتوبة أسرار، ولأصحابها أخبار

எத்தகைய பாவமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும்

அந்தப் பாவங்களையும் தவறுகளையும் குறிப்பாக நினைத்து மன்னிப்பு தேடுவதற்கும்இனிமேல் இத்தகைய தவறுகளை செய்ய மாட்டோம் என உறுதியேற்பதற்குமான ரமலான் உரிய பொருத்தமான காலமாகும்.

மது மாது திருட்டு மோசடி கொலை கொள்ளை அடிதடி அநீதியிழைத்தல் அபகரித்தல் என எந்த வடிவில் பாவம் நிகழ்ந்திருந்தாலும் அதை எண்ணி எண்ணி மன்னிப்புக் கோருவதும். இனி அத்தகைய தவறுகளில் ஈடுபடப் போவதில்லை என்று உறுதி ஏற்பதும் இந்த ரமலானை நமக்கு அர்த்தமுள்ளதாக ஆக்கிவிடும்.

மட்டுமல்ல. இனி தொடர்ந்து நமது வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அது உதவும்

பாவ மன்னிப்புக் கோரினால் மன்னிப்பு மட்டுமே கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம், மன்னிப்புடன் மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

ஹூத் அலை அவர்கள் தனது ஆது சமூகத்தை சீர்திருத்த முயற்சி செய்தார்கள், முடியவில்லை. இறுதியாக இறைவா! எனக்கு உதவி செய் என்ற ஒற்றைப் பிரார்த்தனையில் பொறுப்பை இறைவனிடம் விட்டார்கள்

அல்லாஹ் அவனது வேதனையின் தொடக்கமாக அல்லாஹ் ஆது தோட்டங்களுக்கும் வரும் நீரை நிறுத்தி தோட்டங்களை வரண்டு போகச் செய்தான். அந்த சமயத்தில் ஹூது அலை ஆதுகளுக்குச் சொன்னார்கள்

وَيَاقَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلْ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ(52)
இந்த ஆயத்தில் இரண்டு செய்தி இருக்கிறது.
1.       இறுதிக் கட்டம் வரை மன்னிப்பு தேடுதலுக்கான வாய்ப்பு இருக்கிறது.
2.       மன்னிப்பு கேட்டால். இருப்பது நிலைக்கும் என்பது மட்டுமல்ல மேலும் அதிகமாகவும் கிடைக்கும்.

இரண்டாவது செய்தி முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

பாவ மன்னிப்புக் கோருகிற போது நமது அந்தஸ்து அதிகமாகும்.

ஒரு மனிதர் விமான நிலையத்தில் கஸ்டம்ஸுக்கு கியூ வில் நின்று கொண்டிருந்த போது வரிசையில் முன்னாள் காத்திருந்தவரை கவனிக்காமல் அவரை முந்திச் செல்ல முனைந்தார். அவர் தனது சூட்கேசை வலுவில் முன்னுக்கு நகர்த்தி நான் இருக்கிறேன் என்று உணர்த்தினார். முறைக்கவும் செய்தார்.  உடனே சுதாகரித்துக் கொண்ட அந்த மனிதர் ஓ.. சாரி.. அவசரத்தில்  கவனிக்காமல் முன்னே சென்று விட்டேன், மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார்.

முன்னே இருந்தவரின் முறைப்பு நீங்கியது, அது மட்டுமல்ல. அவர் கஸ்டம்ஸுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்த போது “ உங்களுக்கு ஏதேனும் அவசரம் இருந்தால் நீங்கள் செல்லுங்கள் என்று வழிவிட்டார்.

ஒரு sorry சொன்ன எதிராளியின் முறைப்பு நீங்கியது மட்டுமல்லாது தன்னுடைய வாய்ப்பையும் அவர் விட்டுக் கொடுக்க முன்வந்தார் என்பது சாமாணிய மனிதர்களிலேயே நடக்கிற போது கருணை மிக்க அல்லாஹ் நாம் மன்னிப்புக் கேட்கிற போது மன்னிப்பை மட்டுமே தருவதில்லை.

நமது நிலை மோசமாகாமல் பாதுகாக்கிறான் அத்தோடு நம்முடைய அந்தஸ்தையும் உயர்த்துகிறான்.

இந்த ரமலானை நமது பாவங்களுக்கான மன்னிப்பாகவும் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பாகவும் எந்த அளவு முடியுமோ அந்த அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது புத்திசாலிகளின் கடமையாகும்.
இன்னொன்றும் இங்கே நினைவு படுத்தப்பட வேண்டியிருக்கிறது,
புனிதமிக்க ரமலானில் அல்லாஹ் வழங்கும் மன்னிப்பை பெறுவதற்கு முய்ற்சி செய்கிற அதே சந்தர்ப்பத்தில் சக மனிதர்களிடமிருந்தும் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் முயற்சி செய்யலாம்.
ரமலானின் பரக்கத்தால் அதுவும் கிடைக்க வாய்புண்டு. இதற்காக “ரமலானின் பரக்கத்தால் கேட்கிறேன்” என்ற வார்த்தையை பயன்படுத்தினால் கூட பிழையில்லை.
மன்னிக்கப்படாத குற்றமும் கைவிடப்படாத குற்றமும்
يقول عليه الصلاة والسلام:
ذنب لا يغفر ـ وهو الشرك بالله ـ وذنب لا يترك ـ وهو ما كان بينك وبين العباد ـ وذنب يغفر ـ ما كان بينك وبين الله ـ  أخرجه الطبراني عن سلمان

சக மனிதர்களுக்கு இழைத்துள்ள குற்றங்களிலிருந்து மன்னிப்பு பெறவும் கூடுமானவரை முயற்சி செய்ய வேண்டும்.

ரமலான் இது குறித்தும் சிந்திப்பதற்கானதே

வீம்பு காட்டுவதோ , குதர்க்கம் பேசுவதோ , கூச்சப்படுவதோ உதவாது.

சக மனிதனுக்கான கடமை சாமாணியமானதல்ல.

دخل النبي الكريم بيتَ أحد أصحابه، وقد توافه الله، وكان صحابياً جليلاً، فقبل أن يصلي عليه سأل أعليه دين ؟ قالوا: نعم، قال: صلوا على صاحبكم، ولم يصلِ عليه، إلى أن قال أحدهم: عليّ دينه يا رسول الله، فصلى عليه، في اليوم التالي سأل هذا الذي تعهد الدين: أأديت الدين ؟ قال: لا، سأله في اليوم الثالث: أأديت الدين ؟ قال: لا، سأله في اليوم الرابع: أأديت الدين ؟ قال: نعم، قال: الآن بردت عليه جلده  [أحمد عن جابر ]

عن أبي هريرة قال " إن فلانة، فذكر من كثرة صلاتها، وصدقتها، وصيامها، غير أنها تؤذي جيرانها بلسانها، قال: هي في النار  = رواه أحمد
திவாலாகத் தயாரா? அதுவும் மறுமையில் ?
أن النبي صلى الله عليه وسلم سأل أصحابه:
أَتَدْرُونَ مَنْ المُفْلِسُ ؟ قالُوا: المُفْلِسُ فِينَا يَا رَسُولَ الله من لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ، قالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: المُفْلِسُ مِنْ أَمّتِي مَنْ يَأتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةِ وَصِيَامٍ وَزَكَاةٍ، وَيَأْتِي قَد شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فيقعُدُ فَيَقْتَصّ هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْتَصّ عَلَيْهِ مِنَ الْخَطَايَا أُخِذَ مِنْ خَطَايَاهُمْ، فَطُرِحَ عَلَيْهِ، ثُمّ طُرِحَ في النّارِ - مسلم عن أبي هريرة

அவ்வாறு யாராவது மன்னிப்புக்கேட்டு வந்தால் ரமலானின் பொருட்டு நாம் மன்னிப்பது அலாதியான நன்மையை நமக்கு தரும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மன்னிப்பு எனும் தனது மகத்தான இயல்பால் மாபெரும் வெற்றிகளை கண்டார்கள் என்பது ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக தனது மகள் ஆயிஷா ரலி விசயத்தில் அவதூறு பரப்புவதில் ஈடுபட்ட மிஸ்தஹ் ரலி அவர்களுக்கு இனி செலவுக்கு பணம் தர மாட்டேன் என அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் சத்தியம் செய்த போது அல்லாஹ் என்ன கூறினான் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.
أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ(22)

புனிதம் மிக்க ரமலானை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள் –
ரமலான் மூலம் பயனடைந்து கொள்ள பாவமன்னிப்பு கோரும் வழிகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வோம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!


3 comments:

  1. மிக அருமை புனித ரமலானிலும் கடின உழை ப்பு ﺟﺰﺍﻙ ﺍﻟﻠﻪ.

    ReplyDelete
  2. ஹஜ்ரத் அவர்களின் சேவையை வல்லோன் அல்லாஹ் தொய்வின்றி தொடரச் செய்வானாக !

    முழுமையாக ஏற்றுக்கொள்வானாக !

    ReplyDelete
  3. ஹஜ்ரத் அவர்களின் சேவையை வல்லோன் அல்லாஹ் தொய்வின்றி தொடரச்செய்வானாக ! முழுமையாக ஏற்றுக்கொள்வானாக !

    ReplyDelete